எழுத்து: பால. கௌதமன்
கடலூரில் 18.5.2013
அன்று நாம் தமிழர் கட்சி நடத்திய தமிழர்
எழுச்சிக் கூட்டத்தில் காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவர் யாசின் மாலிக்
கலந்துகொண்டு, தனி நாடு போராட்டம் வெற்றி பெரும். நீங்கள் தனித்து விடப்பட்டதாக எண்ண வேண்டாம். உங்களுடன்
நான் இருக்கிறேன். நான் சிறு வயதிலேயே ஆயுதம் ஏந்தி போராடினேன் என்று
வன்முறை மற்றும் பிரிவினைவாதத்தை தூண்டும் விதமாகப் பேசினார். இதற்கு
காங்கிரஸ், பா.ஜ.க மற்றும்
தேசியச் சிந்தனையுள்ள அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. ஒரு வழக்கும் கடலூரில் பதிவு செய்யப்பட்டது. ஆனால்
அதில் தேசத்துக்கு எதிராக போர் தொடுப்பது போன்ற பிரிவுகள் இடம் பெறவில்லை. ஒரு கண்
துடைப்பு வழக்காகவே அது தெரிகிறது.
இந்நிலையில், யாசின் மாலிக்கிற்கும், சீமானிற்கும் எதிராக எழுந்த கண்டனத்திற்கு, செபஸ்டியன்
சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். யாசின்
மாலிக் தலைவராக இருக்கும் ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணி ஒரு தடை செய்யப்பட்ட இயக்கம்
அல்ல. இந்திய நாட்டின் குடிமகனான அவருக்கு இந்த நாட்டில் எங்கு வேண்டுமானாலும்
சென்று பேச அரசமைப்பு சட்ட ரீதியாக அவருக்கு உரிமை உள்ளது. காஷ்மீர் மக்களுக்காக, அவர்களின்
உரிமைக்காக போராடி வருபவர் காஷ்மீர் பயங்கரவாதியா? யாசின்
மாலிக் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதி என்றால், அவருடன் இந்தியாவின் பிரதமராக வாஜ்பாய்
இருந்தபோதும், இன்றுள்ள மன்மோகன் சிங் அரசும் எதற்காக பேசுகின்றன? மத்திய அரசுகள் யாசின் மாலிக்
போன்றவர்களுடன் பேசுகின்றனர் என்றால் அவர்கள் காஷ்மீர் மக்களின் உண்மையான
தலைவர்கள் என்கிற காரணத்தினால்தானே? என்று திரைப்படத்தில் விவேக் சூடான தோசைக்கல்லில்
”சீட்’டை வைத்து துள்ளியது போல் பின்னால் பிடித்துக் கொண்டு பொங்கி கதறுகிறார். இதை
பரிமேலழகர் விளக்கம் போல பிரசுரிக்க சில பத்திரிகைகள்!
ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணி தடை செய்யப்பட்ட இயக்கமல்ல, ஆனால் எல்.டி.டி.ஈ (LTTE) தடை
செய்யப்பட்ட இயக்கமாச்சே? அப்படியென்றால், பிரபாகரன் படத்தை போட்டு பிரச்சாரம் செய்த
சீமானை என்ன செய்ய வேண்டும்? அந்த எல்.டி.டி.ஈ (LTTE) அமைப்பை
ஆதரித்து பிரச்சாரம் செய்வது குற்றம் என்று சிலரை கைது செய்தால் சீமான் அதை
ஏற்றுக் கொள்வாரா? சட்டத்தின்படி அரசு நடக்கிறது என்று சர்டிபிகேட்
கொடுப்பாரா? சட்டத்தை எரிப்பேன், கருத்துச் சுதந்திரம், மனித உரிமை என்றெல்லாம் சொல்லி அறிக்கை
அரசியலும், விசாரணை கமிஷனும் அமைத்து, பத்திரிகை பக்கங்களை நிறைத்திருப்பார்களே! ஜே.கே.எல்.எப்(JKLF) அமைப்புக்காக
தடை செய்யப்பட்ட இயக்கப் பட்டியலை வாசிக்கும் செபஸ்டியன் சீமானின் கண்ணில் எல்.டி.டி.ஈ (LTTE) பெயர் படவில்லையா?
// இந்திய
நாட்டின் குடிமகனான அவருக்கு (யாசின் மாலிக்) இந்த நாட்டில் எங்கு வேண்டுமானாலும் சென்று பேச
அரசமைப்பு சட்ட ரீதியாக அவருக்கு உரிமை உள்ளது.//
ஆனால் என்ன பேசக்கூடாது என்று சட்டம் சொல்கிறதே! அதுவும்
சீமானுக்கு தெரியுமே! நடிகை
விஜயலட்சுமியின் மீது ஜூன் 2011ல் பேசக்கூடாததை பேசுகிறார் என்று 5 கோடி
ரூபாய் நஷ்ட ஈடு கேட்கும் போது, இடம், பொருள், ஏவல் என்ற நயங்கள், சட்டம் எல்லாம் நியாபகத்திற்கு வரும். மாலிக்
என்றால் பேச்சுச் சுதந்திரம்! விஜயலட்சுமி என்றால்....?
// காஷ்மீர்
மக்களுக்காக, அவர்களின் உரிமைக்காக போராடி வருபவர் காஷ்மீர் பயங்கரவாதியா? //
நியாயமான வாதம்! யார் அந்த காஷ்மீர் மக்கள்?
காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து இதே யாசின் மாலிக்
கூட்டத்தினரால் விரட்டப்பட்ட இந்துக்கள் காஷ்மீரிகள் இல்லையா? இவர்கள்
பள்ளத்தாக்கின் ஜனத்தொகையில் 15 % ஆச்சே! இப்படி
பல நூற்றாண்டுகளாக மண்ணின் மைந்தர்களாக வாழ்ந்து வந்தவர்களை விரட்டிவிட்டது தான்
மக்கள் போராட்டமா? உரிமைப் போராட்டமா? பின் யாருக்காக இந்தப் போராட்டம்? தாருல்
இஸ்லாம் என்ற பெயரில் உலகம் முழுவதையும் இஸ்லாமிய மயமாக்கும் அன்னிய, குறிப்பாக
பாகிஸ்தான் ஆதரவுப் போராட்டம் தானே இது?
இலங்கையிலும் கூட, இலங்கை இராணுவத்தினரால் கொல்லப்பட்டது போல்
எத்தனைத் தமிழர்கள் எல்.டி.டி.ஈ யினரால் (LTTE) சித்திரவதை
செய்து கொல்லப்பட்டனர்? இலங்கைத் தமிழருக்கான போராட்டம் என்றால், ஏன்
தமிழர்களை எல்.டி.டி.ஈ (LTTE) கொல்ல
வேண்டும்? இனத்தின் பெயரில் நடக்கும் அராஜகங்களின் சங்கமம் தானே இந்த யாஸின்
மாலிக்கின் கடலூர் கூட்டம்!
// யாசின்
மாலிக் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதி என்றால், அவருடன் இந்தியாவின் பிரதமராக வாஜ்பாய்
இருந்தபோதும், இன்றுள்ள மன்மோகன் சிங் அரசும் எதற்காக பேசுகின்றன?//
ஜனநாயத்தில் நம்பிக்கையுள்ள தலைவர்கள் செய்யும் வேலை இது. ஆனால்
ஜனநாயக வாதிகளிடம் தான் இதை செய்ய வேண்டும். அடிப்படை இஸ்லாமியக் கோட்பாடுகளின்படி, உலகாதய
இஸ்லாமிய அடையாள ( pan-islamic
identity) கொள்கையாகக் கொண்டுள்ள தேசத்துரோகிகளுடன்
பேச்சு நடத்துவது அர்த்தமில்லாத காரியம் என்பதை விரைவில் இத் தலைவர்கள் புரிந்து
கொள்வர்.
// மத்திய
அரசுகள் யாசின் மாலிக் போன்றவர்களுடன் பேசுகின்றனர் என்றால் அவர்கள் காஷ்மீர்
மக்களின் உண்மையான தலைவர்கள் என்கிற காரணத்தினால்தானா?//
இந்தக் கேள்வியை காஷ்மீர் இந்துக்களிடமும், இலங்கையிலுள்ள
எல்.டி.டி.ஈ (LTTE) அல்லாத
தமிழ் அமைப்புகளிடமும் கேட்கலாமா?
எல்.டி.டி.ஈ (LTTE)
யை ஆதரிக்காதவன் தமிழனா?
இலங்கை போரின் போதும், அதற்குப் பின்னரும் பிரபாகரனையும், எல்.டி.டி.ஈ (LTTE) கொள்கைகளையும்
விமர்சித்தால் அவன் தமிழினத் துரோகி. இந்த அடிப்படையில் யாசின் மாலிக் யார்? துரோகியில்லையா? இந்த
இஸ்லாமியக் கூட்டங்கள் தானே, இலங்கை கிழக்கு மாகாணத்தில் தமிழருக்கு எதிராக சதிகள் பல
செய்தது! இலங்கை போரிலே, ராஜபக்ஸெ அரசுக்கு ஆயுதம் வழங்கிய பாகிஸ்தானின் உற்ற
நண்பன் யாஸின் மாலிக் எப்படி இலங்கை தமிழர்களின் நண்பனானார்? இலங்கைத்
தமிழர்களுக்கு எதிரான ஐ.நாவின் மனித உரிமை மீரல்கள் தீர்மானத்தை எதிர்த்த
பாகிஸ்தானை யாசின் மாலிக் கண்டித்தாரா? அந்தத் தீர்மானத்தை ஆதரித்த இந்தியாவை மனித உரிமை
பாதுகாவலன் என்று அழைத்தாரா? எப்படி இந்தத் தமிழ் துரோகி பூனைக்கு நண்பனாகவும்
பாலுக்கு காவலாளியுமாக மாறினார்?
ஒருபுறம் தமிழன் யார் என்றால் பிரபாகரனை ஆதரிப்பவன்
என்று விளக்கம் சொல்லிவிட்டு, தமிழினத் துரோகிகள் என்று பிரபாகரனால் அடையாளம்
காட்டப்பட்ட முஸ்லிம் அடிப்படைவாதிகளான மனித நேய மக்கள் கட்சிக் கூட்டத்தில்
சென்று விடுதலைப் புலிகள் சார்பாக உங்களிடம் மன்னிப்புக் கேட்கிறேன் என்கிறார்
செபஸ்டியன் சீமான். விடுதலைப் புலிகள் அமைப்பு என்றாவது வன்முறைக்கு மன்னிப்பு
கேட்டதுண்டா? அப்படியே கேட்டிருந்தாலும் சீமானை என்றாவது பிரதிநிதியாக அறிவித்து
மன்னிப்பு கேட்கச் சொன்னதா? அப்படி அறிவித்திருந்தால் சீமான் தடை செய்யப்பட்ட
அமைப்பைச் சேர்ந்தவர் என்ற அடிப்படையில், கைது செய்யலாமா? யாசின் மாலிக்கை கடலூருக்கு அழைத்ததை நியாயப்
படுத்த இந்த நியாயத்தைத்தானே சீமான் முன்வைத்தார்?
இந்தியாவுக்கு எதிராக குரல் கொடுப்பவரெல்லாம்
தமிழினக்காவலர் - இது தானே சீமானின் தமிழருக்கான வரையறை?
இடையிடையே ஒரு இந்து டச்(Touch) வேறு....
// இலங்கைத்
தமிழர்கள் வழிபட்டுவந்த இரண்டாயிரம் கோயில்கள் இடித்துத்தள்ளப்பட்டதே //
காஷ்மீரில் யாசின் மாலிக் கூட்டத்தினரால் பல்லாயிரம்
கோயில்கள் இடிக்கப்பட்டுள்ளதே! அப்போது ஏன் இந்தப் புலி் பாயவில்லை ? சரி, காஷ்மிர்
இந்துக்கள் தமிழர்களில்லை, முஸ்லீம்கள் மட்டும் தமிழர்கள் என்று வைத்துக் கொள்வோம்! மலேசியாவில்
சம உரிமை கோரி போராட்டம் நடத்தும் தமிழர்கள் மலாய் அல்லது மெண்டிரின் மொழிகளா
பேசுகிறார்கள்? இவர்களுக்காக சீமப்புலி ஏன் சீறவில்லை? பல்லில் முஸ்லீம் சீழ் கோர்த்துக்
கொண்டுவிட்டதோ!
போராட்டங்களின் அயோக்கியத்தனம்
திருப்பதி கோயிலுக்கு ராஜபக்ஸெ வருகிறார் என்றவுடன்
திருப்பதியில் போராட்டம் நடத்த கிளம்புகிறார்! சென்னையிலுள்ள திருப்பதி தேவஸ்தான கோயிலின்
முன் ஆர்ப்பாட்டம்! எதிர்த்து அறிக்கை விடாதவர்கள் தமிழின துரோகிகள்! ஒத்துக்
கொள்கிறேன்....சொன்னவர் மட்டும்தானே செந்தமிழன்.....நாமெல்லாம் கருந்தமிழன்....சிகப்பின் மோகம் புரிகிறதா? விஜய
லட்சுமியும் சிகப்பு தானே? அதனால் தான் சிகப்புப் போப்பை ராஜபக்ஸெ சந்தித்த போது
கத்தோலிக்க சர்ச்சுகள், போப்பின் அதிகாரப்பூர்வ ஏஜண்ட்டுகளான பிஷப்புகளின்
மாளிகைகள் போன்றவற்றை செபஸ்டியன் சீமா(சைம)ன் ஏன் முற்றுகையிடவில்லை! இலங்கைத் தீர்மானத்தில் ராஜபக்ஸெ அரசுக்கு
எதிராக வாக்களித்த மத்திய அரசின் அலுவலகங்களுக்கு பூட்டுப் போட கிளம்பிய இந்த
புற்றுப் பாம்புகளுக்கு, ராஜபக்ஸெவுக்கு ஆசி வழங்கிய போப்பின் சர்சுகளை தமிழ்
நாட்டில் பூட்ட, திண்டுக்கலில் பூட்டு செய்யப்படவில்லையா? அல்லது சர்ச்சுகளுக்கு கதவில்லையா? கதவில்லாத
சர்ச்சில் போதகர்கள் ஜான் ஜோசப்பும், வின்சன்ட் செல்வகுமாரும், குஜாலாக இருந்திருக்க முடியுமா?
2012 ஆகஸ்ட்
மாதம் இலங்கை தமிழர்களை ஆதரிக்கும் காட்டுமிராண்டிக் கூட்டம் தமிழகத்தில்
தலையெடுத்துள்ளது என்று சிங்களக் கத்தோலிக்க பத்திரிகை சீமான் கூட்டத்தினருக்கு
சர்டிபிகேட் கொடுத்தனர். அதே கத்தோலிக்க அமைப்பின் யாழ் பேராயர் தாமஸ்
சவுந்தரநாயகம் மற்றும் மன்னார் பேராயர் ராயப்பு ஜோசப் உங்கள் அமைப்பினரை
வன்மையாகக் கண்டித்து, வேளாங்கன்னிக்கு வரும் யாத்திரிகர்களை தடுக்கக் கூடாது
என்று உத்திரவிட்டவுடன் போராட்டம் மாயமானது ஏன்? சிங்களர் வேளாங்கன்னிக்கு வந்தால்
சர்சுக்குப் பூட்டுப் போடும் போராட்டத்தை அறிவித்திருக்கலாமே? சென்னை
ரயில் நிலையத்திலும் தஞ்சையிலும் விரட்டி விரட்டி அடித்த சிங்களர்களைப் போல, வேளாங்கன்னிக்கு
வந்த கிறிஸ்தவர்களையும் அடித்திருக்கலாமே? ஆண்டுதோறும் ஹரிஜன சகோதரர்களை அன்பு
பௌத்ததிற்கு மதமாற்றும் ஆருயிர் நண்பர், சிறுத்தைப்புலி திருமாவளவனிடம், வரிப்புலி சீமான் பௌத்த எதிர்ப்புப்
போராட்டம் நடத்த வேண்டலாமே?
இலங்கையில் நடந்த போர் குற்றங்களை 2009 ல் சேனல் - 4 வெளியிட்டது. அப்போதே
குழந்தையை கொன்ற படமும் வெளியிடப்பட்டது. பின் 2012ல் மீண்டும் இந்த குழிப்பிள்ளைக்கு எழவு எடுக்கப்பட்டது. எங்கு இது
தொடங்கியது? லயோலா கல்லூரி வளாகத்தில்! ஆரம்பத்தில் இதற்கு ஆதரவு இல்லை. மாநிலம் முழுவதும் கலகத்தை ஏற்படுத்த, கிறிஸ்தவ
நிறுவனங்களான பாளையங்கோட்டை சேவியர்ஸ், வேலூர் வோர்ஸ் மற்றும் திருச்சி ஜோசப் கல்லூரிகளில்
உண்ணாவிரதங்கள் தொடங்கப்பட்டன. உணர்ச்சிகள் தூண்டப்பட்டு மாணவர்கள் மற்றும்
பலதரப்பினரும் போராட்டத்தில் குதித்தனர். போராட்டத்தின் பொது எதிரியாக இலங்கை அரசும், இந்திய
அரசும் அடையாளம் காட்டப்பட்டன. உண்ணாவிரதமிருந்த கிறிஸ்தவ மாணவன் பிரிட்டோ ஹீரோவாக்கப்பட்டான். இலங்கை
அரசு போர் குற்றம் செய்தது, அதற்காக இந்திய அரசின் நிறுவனங்களையும், இந்திய
அரசையும் ஏன் தாக்க வேண்டும்? இந்திய ராணுவ வாகனத்தை ஏன் தாக்க வேண்டும்? இந்தப்
புலிக்கூட்டத்தின் கழுதைப்புலி உதயகுமார், இந்தப் பிரச்சினைக்கு தனி ஈழத்துடன் தனித்தமிழ்நாடே
தீர்வு என்று முக நூலில் எழுதினார். இப்படி கிறிஸ்தவ நிறுவனங்கள், இன்னும் சொல்லப்போனால் கத்தோலிக்க
நிறுவனங்களின் தயவில் போராடுபவர்கள், ராஜபக்ஸெவுக்கு ஆசி வழங்கிய போப்பின் படத்தை அந்த
நிறுவனங்களிலிருந்து அகற்றினார்களா? அல்லது போப்பின் கொடும்பாவியை கொளுத்தினார்களா? அல்லது
இவர்களுக்கே உரித்தான வழியில் படத்தின் மீது கல்லெரிந்தார்களா?
முல்லைப் பெரியாருக்காக போராடுகிறேன் என்று சொல்லிவிட்டு, ஐயப்ப
பக்தர்களை தடுத்த சீமான், அப்பாவி மீனவர்களை கொல்லும் இலங்கைக்கு எதிராக
கச்சத்தீவு அந்தோணியார் விழாவுக்கு செல்லும் கிறிஸ்தவர்களை ஏன் தடுக்கவில்லை?
திருவள்ளுவர் தாமஸுடன் ஏற்பட்ட தொடர்பினால் திருக்குறள்
எழுதினார் என்று வள்ளுவரையும், தமிழையும் கொச்சைப்படுத்தியவர் தெய்வநாயகம். அவருடன்
இணைந்து போராட்டம் நடத்துகிறார் நம்
’செந்’ தமிழர் . தெய்வத்தமிழ் தேவாரம் அருளிய ஞானசம்பந்தப் பெருமானை கொச்சைப்படுத்தியும், தமிழ்
வேதம் அருளிய ஆண்டாளை வேசியாக வரித்து கதை எழுதுபவரையும், கம்பனையும், கண்ணகியையும் நாராசமாக வசைபாடுபவரையும்
என்றாவது செபஸ்டியன் சீமா(சைம)ன் கண்டித்ததுண்டா?
’எங்களுக்கும்
சிங்களர்களுக்கும் உள்ள உள்நாட்டுப் பிரச்சினை’ என்று 80 களில் பிரேமதாஸாவுடன் கூட்டுச் சேர்ந்து, அப்பாவித்
தமிழர்களை கொல்லும் போது பிரபாகரனை சிங்களருடன் தொப்புள் கொடி இணைத்தது. அதே
சிங்களனிடம் அடிவாங்கும் போது தொப்புள் கொடி வங்கக்கடலை கடந்து தமிழகத்தை நோக்கி
நீள்கிறது.
மொழியை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தி பிரிவினைவாதத்தை
தூண்டும் சீமான், மதத்தை வைத்து பிரிவினைவாதத்தைத் தூண்டும் சர்ச், மற்றும் யாசின் மாலிக்குடன் ’கை’ கோர்ப்பது
ஆச்சரியமில்லை. இது ஆபத்து! தமிழுக்கும், தமிழ் நாட்டிற்கும், தமிழ் பண்பாட்டிற்கும் இது பேராபத்து!
சைமனுக்கு சங்கூதாவிட்டால் தமிழுக்கு சங்கு
ஊதிவிடுவார்கள் துரோகிகள்!
தமிழர்களே உஷார் !
- பால. கௌதமன்
1 comment:
Good write up
Post a Comment