Friday, June 14, 2013

மணிமண்டபமும் மானங்கெட்ட அரசியலும் - பாகம் 2


- பால கௌதமன்



உலகத்தை உலுக்கிய பயங்கரவாதி ஒசாமா பின் லாடன், அமெரிக்கப் படைகளால் கொல்லப்பட்டான். அவன் உடலை விமானத்தில் எடுத்துச்சென்று நடுக்கடலில் விட்டெரிந்தனர் அமெரிக்கர்கள்! என்ன காரணம்? நிலத்தில் அடக்கம் செய்தால் அது தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் ஒரு நினைவுச் சின்னமாகிவிடும்! அது உலக அமைதிக்கு நிரந்தரத் தலைவலி ஆகிவிடும் என்பதால் கடலில் மீன்களுக்கு இரையாக வீசப்பட்டது ஒசாமாவின் சடலம் ! உலகம் இச்செயலை வரவேற்றது. இது தான் உலக ஒழுக்கம்.

இந்த ஒசாமாவின் உடலை மரியாதையுடன் அடக்கம் செய்ய ஒருவன் கோரினால் அவனை என்ன சொல்வோம்? அப்படித்தான் இந்த திப்புவின் மணிமண்டபக் கோரிக்கையும்!

ஏன் இந்தக் கோரிக்கை எழுந்தது? எதற்காக திண்டுக்கல்லில் மணிமண்டபம்? இதிலிருக்கும் பின்னணி என்ன? திப்பு மற்றும் ஹைதர் அலியை ஏன் முஸ்லிம்கள் முன்நிறுத்துகின்றனர்? எனபன போன்ற பல கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கான விடைகளைக் காண்போம்.

2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், மத்திய மைனாரிட்டி விவகாரத்துறை அமைச்சகம், அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தைப் போல் நாடு முழுவதும் 5 பல்கலைக் கழகங்களை கர்நாடகா, பீகார், பெங்கால், மத்தியப் பிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மிர் ஆகிய மாநிலங்களில் நிறுவ முடிவெடுத்தது. இந்தப் பல்கலைக்கழகங்கள், இந்திய அரசியலமைப்புச் சட்ட ஷரத்து 31-ன் கீழ், மைனாரிட்டி அந்தஸ்துப் பெற்று, மைனாரிட்டிக்களுக்கு 50% இடங்கள் ஒதுக்கப்படும் என்றும் அறிவித்தது. பொதுவாக, இது போன்ற அறிவிப்புகளை மைனாரிட்டி  அமைப்புக்கள் வரவேற்றுப் பாராட்டு விழா நடத்துவது நம் நாட்டில் வாடிக்கையான விஷயம். ஆனால் வழக்கத்திற்கு மாறாக,  12 மார்ச் 2013 அன்று பெங்களூர் எம்.ஜி ரோடில் டி.ஜெ.ஆப்பிரகாம் என்பவர் தலைமையில் 17 கொங்கிணி கத்தோலிக்க நிறுவனங்களை சேர்ந்தவர்கள் கொங்கிணி கத்தோலிக்க கிறிஸ்தவச் சங்கம் என்ற பெயரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மைனாரிட்டி அமைச்சகம் கர்நாடகத்தில், ஸ்ரீரங்கப்பட்டணத்தில் திப்பு சுல்தான் பெயரில் இந்த பல்கலைக்கழகம் நிறுவப்படும் என்று அறிவித்ததுதான் இதற்குக் காரணம். போராட்டக்காரர்கள்  என்ன சொல்கிறார்கள்? ஸ்ரீரங்கப்பட்டணத்தில் இந்தப் பல்கலைக்கழகம் நிறுவப்படுவது வரவேற்கத்தக்கது. ஆனால் திப்பு சுல்தான் பெயரை அதற்கு வைப்பது, கத்தோலிக்கர்களை அவமானப்படுத்துவதற்கு ஒப்பாகும் என்று சொல்கிறார்கள்.
கத்தோலிக்கர்களுக்கு ஏன் திப்புவின் மீது இவ்வளவு கோபம்? ஆப்பிரகாம் என்ன சொல்கிறார்?

திப்பு, கர்நாடகக் கடற்கரை பகுதிகளில் வசிக்கும் 70,000 கிறிஸ்தவர்களையும், இந்துக்களையும், முஸ்லீம்களாக கட்டாய மதமாற்றம் செய்தானாம்! மானமுள்ள ஒரு சமுதாயத்தின் கோரிக்கை! அரசின் அரவணைப்பிலுள்ள ஒரு சமுதாயத்தின் கோரிக்கை இது!

அத்துடன் இந்தக் கிறிஸ்தவர்கள் நின்றுவிடவில்லை, முஸ்லிம் பெயர் தான் வைக்கவேண்டும் என்கிற அபிப்பிராயம் இருந்தால், அப்துல் கலாம் அவர்களின் பெயரைச் சூட்டுங்கள் என்று ஆலோசனையும் வழங்கினர். ஆனால் அதனை இஸ்லாமியர்கள் ஏற்க மறுத்து திப்புசுல்தானின் பெயரையே முன்மொழிகிறார்கள்.

ஜிகாத் என்ற பெயரில், பல்லாயிரக்கணக்கானோரை  கொன்று குவித்து, லட்சக்கணக்கானோரை  மதம் மாற்றி, ஏறத்தாழ 10,000 கோயில்களை இடித்துத் தறை மட்டமாக்கி, நாட்டையே மதம் மாற்றி, இஸ்லாமிய கொடுங்கோலாட்சியை உருவாக்குவதே லட்சியமாகக் கொண்ட கொடூரனை முன்னோடியாகக் கொள்வோமே தவிர, இந்த நாட்டிற்காக உழைத்த உத்தமர் திரு.அப்துல் கலாம் அவர்களை ஏற்கமாட்டோம் என்று சொன்னால், இந்த இஸ்லாமியர்களின் நோக்கம் தான் என்ன?

கேரளம் மற்றும் கர்நாடகத்தைப் போல் தமிழகத்திலும் திப்புவும், ஹைதரும் நிகழ்த்திய அட்டூழியங்களுக்கு அளவில்லை ! தன்மானம், இன உணர்வு, சுய மரியாதை என்றெல்லாம் மேடை தோறும் முழங்கும் தமிழ் வியாபாரிகள் இந்தக் காட்டுமிராண்டிகள் செய்த அராஜகத்தை அறிவார்களா?

கும்பகோணத்தைச் சேர்ந்த கள்ளூர் மகாஜனங்களின் அர்ஜி கிராமத்தில் ஹைதர் பட்டாளம் வந்து இறங்கி அக்கிரகாரம், பண்டாரவாடை, மரம், செடி, கொடி எல்லாம் போய்ச் சுத்தமாக ஐந்து வருஷங்கள் ஆகிவிட்டன 

(தஞ்சை மராட்டிய மன்னர்கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும், கே.எம்.வெங்கட்டராமையா, தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர், பக்கம் 92)

1755: சென்னைப் பட்டணத்தில் கலாபுக்காக பலர் வந்து விட்டதனால் அரிசி வகையறா அகப்படாமல் ஜனங்கள் மிக சிரமப்படுவதனால்...........

(தஞ்சை மராட்டிய மன்னர்கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்,
கே.எம்.வெங்கட்டராமையா, தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர், பக்கம் 92)

இங்கு கலாபு என்று குறிக்கப்படுவது ஹைதர் அலியின் படையெடுப்பு. பொன் விளையும் பூமியான தஞ்சையிலேயே பஞ்சம் ஏற்ப்பட வைத்து, அகதிகளாக மக்கள் ஓடினார்கள் என்றால் எப்படிப் பட்ட கொடூரமானவனாக அவன் இருந்திருப்பான் என்று கற்பனை செய்து பாருங்கள்! எப்படி ஹைதர் அலி தானியம் கொழிக்கும் தஞ்சையை தார் பாலைவனமாக மாற்றினான்?

பச்சை பட்டுக் கம்பளம் விரித்தார்ப் போல இருந்த நிலம் சீரழிக்கப்பட்டு, அங்கிருந்த ஒவ்வொரு வரப்பும் மதகும் நாசப்படுத்தப்பட்டன.
(Maratha Rule in the Carnatic, Srinivasan C.K, F.N.P 310)

இதில் கவனிக்கப்பட வேண்டிய சொற்றொடர்ஒவ்வொரு வரப்பும் மதகும்’ - எப்படி திட்டமிட்டு நாசம் செய்திருக்கிறான் என்று பாருங்கள்! அத்துடன் நின்றுவிட்டானா? நாசம் செய்த வரப்புக்களையும் மதகுகளையும் மக்கள் சரி செய்து காவிரி வெள்ளத்திலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதை கூட பொறுத்துக் கொள்ள முடியாத அரக்கர்கள் அதைத் தடுக்க காவலர்களை நியமித்தனர்.

அயிதர் வந்தவன் பெரிய அணைக்கரையை வெட்டிக் கவிழ்த்தான். அரசர் அணைக்கரையை அடைத்துப் போட்டு வர வேண்டும் என்று உத்திரவு பண்ணினார். அக்கரையில் மண்ணை எடுக்கப் போனதற்கு கிராமத்தான் தகராறு பண்ணினான்.. சாயுபு திப்பு சாயுபு அவர்கள் இடத்தில் போய்.........வாங்கிக் கொண்டு வந்து கிராமத்தாருக்குக் கொடுத்து அடைத்துப் போட்டு தஞ்சை நகரம் வந்து சேர்ந்தோம்

(சாமி சிராங்கு மகன் இராமசாமி நாயக்கன் கடிதம் - தஞ்சை மராட்டிய மன்னர்கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும், கே.எம்.வெங்கட்டராமையா, தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர், பக்கம் 91)

இதுவா சுதந்திரப் போராட்டம்? ஆங்கிலேயருக்கும், அவர்களின் ஆதரவாளர்களுக்கும் எதிரான போர் என்றால், போர் களத்தை விட்டுவிட்டு ஜப்பானில் நாகசாகி, ஹிரோஷிமா நகரங்களில் அமெரிகா அணுகுண்டு வீசி அழித்தது போல் மக்களின் வாழ்வாதாரத்தை ஏன் அழிக்க வேண்டும்? எந்த சுதந்திர யுத்தத்தில் சொந்த நாட்டின் வளத்தையும், சொந்த மக்களையும் அழித்தார்கள்? இது தான் சுதந்திரப் போராட்டத்தின் லட்சணமா?

மனிதர்களையும், பயிர் பச்சைகளையும் கூட விட்டு வைக்காத வெறியன் கோயில்களையா விட்டு வைத்திருப்பான்? இந்தக் காட்டுமிராண்டிகள் கையில் சிக்காமல் விக்கிரகங்களை பாதுகாத்து இந்துக்கள், மராத்தியர்கள் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் வைத்து பூசை நடத்தினர். இதை தஞ்சை மராட்டிய ஆவணங்களிலிருந்து அறியலாம்.

ஹைதர் கலாபு காலத்தில் ஸ்ரீமுஷ்டம், விருதாசலம் இந்த இரண்டு தலங்களில் இருந்த சுவாமிகள் யாவும், மயூரநாத சுவாமி கோயிலில் இருப்பதால் நைவேத்தியம் நடத்திவர....…..... நாள் 1 க்கு 15 பணம் வீதம் சுவாமி அவ்விடம் இருக்கிற வரைக்கும் கொடுக்கும்படி உத்திரவு
காட்டுமன்னார் கோயில் ராஜகோபால சுவாமி பந்தநல்லூரில் வந்து இருப்பதால் பூசைக்காக நாள் ஒன்றுக்கு பணம் 5 வீதம் அவ்விடத்தில் இருக்கிற வரையிலும் கொடுக்கும்படி உத்திரவு
(தஞ்சை மராட்டிய மன்னர்கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்,
கே.எம்.வெங்கட்டராமையா, தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர், பக்கம் 93)

வராக அவதாரஸ்தலம் என்றும், வைகுண்டத்திலிருந்து துளசிச் செடியும், அஸ்வத (அரச மரம்) மரமும் பூலோகத்திற்கு வந்த ஸ்தலம் என்றும் போற்றப்படும் ஸ்ரீமுஷ்ணம், காசியைவிட உயர்ந்த ஸ்தலம்; ஐந்து பிரகாரமிருக்கும் புகழ் பெற்ற சிவத்தலம்; பயமின்றி மரணம், முக்தித் தலம்; சுந்தரர் பொன்னை ஆற்றில் போட்ட ஸ்தலம் என்று பெருமைக்குரிய விருதாசலம் ஆகிய சிறப்புமிக்க இந்துத் திருக்கோயில்களை திட்டமிட்டு அவமானப் படுத்தியது மதநல்லிணக்கத்தின் மகுடமா?

உலகாதய இஸ்லாமும் தேசத் துரோகமும் பின்னிப் பிணைந்தது என்பதை வரலாறு பல முறை உறுதி செய்துள்ளது. இந்தத் துரோகச் சரித்திரம் திப்பு மற்றும் ஹைதர் படையெடுப்புக்களில் தன்னை வெளிப்படுத்திக் கொண்டது.

சாத்திரிகல் துர்க் என்ற பகுதியின் தலைவனான மடக்கேரி நாயக் படையில் 3000 முஸ்லிம் வீரர்கள் இருந்தனர். அவர்களை ஒரு முஸ்லிம் குருவின் (Fakir) துணைக்கொண்டு, நாயக்கிற்கு துரோகம் செய்ய வைத்தான் ஹைதர்.
(The coins of Tippu Sulthan by George Pitchard Taylor, P.9)

கேரளத்தைக் கைப்பற்ற திப்பு படையெடுத்த போதும், உள்ளூர் முஸ்லிம்கள் திப்புவிற்கு ஆதரவாக இருந்தனர். இந்த இயல்பான இஸ்லாமிய, தேசத் துரோகம் மற்றும் நம்பிக்கை துரோகம் தஞ்சையிலும் வெளிப்பட்டது.

ஹைதரின் படை அணைகள் முதலியவற்றை அழித்தமையோடு நாட்டையும் கொள்ளையடித்தது. அந்தக் கொள்ளையருடன் இந்த நாட்டிலுள்ளவர்களும் சேர்ந்து கொண்டு கொள்ளையடித்தனர் 

(தஞ்சை மராட்டிய மன்னர்கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்,
கே.எம்.வெங்கட்டராமையா, தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர், பக்கம் 93)

இந்த நாட்டிலுள்ளவர்களும் ’ ...என்பதால் உள்ளூர் முஸ்லீம்கள் என்று ஆகிவிடுமா? என்று கேட்கலாம். இதில் பலர் இருந்தாலும், அனைத்து முஸ்லிம்களும் இருந்தனர் என்பது உண்மை. இந்த முஸ்லிம்களின் இந்து வெறுப்பு மற்றும் அடிப்படை வாதச் சிந்தனை அவர்களின் மத போதனை ஆயிற்றே !

இன்றும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம், கோயில் ஊர்வலம், திருமண ஊர்வலம், சவ ஊர்வலம் சென்றால் கல்வீசிக் கலகம் செய்வது இஸ்லாத்தின் இயல்பாகிவிட்டது.. இதை ஹைதர் மற்றும் திப்பு காலத்தில் இஸ்லாமியர்கள் தமிழகத்தில் நிகழ்த்தி, தமிழகத்தின் அடிப்படைவாத முஸ்லிம் அமைப்புக்களுக்கு முன்னோடியாக இருந்துள்ளனர். அதனால் தானோ என்னவோ மனித நேய மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் அஸ்லாம் பாஷா ஹைதருக்கும், திப்புவுக்கும் மணிமண்டபம் கட்ட கோரிக்கை வைத்துள்ளார் !

ஹைதருக்கும், திப்புவுக்கும், விநாயகர் சதுர்த்திக்கும், கல்லெறிகும் என்ன தொடர்பு ?

கி.பி. 1769: கும்பகோணத்தில் காவேரியின் கரையில் ஒரு துலுக்கர் பிள்ளையார் சதுர்த்தி தினம் கற்களை எறிந்ததனால் ஒரு பிராமணனுடைய தலை உடைந்து அபாயம் நேரும்படியாக இருந்ததனால் அவருக்கு அபராதம் 3 பணம்.

(தஞ்சை மராட்டிய மன்னர்கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்,
கே.எம்.வெங்கட்டராமையா, தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர், பக்கம் 210)

இஸ்லாம் மார்க்கம் மட்டுமே சரியானது ! அல்லாவைத்தவிர வேறு எல்லா தெய்வங்களும் சாத்தான்கள் என்று போதிப்பதின் விளைவே, இந்த மத வெறிக்குக் காரணம். இன்றும் இந்த முஸ்லிம்களின் மனோபாவம் தான் கலவரங்களுக்கு காரணமாகிறது. தென் இந்தியாவில் இந்தக் வன்முறையின் போஷகராக, வழிகாட்டியாக இருந்தவர்கள் ஹைதரும் திப்புவும் . எனவே அடிப்படைவாத முஸ்லீம் அமைப்புக்களுக்கு இவர்கள் முன்னோடிகளாக விளங்குகின்றனர்.

கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் படையெடுத்துச் சென்று, மதம் மாற்றி, கொள்ளையடிக்கும் நாடுகளின் வரலாற்றையும் பாரம்பரியத்தையும் அழிப்பதில் மிகவும் குறியாக இருப்பார்கள். இவர்களைப் பொருத்தவரை, உலகாதய இஸ்லாமும், கிறிஸ்தவமும் தான் அடையாளங்கள். தேசப் பற்று என்பது இவர்களுக்கு எட்டிக்காய்.. இந்த வரலாற்று அடையாள அழிப்புச் சேவையின் ஒரு பகுதி ஊர் பெயர்களை மாற்றி, மண்ணின் மாண்பையும், அதன் பாரம்பரியத்தையும் மறக்கடிக்கச் செய்வது.. இப்படிப்பட்டவனை மண்ணுக்காக மாண்டவன், போராடியவன் என்று எழுதி வரலாற்றுப் பக்கங்களை நிறைக்கும் அடிமை மோகிகளுக்கு திப்புவால் மாற்றப்பட்ட ஊர்கள் எவை என்று தெரியுமா?

ஸ்ரீரங்கபட்டணம் - பட்டண்
தார்வார் - குர்ஷீத் சவாத்
சத்தியமங்கலம் - சலாமாபாத்
குரம் கோண்டா ( கடப்பா, ஆந்திரம்) - ஜாபராபாத்
சித்தல் தூர்க் (கர்நாடகா ) - பரூக்யாப்- ஹிசாப்
கோழிக்கோடு ( கேரளம்) - பரூக்கி - தற்போது பெரோக்

இப்படி பாரம்பரிய ஊர் பெயரைக் கூட சகித்துக் கொள்ள முடியாதவன் மண்ணின் மாண்பிற்காகவா கூட்டணி அமைத்துப் போராடியிருப்பான்? ஆங்கிலேயருக்கு எதிரானவர்களை, பிரஞ்சுகாரர்கள் உதவியோடு ஒருங்கிணைத்து, ஆங்கிலேயனை துரத்திவிட்டு இஸ்லாமிய கொடுங்கோல் ஆட்சியை இங்கு நிறுவத்தான் திப்பு நம் இந்திய மன்னர்களுடனும் தளபதிகளுடனும் கூட்டணி அமைத்தான். இதை திப்பு சுல்தான் ஒப்புக்கொண்டுவிட்டான் ! ஆனால் நம் சென்னை ஜார்ஜ் கோட்டை சுல்தான்களும், பேகம்களும் ஒப்புக்கொள்வார்களா ?

முகலாயப் பேரரசைப் போல் இந்தியா முழுவதும் இஸ்லாமிய சாம்ராஜியம் அமைப்பதே தன் நோக்கம் என்று அப்கானிஸ்தானின் துராணி முஸ்லிம் மன்னன் சமான் ஷா-வுக்கு திப்பு கடிதம் எழுதினான். அத்துடன் நிறுத்தவில்லை, சமான் ஷாவை, இந்தியாவின் மீது படையெடுக்க வேண்டினான் ( Sharma H.D, The Real Tippu, Rishi Publications Varanasi)

திப்பு சுல்தான் ஆங்கிலேயர்களை இந்தியாவையோ, மைசூரையோ ஆக்கிரமித்தவர்களாகக் கருதவில்லை; மாறாக, இஸ்லாமிய உலகிற்கு எதிரானவர்கள் என்று கருதினான். இதற்காகத் துருக்கி நாட்டுச் சுல்தானை இஸ்லாத்தின் பெயரில் ஐரோப்பியர்களுக்கு எதிராகப் போரிடத் தூண்டினான்.( Prof B.Shaik Ali, Biscentary of Tippu Sultan, Islamic Voice, Vol 13-02, No.146, february 1999, Ramadan 1419 H)

இந்த ஐரோப்பிய நாடுகளில், பிரான்ஸ் நாடும் அடங்கும். இந்தியாவில் பிரான்ஸுடன் கூட்டணி, இஸ்லாமிய நண்பனை கிறிஸ்தவப் பிரான்ஸுக்கு எதிராக போர் புரிய தூண்டுதல்! நட்பின் இலக்கணமல்லவா இது!

இப்படி அடிப்படைவாதத்தை ஆதாரமாகக் கொண்ட இஸ்லாமிய ஆட்சி,    தீரன் சின்னமலையையும், வேலு நாச்சியாரையும் மதித்து மகுடமா சூட்டப் போகிறது? முகமது கோரி, பிரித்திவிராஜ் சௌகானை தோற்கடித்தபின் ஜெயச்சந்திரனுக்கு அப்படித்தான் மகுடம் சூட்டினானா? ஆங்கிலேயர் மீதிருந்த வெறுப்பை பயன்படுத்தி இந்துக்கள் உதவியோடு ஆங்கிலேயரை விரட்டிவிட்டு, நாட்டை இஸ்லாமிய மயமாக்கத்  துடித்தவன் தானே இந்தக் கயவன்? இவனைத் தேச பக்தனாகவும், வெளி நாட்டவனை இந்தியா மீது படை எடுக்க அழைப்பு விடுத்தவனை சுதந்திரப் போராட்டத்தின் விடிவெள்ளியாகவும் சித்தரித்து, இந்துக்களை ஏமாற்றி, முஸ்லிம் பயங்கரவாதத்திற்கு வளம் சேர்ப்பது தான் மதச்சார்பின்மையா?

இந்த இருவருக்கும் ஆப்கானிஸ்தானிலோ, பாகிஸ்தானிலோ, மணிமண்டபம் கட்டலாமே தவிர திண்டுக்கல்லில் அல்ல. பின் ஏன் முஸ்லிம்கள் திண்டுக்கல்லில் மணிமண்டபம் கட்ட வேண்டும் என்று துடியாய் துடிக்கிறார்கள்? அப்படி என்ன திண்டுக்கல் பாசம்?

இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் தலை நகர் திண்டுக்கல். திண்டுக்கல் பல நூற்றாண்டுகளாக போர்திற முக்கியத்துவம் வாய்ந்த இடமாக விளங்கியது. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளிலிருந்து சமவெளிப்பகுதிகளுக்கு செல்லும் வாசலாக திண்டுக்கல் இருப்பதால் இதைக் கைப்பற்ற பல போர்கள் நடந்துள்ளது. இதை மையமாகக் கொண்டு தென் பகுதிகளில் தன் ஆதிக்கத்தை நிலை நாட்டினர் திப்புவும், ஹைதரும் . இந்தப் பகுதியில் அதிகமாக மதமாற்றமும் அரங்கேற்றப்பட்டது. இந்த ஊரை மையப் படுத்தி திப்பு நாணயங்களும் வெளியிட்டான். ஆனால் திண்டுக்கல் என்ற பெயரில் அல்லகாலிக்காபாத்என்ற பெயரில் அவை வெளியிடப்பட்டது. காலிகாபாத் என்றால்
’“படைத்தவனிடமிருந்து வளம் பெற்ற”’ என்று பொருள்.

அந்த படைத்தவனின் வளம் என்ன செய்தது? திண்டுக்கல் மலைக் கோட்டையில் இருந்த அபிராமி அன்னை உடனுரை பத்மகிரீஸ்வரர் ஆலையத்து விக்கிரகங்கள் மலையிலிருந்து  அகற்றியது. இப்போது அவை மலை அடிவாரத்திலிருக்கும் காளகஸ்தீஸ்வரர் ஆலையத்தில் வைக்கப் பட்டுள்ளது. தமிழகத்தின் மையப்பகுதியில் திண்டுக்கல் இருப்பதாலும், கேரளத்திற்கு செல்லும் மார்கத்தில்  இவ்வூர் இருப்பதாலும் இதை மையப் படுத்தி இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள் செயல்படுகின்றன..

இந்த இஸ்லாமிய அடிப்படைவாதிகள் திண்டுக்கல் மாவட்டத்திற்கு காயிதே மில்லத் என்ற இஸ்லாமியப் பிரிவினைவாதத் தலைவர் பெயரை சூட்ட வேண்டியபோது, 1989-ல் தமிழக அரசும் திண்டுக்கல் மாவட்டத்தை காயிதே மில்லத் மாவட்டம் என்று அறிவித்தது. தன்மானமுள்ள இந்துக்களின் போராட்டத்தின் விளைவாக, இந்தப் பெயர் மாற்றப்பட்டது. இப்போது இரண்டு முஸ்லிம் அடிப்படைவாத சட்ட மன்ற உறுப்பினர்களின் முயற்சியால் அடிப்படைவாத விதைமணிமண்டபம்என்ற பெயரில் திண்டுக்கல்லில் முளைக்கிறது.
கர்நாடக ஸ்ரீரங்கப்பட்டணத்தில் திப்பு பெயரில் மைனாரிட்டி பல்கலைக்கழகம்! ஒரு அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் தயாரிக்கும் பயங்கரவாதிகளையே சமாளிக்க முடியவில்லை! இதற்கிடையில் மற்றொன்றா? தமிழகத்தில் அதே திப்புவின் பெயரில், திப்புவால் அகற்றப்பட்ட கோயில் அமைந்ததுடன், கணிசமான முஸ்லிம் மக்கள் தொகை கொண்ட ஊரில் மணிமண்டபம்! முஸ்லிம் ஓட்டுக்காக, தேசத் துரோகி விடுதலைப் போராட்ட வீரனாக மாற்றப்பட்டான்! வரலாறு திருத்தி எழுதப்பட்டுள்ளது! தவறான முன் உதாரணங்கள் முன் நிறுத்தப் படுகின்றன! முஸ்லிம் அடிப்படைவாதத்திற்கும் பிரிவினைவாதத்திற்கும் வலுசேர்க்கப்படுகிறது!

போகிற போக்கில் சீமான் கூட்டத்தில் கலந்து கொண்டு பிரிவினைவாதம் பேசிய காஷ்மீர் பயங்கரவாதி  யாசின் மாலிக்கிற்கு கடலூரில் மணிமண்டபம் கட்டுவார்களோ? ஓட்டுக்காக மானங்கெட்ட அரசியல்வாதிகள் அதையும் செய்வார்கள் .

ஆனால் பார்தி கண்ட தமிழனின் தாரக மந்திரம் என்ன?

பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும்
நற்றவ வானினும் நனி சிறந்தனவே

பாரதம் காப்போம் ! பாதகர்களை விரட்டுவோம் !

தவசீலர்கள் பூமியில் திராவகத் திப்புவை அனுமதியோம்!

- பால கௌதமன்


No comments: