Saturday, July 25, 2009

ஓரினச்சேர்க்கையும் இத்தாலி ராணியும்


டும் டும் டும் டும் டும்

நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி! சல்லாப மனிதர்களுக்கோர் அறிய வாய்ப்பு! இத்தாலி ராணியின் அதிரடி உத்தரவு!

நமது நாட்டில் இனி ஆணும் ஆணும் காதலிக்கலாம். பெண்ணும் பெண்ணும் காமம் கொள்ளலாம்.

நாட்டில் எல்லோரும் ஓரினச்சேர்க்கை வைத்துக்கொள்ளலாம் என்று இத்தாலி ரானியால் இனிதே ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதை மகிழ்வுடன் அறிவிக்கிறோம்.

டும் டும் டும் டும் டும்

மன்னின் மைந்தன்: "இது என்ன அநியாயம்? இது அக்கிரமம். புனிதமான உணர்வுகளையெல்லாம் வக்கிரமான சட்டமியற்றி கொச்சையான உறவுகளாக மாற்ற நினைப்பதா? இது என்ன இத்தாலி என்று நினைத்துக் கொண்டாளா உன் ராணி. இதை தம்பட்டம் அடித்து சொல்ல உனக்கே கூச்சமாக இல்லை? அருவெறுப்பாக இல்லை? நீயும் இந்த மன்னின் மைந்தன் தானே மடையனே!"

காவலாளி: ஏய்! நீ என்ன புரட்சிக்காரனா! ராணிக்குத் தெரிந்தால் உன் தலை சீவப்படும்! உடனே இங்கிருந்து போய்விடு.

மன்னின் மைந்தன்: ஐந்தாயிரம் வருடங்களுக்கும் பழமையான செம்மைப்படுத்தப்பட்ட புனிதமான எங்கள் கலாச்சாரத்தை அழிப்பதே தனது வேலை என எண்ணி சட்டம் இயற்றுகிறாள் உன் ராணி. இதைக்கண்டும் வாய்மூடி அடிமையாக இருக்கச் சொல்கிறாயா! வெள்ளைத் தோல் மாயை கொண்டவனே! வெள்ளைக்காரன் சொல்வது தான் நாகரீகம் என்று எண்ணுபவனே! உன் ராணியிடம் போய்ச் சொல், இந்நாட்டில் இது போன்ற இழிசட்டங்கள் இயற்றத் தேவையில்லையென்று.

காவலாளி: சல்லாபமாயிருப்பவர்களுக்கு துணைபோகும் சட்டம். உனக்கு ஏன் வலிக்கிறது?

மன்னின் மைந்தன்: ஏன்? நீ சட்டம் இயற்றாவிட்டால் அவர்கள் சல்லாபிக்கப்போவதே இல்லையா? இல்லை இது போன்ற இழி மனிதர்களை இங்கே யார் தடுத்தார்கள்? இவர்கள் இருட்டரைக்குள் எட்டிப்பார்த்தவர்கள் யார்? அல்லது இது வரை இவர்களை ஓரினச்சேர்க்கையாளர்கள் என்று சொல்லி என்றாவது கைது செய்திருக்கிறீர்களா? மக்கள் தங்கள் தர்மத்திற்க்கு கட்டுப்பட்டுத் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

ஓரினச்சேர்க்கையாளர்களை யாரும் சீண்டாத பொழுது தேவையில்லாமல் ஒரு சட்டத்தைக் கொண்டு வந்து நல்ல கலாச்சாரத்தில் வாழ்பவர்களை முறையற்ற வாழ்வுக்குத் தூண்டுகிறீர்கள். இந்த பாரதத்தின் கலாச்சார ஆணிவேரை அசைத்துப்பார்க்கத் துணிகிறீர்கள். ஒரு நாள் இந்த கேவலமான போக்கிற்க்கு நீயும் உன் ராணியும் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்.

காவலாளி: மூடனே! அதிகப்பிரசங்கி. அரசியின் சட்டத்தை அவமதிக்கிறாயா! உன்னை ராணியின் முன் நிறுத்துகிறேன் பார்.

மன்னின் மைந்தனை இழுத்துச் சென்று இத்தாலி ராணியின் முன் நிறுத்தினான் காவலாளி.

இத்தாலி ராணி: என்ன பிரச்சனை?

காவலாளி: மகாராணி! இவன் மன்னின் மைந்தன். ஓரினச்சேர்க்கை செய்யுங்கள் என்று நீங்கள் இயற்றிய உயர்வான சட்டத்தை அவமதித்துப் பேசுகிறான்.

இத்தாலி ராணி: மன்னின் மைந்தா! உனக்கு ஓரினச்சேர்க்கை பிடிக்காதா? அல்லது உனக்கு ஒத்துப்போக சரியான ஆண் கிடைக்கவில்லை என்ற கோபமா?

மன்னின் மைந்தன்: தூ... வெட்கம் கெட்டவளே! கூச்சமில்லாதவளே! நாயைப்போல் வாழும் உங்கள் வாழ்க்கையைப் பேயைப்போல் வந்து எந்நாட்டில் திணிக்கப்பார்க்கிறாயே! இந்து தர்மமும் இந்நாட்டின் கலாச்சாரமும் உன்னையும் சேர்த்து வாழவைக்கும். நுனிக்கிளையில் உட்கார்ந்து அடிக்கிளையை வெட்ட நினைக்காதே!

இத்தாலி ராணி: என்னடா பெரிய இந்து தர்மமும் உனது கலாச்சாரமும்! நீங்கள் எல்லோரும் காட்டுமிராண்டிகள் என்று உங்கள் ஊர்காரர் ராமசாமி நாயக்கரே சொல்லிவிட்டார். கருணாநிதியும் அதையே தான் வழிமொழிகிறார். உங்கள் சொந்தநாட்டுக்காரர்களே எங்கள் பக்கம் தான்! இத்தாலி நாட்டுச் சட்டத்தை நீ ஏற்றுக்கொள்ள வேண்டியது உனது தலைவிதி.

மன்னின் மைந்தன்: இழி பிறவிகள் இந்து தர்மத்தை எப்படி வேண்டுமானாலும் பழிப்பார்கள். அதை ஏற்றுக்கொள்ளும் அவசியம் எனக்கு இல்லை. இந்த நாட்டின் தர்மங்களும் மனிதன் மனிதனாக வாழவேண்டும் என்ற உயர்ந்த சிந்தனைகளுடைய கலாச்சாரமும் உன்னால் நசுக்கப்படுவதை நான் அனுமதிக்கமாட்டேன்!.

இத்தாலி ராணி: ஏய்! நீ அதிகம் பேசுவாய் போலிருக்கிறது. இதோ பார். மிருகங்களுக்குக் கூட ஓரினச்சேர்க்கை உண்டு என்றும் இது ஒரு இயற்க்கையான உணர்ச்சி என்றும் நிபுனர்களே சொல்லியிருக்கிறார்கள். எதுவும் தெரியாமல் எக்காளமிடாதே?

மன்னின் மைந்தன்: மமதை கொண்ட ராணியே! புனர்ச்சியின் உணர்ச்சிகள் இயற்க்கையானதே என்று உணர்ந்து, அத்தகைய உணர்ச்சிகள் உண்டாவதற்க்கான காரணமும் அறிந்து அவற்றை முறைப்படுத்தி முழுமையான மனிதனாக ஒருவன் வாழ என்ன செய்யவேண்டும் என்பதனை வகுத்து முறையாக அதன் படி வாழ்பவர்கள் நாங்கள். நீ எனக்குச் சொல்லித்தராதே!

இத்தாலி ராணி: ஹும்! நீ சாகாமல் போக மாட்டாய்! இதோ.. உனக்கு ஒரு வாய்ப்பு தருகிறேன்...எங்கே ஓரினச்சேர்க்கையை நீங்கள் கலாச்சாரம் கொண்டு எப்படிக் கட்டுப்படுத்தினீர்கள் என்று நான் திருப்தியடையும் வகையில் சொல் பார்க்கலாம். என் மனம் அதை ஏற்றுக் கொண்டால் உன்னை விடுவிக்கிறேன். இல்லையேல் உன் தலை கொய்யப்படும் ஜாக்கிரதை.

மன்னின் மைந்தன்: முதலில் அது உண்டாகும் காரணத்தை புரிந்து கொள். எல்லா மனிதர்களுக்கும் பதின் வயதுகளின் ஆரம்பத்தில் தோன்றும் ஒரு பரவச உணர்ச்சி தான் ஓரினக் கவர்ச்சி. அது உடலுறவுக்கு ஏங்கும் உணர்ச்சி அல்ல.

அது உடல் மாற்றத்தைக் கண்டு பரவசம் கொண்டு தம்மைப்போல் உள்ள சக மனிதனுக்கும் அதுவே தானா என்று ஆராய முற்படும் முயற்ச்சி. ஆணுக்கு ஆண் முழுமையாக தங்களை அறிந்து கொள்ளவும், அதே போல் பெண்ணுக்குப் பெண்ணும் தங்களை முழுமையாக புரிந்து கொள்ளும் ஒரு ஆர்வக் கோளாரின் வெளிப்பாடு.

பின்னர் நான் மட்டும் தனித்தவன் அல்ல. எல்லோரும் என்னைப்போல் தான் என்று உணர்ச்சிகள் ஒரு நிலைக்குத் திரும்பும் போது மனிதனின் வயது பதின் வயது துவக்கத்திலிருந்து பதினைந்தைத் தொட்டிருக்கும். பதினைந்து வயதைத் தொடும் ஆணுக்கும் பெண்ணுக்கும் இப்போது தங்களைப்பற்றித் தெரிந்து கொண்டதைப்போல் எதிர் பாலரைப் பற்றித் தெரிந்து கொள்ளும் ஆர்வம் மேலெழும். இது தான் இயற்க்கை.

இந்த உணர்ச்சி தான் ஆணையும் பெண்ணையும் இயற்க்கையான புனர்ச்சிக்குக் கொண்டு செல்லும். காதலும் காமமும் இந்த வயதில் தான் தலை தூக்கும். ஆணுக்குப் பெண்ணையும் பெண்ணுக்கு ஆணையும் அடையத்துடிக்கும் வயது. இந்த வயதில் காதலும் காமமும் முறையான உறவான திருமணம் என்ற சடங்கின் மூலமாக நிகழ்த்தப் பட்டு இல்லற வாழ்க்கை என்னும் தர்மத்திற்க்குள் நுழைந்து இயற்க்கையாக உண்டாகும் முறையான உணர்ச்சிகளை முழுமையாக அனுபவிக்கும் படி எங்கள் கலாச்சாரம் கட்டுக்கோப்பாக இயற்றப்பட்டுள்ளது.

இத்தாலி ராணி: சரி அப்படியானால் ஓரினச்சேர்க்கை உருவாவது ஏன்?

மன்னின் மைந்தன்: ஒரு ஆண் தன்னை முழுமையான ஆண் என்பதை உணரத் தவறும் போது. ஒரு பெண் தன்னை முழுமையான பெண் என்பதை உணரத் தவறும் போது, அவர்களின் உணர்வு ஒரே பாலினரிடமிருந்து மாறி எதிர் பாலினரை ஏற்க்கத் தடுமாறும். அவ்வாறு தடுமாறும் சமயங்களில் ஒருவருடைய மனம் சக பாலினரிடமே தம்முடைய உணர்வுக்கு ஆதரவை எதிர் பார்க்கும். அப்படிப்பட்ட இணக்கமான ஒரு ஆதரவு சக பாலினரிடம் இருந்தே கிடைக்கும் பொழுது அதையே இன்பமாகக் கொண்டு விடுகின்றனர்.

அதிலிருந்து விடுபட மனம் மறுக்கிறது. இது தான் உலகம், இதுவே இன்பம் என்று மனம் முடிவு செய்துவிடுகிறது. ஆணுக்கு பெண்ணின் அவசியமும், பெண்ணுக்கு ஆணின் அவசியமும் தேவையில்லை என்ற எண்ணம் தலைதூக்கி விடுகிறது.

இது இயற்கையான இல்லற வாழ்விலிருந்து அவர்களை வெளியேற்றி விடுகிறது. இவ்வாறான வாழ்க்கை சமூகத்திற்கு ஒவ்வாது. குடும்ப வாழ்க்கைக்கு கேடு விளைவிக்கும். குடும்பம் குடும்பமாக வாழும் சமூகத்தின் நடுவே இப்படிப்பட்டவர்கள் வாழ்வது அந்த சமூகத்தின் மற்ற தரப்பினரின் வாழ்க்கையை பாதிக்கக் கூடியதாக அமையும்.

அதனாலேயே அவ்வாறானவர்களை சமூகத்திற்க்கு அப்பாற்ப்பட்டவர்கள் என்று ஒதுக்க நேர்கிறது. அனால் இத்தாலி ராணியே! ஒட்டு மொத்தச் சமூகமும் ஓரினச்சேர்க்கையாளர்களாகவே ஆக வேண்டும் என்று நீ விரும்புகிறாய். இது சரிதானா? நீயே யோசித்துப்பார்!






இத்தாலி ராணி: சரி, இத்தகைய உணர்ச்சிகளை உங்கள் கலாச்சாரம் மூலமாக எப்படித் தடுக்கிறீர்கள்?

மன்னின் மைந்தன்: சுலபம். ஒரு ஆணையோ அல்லது பெண்ணையோ தங்களுடைய பாலுணர்வை முழுமையாகப் புரிந்து கொள்ளச் செய்தால் போதும்.

உதாரணமாக பதின் வயதைத் தொடும் போது பெண் பூப்பெய்துகிறாள். எங்கள் கலாச்சாரப்படி பூப்பெய்தும் பெண்ணை உடனே மற்ற பெண்கள் எல்லோரும் சேர்ந்து அலங்காரம் செய்து அவளைச் சுற்றி நின்று பாட்டு பாடி அவளுடைய அழகை வார்த்தைகளால் சொல்லி , அவளுடைய பெண்மையை உணரச் செய்கிறார்கள்.

மனோரீதியாக அந்தப் பெண் தன்னுடைய பெண்மையை யாருடன் ரசிக்க வேண்டியவள் என்பதை பாட்டால் உணரச் செய்கிறார்கள். 'கட்டழகன் வருவான்', 'காளை உன்னைக் கட்டுவான்','வீரன் உன்னைக் கவர்ந்து செல்வான்' என்றெல்லாம் அவளது பாலுணர்வை ஆண்மீது செலுத்தச் செய்கிறார்கள். இதனாலேயே பருவம் எட்டும் வயதில் ஒரு பெண் தன் பெண்மையை முழுதாக உணர்கிறாள் மேலும் அவள் தன்னுடன் கூட வேண்டியது ஒரு ஆண் தான் என்று முழுமையாக மனதை எதிர் பாலரிடம் செலுத்த தயார் செய்து கொள்கிறாள். மாறாக அவள் பெண்ணைக் காதலிக்க விரும்பமாட்டாள்.

அதே போல் ஒரு ஆண் அரும்பு மீசை முளைத்தவனாக ஆகும் போது அவனிடம் ஆண் என்ற உடற்திமிரை ஏற்றி வைப்பார்கள். வீர விளையாட்டுக்கள், மல்யுத்தம், காளை அடக்குதல் போன்றவை எல்லாம் இப்படி வந்தவை தான். 'ஆம்பளப்புள்ள, நெஞ்ச நிம்த்தி நடப்பா!' என்று உசுப்பேற்றுகிறார்களே! அது ஆணாதிக்கம் உருவாகவும் பெண்ணை அடிமையாக்கவும் இல்லை. அப்படியெல்லாம் இருந்தால் தான் ஒரு ஆண் மனோரீதியாக தன்னை ஆண் என்று முழுமையாக உணரும் சூழல் உண்டாகிறது. (இந்த காலத்தில் ஆண் என்ற திமிர் ரவுடித்தனமும் அடியாள் வேலைக்கும் என்று ஆகிவிட்டது வேறு விஷயம்).

இப்படி ஒவ்வொரு ஆணும் முழுமையான ஆண்மகனாக நெஞ்சு நிமிர்த்தி நடப்பவனாக இருந்தால் அவன் சக ஆண்மகனிடம் தனது உணர்வுக்கு வடிகால் தேட மாட்டான். அவனது உணர்வு பெண்ணைக் கவர வேண்டும் என்பதிலேயே இருக்கும். ஆணும் ஆணும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளும் போது காந்தத்தின் ஒரே துருவங்கள் ஒன்றை ஒன்று எதிர்க்கும் என்ற தத்துவப்படி இருவரும் விலகிச் சென்று விடுவார்கள். காதல் கொள்ள மாட்டார்கள்.

பெயர் வைப்பதிலும் ஆணுக்கும் பெண்ணுக்கும் வித்தியாசம் காட்டுவதும் ஒருவரை பெயர் சொல்லி அழைக்கும் போதே அவருடைய பாலின உணர்வு ஒவ்வொரு முறையும் உணரப்படுவதற்க்கே.

அதுமட்டுமல்ல ஆடைகளிலும் ஆண் பெண் என்று வேற்றுமை காட்டுவதும் நாம் எதிர் பாலரைப் பார்க்கிறோம் என்ற உணர்வு ஆணுக்கும்

பெண்ணுக்கும் உண்டாக வேண்டும் என்பதற்க்கே. உங்கள் நாட்டிற்கு வரும் எல்லோரும் சொல்லும் ஒரு விஷயம் என்ன தெரியுமா? அங்கே ஆணுக்கும் பெண்ணுக்கும் வித்தியாசம் தெரிவதில்லை என்பதே.

இத்தாலி ராணி: இது என்ன வேடிக்கை ஆணுக்கும் பெண்ணுக்கும் சீருடை இருக்குமா என்ன?

மன்னின் மைந்தன்: ஏன் இருக்கக் கூடாது? உமது காவல் துறைக்கு ஏன் சீருடை? கயவர்கள் கண்டால் கழிந்து ஓட வேண்டும் என்பதற்க்குத் தானே! பள்ளிக் குழந்தைகளுக்கு ஏன் சீருடை? பார்ப்பவர்களுக்கு பரிவு உண்டாக வேண்டும் என்று தானே! ஏன் உமது அமைச்சர்கள் எல்லாம் ஏன் வெள்ளையும் சொல்லையுமாக அலைகிறார்கள்? அவர்களை பார்த்தவுடன் பொதுமக்கள் பயப்பட வேண்டும் அதற்குத் தானே!

இதில் எல்லாம் எந்தக் காரணத்திற்க்காக சீருடை உள்ளதோ அதே போல் தான் ஆணுக்கும் பெண்ணுக்கும் உளவியல் ரீதியாக புரிந்துணர்வு உண்டாக உடையில் வித்தியாசம் காண்பிக்கப்பட்டது.

இப்படி பல முறைகளில் எங்கள் கலாச்சாரத்தில் ஒரு ஆணை முழுமையான ஆணாகவும் ஒரு பெண்ணை முழுமையான பெண்ணாகவும் உணரச் செய்து அவர்களை முறையான இல்லற வாழ்க்கை வாழச் செய்கிறோம்.

ஆனால் நீயோ தேவையில்லாமல் சட்டமியற்றி எங்கள் கலாச்சாரத்தை அடியோடு உடைக்கப் பார்க்கிறாய்!







இத்தாலி ராணி: ம்ம்ம்! நீ சொல்வதை கேட்கும் போது எனக்கு சரியென்று தான் படுகிறது. ஆனால் இந்த நாட்டை இத்தாலி சாம்ராஜ்ஜியமாக 
மாற்ற வேண்டும் என்று எனக்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் என்னால் இந்த விளக்கத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. 

அப்போது ஒரு காவலாளி ஓலை ஒன்றைக் கொடுக்கிறான். இத்தாலி ராணி சத்தமாகப் படிக்கிறாள். "பாரதத்தை ஆளும் இத்தாலி ராணியே! நீ இயற்றிய புதிய சட்டம் பற்றி கேள்விப்பட்டேன். வாழ்த்துக்கள். இந்தியாவில் இந்து கலாச்சாரம் அடியோடு அழிக்கப்பட்டது என்ற நல்ல செய்தியை விரைவில் சொல்வீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். பதில் தேவை. இப்படிக்கு போப்"

இத்தாலி ராணி: பார்த்தாயா ஓலையை! இதோ உனக்காக ஒரு வாய்ப்பைத் தருகிறேன். கண்கானாமல் இந்த நாட்டிலிருந்து ஓடி விடு. உயிர் 
மிச்சமாகும். இல்லையேல் நீ செத்து மடியும் காலம் சில வினாடிகளில் வந்து விடும்! என்ன சொல்கிறாய்.

மன்னின் மைந்தன்: அந்நியநாட்டுப் பிசாசே! இத்தனைக்காலம் எங்களை ஆயுதத்தால் அடிமையாக்கினாய்! இப்பொழுது மதத்தால் அடிமையாக்கப் 
பார்க்கிறாய்.  நீ ஒழிந்தால் தான் இந்து தர்மத்தையும் இந்த நாட்டையும் காப்பாற்ற முடியும். அந்த நாள் வெகுதொலைவில் இல்லை. எங்கள் 
உணர்வுகளை அவமதிக்கும் வேலையைத் தொடர்ந்து செய்து விட்டு பின்னால் சாவர்க்கர் காரணம், கோட்சே காரணம், மோடி காரணம், பட்நாயக் காரணம் என்று எங்கள் தலைவர்களை குற்றம் சொல்லிப் பயன் இல்லை. ஏன்னென்றால் நீ அவமதிப்பது எங்களைப் போன்ற அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை. அசைக்கப் பார்ப்பது எங்கள் தாய்மை உணர்ச்சியை. இதற்க்கு நீயும் உன் இத்தாலி நாடும் ஒரு நாள் பதில் சொல்லியேத் தீர வேண்டும் என்பதை மறக்காதே!

இத்தாலி ராணி: சீ மூடனே! உனக்கு சாவுதான் ஒரே முடிவு. இவனை சிரச்சேதம் செய்யுங்கள்.

காவலாளிகள் மன்னின் மைந்தனை அழைத்துச் செல்கிறார்கள். கற்பாறையில் அவன் தாமரைத் தலை வைக்கப்பட்டது. காவலாளி கேட்கிறான். கடைசியாக ஏதாவது சொல்கிறாயா!

ஓம் நமசிவாய! ஓம் நமசிவாய! ஓம் நமசிவாய!

வெற்றிவேல் வீர வேல்! வெற்றிவேல் வீர வேல்!

ஓங்கிய வாள் வேகமாக கீழே இறங்க, குதித்துத் தெறித்தது உதிரம். சிதறி உருண்டது சிகரம். வீழ்ந்தது மன்னின் மைந்தனின் அங்கம். இன்பமாய் இளித்தாள் இத்தாலி ராணி.

புறாவின் கால்களில் கட்டி ஓலை ஒன்றை அனுப்பினாள்...

"மதிப்பிற்குரிய போப் அவர்களுக்கு, 

ஒரு இந்துப் பூச்சி நசுக்கப்பட்டது.  இந்தியா விரைவில் இத்தாலி ராஜ்ஜியம்...! நற்செய்திப் பெருங்கூட்டம் விரைவில் நடக்கும், 

உங்கள் தலைமையில்....!
.

24 comments:

Anonymous said...

SUperngo

Madhavan Srinivasagopalan said...

"Italy Rani" -- What an apt 'character'name .. how do u think so great, sir?
Good article

hayyram said...

thanks maddy

Unknown said...

As usual, excellent article, Ram.

Nice & logical arguments, crystal clear explanations.

As said in your article, if the Italian Queen truly repents for all the misdeeds, the golden future of which we are striving for is not far away.

Finally, the last lines about the queen shows that she is not a supporter of her own law.

hayyram said...

//Finally, the last lines about the queen shows that she is not a supporter of her own law//

i have ended it with a hope of possitive. its only a hope. But what is happening in india it seems its not possible. what u say?

Unknown said...

// But what is happening in india it seems its not possible. what u say?
//

Yes, it's not possible. The rani has become old.

Ok, jokes apart. There is hope as long as the young generation stick on to strict self discipline.

Aaqil Muzammil said...

எனக்கு ஒரு கதை தெரியும் அது கிருஸ்னன் உருமாரி யாரயோ போருக்கு அனுப்ப புனர்தான் கதை எப்படியோ உங்கள் கடவுள் கூட ஓரினசெர்கில் இடுபட்டார் கடவுள் லுக்கு ஒரு சட்டம் மற்றவர்களுக்குய் வேற :p இதுக்கு என்ன பதில் M.R. ?

hayyram said...

//எனக்கு ஒரு கதை தெரியும்// முழுசா சரியா சொன்னா, நானும் புரிஞ்சுப்பேன்ல!

Aaqil Muzammil said...

முழுசா சொல்ல தெரியாது கருப்பு சட்டைகரர்கள் சொல்லும் போது கேட்டது
யாரயோ போருக்கு அனுப்ப கிருஸ்னன் பெண்ணாக உருமாரி யாரயோ புனர்ந்தான் என கூறப்பட்டது

இக்கதை மகா பரதத்தில் வருகிறது

hayyram said...

//முழுசா சொல்ல தெரியாது கருப்பு சட்டைகரர்கள் சொல்லும் போது கேட்டது// இப்படி அரைகுரையா இல்லாம முழுசா தெரிஞ்சு சொல்லுங்க. நானும் தெரிஞ்சிக்கறேன். உங்கள் வருகைக்கு நன்றி. மீண்டும்வருக.

Unknown said...

avar sollarathu Krishanar Mohini avatar eduthapo SIvan kooda Punarthanthai sollugirar... Iyyappan born b/w Siva & Krishna..

I think SO..

But U r really grt.. We need a people like u to develope our Hinidiisim..

hayyram said...

thanks vasanth.

Anonymous said...

Arumayaana karuthukkalai sonna anbaalar RAM avargalukku en manamaarndha nanriyum vaazhthukalum!

Jayachandran said...

//எனக்கு ஒரு கதை தெரியும் அது கிருஸ்னன் உருமாரி யாரயோ போருக்கு அனுப்ப புனர்தான் கதை எப்படியோ உங்கள் கடவுள் கூட ஓரினசெர்கில் இடுபட்டார் கடவுள் லுக்கு ஒரு சட்டம் மற்றவர்களுக்குய் வேற :p இதுக்கு என்ன பதில் M.R. ?//

நண்பா அவர் கேட்ட விளக்கம் எனக்கு புரிந்து விட்டது,
ஒரு அரக்கனை அழிக்க கிருஷ்ணரும் பரமசிவரும் சேர்ந்து மோகினி அவதாரம் எடுப்பார்களே அதுதான்.

@ஆகீல் முசம்மில்

அதாவது நண்பா, பாவம் செய்தவன் எப்படியும் அழிந்தே தீருவான், அதற்காக கடவுள் எந்த எல்லைக்கும் செல்வார் என்பதை உணர்தவே அந்த நிகழ்வு.
அதனை தவறான கண்ணோட்டதில் கருப்பு சட்டை ஆசாமிகள் புரிந்து உம்மிடம் கூறியுள்ளார்கள்.

Arun Ambie said...

ஏதோ உங்களால் இயன்றது.. கதையிலாவது இத்தாலி ராணியைத் திருத்திவிட்டீர்கள். நிஜத்தில் திருந்துகிற ஜென்மம் இல்லை அது.

Vijaiy from colombo said...

இந்த அரைகுறை துலுக்க பசங்க ரவுசு தாங்க முடியல.விஷய ஞானம் பூச்சியம்,dr .சாகிர் நாய்க் சொன்னா அது வேத வாக்கு...இல்லாட்டி கருப்புசட்டை காரன்..இல்லாட்டி சொரியார்தாசன் வந்து சொல்லணும்.....
ஐயப்பன் அவதாரம்னு கூட சொல்ல தெரியல இந்த ஆகில் முசம்மில் அவருக்கு...
http://harivarasanam.in/Tl/ayappa.asp?ID=1&FM=E

இந்த தொடுப்பை வாசிங்க....கர்மத்துக்கு ஏற்ற பலன் உண்டு.அதே சமயம் அதே பலனை தவறான காரியத்திற்கு பயன் படுத்துவான் ஆயின் அவன் அழிக்கபடுவன்.உங்க ஆபிரஹமிய மதங்கள் சொல்ற மாதிரி இவர மீட்பர எத்துகொங்க,இவர கடைசி தூதரா எதுகொங்கனு செஞ்ச பாவம் எல்லாம் போய்டும் சொல்றது இல்ல இந்து மதம் ...அந்த மகிஷி எனும் அரக்கி ஆணுக்கும் ஆணுக்கும் பிறந்த குழந்தையால் மட்டுமே நான் அளிக்க பட வேண்டும் என வரம் பெற்று விட்டால்.அது அவளின் கர்மத்துக்கு கிடைத்த பலன்.ஆயினும இறைவன் அவளின் அட்டகாசங்கலக்கு முடிவு கட்ட மோகினி அவதாரம் ஏற்று,சிவனுடன் இணைந்து, அனால் வன்மத்துடன் பாலுறவுனு துலுக்க பசங்க புரிஞ்சு கிட்டா நாங்க பலி இல்ல,அய்யப்பா சாமியை ஈன்று எடுத்தார்..கேரளா ராஜ குமாரனாக வாழ்ந்து 12 வயதில் இறைவன் ஆனார்.மகிஷியை அழித்தார். அவரை வேண்டியே நாம் ஒவ்வொரு வருடமும் ஒரு மண்டலம் விரதம் இருந்து துதிக்க செல்கிறோம்...எனக்கு தெரிந்த ஒரு பெரியவர்,12 வருடங்களாக மலைக்கு சென்று வருகிறார்.அதற்கு முன் தினசரி மதுபாவனை உடைய அவர் 1999 இற்கு பின் ஒரு நாள் கூட அவர் மதுவை தொட்டது இல்லை.அது மட்டும் இன்றி அவரின் உலோக வியாபாரமும் சிறப்படைந்தது...idha சொன்னா அப்புறம் ஏன் சபரி மலைல ஏன் ஒவ்வொரு வருடமும் மரணங்கள் ஏற்படுத்துநு ஆபிராஹமிய பசங்க கேப்பாங்க..ஆமாம்,keralaala இருக்க துலுக்க,கிறிஸ்தவ ஆட்சியாளர்கள் சபரிமலை வருமானம் 2500 கோடியை எடுத்துப்பாங்க,ஆனா 15 லட்சம் மக்கள் வந்த இடத்துல 3 பேர் கொண்ட போலீஸ் படையை கடமைல போடுவாங்க..இப்புடி இவங்க செஞ்சுட்டு சாமி மேல பழிய போடுவாய்ங்க...என்ன செஞ்சாலும் ஐயப்பன் கோவில் அளவு உலகத்துல எந்த கோவிலுக்கும் ஒரு கால பகுதில அதிக அளவு மக்கள் வரத்து இல்ல...

அத மேக எதி,ஆயேத் அபி ஹமுவேமு ...
இன்னிக்கு இது போதும்,நாளை மீண்டும் நான் சந்திப்போம்

Vijaiy from colombo said...
This comment has been removed by the author.
Vijaiy from colombo said...
This comment has been removed by the author.
Anonymous said...

ஒரு பாலினத்தவர் மீதான வெறுப்பு பிராவகம் எடுக்கும் பதிவு இது !!!

ஒரு பாலின உறவு என்பது இயற்கையான ஒன்று என்றே அறிவியல் உலகம் நிறுவுகின்றது... !!!

இந்து மத தருமம் ஒரு பாலின உறவுகளை தடுத்ததில்லை !!!

அப்படி தடுக்கப்பட்டு இருப்பதாக நம்புவீர்களானால் தாரளமாக அதற்கான ஆதரத்தை முன்வைக்கலாம் !!!

ஆபிரகாமிய மதங்கள் ஒரு பாலின உறவைத் தடுக்கு முக்கிய காரணம் --- சோடோம் என்ற ஊரை கடவுள் அழித்தார் என்ற நம்பிக்கையே ஆகும் !!! மற்றப்படி ஒரு பிண்ணாக்கு காரணமும் இல்லை !!!

இந்துக்கள் ஒரு பாலின உறவை ஏன் வெறுக்கின்றார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. பண்டைய இந்தியாவில் ஒரு பாலின உறவு நடைமுறையில் இருந்தமையை காமசூத்திரம் உட்பட பண்டைய நூல்கள் விவரிக்கின்றன --- கோவில்களிலும், சிற்பங்களிலும் கூட காணக் கிடைக்கின்றன !!!


hayyram said...

இக்பால் செல்வன், இந்தப் பதிவின் அனைத்து சாரத்தையும் முழுமையாக உள்வாங்கிப் பின் கருத்தெழுமாறு வேண்டுகிறேன். ஓரினச்சேர்க்கை வெறுக்கப்பட வேண்டியது என்றோ இயற்கைக்கு முரனானது என்றோ கூறப்படவில்லை. பதின்வயது துவக்கத்தில் பருவம் மாறும் போது ஏற்படும் உடலியலைப் புரிந்து கொள்ளும் உந்துதல் ஒருபால் ஈர்ப்பைக் கொடுக்கும். பின் அதிலிருந்து வெளிப்பட்டு ஆண்பெண் உறவு மற்றும் குடும்பம் சமூகம் என்கிற பரந்த வெளிக்கு உணர்வுகள் செலுத்தப்பட வேண்டும். அது தான் சாரம். அதற்கு முரனாகவும் ஓரினச்சேர்க்கையை ஊக்கப்படுத்தும் விதமாகவும் ஒரு சட்டம் உண்டாக்கப்பட்டால் அது கண்டிக்கத்தக்கதே!

சகோதரன் ஜெகதீஸ்வரன் said...

இந்து மதம் ஓரினச்சேர்க்கையை அங்காரம் செய்கிறதுநண்பா. சிவனும், விஷ்ணுவும் இணைந்து அய்யப்பனை பெற்றதாக கதை உண்டு.

hayyram said...

ஜெகதீஸ்வரன் நடராஜன், ' அங்காரம் செய்கிறது ' என்றால் என்ன அர்த்தம்? ஐயப்பனைப் பெற்றது சிவனும், விஷ்னுவும் என்பது எந்த புரானத்தில் அல்லது இதிகாசத்தில் இருக்கிறது என்று சொலல் முடியுமா? முகலாய ராஜாக்கள் இந்தியாவில் வேரூன்றிய காலத்தில் நம்மவர்கள் சைவ வைனவம் தாண்டி ஹிந்து முஸ்லீம் போராட்ட தெருச்சண்டைகளுக்கு இறங்கி வரலாறு எழுதப்பட்டுவிட்ட காலகட்டத்தில் எங்கேயிருந்தய்யா சிவனும் விஷ்ணுவும் வந்தார்கள்?

Vijay vicky said...

மிகவும் அடிப்படையான தவறு உங்கள் கருத்துக்களில் இருக்கிறது..... ஒருபால் ஈர்ப்பு(GAY, LESBIAN) என்பது வேறு, ஆண் ஆணுடன் உறவு கொள்வது (MSM) என்பது வேறு..... சந்தர்ப்பங்களாலும், சூழ்நிலைகளாலும் பால் உணர்வுகள் தூண்டப்பட்டு ஒரு ஆண் இன்னொரு ஆணுடன் உறவில் ஈடுபாடுவது MSM (Male Sex Male) எனப்படும்.... உடல் ரீதியாக அந்த நேரத்து தேவையை பூர்த்தி செய்வதுதான் இது.... இது நீங்கள் சொல்வது போல பதின்வயத்தில் வரலாம்... ஆனால், ஒருபால் ஈர்ப்பு என்பது ஒருவரது பிறப்பிலேயே தீர்மானிக்கப்படுகிறது.... அதற்கு காரணம் மரபனுதான் என்று ஆய்வுகளில் சொல்கிறார்கள்.... இந்து மத தர்மத்தில் இதனை தவறாக கூறவில்லை.... ஆரிய தாக்கத்திற்கு பிறகு, மனு தர்மங்களினால் இதை தவறென சொல்கிறார்கள்.... அடிப்படை இந்து மதம் என்பது பாலின ஈர்ப்புகளை தவறென சொல்லவில்லை.... மேலும், நீங்கள் சொல்லும் போப் அவர்கள் கூட இதை தவறென்றுதான் சொல்கிறார்.... பால் ஈர்ப்பு என்பது மதத்தோடு தொடர்புடைய விஷயம் அல்ல.... அது ஒருவரின் தனிப்பட்ட உரிமை.... அதை தவறென்று சொல்லவோ, குற்றமாக பார்க்கவோ எவருக்கும் உரிமையில்லை.... பெரும்பாலானவர்கள் வலது கை பழக்கம் உள்ளவர்களாக இருப்பதால், இடது கை பழக்கம் உள்ளவர்களை குற்றவாளிகளாக பார்ப்பது எவ்வளவு முட்டாள்தனமோ அதே அளவு தவறு ஒருபால் ஈர்ப்பு நபர்களையும் குற்றம் சொல்வதும்....

Jegadeeswaran Natarajan said...

hayyram

புராணங்கள் மட்டும் இந்து மதம் அல்ல. ஐயப்பன் வரலாறு எந்த புராணத்தில் இருக்கிறென கேட்கின்றீர்கள். புராணங்களில் இருக்கும் கடவுள்Kளை மட்டுமே ஏற்பீர்கள் என்றால், நிறைய கடவுள்களை காவு கொடுக்க வேண்டியிருக்கும்.

இந்து மதம் என்ற வார்த்தைக் கூட புராணங்களில் இல்லை. அதற்காக அதையும் ஏற்றுக் கொள்ள மாட்டீர்களோ. நெடுங்காலத்திற்கு முன்பிருந்து அத்தனையும் ஆய்ந்து பார்த்தால் வெறும் சிறுதெய்வங்கள் மட்டுமே கிடைக்கும்.