Sunday, February 17, 2013

டில்லி கற்பழிப்பும் கும்பமேளாக் கோடிகளும்!


எழுத்து: பால கௌதமன்


காதலர் தினம்(பிப்ரவரி 14, 2013)! விதவிதமான கொண்டாட்டங்கள்!சில நகரங்களில் பூங்காக்கள்(park)இன்று மூடப்பட்டுள்ளது! இதெல்லாம் ஒரு புறம் இருக்க, இன்று நூறு கோடியின் எழுச்சி (one billion rising) என்று ஈவ் என்ஸ்லெர் என்ற அமெரிக்க பெண்மணியின் அழைப்பை ஏற்று, பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் சம நீதி கோரி உலகம் முழுவதும் நூறு கோடி பெண்கள் 202 நாடுகளில் வீதிக்கு வரப்போகிறார்களாம்! இந்தப் பெண்மணியை இந்த அறிவிப்பை செய்யத் தூண்டியது என்ன?

பலவந்தத்தின் மூலம், ஒத்துழைப்பில்லாமல் ஒரு பெண் கற்பழிக்கப்பட்டால், பெரும்பாலும் அந்தப் பெண் கர்பமாவதில்லைஎன்று அமெரிக்க தேர்தல் பிரச்சாரத்தில் குடியரசுக் கட்சி வேட்பாளர் திரு. டாட் அக்கின் அவர்கள் பொதுக்கூட்டத்தில் பேசியதே!

இதைத் தொடர்ந்து, பெண் விடுதலை, சம நீதி என்ற பெயரில் உலகம் முழுவதும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும், சில செய்தி நிறுவனங்களும் இந்த நூறு கோடியின் எழுச்சி (one billion rising) என்ற ஆட்டம்,பாட்டம், கொண்டாட்டம் கலந்த நூதனப் போராட்டத்தை முன்நின்று நடத்துகின்றன. நம் நாட்டில் இந்தப் போராட்டத்தில் முன்நிறுத்தப்படுவது டில்லியில் டிசம்பர் 16, 2012 அன்று ஜோதி சிங் என்ற பெண் கொடூரமாக கற்பழிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சோக நிகழ்வு!

டில்லி உலகின் கற்பழிப்புக்களின் தலை நகரம்! இந்தியாவின் பண்பாடு பெண் அடிமைத்தனம் நிறைந்தது,அதுவே கற்பழிப்புக்களுக்குக் காரணம் என்றுசந்தில் சிந்து பாடினர்சிலர்! இந்த நூறு கோடியின் எழுச்சி (one billion rising) சுதந்திர யுத்தம் என்றும் சிலர் முழங்கினர்! இது உலகப் பெண்களின் முழக்கம் என்று சிலர் பெருமிதம் கொண்டனர். இந்த முழக்கம் இந்தியாவை எப்படி பாதித்தது தெரியுமா?


டில்லி கற்பழிப்பு சம்பவம் நடந்தவுடன் 29 டிசம்பர் 2012 அன்று அமெரிக்க தூதரகமும், .நா பொதுச் செயலர் திரு.பான் கீ மூன் அவர்களும், கண்டனச் செய்தி வெளியிட்டனர். கற்பழிப்பை கண்டித்து பாரிஸ் நகரத்திலுள்ள இந்தியத் தூதரம் வரை பேரணி நடத்தி மனுவும் கொடுக்கப்பட்டது. உலகம் முழுவதும், ஏதோ இந்தியா ஒரு காமாந்தக நாடு என்பது போன்ற ஒரு தோற்றத்தை இந்த மீடியாக்களும், போராட்ட அமைப்புக்களும் ஏற்படுத்தின.

சரி அது போகட்டும்! பிப்ரவரி 10,2013 அன்று அலஹாபாத்தில் சுமார் 3 கோடி மக்கள் கும்பமேளாக் கொண்டாட்டத்திற்காக கூடினர். ஒரே நாளில், ஒரு ஆற்றுப்படுகையில் இத்தனை பேர்! பாதுகாப்பிற்கு வெறும்12,000 போலீசார்! அதாவது 2,500நபருக்கு ஒரு போலீசார்! நம் மந்திரிகளோ இத்தாலிய சூப்பர் மந்திரியோ வந்தாலே ஒரு நபருக்கு எவ்வளவு போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்படுவர்?

இந்த கும்பமேளா நாளில் ஒரு வன்முறையோ, பெண்கள் மீது தாக்குதலோ, சாதாரணமாக ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டங்களில் நடக்கும் சில்மிஷங்களோ காணப்படவில்லை!10,000 நபர்கள் நடந்து செல்லும் சென்னை டி.நகர் ரங்கநாதன் தெருவில் சாதாரணமாக நடக்கும் உரசல்கள் கூட இங்கு காணப்படவில்லை. இந்த நிகழ்வு எந்த ஊடகத்தினராலும், சமுதாய சிந்தனையாளர்களாலும் கண்டுகொள்ளப்படவில்லை. கற்பழிப்புத் தலை நகரம் என்று முழங்கிய வாய்கள், இந்த கட்டுக்கோப்பான, தனி நபர் ஒழுக்கத்தை பிரதிபலிக்கும் நிகழ்வை மறைப்பது ஏன்?

பல்லாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஹிந்துப் பண்பாட்டை, நம் நவீன சிந்தனையாளர்கள் பார்வையில்பிற்போக்கு - ஆண் ஆதிக்கவர்க்கீய முறையை பின்பற்றும் சமுதாயத்தில், போலீசார் துணையின்றிகோழை பெண் அடிமைகள்பாதுகாப்புடன் வலம் வர முடிகிறது. ஆனால், அடிமைத்தளையை அறுத்தெரிந்து தெள்ளிய அறிவு முதிர்ச்சியும், உலகாதய சிந்தனையும் கொண்ட பெண்ணால் ராணுவமும், காவல் துறையும் வலம்வரும் தலைநகர் டில்லியில் பாதுகாப்பாக வலம்வர முடியவில்லையே.ஏன்?

இப்படி ஒரு விவாதம் நடக்குமா என்று எல்லா தொலைக்காட்சி சேனல்களையும் துருவித் தேடினேன்!தேடியதுதான் மிச்சம்.காதலிக்க இடமில்லை அதனால் பொது இடத்தில் கட்டிப் புரளுவோம் என்று புதிய தலைமுறை டி.வி யில் முழங்குகிறார் ஒரு பெண்ணிய முற்போக்கு வா(வியா)தி.ஆங்கில சேனல்களில்,உடையில்லாமல் வலம் வருவது எங்கள் தனிப்பட்ட உரிமை என்று ஒரு பெண்! இப்படி பல உரிமைக்குரல்கள்!எங்குமே ஒரு பெரும் கூட்டத்தில் கூட பெண் பாதுகாப்பாக உள்ளாள் எங்கள் நாட்டிலே என்ற முழக்கம் இல்லை.

கும்பமேளாவில் கலந்துகொண்ட இந்தியர்கள் தானே டில்லியிலும், புத்தாண்டுக் கொண்டாட்டத்திலும் ஆடுகின்றனர்? மனநிலை எப்படி வேலை செய்கிறது பார்த்தீர்களா?

பக்தியுடன் சமுதாயம் பாரதீயக் கண்ணோட்டத்தில் ஒருவன் சிந்திக்கும் போது சகோதரியாகவும், தாயாகவும் காட்சி தரும் பெண், வர்த்தகமயமாக்கல், மேற்கத்திய சிந்தனைகள் புகும்போது போகப் பொருளாகக் காட்சி தருகிறாள். இது தானே உண்மை?

பல நூற்றாண்டுகளாக,ஆற்றங்கரையிலும், குளத்தங்கரையிலும் ஆண்களும் பெண்களும் சேர்ந்து குளிக்கும் கிராமங்கள் பல உள்ளன. அங்கு யாரும் பெண்களை காட்சிப் பொருளாகப் பார்ப்பதில்லை. சாதாரணமாக பேசிக் கொள்கிறார்கள். ஆனால் நாகரீகம் என்ற பெயரில் உயர் படிப்புப் படித்துவிட்டு, ஜன்னல் ஜாக்கெட், தொப்புளில் கம்மல் மற்றும் பல அலங்காரங்களுடன் பவனி வரும் பெண்கள், படித்த, நாகரீக ஆண்களால் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள்.

நிலை இப்படியிருக்க, காமாந்தகர்களாக மக்களை மாற்றும் மேற்கத்திய நாகரீகத்தை அடிப்படை உரிமை என்ற பெயரில் ஆதரித்துவிட்டு, நன்நெறிகளை போதித்து பெண்களை பாதுகாப்புடனும், மரியாதையுடனும் நடத்தும் ஆன்மீகத்தை பெண் அடிமைத்தனம் என்று தூற்றும் அற்பர்களின் நோக்கம் தான் என்ன?

- பால கௌதமன்  

Sunday, February 10, 2013

மதச்சார்பற்ற நாடாக மாறிய துபாய்!



'துபாய் எப்போது மதச்சார்பற்ற நாடாக அறிவிக்கப்பட்டது?' என்று என் நண்பனொருவன் கேள்வி கேட்க ஒன்றும் புரியாமல் பல செய்தி சேனல்களையும் நாளிதழ்களையும் இணைய ஊடகங்களையும் துழாவித் தேடினாலும் அப்படி ஒரு சேதி கிடைக்கவில்லை. மீண்டும் அதே நண்பனின் சட்டையைப் பிடித்து 'என்னைப் பாத்து ஏண்டா அந்தக் கேள்வி கேட்ட?' என்றால் இல்லை கமல் துபாய்க்குப் போவதாகச் சொன்னார்.  அதான் கேட்டேன் என்றான்.
  
விஷயம் என்னவென்றால் விஸ்வரூப பட விவகாரம் விஸ்வரூபம் எடுத்த போது 'நான் மதச்சார்பற்ற நாட்டைத் தேடிப் போக வேண்டியிருக்கும்' என்று வீர வசனம் பேசிய அதே கமல் வாரம் இருமுறை பத்திரிக்கை ஒன்றில் 'வெளிநாட்டிற்கு போய் விடுவேன் என்று கூறினீர்களே? என்று கேட்டால் 'அப்போது கூட துபாய்க்குப் போய்விடுவேன் என்று தானே சொன்னேன்' என்று கூறியிருக்கிறார். முஸ்லீம் பாய்மார்களிடம் குனிந்து விழுந்து கால்களைக் கழுவாத குறையாக இன்னும் என்னென்ன சொல்லியிருப்பாரென்று யாருக்குத் தெரியும். மதச்சார்பற்ற நாட்டைத் தேடுவேன் என்று அறிக்கை விட்டவர் முஸ்லீம்களைத் தாஜா செய்ய வேண்டி 'துபாய்க்குப் போவேன்' என்றும் மாற்றிப் பேசுகிறார்.


இப்படியெல்லாம் முஸ்லீம்களிடம் கொஞ்சிக் கூத்தாடி 'சகோதரர்கள்' 'பாய் பாய்' என்றெல்லாம் பேசும் இவர் ஹிந்துக்கள் விஷயத்தில் எப்படி நடந்து கொண்டார் என்பதையும் பார்க்க வேண்டும்.

கமல ஹாசன் ஹிந்துக் கடவுளரை கேலி செய்யும் வசனங்களை இந்தப் படத்திலும் வைத்திருக்கிறார். இவர் தனது அதிமேதாவித்தனத்தை வெளிப்படுத்தி அபத்தவானாக எப்போதும் காட்சிப்படுவார். அத்தகைய வசனங்கள் இதிலும் உண்டு. உதாரணத்திற்கு ஒன்று:

FBI விசாரணையில் கதாநாயகி:

அதிகாரி: யார் உங்க கடவுள்?
கதாநாயகி: நான் ஹிந்து, என் கடவுளுக்கு நாலு கைகள் இருக்கும்
அதிகாரி: அப்புறம் எப்படி சிலுவையில் அறைவீர்கள்?
கதாநாயகி: நாங்க சிலுவையில் அறைய மாட்டோம், கடலில் தூக்கிப் போட்டுவிடுவோம்.

அதாவது விநாயகர் சிலைகளை கடலில் கரைப்பதை இவர் கிண்டலடிக்கிறாராமாம். ஆனால் இதே க மல ஹாசன் இல்லாத ஒரு புராணக்கதையை ஜோடித்து ஹிந்துக் கடவுளான பெருமாளை கடலில் தூக்கிப் போடுவது போல படம் எடுப்பாராம். அதை நாம் ஒத்துக் கொள்ள வேண்டுமாம். காரணம் அவர் அதிமேதாவி. ஆனால் இந்த அதிமேதாவியின் பிதற்றல்களையெல்லாம் ஹிந்துக்கள் தானே பொறுத்துக் கொண்டிருப்பார்கள். முஸ்லீம் பாய்மார்களிடம் பப்பு வேகுமா?

கமல ஹாசன் தனது படங்களில் ஜாதி அல்லது மதம் சார்ந்த கதாபாத்திரத்தில் இருப்பார், அல்லது ஜாதி மதங்கள் சார்ந்த கதாபாத்திரங்கள் தன்னைச் சுற்றி இருக்குமாறு வைத்துக் கொண்டு அவற்றை விமர்சிக்கும் கதாபாத்திரமாக அதற்கு வெளியே இருப்பார். பஞ்சதந்திரம் படத்தில் அவரது ஜாதி சொல்லப்படாது ஆனால் அவரைச் சுற்றி ஐயர், நாயர், ரெட்டி என்று பல ஜாதிக்கள் இருக்கும். அந்தப்படத்திலும் ஐயர் யூகி சேது கையில் 'லெக் பீஸை' தூக்கிப் பிடித்தப்படி பேசுவதாக வலிய காட்சிப்படுத்துவார். தசாவதாரம் படத்திலும் அவர் தன்னை 'நாயக்கர்' என்று கூறிக்கொண்டு வசதியாக ராமசாமி நாயக்கரை நினைவுபடுத்திக் கொண்டு ஹிந்துக் கடவுளரை அவமதித்தும் கிண்டலடித்தும் பேசி நடித்திருப்பார்.

தனக்கு அரசியல் தெரியாது வராது என்று சொல்லிக் கொண்டே ஜாதி மற்றும் அரசியல் வைத்து வியாபாரம் செய்யும் ஒரு சராசரி கீழ்நிலை வியாபாரியாகவே இவர் இருக்கிறார். அதற்கு மேல்பட்ட சமூக மரியாதையை பெறுவதற்கு க மல ஹாசன் தகுதியுடையவர் அல்ல என்றே தோன்றுகிறது. அவருடைய திறமைகள் என்று பேசினால் அதெல்லாம் அவரது தொழில் சார்ந்ததேயன்றி சமூகத்திற்கு அதனால் சல்லிக்காசுக்கு பிரயோஜனம் இருக்கவில்லை என்பதே உண்மை.

நான் பகுத்தறிவு வாதி என்று சொல்வதில் பெருமை கொள்ளும் க மல ஹாசன் அதே பகுத்தறிவு மனத் தின்மத்தை முஸ்லீம்களிடம் காட்ட முடியாமல் தோற்றுப் போனதை 'மன்மதன் அம்பு' படத்தின் ஆண்டாளைப் பற்றிய காமப்பாடல் சர்ச்சையின் போது அவர் வெளியிட்ட அறிக்கை காட்டுகிறது.

'இதுவே எனது படமாக இருந்திருந்தால் நிஜ ஆன்மீக வாதிகளை புண்படுத்தாது என்ற நம்பிக்கையில் சென்சார் சான்றிதழ் சகிதம் வெளியிட்டிருப்பேன்' - கமல்

இப்போது சில நிமிடங்கள் எடுத்துக் கொண்டு மீண்டும் மேலே இருக்கும் கமலஹாசனின் வீராப்பு வசனத்தை மீண்டும் ஒருமுறை படித்துப் பாருங்கள். என்ன புரிந்ததா...? சரி நானே சொல்கிறேன்..! அதாவது, மக்களைத் தன் குடும்பமென உருவகித்து..'என் குடும்பத்தில் வைணவரும் , சைவரும், இஸ்லாமியரும்,  கிருத்துவரும் இருக்கின்றனர்' என்று பேசுகிறார். இதில் எவ்வளவு நஞ்சுகலந்த தொனி இருக்கிறது என்பதை கவனியுங்கள்! இஸ்லாமியர்களைப் பற்றிக் கூறும் போது ஷியாவும் , சுன்னியும், அஹமதியாவும், லெப்பையும், பட்டானியும் இருக்கிறார்கள் என்றோ, கிருஸ்தவர்களைப் பற்றிக் கூறும் போது ஆர் ஸிக்களும், ப்ராட்டஸ்டண்ட்டுகளும், பெந்தகோஸ்தேக்களும், யோகாபோ சாட்சியவாதிகளும் , இருக்கிறார்கள் என்றோ சொல்லவில்லை. அங்கெல்லாம் பொதுவாக முஸ்லீம், கிறிஸ்தவர்கள் என்று சொல்லிவிட்டு ஹிந்துக்களைக் குறிப்பிடும் போது மட்டும் 'சைவரும், வைணவரும்' என்று பிரித்துக் கூறுகிறார். இதிலிருந்தே இவர் எத்தகைய ஹிந்து துவேஷி என்பதையும் ஹிந்துக்களைப் பிரித்தாளும் சூழ்ச்சியினை எப்படித் தன்னுடைய அதிமேதாவித்தன பாணியில் கையாள்கிறார் என்பதைப் பார்க்க வேண்டும்.

கலைஞர் டிவியில் அவர் பேசிய போது '500 வருடங்களாக பாரதத்தில் முதல் குடிமகன்களாக வாழ்ந்து கொண்டிருந்தவர்கள் முஸ்லீம்கள். அவர்களுக்கு இன்று இரண்டாவது இடமோ, மூன்றாவது இடமோ கூட இங்கு கிடைக்கவில்லை. அந்த அநீதியின் ஞாயம் தான் அவர்களை இப்படி கோபப்பட வைக்கிறது' என்பதாகக் கூறி முஸ்லீம் ஜல்லி அடிக்கிறார் கமல ஹாசன். ஆனால் அவர் பல ஆயிரம் வருடங்களாக இந்தப் பாரதப் பூமியின் முதல் மற்றும் கடைசிக் குடிமகனாக வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கும் ஹிந்துக்களின் உணர்வுகளுக்கு மரியாதை கொடுக்கத் தெரியவில்லை.


நேற்று (9.02.2013) பயங்கரவாதி அப்சல் குருவிற்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. ஆனால் அதற்காக காஷ்மீர் மாநிலத்தில் கலவரம் உண்டாகும் என்று கருதி அதனை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டது. 'காஷ்மீர்' என்பது இந்தியாவா அல்லது பாகிஸ்தானா என்கிற சந்தேகம் நமக்கு உண்டாகிறது. ஒரு தீவிரவாதியை தூக்கிலிட்டால் முஸ்லீம்கள் பொங்குகிறார்கள் எனில் இவர்கள் பாரதத்திற்கு எந்தளவிற்கு விசுவாசமாக இருப்பார்கள்? இது பற்றி கமல் என்றைக்காவது வெளிப்படையாக விவாதித்திருப்பாரா? கொல்லப்பட்டும், கற்பழிக்கப்பட்டும், சொத்துக்களைப் பிடுங்கிக்கொண்டு விரட்டியடிக்கப்பட்ட காஷ்மீர் பண்டிட்டுகள் ஆண்களும் பெண்களுமாக சொந்த நாட்டில் அநாதைகளாக இருக்கிறார்களே அதைப் பற்றி என்றைக்காவது விவாதித்திருப்பாரா கமல ஹாசன்? 


சொந்த மண்ணின் மைந்தர்கள் கொல்லப்பட்டது பற்றி கவலைப்படாமல், ஆனால் இடையில் வந்து நாட்டைப் பிடித்த கொள்ளையர்கள் இங்கே குடியேறி வாழ்ந்துவிட்டார்கள் என்ற காரணத்திற்காக அவர்களுக்கு வக்காலத்து வாங்கிப் பேசும் க மல ஹாசனின் செக்யூலரிச வேஷம் எத்தகையது என்று இனிமேலாவது கமல் படத்தை காசு விரையம் செய்து பார்க்கும் ஹிந்துக்கள் உணர வேண்டும்.
  

இதில் அம்பேத்கர் ஏதோ முஸ்லீம்களுக்காக பேசியதாகவும் இடைச்செருகல் செய்கிறார். ஆனால் அதே அம்பேத்கர் தான் 'பிரிவினை என்பது உறுதியானால் முஸ்லீம்களை முழுதாக பாகிஸ்தானுக்கும், பாகிஸ்தானிலிருக்கும் ஹிந்துக்களை முழுவதுமாக பாரதத்திற்கும் பரிமாற்றம் செய்துவிடுங்கள். இல்லையேல் இந்த பிரச்சனை பாரதத்திற்கு தீராத தலைவலியாக இருக்கும்' என்று எச்சரித்தார். அந்தத் தலைவலியைத் தானே இப்போது கமல் அனுபவிக்கிறார் என்பது ஏன் அவருக்கு உரைக்கவில்லை?


இஸ்லாமியர்களின் எதிர்ப்புக்குத் தனக்குத்தானே காரணங்களைத் தேடி ஜல்லியடித்த க மல ஹாசன்பிராமணர்களின் எதிர்ப்பை சப்ஜாடாக புறக்கனித்தார் என்பதை இந்தப் படத்தைப் பார்த்த பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கும் தெரியும்.

ஒருபக்கம் முஸ்லீம்களிடம் அடிவாங்கிக்கொண்டே இருந்தாலும் பிராமணர்களிடம் வீரம் காட்ட இவர் மறக்கவில்லை. அதே விஸ்வரூபம் படத்தில் இந்த தைரியசாலி க மல ஹாசன் வலிய ஒரு பிராமண கதாபாத்திரத்தை கதையில் தினித்து 'அடிவாங்குபவன் பெண் தன்மை கொண்ட பிராமணன்' என்றும் திருப்பி அடிப்பவன் வேறு ஜாதிக்காரன் அல்லது மதக்காரன் என்கிற பொது புத்தியை பிரதிபலிக்கும் கதாபாத்திரத்தை உண்டாக்கி இருக்கிறார். அதுமட்டுமல்ல வழக்கம் போல பிராமணரது கலாசாரத்தைக் கேலி செய்யும் முகமாக காட்சிப்படுத்தல்களும் வைக்கத் தவறவில்லை.

சரி , பிராமணர்கள் என்ன செய்தார்கள் என்று பார்ப்போம்.

இப்படத்தில் வரும் பிராமணக் காட்சிப்படுத்தலை எதிர்த்து பிராமணர் சங்கத்தினர்  அதன் மாநில பொதுச்செயலாலர் திரு ராமகிருஷ்ணன் தலைமையில் காவல்துறை ஆணையரிடம் புகார் மனு ஒன்றைக் கொடுத்திருக்கிறார்கள். அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது தெரியாத அதே வேளையில் உள்துறை அமைச்சரிடமும் புகார் மனு கொடுக்கப்பட்டது. அதன் மீது எந்த விசாரனையும் நடத்தப்பட்டதாகத் தெரியவில்லை. அப்படி எந்த செய்திகளும் ஊடகங்களில் வரவும் இல்லை. இத்தனைக்கும் இப்படத்தை பிராமணர்கள் தடைசெய்யக் கோரவில்லை. அதில் வரும் பிராமணர் சம்பந்தமான அவர்களின் பொதுவான உணவுப்பழக்கத்தை கொச்சைப்படுத்தும் விதமான காட்சிகளை நீக்க வேண்டும் என்று தான் கோரிக்கை விடப்பட்டது. ஆனால் அந்தப் புகார் மனுக்களும் பிராமணர்களின் குமுறல்களும் கண்டுகொள்ளப்படவில்லை என்றே தோன்றுகிறது.








500 வருடங்களாக முஸ்லீம்கள் பாரதத்தின் முதல் குடிமகனாக வாழ்ந்தார்கள் என்று கூறும் க மல ஹாசன் பல ஆயிரம் வருடங்களாக இதே பாரதத்தில் முதல் இடை கடை என அனைத்து கட்ட குடிமகனாகவும் வாழ்ந்து கொண்டிருக்கும் பிராமணர்களின் உணர்வுகளை எண்ணிப்பார்க்கவில்லை. அதில் தான் க மல ஹாசனின் செக்யூலரிச ஜல்லியும் , கருப்புச்சட்டை வீரமும் பொங்கப் பொங்கத் தெரிகிறது.

இப்படியே ஜாதி மதத்தை வைத்து பணம் சம்பத்தித்து விடலாம் என்றால் க மல ஹாசன் தனது எல்லாப் படங்களின் வெளியீட்டிலும் ஏதாவது பிரச்சனையை சந்தித்துக் கொண்டுதான் இருக்கப் போகிறார்.

அடுத்தது விஸ்வரூபம் 2 ஆம் பாகம் இந்த ஆண்டே வந்துவிடுமாம். படம் எப்படி இருக்கும் என்று இப்போதே கனித்து விடலாம்!

1. ஹிந்து தீவிரவாதம் என்ற பதத்தை நிறுவும் முகமாக காட்சிகளை வைக்கத் தவறமாட்டார்.
2. பாபர் கும்மட்டம் இடிக்கப்பட்டது என்றும் அதனால் தான் முஸ்லீம்கள் கோபப்பட்டு நாடெங்கும் குண்டு வைத்தார்கள் என்றும் காட்டலாம்.
3. கோத்ரா ரயில் எரிப்பைக் காட்டாமல் குஜராத் கலவரம் பற்றி காட்சிகள் நீளலாம்.
4. இறுதியில் ஒரு பிராமணப் பெண் முஸ்லீம் ஹீரோவான இவரை காதலித்து மறுமணம் செய்யலாம்.

எது எப்படியானாலும் க மல ஹாசனுக்கு படத்திற்கு இலவசமான விளம்பரம் காத்திருக்கிறது.

மக்களும் காத்திருக்கிறார்கள் - க மல ஹாசனின் அடுத்த செக்யூலரிச முகமூடி கிழிந்து போவதைப் பார்ப்பதற்கு!

ஆனால் சொரனை இல்லாத ஹிந்துக்களின் விஸ்வரூபம் எப்போது?

காத்திருப்போம்!