Thursday, September 30, 2010

தற்கால இந்தியா பற்றி ராமர்!




நண்பர் ஒருவர் அனுப்பிய மின்னஞ்சலில் இருந்து...!

சில விஷயங்களை மொழிமாற்றாமல் படித்தால் சுவை ... அதனால் தேசிய மொழியில்


*The Lord surveyed the Ram Setu and said "Hanuman, how diligently and strenuously you and your vanara sena built this bridge several centuries back. It is remarkable that it has withstood the ravages of the climatic and geographical changes over centuries. It is indeed an amazing feat especially considering the fact that a bridge at Hyderabad built by Gammon using latest technology collapsed the other day even before they could stick the posters on its pillars."*

*Hanuman with all humility replied "Jai Sri Ram, it is all because of your grace. We just scribbled your name on the bricks and threw them in the sea and they held. No steel from TISCO or cement from Ambuja or ACC was ever used. But Lord, why rake up the old issue now?"

*Ram spoke "Well, Hanuman some people down there want to demolish the bridge and construct a canal. The contract involves lot of money and lot of money will be made. They will make money on demolition and make more money on construction. "

*Hanuman humbly bowed down and said "Why not we go down and present our case?".

*Ram said "Times have changed since we were down there. They will ask us to submit proof of age and we don't have either a birth certificate or school leaving certificate. We traveled mainly on foot and sometimes in bullock carts and so we don't have a driving license either. As far as the proof of address is concerned, the fact that I was born at Ayodhya is itself under litigation for over half a century. If I go in a traditional attire with bow and arrow, the ordinary folks may recognize me but Arjun Singh may take me to be some tribal and, at the most, offer a seat at IIT under the reserved category for learning how to construct a bridge. Also, a God cannot walk in, dressed in a three-piece suit and announce his arrival. It would make even the devotees suspicious. So it is a dilemma so to say."

"I can vouch for you by saying that I personally built the bridge."

"My dear, Anjani putra, it will not work. They will ask you to produce the Layout plan, The Project details, Approved Plans, Municipal Building Permit,Excavation Permit, the contractor who built it including financial outlay and how the project cost was met and the completion certificate. And who inaugurated it? Nothing is accepted by these people without documentary evidence in India. You may cough but unless a doctor certifies it, you have no cough. A pensioner may present himself personally but the authorities do not take it as proof. He has to produce a life-certificate to prove that he is alive. It is that complicated."

*"Lord, I can't understand these historians. Over the years you have given darshan once every hundred years to saints like Surdas, Tulsidas, Saint Thyagaraja, Jayadeva, Bhadrachala Ramdas and even Sant Tukaram and still they disbelieve your existence and say Ramayana is a myth. The only option,I see, is to re-enact Ramayana on earth and set the government records straight once for all."

*The Lord smiled. "It isn't that easy today. Ravan is apprehensive that he may look like a saint in front of today's politicians. I also spoke to his mama Mareecha, who appeared as a golden deer to tempt Sita maiyya when I was in the forest and she said that she won't take a chance of stepping on earth as long as Salman Khan is around.














"அது ராமர் கோவில்தான். அந்த இடம் ராமருக்குத்தான் சொந்தம். அந்த இடமே தெய்வத் தன்மை உடையதாகவும் வழிபாட்டுக்குரியதாகவும் ஹிந்துக்களுக்கு இருந்திருக்கிறது. பாபர் அங்கு அந்த சர்ச்சைக்குரிய கட்டிடத்தை கட்டுவதற்கு முன்னால் அங்கே ஒரு கோவில் அமைப்பு இருந்தது. அதை அவன் இடித்தானா இல்லையா என்பது கேள்விக்குரியது. ஆனால் அதன் இடிபாடுகளின் மீது அவனுக்கு சொந்தமில்லாத இடத்தில் அவன் கட்டியதுதான் அந்த கட்டிடம். எனவே அது ”ராம் லல்லா” என்கிற குழந்தை ராமருக்கு சொந்தமானது" - இவ்வாறு நீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டுவிட்டது. ராமர் பாலமும் மனிதர்களால் கட்டப்பட்ட பாலம் தான் என்றும் அது கட்டப்பட்ட காலம் பற்றியும் உண்மையான அறிவியல் நிரூபிக்கும்! நமது பாரம்பரிய பூமியை காப்பது மண்ணின் மைந்தர்களான நமது கடமை!

சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்! - பாரதியார்


Tuesday, September 28, 2010

பல்லிளிக்கும் பகுத்தறிவு!




நன்றி:: தினமலர்

செய்தி!

முதல்வர் பெரிய கோவிலுக்குள் மெயின் கேட் வழியாக வருவாரா அல்லது பக்கவாட்டு வாயில் வழியாக வருவாரா என்பது பெரும் கேள்விக்குறியதாக இருந்தது.


இதற்குக் காரணம், பெரிய கோவிலின் மெயின் கேட் வழியாக நுழைந்தால் ஆகாது என்ற மூட நம்பிக்கை பல காலமாக நிலவி வருகிறது. மெயின் கேட் வழியாக நுழைந்த இந்திரா காந்தி பின்னர் சில காலத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். அதேபோல எம்.ஜி.ஆர். மெயின் கேட் வழியாக நுழைந்த சில மாதங்களிலேயே உடல் நலம் பாதிக்கப்பட்டு அதிலிருந்து சரியாக மீளாமலேயே உயிரிழந்தார். எனவே முக்கியப் புள்ளிகள் குறிப்பாக அரசியல் பிரமுகர்கள் இந்தப் பாதை வழியாக நுழைவதே இல்லை.

ஆனால் பெரியாரின் தீவிர சீடர்களில் ஒருவரான முதல்வர் கருணாநிதி இந்த மூட நம்பிக்கையைப் புறக்கணித்து மெயின் கேட் வழியாக நுழைவாரா என்ற எதிர்பார்ப்பு பலமாக இருந்தது. ஆனால் தீவிர நாத்திகரான முதல்வர் மெயின் கேட் வழியாக நேற்று (26 செப்.)வரவில்லை. மாறாக அருகில் உள்ள பாதை வழியாக கோவிலுக்குள் வந்தார்.



இன்னுமா இந்த ஆட்டுமந்தைக் கூட்டம் இவர நம்பிக்கிட்டு இருக்கு? 


Saturday, September 25, 2010

சித்தர்கள் பறப்பது எப்படி?



நம் புராணங்களில் சித்தர்கள் முனிவர்கள் போன்றவர்கள் பறந்து வருவதைப் போல படித்திருக்கிறோம். சில திரைப்படங்களில் காட்சிகளாகக் கூட கண்டிருக்கிறோம். அது எப்படி சாத்தியம் ஆகிறது.

சித்தர்கள் பறந்து செல்பவர்கள், நீரில் நடப்பார்கள். அந்தரத்தில் மிதப்பார்கள் என்றெல்லாம் படித்திருக்கிறோம் அல்லவா. அவை எதுவும் மாயாஜால்மோ அல்ல நடக்க முடியாத கட்டுக் கதையோ அல்ல. பிறகு எப்படி பறக்கிறார்கள்?

எல்லா ஜீவன்களுக்கும் இரண்டு உடல்கள் இருக்கும். ஒன்று நாம் கண்ணால் காணக்கூடிய எலும்பும் சதையும் கொண்ட புற உடல். மற்றொன்று கண்களுக்குப் புலப்படாத மாயா உடல். உதாரணமாக, நாம் பின்னால் ஒருவர் தொடும் தூரத்தில் வந்தி சத்தமில்லாமல் நின்றால் கூட நம்முடைய உள்ளுணர்வு காரணமாக திரும்பி பார்த்து விடுவோம். யோரோ நம் பின்னால் நிற்பது போல இருக்கிறதே என்ற உள்ளுணர்வின் உந்துதல் எதனால் ஏற்படுகிறது? அருகே நிற்பவர் நம் புற உடலைத் தொடாவிட்டாலும் ஆத்மாவின் உடலான மாய உடலைத் தீண்டி நிற்பதால் நமக்கு உள்ளுணர்வு உண்டாகிறது. இவ்வாறு நடமாட்டத்தை உணர்வலைகளின் வாயிலாகவும் மின்காந்தப்புலத்தின் பரிமாற்றத்தாலும் நாம் கண்ணால் பார்க்காவிட்டாலும் உணரமுடிகிறது.

இவற்றில் புற உடல் புவி ஈர்ப்பு விசைக்கு கட்டுப்பட்டது. மாய உடல் ஆத்மாவின் உடல். இது பூமியின் ஈர்ப்பு விசைக்கு கட்டுப்படாதது.

ஆத்மாவில் லயித்திருக்கும் போது மாய உடலோடு ஒன்றியிருப்பதும், புற உலகில் லயித்திருக்கும் போது சாதாரண உடலோடு ஒன்றியிருப்பதும் நடக்கிறது. சித்தர்களும் முனிவர்களும் தொடர்ந்த பயிற்சியின் மூலமாக மாய உடலையும் , புற உடலையும் ஒரு சேர இயக்க கற்றுக்கொள்கிறார்கள்.

மொத்த சக்தியையும் நாபி எனப்படும் தொப்புளுக்கும் கீழே உள்ள இடத்தில் ஒரு உருண்டையைப் போல திரட்டி அந்த சக்தியையே உடலின் மைய புள்ளியாகக் கொண்டு புவி ஈர்ப்பு விசைக்கு எதிர் விசை கொடுத்து பறக்கிறார்கள்!

மாய உடலை இயக்கும் போது புவியீர்ப்பிலிருந்து விடுபட்டு இவர்களால் பறக்க முடியும். மாய உடலின் ஆதிக்கத்தைக் குறைத்து புற உடலை இயக்கும் போது புவியீர்ப்பு விசைக்குக் கட்டுப்பட்டு சராசரியாக இயங்க முடியும். இவ்வாறு இவர்களால் புவி ஈர்ப்பு விசையைக் கட்டுப்படுத்த முடியும் போது அந்தரத்தில் நடக்க முடிகிறது. நீரில் நிற்க முடிகிறது. அதற்கு காரணம் தொடர்ந்த பயிற்சிகளால் புற மற்றும் அக உடல் இரண்டின் சக்தியையும் இயக்கக் கற்று விடுகிறார்கள். ப்ரபஞ்சத்தின் சக்தியோடு முழுமையாக ஒன்றி விடுகிறார்கள்.

சலனமற்ற மனமும் அமைதியான தியானமும் இதுபோன்ற உள்ளிருப்பு சக்திகளை வெளியே கொண்டு வர உதவும் முதல் படிகள் என்று பெரியோர்கள் கூறுகிறார்கள்.

நம்மைப் போன்றவர்கள் தான் சலனப்படாத நிமிடங்கள் கூட கிடையாதே! அதனால் தான் 58 பெருக்கல் 28 என்ன என்று கேட்டால் கூட மன சக்தியை பயன்படுத்தாமல் கால்குலேட்டருக்குத் தாவுகிறோம்.

சரி அப்படி சக்தியை பெற்று பறந்தால் எப்படி இருக்கும்? இதோ திருவன்னாமலையில் ஒரு சித்தர் பறக்கிறார்!


பறக்கும் சித்தர்!





முதல்ல இப்படி உடம்பை வளைக்கும் யோகாசனம் முடியுதான்னு பாருங்க! மத்ததெல்லாம் அப்புறம்!

Friday, September 24, 2010

காங்கிரஸின் பலவீனங்களும் போலி செக்யூலரிஸமும் - பேசும் படங்கள்!






ஆந்திராவில் தெலுங்கானாவை தனியாக பிரித்துத் தருவோம் என்று உறுதி கூறியது காங்கிரஸ்! அதனை எதிர்த்து 120 எம் எல் ஏக்கள் ராஜினாமா செய்ததை காரணம் காட்டி பல்டி அடித்த காங்கிரஸ்!


ரயில்களைக் கவிழ்க்கும் நக்ஸலைட் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காமல் இழுபறி செய்யும் காங்கிரஸ்!


காஷ்மீர் பிரச்சனையில் கலவரக்காரர்கள் மீது பாவப்பட்டு ராணுவத்தின் அதிகாரத்தை குறைக்கும் காமெடி பீஸ் காங்கிரஸ்!


காமன்வெல்த் ஊழல்களில் யார் மீதும் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்க்கும் காங்கிரஸ்!


ஸ்பெக்ட்ரம் ஊழலில் மௌனம் சாதிக்கும் காங்கிரஸ்!


தீவிரவாதிகளை தூக்கிலிடாமல் மத விளையாட்டு விளையாடும் காங்கிரஸ்!


மேலும் ஒரு மத விளையாட்டை பாபர் மசூதி தீர்ப்பை தள்ளிப்போட வைத்து நடத்துகிறதோ என்று சந்தேகிக்காமல் இருக்க முடியவில்லை. யாருக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தாலும் பிரச்சனை தான். இந்நிலையில் அயோத்தி வழக்கை விசாரித்து விட்டு தீர்ப்பு கூற காத்திருக்கும் மூன்று நீதிபதிகளில் ஒருவர் அக்டோபர் 1ம் தேதி ஓய்வு பெறவுள்ளாராம். எனவே செப்டம்பர் 30ம் தேதிக்குள் இந்தத் தீர்ப்பை அளித்தாக வேண்டியுள்ளது.


அப்படி சொல்ல முடியாமல் போனால், இந்த தீர்ப்பை வெளியிட முடியாது என்கிறது செய்திகள். மாறாக புதிதாக ஒரு நீதிபதி நியமிக்கப்பட வேண்டும் என்றும் அதை விட முக்கியமாக, இந்த வழக்கையே மொத்தமாக முதலிலிருந்து விசாரிக்க வேண்டி வரும் என்றும் கூறுகிறார்கள். எனவே இச்சூழ்நிலையை பயன்படுத்தி இன்னும் பல வருடங்கள் வழக்கை இழுத்தால் நமக்கு பிரச்சனை இல்லை என்று காங்கிரஸ் நினைக்கிறதோ என்னமோ! 28ம் தேதி தெரியும் சேதி!


மொத்தத்தில் யாரும் எப்படி வேண்டுமானாலும் நாட்டைக் கெடுக்கட்டும். நமக்கு ஆட்சியும் அதிகாரமும் முக்கியம். அது தான் இத்தாலி காங்கிரஸ்!










Sunday, September 19, 2010

மாரியம்மன் கோவில் திருவிழாவில் வேப்பிலைக் கொடி கட்டுவது ஏன்?


எமது இக்கட்டுரை வேப்பிலைக் கொடியும், வேளாங்கன்னி மாதாவும்! என்ற தலைப்பில் தமிழ் ஹிந்துவில் வெளியானது. நண்பர்களுக்காக இங்கே மீள்பதிவு

அப்புசாமி: என்ன குப்பு, நியூஸ் பேப்பர சவச்சு தின்னுடுவ போலருக்கே! என்ன படிச்சன்னு கொஞ்சம் எனக்கும் சொல்லுப்பா..

குப்புசாமி: 'அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக 4வது முறையாக சோனியா காந்தி தேர்ந்தெடுக்கப்படுகிறார்' ங்கறது தான் இப்ப லேட்டஸ்ட் நியூஸ்! என்ன கொடும சரவணா!

அப்புசாமி: எதக் கொடுமைன்னு சொல்ற..

குப்புசாமி: பின்ன என்ன அப்பு! வெள்ளையனே வெளியேறுன்னு சொல்லி வெள்ளைகாரனை விரட்டறதுக்குன்னே உண்டான கட்சி தான் காங்கிரஸ். இன்னிக்கு அந்தக்கட்சிக்கு தலைவியா ஒரு வெள்ளைக்கார பெண்ணையே நியமிக்கிறாங்கன்னா இத விட கொடுமை வேற என்ன இருக்கு சொல்லு..?

அப்புசாமி: அது சரி தான்.. ஆனா அந்தம்மாக்கு மக்கள் ஓட்டு போடறத பாத்தா
மக்கள் அவங்கள ஏத்துக்கிட்டாங்கன்னு தானே தோனுது.

குப்புசாமி: இருக்கட்டும்பா. ஆனாலும் நூறு கோடி ஜனத்தொகை இருக்கற இந்தியால காங்கிரஸ் கட்சிக்கு தலைமை தாங்கும் யோக்கியதை 'ஒரு' இந்தியனுக்கு கூடவா இல்ல. ஏன் இப்படி வெள்ளைகாரங்க கால்ல விழுந்து கிடக்காங்கன்னு தெரியலையே!

காந்தி உயிரோட இருந்திருந்தா இந்த ஈனப்பொழப்புக்காடா நாங்க இந்தப்பாடுபட்டோம்ன்னு கண்ணீர் விட்டிருப்பாரு...

அப்புசாமி: சரி.. அந்தம்மா இந்தியால தானே வாழறாங்க,

குப்புசாமி: இந்தியால வாழ்ந்தா மட்டும் இந்தியராயிருவாங்களா என்ன? உடம்ப மட்டும் இந்தியால வெச்சிட்டு விசுவாசத்த வாட்டிகனுக்கு காமிச்சா எவன் தான் ஏத்துக்குவான்?

அப்புசாமி: எதவெச்சு அப்படி சொல்ற..

குப்புசாமி: நிறைய இருக்கு. உதாரணத்திற்கு தமிழ் ஹிந்து தளத்துல வெளியான
சோனியா காந்தியின் முகத்திரை: சில பழைய ரகசியங்கள்! என்ற இந்த கட்டுரைய படிச்சிப் பாரேன். அது மட்டுமா? இந்தியரைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு இந்தியாவுல வாழ்ந்தாலும் சுமார் 16 வருஷமா இந்திய குடியுரிமையே வாங்காம இருந்திருக்காங்கன்னா அந்த இத்தாலி விசுவாசத்த என்னன்னு சொல்லுவ?

அப்புசாமி: யப்பா இவ்வளோ விஷயம் இருக்கா?

குப்புசாமி: பின்ன இல்லையா? இந்தம்மா இந்தியாவோட நிழல் பிரதமரானப்பரம் தான் கிறிஸ்தவ மத மாத்தம் வெள்ளைக்காரன் காலத்துல கூட இல்லாத அளவுக்கு தலைவிரிச்சு ஆடுது. அரசியல் தலைவருங்க பூரா இந்துக்களுக்கு எதிரா நடந்துக்கறதையே இந்தம்மாவுக்கு காட்டுற விசுவாசமா நினைச்சிருக்காங்கன்னா பாத்துக்கயேன்.

அப்புசாமி: ஆமாமாம், ப சிதம்பரம் கூட காவி தீவிரவாதம்ன்னு பேசி மக்களோட எரிச்சல சம்பாதிச்சிருக்காரே!

குப்புசாமி: பின்ன... அந்தம்மா கிட்ட இத்தாலிக்கான விசுவாசத்த வேற எப்படி காட்டுவாங்க. தெரியாம தான் கேக்கறேன்.. 'காவி' தீவிரவாதத்தின் சின்னம்ன்னு இவர் அடயாளப்படுத்த விரும்பினா தேசியக்கொடியில காவியிருக்கே அதையும் சேத்து தான் அவமதிக்கிறாரா?

அப்புசாமி: அதானே! சிதம்பரத்துக்கு அடிக்கடி வாய் வழியா பேதி போகுது. oral diariya. நல்ல டாக்டரா பாத்து வைத்தியம் பாக்கலைன்னா ஒடம்புக்கு ஆகாது. பாவம்.

குப்புசாமி: என்னைக்கும் இல்லாத அளவுக்கு கிட்டத்தட்ட பத்து வருஷமா இந்தியால இந்துக்களுக்கு பெரிய கொடுமைகள் இழைக்கப்படுதுன்னா காரணம் இது தான். மத மாற்றத்தை மார்கெட்டிங் கம்பெனி மாதிரி டார்கெட் வெச்சு நடத்தறாங்க, மல்டிலெவல் மார்கெட்டிங்க்கு ஆள் சேக்குற மாதிரி!. அரசாங்கங்களோட ஊக்கம் இல்லாம இதெல்லாம் நடக்காதுங்கறது எத்தனை அப்பவிங்களுக்குத் தெரியும்?

அப்புசாமி: அதான் விஷயமா.. என்னைக்கூட போனவாரம் ஒரு நண்பர் வேளாங்கன்னிக்கு வா..மாதாகோவில் விஷேசத்துல கலந்துக்க. உன் வேண்டுதல் எல்லாம் நடக்கும்ன்னான். நான் தான் போகலை.

குப்புசாமி: அப்பு.. பக்தியா கூப்படறவங்களும் இருக்காங்க. ஆள் பிடிக்க அலையறவங்களும் இருக்காங்க. உன்னைக் கூப்பிட்ட ஆளு எந்தரகமோ? இதுல விஷேசம் என்ன தெரியுமா? இந்த மாதா கோவில் விஷேசங்கள் எல்லாம் கூட அம்மன் கோவில் பண்டிகை போல தான் நடக்கும். பிரார்தனையா மொட்டை எல்லாம் போடறாங்கன்னா பாத்துகோ!

அப்புசாமி: அப்படியா?

குப்புசாமி: தெரியாதா? உதாரணத்துக்கு நம்ம ஊரு மாரியம்மன் கோவில் திருவிழான்னா கொயேற்றத்துடன் தொடங்கும். வேளாங்கன்னி கோவில்லயும் கொடியேத்துவாங்க.

அப்புசாமி: கொடின்னா கட்சிக்கொடி மாதிரி துணிக்கொடியா? அம்மன் கோவில் கொடின்னா வேப்பிலை கட்றத தானே சொல்லுவாங்க.

குப்புசாமி: அங்க தான் இந்து தர்மமும் நம்ம ஆன்மீகத்தின் தாத்பர்ய மகிமையும் நிக்குது அப்பு. வேளாங்கன்னி மாதா கோவில்ல கொடியேற்றம்ன்னு சொன்னா மாதா சின்னம் பொறிச்ச துணிய கொடியா ஏத்துவாங்க. ஆனா மாரியம்மன் கோவில் கொடின்னா வேப்பிலையை வரிசையா கயிற்றில கட்டி ஊர் முழுசும் கட்டுவாங்க. அதுக்கு அறிவியல் பூர்வமான அர்த்தம் இருக்கு. ஆனா துணிய கொடியா ஏத்துனா அதுல ஒரு விஷயமும் இல்ல.

அப்புசாமி: புரியும் படியா சொல்லேன்.

குப்புசாமி: அப்பு.. நம்ம பாரத நாடு மக்கள் கூட்டம் கூட்டமாக கிராமம் கிராமமாக வாழ்ந்து வந்த பிரதேசம். இங்கே எல்லாமே இயற்கை தான். அறிவியல் மருத்துவம்ன்னு எல்லாத்தையுமே இயற்கையோடு ஒன்றாகவே கலந்து வாழ்ந்திருக்காங்க. அப்படித்தான் கோவில்களும் திருவிழாக்களும். ஒரு கிராமத்தில அம்மன் கோவில் திருவிழான்னா எப்ப வரும்?

அப்புசாமி: வருஷத்துக்கு ஒருவாட்டி..

குப்புசாமி: எந்த மாசம்?

அப்புசாமி: ஆடி மாசம்.

குப்புசாமி: ஏன் ஆடி மாசத்துல கொண்டாடறாங்க:

அப்புசாமி: நீயே சொல்லேன்..

குப்புசாமி: 'மாரி' ன்னா மழைன்னு அர்த்தம். ஆடிப்பட்டம் தேடி விதைன்னு சொல்வாங்க. விதை விதைச்சுட்டா போதுமா?. மழை வேனாமா? விவசாயிகளெல்லாம் பாடுபட்டு ஆடிப்பாடி விதை விதைச்சாலும் விதைச்ச நெல்லு அரிசியா கொட்டி அடுப்புல பொங்கனும்னா அந்த பருவத்துல மழை வந்தா தானே முடியும். அதனால மழை வரணும்னும் நல்ல விளைச்சல் கிடைக்கனும் னும் வேண்டிகிட்டு மழையைக் கொண்டு வரும் தேவதையாக அம்மனை வேண்டி 'மாரி' யைக் கொண்டுவா மாரி அம்மான்னு கும்பிடறாங்க. இந்த வேண்டுதலை ஒழுங்கா நிறைவேத்தினா, ஐப்பசி மாசம் அடை மழை பெய்யும். இப்படி பருவம் தப்பாம மழை பெஞ்சா நல்லா விளைச்சல் கிடைச்சு, நிறைய அறுவடை பண்ணி தை மாசம் பொங்கல் வெச்சு மழைகொடுத்த அம்மனுக்கு படையல் பண்ணி போடுவாங்க. இப்படி மழைகொடுக்கற தெய்வத்த 'பருவம் தப்பாம எங்கள காப்பாத்து தாயேன்னு' சொல்லி கும்பிடத்தான் சரியா ஆடி மாசம் விதை விதைக்கும் காலத்துல மாரியம்மனுக்கு விழா எடுத்து கும்பிடறாங்க.

அப்புசாமி: அடேங்கப்பா! மாரியம்மன் திருவிழால இவ்வளோ விஷயம் இருக்கா? சரி வேப்பிலை கொடி ஏன் கட்றாங்க?

குப்புசாமி: அங்க தான் நம்ம மக்கள் இயற்கை வைத்தியத்திலும் அறிவியல் நுண்ணறிவிலும் எவ்வளவு புத்திசாலியா இருந்திருக்காங்கன்னு தெரியுது. விளக்கமா சொல்றேன் கேளு!

வேப்பிலை ஒரு கிருமிநாசினி. பல வியாதிகளைப் போக்கும் அருமருந்து. வெளிநாட்டுக்காரணே வேப்பிலைக்கு பேட்டன்ட் உரிமை வாங்கி வெச்சு நம்மள அடிமையாக்கப் பாத்தான். ஆனா ஏற்கனவே இந்தியால வேப்பலை வெச்சு நம்ம ஆளுங்க நிறைய ஆராய்ச்சி பண்ணின ஆதாரம் இருந்ததால, அதக்காட்டி அந்த உரிமையை ரத்து பண்ண முடிஞ்சுதுன்னா பாரேன். அந்தளவு மருத்துவ குணமுள்ளது வேப்பிலைன்னு நம்முன்னோர்கள் தெரிஞ்சுதான் வெச்சிருக்காங்க.

பத்து நாள் திருவிழா துவங்கறதுக்கு முன்னாடியே ஊரெல்லாம் தமுக்கடிச்சு அம்மன் கோவில் விஷேசத்த அறிவிப்பாங்க. திருவிழா துவங்கும் நாளுக்கு முன்னாடி ஊரெல்லாம் வேப்பிலை கொடியைக் கட்டுவாங்க. வேப்பிலையைக் கொப்போட பறிச்சு கயிற்றில சரம் மாதிரி கட்டி ஊரில் உள்ள எல்லா தெருக்களிலும் கட்டி வெப்பாங்க. கொடியேத்தின நாள் முதலா யாரும் ஊருக்குள்ள வரக்கூடாது. ஊருக்குள்ள இருந்து யாரும் வெளிய போகவும் கூடாது.

அப்புசாமி: இதென்னப்பா கட்டுப்பாடு? பத்து நாளும் யாரும் வெளிய போகாம இருப்பாங்களா?

குப்புசாமி: கண்டிப்பா இருப்பாங்க அப்பு. ஏன்னா எல்லா கிராமத்திலேயுமே ஒரே காலத்துல இந்த திருவிழா நடக்கறதனால எல்லாரும் அவங்கவங்க ஊர்லயே தங்கிடுவாங்க. அப்படி வேற ஊர்ல மாட்டிக்கிட்டாலும் அந்த ஊரைவிட்டு திருவிழா முடியற வரைக்கும் வரமாட்டாங்க.

அப்புசாமி: அப்படியா? ஏன் இவ்வளோ கட்டுப்பாடு?

குப்புசாமி: காரணம் இருக்கு அப்பு! திருவிழான்னா மக்கள் எல்லோரும் ஒரே இடத்துல கூடுவாங்க இல்லயா? கூட்டம் கூடும்போது அங்கே தொற்றுக்கிருமிகள் பரவ நிறைய வாய்ப்பிருக்கு. திருவிழா சமயம் மக்கள் கூட்டமா கூடற எடத்துல ஊர்க்காரர் ஒருவர் வெளியெ போய் ஏதாவது தொற்று நோய் கிருமியோட ஊருக்குள்ள வந்திட்டா கூட்டத்தோட கலந்து அத்தனை பேருக்கும் ஒரேயடியா வியாதி வந்து மக்கள் எல்லாருமே நோய்வாய்ப்பட நேரும். அதே நேரம் வெளியூர்லருந்து ஒருத்தன் புதுசா வந்தாலும் அதே பயம் தான். அதனால தான் அம்மன் கோவிலுக்கு கொடியேத்திட்டா யாரும் ஊரைவிட்டு போகக்கூடாதுன்னும் ஊருக்குள்ள புதுசா யாரும் வரக்கூடாதுன்னும் உத்தரவு போடுவாங்க.

அப்படி நோய்க்கிருமி எதுவும் அண்டக்கூடாதுன்னும், கிறுமிகள் பரவுவத தடுக்கவும் தான் கூட்டமா மக்கள் கூடும் திருவிழா தினத்துக்கு முன்னாடியே ஊரெல்லாம் வேப்பலையால சுத்தி தொற்றுக்கிருமிகள் அண்டாம பாத்துக்கறாங்க.

அப்புசாமி: ஓகோ! நம்ம அரசியல் வாதிங்க மீட்டிங் போட்டா மாநகராட்சி சார்புல ரோடு சைடுல முழுசும் பிளீச்சிங் பவுடரோ குளோரிங் பவுடரோ எதோ ஒன்னு தூவுவாங்களே அது மாதிரியா?

குப்புசாமி: அப்புடீன்னு தான் வெச்சுக்கோயேன். இன்னும் கேளு.. திருவிழா துவங்கும் முன்னாடி எல்லாருடைய வீட்டுலயும் வேப்பிலையை வாசலில் தோரணமா கட்டுவாங்க. வீட்டுக்கு உள்ளேயும் சாமிபடத்தில் வேப்பிலை மாலைய போட்டு வைப்பாங்க. எல்லோருடைய வீட்டிலும் சாணத்தால் மெழுகி சுவர்களில் மஞ்சள் பூசி வைக்கப்பட்டிருக்கும். ஆக ஊர் தொடங்கி தெரு மற்றும் வீடு வரைக்கும் வேப்பிலை, பசுஞ்சானம், மஞ்சள் ன்னு மருந்துகளாலேயே நோய்க்கிருமிகளுக்கு எதிராக ஒரு பாதுகாப்பு வளையத்தை உண்டு பண்ணிடறாங்க. சுத்தத்துக்கான இத்தனை ஏற்பாடுகளை பண்ணிட்டு அதுக்கப்புறம் தான் திருவிழா தொடங்கும். மக்கள் விரதம் இருந்து கூட்டம் கூட்டமா கோவிலுக்கு வந்து பொங்கல் வைத்து , தீ மிதித்து, கூழ் காய்ச்சி பிறருக்கும் கொடுத்து பிரார்தனைகளை நிறைவேற்றி அம்மனை வழிபட்டு வீட்டுக்கு போவாங்க.

ஆக இன்னைக்கும் அம்மன் கோவில் திருவிழாக்கள்ல வேப்பிலை கொடியேத்தி இயற்கையின் துணை மாறாம நாம கொண்டாடறோம்.

இப்படி சுத்தத்தின் காரணமா வேப்பிலையைக் கட்டி கொடியேத்தறதுக்கு இருக்கற அர்த்தம் மாதாவோட சின்னத்த வெச்சு கட்சிக்கு கொடியேத்தற மாதிரி ஒரு துவைச்சுப்போட்ட துணியை கம்பத்துல கட்டி ஏத்தறதுல இருக்கான்னு நீயே சொல்லு.

அப்புசாமி: அம்மன் கோவில் திருவிழாக்கு கொடியேத்தறதுங்கற சம்பிரதாயத்துக்கு இத்தனை அறிவியல் பூர்வமான அர்த்தம் இருக்கான்னு இப்ப தான் தெரியுது குப்பு!

குப்புசாமி: பின்ன, இந்து தர்மம்ங்கறது வெறும் அடையாள மதமா என்ன?
அது மனோவியலும் அறிவியலும் பகுத்தறிவும் சேர்ந்த ஒரு வாழும் தர்மம்..! சரிதானே! இந்து தர்மத்தின் தத்துவங்களிலும் சம்பிரதாயங்களிலும் உள்ள உள்ளர்த்தங்களை தெளிவா புரிஞ்சிக்கிட்டா இதை அப்படியே காப்பியடிச்சு வேற ரூபத்தில எத்தனை மதம் வந்தாலும் இந்து தர்மத்திற்கு நிகராக அதனால நிற்க கூட முடியாது. அதனால தான் இதை ஸநாதன தர்மம்னு சொல்றோம். அதாவது நிரந்தரமான தர்மம்.

அப்புசாமி: எல்லாம் சரிதான்... ஆனா திருவிழாவோட கடைசி நாள்ல இளசுகள்ளாம் ஒருத்தர் மேல ஒருத்தர் மஞ்சத்தன்னி ஊத்தி விளையாடுவாங்களே அதைப்பத்தி சொல்லாம முடிக்கிறியே..!

குப்புசாமி: அதுக்கும் அர்த்தம் இருக்கு. மஞ்சள் நோய்க்கிருமிகளை விரட்டும் மருத்துவ தன்மை கொண்டது. உதாரணமா எல்லோரும் மஞ்சளால் செய்த குங்குமத்தை நெற்றியில் வைத்துக் கொள்கிறோம் தானே..

அப்புசாமி: ஆமாம். அது ஏன்?

குப்புசாமி: நெற்றியின் மஞ்சள் மேல படும் காத்து நம் முகத்தை சுத்தியே இருக்கும். அதனால நாசித்துவாரம் வரை ஒரு பாதுகாப்பு வளையம் போல துர் கிருமிகளை மஞ்சளின் சக்தி அண்டவிடாது. நோய்க்கிருமிகள் இல்லாத சுத்தமான காத்தை நாம் சுவாசிக்க அது உதவும். அந்தளவுக்கு சக்தி உள்ள மருத்துவ குணம் கொண்டது மஞ்சள்.

கூட்டமான இடத்துக்கு வந்து மக்கள் கலைஞ்சு போகும் போது யாருக்காவது அவங்களுக்கே தெரியாம ஏதாவது நோய் தொற்று இருந்து அது மத்தவங்க வீட்டு வரைக்கும் பரவிடக்கூடாதே! அதனால திருவிழா முடிஞ்சி திரும்பி போகும் நாள்ல எல்லோர் கால்கள்லேயும் மஞ்சள் தண்ணிய ஊற்றி உடல் மேலும் மஞ்சள் தண்ணீரை தெளிச்சி நோயில்லாம வீட்டுக்குப் போங்கன்னு அனுப்பி
வைப்பாங்க.

இதுக்காக அவரவர் வீட்டிலிருந்து தங்கள் பங்குக்கு எல்லோரும் மஞ்சள் கரைத்து
வருவோர் போவோர் மீது தெளிக்கும் போது, சிலர் கோபப்படலாம். அதனால அவரவர்க்கு முறையுள்ளவர்கள் மீது மட்டும் மஞ்சள் தண்ணீர் தெளியுங்கள் ன்னும், தேவையில்லாமல் யாருடைய கோபத்திற்கும் ஆளாகிவிட வேண்டாம்ன்னு சொல்லி ஆரம்பிச்சதை, முறைப்பையன் முறைப்பெண் மீது தெளிக்கனும், முறைப்பெண் முறைப்பையன் மீது மஞ்சத்தண்ணி ஊத்தணும்னு காலப்போக்கில மாத்திப் புரிஞ்சிக்கிட்டாங்க. அதனால் மஞ்சத்தண்ணி ஊத்தறது விளையாட்டு நிகழ்சி மாதிரி ஆகிப்போச்சு! இப்போ புரியுதா, மாரியம்மண் கோவில் திருவிழான்னா என்னான்னு?

அப்புசாமி: குப்பு! இவ்வளவு அர்த்தமுள்ள பண்டிகையைப் பத்தி தெரிஞ்சுக்காம கூட்டத்துல நிக்கறதுக்கு சங்கடப்பட்டே நான் இவ்வளோ நாளா அம்மன் கோவில் திருவிழால கலந்துக்காம போய்ட்டேனே! அடுத்த மாரியம்மன் திருவிழால வேப்பிலை கொடி கட்டுற வேலைய நானே செய்யப்போறேன். சரி...நேரமாயிடிச்சு, போற வழியில ஆத்தாவ வேண்டிக்கிட்டே வீடு போய்ச்சேர்றேன்.

அப்புசாமி இடத்தை காலி செய்ய, குப்புசாமி பெருமூச்சுடனும் சிறு முணுமுணுப்புடனும் திண்ணையில் சாய்ந்தார் ...

“இந்து தர்மம் என்பதே மனோவியலும் அறிவியலும் பகுத்தறிவும் சேர்ந்தது தானே!”

Thursday, September 16, 2010

சீர்திருத்த வாதிகள் பற்றி சுவாமி விவேகான‌ந்த‌ர்!


சீர்திருத்தவாதிகள், பகுத்தறிவு வியாதிகள் என்று தங்களைத் தாங்களே சொல்லிக் கொண்டு இந்து மதத்தை மட்டும் அவமதிப்பதில் அளவில்லாத பிரியம் கொண்டவர்களை சுவாமி விவேகானந்தர் சொற்பொழிவின் மூலம் சாடியதன் சாரத்தைப் பார்ப்போம்.

சென்னையில் நடந்த ஒரு சொற்ப்பொழிவின் போது சுவாமி விவேகானந்தர் இவ்வாறு உரையாற்றுகிறார் "சிறுவர்களே, மீசைமுளைத்த குழந்தைகளே, சென்னையைத் தாண்டிச்
செல்லாத நீங்கள் தைரியத்தோடு எழுந்து நின்று ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் பாரம்பரியத்தையுடைய முப்பது கோடி மக்களின் (அந்தக்காலத்தில்) முதுகில் பின்னால் நின்றுகொண்டு அவர்களுக்கு, சட்டத்தை அவர்கள் பின்பற்ற வேண்டிய சட்டங்களைக் கட்டளையிடுகிறீர்கள். இது உங்களுக்கு வெட்கமாக இல்லை. அத்தகையத் தெய்வ நிந்தனையிலிருந்து விலகி நில்லுங்கள். நீங்கள் படிக்க வேண்டியப் பாடத்தை முதலில் கற்றுக் கொள்ளுங்கள்.

புனிதமற்ற சிறுவர்களே, நீங்கள் வெறுமனே தாளில் சில வரிகளை எழுதி அதை வெளியிட சில முட்டள்களைக் கண்டுபிடித்து வெளியிடுவதாலேயே நீங்கள் இந்த உலகத்தின் கல்வி கற்றவர்கள் என்று நினைத்துக் கொண்டீர்களா? நீங்கள் தான் இந்தியாவின் பொதுமக்களின் கருத்து என்று நினைக்கின்றீர்களா?

நீங்க‌ள் தான் இந்தியாவின் சீர்திருத்த‌க்கார‌ர்க‌ள் என்று நினைத்துக் கொண்டீர்க‌ளா? இந்தியாவில் எந்த‌க் கால‌த்திலாவ‌து சீர்திருத்த‌க்கார‌ர்க‌ள் இல்லாம‌ல் இருந்த‌துண்டா? இந்தியாவின் வ‌ர‌லாற்றை நீங்கள் ப‌டித்திருக்கிறீர்க‌ளா? ச‌ங்க‌ர‌ர் யார்? ராமானுஜ‌ர் யார்? நான‌க் யார்? சைத‌ன்ய‌ர் யார்? க‌பீர் யார்? தாது யார்? ஒளிமிகுந்த‌ ந‌ட்ச‌த்திர‌க் கூட்ட‌ங்க‌ளின் வ‌ரிசைக‌ள் போல் ஒருவ‌ர் பின்னால் ஒருவ‌ராக‌ வ‌ந்த‌ இந்த‌ ம‌க‌த்தான ஆச்சாரிய‌ர்க‌ள் எல்லாம் யார்?

ராமானுஜ‌ர் தாழ்ந்த‌ குல‌த்த‌வ‌ர்க‌ளுக்காக‌ வேத‌னைப் ப‌ட‌வில்லையா? த‌ன் வாழ்நாள் முழுவ‌தும் ப‌றைய‌னைக் கூட‌ வைண‌வ‌ ச‌ம‌ய‌த்தில் அனும‌திக்க‌ப் பாடுப‌ட‌வில்லையா? த‌ன்னுடைய‌ ச‌ம‌ய‌த்தில் முக‌ம‌திய‌ர்க‌ளைச் சேர்த்துக்கொள்ள‌ அவ‌ர் முய‌ல‌வில்லையா? இந்துக்க‌ளோடும் முக‌ம‌திய‌ர்க‌ளோடும் உற‌வாடி ஒரு புதிய‌ நிலையைக் கொண்டுவ‌ர‌ நான‌க் முய‌ல‌வில்லையா? அவ‌ர்க‌ள் எல்லாம் முய‌ன்றார்க‌ள் அவ‌ர்க‌ளுடைய‌ ப‌ணி இன்னும் ந‌ட‌ந்து கொண்டே தானிருக்கிற‌து. வித்தியாச‌ம் இது தான். அவ‌ர்க‌ள் இன்றைய‌ச் சீர்திருத்த‌க்கார‌ர்க‌ளைப் போல‌ எக்காளமிட‌வில்லை. இன்றைய‌ச் சீர்திருத்த‌க் கார‌ர்க‌ள் போல் அவ‌ர்க‌ளின் வாய்க‌ளில் சாப‌மே இல்லை. அவர்கள் யாரையும் இழிவு படுத்திப் பேசியதில்லை.

அவ‌ர்க‌ளுடைய‌ உத‌டுக‌ள் வாழ்த்துக்க‌ளை ம‌ட்டுமே கூறின‌. அவ‌ர்க‌ள் எந்த‌க் கால‌த்திலும் நிந்திக்க‌வில்லை. அவ‌ர்க‌ள் ம‌க்க‌ளிட‌ம் "இந்துக்க‌ளே, நீங்க‌ள் இதுவ‌ரை செய்த‌வை எல்லாம் ந‌ல்ல‌தே. ஆனால் என் ச‌கோத‌ர‌ர்க‌ளே, அதை விட‌ ந‌ல்ல‌தை நாம் செய்வோம்" என்றே கூறின‌ர். இன்றைய‌ சீர்திருத்த‌க்கார‌ர்க‌ளைப் போல் "நீங்க‌ள் எல்லாம் கெட்டுப் போன‌வ‌ர்க‌ள். இப்போது நாம் ந‌ல்ல‌வ‌ர்க‌ளாக‌ முய‌ற்சிப்போம்" என்று சொல்ல‌வில்லை. அவ‌ர்க‌ள், "நீங்க‌ள் ந‌ல்ல‌வ‌ர்க‌ளாக‌ இருந்தீர்க‌ள். இப்போது மேலும் ந‌ல்ல‌வ‌ர்க‌ளாவோம்" என்றே கூறினார்க‌ள். இதுதான் இர‌ண்டு பேரிடையே அமைந்துள்ள‌ மிக‌ப் பெரிய‌ வித்தியாச‌ம்." என்றார் சுவாமி விவேகான‌ந்த‌ர்.

ராம‌சாமி நாய‌க்க‌ர் தோற்றுவித்த‌ இந்து ம‌த‌ ஒவ்வாமையை அது என்ன‌வென்றே ஆராயாம‌ல் அது தான் ப‌குத்தறிவு என்று மூட‌ந‌ம்பிக்கை கொண்டிருக்கும் த‌ற்க்கால‌ போலி சீர்திருத்த‌வியாதிக‌ள் இந்த‌ ப‌குதிய‌ப் ப‌டித்தால் அல்ல‌து சுவாமி விவேகான‌ந்த‌ர‌து புத்த‌க‌த்தை யாரிட‌மாவ‌து ஓசிக்கு வாங்கி ப‌டித்தாவ‌து கொஞ்ச‌ம் உண்மையான ப‌குத்த‌றிவு‌ பெறுவ‌ர்க‌ளா என்று பார்ப்போம்.


Monday, September 13, 2010

நாத்திகத் தீவிரவாதம்!


நாத்திக சைக்கோகளின் அடாவடி

**** கோவை: விநாயகர் சதுர்த்தி விசர்ஜன ஊர்வலம் நடக்கும் நிலையில் கோவையில், விநாயகரை அவமதிக்கும் வகையில் பிரசுரம் வெளியிட்ட தி.க.,வினர்! நேற்று முன்தினம் இரவு தி.க.,வைச் சேர்ந்த சிலர், கோவை ரேஸ்கோர்ஸ், சுங்கம் பகுதியில் "விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் பக்தர்களின் சிந்தனைக்கு' என்ற தலைப்பில் நான்கு பக்க துண்டு பிரசுரத்தை பொதுமக்களுக்கு வினியோகித்தனர். இப்பிரசுரத்தை படித்து பார்த்த பொதுமக்களும், இந்து அமைப்புகளும் மிகுந்த வேதனையும், கடும் அதிருப்தியும் அடைந்தனர். இது தொடர்பாக, வேதனை அடைந்த இந்து முன்னணி, பாரத் சேனா, விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்புகளைச் சேர்ந்த தொண்டர்கள், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, நேற்று காலை சுங்கம் பகுதியில் மறியலில் ஈடுபட முயன்றனர்.

நேற்று, இந்து முன்னணி மாநகர் மாவட்ட செயலர் சதீஷ் தலைமையில் இந்து முன்னணி, பாரத்சேனா, வி.எச்.பி., உள்ளிட்ட இந்து அமைப்புகள் ரேஸ்கோர்ஸ் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசனிடம் புகார் கொடுத்தனர். புகாரில்," முழுமுதற் கடவுள் விநாயகரை பல்வேறு வகையில் அவமதிக்கும் நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நோட்டீஸ் சென்னை, வேப்பேரியில் உள்ள திராவிடக் கழகம், தலைமை நிலையத்தில் இருந்து வெளியிட்டதாக அச்சிடப்பட்டிருந்தது. சம்பந்தப்பட்ட நோட்டீசை கைப்பற்றுவதோடு, இந்துக்கள் மனம் நோகும்படியாக, நோட்டீஸ் வினியோகித்தவர்களை கைது செய்து, கடுமையான தண்டனை விதிக்க வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது. புகார் மனுவை பெற்றுக் கொண்ட போலீசார், இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்! ****

தமிழகத்தைப் நாத்திக சைக்கோக்களின் இந்து அவமதிப்புச் செயல்கள் சகிக்க முடியாத அளவிற்குத் தொடர்வது வேதனை. இந்துக்களின் மனதைப் புண்படுத்தி அவர்களின் உணர்வுகளை அவமதிப்பதில் மிக குரூரமான குணத்துடன் நடந்து கொள்வதில் நாத்திக தீவிரவாதிகள் முன்னனியில் இருக்கிறார்கள்! ப.சிதம்பரத்தின் வழியில் இவர்கள் செய்வதை கருப்புத் தீவிரவாதம் எனலாமா?

'நல்ல தாய்க்குப்' பிறந்தவர்கள் நாத்திகத்தை எல்லா மதத்தினரிடமும் ஒரே மாதிரியாக பரப்புவார்கள் என்று பெரியோர்கள் கூறுவார்கள். ஆனால் தமிழகத்தின் நாத்திகத் தீவிரவாதிகள் தங்கள் கருப்புத் தீவிரவாதத்தை வேளாங்கன்னி மாதா கோவில் வைபவத்தின் போது செய்யவில்லை! கிறிஸ்தவர்களிடம் நாத்திகத்தை அவர்கள் இது போல் அச்சடித்த காகிதத்தால் பரப்பவில்லை! நடந்து முடிந்த ரம்ஜான் நிகழ்ச்சியின் போது மசூதிகளின் வாசலில் நின்று இது போல் அச்சடித்த காகிதத்தால் நாத்திகத்தை முஸ்லீம் மதத்தினரிடம் பரப்பவில்லை. பெரியோர்கள் வாக்குப்படி பார்த்தால் நாத்திகத்தை எல்லா மதத்தினரிடமும் ஒரே மாதிரியாக பரப்பாதவர்கள்.

இறை உரு மீது கல்வீச்சு

தூத்துக்குடி: திருச்செந்தூர் அருகே, நேற்று மாலை விநாயகர் ஊர்வலத்தின் மீது இரு இடங்களில் கற்கள் வீசப்பட்டதால், திடீர் பதட்டம் ஏற்பட்டது. திருச்செந்தூர் அருகே உடன்குடி பகுதியில், சதுர்த்தியையொட்டி 35க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள், முக்கிய இடங்களில் வைக்கப்பட்டிருந்தன. நேற்று மாலை ஐந்து மணியளவில் அந்த சிலைகள் அனைத்தும் உடன்குடி மெயின் பஜாருக்கு கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து ஊர்வலம் புறப்பட்டது. வழியில் பெரியதெரு, முகைதீன் புதுத்தெரு வழியாக ஊர்வலம் வந்தபோது மர்ம நபர்கள் கற்களை வீசினர். ****

மலேசியாவிலோ, அரபு நாட்டிலோ இந்து கடவுளை கொண்டு செல்லவில்லை! சொந்த நாட்டின் சொந்த மண்ணில் இறை வழிபாடை பாதுகாப்பாக செய்ய முடியவில்லை எனில் இந்நாட்டின் மதச்சார்பின்மையும் (என்ற போலித்தனம்) இறையான்மையும் கேள்விக்குரியதாகவே இருக்கிறது!

விநாயகரை வழிபட்டால் கைது?

****கோவை: செல்வபுரம் கல்லாமேடு பண்ணாரிமாரியம்மன் கோவில் பகுதியில், இந்து முன்னணி சார்பில், விநாயகர் சதுர்த்தி விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. மூன்றரை அடி உயர விநாயகர் சிலையை நேற்று முன் தினம் இரவு பிரதிஷ்டை செய்தனர். சதுர்த்தி விழாவையொட்டி, 20 ஆண்டுகளாக இங்கு இந்து முன்னணியினர் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்வது வழக்கம். கடந்த ஆண்டு இந்து முன்னணியைச் சேர்ந்த ஒருவர் இறந்ததால், சிலை பிரதிஷ்டை செய்யவில்லை. இந்த ஆண்டு வழக்கம் போல் சிலை பிரதிஷ்டை செய்ய போலீசாரிடம் இந்து முன்னணியினர் அனுமதி கோரினர். வேண்டு கோளை நிராகரித்த போலீசார், சிலையை வைக்கக்கூடாது என தடை விதித்தனர்.

இதை ஏற்றுக்கொள்ளாத இந்துமுன்னணியினர், பொறுப்பாளர் குணசேகரன் தலைமையில் மூன்றரை அடி விநாயகர் சிலையை நேற்று முன் தினம் இரவு பிரதிஷ்டை செய்தனர். தகவலறிந்த போலீஸ் துணை கமிஷனர் நாகராஜன், உதவிகமிஷனர்கள் குமாரசாமி, பாலாஜிசரவணன் ஆகியோர், "சிலை வைக்கக்கூடாது' என எதிர்ப்புத்தெரிவித்தனர். போலீசாரோ, முறையாக அனுமதி பெறாமல் விநாயகர் சிலையை வைக்கக்கூடாது எனக் கூறி, அப்புறப்படுத்த முயன்றனர். இதை கவனித்த பெண்கள் விநாயகரை சுற்றிவளைத்து அப்புறப்படுத்தவிடாமல் தடுத்தனர். இதையடுத்து, போலீசார் அங்கிருந்த இந்து முன்னணி தொண்டர்களை கைதுசெய்து வேனில் ஏற்றினர். விநாயகரை சுற்றி வளைத்து நின்ற பெண்களை தவிர்த்து விநாயகர் சிலையை போலீசாரால் கைப்பற்ற முடியவில்லை. அதனால் விநாயகர் சிலையையும் பெண்களையும் சேர்த்து கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றினர்.ஆண்கள், பெண்கள், சிறுமிகள், சிறுவர்கள் என்று மொத்தம் 146 பேரை போலீசார் கைது செய்தனர். கைதுசெய்தவர்களை பாதுகாப்பாக வைக்க கோவை நகரிலுள்ள பல திருமண மண்டபங்களை போலீசார் தேடி அலைந்தனர். விசேஷ நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்ததால் காலியாக எதுவும் இல்லை. கோவை அண்ணாமலை ஓட்டல் பகுதியில் வாகனத்தை நிறுத்தி கைது செய்தவர்களை இறங்க அறிவுறுத்தினர். ஒருவரும் இறங்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், ஸ்டேட் பாங்க் ரோட்டில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

நிலைமை மோசமாவதை உணர்ந்த போலீசார் கைது செய்தவர்களை போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்திற்கு கொண்டுசென்றனர். அங்கு கைது செய்யப்பட்டவர்களை இறக்கி விட்டனர் அங்கு விநாயகர் சிலையும் இறக்கி வைக்கப்பட்டது. இதையடுத்து கைதுசெய்யப்பட்டவர்களுக்கு மதிய உணவு போலீசாரால் வழங்கப்பட்டது. வாங்க மறுத்து அனைவரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று காலை நைட்டி அணிந்த நிலையில் கைது செய்யப்பட்ட பெண்கள் பலர் உணவருந்தாமல் போலீஸ் பயிற்சி மைதானத்திலேயே வைக்கப்பட்டனர். இதனிடையே இந்து முன்னணி நிர்வாகிகள் மற்றும் போலீசாருக்குமிடையே சிலை பிரதிஷ்டை செய்வது தொடர்பாக பேச்சு நடந்தது. இதில் எந்த முன்னேற்றமும் நேற்று மாலை வரை ஏற்படவில்லை. *****

போலீஸ்காரர்கள் இப்படி பாடுபட்டு போராடி, பெண்களையும் குழந்தைகளையும்
கைது செய்து கொடுமைப்படுத்தும் அளவிற்கு அவர்கள் என்ன செய்தார்கள். பண்டிகை தினத்தில் இந்துக்கள் இறைவழிபாடு செய்வது தவறா? புறம்போக்கு நிலத்தில் கட்டம் கட்டினாலே பட்டா போட்டுக் கொடுத்து ஓட்டு வாங்கத் துடிக்கும் அரசியல்வாதிகள், ஓரிரு தினங்கள் தற்காலிகமாக இறையுரு வைத்து வழிபாடு செய்வது குற்றம் எனக்கூறுவதும் அதற்கு எதிராக கடுமையாக அடக்குமுறைகளைக் கையாள்வதும் கண்டிக்கத்தக்கது.

ரங்கநாதன் தெருவில் அனுமதியின்றி கட்டப்பட்ட பல முறையற்ற கட்டிடங்கள் இன்னும் இடிக்கப்படாமல் இருக்கின்றன. அத்தகைய முறைகேடுகளை அனுமதிப்பது பரவாயில்லையாம். ஆனால் விநாயகர் சிலையை ஒரு நாள் தற்காலிகமாக வைத்து வழிபட்டால் அனுமதி இல்லை எனக்கூறி கைது செய்வார்களாம்! இது இந்துக்களுக்கு இழைக்கப்படும் கொடுமை என்பதைத் தவிர வேறில்லை! தமிழகத்தை ஆள்வது பாகிஸ்தானா?

தி மு க விற்கு இந்துக்கள் ஓட்டு போடும் வரை இந்த அவலத்தை தடுக்க முடியாது!


Saturday, September 11, 2010

மரணத்திற்கு அப்பால் - 18



"மரணத்திற்குபிறகு சில உயிர்கள் மனித உடம்பைப் பெறுகின்றனர். சில உயிர்கள் தாவரம் போன்ற நிலைகளை அடைகின்றனர். வினைப் பயனும், பெற்ற அனுபவமும் எப்படியோ அப்படியே அடுத்த பிறவி அமையும்". - எமதர்மன்.

மூலப் ப்ருக்ருதியான அண்டத்தின் மகா சக்தியை சாதகங்களை செய்தவர்கள் மட்டுமே காண முடிகிறது. ஆன்மாவை உணர்ந்து இறைவனின் ஆற்றலை உணர்ந்தவர்கள் மகா சக்தியை தரிசிக்கிறார்கள். மகா சக்தியை எந்தெந்த லோகத்தில் எந்தெந்த நிலையில் நம்மால் காணமுடியும் என்பதை நசிகேதனுக்கு உரைக்கிறார் எமதர்மன்.

"நசிகேதா! புத்தியில் கண்ணாடியில் போலவும், பித்ரு லோகத்தில் கனவில் போலவும், கந்தர்வ லோகத்தில் தண்ணீர்ல் போல் தெளிவற்றும் பிரம்ம லோகத்தில் நிழலும் வெயிலும் போல் தெளிவாகவும் அகக்காட்சி வாய்க்கிறது"

இவ்வாறான அகக்காட்சி தெளிவுற்று மனம் குழப்பங்களிலிருந்து விடுபட்டு நான் ஆன்மா என்பதை எவன் நிலையாக உணர்கிறானோ அவனே ஞானியாவான். அவ்வாறு குழப்பங்களில் இருந்து விடுபட மனிதன் தான் கொண்ட உடலும், உடலால் உணரப்படும் விஷயங்களையும் தனித்தனியே பிரித்தறிந்து அவை ஆன்மாவிலிர்ந்து வேறுபட்டது என்றும் ஆன்மாவே நிலையானது என்றும் உணர வேண்டும். அதை எவ்வாறு செய்வதென்பதை எமதர்மன் எடுத்துரைக்கிறார்.

"புலன்களின் தனித்தன்மை, அவற்றின் எழுச்சி மற்றும் ஒடுக்கம், தனித்தனியான உற்பத்தி ஆகியவற்றைப் பகுத்தறிகின்ற விவேகி கவலையிலிருந்து விடுபடுகிறான்."

மனிதர்கள் உட்பட உலகில் உள்ள யாவும் ப்ரபஞ்சத்திலிருந்து பிரிந்து வந்த ஒரே தன்மையிலான பொருளே! எனவே மனித உடலின் ஒவ்வொரு உறுப்பும் பிரபஞ்சத்தின் வெவ்வேறு பொருள்களின் தன்மைகளைக் கொண்டதாக இருப்பதே இயல்பு.

உதாரணமாக பெரியோர்கள் இவ்வாறு பகுக்கிறார்கள்!

காது ஒலியை பெறுவதற்கு வின்னை நோக்கி இருக்கும் செலுத்து சக்தி.
மூக்கு காற்றின் அழுத்தத்தத நோக்கி இருக்கும் வாயு சக்தி!
கண் ஒளியை நோக்கி இருக்கும் அக்கினியின் சக்தி!
நாக்கு சுவையைத் தேடி இருக்கும் தண்ணீரின் சக்தி!
உடம்பு மணத்தினால் இயங்கும் பூமியைப் போன்ற இயங்கு சக்தி!

இப்படி ஒவ்வொரு புலனும் பஞ்ச பூதங்கள் ஒவ்வொன்றிலிருந்து தனித்தனியாகத் தோன்றின, தனித்தனி செயல்களைச் செய்கின்றன எனலாம். இவைகள் விழிப்பு நிலையில் செயல்பட்டு கனவிலும் தூக்கத்திலும் ஒடுங்கி இருக்கின்றன. இவ்வகைப் புலன்கள் அனைத்தும் உயிர்சக்தியோடும் பிராணனோடும் சம்பந்தப்பட்டவை. இவ்வகைப் புலன்களுக்கும் ஆன்மாவிற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதே இதன் மூலப்பொருள் என்பதை உணரவேண்டும்.



"நசிகேதா! புலன்களைவிட உலகப் பொருட்கள் வலிமை வாய்ந்தவை. பொருட்களைவிட மனம் வலிமை வாய்ந்தது. மனத்தைவிட புத்தி வலிமை வாய்தது. மகிமை வாய்ந்ததான ஆன்மா புத்தியைவிட வலிமை வாய்ந்தது."

"மகிமை வாய்ந்ததான ஆன்மாவைவிட அவ்யக்தம் வலிமை வாய்ந்தது.(அவ்யக்தம் என்றால் ப்ரபஞ்சத்தின் ஆற்றல்) அவ்யக்தத்தைவிட இறைவன் வலிமை வாய்ந்தவர். இறைவனைவிட வலிமை வாய்ந்தது எதுவும் இல்லை. அவர் எங்கும் நிறைந்தவர், எந்த அடையாளமும் இல்லாதவர். அவரை அனுபூதியில் உணர்வதால் மனிதன் விடுபடுகிறான்; மரணமிலாப் பெருநிலையையும் அடைகிறான்"

இவ்வாரு உலக நிகழ்விகளிலிலிருந்து இறைவன் வரை உயர்வானதை எடுத்துக் கூறுகிறார் எமதர்மன். இவ்வாறு கூறக்காரணம் இறைவனை அடையும் லட்சியத்திலிருந்து அதாவது இறைநிலையை நம் ஆன்மா பெற்று, நாமே இறைவன் என்று இரண்டர கலக்கும் நிலையிலிருந்து நாம் எவ்வளவு தூரம் கீழே இருக்கிறோம் என்பதை இதை வைத்தே நாம் புரிந்து கொள்ளலாம்.

'புலன்களை விட உலகப் பொருட்கள் வலிமை வாய்ந்தவை' என்கிறார். அதாவது உலகத்தில் இருக்கும் பொருட்கள் எல்லாமே நம் புலன்களைக் கவரக்கூடியதாக இருக்கிறது. இயற்கைக்கு மயங்குகிறோம். மலரைப் பார்த்தால் கண் மயங்குகிறது. வாசனை நாசியை இழுக்கிறது. அழகிய பறவைகள் கவனத்தை இழுக்கின்றன. அதன் சப்தங்கள் செவியை கவர்கின்றன. உணவின் சுவை நாவை கட்டுப்படுத்துகிறது. காமம் உடலைக் கவர்கிறது. ஆனால் இவ்வாறு புலன்கள் செயல்படுவது அவற்றின் தனித்தன்மையே அன்றி இதயக் குகையில் உரைந்திருக்கும் ஆன்மாவிற்கும் புலன் இயக்கங்களுக்கும் சம்பந்தம் இல்லை. இதை யார் ஆழ்ந்து உணர்கிறார்களோ அவர்களது புலன்கள் மீதான மோகமும் இயக்கமும் இயல்பாகவே தங்கள் வேகத்தை இழக்கின்றன.

மேலும் மரணமில்லா நிலையை அடையும் வழியை நசிகேதனுக்கு உரைக்கிறார் எமதர்மன்.

"நசிகேதா! இறைவனுடைய உருவம் புறத்தில் காணக்கூடியதாக இல்லை. யாரும் அவரைக் கண்களால் காண்பதில்லை. இதயக் குகையிலுள்ள ஆன்மாவால் விழிப்புற்ற புத்தியில், மனத்தின் தொடர்ந்த முயற்சியால் உணரப்படுகிறார். அவரை அறிபவர்கள் மரணமற்றவர்களாக ஆகின்றனர்."

இறைவன் எனப்படுவது அண்டவெளியின் மைய சக்தி எனக்கொண்டால் அதை அனுவிலும் அனுவான மனிதக்கண்களால் காண முடியாது என்பதே உண்மை. இதனை ஆன்மாவை உணர்ந்தவர்கள் ஆன்மரூபத்தில் பிரபஞ்சத்தோடு கலந்தவர்கள் மட்டுமே காண முடியும்.

இதையே கீதையில் பகவான் அர்ஜுனனிடம் இவ்வாறு கூறுகிறார்...

"அர்ஜுனா! உனது இந்த ஊனக்கண்ணால் என்னை நீ காண முடியாது. உனக்கு ஞானக்கண் கொடுக்கிறேன். என்னுடைய ஈஸ்வர யோக நிலையைப் பார்."



ஸ்ரீ க்ருஷ்ணர் அருஜுனன்னுக்குத் தன்னுடைய மேலான ஈஸ்வர வடிவத்தைக் காட்டி அருளினார். அவ்வடிவம் அநேக முகங்கள் கண்கள் உடையது. தெய்வீக ஆபரணங்கள் பல அணிந்தது. தெய்வீக ஆயுதங்கள் பல ஏந்தியது.

திவ்யமான மாலைகளையும் ஆடைகளையும் அணிந்து கொண்டும் திவ்யமான வாசனையைப் பூசிக்கொண்டும், பெரும் வியப்பூட்டும் வகையிலும் ஒளி வீசிக்கொண்டும் எல்லாத் திசைகளிலும் முகங்களைக் கொண்டதாயும் இருந்தது. வானத்தில் ஒரே நேரத்தில் ஆயிரம் சூரியர்கள் ஒளி வீசினால் எவ்வளவு பேரொளி தோன்றுமோ, அவ்வளவு ஒளியோடு அந்த மகாத்மாவின் உருவம் பிரகாசித்தது.



"எதைப் பற்றி பலரால் கேட்க முடியவில்லையோ, கேட்டும் பலரால் எதனை அறிய முடியவில்லையோ அந்த ஆன்மாவைப் பற்றி உபதேசிப்பவரும் அபூர்வம். கேட்பவரும் அபூர்வம். அத்தகைய அபூர்வமான ஒருவரைப் பின்பற்றி அதனை அறிபவரும் அபூர்வம்."


(ஆன்மாவை அறிவோம்...)


மரணத்திற்கு அப்பால் - 19



Friday, September 10, 2010

ஒளவைப்பாட்டி அருளிய விநாயகர் அகவல்!


சீதக் களபச் செந்தாமரைப் பூம்
பாதச் சிலம்பு பல இசை பாடப்
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்ன மருங்கில் வளர்ந்தழகு எறிப்பப்
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்


வேழ முகமும் விளங்கு சிந்தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சில் குடிகொண்ட நீல மேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்


இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்டமுப் புரிநூல் திகழ் ஒளி மார்பும்
சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் நின்ற கற்பகக் களிறே!
முப்பழம் நுகரும் மூஷீக வாகன!


இப்பொழுது என்னை ஆட்கொள வேண்டித்
தாயாய் எனக்குத் தானெழுந்து அருளி
மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்
திருந்திய முதல் ஐந்தெழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே வந்தென் உளந்தனிற் புகுந்து


குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறம் இது பொருளென
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டி என் செவியில்


தெவிட்டாத ஞானத் தெளிவையுங் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்
கருவிகள் ஒடுங்கும் கருத்தினை அறிவித்து
இருவினை தன்னை அறுத்திருள் கடந்து


தலமொரு நான்கும் தந்தெனக் கருளி
மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே
ஒன்பது வாயில் ஒரு மந்திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி
ஆறாதாரத்து அங்குச நிலையும்


பேறா நிறுத்திப் பேச்சுரை அறுத்தே
இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்
கடையில் கழுமுனைக் கபாலமும் காட்டி
மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக்


குண்டலி அதனில் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலாதாரத்து மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்தறி வித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்


குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடச் சக்கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடற் சக்கரத்தின் உறுப்பையும் காட்டிச்
சண்முக தூலமும் சதுர்முக சூட்சமும்
எண்முகமாக இனிதெனக்கு அருளிப்


புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரிஎட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்
கருத்தினிற் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி இனிதெனக்கு அருளி
என்னை அறிவித்து எனக்கருள் செய்து


முன்னை வினையின் முதலைக் களைந்தே
வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே என்றன் சிந்தை தெளிவித்து
இருள்வெளி இரண்டுக்கு ஒன்றிடம் என்ன
அருள்தரும் ஆனந்தத்து அழுத்தி என் செவியில்


எல்லை இல்லா ஆனந்தம் அளித்து
அல்லல் களைந்தே அருள் வழி காட்டிச்
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி
அணுவிற்கு அணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய்


கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தின் அரும் பொருள் தன்னை
நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துக்


தத்துவ நிலையைத் தந்தெனை ஆண்ட
வித்தக விநாயக! விரைகழல் சரணே!



அன்பர்கள் நண்பர்கள் அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்!



தும்பிக்கையோனே! வணக்கம்!