Friday, June 2, 2017

வீர சாவர்கர் கேட்டது மன்னிப்பா ?

எழுத்து:- ஆனந்த் கணேஷ்

இதைப் படிக்க ஆரம்பித்திருக்கும் உங்களிடம் ஒரு கேள்வி:

அரசியல் என்றால் என்ன ?


அட, பதிலைத் தராமல் அடுத்த பாராவுக்கு வந்துவிட்டீர்களே. பதிலை யோசியுங்கள்.

அரசியல் என்றால் என்ன ?


பதிலை தெளிவாக உருவாக்கிக் கொண்டீர்களா ? சரி, உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள நோட்பேடில் உங்கள் பதிலை டைப் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது இந்தக் கட்டுரையைப் படிக்க ஆரம்பியுங்கள்.


Rajesh Kumar சொல்கிறார்:வெள்ளையனின் கட்டளைகளை மேற்கொண்டிருந்தால் சிறை செல்லவே தேவையில்லை என்ற நிலையிலும் அதை ஏற்காமல், சிறையிலிருந்து வெளியே வருவதற்கு வாய்ப்பிருந்தும் வராமல் சிறையிலேயே வாடி வாழ்க்கையை தொலைத்து வீணாய்ப் போன மாமனிதனை நாம் வீர சிதம்பரம் பிள்ளை என்று கூப்பிடுவதில்லை.


ஆனால் சிறையிலிருது வெளியே வருவதற்காக கருணை மனு மேல் கருணை மனுவாக போட்டு வெள்ளையன் சொல்வதையெல்லாம் கேட்டு நடக்கிறேன் என்று அடிமை சாசனம் எழுதிக்கொடுத்து அப்படியே வாழ்ந்தும் மறைந்த வேடிக்கை மனிதனை வீர சாவர்க்கர் என்று கூப்பிடுகிறோம்.


அதுதான் மாற்றி எழுதப்படும் வரலாற்றின் மகத்துவம். அதுவும் முகமூடி போட்டுக்கொண்டு தன் வரலாற்றை தானே மாற்றி எழுதுவதின் மகத்துவம்.

என்று சொல்லிவிட்டு, இந்தக் கட்டுரையை ஷேர் செய்துள்ளார்:


இந்துக்களின் வீரத்தலைவர் . . சிதம்பரம் பிள்ளையவர்கள் சிறையில் கொடுமைகளைக் கண்டது 1908லிருந்து 1912வரை. மொத்தம் 4 ஆண்டுகள்.

வீர சாவர்க்கரவர்கள் சிறையில் கொடுமைகளைக் கண்டது 1911லிருந்து 1924வரை. ஏறத்தாழ, 13 வருடங்கள் (10 வருடங்கள் அந்தமானில் கொடூர சித்திரவதைகளுடன் சிறை. 3 வருடங்கள் இந்தியாவில் சிறை.)

4 வருடங்கள் ..சி அவர்கள் பட்ட கொடுமைகள் உட்பட, வேறுபல கொடுமைகளையும் சேர்த்து அனுபவித்தார் வீர சாவர்க்கர்.
வீர சாவர்க்கர் 1921 வரை சிறையில் இருந்த போது இருந்த கொடுமைகள் சொல்லத்தக்கவை அல்ல. நல்லவர் நடுங்கிப் போவார். பொல்லாதவரோ உயிரை விட்டுவிடுவார்கள். 1920களுக்குப் பின்புதான் சிறைச்சாலைகளில் கொஞ்சம் சீர்திருத்தம் வேண்டும் என்று பிரிட்டிஷ் அரசுகூட யோசித்தது.


The Report of the Indian Jails Committee of 1919-20 is considered to be the foundation stone of modern prison reform in India. For the first time, this report identified reformation and rehabilitation as the true objective of prison administration. This Committee was appointed to examine the system of jails in India. It defined the aim of the Prison Administration as "prevention of further crime and restoration of the criminal to society as a reformed character". It stressed the need for shifting the emphasis from the punishment of offenders to their reformation and recommended the adoption of measures. Apart from this, classification of prisoners, Probation, Parole, setting up of juvenile institutions- Remand Homes, Certified Schools, Probation Services and After Care Hostels, Borstals and introduction of separate institutions for women followed after the publication of the 1919-20 report.
1921ல் அந்தமான் சிறைக் கொடுமைகளில் இருந்து, இந்தியச் சிறைக் கொடுமைகளை அனுபவிக்க அனுப்பப்பட்டார். உண்மையில் அந்தமானைவிட அதிக அளவு துன்புறுத்தல்களை அவர் இந்தியச் சிறையில்தான் அனுபவித்தார். எந்த அளவு என்றால், எதைக் கண்டும் அயராத அம்மனிதர் தற்கொலை செய்துகொள்ள யோசிக்கும் அளவுக்கு.

அதற்குப் பின்பும், அவர் சிறையில் இருந்து விடுதலை பெற்றுவிட்டார் என்று சொல்லி விட முடியாது . 1937ம் ஆண்டுவரை அவர் ஏறத்தாழ வீட்டுச் சிறையில்தான் வைக்கப்பட்டு இருந்தார். ரத்தினகிரி மாவட்டத்தைத் தாண்டக்கூடாது, வேலை எதுவும் செய்யக் கூடாது போன்ற கட்டுப்பாட்டுச் சிறைக்குள்தான் இருந்தார்.

அதையும் சேர்த்துக் கொண்டால், 13 வருடங்கள் அரசுச் சிறையிலும், 13 வருடங்கள் வீட்டுச் சிறையிலும் இருந்தார். ஆக, ஏறத்தாழ 26 வருடங்கள் சிறையில் இருந்தார் என்றும் சொல்லலாம்.


இதில், கப்பலோட்டிய தமிழன் விடுதலை கோரவில்லை என்பதால் விடுதலை அளிக்கக் கோரிய சாவர்க்கர் கோழை என்று மூடர்கள் கூறி வருகின்றனர். அதை Rajesh Kumar போன்ற புத்திசாலிகள்கூட சகவாச தோஷத்தால் நம்பிவிடுகிறார்கள்.

..சிக்கும் வீர சாவர்க்கருக்கும் ஏறத்தாழ ஒரே விதமான துயரங்களே சம்பவித்தன. அவரது குடும்பம் சமூகத்தில் பல துயரங்களை அனுபவித்தது. வீர சாவர்க்கரின் குடும்பத்துக்கு உதவி செய்தால் சிறையில் போட்டுவிடுவோம் என பிரிட்டிஷ் அரசு மிரட்டியது. அவருடைய தம்பியின் வீட்டைப் பிடுங்கிக் கொண்டு தெருவில், பெண்களையும் குழந்தைகளையும் தள்ளியது.


மஹாத்மா காந்தி ஜி கொலை செய்யப்பட்ட போது, நேருவிய காங்கிரஸின் ஆட்களால் மிகக் கடுமையாகத் தாக்கப்பட்ட இன்னொரு சகோதரரான டாக்டர் நாராயண தாமோதர், அந்தத் தாக்குதலின் காரணமாகவே உயிரிழந்தார்.


மூத்த சகோதரரும், ஆர்.எஸ்.எஸை ஆரம்பித்தவர்களில் ஒருவருமான கணேஷ் தாமோதர் சாவர்க்கர், ஆங்கில அரசுக்கு எதிரான ஆயுதப் புரட்சி காரணமாக, அந்தமானுக்கு அனுப்பப்பட்டார்.


அவர் அந்தமான் சிறையில் சித்திரவதைகள் அனுபவித்த அந்தக் காலத்தில், உறவினர், நண்பர்கள் உதவிகள் ஏதும் இல்லாத அந்தக் காலங்களில், கணேஷ் தாமோதர் சாவர்க்கரின் இளவயது மனைவி வாழ்ந்த இடம்: சுடுகாடு !


..சியவர்களின் குடும்பம் பட்ட துயர்களும் கொஞ்ச நஞ்சம் இல்லை. இங்கனம் அனுபவித்த துயரங்களிலும், கொண்ட கொள்கைகளிலும் இருவருக்கும் இடையே ஒற்றுமைதான் இருக்கிறது.


அதே சமயம், இந்த இருவரின் நடத்தைகளும் வேறுபட்டு இருப்பது போல் தெரிவதை மறுக்க முடியாது. காரணம், இரண்டு பேருக்குப் பின்னாலும் உள்ள மற்ற வரலாற்று விஷயங்கள்.

முக்கியமாக, இடம் பொருள் காலம் ஏவல்.


வீர சாவர்க்கர் உலகளாவிய சூழலின் அடிப்படையில் தனது அரசியல் காய்களை நகர்த்தியவர். ..சி. அவர்கள் இந்தியச் சூழலின் அடிப்படையில் அரசியல் காய்களை நகர்த்தியவர்.


வீர சாவர்க்கரோ, லோகமான்ய திலகரையும்விட அகலமான அரசியல் ஞானம் கொண்டவர். ..சி அவர்களோ லோகமான்ய திலகரின் மாணாக்கர். லோகமான்ய திலகரின் அரசியல் அக்காலத்து ஆங்கிலேய ஆட்சியின் பிரச்சினை குறித்தது. வீர சாவர்க்கரின் அரசியலோ பல நூறு ஆண்டுகளாகப் பல்வேறு ஆட்சிகளின் பிரச்சினைகளைப் பற்றி அறிந்ததோடு, வரலாற்றின் எதிர்காலத்திய பயணத்தையும் புரிந்துகொண்டதாக இருந்தது.


வீரசாவர்க்கரின் நோக்கம் சுதேசியம் என்பதனைத் தெளிவுபடுத்துவதுடன் அந்தக் கட்டமைப்பை இந்தியர்களுக்கு நினைவுபடுத்துவதாக இருந்தது. ..சி அவர்களின் நோக்கம் அந்தக் கட்டமைப்பின் வலிமைக்கு உழைப்பதாக இருந்தது.


வீர சாவர்க்கரின் வாழ்க்கை இந்துத்துவத்தை நிலைநாட்டுவதாக இருந்தது. ..சியின் வாழ்க்கையை இந்துத்துவம்தான் நிலைநாட்டியது. ஆம், ..சியின் மனதில் சுதந்திரக் கனலை முதன் முதலில் விதைத்தவர், ஒரு இந்து சாமியார்.


"சுதேச எண்ணங்கள் பல நன்மைகளைத் தரக் கூடியது, இது என் கருத்து"

என்று சொல்லி, இந்துத்துவத்திற்காக (சுதேசியத்திற்காக) உழைக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தியவர் அப்போதைய மெட்ராஸில் இருந்த இராமகிருஷ்ண பரமஹம்ஸரின் சீடரான ஸ்வாமி ராமகிருஷ்ணானந்தர்.


ஆக, ..சியும் இந்துத்துவர்தான். வீர சாவர்க்கரும் இந்துத்துவர்தான். இந்த இரண்டு இந்துத்துவ சுதந்திர வீரர்களில் ஒருவரை இகழ, இன்னொருவரை ஊறுகாயாகப் பயன்படுத்துவது அறியாமைச் சகதியில் இருந்து எழும் சீழ் நாற்றமே. :(

.உசி அவர்களின் கவனம் தொழில்த் துறையில் இந்துத்துவத்தை நிலைநாட்டுவதாக இருந்தது. தொழில்த் துறையில் இந்துக்களுக்கும் வாய்ப்புகள் வேண்டும் என்று ஆரம்பம் முதல் இறுதி வரை போராடினார்.


வீர சாவர்க்கர் அனைத்துத் துறைகளிலும் இது வேண்டும் என்று வாதிட்டதோடு, அந்தச் சுதந்திரத்தை அடைவதற்காக ஆளும் அதிகாரத்தில் பங்கு பெற உழைத்தார்.

1909 வரை அந்த சுதந்திரம் இந்தியருக்குக் கிடைக்கவில்லை. எனவே, அதற்காகப் போராடிய .உசியவர்கள் 1908ல் சிறை ஏகினார்.


1909ல் மிண்டோ மார்லி சீர்திருத்தம் இவர்கள் கோரிய உரிமைகளை இந்தியருக்குக் கொஞ்சம் பெற்றுத் தந்தது. இந்த உரிமைகளைப் பயன்படுத்தி அதிக அதிகாரங்களைப் பெறுவதற்கு உழைக்க வீர சாவர்க்கர் முடிவு செய்தார்.


சிறையில் எதுவும் செய்ய முடியாமல் இருப்பதை விட, ஏதேனும் செய்யக் கூடிய வாய்ப்பை உருவாக்க முடிவு செய்தார். இந்த மிண்டோ மார்லி சீர்திருத்தத்தினால் இந்தியருக்குக் கிடைத்த உரிமைகளை வைத்து, இந்தியருக்கு அதிக சுதந்திரம் கிடைக்கப் பாடுபட அவர் முடிவு செய்தார். இதையும், தெளிவாக அவர் ஆங்கில அரசுக்கு எழுதிய விண்ணப்பத்தில் தெரிவிக்கிறார்.


இந்த உரிமைகளைப் பெறுவதற்காகவே, இந்தியருக்கு மேலும் பல உரிமைகளைப் பெறுவதற்காகவே ..சியும் போராடி வந்தார்.


சிறையில் இருந்து விடுதலை பெற்ற பின்னர் ..சியவர்களும் முழு நேர அரசியலில் இருந்து விலகி விட்டார் என்பதை Rajesh Kumar அறிந்திருந்தால் நன்றாகத்தான் இருந்திருக்கும். அவர் அரசியலில் இருந்து ஒதுங்கியதை, வீர சாவர்க்கரும் அரசியல் இருந்து ஒதுங்குவதாகச் சொன்னதோடு ஒப்பிட்டு, ..சியையும் Rajesh Kumarன் இடதுஜாரி* நண்பர்கள் இகழத்தான் போகிறார்கள். [* ஜாரி என்பதன் பொருளை மதுரைக்காரர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளவும்.]


அது மட்டுமல்ல, எந்த மக்களுக்காக .உசி போராடினாரோ, அந்த மக்களே அவரைக் கைவிட்டனர். மண்ணெண்ணை கடை வியாபாரம் உள்ளிட்ட அவரது முயற்சிகள் தோல்வியடைந்தன.


அந்த சமயத்தில், தனக்கு ஆங்கிலேய அதிகாரத்தில் வக்கீலாகப் பங்குபெற அனுமதிக்குமாறு ஆங்கிலேய அதிகாரி வாலஸுக்கு அவர் விண்ணப்பித்தார். அந்த விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டு அவர் மீண்டும் வக்கீலாகப் பணிபுரிய அனுமதித்தார் வாலஸ். அந்த ஆங்கில அதிகாரியின் மேலிருந்த மதிப்பால் தன் மகனுக்கு வாலேஸ்வரன் என்று பெயரிட்டார் ..சி.

அந்த விண்ணப்பக் கடிதத்தைப் படித்தால் Rajesh Kumarன் அமெரிக்க இடதுஜாரி நண்பர்கள், ஆங்கிலேயரிடம் மன்னிப்புக் கேட்டார் ..சி. என்று கிளம்பிவிடுவார்கள். அவர்களுடைய அறிவுத்தரம் அவ்வளவுதான்.


அதனால்தான், அதே போல விண்ணப்பங்களைக் கோரிய சாவர்க்கரை மன்னிப்புக் கேட்டதாகப் பொய் சொல்கிறார்கள் அவர்கள்.

அந்த விண்ணப்பக் கடிதங்களில் வீர சாவர்க்கர் சட்டபூர்வமான தண்டனை குறைப்பையே (clemency) கோருகிறாரே தவிர, ஒரு வார்த்தை கூட மன்னிப்பு கோரியோ, தனது முந்தைய வன்முறைகளுக்கு வருத்தம் தெரிவிக்கவோ இல்லை. சந்தேகம் இருந்தால், அவரது கடிதத்தை இங்கு படியுங்கள்:Petition from V D Savarkar (Convict No. 32778) to the Home Member of the Government of India, dated the 14th November, 1913.


"I beg to submit the following points for your kind consideration:

(1) When I came here in 1911 June, I was along with the rest of the convicts of my party taken to the office of the Chief Commissioner. There I was classed as "D" meaning dangerous prisoner; the rest of the convicts were not classed as "D". Then I had to pass full 6 months in solitary confinement. The other convicts had not. During that time I was put on the coir pounding though my hands were bleeding. Then I was put on the oil-mill - the hardest labour in the jail. Although my conduct during all the time was exceptionally good still at the end of these six months I was not sent out of the jail; though the other convicts who came with me were. From that time to this day I have tried to keep my behaviour as good as possible.


(2) When I petitioned for promotion I was told I was a special class prisoner and so could not be promoted. When any of us asked for better food or any special treatment we were told "You are only ordinary convicts and must eat what the rest do". Thus Sir, Your Honour would see that only for special disadvantages we are classed as special prisoners.

(3) When the majority of the casemen were sent outside I requested for my release. But, although I had been cased (caned?) hardly twice or thrice and some of those who were released, for a dozen and more times, still I was not released with them because I was their casemen. But when after all, the order for my release was given and when just then some of the political prisoners outside were brought into the troubles I was locked in with them because I was their casemen.

(4) If I was in Indian jails I would have by this time earned much remission, could have sent more letters home, got visits. If I was a transportee pure and simple I would have by this time been released, from this jail and would have been looking forward for ticket-leave, etc. But as it is, I have neither the advantages of the Indian jail nor of this convict colony regulation; though had to undergo the disadvanatges of both.

(5) Therefore will your honour be pleased to put an end to this anomalous situation in which I have been placed, by either sending me to Indian jails or by treating me as a transportee just like any other prisoner. I am not asking for any preferential treatment, though I believe as a political prisoner even that could have been expected in any civilized administration in the Independent nations of the world; but only for the concessions and favour that are shown even to the most depraved of convicts and habitual criminals?


This present plan of shutting me up in this jail permanently makes me quite hopeless of any possibility of sustaining life and hope. For those who are term convicts the thing is different, but Sir, I have 50 years staring me in the face! How can I pull up moral energy enough to pass them in close confinement when even those concessions which the vilest of convicts can claim to smoothen their life are denied to me? Either please to send me to Indian jail for there I would earn

(a) remission;

(b) would have a visit from my people come every four months for those who had unfortunately been in jail know what a blessing it is to have a sight of one's nearest and dearest every now and then!

(c) and above all a moral - though not a legal - right of being entitled to release in 14 years;

(d) also more letters and other little advantages. Or if I cannot be sent to India I should be released and sent outside with a hope, like any other convicts, to visits after 5 years, getting my ticket leave and calling over my family here. If this is granted then only one grievance remains and that is that I should be held responsible only for my own faults and not of others. It is a pity that I have to ask for this - it is such a fundamental right of every human being!

For as there are on the one hand, some 20 political prisoners - young, active and restless, and on the other the regulations of a convict colony, by the very nature of them reducing the liberties of thought and expression to lowest minimum possible; it is but inevitable that every now and then some one of them will be found to have contravened a regulation or two and if all be held responsible for that, as now it is actually done - very little chance of being left outside remains for me.


In the end may I remind your honour to be so good as to go through the petition for clemency, that I had sent in 1911, and to sanction it for being forwarded to the Indian Government? The latest development of the Indian politics and the conciliating policy of the government have thrown open the constitutional line once more. Now no man having the good of India and Humanity at heart will blindly step on the thorny paths which in the excited and hopeless situation of India in 1906-1907 beguiled us from the path of peace and progress.

Therefore if the government in their manifold beneficence and mercy release me, I for one cannot but be the staunchest advocate of constitutional progress and loyalty to the English government which is the foremost condition of that progress.


As long as we are in jails there cannot be real happiness and joy in hundreds and thousands of homes of His Majesty's loyal subjects in India, for blood is thicker than water; but if we be released the people will instinctively raise a shout of joy and gratitude to the government, who knows how to forgive and correct, more than how to chastise and avenge.

Moreover my conversion to the constitutional line would bring back all those misled young men in India and abroad who were once looking up to me as their guide. I am ready to serve the Government in any capacity they like, for as my conversion is conscientious so I hope my future conduct would be. By keeping me in jail nothing can be got in comparison to what would be otherwise. The Mighty alone can afford to be merciful and therefore where else can the prodigal son return but to the parental doors of the Government?

Hoping your Honour will kindly take into notion these points."

மன்னிப்பு கேட்கிறேன் என்றோ, இதுவரை செய்த செயல்களுக்கு வருத்தமோ தெரிவிக்காத விண்ணப்பம் எப்படி மன்னிப்பு கோருதல் ஆகும் ?


இது அவரது முதல் விண்ணப்பம். இதற்குப் பின்பும் தன்னை விடுதலை செய்யக் கோரி அவர் பல விண்ணப்பங்களை வைத்தார். அவற்றையும் படித்துப் பாருங்கள். அவற்றில் ஏதேனும் ஒன்றிலாவது மன்னிப்பு என்கிற வார்த்தையோ, தான் செய்த செயல்களுக்கு வருந்தும் வார்த்தைகளோ இருக்கின்றனவா என. இல்லை.


இந்த விண்ணப்பங்களை ஆங்கிலேயர் ஏற்றுக்கொள்ளாமல் மறுதலித்தது ஏன் ? அதுவும் தொடர்ந்து 10 வருடங்களாக. ஏனென்றால், அவர்களுக்குத் தெரியும் வெளியே விட்டால் என்ன ஆகும் என.


அந்தமான் செல்லுலர் ஜெயிலுக்குப் போகிறவர்கள் முதல் ஆறு மாதங்கள் மட்டுமே ஜெயிலில் இருப்பார்கள். பின்பு, அரசியல் கைதிகளான அவர்கள் தங்களது குடும்பத்தோடு அந்தமான் தீவில் வசிக்கலாம் என்றும் சில வசதிகள் இருந்தன. ஆனால், இந்த வசதிகள் வீர சாவர்க்கருக்குத் தரப்படவே இல்லை. 11 வருடங்கள் கடுங்காவல் சிறைத் துயர்களை அவர் அனுபவித்தார்.


அவர் இங்கனம் விடுதலை கோரி விண்ணப்பம் அனுப்புவதைத் தான் மட்டுமல்ல, மற்ற சக சிறைக்கைதிகளும் செய்ய வேண்டும் என உபதேசித்தார். வெற்றியைவிட வீரமரணமே, வீரத் தியாகமே முக்கியம் என்பதாக இருந்த அவர்களை இதனை ஏற்றுக்கொள்ளவும் செய்தார். இதைப் பற்றி தனது சுயசரிதையில் வீர சாவர்க்கரே சொல்கிறார்:"I quoted to them instances from the life of Shivaji. Of his dealing with Jay Singh and Afzal Khan; I told them of Guru Govind and his flight after the incident of Chamkore; nay I drew upon the life of Lord Krishna himself, in order to convince them of the correctness of the step they were taking. The most obstinately proud among them would not be persuaded even by these parallels from the past. Their this stubbornness on the subject, after all that they had suffered for the cause, inspired me with great hope for the future of my country. But at last I could convince them of my point of view, and they all signed the pledge without demur, and thus broke open the lock of the jail in the Andamans."

இருப்பினும், அவரது இந்த விண்ணப்பங்களை (petition) மன்னிப்புக் கடிதங்கள் (apology, mercy) எனக் கூச்சமே இன்றி பொய் சொல்பவர்களை எப்படி அழைப்பது ? அவர்களை எங்கனம் அழைப்பது என அறியாமல் திகைத்து, வாய்மூடிப் போகிறேன்.


அப்பெயரை அறிய, மொழிவளம் மிகுந்த நம் தமிழ்த்தாயைத்தான் சரணடைய வேண்டும். நம் தமிழில் இவர்களுக்கு என்றே சரியான பொருத்தமான வார்த்தை இருக்கிறது.

தமிழ் அகராதியில் இருந்து:


குண்டியம் [ kuṇṭiyam ] , aspersion , slander , நிந் தை , 2 . falsehood , fib , பொய் ; 3 . exposure of secrets

குண்டியம் பேசுவோர்.


நாம் பெயரிட்டால், "குண்டியர்கள்".

இந்தக் குண்டியர்கள் சொல்வது உண்மையானால் வீர சாவர்கர் நேரடி அரசியலில் இருந்து ..சி. போல ஒதுங்கி இருந்திருக்க வேண்டும். ஆனால், அவர் ஒதுங்கி இருக்கவில்லை.

விடுதலை பெற்ற இரண்டு வாரங்களில் அவர் ஆரம்பித்த அமைப்பான "இரத்தினகிரி ஹிந்து மஹாசபை" மிகத் தீவிரமாக அரசியலில் ஈடுபட்டது.


இந்தியரை பிளக்கும் ஆங்கிலேயப் பிரச்சாரங்கள் மற்றும் அரசுக் கொள்கைகளை எதிர்த்து, அவற்றைத் திருத்துவதற்காகப் போராடி வந்தது.


இந்தியரை ஜாதி, மதம் வேறுபாடில்லாமல் ஆங்கிலேயருக்கு எதிராகத் திரட்டுவதில் வீர சாவர்க்கர் வெற்றியும் பெற்றார்.


1934ல் முதன்முதலாக இந்தியாவில் தேர்தலை நடத்தியது பிரிட்டிஷ் அரசு. அதில் பிரிட்டிஷ் அரசுக்கு ஆதரவான கட்சிகளும், பிரிட்டிஷ் அரசுக்கு எதிரான கட்சிகளும் களம் இறங்கின. இவற்றில் பிரிட்டிஷ் அரசுக்கு எதிரான கட்சியாகச் செயல்பட்டது, "ஹிந்து மஹாசபை". இந்தக் கட்சியின் தலைவர் பெயர்:


வீர சாவர்க்கர் !


ஆங்கில அரசுக்கு எதிராக அவர் தனது கட்சிக் கூட்டணியில் சேர்த்துக்கொண்ட இன்னொரு கட்சியின் பெயர்:


இந்திய முஸ்லீம் லீக் !


ஹிந்து மஹாசபை எனும் வீர சாவர்க்கரின் அரசியல் கட்சியானது முகமதியர் அதிகமான இடங்களில், முகமதியருடன் கூட்டணி அமைத்து மாபெரும் வெற்றிகளைக் குவித்தது.

அதாவது, மிண்டோ-மார்லி சீர்திருத்தத்தின் மூலம் இந்துக்களையும் முகமதியரையும் பிரிக்க நினைத்த பிரிட்டிஷாரின் திட்டத்தை, பிரிட்டிஷார் தந்த வாய்ப்புகளைக் கொண்டே முற்றிலும் முறியடித்தார் வீர சாவர்க்கர்.


முகமதியரின் இணக்கத்தோடு இந்துக்கள் அரசில் அதிகாரங்களைப் பெற்றனர். அந்த கூட்டணியின் காரணமாக சிந்து, வடமேற்கு எல்லை மாகாணம், மற்றும் வங்காளத்தில் ஆட்சியைப் பிடித்தார். பிரிட்டிஷாரின் நோக்கம் மிக மோசமான தோல்வியை அடைந்தது.

இங்கனம் முகமதியரின் ஆதரவோடு, ஆங்கிலேயருக்கு எதிராக வெற்றி பெறுவதற்காக எந்த ஒரு பாதிப்பு தரும் சமரசத்தையும் சாவார்க்கர் முகமதியர்களோடு செய்யவில்லை என்பதுதான் ஆச்சரியம் தரும் விஷயம்.


உதாரணமாக, ஆங்கிலேயர்களுக்கு விசுவாசியாக இருந்த ஹைதராபாத் நிஜாம். பிரிட்டிஷாரின் மதவெறி பிளவு படுத்துதலுக்கு வீழ்ந்த ஹைதராபாத் நிஜாம், தனது ராஜ்ஜியத்தில் இந்துக்களுக்கு அதிகாரங்களை தர மறுத்த போது, 1939ம் ஆண்டு ஹைதராபாத் அரசுக்கு எதிராக (அதாவது மறைமுகமாக ஆங்கில அரசுக்கு எதிராக) ஒரு மிகப் பெரிய சத்தியாகிரகப் போராட்டத்தை வீர சாவர்க்கர் நடத்தினார்.


அதில் மிகப் பெரிய வெற்றியும் பெற்றார். 50 % அதிகாரங்களைத் தருவதாக ஹைதராபாத் நிஜாம் ஒப்புக்கொண்டார். இதனால், ஆங்கிலேயருக்கு எதிரானவர்களுக்கு இந்தியா முழுவதும் அதிகாரங்கள் கிடைத்தன.


இதைக் கண்டு அஞ்சிய பிரிட்டிஷார், அவர்களுக்கு ஆதரவாகச் செயல்படும் அரசியல் கட்சிகளை உருவாக்கினர். உதாரணமாக, அம்பேத்காரின் லேபர் கட்சியானது, பிரிட்டிஷாரின் ஹிந்து-முகமதியர் பிரிவினைக்கு ஆதரவாக ஹிந்து மஹாசபை கட்சியை எதிர்த்து வந்தது. மேற்கு வங்காளத்தில், 1946ல் நடந்த தேர்தல்களில் பிரிட்டிஷாருக்கு ஆதரவாகப் போட்டி இட்டு 6 இடங்களைக் கைப்பற்றவும் செய்தது.


ஆங்கிலேயரின் அடியாளாகச் செயல்பட்ட அம்பேத்கார் போன்றவர்களைப் பற்றி மிகத் தெளிவாக மக்களிடம் எடுத்துச் சொன்னார் வீர சாவர்க்கர். [அவை பற்றி அறிய: https://www.facebook.com/notes/anan...]. இந்த போதனைகள் மக்களின் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றன. அம்பேத்கார் தேர்தலில் டெப்பாஸிட்கூட வாங்கவில்லை.

இதற்கிடையில் வீர சாவர்க்கர் தூண்டிவிட்ட நெருப்பு சுதந்திரப் போராட்டத்தை மேலும் தீவிரமாக்கியது. 1934ம் ஆண்டு, ஆங்கிலேய அரசை எதிர்த்து துப்பாக்கியால் சுட்ட வாமன்ராவ் கேஸில், சாவர்க்கரின் போதனைகள் மறைமுகத் தூண்டுதலாக இருந்தன என்று கூறி, அவர் மேல் வழக்கு போட்டனர். ஆனால், நேரடி தொடர்பு இல்லாதபோது சட்டபூர்வமாக என்மேல் குற்றம் சாட்ட முடியாது என்று சாவர்க்கர் கூறிவிட, பிரிட்டிஷ் அரசு கையாலாகமல் தவித்தது.


கண்பத் ஸால்வி எனும் வீர சாவர்க்கரின் நண்பர் சொல்கிறார்:


"Though Tatyarao [Savarkar] was running his social campaign; his strong willpower against the British rule had not dimmed. Outwardly, he was running the social movement because of Government restrictions. But whenever occasion arose and suitable individuals met him, he would encourage use of explosives and bullets to instill fear in the hearts of the British. He kept alive the armed revolutionary party by selecting brave youngsters such as Wamanrao alias Badi Chavan, Vasudev Balwant Gogate, Vasudev Pawar, Appa Kasar and Vasu Hardikar.

"In addition to working on these two fronts, he had also opened a front for gathering intelligence. He had planted his confidantes in the offices of the District Collector, Police Department etc. He had turned some others in his favor. During that period, the person involved in releasing confidential orders of the District Collector was helping Savarkar in a spirit of nationalism; Tatyarao got news of the moves against him through such individuals... They sent their reports to the Police Department without writing anything against Savarkar. Hence, the officers would order them to impute anti-British remarks to Savarkar, but they would raise doubts as to how could they do this when he had done no such thing... They were enticed with promotion and rewards but these minds, filled as they were with devotion to Savarkar, did not waver. District Collector Gilligan, District Police Officer O’Sullivan were doing their utmost to send Savarkar to the Andamans again".

அதாவது, சமையல் செய்ய மாட்டேன் என்று சொல்லிவிட்டு, அடுப்பில் விறகுகளை போட்டுவந்தார் அவர். மற்ற விஷயங்களை மற்றவர்களைச் செய்ய வைத்தார். பிரிட்டிஷாருக்கு எதிராக "வன்முறையை" பயன்படுத்த மாட்டேன் என்பதுதான் அவர் போட்ட ஒப்பந்தம். அவர்தான் நேரடியாகப் பயன்படுத்தவில்லையே.


ஒப்பந்தத்தை மீறாமல், இந்தியாவெங்கும் இந்தியர்களை அரசியலில் பலவீனமாக்க ஆங்கில அரசு செய்துவந்த முயற்சிகளை முற்றிலுமாக முறியடித்தார்.


சண்டை போடுவதில் கவனம் வைத்த பகத் சிங் போன்றவர்களைவிட, இழப்புகள் எதுவும் இன்றி வெற்றி பெறுவதில் கவனம் வைத்தார் சாவர்க்கர். அதாவது வீரம் மட்டுமல்ல, விவேகமே அதிக வெற்றிகளைத் தரும் என்பதை அவர் நிரூபித்தார். வீரம் குறையாத தீர சாவர்க்கராக போரிடாமலேயே வெற்றிகளைக் குவித்தார்.


அதாவது, எதிர்க்காமலேயே சண்டை போடாமலேயே பிரிட்டிஷாரை தோற்கடித்தார் வீர சாவர்க்கர்.


வீர சாவர்க்கரின் இந்த லாவகமும், இதன் பின் உள்ள வேதவழி புத்திக் கூர்மையும் கண்ணுக்குத் தெரியாத சிந்தனா சக்திகள். கண்ணுக்குத் தெரியாததை அறிய முடியாத, கண்ணுக்குத் தெரிகிறவற்றை மட்டுமே நம்புகிற பொருண்மைவாதிகளான மார்க்ஸிஸ்ட் மடையர்களுக்கு மறைசக்திகளின் வலிமையும், திறனும் எக்காலத்திலும் புரியாது.

இங்கனம், ஆங்கில அரசியலமைப்பிற்கு ஒரு மாற்றை, ஆங்கில அரசாட்சிக் கொள்கைகளுக்கு ஒரு மாற்றை உருவாக்குவதில் வீர சாவர்க்கர் இறங்கினார். இதற்குப் பெயரும் அரசியல்தான். ஆனால், இவை அனைத்தையும் பிரிட்டிஷ் அரசு வரையறுத்த "அரசியலில்" ஈடுபடாமல்தான் செய்தார். அதனால், அரசினால் குற்றம் சொல்ல முடியாத அரசியலாக அவருடைய அரசியல் இருந்தது.


1937ம் ஆண்டு வீர சாவர்கர் விடுதலை பெற்றபோது, ஆங்கிலேய அரசுக்கு எதிராக ஜப்பானின் உதவியுடன் படை திரட்ட முயன்ற தீவிரவாதியான ராஷ் பிஹாரி போஸ், இவ்வாறு சொல்கிறார்://"If I put together views of influential persons on Savarkar as mentioned above, Savarkar ‘is heroism, valor, adventure, and epitome of patriotism’. ‘To praise him is to praise the spirit of sacrifice’. He is the one ‘who always kept the fire of India’s freedom burning; he is a patriot who risked his life for the freedom of India in the early 20th century and is a founder exponent of the doctrine of cultural independence in the current times’".//
மட்டுமல்ல, இந்தக் குண்டியர்கள் இகழும் இந்துத்துவ அரசியல் பற்றி ராஷ் பிஹாரி போஸ் எழுதுகிறார்://"It does not make sense to take all Indian as one. In Turkey, Turkish are nationals. In India, Hindus are nationals, and who believe in other religions are minorities". He (Savarkar) defined Hindus as those who have faith in the area around the Indus River."

"If you agree with Savarkar, you will have political power, and he has a strong position in the Indian independence movement" //

வீர சாவர்க்கரின் விடுதலை குறித்து, இந்த நாட்டு விடுதலைக்காகப் போராடியவரின் இந்தக் கூற்றை நீங்கள் ஏற்கப் போகிறீர்களா ?

அல்லது வீர சாவர்க்கரின் விடுதலை குறித்து, அறிவீனக் குண்டியர்களின் கூற்றை ஏற்கப் போகிறீர்களா ?


Rajesh Kumar, இந்தக் கேள்விக்கு நீங்கள் பதிலை யோசியுங்கள், தயவு செய்து.

குண்டியர்களின் கூற்றுப்படி, ஆங்கில அரசை எந்த வகையிலும் எதிர்க்கமாட்டேன் என்று சொல்லி 1924ல் அரசுச் சிறையில் இருந்து வெளியே வந்த வீர சாவர்க்கர் மராத்தியில் தன் சுயவரலாறை எழுதிகிறார். (ஆங்கிலத்தில் The story of my transportation for life). அந்த நூலில் இப்படி ஒரு விஷயம் இருக்கிறது:On the breast of our Motherland, a carpet of national humiliation was spread out and dancers moved on it. For the nation, it was a funeral procession. Naturally when others in Chandni Chowk showered flowers and coconuts, the representatives of those who had felt the insult, hurled a bomb which routed the elephant, killed one of the A.D.C’.s and gave a blood-bath to the Viceroy. For five minutes everybody believed that Hardinge was dead. Verily the triumphant procession was turned into a funeral.
வீர சாவர்க்கர் இப்படி மகிழ்ச்சியுடன் போற்றிப் பேசும் நிகழ்ச்சி எது குறித்தது ?

பிரிட்டிஷ் இந்தியாவின் பெருமதிப்பு வாய்ந்தவரான, இந்தியாவையே ஆளும் வைஸ்ராய் சார்ல்ஸ் ஹார்டிங்கைக் கொல்ல எறியப்பட்ட குண்டைப் போற்றுகிறார்.

இப்படிப் பேசுவது நேரடி அரசியல் கிடையாதுதான். ஆனால், இதுவும் ஆங்கிலேயருக்கு எதிரான அரசியல்தான்.


சரி, இந்த குண்டை எறிந்தவர் யார் தெரியுமோ ?


வீர சாவர்க்கரின் விடுதலையைப் பற்றிப் புகழ்ந்து ஜப்பானில் எழுதிய அதே ராஷ் பிஹாரி போஸ்தான் ! :)


வீர சாவர்க்கர் தீவிரவாத அரசியலில் ஈடுபடவில்லை என்று சொல்பவர்கள், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தீவிரவாத அரசியலில் ஈடுபடவில்லை எனச் சொல்வார்களா ?

சொல்ல மாட்டார்கள். இப்போது அந்த நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் வீர சாவர்க்கர் பற்றி என்ன சொன்னார் என்று பார்ப்போமா ?


ஆஸாத் ஹிந்த் ரேடியோ பிரச்சாரத்தில் 25 ஜூன் 1944ல் நேதாஜி சொல்கிறார்:


"When due to misguided political whims and lack of vision, almost all the leaders of Congress party have been decrying all the soldiers in Indian Army as mercenaries, it is heartening to know that Veer Savarkar is fearlessly exhorting the youths of India to enlist in armed forces. These enlisted youths themselves provide us with trained men and soldiers for our Indian National Army."

அதாவது, ஆங்கில அரசில் கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி இந்தியர்கள் அரசியல் வலிமை பெற வேண்டும் என்று வீர சாவர்க்கர் சொன்னதால்தான், ஆங்கில இராணுவத்தில் இந்தியர்கள் சேர்ந்தார்கள். அந்த இந்திய இராணுவத்தால்தான் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைக்கும் வாய்ப்பு உருவாகியது என்கிறார் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்.

படையை உருவாக்கிவிட்டார் நேதாஜி. ஆனால், உருவாக்கப்பட்ட படை வீரர்களுக்கு தேசப் பற்றை எப்படி ஊட்டுவது ? நேதாஜியின் பேச்சுகள் ஹிந்தியில் இருந்தாலும், படையில் இருந்தவர்கள் பெரும்பாலும் தமிழர்கள்.


இதைப் படியுங்கள்:


On September 30, 1943 when Netaji Subhas Chandra Bose toured Andamans as the supreme commander of Azad Hind Fauz, he paid his tributes to the memories of freedom fighters imprisoned in the Cellular Jail.

He got printed thousands of copies of the Tamil version of Savarkar's Indian War of Independence of 1857 and distributed them in public. Andaman and Nicobar islands were re-named as Saheed and Swaraj islands.

ஜப்பானில் மட்டுமல்ல, அமெரிக்காவிலும் வீர சாவர்க்கரின் பேச்சுகளும் எழுத்துகளும் இந்திய சுதந்திரப் போரில் ஈடுபட இந்தியர்களைப் பெரிதும் தூண்டியது. அங்கிருந்த கதார் இதழில், வீர சாவர்க்கரின் 1857 முதல் சுதந்திரப் போர் நூலை மொழி பெயர்த்து வெளியிட்டார் லாலா ஹர்தயாள்.


அதாவது, வீர சாவர்க்கர் ஏற்கனவே செய்துவிட்டிருந்த பணியே புரட்சியைத் தூண்டப் போதுமானதாக இருந்தது. இது தெள்ளெனத் தெரிந்ததால்தான், வீர சாவர்க்கர் தன் அரசியல் வாழ்வின் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துவிட்டார். சுதேசியச் சிந்தனையின் கீழ் இந்தியர்களை ஒன்று திரட்டி, ஆட்சி அமைக்கும் திறன்களை வளர்ப்பதில் கவனம் செலுத்தினார்.


விடுதலை பெறுவதற்காகப் போராடிக் கொண்டிருந்த தலைவர்களுக்கு மத்தியில், விடுதலை கிடைக்குமோ கிடைக்காதோ என்று தயங்கிக் கொண்டிருந்த மக்களின் மத்தியில், விடுதலை பெற்ற பின்பு எப்படி ஒரு வலிமையான அரசை, வலிமையான மக்களை நடத்த வேண்டும் என்று யோசித்து, அதற்காக உழைக்க ஆரம்பித்தார்.


இதுதான் அரசியலில் இருந்து விலகுவதா ? குண்டியர்களுக்கு இந்தச் செயல்கள் எல்லாம் அரசியல் செயல்பாடுகள்தான் என்பது புரியவில்லையா ?


வீர சாவர்க்கரின் செக்ரட்டரியான பால சாவர்க்கர் எழுதியதைப் பாருங்கள்:


"Sri Rashbehari Bose was the president of the Hindu Mahasabha, Japan. While during the years 1938 to 1940 Savarkarji had been presiding over the All India Hindu Mahasabha Sri Rash Behari Bose too continued to preside over the Japan branch of the Hindu Mahasabha. After the release of Veer Savarkarji from his internment at Ratnagiri in 1937 Sri Bose wrote to him occasionally on the advisability of the Hindu Mahasabha movement and as the result of the correspondence between them Sri Bose started a branch of the Hindu Mahasabha in Japan under his own presidentship. The correspondence between them continued right up to the declaration of war by Japan and the formation by Sri Bose of the INA (Indian National Army) in Japan even before Netaji Subhas Babu could reach Singapore"

நேரடி அரசியலில் வீர சாவர்க்கர் ஈடுபடவில்லைதான். ஆனால், மற்றவர்களை ஈடுபடவைத்தார். முதல் உலகப் போர் சமயத்தில் ராஷ் பிஹாரி போஸை முதலில் ஜப்பானுக்கு அனுப்பி, பின்னர் இரண்டாம் உலகப் போர் சமயத்தில் சுபாஷ் போஸை ஜப்பானுக்கு அனுப்பி வைத்தார். இதில் கேட்கப்பட வேண்டிய கேள்வி ஒன்றும் உள்ளது. இரண்டாம் உலகப் போரின் காரணமாக பிரிட்டிஷாரின் எதிரியான ஜப்பானுக்கு சுபாஷ் போஸைப் போகச் சொல்வது புரிந்துகொள்ளக் கூடியது. ஆனால், முதல் உலகப் போரில் பிரிட்டிஷாருக்கு ஆதரவாக அப்போது இருந்த ஜப்பானுக்கு, ராஷ் பெஹாரி போஸ் போக அறிவுரை ஏன் கொடுத்தார் வீர சாவர்க்கர் ?


ஏனெனில், அவரால் காலங்கள் சூழல்கள் தாண்டி எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று அறியும் சிந்தனைத் தீர்க்கம் இருந்தது. இந்த அரசியல் வியூகம் வகுப்பதுதான் ஆகக் கடினமான பணி, கிடைக்க அரிதான திறன்.


நேதாஜியின் முயற்சி வெற்றி பெறவில்லைதான். உலகப் போரில் ஜப்பானின் தோல்வியோடு நேதாஜியின் முயற்சிகளும் தோல்வியடைந்தன. ஆனால், வீர சாவர்கரின் வியூகம் தோல்வியடையவில்லை.


1946ல் வீர சாவர்க்கரின் கோரிக்கையை ஏற்று இந்திய ராணுவத்தில் சேர்ந்த வீரர்கள் செய்த Royal Indian Navy Mutinyயால்தான் இந்தியாவுக்கு விடுதலை தர ஆங்கிலேயர்கள் முடிவு செய்தார்கள்.


இந்தக் கடற்படைப் புரட்சிக்குக் காரணம் என்ன ? நேதாஜியின் படையைச் சேர்ந்த இராணுவத்தினரை ஆங்கில அரசு தூக்கில் போட்டது. இதை எதிர்த்தே இந்தக் கலவரத்தை பிரிட்டிஷ் இந்தியக் கடற்படை ஆரம்பித்தது.


அவ்வகையில், இந்திய ராணுவத்துக்குத் தேவையான அரசியல் எழுச்சியை, ஜப்பானின் பிரச்சாரம் மூலம், சுபாஷ் சந்திர போஸ் உருவாக்கி இருந்தார். இங்கனம் சுபாஷுக்கு ஜப்பானின் உதவியைப் பெறும்படி சொன்னதோடு, ஜப்பானில் இருந்த ராஷ் பிஹாரி போஸுடன் தொடர்பையும் உருவாக்கியது யார் ?"A study of relations between two towering contemporaries Veer Savarkar (1883-1966) and Netaji Subhas Chandra Bose (1897-1945?) will prove interesting.

On the "longest day," June 21, 1940, Subhas Chandra Bose called on to Savarkar at Savarkar Sadan, Bombay. Savarkar advised Subhas not to waste time in agitating for the removal of British statues like Holwell Monument in Calcutta - only to end up in a British prison during the invaluable war-time.

Savarkar, was surreptitiously in touch with Ras Behari Bose in Japan. He advocated that Subhas should smuggle himself out of the country and try to reach Germany and Japan (like Indian revolutionaries during World War I) to raise an Indian Army of liberation out of PoWs.

In his avatar as Netaji, Subhas Bose's future course of action developed on the prophetic lines of Veer Savarkar.
இதுதான் ஆங்கிலேயரின் அரசுக்கு ஆதரவான செயல்பாடுகளா Rajesh Kumar ?


இப்படிப்பட்ட வீரரைத்தான் காந்தி ஜி கொலை வழக்கில் குற்றவாளியாகப் பொய்ப்பழி சுமத்தி வழக்கு போட்டது நேருவிய அரசு. வீர சாவர்க்கரின் பாரம்பரிய வீட்டையும் பிடுங்கிக் கொண்டது. அது குறித்து வீர சாவர்க்கரிடம் கேட்ட போது, அவர் சொன்ன பதில்: "நாடே கிடைத்து விட்டது. வீடுதானே போய்விட்டது."


உங்கள் கைக்குக் கிடைத்த சீட்டுகளை வைத்துத்தான் நீங்கள் விளையாட முடியும். .உசியவர்கள் தன் கைக்குக் கிடைத்த எலுமிச்சைகளை வைத்து எலுமிச்சை ஜூஸ் போட்டுக் கொடுத்தார். வீர சாவர்க்கர், முதலில் தன் கைக்குக் கிடைத்த ஆப்பிள்களை வைத்து ஆப்பிள் ஜூஸ் போட்டுக் கொடுத்தார். பின்பு, வளமான ஆப்பிள் தோட்டங்களை மற்றவர்கள் வைக்க ஏற்பாடு செய்தார். பின்னர் இதனை நிரந்தரமாக்கத் தேவையான திறன்களை வளர்த்தார்.

அந்தத் தோட்டங்களில் இருந்து முளைத்த ஆப்பிள்களில் இருந்து போட்ட ஜூஸைக் குடித்துவிட்டுத்தான், குண்டியர்கள் சொல்கிறார்கள், வீர சாவர்க்கர் அரசியலில் ஈடுபடவில்லை என.

நாம் மதிக்க வேண்டியது இண்டியர்களையா இல்லை குண்டியர்களையா ?


இப்போது, மீண்டும் அந்த முதல் கேள்விக்கு வருவோம். அரசியல் என்றால் என்ன ?


பதில்: கிடைக்கும் வாய்ப்புகளை வைத்து, தன்னைச் சுற்றி நடக்கும் அனைத்துவித விஷயங்களிலும், தனது கொள்கை வெற்றி பெறத் தேவையான, முடிவுகளை தீர்மானிக்கும் அதிகாரத்தையும் வாய்ப்புகளையும் அதிகரித்துக் கொள்வதே அரசியல்.

இப்போது பதில் சொல்லுங்கள் Rajesh Kumar. வீர சாவர்க்கர் சிறையில் இருந்து வெளியே வந்த பின்பு அரசியலில் ஈடுபட்டாரா ?


மேலும் விரிவாக அறிந்துகொள்ள: http://vijayvaani.com/AuthorProfile...
இந்திய அரசின் டாக்குமெண்டரி: https://www.youtube.com/watch?v=3TM...


வீர சாவர்க்கர் குறித்த ஹிந்தி சினிமா: https://www.youtube.com/watch?v=gy5...


கடோசி கடோசியாய் இன்னொரு விஷயம்: வீர சாவர்க்கர் அவர் வரலாற்றை சித்திரகுப்தன் எனும் பொய்ப் பெயரில் எழுதினார் என்று அந்த நூலில் முன்னுரையை எழுதியவர் சொல்லி இருப்பதென்னவோ வாஸ்தவம்தான்.

அந்த நூலின் அந்தப் பகுதி இங்கே:


அந்தப் புத்தகத்தின் அட்டையில் பாரீஸ் நகரத்தின் படமானது பேனாவால் வரையப்பட்டு இருக்கிறது. அந்தப் படத்தைப் பார்த்தவுடன் தெரிந்து போயிற்று, இந்த நூலை எழுதிய சித்திரகுப்தன் வீர சாவர்க்கர்தான் என்று, எனச் சொல்கிறார் அந்த முன்னுரையாளர். சிறுவயதில் படம் பார்த்துக் கதை சொல்லி நிறைய பழக்கம் போல அவருக்கு. இப்படி ஒரு படத்தை வைத்து, அந்த வாழ்க்கை சரிதையை எழுதிய சித்திரகுப்தன் வீர சாவர்க்கரே என்று எந்த லாஜிக்கில், சம்பந்தமே இல்லாமல், சொல்கிறார் ? The Wireல் இதை ஒரு ஆதாரமாகக் காட்டுகிற குண்டியர்களின் லாஜிக்காகத்தான் இருக்க வேண்டும்.

அத்துடன் முன்னுரையில் இப்படி expose செய்பவரின் காலம் 1986. வீர சாவர்க்கர் இறந்து போய் 22 வருடங்கள் கழித்து.


எந்த அடிப்படையில் இதைச் சொல்கிறார் ?


தான் செய்யும் ஏமாற்று, புரளி, பித்தலாட்டங்களை யாரிடம் மறைத்தாலும், ஒருவரிடம் மறைக்க முடியாது. அவர் மனிதரின் நன்மை தீமைகளை கணக்கில் எழுதி வருகிறவர்.

இந்தப் புழுத்த பொய்யைச் சொன்ன ரவீந்த்ர வாமனின் கணக்கையும் எழுதி இருப்பார் அந்த எமலோகச் சித்திரகுப்தன்
2 comments:

Maya Natarajan said...

யாரைய்யா இதை எழுதியது? அவர் கால்களை பணிகிறேன்.

Maya Natarajan said...

Hayyram ஐயா. Salute