Friday, February 6, 2009

வள்ளுவர் வாக்கு


2. பொருட்பால் (2. Wealth)
2.1 அரசியல் (2.1 Royalty)
2.1.1 இறைமாட்சி (2.1.1 The Grandeur of Monarchy)

_____________________________________________________________

386. காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்

மீக்கூறும் மன்னன் நிலம்

(That land prospers where the king is to see, not harsh of words.)

_____________________________________________________________

ஒரு நாட்டை ஆளும் அரசனாக இருப்பவர் காட்சிக்கு எளிமையானவனவராக‌வும் மக்களிடம் கடும் சொல் பேசாதவராக‌வும் இருக்கவேண்டியது அவசியம். அவ்வாறு இருக்கும் அரசரை இந்த உலகம் போற்றி புகழும் என்பது வள்ளுவர் வாக்கு. நடைமுறை வாழ்க்கையில் எடுத்துக் கொண்டால் தனிப்பட்ட மன்னர்கள் கிடையாது எனினும் தலைவர்களாக இருப்பவர்களை மன்னர் என்ற இடத்தில் ஒப்பிட்டு நோக்கலாம்.

உதாரணமாக தமிழக சினிமாவில் மிகவும் புகழ் பெற்ற‌ நடிகராக விளங்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காட்சிக்கு எளிமையானவராகவும் யாரிடமும் கடுஞ்சொல் பேசாதவராகவும், மிக எளிமையாக‌ எல்லோரிடமும் பழகுபவராக இருப்பதாலேயே உலகம் முழுவதும் அவருக்கு தனி மரியாதையும் புகழும் பரவியிருப்பதைப் பார்க்க முடிகிறது.

இவ்வாறு குறளின் ஒவ்வொரு பாடலும் அதன் பொருளும் எக்காலத்திற்கும் ஏற்புடையதாக இருப்பதாலேயே வள்ளுவர் வாக்கு மிக உயர்ந்து நிற்கிறது.

Tuesday, February 3, 2009

சித‌ம்ப‌ர‌த்தில் ஓர் அராஜ‌க‌ம்


சித‌ம்ப‌ர‌ம் ந‌ட‌ராஜ‌ர் கோவிலை இந்து அற‌நிலைய‌த்துறை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ள‌து. இந்து அறநிலையத் துறை என்ற பெயரில் இந்து கோவில்களில் மட்டும் அரசாங்கம் செய்யும் அட்டூழியத்திற்கு அளவே கிடையாது. இவர்களுக்கு இந்து கோவில்களில் வரும் வருமானத்தை பங்கு போட்டுக்கொள்ள வேண்டும். பிராமணர்களை அடியோடு இந்த‌ ச‌மூக‌த்திலிருந்து ஒழிக்க வேண்டும். இந்த இரண்டும் அடிப்படை தாரக மந்திரம். அதுவும் கருணாநிதியின் ஆத்மா சந்தியடைய இவையெல்லாம் முக்கிய வழிமுறைகள் என்று ஏதாவது ஜோசியர் சொன்னாரா என்பது தெரியவில்லை, ஆட்சிக்கு வந்த நாள் முதல் இந்துக்களை அவமானப்படுத்துவது, இந்து தெய்வங்களைப்பழித்து பேசுவது இவை மட்டுமே அரசின் முக்கியக் கடமையாக உள்ளது.


மிகத்தொன்மை வாய்ந்த கோவில்கள் மற்றும் பண்டைய கலாச்சாரத்தையும், மன்னாராட்சியையும் பிரதிபலிக்கும் நினைவுச்சின்னங்கள் போன்றவை தனி ஒரு மனிதர் அல்லது தனி ஒரு குழுவிற்கு மட்டும் சொந்தமானதாக இருக்க கூடாது என்பது ஏற்புடையதே. அவ்வாறான மிகப்பழங்கால கட்டிடங்கள் தனியாள் கையில் இருந்தால் அது நாளடைவில் தனிப்பட்டவர் விருப்பத்திற்கேற்ப மாற்றப்படும் அல்லது அழிக்கப்பட்டுவிடும். எனவே அவற்றைப்பாதுகாப்பது அரசின் கடமை. ஆனால் அந்த அதீத அக்கறை இந்து மத கோவில்களில் மட்டும் காட்டப்படுவது அநீதி.


இந்து அறநிலையத்துறை என்ற பெயர் மாற்றப்பட்டு அனைத்து சமய அறநிலையத்துறை என்று அமைக்க வேண்டும். வருமானம் வரும் மற்றும் போதிய வருமானம் இல்லாத அனைத்து மத கோவில்களும் அரசாங்க கட்டுப்பட்டிற்கு வரவேண்டும். மசூதிகளின் வருமானங்களும், தேவலயங்களின் வருமானங்களும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். அதைச் செய்வதற்கு இந்த அரசிற்கு எவ்வளவு தைரியம் உள்ளது என்பது என்பதை பார்க்க வேண்டும். குறிப்பாக தேவலயங்களுக்கு வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பணம் பெரும்பாலும் உள்நாட்டு மக்களை மதம்மாற்றம் செய்ய மட்ட்டுமே பயன்படுகிறது. இதை அரசாங்கம் தட்டிக்கேட்கவோ கட்டுப்படுத்தவோ, ஏன் அந்த வருமானம் எங்கிருந்து வந்தது என்று கணக்கு கேட்பது கூட கிடையாது. ஆனால் இந்து ஆலயங்களின் மீது மட்டும் கட்டவிழ்து விடப்பட்ட அரசாங்க அராஜகங்கள் வன்மையாக கண்டிக்கத்தக்கது.


பிராம‌ண‌ர்க‌ள் உரிமைக‌ள் அடியோடு ப‌றிக்க‌ப்ப‌டுவ‌தும் அவ‌ர்களின் வாழ்க்கை ம‌ற்றும் க‌லாச்சார‌ அடையாள‌ங்க‌ளை அடியோடு அழித்து ச‌மூக‌த்திலிருந்து இவ‌ர்க‌ளை முழுவ‌துமாக‌ அப்புற‌ப்ப‌டுத்த‌ த‌மிழ‌க‌ அர‌சு எடுத்து வ‌ரும் இன‌துவேஷ‌ ந‌ட‌வ‌டிக்கை மிக‌வும் அராஜ‌க‌மான‌து. த‌மிழ்நாட்டில் பிராம‌ண‌ இன‌த்தை அடியோடு அழிக்க‌ நினைப்ப‌வ‌ர்களுக்கு இல‌ங்கையில் த‌மிழின‌த்தை அழிக்கிறார்க‌ளே என்று கூச்சல் போட‌‌ என்ன‌ யோக்கிய‌தை இருக்கிற‌து என்று இன்னும் விள‌ங்க‌வில்லை.