Sunday, September 29, 2013

காந்தி ஜி கொலையால் யாருக்கு லாபம் ?

- ஆனந்த் கனேஷ்


கோட்ஸே ஹிந்து மகாசபாவில் உறுப்பினராக இருந்தார். பத்திரிக்கை நடத்தினார். ஆனால், ஆர்.எஸ்.எஸ் நடவடிக்கைகள் எதிலும் அவர் கலந்துகொண்டது கிடையாது. ஏனெனில், அவர் ஆர்.எஸ்.எஸோடு தொடர்பு கொண்டவர் கிடையாது. இதை படேல் நேருவுக்கு எழுதிய கடிதத்தில் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டு இருக்கிறார். 
  
இருப்பினும், ஆர்.எஸ்.எஸ். மேல் ஏன் பழி போடப்படுகிறது ? 
  
ஏனென்றால், அதனால் நேருவுக்கு பல லாபங்கள் இருந்தது. இப்படிப் பழியைப் போட நேருவுக்கு கிடைத்த சாக்கு என்ன தெரியுமா ?
  
காந்தி ஜி கொல்லப்பட்டபோது ஆர்.எஸ்.எஸ்காரர்கள் பலர் சந்தோஷப்பட்டார்களாம் ! 
  
அதை காரணமாக வைத்து நேரு அந்த இயக்கத்தை தடை செய்தார். 

 காந்தி ஜி கொலை என்னும் சாக்கை வைத்து நேரு பல மாங்காய்களை அடித்தார். வரலாற்றுப் பொய்யை உருவாக்கியது அவற்றில் ஒன்று. 
  
கொலை செய்தது யார் ?
  
ஹிந்து மகாசபை உறுப்பினர்கள் சிலர் சேர்ந்து நடத்திய கொலை காந்தி ஜியின் கொலை. அப்படி ஒரு விஷயம் நடக்க்ப்போவது ஆர்.எஸ்.எஸுக்குத் தெரியவே தெரியாது. கொல்லப்பட்டது தெரிந்தவுடன் மிகக் கடுமையான கண்டனங்களை ஆர்.எஸ்.எஸ். எழுப்பியது. 
  
கொலையை ஆதரித்த கொலைகாரர்களை ஆதரித்த ஹிந்து மகாசபையை இன்னொருவரும் மிக வன்மையாக இந்த விஷயத்தில் கண்டித்தார். 

 அவர் யார் ? பின்பு சொல்கிறேன். 

 ஆனால், உண்மை இதுதான். காந்தி ஜி கொலைக்கு முன்னாலோ பின்னாலோ ஆர்.எஸ்.எஸ்ஸானது கோட்ஸேவுக்கு எந்தவிதமான உதவிகளையும் தரவில்லை. 

 இதுகுறித்த இந்திய சட்ட பத்திரிக்கையில் வெளியான கட்டுரையில் இருந்து சில பகுதிகள்:
  
Sardar Vallabhai Patel, the then Home Minister of India wrote to Jawaharlal Nehru on 27 February 1948 that amidst many findings regarding the Mahatma’s murder: 
  
“It also clearly emerges from the statements that the RSS was not involved in it at all”. 

It is interesting to note that Sri. C K Daphtary, the then Advocate General, Bombay who was in charge of the prosecution did not involve RSS in the controversy. The prosecution did not even hint, much less prove even the remotest connection of RSS with the murder of the Mahatma. 

RSS is not blamed anywhere in the judgement delivered in the case. 

Not even a single inquiry the Government of India later made into the Mahatma Murder case involved the RSS in it. 

In 1966 the government set up a commission under Sri. J L Kapur, a retired judge of the Supreme Court, to make a fresh and thorough inquiry into the conspiracy that led to the murder of Gandhiji. 

The Commission, which sat at different places and examined about 101 witnesses and 407 documents, published its reports in 1969. 

It nowhere blamed RSS as the Gandhi assassin, and cleared the organisation of any connection with the crime. 

One of the important witnesses, Sri R N Banerjee, ICS (witness 19) who was the Home Secretary of the Central Government at the time of Gandhi murder had given the evidence that “It has not been proved that they (the accused) were members of the RSS”.(Kapur Commission Report) 

The witness further says that even if the RSS had been banned earlier, it would not have affected the conspirators or the course of events, “because they have not been proved to have been members of the RSS nor has that organization been shown to have a hand in the murder”.

R N Banerjee further stated, “Although RSS was banned it should be taken to be an acceptance by the Government of the allegation that the murder of Mahatma Gandhi was by the members of RSS as such”. 

The Commission further comments: “In Delhi also there is no evidence that the RSS as such was indulging in violent activities as against Mahatma Gandhi or the top leaders of the Congress”. 

The facts are thus by all means self evident and more eloquent than all the propaganda by the interested parties. 

RSS was thus not the organization that assassinated Mahatma Gandhi.

http://www.indialawjournal.com/volume2/issue_2/nathuram_godsay_trial.html

ஆகவே, காந்தி ஜி கொலையில் ஹிந்து மகாசபை உறுப்பினர்களின் பங்கு தெளிவாக ஊர்ஜிதப்படுத்தப்பட்டது. ஆனால், ஆர்.எஸ்.எஸுக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதும் தெளிவு.

காந்தி ஜி கொலையில் ஹிந்து மகாசபையைக் கண்டித்த ஒருவரைப் பற்றி பிறகு சொல்கிறேன் என்று சொல்லி இருந்தேன் அல்லவா ? 

அவர் ஹிந்து மகாசபையின் தலைவர்களில் ஒருவர். அவரது பெயர் ஷியாமா ப்ரஸாத் முகர்ஜி.

காந்தி ஜி கொலையை எதிர்த்து அவர் ஹிந்து மகாசபையில் இருந்து விலகினார். ஹிந்து மகாசபைக்கு எதிராக ஒரு கட்சியை ஆரம்பித்தார். அந்தக் கட்சியின் பெயர் ஜன சங்கம். இந்த ஜனசங்கத்தின் தற்போதைய பெயர் பாரதிய ஜனதா கட்சி.

காமராஜர் உள்ளிட்ட பலர் உருவாக்கிய ஸ்தாபன காங்கிரசுக்கும் ஜனசங்கத்துக்கும் ஒரு வித்தியாசமும் கிடையாது. ஜிபிஐ கட்சிக்கும் ஸிபிஐ (மார்க்ஸிஸ்ட்) ஒரு வித்தியாசமும் கிடையாது. இவை அனைத்தும் இணைந்து உருவானது ஜனதா கட்சி. 

இதில்தான் ஜெயப்ரகாஷ் நாராயணன், க்ருபாளினி, மொரார்ஜி தேசாய், இடதுசாரிகள் உள்ளிட்ட பலர் இணைந்து செயல்பட்டார்கள்.

அதாவது, காந்தி ஜி கொலையைக் கண்டித்து எதிர்த்து உருவான அரசியல் பாரம்பரியத்தில் வருவதுதான் பாரதிய ஜனதா கட்சி. 

இந்தக் கட்சிக்கும், ஜனதா கட்சியின் தற்போதைய வடிவ கட்சிகளுக்கும் ஆதிகாலத்தில் இருந்தே ஒரே கொள்கைதான். ஒரே அரசியல் நீரோட்டம்தான். 

ஹிந்து மகாசபை என்ன செய்கிறது ?

காந்தி ஜியின் கொலையைக் கண்டித்து ஆரம்பித்த பாரதிய ஜனதா கட்சியுடன் சேராமல் இன்றுவரை ஹிந்து மகாசபை தனிக்கட்சியாகவே இருக்கிறது. 

பாரதிய ஜனதா கட்சியோடு கூட்டணிகூட வைத்துக்கொள்ளாத அளவு ஹிந்து மகாசபை விலகி நிற்கிறது. 

பாரதிய ஜனதா கட்சியின் எதிர்ப்புத் தரப்பாகவே ஹிந்து மகாசபை இருக்கிறது. 

சுருங்கச் சொன்னால், காந்தி ஜி கொலையானது ஹிந்துத்துவ குடும்பத்தை இரண்டாக உடைத்து பங்காளி பிரிவினையை உருவாக்கியது. 

இங்கனம் காந்தி ஜி கொலையை எதிர்க்கும் போக்கு கொண்ட பிரிவுகளான ஆர்.எஸ்.எஸ்ஸின் மேலும் பாரதிய ஜனதா கட்சியின் மேலும் காந்தி ஜியைக் கொன்ற பழியை போடுவது காங்கிரஸ் அரசியலின் அருவருப்பான சாக்கடை முகத்தையே காட்டுகிறது.

காந்தி ஜி கொலையைக் கண்டித்து அரசியல் கட்சி ஆரம்பித்த ஸ்யாமா ப்ரசாத் முகர்ஜி என்ன ஆனார் ?

அவர் சிறையில் வைத்துக் கொலை செய்யப்பட்டார். 

அதற்குக் காரணமானவர் காந்தி ஜியின் கொலைப் பழியை ஆர்.எஸ்.எஸ். மேல் போட்டார்.

அவர் பெயர் ஜவஹர்லால் நேரு. 


Saturday, September 28, 2013

ஹிந்து சேவை அமைப்புகள் ஒரு பார்வை - 2


- ஞானதேசிகன்


கச்சி மூதூர் அர்ச்சகர் வெல்பேர் டிரஸ்ட்

அன்பர்களே! கடந்த முறை ஹிந்து சேவை அமைப்பில் அமர்சேவா சங்கம் பற்றி பார்த்திருந்தோம்.

இந்து சேவை அமைப்புகளின் பட்டியலில் இந்த முறை ஒரு வித்தியாசமான அமைப்பு பற்றி பார்ப்போம். 

இந்து மதத்தின் தூண்களில் முக்கிமானவை நம் ஆலயங்கள். நமது நாட்டில் பல ஊர்கள், நகரங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பிரதான ஆலயத்தை சுற்றியே அமைந்தன. இந்த அமைப்புகள் சிதைவுற ஆரம்பித்த போது இதன் தாக்கத்தை அனுபவித்தவர்கள் கோயில் பணியாளர்கள். குறிப்பாக ஆலய அர்ச்சகர்கள்,பூசாரிகள்.

குறிப்பாக 1980 களுக்கு பிறகு, பல கிராம ஆலயங்கள் பூஜை இல்லாமல் கைவிடப்பட்டன. கோயில் பணியாளர்களை பற்றிய ஒரு கேலியான எண்ணங்கள், மாற்று மத பிரச்சாரம், நகரங்களுக்கு இடம் பெயர்தல், திராவிட இயக்கங்கள் வைத்த பிரச்சாரங்கள் போன்றவகள் பல குக்கிராம ஆலயங்கள் கைவிடப்பட்டமைக்குக் காரணம் ஆகும். குறிப்பாக, ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் பல ஆலயங்கள் கைவிடப்பட்டன. நித்திய பூஜைகள்,திருவிழாக்கள் போன்றவை இல்லாமல் ஆகின. 

ஆலயங்களை மட்டுமே நம்பி வாழ்ந்தவர்கள் அர்ச்சகர்கள், பூசாரிகள் ஆகியோர். அவர்கள் போதிய ஆதரவின்றி வேறு வேறு தொழில்களை நோக்கிச் செல்ல ஆரம்பித்தனர். இப்படி நலிவடைந்த நிலையில் கோவில்களை நம்பி ஆனால் ஆதரவின்றித் தவிக்கும் அர்ச்சகர்கள் மற்றும் பூசாரிகளுக்கு உதவுவதற்காக கச்சி மூதூர் அர்ச்சகர் வெல்பேர் ட்ரஸ்ட் துவங்கப்பட்டது.

1986ம் ஆண்டு இந்த அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது. ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் வழிகாட்டுதலுடன் இந்த அமைப்பு துவங்கப்பட்டது. அவர் இந்த அமைப்பு எப்படி நடத்தப்பட வேண்டும் என வரையரையை தெரிவித்தார். பக்தர்களிடம் நன்கொடை பெற்றே இந்த அமைப்பின் திட்டங்கள் 
நடத்தப்பட வேண்டும் என்றார். மேலும் இசை,கலை நிகழ்ச்சிகள் போன்றவை மூலம் பணம் வசூலிக்க கூடாது என்றும் கூறியுள்ளார். மாத சம்பளமாக ரூபாய் 4000 மேல் வாங்குவோர்கள, நம் சனாதன தர்மத்தில் நம்பிக்கை உள்ளவர்கள், தம் வாழ்வில் ஒரு முறையேனும் தம் ஒரு மாத சம்பளத்தை  இந்த அமைப்புக்கு தர வேண்டும் என்று கேட்டுள்ளார். 

அமைப்பின் சிறப்புகள்:

சிவாச்சாரியார்கள், பட்டாச்சாரியர்கள், பூசாரிகள் போன்றவர்களை ஆதரிப்பதே இந்த அமைப்பின் நோக்கம்.

முக்கியமாக கிராமப்புற கோயில் அர்ச்சகர்களை ஆதரிப்பதே இதன் நோக்கம். கிராமக் கோயில்களில் “முறை” இல்லாமல் பூஜை செய்பவராக இருக்க வேண்டும். கோயில் 1940க்கு முற்ப்பட்டதாக இருக்க வேண்டும்.அர்ச்சகரின் மாத வருமானம் ரூபாய் 3000 க்கு குறைவானதாக இருக்க வேண்டும்.

இப்படிப்பட்ட அர்ச்சகர்களுக்கு மாத வருமானமாக ரூபாய் 1000 வழங்கப்படும். மேலும் காப்பீட்டுத் திட்டமும் உண்டு.

இப்போது 426 அர்ச்சகர்களுக்கு உதவி செய்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் தினசரிகளில் விளம்பரம் கொடுக்கப்படும். இந்த அமைப்பிற்கு விண்ணப்பம் 
செய்பவர்களுக்கு சிறு தேர்வு வைக்கப்படும். தேர்வில் தேறியவர்களுக்கு அதன் பிறகு மாத உதவித்தொகை வழங்கப்படும்.

நன்கொடை வழங்க வேண்டும் என்று நினைப்பவர்கள்.

onations by Money Order/ Crossed Cheque/ Demand Draft, drawn in favour of 'Kachchi Moodoor Archakas Welfare Trust' may kindly be sent to the Administrative office

KACHCHI MOODOOR ARCHAKAS WELFARE TRUST 
Regd. & Admn.Office: New 16, (Old 10), Second Main Road,Kottur Gardens, 
Chennai 600 085, India
Phone: +91-44-24471936

http://kmawt.org/

காஞ்சிப் பெரியவர் கூறியபடி பக்தர்கள் நன்கொடை அளிக்க பலர் முன்வந்துள்ளனர்.

காஞ்சி பெரியவர் வேதனை கலந்த வேடிக்கையாக இப்படிக் கூறியதாக எனக்கு நினைவு - 'கல்யாண பத்திரிக்கையில் என் பெயர் போட்டவர்கள் யாரும் வரதட்சிணை வாங்க கூடாது என்றேன். உடனே நிருத்திவிட்டார்கள். வரதட்சிணை வாங்குவதை அல்ல.. பெயர் போடுவதை நிருத்திவிட்டார்கள்' என்று. 

அப்படி எதுவும் நடக்காமல் பக்தர்கள் இந்த அமைப்பிற்கு பெரியவரின் வாக்குப் படி நன்கொடை அளித்தால் பல அர்ச்சகர்களின் வாழ்க்கைக்கு இது உதவும்.

Thursday, September 26, 2013

Sunday, September 8, 2013

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்!

அன்பர்கள் நண்ப்ர்கள் அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்!


முழுமுதற் கடவுள் எல்லோருக்கும் எல்லா வளங்களையும் அருள்வாராக!

Sunday, September 1, 2013

நிமித்தங்கள் நம் பூர்வஜென்ம பலனைத் தெரிவிக்கின்றன!



ஜ்யோதிஷ சாஸ்திரத்தில், "ஸம்ஹிதா ஸ்கந்தம்"என்று ஒரு பிரிவு இருக்கிறது என்றேனல்லவா?ஜலம் எங்கே ஒடுகிறது?பூமிக்குள் நதி under-current ஆக எங்கெங்கே போகிறது. உள்ளே ஜலம் இருப்பதற்கு மேலே என்ன என்ன அடையாளம் இருக்கும்?- என்பவைகளைப் போன்ற பல விஷயங்கள் அதில் சொல்லப்பட்டிருக்கின்றன. வாசனைத் திரவியங்கள் செய்யும் விதம், வீடு கட்டும் அளவு, சகுன சாஸ்திரம், நிமித்த சாஸ்திரம் முதலிய எல்லாம் இந்த ஸம்ஹிதையில் சொல்லப்படும்.

சகுனம் வேறு, நிமித்தம் வேறு. நிமித்தம் என்பதுதான் வரப்போவதை ஏதோ ஒரு தினுஸில் அடையாளம் காட்டுவதற்குப் பொதுப் பெயர். அதில் ஒரு வகையே சகுனம். சகுனம் என்பதற்கு 'பக்ஷி'என்பது அர்த்தம். பக்ஷிகளால் ஏற்படும் நிமித்தங்களுக்குத்தான் சகுனம் என்று பெயர். உலகத்தில் ஒன்றுக்கொன்று ஸம்பந்தமில்லாத வஸ்து ஒன்றும் இல்லை. நடக்கும் காரியங்களும் அப்படியே. ஸரியான கணக்குத் தெரிந்தால் எல்லாம் தெரிந்து கொள்ளலாம். உலகத்தில் நடப்பவை எல்லாம் ஒரே ஒருவருடைய ஆக்ஞையால்தான் நடக்கின்றன; ஒரே கணக்காக நடக்கின்றன. அதனால் ஒரு காரியத்தைக் கொண்டு மற்ற எல்லாவற்றையும் கண்டு பிடிக்கலாம். கை ரேகை, ஆரூடம், க்ரஹநிலை முதலிய எல்லாம் ஒன்றுக்கொன்று ஸம்பந்தம் உடையனவாகவே இருக்கின்றன. எல்லாம் நிஜம்தான். இவற்றில் ஒன்றே நிமித்தம். அதில் ஒரு அங்கமே சகுனம்.

ஒரு பக்ஷி வலமிருந்து இடம்போனால் இன்ன பலன்;இன்ன பக்ஷி கத்தினால் இன்ன விளைவு ஏற்படும் என்று சகுன சாஸ்திரம் கூறும்.

'நிமித்தம்'என்பதிலேயே, நாம் 'சகுனம் பார்ப்பது'என்று சொல்வதிலுள்ள மற்ற எல்லாம் வரும். Omen என்று பொதுவாகச் சொல்வது நிமித்தம்தான். (கீதை ஆரம்பத்தில்) " நிமித்தானி பச்யாமி விபரீதானி கேசவ " என்று யுத்தம் ஆரம்பிக்குமுன் அர்ஜுனன் பகவானிடம் சொல்கிறான். 'கெட்ட சகுனங்களைப் பார்க்கிறேன்'என்று நாம் சொல்வதைத்தான், 'விபரீதமான நிமித்தங்களைப் பார்க்கிறேன்'என்கிறான். அவன் நிமித்தம் என்பதுதான் சரி. நாம் சகுனம் என்பதே நல்லது அல்லது கெட்டதற்குச் சூசகமான பொதுப்பெயர் என்று நினைப்பது தப்பு. இந்த சூசகங்களில் பக்ஷிகளால் விளைவது மட்டுமே சகுனம். ஒரு பூனை குறுக்கே போனால் அது நிமித்தம். கருடன் குறுக்கே போனால் அது சகுனம்.

பிற்பாடு பகவானும் அர்ஜுனனிடம் 'நிமித்த'த்தைப் பற்றிச் சொல்கிறார். "நிமித்த மாத்ரம் பவ ஸவ்யஸாசின்" "சத்ருக்களை வதைப்பதாவது, அதனால் பாவம் வருமே!"என்று அழுத அர்ஜுனனிடம், "இந்த யுத்தத்தில் இவர்களை வதைப்பதாக நான் ஏற்கெனவே ஸங்கல்பம் பண்ணியாகிவிட்டது. அதனால் இவர்கள் இப்போதே செத்துப் போனவர்கள்தான். இவர்களைக் கொல்பவன் நான் தான். c வெறும் கருவி மாத்திரமாக இரு"என்று பகவான் சொல்கிறபோது, 'நிமித்த மாத்ரம் பவ'என்கிறார்.

அதனால் நிமித்தம் என்பது அதுவே பலனை உண்டாக்குவதில்லை;இன்னொன்று நிச்சயம் பண்ணிவிட்ட பலனை இது வெளிப்படத் தெரிவிக்கிறது என்றே ஆகிறது. இதே போல, நம்முடைய பூர்வகர்ம பலனைத்தான் நிமித்தங்கள் யாவும் தெரிவிக்கின்றன.

-       -  ஸ்ரீ சங்கரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்