Monday, May 8, 2017

பிரிவினைவாதிகள் கைகளில் தமிழ் சினிமா !பாகுபலி பார்த்த பிறகு தமிழ் சினிமா எந்த அளவிற்கு  நம்முடைய முன்னொர்களின் கலாச்சார வாழ்வியல்  குறித்த பார்வையில் அது குறித்த படமாக்களிலும் பின் தங்கி இருக்கிறது என ஒரு யோசனை தோன்ற துவங்கியது.
 
தெலுங்கு சினிமாவில் பலவிதமான உணர்வுகளை பிரதிபலிக்கும் படங்கள் அதிகம் வருகின்றன. தாய் தந்தை அண்ணன் தங்கை மென்மையான குடும்ப உறவுகளை சுற்றிய பாசப்பிணைப்புகளை வெளிப்படுத்தும் படங்கள் , அழகான காதல் கலாச்சார சடங்குகளுடன் கூடிய திருமணம் , கபடமற்ற தோழமை என பல்வேறு மென்மையான உனர்ச்சிகளை கொண்ட திரைப்படங்கள் வரிசையாக வந்தவண்ணம் உள்ளன. முன்னனி நடிகர்களான நாகார்ஜுன் போன்றவர்கள் நடிக்கும் சாயிபாபா , திருப்பதி பெருமாள் புகழ் பாடும் பக்தி படங்களும் , ராமாயணம் மகாபாரதம் மற்றும் அம்மன் பக்தி என பல்வெறு படங்கள் வந்த வண்ணம் இருக்கவே செய்கின்றன. தேசபக்தியை வெளிப்படுத்தும் படங்களும் அவ்வப்போது வரத்தான் செய்கின்றன.
 
ஆனால் தெலுங்கு நடிகர்களையும் தெலுங்கு படங்களையும் அவர்கள் போடும் வண்ண உடைகளையும் கேலி செய்து படம் எடுக்கும் தமிழ் சினிமாவின் இன்றைய நிலை என்ன?
 
தமிழ் சினிமாவில் குடும்ப உறவுகளின் அழகான பாசம் சொல்லும் படங்கள் எத்தனை? இதிகாச படங்கள் எத்தனை? பக்தி திரைப்படங்கள் எத்தனை? தமிழர் வரலாறு போற்றும் வரலாற்று படங்கள் எத்தனை? நம் பாட்டன் முப்பாடன்கள் வனங்கி வந்த குலதெய்வ வழிபாட்டு மரபுகளை பக்தியுடன் காட்டும் படங்கள் எத்தனை? தெசபக்தி படங்கள் எத்தனை? ஒன்றும் இல்லை.
 
கலாச்சார அழகுடன் திருமண சடங்குகளை காட்டும் திரைப்படங்களை பார்த்து நீண்ட நாட்கள் ஆகி போனது. அழகான கிராமிய வழக்குகளும் அவர்களின் களங்கமற்ற மனதையும் வெளிப்படுத்தும் திரைப்படங்கள் பார்த்த ஞாபகமே வருவதில்லை.
 
இதிகாச புராண படங்களைஎடுக்க யாரும் முனவரவே இல்லை.கடைசியாக ஒரு தீபாவளி கொண்டாட்டத்தை அதன் சமூக உணர்வுகளோடு வெளிப்படுத்திய திரைப்படம் எது நினைவில்லை. அனால் ஏன்?
 
சினிமா துறை யார் கைகளில் இருக்கிறது என்பதை பொறுத்து தான் இந்த மாதிரி திரைப்படங்களும் வெளிவருகிறது என்பதே கடைசியில் யான் கண்டறிந்த உண்மை.
 
ஆரம்பகாலகட்டத்தில் தமிழ் சினிமா பிராமணர்கள் பிள்ளை மற்றும் முதலியார்களின் கைகளில் இருந்தது. பின்னர் தேவர்கள். பின்னர் கௌன்டர்கள் அவை கொஞ்சம் கொஞ்சமாக மதுரை வட்டார வழக்குடையவர்கள் கைகளில் என உருமாறி இப்போது கிறிஸ்தவ , தலித்கிறிஸ்தவ , பெரியாரிச, நக்சலைட்டு சித்தாந்திகள் கைகளில் முழுவதுமாக தமிழ் சினிமா விழுந்து விட்டது.
 
ஆக ஆரம்ப காலத்தில் அதிகமாக பக்தி படங்கள புராண கதைகள், வரலாற்று கதைகள் வந்து கொண்டிருந்த தமிழ் சினிமாவில் மெல்ல கலாச்சார பிண்ணனி கொன்ட கிராமிய படங்கள் வரதொடங்கின.  அதுவும் தேய்ந்து போய் இப்போது கலாச்சாரமும் இல்லாமல் பக்தியும் இல்லாமல் பாரத மண்ணின் பாரம்பரியங்களுக்கு சம்பந்தமே இல்லாத ஒரு சமூகத்தில் நாம் இருக்கிற மாதிரி பிம்மபத்தை அளிக்கும் வண்ணமாக வெறும் வரட்டு கற்பனை கொண்ட எந்த வித குடும்ப உணர்வுகளோ தெய்வ பக்தி தேச பக்தியோ எவ்விதத்திலும் தமிழ் படங்களில் வருவதே இல்லை.
 
காரணம் தெய்வ பக்தி என்று சொல்லி விட்டால் ஹிந்து கடவுளரை ஆராதிக்க வேண்டி வரும். ஆனால் தலித் கிரிஸ்தவ , நக்ஸலிச , நாத்திகர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழ் சினிமா கூட்டத்தினரால் ஹிந்து கடவுளரை ஆராதித்து படம் எடுக்க முடியாது. சரி, கிராமிய கலாச்சாரம் அல்லது அழகான கலாச்சார பிண்ணனியுடன் கூடிய குடும்ப கதை என்றாலும் அதை ஹிந்து சம்பிரதாயத்தை மையப்படுத்தி எடுக்க வெண்டிவரும். அது இந்த தலித் கிறிஸ்தவ , நக்சலிச, நாத்திக கும்பலுக்கு எட்டிக்காயாய் கசக்கும். தேசபக்தி என்பது தமிழர் விரோதம் அதனால் தேசபக்தி படங்களும் வராது.
 
ராஜராஜ சோழன் ராஜேந்திர சோழன் என்று தமிழ் மன்னர்களின் கதையை எடுக்கலாம் என்றாலும் சிவனுக்க்கு அவர் கட்டிய கோவிலை பற்றி சொல்ல வேண்டும். தமிழ் மன்னர்களின் ஹிந்து மத பக்தியை வெளிப்படுத்தி விட வேண்டும். அதனால் அதுவும் இந்த தலித் கிறிஸ்தவ, நக்சலிச, நாத்திக சித்தாந்த தமிழ் சினிமாக்காரர்களுக்கு ஒவ்வாது. காரணம்  ஹிந்து மதம் தமிழர்களின் மதமே இல்லை என்று வாதிடும் வரட்டு தமிழ் சித்தாந்த வாதிகள். அதனால் தமிழ் மன்னர்கள் ஹிந்து மதம் சார்ந்தவர்கள் என்று தாங்களே படம் எடுக்க முன்வர மாட்டார்கள்.
 
அப்புறம் இவர்கள் எடுக்கும் படங்கள் தான் என்ன? கொலை குற்றம் , கஞ்சா கடத்தல், பொலீஸ் திருடனுக்கான க்ரைம் சப்ஜெக்ட், வரன்டு போன பள்ளிப்பருவ காம காதல் கதைகள் அதிலும் அப்பா அம்மா என்ற ஜீவன்களே அந்த காதலர்களுக்கு இருப்பதாக காட்டமாட்டார்கள். அட நம்பிக்கை சார்ந்து படம் எடுக்கிறார்களோ என்று பார்த்தால் அதுவும் பேய் படங்கள்.
 
கபாலி, மாவீரன் கிட்டு , எட்டு தோட்டாக்கள், மாநகரம், எனக்கு வாய்த்த அடிமைகள், துருவங்கள் பதினாரு, முத்துராமலிங்கம் என டான், க்ரைம் அல்லது ஜாதி வெறி திரைப்படங்கள் என வரண்ட குப்பைக்கூழங்களாக கொட்டித்தருகின்றனர் தமிழ் சினிமாத்துரையினர்.
 
தலித் கிறிஸ்தவ, நாத்திக , நக்ஸலிச சிந்தனாவாத குப்பை தமிழ் இயக்குனர்களிடமிருந்து பாகுபலி மாதிரியாகவோ அல்லது நான் மாதிரியாகவோ ஆல்லது தோழா மாதிரியாகவோ நல்ல தொழில் நுட்ப திரைப்படமோ அல்லது அழகான மெண்மையான பாச உணர்வுகளை வெளிப்படுத்தும் திரைப்படங்களோ ஒருக்காலும் வரப்போவதில்லை. 
 
இன்றைக்கு திரைப்படம் பார்க்கும் பதின்வயது குழந்தைகள் தங்களது பாரம்பரியத்திற்கும் மூதாதையர்கள் வாழ்வுக்கும் முற்றிலும் சம்பந்தமில்லாத ஏதோ ஒன்றை தங்களின் மூளையில் ஏற்றிக் கொண்டு வளர்கிறார்கள். அவர்கள் , தங்கள் அம்மா உரலில் அரிசி குத்தினார்கள் என்பதை கூட கற்பனை செய்து பார்த்துகொள்ள கூட முடியாத அளவுக்கு முந்தைய வாழ்வியல் உணர்வுகளில் இருந்து முற்றிலுமாக அப்புறப்படுத்தப் படுகிறார்க்கள். தங்கள் மூதாதையர்களின் வாழ்க்கையை
கற்பனை கூட செய்து கொள்ள முடியாதபடி இன்றைய வளரும் தலைமுறையினரை தமிழ் சினிமாக்காரர்கள் முந்தய தொடர்ச்சியில் இருந்து தள்ளி வைத்து விடுகிறார்கள்.
 
முற்றிலும் கோணல் புத்தி காரர்களிடம் தமிழ் சினிமா சிக்கி கொண்டிருப்பது எதிர்கால சந்ததியினருக்கும் தமிழ் சமூகத்திற்கும் மிகப்பெரிய அபாயம்.
 
தமிழர்களின் குறிப்பாக ஹிந்து தமிழர்களின் வாழ்வியல் மரபுகளை கூட இனி தெலுங்கு இயக்குனர்களின் படங்களின் மூலம் நாம் தெரிந்து கொண்டால்தான் உண்டு.
 
தமிழ் சினிமா துறையே !! கொணல் புத்தியிலிருந்து வெளியே வா!! அல்லது தொடர் நஷ்டங்கள் அடைந்து நாசமாய் போ! இப்படி ஒரு துறை தமிழ் சினிமாவின் பெயரை சொல்லி தமிழ் நாட்டில் இருக்க வேண்டிய அவசியம் என்னை போன்ற தமிழர்களுக்கு இல்லை.
 

No comments: