Saturday, August 28, 2010

இந்து மதம் தான் ஜாதிகளை உண்டாக்கியதா? - 1

வாழும் மனிதர்களுக்குள் ஏற்றத் தாழ்வுகள் இருப்பதில்லை. பிறப்பும் இறப்பும் எல்லா ஜீவராசிகளுக்கும் ஒன்றாகவே விதிக்கப்பட்டிருக்கிறது. இயற்கையால் உண்டான படைப்பில் எதுவும் உயர்ந்ததும் இல்லை எதுவும் தாழ்ந்ததும் இல்லை. இவற்றில் உயர்வு தாழ்வு, விருப்பம், வெறுப்பு என்று தோன்றுவது அவரவர் மனக்கண் மாயையே அன்றி வேறில்லை.

ஆனால் பொதுவாக இந்து மத எதிர்ப்பாளர்களாக தங்களைக் காட்டிக்கொள்ளும் நாத்திகர்களும் மத மாற்றுப் பேர்வழிகளும் ஒரு விஷயத்தில் ஒன்றாக ஒத்து ஊதுவார்கள். அதாவது இந்து மதத்தில் தான் ஜாதிகள் உள்ளது என்றும் இந்து மதம் தான் ஜாதிகளை உண்டாக்கி கீழ் ஜாதி மேல் ஜாதி என்ற ஏற்றத்தாழ்வை உருவாக்கியது என்றும் கூறுவர். இதற்கு இவர்கள் உதாரணமாக கூறும் விஷயம் இந்து தர்மத்தில் கூறப்பட்டிருக்கும் ப்ராமணன், க்ஷத்ரியன், வைசியன், சூத்திரன் என்ற வர்ணங்களின் வகைகளைப் பற்றி. இதில் குறிப்பிடப்பட வேண்டியது என்னவென்றால் வர்ணங்கள், ஜாதிகள் என்ற இரண்டிற்கும் வித்தியாசம் என்ன என்பது பற்றி இவர்கள் புரிந்து கொள்வதும் இல்லை. அது பற்றி புரிந்து கொள்ள முயற்சிப்பதும் இல்லை. இந்துக்களை பிரித்தாள்வதற்கும் பிரிவினையை தூண்டி இந்தக்களிடம் உள்ள ஒற்றுமையை நிரந்தரமாக குலைப்பதற்கும் அரைகுறையாக எவற்றையெல்லாம் கூறி குழப்ப முடியுமோ அவற்றைக் கூறி இந்துக்களுக்குள்ளே பகைமையை மட்டுமே வளப்பார்கள்.

இப்படிப்பட்டவர்களை நாம் புரிந்து கொள்ள, வர்ணங்கள் என்றால் என்ன? ஜாதிகள் உண்டானது எப்படி என்பதை பற்றிய ஒரு அலசலைப் பார்ப்போம்.

வர்ணங்களும் ஜாதிகளும் ஒன்றா?

வர்ணங்கள் என்றால் பிரிவுகள் என்று பொருளுண்டு. வகைகள் என்றும் பொருள் கொள்ளலாம். கீதையில் ஸ்ரீ க்ருஷ்ணர் இவ்வாறு கூறுகிறார்.

சாதுர்-வர்ண்யம் மாயா ஸ்ருஷ்டம் குண-கர்மவிபாகச:|

"நான்கு வர்ணங்களான (பிரிவுகளான) ஸ்ருஷ்டியை நானே படைத்தேன். குணங்களையும் செயல்களையும் அடிப்படையாகக் கொண்டே"

தஸ்ய-கர்தராமபி மாம் வித்த்யகர்தார-மவ்யயம்||

"அவைகளை படைத்தவன் நானே எனினும் நான் அழிவற்றவன், செய்கையற்றவன் என்பதை அறிவாயாக."

என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணர். இந்து தர்மத்தில் கடவுளே தான் ஜாதிகளைப் படைத்தான் என்று மக்களை ஏமாற்றி மூளைச் சலவை செய்து வருபவர்கள் பிடித்துக்கொள்ளும் கீதையின் வரிகளும் இவைகளே! அவ்வாறு அவதூறு கூறுபவர்கள் இந்தச் ஸ்லோகத்தின் முதல் வரியின் முதல் பாதியை மட்டும் எடுத்துக்கொண்டு மீதியைச் சொல்லாமல் விட்டு விடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

"நான்கு வகைகளை நான் தான் உண்டாக்கினேன் என்று கூறும் பகவான், அதைத் தொடர்ந்து "குணம் மற்றும் செயல்களின் அடிப்படையில்" என்று கூறுகிறாரே ஒழிய 'பிறப்பின் அடிப்படையில் இந்த வகைகளை உண்டாக்கினேன்' என்று கூறவில்லை. மேலும் இவற்றில் உயர்ந்த வர்ணம் எது தாழ்ந்த வர்ணம் எது என்றும் கூறவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும்.

இங்கே வர்ணங்கள் என்று அழைக்கப்படுவதை க்ளாஸிஃபிகேஷன் (Classification) என்று கருத்தில் கொள்க. அதாவது various types of human society என்றே அர்தம் கொள்ள வேண்டும். இவ்வாறான வகைகள் குணங்களால் அறியப்பட்டு அது இந்த வகையைச் சேர்ந்தது என்று கருதிக் கொள்ளப்படுமே அன்றி பிறப்பால் பிரிக்கப்படுவதில்லை என்பது தெளிவு.

மனிதர்கள் தங்கள் குணம் மற்றும் செயல்களின் காரணமாக வகைப்படுத்தப் படுகிறான். இவ்வாறான வகையை தாமே உண்டாக்கியதாக ஸ்ரீ க்ருஷ்ணர் கூறினாலும் கூட இவை எந்த ஒரு சமூகத்திலும் காலத்தின் போக்கினாலும் சமூக்கக் கூட்டங்களுக்கிடையே ஏற்படும் சார்பு நிலையை சமப்படுத்திக் கொள்ளவும் தாமாகவே உண்டாக்கப்படுபவையே.

உதாரணமாக ஒரு தொழில் நிறுவனத்தில் சீராக தொழில் இயங்க வேண்டுமென்றால் அதில் பல அடுக்குகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. பொது மேலாளர், மேற்பார்வையாளர், தொழிலாளர், கணக்கர் என்று பல்வேறு பிரிவுகள் உண்டாக்கப் படுகிறது. எல்லோருமே தொழிலாளியாக இருந்தால் கணக்கெழுதுவது யார்? எல்லோருமே கணக்கராக விரும்பினால் தொழிலுக்குப் பணம் போடுவது யார்? எல்லோருமே பணம் போட்டு உட்டார்ந்து விட்டால் மற்ற பணிகளை செய்வது யார்? ஆனால் இவை அனைத்துமே ஒரு அடுக்கு முறை உருவாக்கத்தினால் சீராக நடைபெறுகிறது. இது தவிர்க்க முடியாதது.

இந்த அடுக்கு முறைகளை வர்ணங்கள் என்று ஒரு உதாரணத்திற்கு எடுத்துக் கொள்வோம். கார் உதிரிபாகம் தயாரிக்கும் ஒரு தொழிளாலி சார்டர்ட் அக்கவுண்டட் படிப்பை படித்துத் தேரிவிட்டார் என்று கொள்வோம். அதே கம்பெனியில் அவருடைய திறமையின் அடிப்படையில் கணக்கர் பணி தரப்படலாம். ஒரு கணக்கர் மேலாளராகவும் திறமையை வெளிப்படுத்தினால் அவரே தனது திறமையால் பொது மேலாளராக உயரவும் வாய்ப்பிருக்கிறது. ஒரு பொது மேலாளர் செல்வந்தராக இருந்து நிறுவனத்திற்கு பணம் கொடுத்தால் அவர் பங்குதாரராக அதாவது முதலாளியாகவும் முடியும். ஒரு தொழிலாளி படித்தாலும் தொழிலாளியாகத்தான் இருக்க வேண்டும் என்று நிர்பந்தம் எந்த நிறுவனத்திலும் இல்லை. அவ்வாறு நிர்பந்திக்கப்பட்டால் அந்த நிறுவனத்திலிருக்கும் மனிதர்களின் கோளாறே அன்றி அது நிறுவனத்தின் கோளாறாக அறிய முடியாது. நிறுவனத்தின் கொள்கையிலும் தொழிலாளி கணக்கராகக் கூடாது என்று எழுதப்பட்டிருக்காது. ஆக எப்படி ஒரு தொழிலாளி தனது திறமையால் கணக்கராக அங்கீகரிக்கப்படுவாரோ அதுபோலவே ஒருவர் தாம் மேற்கொள்ளும் வாழ்க்கை முறையால் அந்தந்த வர்ணங்களாக வாழும் வகையினராக அறியப்படுகிறார் அன்றி பிறப்பால் இல்லை.

ஆக இந்து தர்மத்தின் ஜாதி ஏற்றத்தாழ்வு திட்டமிட்டு உருவாக்கப்பட்டதே என்று நிரூபிக்க நினைப்பவர்கள் பகவத் கீதையையே ஆதாரமாகக் கொண்டாலும் பிறப்பால் இவன் இன்ன வகையைச் சேர்ந்தவன் என்று எங்குமே கூறப்படவில்லை. அதாவது பிறப்பின் அடிப்படையில் மனிதன் பிரிக்கப்படவில்லை என்பது தெளிவாகிறது.

சரி அப்படியெனில் ப்ராமணன், க்ஷத்ரியன், வைசியன், சூத்திரன், என்ற பிரிவுகள் எதைக் குறிக்கின்றன?

ப்ரம்மத்தை அறிந்தவன் அல்லது அறியும் முயற்சியில் அதற்கான சாதகங்களைச் செய்து வாழ்க்கை நடத்துபவன் ப்ராமணன் என்ற பிரிவாக அழைக்கப்பட்டனர். தர்மங்களை அனுசரித்து மக்களை காக்கும் பொறுப்பை ஏற்று சமூகத்தை தலைமை தாங்கி நடத்திச் செல்பவர்கள் க்ஷத்ரியன் என்ற பிரிவாக அழைக்கப்பட்டனர். சமூகத்திற்கு பயன்படும் விதமாக ஏதாவது தொழிலைச் செய்து அதன் மூலம் தானும் பலன் பெற்று சமூகத்திற்கும் நன்மை அளிக்கும் விதமாக வாழ்க்கை நடத்துபவர்கள் வைசியர்கள் என்றும் அழைக்கப்பட்டனர். இம்மூன்று பிரிவினருக்கும் உதவும் வகையிலான பணிகளை செய்து அதனால் தானும் பலன் பெற்று சமூகத்திற்கும் பயனாக வாழும் வகையினர் சூத்திரர்கள் என்று அழைக்கப்பட்டனர். இவ்வாறு மனிதர்கள் தங்கள் குணத்தின் அடிப்படையில் எந்த மாதிரியான வாழ்வின் மீது உணர்வுப்பூர்வமாக லயிக்கிறார்களோ அத்தகைய வாழ்வை மேற்கொள்ளவார்கள். அவ்வாறு மேற்கொள்ளும் வாழ்வின் அடிப்படையிலேயே அவர்கள் எத்தகைய வகையின் மனிதர்கள் என்று பிரிக்கப்பட்டார்கள். பிறப்பால் அல்ல.
உதாரணமாக இறைசிந்தனையிலும் ப்ரம்மத்தை அறிவதற்கான வாழ்வை மேற்கொள்ளும் ப்ராமண வகையைச் சேர்ந்த தம்பதியருக்குப் பிறந்த ஒரு ஆண் மிகுந்த போர்குணம் கொண்டவனாகவும் மக்களை வழிநடத்தும் தலைமை குணம் கொண்டவனாகவும் தர்மத்தை காக்கும் பொருட்டு போரிடத் துணிந்தவனாகவும் இருப்பானேயானால் அவன் க்ஷத்ரியனாக கருதப்படுவான். அவன் ப்ராமண வகையிலான வாழ்வைத் துறந்து க்ஷத்ரியர்களின் தர்மத்தை கடைபிடித்து அவர்களின் வாழும் வழியைப் பின்பற்றலாம். பிறப்பால் அவனது வகை நிர்பந்திக்கப்படுவதில்லை. ப்ராமண தந்தைக்குப் பிறந்ததாலேயே ராவணன் ப்ராமண வாழ்க்கையை மேற்கொள்ள வில்லை. மக்களை தலைமை தாங்கி நடத்திச் செல்லும், நாடாளும், போர்புரியும் க்ஷத்ரியனாக வாழ்ந்தான். பழிவாங்கும் குணத்தாலும் கண்ணை மறைத்த கோபத்தாலும் சீதையை கடத்திச் சென்றதைத் தவிர்த்துப் பார்த்தால் ராவணன் தனது குடிமக்களை துன்புறுத்தாத தர்மங்களை அனுசரித்து ஆட்சி புரிந்த க்ஷத்ரியனாக அறியப்படுகிறான்.

ஒரு ப்ராமணருக்குப் பிறந்த ஆண்மகனுக்கு தங்கத்தை உருக்கி நகை செய்யும் கலையில் அதீத விருப்பம் கொண்டு அவன் நகை வியாபாரி ஆக நினைத்தால் வியாபார குணம் கொண்ட அவன் வைசியன் என்று அழைக்கப்படுவான். பிறப்பால் அவனது வகை நிர்பந்திக்கப்படுவதில்லை.

ஒரு ப்ராமணருக்கு பிறந்த ஆண்மகனுக்கு வேதங்களைக் கற்கவும் புரிந்து கொள்ளவும் ஆர்வம் இல்லை. ஆனால் சமையல் கலையில் ஆர்வம் மிகுந்து அதையே தொழிலாகக் கொண்டால் அவன் சூத்திரன் என்று கருதப்படுவான். சமையலும் தொழில் தானே, அவன் வைசியன் என்றழைக்கப் படலாமே என்று தோன்றலாம். நாம் ப்ரொடக்ஷன் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் சர்வீஸ் இண்டஸ்ட்ரீஸ் என்று பிரித்துக் கொள்கிறோம் அல்லவா. ப்ரொடக்ஷன் இண்டஸ்ட்ரீஸை சேர்ந்தவர்கள் வைசியர்கள் என்றும் சர்வீஸ் இண்டஸ்ட்ரீஸை சேர்ந்தவர்கள் சூத்திரர்கள் என்றழைப்பட்டார்கள் என்று கொள்ளலாம். பிறப்பால் அவனது வகை நிர்பந்திக்கப்படுவதில்லை.

இவ்வாறு குணத்தால் வகைப்படுத்தப்பட்டவர்களைப் பற்றிய பல உதாரணங்கள் புராணக் கதைகளில் உள்ளன. அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.

விஸ்வாமித்திரர் கேள்விப்பட்டிருப்போம். அவர் பிறப்பால் க்ஷத்ரியன். நாடாண்ட அரசன். வஷிஷ்டரிடம் இருந்த காமதேனு பசுவை தன் நாட்டு மக்களுக்காக யாசகம்கேட்டு அதை அவர் தர மறுத்தார் என்ற காரணத்தால் தானும் அந்தணர்களைப் போல தவம் இருந்து அந்தத் தவ வலிமையால் வஷிஷ்டரை வெல்வேன், காமதேனு பசுவொன்றை பெறுவேன் என்று சபதம் மேற்கொண்டு நாடு துறந்து தவமிருந்து முனிவரானார். ப்ராமணர்களுக்கு உபணயனத்தின் போது ப்ரம்மோபதேசம் என்று போதிக்கப்படும் காயத்ரீ மந்திரத்தை உலகிற்கு உபதேசித்தார். தவ வலிமையால் இறைவனது அருளைப் பெற்று வஷிஷ்டர் வாயாலேயே ப்ரம்மரிஷி என்ற பட்டத்தையும் பெற்றார் என்பது நாம் அறிந்ததே. பிறப்பால் க்ஷத்ரியர் ஆனாலும் தான் மேற்கொண்ட தவ வாழ்க்கையால் ப்ராமணராகவே ரிஷிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டவர். ஆக பிறப்பால் இவரது வாழ்க்கை இத்தகையதாகத்தான் இருக்கவேண்டும் என்பது நிர்பந்திக்கப் படவில்லை.

மற்றொரு புராணக் கதை, ஒரு பெரிய மகரிஷி இருந்தார். அவருக்கு பல சீடர்கள் இருந்தனர். ஒரு நாள் ஒரு சிறுவன் அவரிடம் வந்து தன்னையும் மாணவனாக மகரிஷி சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டான். புதிதாக வந்த சிறுவனைப் பற்றி தெரிந்து கொள்வதற்காக அவனுடைய தந்தையின் பெயர் என்னவென்று விசாரித்தார் மகரிஷி. பையனோ 'தெரியாது' என்றான்.

சரி தாயார் பெயர் என்ன என்று வினவினார் மகரிஷி. "ஜாபாலிகை" என்றான். உன் தாயாரிடம் சென்று உன் தந்தையின் பெயரைக் கேட்டு அறிந்து வா என்றார் மகரிஷி.

அச்சிறுவனும் அதே போல தன் தாயாரான ஜாபாலிகையிடம் சென்று தனது 'தந்தை யார்?' என்ன குலம்? என்று விசாரித்தான். ஜாபாலிகை திகைப்படைந்தாள். பிறகு அவள் கூறினாள் 'நான் ஓரிடத்தில் பணிப்பெண்ணாக வேலை செய்து கொண்டிருந்தேன். இந்தச் சமயத்தில் எனக்குப் பல ஆண்களுடன் தொடர்பு ஏற்பட்டது. அவர்கள் பல்வேறு குலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள். அவர்களில் நீ யாருடைய மகனாக இருக்ககூடும் என்பது எனக்குத் தெரியாது' என்றாள். சற்று வினோதமாக தோன்றினாலும் சிறுவன் இதை கேட்டுக்கொண்டான்.

ரிஷியிடம் சென்ற சிறுவன் ஜாபாலிகை கூறியவற்றை அப்படியே தெரிவித்தான். 'பல ஆண்களில் நான் யாருக்குப் பிறந்தவன் என்பது என் தாயாருக்கே தெரியாது' என்று சிறுவன் கூறியதைக் கேட்டு மாணவர்கள் சிரித்தனர். ஆனால் அந்த ரிஷி "எவ்வளவு பயங்கரமான உண்மையை சிறிதும் அச்சமில்லாமல் பேசியிருக்கிறாய்? உண்மையைப் பேசுவது; உண்மையைத் தவிர வேறு எதையுமே பேசாமல் இருப்பது இவை ஒரு ப்ராமணனுக்கு இருக்க வேண்டிய முக்கியமான குணங்கள். இவைகள் உன்னிடம் இயல்பாகவே குடி கொண்டிருக்கின்றன. ஆகையால் நீ ஒரு உண்மையான ப்ராமணன். உன்னை என் சிஷ்யனாக ஏற்றுக்கொள்கிறேன்" என்று கூறி ஏற்றுக்கொண்டார். ஆக "சத்தியத்தைத் தயங்காமல் பேசிய அந்தச் சிறுவன் சத்தியகாம ஜாபாலி என்ற பெயருடன் பிற்காலத்தில் மிகச்சிறந்த அந்தணனாக அங்கீகரிக்கப்பட்டார்.

இவ்வாறு புராணத்திலும், வேதங்களிலும், கீதையிலும் பிறப்பு எதுவாகிலும் ஒருவரது குணமும் செயல்களும் அவர்களது வகையை நிர்ணயிக்கிறது என்பது தெளிவாகிறது.
சரி இங்கே ஜாதி எங்கிருந்து வந்தது?

தொடர்ச்சி!


12 comments:

கோவி.கண்ணன் said...

ம் பிறப்பின் அடிப்படியில் பார்பனர் எப்படி தங்களை பிராமணர் என்று அறிவித்துக் கொள்கின்றனர் ? பார்பனர்கள் அனைவரும் பிராமணர்களா ?

hayyram said...

//பார்பனர்கள் அனைவரும் பிராமணர்களா ?// இல்லை கோவியாரே! அதுபற்றி விளக்கமாக அடுத்த பதிவில்..அதிருக்கட்டும்.. ப்ராமணர் என்ற சொல் இருக்கும் போது பார்ப்பனர் என்ற சொல்லாடல் எங்கிருந்து எப்போது உண்டானது என்று கூற முடியுமா?
ப்ராமணர்களை கொச்சைப்படுத்தி விளிப்பதற்கு பார்பணர் என்கிறீர்களா? அறிந்து கொள்ள விரும்புகிறேன்.விளக்குவீர்களா?

sundar said...

The varnashrama concept is a much misunderstood concept.True Bhagawan says caste was created by Him based on Gunas.The inference is that the lineage would continue based on Gunas as is now reinforced by Genes theory in science.Also Caste is created by the intermingling of varnas in marriage.But Varna never made only Brahmin superior as is generally believed.They were prescribed more rigours as they have to maintain their austerity as a penance

hayyram said...

சுந்தர், //The varnashrama concept is a much misunderstood concept// தவறாக புரிந்து கொள்ளப்படாவிட்டாலும் தவறாக மாற்றிச் சொல்லி மூளை சலவை செய்விக்க நிறைய பேர் இருக்கிறார்கள். அவற்றை ஆராயாமலே நம்பவும் ஆட்டு மந்தைக் கூட்டங்கள் இருக்கின்றன.

அருள் said...

"பார்ப்பனர்களுக்கும் ஜாதிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை" என்று சொல்லாமல் விட்டதற்கு மிக்க நன்றி.

அப்படியே மனுஸ்ம்ரிதி எந்த மதம் சார்ந்த சட்டநூல் என்று விளக்கினால் புண்ணியமாக இருக்கும்.

Thiruvaazhmaarban said...

paarpanan ennum soll izhi solla??? kindalukkagavaa??? ivvalavu ezhuthum thangalukku ithan vidai theriyavillai enbathu ascharyamaaga ullathu. "Paarpana Chittargal" entru aandaal thannudaiya paadalil koorapaduvathu therigirathu, melum pala sanga ilakkiyangalilum ivai kaanapadugirathu.

Anonymous said...

the word "parpana" is the tamil equivalent of north indian word "Brahmin".
this is mentioned in tamil sangam age texts. it mentions about " PAARPANA SHEAREE" which means the place where brahmins live..
the aryan dravidian war is cooroborated by vedas... not by english men..

Anonymous said...

YES, brahmanical religion create caste.. aryan people wrote Ramayana to humiliate tamils bcz the villain of that story is a dravidian.
The mythological character narakasuran was identified as a dravidian(native) and killing of this dravidian has been celebrated as diwali.

Dr.Anburaj said...

Very Good.Please send your articles to my e-mail.jaihind.anburaj@gmail.com

Dr.Anburaj said...

Jaheer Hussain ஐயா வணக்கம். விஞ்ஞானம் நபி என்று யாரையும் வைத்துக் கொண்டதில்லை.வேதம் என்று என்ற புத்தகததையும் ஏற்றுக் கொண்டதில்லை. நபா் சுதந்திரம் புத்தகங்களில் இருந்து சுதந்திரம்.எனவே எந்த கருத்தையும் ஆய்ந்து பாா்க்கஅனுமதி. இந்நிலை சமயத்துறையில் வரவேண்டும். எல்லாரும் ஆன்மிகவாதிகள். அனைத்து புத்தகங்களும் அனைவருக்கும் பொது. நல்லதை சாியானதை ஏற்றுக் கொள்ள வேண்டும். கருத்து வேறுபாடுகளுக்கு பதிய கருத்துக்களை உருவாக்கி முன்னேற வேண்டும்.கீதையை படித்து முடித்துவிட்டு சுவாமி விவேகானந்தாின் ஞானதீபம்என்ற புத்தகங்களைப் படியுங்கள். மண் நீா் உரம் சுாியன் மற்றம் சத்துக்களை தரையில் இருந்து பெற்ற அனைத்து தாவரங்களும் தங்களின் வாழ்வியல் தத்துவத்தின்படி தென்னையாகவே பனையாகவே ஆப்பிள் ஆகவோ ஆரஞ்சு ஆகவோ ........ வளா்கின்றன. அதுபோல் மனிதனும் ஏற்கனவே உள்ளதைப்பெற்று புதிய சிந்தனை புதிய கருத்தக்களை உருவாக்க வேண்டும். இறைவன் எந்த மதத்தையம் படைக்கவில்லை. ஆனமிகத்திற்கு இந்து கிறிஸ்தவன் முஸ்லீம் என்ற வேறுபாடு தேவையில்லை. அனைத்து நூல்களும் அனைவருக்கும் பொது. விஞ்ஞானம் அப்படித்தானே செயல்படுகின்றது. இயற்பியல்படித்தவன் வேதியியல்படித்தவனை திட்டுவதில்லையே ?

Anonymous said...

கேவலங்கெட்ட நாயே...பகுத்தறிவு என்றால் என்ன என்று தெரியுமா உனக்கு? ஈனப் பார்ப்பான நாயே.அடுத்தவரிடம் பிச்சையெடுத்துத் தின்னும் பார்ப்பான நாய், பகுத்தறிவு எனும் பெயரில், மதம் பரப்புகிறது. தூ..வெக்கங்கெட்ட நாயே...முடிந்தால், மதம் பரப்புகிறேன் என்றூ சொல்லி,இதனைச் செய். பகுத்தறிவு என்று முலாம் போசாதே.

Mayur Siva said...

You have comfortably avoided the caste of Ravanan who was also Brahmin and ordained devotee of Lord Shiva. In the South India most of the people worshipped Shiva so the Northern people to downgrade portraied Ravanan as Rakshasan