மதமாற்றம் என்பது பண்பாடு நாக்ரீகம், மதம், சமய உணர்வுள்ள மக்கள் மீது தொடுக்கப்படும் வன்முறை. பிற மதத்தினரின் கலாச்சாரத்தை அழிக்க எவருக்கும் உரிமையில்லை.
கிறிஸ்துவமதத்திற்கு மாறிய ஒவ்வொருவரும் சரி செய்ய இயலாத அளவுக்கு தன் கலாச்சாரத்திலிருந்தும், குடும்பத்திலிருந்தும், சமுதாயத்திலிருந்தும் தொலைவாகிப் போவதால் கடும் துன்பத்திற்குள்ளாகிறார்கள்.
மதமாற்றத்தால் ஒருவன் அவமானம், தனிமை, ஆழ்ந்த மனப்போராட்டம் இவற்றால் அலைக்கழிக்கப்பட்டு விகாரப்படுகிறான். இதனால் மதம் மாறியவன் தான் இழந்த சுய மரியாதையை மீண்டும் பெற மாறிய மதத்தில் அதிக ஈடுபாடு கொண்டவனாகிறான்.
பழம்பெரும் கலாச்சாரங்களைக்கூட மதமாற்றம் அடியோடு அழித்திருப்பதை சரித்திரங்களைப் புரட்டினால் தெரிந்து கொள்ளலாம்.
அப்பாவி மக்கள் மீது தனது மத நம்பிக்கையைத் திணிப்பதற்காக செய்யப்படும் மத மாற்றம் ஒரு வகை பயங்கரவாதம். இந்த பயங்கரவாதம் ஹிந்துக்கள் மனதில் தங்கள் மதத்தைப் பின்பற்றி வாழ முடியுமா என்ற பயத்தை உருவாக்கிவிட்டது.
திருப்பதி திருமலையில் சர்ச் கட்டுவதற்கு நிலம் பெற கிறிஸ்தவ மிஷனரிகள் திட்டமிட்டார்கள். கடும் எதிர்ப்பு தோன்றவே அதைக் கைவிட்டார்கள். சிலர் திருப்பதி வரிசையில் நின்றவர்களிடம் மதப்பிரச்சார பிரசுரங்களை விநியோகித்தனர். அதில் 'உலக ரட்சகர் ஒருவரே' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த உலக ரட்சகர் எண்ணமே மிகவும் ஆபத்தானது.
ஒருவர் மீன் தொட்டியிலிருந்து வண்ண மீன்களை எடுத்து வெளியே போட்டுக் கொண்டிருந்தாராம். வீட்டுக்காரர் வந்து என்ன செய்கிறாய் என்று கேட்ட போது, 'நான் மீன்களை நீரில் மூழ்காமல் காப்பாற்றுகிறேன்' என்றாராம். இது தான் மிஷினரி பிரச்சாரம். புரிந்து கொள்ளுங்கள்.
- சுவாமி தயானந்த சரஸ்வதி
.