Thursday, March 2, 2017

ஜெயமோகனின் ஜக்கி வாசுதேவ்


- ஆனந்த் கணேஷ்

ஜக்கி வாசுதேவ் ஜிக்கு ஆதரவாக ஜெயமோகன் ஜி மிக வலுவான, நீண்ட தொடர்களை எழுதி உள்ளார். அவருக்கு என் மனம் உவந்த பாராட்டுகள்.
நவீன காலத்து ஹிந்து சமயப் பிரபலங்களுக்கு ஆதரவாக தமிழ் இலக்கிய உலகில் இருந்து ஒரு குரல் வருவது வரவேற்கத் தக்க ஒன்று.
இவ்விஷயத்தில் ஜெயமோகன் தந்துள்ள வலுவான நீண்ட கருத்துகளை நீங்கள் கட்டாயம் படிக்க வேண்டும். ஹிந்து சாமியார்களைப் பற்றி தொடர்ந்து செய்யப்படும் தாக்குதல்கள் ஏன் நடக்கின்றன என்கிற கேள்வியை ஜெயமோகனின் எழுத்துகள் உங்களுக்குள் எழுப்பும்.
அவ்வகையில் ஜெயமோகன் செய்திருப்பது அறம் எனும் ஹிந்துப் புரிதலுக்கான மிகப்பெரிய பணியே.
ஆனால், நாம் அனைவரும் நமது சொந்த அரசியலுக்காகவே பொது அரசியலுக்கு வருகிறோம். இதில், ஜெயமோகனும் விதிவிலக்கு இல்லை.
இங்கு ஜெயமோகனுக்கே உரிய சமத்கார அரசியலாக ஒன்றை ஆதரிப்பதன் மூலம் மற்றொன்றை சிதறடிப்பது என்பதை அவர் செய்கிறார். ஜக்கி வாசுதேவ் ஜியை ஆதரிப்பது போல இந்து தத்துவம் குறித்த புரட்டுகளைப் பரப்புகிறார் அவர்.
ஜக்கி வாசுதேவ் ஜியை ஆதரிக்கக் காரணமாக இருப்பது எது ? இந்து தத்துவம் குறித்த புரட்டுகளைப் பரப்புவதன் பின் இருப்பது  எது ? இந்து சமூகம் குறித்து அவர் எழுதும் புரட்டுபாரதத்தின் பின் இருப்பது  எது ?
கேஸ்டிஸம்.
இந்து தத்துவங்களைக் காலனியப் பார்வையில் பிராமணர் vs பிராமணரல்லாதார் என்பதற்கு ஏற்ப சிதைத்துத் திரிக்கிறார் அவர். ஜெயமோகனுக்கே உரிய திரித்தல்கள், புளுகுகளின் வழியேதான்.
அவற்றை சுருக்கமாக இங்கே பட்டியலிடுகிறேன். quote என்று நான் இங்கு பட்டியலிடுவது ஜெயமோகன் சொன்னவை.
 ஜெயமோகனின் சிந்தனை காலனியத் தரப்பின்படி அமைந்தது. அதனாலேயே, துரதிர்ஷ்டவசமாக, அது ஆழமற்றது.
 1. திருமுருக கிருபானந்தவாரியாரை வெறும் புராணக் கதை சொல்லியாக சுருக்குவது.
quote // ஒருமுறை நான் இந்தப் பகுத்தறிவுக் கேள்விகளைப் பற்றி ஆழ்ந்த ஐயத்துடன் கிருபானந்தவாரியாரிடம் விளக்கம் கேட்டேன். முருகனின் வேல் உங்களை காப்பாற்றும், அதை வழிபடுங்கள் போதும் என்று பதில் சொன்னார். //
இதன் மூலம் நவீனகால விஷங்களை பாரம்பரிய அமைப்புகள் முறிக்க முயல்வதில்லை என்கிற அவருடைய வழக்கமான புரட்டைச் சொல்கிறார். உண்மையில், நவீனகால விஷங்களை எதிர்த்துப் போராடி வருபவை பாரம்பரிய அமைப்புகள் மட்டுமே. நவீனகால அமைப்புகளும் இந்தப் பாரம்பரிய அமைப்புகளினால் உருவாக்கப்படுகின்றன.
ஆனால், எந்த அமைப்பும் நவீனகால விஷங்களுக்கு முறிவுமருந்தான அமிர்தத்தை கிருபானந்த வாரியார் அளவு தந்துவிடவில்லை. உபன்யாசகர்களே இந்து சமூகத்தின் அறிவுச் செல்வத்தைப் பரப்புவதிலும், பாதுகாப்பதிலும் முன்னணியில் இருக்கிறார்கள்.
 2. quote //இதில் வருந்தத் தக்கது என்னவென்றால் மேலே சொன்ன கதை புராணங்களில் இல்லை என வாதிடும் ஒரு சாராரிடம் உள்ள மேட்டிமை நோக்குதான். ஒரு சாதாரண பிராமணன் ஜக்கி தன்னிடம் வந்து ஒருவார்த்தை கேட்டிருக்கலாமே என்னும் பாவனையில் எழுதுவதிலுள்ள ஆணவத்தைப் பார்க்கையில் தான் எத்தனை ஜக்கிகள் இங்கே இன்னும் தோன்ற வேண்டியிருக்கிறது என்னும் எண்ணம் வருகிறது.
ஜக்கி மீதுள்ள காழ்ப்புகளே இருவகையாக பீரிடுகின்றன. அவர் இங்குள்ள முதிராப் பகுத்தறிவை அடிப்பதனால் அவர்கள் போடும் கூச்சல் ஒருபக்கம். மறுபக்கம் அவர் பிராமணர் அல்ல என்னும் ஒரே காரணத்துக்காக ஆசாரப் பிராமணர்களின் பொத்திவைத்த காழ்ப்பு, இடக்கரடக்கல்கள்.//
ஜெயமோகனின் அடிப்படைத் தூண்டுதல் எது என்பதைத் தெளிவுபடுத்துகிறது இது.
ஜக்கி வாசுதேவ் ஜியின் அமைப்பில் அவர்மீது மிகுந்த பக்தியுடன் இருப்பவர்களில் பிராமண அடையாளிகளும் உண்டு. ஜக்கி வாசுதேவ் ஜியின் மீதான கொடூரத் தாக்குதல்களைத் தாங்கிக் கொள்பவர்களில் பிராமண அடையாளிகளும் உண்டு. அவரை ஆதரித்துப் பேசி வருபவர்களில் பிராமண அடையாளிகளும் உண்டு.
ஜக்கி வாசுதேவ் ஜியை எதிர்த்துப் பேசி வருபவர்களிலும் அனைத்து சாதியினரும் உண்டு. பிராமண அடையாளிகளின்மேல் ஜெயமோகன் அளவு வெறுப்பைக் கொண்டிருக்கும் வினவு தளம் நினைவுக்கு வருகிறது. வினவும் ஜக்கி வாசுதேவ் ஜியை எதிர்த்துப் பல பொய்ச்சுருட்டுக் கதைகள் புனைந்து வருகிறவர். அவர் என்ன ஐயரா, ஐயங்காரா, மாத்வரா, இல்லை நம்பூதிரியா ?
அது போலவே, ஜக்கி வாசுதேவ் ஜியின் செயல்பாடுகளை ஒரு இயற்கை நல ஆர்வலராக விமர்சிக்கும் Osai Chella  போன்றவர்களும் உண்டு. (ஜக்கி வாசுதேவ் ஜி பற்றி ஓசை செல்லா: http://bit.ly/2mblopg).
 இந்த வீடியோவில் ஜக்கி வாசுதேவ் ஜிக்கு உபநிஷத் தெரியுமா, வேதம் தெரியுமா என்கிற கேள்விகளோடுதான் ஓசை செல்லா பேசவே ஆரம்பிக்கிறார். அதற்காக அவரை ஒரு பார்ப்பனீயர் என்று சொல்லிவிடலாமா ?
இப்படி ஜக்கி வாசுதேவ் ஜி விமர்சனம் வைப்பதால் ஓசை செல்லாவுக்கு ஜெயமோகன ஸாஸ்திரியார் பூணூல் கல்யாணம் நடத்திடுவாரோ !
இந்தக் கேஸ்டிஸ வெறுப்பை மற்றவர் அறிந்துவிடக் கூடாது என்பதற்காக ஜெயமோகன் போன்றோர் பிராமண அடையாளிகள் பற்றிப் பொதுவாகப் பாராட்டும், தனிப்பட்ட பிராமண அடையாளிகளைக் குறைவுபடுத்தியும் எழுதுவது வழக்கம். உதாரணமாக, கர்நாடக இசைக்கு பிராமணர்கள் நிறைய செய்திருக்கிறார்கள், அவர்களால்தான் கர்நாடக இசை வாழ்கிறது என்று ஒருபக்கம் எழுதிவிட்டு, அடுத்த பக்கம் எம்.எஸ். சுப்புலட்சுமி கள்ளக் காதலில் பல ஆண்களோடு தொடர்புகொண்டவர் என்று எழுதுவது. இன்னொரு கர்நாடக இசை வல்லுநர் பெண்களை ஏமாற்றுபவர் என்று எழுதுவது. 
3. ​quote //ஜக்கி வாசுதேவ் அமைப்பின் நிர்வாக முறையும் தொடர்புறுத்தல் முறையும் ராமகிருஷ்ண மடத்தின் அமைப்பை விட மேலும் நவீனமானவை,கார்ப்பரேட் தன்மைகொண்டவை. //
 எந்த அமைப்பும் அது தோன்றிய காலத்தின் முறைகளையே பயன்படுத்தும். அவற்றையே மரபாக ஆக்கி தொடர்ந்து செயல்படுத்தும்.
சித்தார்த்த புத்தரின் காலத்துக்கு முன்பிருந்தே இதுதான் வழக்கம். ஜக்கி வாசுதேவ் ஜியும், ஸ்வாமி நித்தியானந்தரும் இந்தக் காலத்துக் கார்ப்பரேட் சாமியார்கள் என்றால், ஆதி ஷங்கரரும் ராமானுஜரும் அந்தக் காலத்துக் கார்ப்பரேட் சாமியார்கள். 
4. quote //பௌத்த யோகாசார மரபு புத்தரின் பல்வேறு யோகநிலைகளை உருவகித்தது. சமணமும் யோகமுறைகளை தன்னுள் இழுத்துவிரிவாக்கிக் கொண்டது.//
 இந்து சமூகம் என்பதில் பௌத்தமும் சமணமும் அங்கங்களே. ஆனால், இவ்விரண்டும் பிராமணர்களுக்கு எதிரானது என்கிற கருத்துப்பரப்பலுக்காக இவற்றை எல்லா இடங்களிலும் பயன்படுத்துவது ஜெயமோகனின் இன்னொரு அரசியல் மரபு.
 5. quote // இன்று கிறித்தவத்திற்குள் யோகமுறைகள் சிலதரப்புகளால் வளர்த்தெடுக்கப்படுகின்றன. அது மிக இயல்பானது, வரவேற்புக்குரியது.//
 யோகமும், கிறுத்துவமும் முற்றிலும் எதிரானவை. கிறுத்துவ மறைஞான மரபுகள் யோகச் சிந்தனைகளோடு நிறையவே ஒத்துப் போகின்றன. ஆனால், கிறுத்துவ தியாலஜியை முற்றிலும் ஒதுக்காதவரை யோகமுறையாக அவை இருக்கப் போவதில்லை.
 6. quote //இந்து மதம் மூன்று வழிகளை முன்வைக்கிறது.//
 அந்த மூன்று முறைகளாக ஜெயமோகன் சுருக்குவன: பக்தி, ஞான, யோகம்.
 இந்த கர்மம், கர்மம் என்று ஒன்று இருக்கிறதே. அதைக் கருமம் கருமம் என்று ஜெயமோகன் ஒதுக்கிவிட்டார்.
 7. quote //பக்தியில் நிறைவடையாத அறிவுக்கூர் கொண்டவர்களுக்கு உரியதே ஞானமுறை. //
 இப்படிப் பேசுவதன் மூலம் மேற்கத்திய சிந்தனைப் போக்கில், உயர்வு தாழ்வு காண்கிறார். கிருபானந்த வாரியார் போன்ற முட்டாள்களுக்கு பக்தி, அவரைவிட அறிவுக்கூர்மை உடைய என்னைப் போன்றவர்களுக்கு ஞானமுறை.... என்று அவர் சொல்வது தெரிகிறது.
 8. quote //ஆனால் யோகமுறை பரவலாக ஆனதற்கு ஒரு வரலாற்றுப் பின்னணி உண்டு. உலகப்போருக்குப்பிந்தைய சோர்வுக்காலத்தில் பிறந்த ஒரு தலைமுறையை அமெரிக்காவில் பீட்டில்ஸ் தலைமுறை என்பார்கள்.//
அதாவது அமெரிக்காவின் சோர்வுக்காலம்தான் பீட்டில்ஸ் பிறப்பதற்குக் காரணம் என்கிறார்.
 இது வரலாறு தெரிந்தவர்களுக்கு சட்டென்று அபத்தம் என்பது தெரிந்துவிடும்.
 அமெரிக்காவின் சோர்வுக் காலத்தின் விளைவு ஸெக்ஷுவல் லிபரேஷன். பீட்டில்ஸ் இல்லை.
 அமெரிக்கவின் சோர்வுக்காலம் உலகப் போருக்குப் பின்பு வந்ததுதான். ஆனால், உலகப் போர் முடிந்த காலம் 1945களில். பீட்டில்ஸ் வந்தது 1960களில்.
 பீட்டில்ஸ்களால், ஹிப்பி கலாச்சாரத்தால் பரவியது யோகக் கலாச்சாரம் இல்லை. ஹிந்து ஆன்மீகக் கலாச்சாரம். ஹரே கிருஷ்ணா ஆத்மிகள் கண்மூடி யோகம் செய்கிற யோகாசனம் செய்கிற ஆட்கள் இல்லை.
 மட்டுமல்ல. ஹிப்பி இயக்கமே வியட்நாம் போரின் விளைவு என்கிறார். என்ன ஒரு அறியாமை !
 ஒருவேளை நினைவில் இருந்து எழுதியதால் ஏற்பட்ட நினைவுப் பிழையோ ?
 quote // அமெரிக்கா வியட்நாம் மீது தொடுத்த ஆதிக்கப் போர் இவர்களின் உணர்வுகள் ஒருங்கிணையவும் ஒரு சமூக இயக்கமாக இவர்கள் எழுவதற்கும் காரணமாக அமைந்தது. இதுவே ஹிப்பி இயக்கம் எனப்படுகிறது. போதைப் பொருள் நுகர்வு, இசைவெறி, அரசுக்குக் கட்டுப்படாதிருத்தல், அலைந்து திரிதல், கட்டற்ற பாலுறவு என இவர்கள் ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொண்டனர்//
 9. quote // எந்த தோற்றமென்றாலும் அது ஒருவகை அறிவிப்பு மட்டுமே. எல்லா தோற்றங்களும் குறியீடுகளே. ஜக்கி அறிவுறுத்த விரும்புவதற்கான தோற்றம் அது. தாடியும் துறவுக்கோலமும் அவரை இந்தியாவின் துறவுமரபுடன் இணைக்கின்றன.//
உண்மையில் இது போன்ற குறியீடுகள் தவறாகவே புரிந்துகொள்ளப்படுகின்றன. ஜக்கி, நித்யானந்தர் போன்றோர் துறவிகள் இல்லை. அவர்கள் சாமியார்கள். இந்த இரண்டின் வித்தியாசங்களை ஜெ அறிந்துள்ளதாகத் தெரியவில்லை.
 இரண்டாவதாக, யோக சாதனையில் ஈடுபடுகிறவர்களில், சித்த மரபைச் சேர்ந்தவர்கள் முடியை மழிப்பதோ, வெட்டுவதோ கூடாது.
 முடியானது புலனுணரும் நரம்புகளின் நீட்சி என்பது அவர்களது பாடம்.
 அமெரிக்க செவ்விந்தியர்களின் நீண்ட முடியை வெட்ட வேண்டும் என்று காலனியர்கள் விதி செய்ததும் இந்த அடிப்படையிலேயே. வேட்டையாடுவதற்கு உதவ வந்த செவ்விந்தியர்கள், சக செவ்விந்தியரை உளவு பார்த்தவர்கள் நீள முடி வைத்துக் கொள்ளலாம் என விதிவிலக்கும் தந்தார்கள்.
 10. quote //நான் அமெரிக்க சுதந்திரதேவி சிலைமுன் நிற்கையில்....‘தேவி, உன் கையில் அந்த மானுடத்தின் பேரொளியுடன் இன்னும் ஆயிரமாண்டுக் காலம் இங்கே நின்றிருஎன உண்மையான கண்ணீருடன் வேண்டிக் கொண்டேன். //
 அமெரிக்காவுக்கு ஜால்ரா தட்டும் கபடப் பேச்சு . வேறென்ன ?
இவை எல்லாம் இப்போதைய ஜக்கி வாசுதேவ் குறித்த தொடரின் முதல் பாகத்தில் இருப்பவை.
ஆனால், எப்போதுமே ஜெயமோகன் செய்துவருகிற கேஸ்டிஸ திரிப்புகளும் கவனிக்கத்தக்கவையே. உதாரணமாக:
quote
​http://www.jeyamohan.in/95669
 //இந்து மதம் மூன்று வழிகளை முன்வைக்கிறது. பக்தி முறையே பெருவாரியான மக்களுக்குரியது. எளிய அர்ப்பணிப்பு போதும் அதற்கு. ஆழமான நம்பிக்கையும் சீரான சடங்குகளும் இருந்தால் ஒருமனிதர் தன்னளவில் நிறைய முடியும். ஆலயவழிபாடு, பஜனை, தீர்த்தயாத்திரை என அதற்கான வழிகள் பல.
பக்தியில் நிறைவடையாத அறிவுக்கூர் கொண்டவர்களுக்கு உரியதே ஞானமுறை. அது அறிதலின் பொருட்டு வாழ்க்கையை அமைத்துக் கொள்பவர்களுக்கு உரியது. கற்கவும் சிந்திக்கவும் நேரமும் வாழ்க்கையமைப்பும் இருக்கவேண்டும். ஆசிரியர்களைத் தேடிச் செல்லவேண்டும். அறிதலில் சமரசமற்று இருக்கவேண்டும்.
மூன்றாவது முறையே யோகம் எனப்பட்டது. அது அதன் பொருட்டு பிற அனைத்தையும் விடுவதற்கும் துணிபவர்களுக்கு உரியவை. மிகக்கடினமான சுய உளவியல் பயிற்சிகளின் வழி அது. உலகியலில் இருந்து விலகவேண்டும். உரிய ஆசிரியர்கள் அமையவும் வேண்டும்.
 ஆனால் இப்பிரிவினை முழு முற்றானது அல்ல. பக்தியும் ஞானமும், ஞானமும் யோகமும் கலந்து வெவ்வேறு வழிமுறைகள் இதற்குள் உருவாகியிருக்கின்றன.//​
 முதலில், ஹிந்து மதம் என்கிற ஒன்று இல்லை.
 அப்படி ஒன்று இருப்பதா ஜெயமோகன் சொல்கிறார். இருப்பது ஹிந்து கலாச்சாரம்/சமூகம் மட்டுமே. ஒரு பொதுஜனப் புரிதலுக்காக அப்படிப் பயன்படுத்துகிறார் அவர், என்று எண்ணி இதை நாம் பெரிதுபடுத்த வேண்டியதில்லை.
 ஆனால், கண்டிப்பாக கவலைப்படக்கூடிய கவலைப்பட வேண்டிய விஷயம் - திரித்தல்களும், புளுகுகளும்.
 இவ்விரண்டும் ஒரு கவிஞருக்கும், கதைபுனைபவருக்கும் அவசியமானவை. மற்ற துறைகளில் இவற்றை நுழைத்து திரித்து இது என் சுயஞானப் பிரகாசம் என்பது ஏற்கத்தக்கதல்ல.
 ஜெயமோகன் சொல்வதில் என்ன திரித்தல்களும், புளுகுகளும் இருக்கின்றன ?
 கிறுத்துவக் காலனிய இந்தியவியலாளர்கள் (காஇ) இந்திய சமூக வரலாற்றை நிறையவே திரித்தார்கள். ஜெயமோகன் அந்த திரித்தல்களை நிறைய மாற்றவில்லை.
 துரதிர்ஷ்டவசமாக, இந்த காஇக்கள் வகுத்த சட்டகத்துக்குள் இருந்துதான் நாமும் நம் முன்னோர் அறிவை நாம் அணுக வேண்டி இருக்கிறது.
 ஏனெனில், இந்திய கல்வி முறையை காலனியம் முற்றிலும் அழித்துவிட்டதால், இந்தியப் பார்வை முறைக் கல்வியும் அழிந்துவிட்டது.
 அவ்வகையில், ஜெயமோகனும் அந்தச் சட்டகத்துக்குள் இருந்து செயல்படுவதாக எடுத்துக்கொண்டால், அவர் வேண்டும் என்றே இதைச் செய்கிறார் எனச் சொல்ல முடியாது.
 ஆனால், அவர் அந்தச் சட்டகத்துக்குள்ளும் நிறைய திரித்தல்களைச் செய்கிறார். அதுதான் வருந்த வைக்கிறது.
காஇ.க்கள் பௌத்த மதத்தை, பிராமண "ஜாதியினருக்கு" எதிரான மதமாகக் கட்டமைத்தனர். பிராமணர் vs பிராமணரல்லாதார் என்றமைத்தனர்.
 இந்த பிராமணர்களின் கர்ம மார்க்கத்தை புத்தர் எதிர்த்தார் என்று பிரச்சாரம் செய்தார்கள்.
 காஇக்கள் கருத்துப்பரப்பலின் (propaganda)வின் படி:
 பிராமணர்கள்ஆட்டையும் மாட்டையும் யாகத்தில் பலிகொடுத்து, தெய்வங்களை திருப்தி செய்வதன் மூலம், இகலோக வாழ்விற்குத் தேவையான பலன்களைப் பெறலாம், மானுட துயர்களை நீக்கலாம் என்றார்கள்.
 இப்படி மிருகங்களைப் பலிகொடுப்பது கொடூரம் என்று கருணையே வடிவானபிராமணரல்லாதசித்தார்த்த புத்தர் எதிர்த்துப் புரட்சி செய்தார். இந்த யாகங்களால் மனிதரின் துயரங்கள் நீங்காது, ஞானமடைவதாலேயே துயரங்களில் இருந்து விடுதலை கிடைக்கும் என்று போதித்தார்.
இந்த நான்குவரி புரிதலையே கிறுத்துவரின் அல்லக்கை அம்பேத்காரும், மார்க்ஸிஸ்ட்டுகளும், அவ்விருவர் வழியே மற்றவர்களும் பரப்பி வருகிறார்கள். ஜெயமோகனும் அவர்களில் ஒருவர் மட்டுமே. இந்துத்துவர்களாக சொல்லிக் கொள்பவர் பலரும் இக்கருத்தையே கொண்டுள்ளார்கள். அதனாலேயே ஜெயமோகன் இந்துத்துவர்களால் கொண்டாடப்படுகிறார்.
ஜெயமோகனை விமர்சிக்கும் இந்துத்துவர்களும்கூட அவரின் இந்தத் தத்துவத் திரித்தல்களை விமர்சிப்பதில்லை. ஏனெனில், அவ்விமர்சனமானது பிராமணர் vs பிராமணர் அல்லாதவர் எனும் சட்டகத்தை விமர்சிப்பதாக அமைந்துவிடும்.

கர்மத்துடன் இந்து சமூகத்துக்கு உள்ள தொடர்பு:
 பௌத்தர் எதிர்த்தது பிராமணர்களை அல்ல. பிரம்மவாதிகளை.
 பிரம்மவாதிகளின் கர்ம மார்க்கம் ஆதரித்தது ஆட்டையும், மாட்டையும் பலிகொடுத்து, தெய்வங்களை குஷிப்படுத்தி, துயரங்கள் தீர்ப்பதையும் அல்ல.
 காஇ மரபின்வழியில் ஜெயமோகனும்  காலனிய கருத்துப்பரப்பிகளின் கருத்தையே  முன்வைக்கிறார். அதுவரையில் அவர் காஇக்களின் சட்டகத்தை மாற்றவில்லை.
 அவர் எப்போது கர்ம மார்க்கத்தை பக்தியோடு சேர்க்கிறாரோ அப்போது காஇக்கள் பதிந்துள்ள உண்மையான தகவல்களையும் திரிக்கத் தொடங்குகிறார்.
 எளிய மக்களுக்கு தெய்வ பக்திதான் சாத்தியமாகிறது, அந்த பக்திக்கு சடங்காச்சாரங்கள் அவசியமாகின்றன. எனவே, சடங்காச்சாரங்கள் கொண்ட கர்மமார்க்கம் பக்திமார்க்கத்துக்குள் அடங்கும் என்று அவர் சொல்லிவருகிறார்.
 quote 
//4. இந்து மதத்தின் மூன்று அடுக்குகள் ஒன்று அதன் பழங்குடிவழிபாட்டுத்தளம், இரண்டு அதன் பெருமதமரபு,மூன்று அதன் தத்துவ- யோக மரபு.இந்த மூன்றாம் மரபைப்பற்றிப் பேசும் அறிஞர்களும் ஞானிகளும் இல்லாமலாகி விட்ட சூழலில், அப்படி ஒன்று இருப்பதே மக்களுக்குத்தெரியாமல் இருக்கும்சூழலில், ஜக்கி போன்றவர்களின் பங்களிப்பு முக்கியமானது என்பதே என்எண்ணம் //
இது ஜெயமோகன் 2012 பிப்ரவரியில் எழுதியது. மூன்று அடுக்குகள் என்கிறார்.
அதாவது, ஆபிரகாமியப் பார்வையில் இந்து சமயங்களின் நால்வழிப்பாதையை அவர் ஒரு பிரமிடாக, கீழே இருந்து மேலே ஏறிச் செல்ல வேண்டியதாக பாவிக்கிறார்.
அடுத்ததாக அவர் செய்யும் புளுகரசியல், கர்மத்தை பக்தியோடு சேர்த்து இரண்டும் ஒன்றே என்பது.
quote // பக்தி, வழிபாடு போன்றவையே இங்கே கர்ம மார்க்கிகளுக்கான ஆன்மீகமாக முன்வைக்கப்பட்டன. நம்பிக்கை, சடங்குகள், ஆசாரங்கள் ஆகியவற்றாலானதே பக்தி. நம்மிடையே பிரபலமாக உள்ள செமிட்டிக் மதங்கள் கர்ம மார்க்கத்தை மட்டுமே முன்வைக்கின்றன. உறுதியான, முழுமையான நம்பிக்கையை மட்டுமே அவை வழியாகச் சுட்டிக்காட்டுகின்றன. //
 2015ல் இப்படி எழுதி இருக்கிறார்.  இதில் ஞான மரபு என்கிறார். பக்தி வழிபாட்டை கர்மத்தில் சேர்க்கிறார்.
இங்கே ஜெயமோகன் செய்யும் அரசியல் கர்மம்/பக்தி என்பது ஞானம் என்பதற்கு எதிரானது போன்ற தோற்றத்தைச் செய்யும் அரசியல். அதாவாது மார்க்ஸிய முரணியங்கலின் வழியே எதிரெதிராகத்தான் வேறுபடும் வழிகள் இருக்க வேண்டும் என்கிற கருத்தை முன்வைக்கிறார்.
உண்மையில், கர்ம மார்க்கம் என்பது வெறும் யாகங்களும், சடங்குகளும் கொண்டதா, பக்தியை அடிப்படையாகக் கொண்டதா எனக் கேள்வி கேட்டால், அதற்கான பதில்:

இல்லை என்றுதான் வரும்.
 கிழக்கத்திய ஆய்வுப்போக்கு என்று ஒரு தரிசனம் இந்தியாவில் உண்டு. செம்மொழியில் பூர்வ மீமாம்ஸம் என்பார்கள். அனைத்து யாகங்களும் இந்த தரிசனத்தின் அடிப்படையில்தான் செம்மையாக்கப்பட்டு, செய்யப்பட்டு வருகின்றன. இதுவே கர்ம மார்க்கத்தின் இயக்குவியல் தத்துவம். 
இந்தப் பூர்வ மீமாம்ஸைக்கு தெய்வம் என்கிற ஒருவிஷயமே தேவை இல்லை. அதாவது, அடிப்படையில் இது ஒருவித நாத்திக சிந்தனையே 
 இச்சிந்தனையின்படி உவ்வுலகும், வாழ்தல் வாழாதிருத்தல் எனும் இருப்பும், இவற்றை இருக்கச் செய்திருக்கும் தர்மத்தின்படியே செயல்படுகின்றன.
 இயற்கை மற்றும் அதன் விதிகளின் வழியேதான் தர்மம் செயல்படுகிறது.
 எனவே மனிதர்கள் தங்களது துயரங்கள் நீங்க சரியான வழி இந்த இயற்கை விதிகளை அறிந்துகொள்வதும், அவ்விதிகளின் வழியே செயல்முறைகளை உருவாக்கி, அவற்றைச் செயல்படுத்தும் கர்மங்களைச் செய்வதுமே. 
இவ்வுலகில் வாழ்வானது ஆரம்பமோ முடிவோ அற்றது. அதாவது, ஏதோ ஒருவகையான பிறவி எடுத்துச் செயல்பட்டுக்கொண்டு இருப்பது மட்டுமே நிகழ்கிறது. பிறவி இல்லாமல் போவது என்கிற ஒரு விஷயமே கிடையாது. தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டு இருப்பதுதான் மாற்ற முடியாத விதி. இந்தச் செயல்படுதல்தான்கர்மம்”.
 இந்தக் கர்மங்களைச் செவ்வனே சரியாகச் செய்வதற்கு உதவுபவை யாகங்கள். செவ்வனே என்றால் தர்மம் எனும் ஒழுங்கோடு செய்வது.  
இதுதான் கர்மகாண்டத்தின் அடிப்படைப் புரிதல்.
இதற்குக் கடவுள் என்றோ தெய்வம் என்றோ ஒன்று தேவை இல்லை.
 தேவை இல்லை என்ற குமாரிலபட்டரோடு, தேவைதான் என்று வாதிட்டார் ஆதிசங்கரர்.
 இங்கனம், கடவுள் என்கிற ஒன்று அவசியமே இல்லை என்று சொல்லும் ஒரு சிந்தனை மரபை பக்தியோடு எந்த அடிப்படையில் சேர்க்கிறார் ஜெயமோகன் ?
இக்கேள்விகளுக்கான பதிலாக ஜெயமோகன் என்ன சொல்லக்கூடும் என்பதையும் கொஞ்சம் யூகிக்கலாம். நடைமுறையில் கர்ம மார்க்கமானது எப்படி இருக்கிறதோ அதைச் சொல்கிறேன் எனலாம். இந்த வாதம் ஜெயமோகனுக்கு முன்பே ஈவெராவால் மொழியப்பட்ட ஒன்றுதான்.
கர்ம மார்க்கம் என்பதை வெறுமே பார்ப்பனர்கள் நெருப்பு வளர்த்து, புரியா மந்திரங்கள் சொல்வது போன்ற புரிதலை தரும் வண்ணம்தான் ஜெயமோகன் எழுதி வருகிறார்.
அல்லது, அலகு குத்திக் கொள்ளுதல், சபரிமலைக்கு மாலைபோட்டுக் கொள்ளுதல், சடங்காச்சார தீண்டாமை கடைபிடித்தல் போன்றவற்றோடு ஒதுக்கும் புரிதலைத் தருகிறார்.
அதாவது, மதச் சடங்குகளாக மட்டுமே கர்ம மார்க்கத்தைக் காட்டுகிறார்.
உண்மையில், பூர்வ மீமாம்ஸையின் வழியில் மதச்சடங்குகள் மட்டும் அல்ல சமூகக் கடமைகளையும் முறைப்படுத்தும் சிந்தனைகள் உண்டு. அவையே தர்மசூத்திரங்கள் எனப்படும் மனுஸ்ம்ருதி போன்ற ஸ்ம்ருதிகள். (ஸ்ம்ருதி என்றால் சமூக சட்டம் அல்ல. அதன் பொருள் சமூக மரபு.)
இங்கனம், கர்ம காண்டம் என்பதை வெறும் மதச் சடங்காககச் சுருக்கும் காஇக்களின் வழிச்சிந்தனையை திலகர், விவேகானந்தர் உள்ளிட்ட பலர் திருத்த முயன்றனர். சமூக வாழ்வாதாரக் கடமைகளையும் தர்மத்தின் வழியில் செய்வதும் கர்மம்தான் என்று அறிவுறுத்தினர்.
நன்றாக சாப்பிட்டு, சரியாக ஃபுட்பால் விளையாடுவதே போதும் என விவேகானந்தர் சொன்னதில் இருப்பது பூர்வ மீமாம்ஸையே.

10 comments:

Muse (# 01429798200730556938) said...
This comment has been removed by the author.
ஆனந்த கணேஷ் said...


என்ன எழுத்து இது ? வடைச் சட்டியில் ஜாங்கிரி போல இழுத்து இழுத்து எழுதி இருக்கிறார்.

நாங்கள் ஒத்துக் கொள்ள மாட்டோம். ஜெயமோகன் நல்லவர். வல்லவர். நாலும் தெரிந்தவர்.

Anonymous said...

ஜெயமோகனின் பதிலை எதிர்பார்து அவர் பல்வேறு தலைப்புகளி்ல் எழுதிய கருத்துகள் பற்றி சமீபத்தில் தான் இ-மெயில் அனுபினேன். அதை அவர் தனது வலைதளத்தில் போடுவது சந்தேகம்தான். ராம் வலைதளைதை நேற்றுதான் பார்தேன். தங்கள் பதிவை பார்த்து கோட் என்ற வார்தையை சேர்த்து கொண்டு மேலும் சிலவற்றை சேர்து மறுபடியும் ஜெமோவுக்கு மெயில் செய்ய போகிறேன். ஜெமோகன் பிராமிணர்களை வஞ்சகபுகழ்சி செய்பவர் என்றும் அவரிடமும் ஜாதி என்ற கு.ந. இருக்கிறது என்பதை நான் மேலோட்டமாகவே தெரிந்து கொண்டேன். -

quote // சங்ககாலம் முதல் நாம் காணும் தமிழகப் பண்பாட்டு மோதல் என்பது தமிழர் x வடுகர் என்பதுதான். [வடுகர் என்றால் தெலுஙகர், கன்னடர். கிருஷ்ணைக்கும் கோதாவரிக்கும் நடுவே உள்ள வேசரநாட்டைச் சேர்ந்தவர்கள்] //

quote // இத்தனை ஆண்டுக்கால அரசியல் வழியாக வடுகர் x தமிழர் பிரச்சினையை வெற்றிகரமாக பிராமணர் X தமிழர் என்று மாற்ற இவர்களால் முடிந்தது. //

சங்ககாலம் முதல் தமிழர் x வடுகர் பண்பாட்டு மோதல் என்பது என்ன என்று தெரியவில்லை. நான் இதுவரையில் எங்கு சொல்லபடாத செய்தியை உங்கள் மூலம் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன்.
அரசியல் வழியாக வடுகர் + தமிழர் = திராவிடம் என்ற கூட்டு சதிதானே நடந்தேரியது. பண்பாட்டு மோதல் என்ன என்று சற்று விளக்கவும். பிராமிணர், ஹிந்து மத பண்பாட்டு மோதல் தானே இன்றுவரை நடக்கிறது.

பிராமணர்xதமிழர் என்ற பிரச்சனைக்கு வடுகர்களுடன் கூட்டு வைத்து கும்பிஅடித்து காட்டிகொடுத்த முதலியார்களை பற்றி சொல்லாதது ஏன் ? திராவிட இயக்கம் இன்று வரை தொடர்வதற்கு அவர்களின் பங்களிப்பு மிகவும் பெரியது. இந்த நாயகர், முதலியார் கூட்டு என்பது விஜயநகர சாம்ராஜ்யம் ஆரம்பித்த நாட்களிலிருந்தே தொடர்ந்து வந்துள்ளது. அன்னியர்கள் தமிழ்நாட்டில் கால்ஊன்ற பெரிதும் துணை நின்றவர்கள். சுதந்திரமே தேவையில்லை என்று அன்னியர்கு காவடி தூக்கியவர்கள். ஆங்கில ஆட்சியில் செயற்கை பஞ்சங்கள் ஏற்படவும், லஞ்சங்கள் பெறுகவும், துபாஷிகளாக சேவகம் செய்து செல்வந்தராக ஆனவர்கள். பல ஏக்கர் நிலங்களுக்கு சொந்தகாரர்களானவர்கள். கோவில் தர்மகர்தாக்களாக இருந்து கோவில் வீடுகளை பட்டா செய்து கொண்டவர்கள். சென்னையில் உள்ள தெருக்களின் பெயர்களே இதற்கு சான்று. என்னால் 50 திற்கும் மேற்ப்பட்ட துபாஷிகளின் பெயர்களையும் தெரு பெயர்களையும் பட்டியல் இட முடியும்.

Anonymous said...

quote // இதில் வருந்தத் தக்கது என்னவென்றால் மேலே சொன்ன கதை புராணங்களில் இல்லை என வாதிடும் ஒரு சாராரிடம் உள்ள மேட்டிமை நோக்குதான். ஒரு சாதாரண பிராமணன் ஜக்கி தன்னிடம் வந்து ஒருவார்த்தை கேட்டிருக்கலாமே என்னும் பாவனையில் எழுதுவதிலுள்ள ஆணவத்தைப் பார்க்கையில் தான் எத்தனை ஜக்கிகள் இங்கே இன்னும் தோன்ற வேண்டியிருக்கிறது என்னும் எண்ணம் வருகிறது. //

மேட்டிமை என்பது பிராமிணர்களுக்கு மட்டும் உள்ள சுபாவம் என்பது போல் காழ்புடன் சொல்வதே ஒரு மேட்டிமை குணம்தான் என்று நான் கருதுகிறேன் !! பார்பான் வெறுப்பு ஒர் அளவுக்கு ஓய்ந்தாலும் தலித் வெறுப்பு இன்றுவரை தொடர்கிறது. இது ஜாதி ஹிந்துகளின் மேட்டிமையை குணத்தை தானே காட்டுகிறது.(இதுதான் காழ்ப்பு) பார்பனபுத்தி, பரபுத்தி என்பதுதானே சமூகத்தில் நிலைத்ததுவிட்டது மற்ற புத்திகள் எங்கு ஓடி ஒளி்ந்து கொண்டன. பிராமணர்களிடம் மேட்டிமை என்பது வெள்ளையர் ஆட்சியில் ஆங்கில படிப்பதில் முன்னிலை வகித்ததால் ஏற்ப்பட்ட குணம் ஆனால் அப்படி எதுவும் இப்பொழுது இருப்பதாக தெரியவில்லை. மீனாக்ஷி சுந்தரம் பிள்ளையிடம் கல்வி கற்ற தமிழ் தாத்ததா உ.வே. சா , தளவாய் அரியநாத முதலியாரை பற்றி புத்தகம் எழுதிய கி.வா.ஜா. பக்தியியக்கத்தில் பிராமிணர்கள் ஜாதி ஹிந்துகளுடன் கைகோர்த்தது எல்லாம் கற்றாரை மதிக்கும் பண்பினால் வந்த குணம். மேலும் இதைப்போல் சான்றுகள் பல கூறமுடியும்..


// முரஹரி ஐயங்கார் என்றொரு கதாபாத்திரம் இந்த நாவலில் வருகிறது. வக்கீல் தொழிலுக்குப் படித்திருக்கும் அவர் பிரிட்டிஷாருக்கு நிதி ஆலோசனைகள் வழங்கும் ஆடிட்டராகவும் இருக்கிறார். பஞ்ச காலத்தில் லட்சக்கணக்கில் தலித்கள் செத்து விழுவதை அவர்களுடைய விதி என்று எள்ளி நகையாடுகிறார். கூடவே பிரிட்டிஷாருக்குக் கூட்டிக் கொடுத்தும் தனது செல்வாக்கைப் பலப்படுத்திக்கொள்கிறார் என்று நாவலில் சொல்லப்படுகிறது. அப்படி ஒருவர் இருந்தாரா… அவர் அதைச் செய்தாரா என்பவையெல்லாம் நிரூபிக்க முடியாத புனைவு உண்மைகள். ’பெரியார் மண்’ணில் சுமார் 20-25 ஆண்டுகளுக்கு மேலாகத் தனியொருநபராக, இந்து ஆன்மிக மரபின் இலக்கிய ஆதரவாளராக வீரியத்துடன் செயல்பட்டுவரும் ஜெயமோகனே இதையும் செய்திருப்பதைப் பார்க்கும்போது வேதனையே மிஞ்சுகிறது. //
இது வெள்ளையானை நாவலுக்கு வந்த ஒருவரது பதில் உரை. மேலே சொன்ன முரஹரி ஐயங்கார் என்பதற்கு பதிலாக காலணி ஆதிக்க நிகழ்வுகளை வெள்ளையன் எழுதியவற்றை முழுவதும் படித்தால் நீங்கள் முரஹரி ஐயங்கார் என்பதை முரஹரி முதலியார் என்று எழுதுவதே சரியானதாக இருக்கும் என்பது உங்களுக்கு தெரியாதா ?

Anonymous said...

quote // கூடவே அதேயளவுக்கு சாதிவெறி கொண்ட பிராமணர்களும் பிற உயர்சாதியினரும் இங்கே செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்பதையும் சொல்லிக்கொண்டிருக்கிறேன். //
quote // ஒரு கீழ்த்தர அரசியல் உத்தி அது. பிராமணரல்லாத உயர்சாதியினர் [நாயர்கள் முக்கியமாக] சாதியாதிக்கத்தை கடுமையான வன்முறைமூலம் நிலைநிறுத்தி பிறசாதியினரைச் சுரண்டிப்பிழைத்தவர்கள். //
எனக்க தெரிந்தவரையில் பிராமிண ஜாதி வெறி என்பது கிடையாது ஆனால் ஜாதி பற்று உண்டு. மற்ற ஜாதி வெறியர்களால் தான் திராவிடம் பிறந்து தொடர்ந்து வருகின்றது என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும். இப்படிபிராமிணர் என்பதை பற்றி விவரவாக சொல்லும் நீங்கள் உயர்சாதியினர் யார் யார் என்று எப்பொழுதும் பட்டியல் போடாதது ஏன். அதிலும் குறிப்பாக முதலியார், பிள்ளை என்று வந்தால் அவர்களை மேலோட்டமாக விமரிசிப்பது ஏன் ? நாயர்கள் முக்கியமாக என்று சொல்வது எவ்வளவு தூரம் உண்மை என்று புரியவில்லை ? அவர்களும் வடுகர்களா ? வடுகர்களான விஜயநகர ஆட்சியினால் முகலாயர் ஆக்ரமிப்பு பெரிய அளவில் நடைபெறாமல் தடுக்கப்பட்டதும் கோவில்கள் புதுபிக்கப்பட்டதும், கர்நாடக சங்கீதம், கலைகள் வளர்க்கப் பட்டதும் பண்பாட்டு மோதலா. மோதலை தூண்டிவிட்டவன் வெள்ளையன் அதற்கு வடுகர்களுடன் துணைநின்று அதில் மேலும் தூபம் போட்டவர்கள் வெள்ளாளர்கள் என்பது தெரியாதா? அவர்கள் பங்களிக்கவில்லை எனில் திராவிடம் என்றோ மறைந்து போயிருக்கும். பச்சையப்பன் கல்லூரியிலும் பல்கலைகழகத்திலும் ஆக்ரமித்து தமிழக சரித்திரத்தையே மாற்றி தமிழகத்தை தேசிய நீரோடையிலிருந்து பிரித்த வள்ளல்கள் அல்லவா !

Anonymous said...

quote // ஆகவே தமிழகத்தில் பிராமணர்களும், வேளாளர்களும், முதலியார்களும் ,செட்டியார்களும் சாதியை நிலைநிறுத்தியதன் பொறுப்பை முதன்மையாகச் சுமக்கவேண்டும். அதற்காக வெட்கவும், அதற்காக பிராயச்சித்தம்செய்யவும் வேண்டும். அதில் பிராமணர்களுக்கு மேலதிகமான பொறுப்பு ஏதுமில்லை. அப்படிப் பொறுப்பாக்குவது பிறசாதியினரின் கீழ்மைநிறைந்த அரசியல் தந்திரம் //
இது உண்மை பிராமிணர்களுடன் சேர்ந்து மற்றவர்களும் என்பது ஏற்புடையதுதான்.
quote // பிராமணர்கள் வன்முறை அற்ற சமூகமாக, கல்வியை மட்டுமே ஆயுதமாகக் கொண்டவர்களாக இங்கே செயல்பட்டிருக்கிறார்கள். சமரசத்தை உருவாக்குபவர்களாகவும், இணைப்பவர்களாகவும் கற்பிப்பவர்களாகவும் இருந்திருக்கிறார்கள். அதன்பொருட்டு பெருமிதம் கொள்ளலாம் //
இப்படி அடையாளப் படுத்தியதற்கு நன்றி ? (பின் மேட்டிமை மேட்டிமை என்கிறீர்களே அது காழ்பா) ஆனால் அப்படிபட்டவர்களை இன்று தேடவேண்டும் என்ற நிலைக்கு தள்ளியது இந்த திராவிட மாயை ? பார்களிலும் டாஸ்மாக் கடைகளிலும் அவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டிருக்கிறது, அறிவு மழுங்கிவறுகிறது. இதற்கு யார் பொறுப்பு !! ?????
quote // கணிசமான பிராமணர்கள் வெறுக்கப்படுவது அவர்களின் மேலோட்டமான நட்புமுகத்திற்கு அப்பால் சகமானுடரை இழிவெனக் கருதும் அந்த மேட்டிமை அம்சம் எங்கோ ஆழத்தில் இருந்து, தருணம் கிடைத்தால் வெளிப்படும் என்பதை பலர் உணர்ந்திருப்பதனால்தான். குறிப்பாக பொருளியல் மேன்மை அடைந்து, அதிகாரத்தை அணுகும்தோறும் பிராமணர்களிடம் அந்த மேட்டிமைத்தனம் வெளிப்படுகிறது..//

quote // கணிசமான பிராமணர்கள் இலக்கியம், கலை, ஆன்மீகம் ஆகியவற்றில் பிராமணியத்தன்மைகொண்டவற்றை மட்டுமே ஏற்கக்கூடியவர்களாக, பிற அனைத்தையும் அறியாமலேயே கீழானவையாக கருதக்கூடியவர்களாக இருக்கிறார்கள். இது அவர்களிடம் தன்னிச்சையாக வெளிப்படும். இயல்பாகவே புதுமைப்பித்தன் பிடிக்காது, மௌனி பிடிக்கும். நுண்ணியல்பாலேயே வள்ளலாரோ நாராயணகுருவோ உவப்பாக இராது, ரமணரோ ஜே.கிருஷ்ணமூர்த்தியோதான் உண்மையான ஞானிகள் எனத்தோன்றும். //

இதுவும் ஒர் அளவிற்கு உண்மைதான் அது பொருளியல் மேன்மை அதிகாரத்தால் மட்டும் அல்ல கணிசமமான மற்றவர்களிடம்மும் இந்த சுபாவம் உண்டு. இது மற்ற பல ஜாதியரிடமும் உண்டு. இதற்கு ஏற்ற எதிர்மறை ஜாதி ஹிந்துக்கள் பார்பானை எதிரிபோல் பார்ப்பதுதான் என்று உங்களுக்கு தெரியாதா ?.Anonymous said...

அரிய நாயக முதலியார் பற்றி புத்தகம் எழுதியவர் எம.எஸ்.சுப்ரமணிய ஐயர் கி.வா.ஜா என்பதை மாற்றி படிக்கவும். இவரும் நல்ல சேனாதிபதி என்ற தலைப்பில் தமிழகம் பற்றி புத்தகம் வெளியிட்டுள்ளார். எனக்கு தங்கள் வலைதளத்தில் ஜி.மெயில் மூலம் பின்னூட்டம் அனுப்புவது எப்படி எனதெரியாததால் அனானிமஸ் மூலம் அனுப்புகிறேன். எனது பெயர் வேதம்கோபால். ஏன் எனது பின்னூட்டத்திற்கு பதில் எதுவும் போடவில்லை. இந்த பேஸ்புக் டிவிட்டர் வாட்ஸ்அப் வந்தவின் வலைதளங்களில் கருத்து பரிமாற்றங்கள் வெகுவாக குறைந்துவிட்டது.

rk said...

It is a great article in spite of limited understanding. My knowledge of Tamil is not great, hence I could not understand the finer points of the article. May I request the author to translate this article in English, time permitting? I can share it on FB, etc Thank you Sir

hayyram said...

வேதம் கோபால் ஜி தாமதமாக பார்த்தேன். மன்னிக்கவும். இப்போது இரவாகிவிட்டது. காலை பதில் எழுதுகிறேன்.

Anonymous said...

Ram why no reply as informed ?