Tuesday, August 23, 2011

தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!



சம்பந்தமே இல்லாமல் இன்றைக்கு என்ன தமிழ் புத்தாண்டு வாழ்த்து என்கிறீர்களா? இதோ தினமலரில் இது பற்றி செய்தி

சென்னை: கடந்த தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட தமிழ் புத்தாண்டு ரத்து செய்யப்பட்டு சித்திரை மாதம் முதல் நாளிலேயே தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இன்று நடந்த சட்டசபையில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


தை மாதம் முதல் நாளில் தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படும் என தி.மு.க., சட்டம் இந்நிலையில் இயற்றியது. இன்றைய சட்டசபையில் இன்று தமிழக அரசு ரத்து செய்தது. மீண்டும் சித்திரை முதல் நாளில் தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படும் என்று புதிய சட்ட மசோதாவை அவையில் அரசு தாக்கல் செய்தது. பல்லாண்டு காலம் நடைமுறையில் இருந்த வழக்கத்தை மாற்ற வேண்டாம் என தொல்லியல், வானிலை நிபுணர்கள் தெரிவித்த கருத்தின்படி இந்த மாற்றம் கொண்டு வருவதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப் பட்டுள்ளது. மேலும் தை மாதம் ( பொங்கல் நாளில் ) கொண்டாடப்படுவது மக்களுக்கு பல்வேறு தொந்தரவுகள் இருந்ததாகவும் அரசு தனது மசோதாவில் கூறியுள்ளது. இந்த மசோதாவை அறநிலையத் துறை அமைச்சர் சண்முகநாதன் தாக்கல் செய்தார். இதன் படி சித்திரை ஒன்று ஏப்ரல் 14 ம் தேதி தமிழ்புத்தாண்டாக கொண்டாடப்படும்.


‌‌ஜெ., விளக்கம் சொல்கிறார்: இது தொடர்பாக அவர் சட்டப்பேரவையில் முதலவ்ர் ஜெ., ‌பேசுகையில், தமிழ் புத்தாண்டு சட்டம் சுய விளம்பரத்துக்காக இயற்றப்பட்டதே தவிர மக்களுக்கு எந்தவித நன்மையும் இல்லை. ஆண்டாண்டு காலமாக சித்திரை மாதத்தை தமிழ் புத்தாண்டாக கொண்டாடும் தமிழக மக்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக அமைந்துள்ளது. இந்த சட்டம் இயற்றப்பட்ட உடன் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. விளம்பரத்திற்காக இது உருவாக்கப்பட்டது. இதை தவிர இந்த சட்டத்தினால் யாருக்கும் நன்மை இல்லை என்றார்...


மொத்தத்தில் ஹிந்து மதத்தினரை மட்டுமே குறிவைத்து ஹிந்துப் பண்டிகைகளை மட்டுமே அவமானப்படுத்திக் கொண்டிருந்த
அயோக்கியர்கள் முகத்தில் கரிபூசிய நன்னாள் என இன்னாளைக் கொள்ளலாம்.

கடந்த தேர்தலில் கருனாநிதியின் கேவலமான தோல்வி வெறும் அரசியல் ரீதியானது மட்டுமல்ல ஹிந்துக்களின் உணர்வுகள் மோசமாக
புன்படுத்தப்பட்டதாலும் ஏற்பட்டது தான் என்பதை கடைசி காலத்திலாவது அந்த மனிதர் உணர வேண்டும்.

இந்த லட்சனத்தில் இவர் கருத்து வேறு கூறுகிறாராம்.


கருணாநிதி கருத்து என்ன ? : தி.மு.க., தலைவர் கருணாநிதி இது குறித்து வெளியிட்டுள்ள அறிகையில்: தமிழ் புத்தாண்டு தை த்திங்கள் முதல் நாளில் கொண்டு வரவேண்டும் என தமிழ் புலவர்கள் கோரிக்கை வைத்ததன் காரணமாகத்தான் மாற்றி அமைக்கப்பட்டது. 1921 ம் ஆண்டு முதல் மறை மலை அடிகள் தலைமையில் 500 புலவர்கள் அந்நாள் முதல் இதனை வலியுறுத்தி வந்தனர். தமிழ் புத்தாண்டை மாற்றுவது என்பது தி.மு.க.,வின் முடிவு அல்ல. இடதுசாரி கட்சிகளின் தமிழ் உணர்வு பாராட்டத்தக்கது . இவ்வாறு அவர் கூறியுள்ளார்


ஆக இவருக்காக சொந்தமாக தமிழர் புத்தாண்டு பற்றி எந்த அறிவும் கிடையாது. யாரோ 500 புலவர்கள்கூறினராம் இவர் தமிழ் புத்தாண்டை மாற்றினாராம். இது தி மு க வின் முடிவும் இல்லையாம். பிறகு ஏன் தமிழ் புத்தாண்டு தினத்தை கிறிஸ்தவ புத்தாண்டோடு சேர்த்து வைத்ததற்கு இவருக்கு பாராட்டு விழா நடத்தினார்களாம்? அதற்கும் வேறு புலவர்கள் யாராவது விளக்கம் அளிக்கலாம். அவைப்புலவர் வைரமுத்து வருவாரோ?

சரி, எல்லோருக்கும் இன்றைய சுபயோக சுபதினத்தில் வெளியான அறிவிப்பின் காரணமாக எதிர் வரும் தமிழ் புத்தாண்டு தினத்திற்கு முன்கூட்டியே வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!.

No comments: