Saturday, July 20, 2013

பா ஜ க வைச்சேர்ந்த ஆடிட்டர் ரமேஷ் படுகொலை! அஞ்சலிகள்!



சேலத்தில் பாஜக மாநில பொதுச் செயலாளர் விரமேஷ் (52), வெள்ளிக்கிழமை (19.07.2013) இரவு மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்தமிழகத்தில் மட்டும் கடந்த 18 மாதங்களில் நிகழ்ந்த 16 ஆவது படுகொலை இது. கிட்டத்தட்ட மாதம் ஒரு படுகொலை என்று திட்டமிட்டு நடத்தப்பட்டு வருகிறது. இறந்தவர்கள் அனைவரும் ஹிந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள். பாஜக வைச் சேர்ந்த டாக்டர் அரவிந்த் ரெட்டி விஜய தசமி அன்று கொல்லப்பட்டார். தொடர்ந்து பலகொலைகள் வெள்ளிக்கிழமை நாளாகப் பார்த்து திட்டமிட்டு நடப்பதாகவே இருக்கிறது.

இத்தகைய படுகொலைகளை திட்டமிட்டு ஒரு சில முஸ்லீம் அமைப்பினர் தான் செய்கிறார்கள் குற்றச்சாட்டு எழுகின்றன. ஆடிட்டர் திரு ரமேஷ் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட  செய்தி வெளியான சில மணி நேரங்களில் சேலத்திலும் சுற்று உள்ள ஊர்களிலும் உள்ள மசூதிகளுக்கு காவல் துறை பாதுகாப்பளித்தனர் என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இது அதிர்ச்சி தரக்கூடிய செய்தி. தொடர்ந்து மாதம் ஒருவராக ஹிந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். அவர்களது பாதுகாப்பிற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காத தமிழக அரசு, ஹிந்துக்களை படுகொலை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்காத தமிழக அரசு மசூதிகளுக்குப் பாதுகாப்பு கொடுக்கிறது. 18 மாதங்களாக படுகொலைகள் தொடர்ச்சியாக நிகழ்ந்தும் எந்த அமைப்பினர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பெயருக்கு சிலரை கைது செய்துள்ளனர் என்றாலும் அவர்கள் உண்மை குற்றவாளிகள் இல்லை என்று கூறப்படுகிறது.


படம் நன்றி: விகடன்.காம்

நீங்கள் கீழே காணும் இந்தப் படம் திரு வெள்ளையப்பன் படுகொலை செய்யப்பட்டு ரத்தவெள்ளத்தில் மிதக்கும் காட்சி. இந்தப்படுகொலை நிகழ்ந்து 18 நாட்களில் அடுத்த படுகொலையாக பா வைச் சேர்ந்த திரு ரமேஷ் அவர்கள் கொல்லப்பட்டுள்ளார். இந்தக் கொலை நிகழ்ந்த அதே ரீதியில் தான் ஆடிட்டர் திரு ரமேஷும் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.



மிககூர்மையான ஆயுதங்களால் கழுத்தை அறுத்தும் உடல் பாகங்களை கூறு கூறாக வெட்டியும் அவர் எச்சூழலிலும் பிழைத்து விடக்கூடாது என்ற அளவில் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். இத்தனை கொலை வெறியுடன் திட்டமிட்டு படுகொலைகள் நடத்தப்படுவது ஒரு அரசாங்கத்திற்கு தெரியாமல் இருக்குமா? அல்லது உளவுத்துறை தான் மோப்பம் பிடிக்காமல் தான் இருக்குமா? அதுவும் தொடர்ச்சியாக மாதம் ஒரு படுகொலை, ஒரே மாதிரியான கொலைகள் , ஒரே மாதிரியான அமைப்பைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து கொல்லப்படும் போது உளவு பார்க்க முடியாமல் தான் போகுமா? அத்தனைக்கு தமிழக அரசு கண்ணை மூடிக்கொண்டு உறங்குகிறதா? ஓட்டு வங்கி அரசியலுக்காக ஹிந்துக்கள் பலிகொடுக்கப்படுகின்றனரா? இந்தக் கொலைக்கான மூல காரண கர்த்தாக்களை அரசு கைது செய்யாமல் தூங்கிக்கொண்டிருந்தால் அதனை திட்டமிட்டு அரங்கேற்றிக்கொண்டிருப்பவர்கள் இன்னொரு அஜ்மல் கசாப்பையும், அப்சல் குருவையும் தைரியமாக தமிழகத்திற்குள் அழைத்து வந்து அண்ணா சாலையில் செல்பவர்களையெல்லாம் சாவதானமாகச் சுட்டுத்தள்ள வைக்க மாட்டார்களா? அப்படி ஒரு கொடூரமான தீவிரவாதச் செயல் தமிழகத்தில் நடக்கும் வரை தமிழக முதல்வர் உறங்கிகொண்டிருப்பாரா?  'ஜாதி , மதம் பார்க்காமல் குற்றவாளிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்குபவர் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள்என்கிற மாயை உடைகிறதா?

எங்கோ டெல்லியில் நடந்த கற்பழிப்பை மாதக்கணக்கில் ரூம் போட்டு விவாதம் செய்த தொலைக்காட்சிகளும், ஜாதித் தற்கொலையைப் பற்றி மணிக்கணக்கில் அரட்டையடித்த அறிவுஜீவி சொம்புகளும் ஹிந்து தலைவர்கள் கொலையாகும் போது உடல் துவாரங்களை மூடிக்கொள்கின்றன.

தீபாவளி தினத்தன்று ஹிந்து மடாதிபதியைக் கைது செய்யும் தைரியம் கொண்டவர்களுக்கு,  இப்போது தொடர் படுகொலை செய்துவரும் மூலகர்த்தாக்களை அதே தைரியதோடு இரும்புக்கரம் கொண்டு அடக்க முடியாமல் தவிப்பதன் காரணம் என்னவோ?  நாம் ஆப்கானிஸ்தானில் வாழ்கிறோமா? பாகிஸ்தானில் இருக்கிறோமா? அடுத்து உயிர் விடப்போகும் ஹிந்துத் தலைவர் யார் என பார்த்திருக்கப் போகிறோமா?

ஹிந்துக்களே!! எதற்கும் அடுத்த வெள்ளிக்கிழமை நமாஸ் வரை காத்திருங்கள்...உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு!!!








 திரு ரமேஷ் படுகொலைப் பற்றிய தினமணி செய்தி இதோ!

சேலத்தில் பாஜக மாநில பொதுச் செயலாளர் வி. ரமேஷ் (52), வெள்ளிக்கிழமை இரவு மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

சேலம் மரவனேரி முதலாவது குறுக்குத் தெருவில் குடும்பத்துடன் ரமேஷ் வசித்து வந்தார். வெள்ளிக்கிழமை இரவு குடும்பத்துடன் உணவகத்துக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினார். மனைவி, குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு, தனது வாகனத்தை மரவனேரி 2-ஆவது குறுக்குத் தெருவில் உள்ள அலுவலகத்தில் விடுவதற்குச் சென்றார்.

அப்போது ரமேஷின் அலுவலக வளாகத்துக்குள் நுழைந்த மர்ம நபர்கள், அவரைக் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்தனர். ரமேஷ் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை இரவு 10 மணிக்கு அக்கம் பக்கத்தினர் பார்த்து, அவரது குடும்பத்தினருக்குத் தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து, பாஜகவினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்தக் கட்சியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் சம்பவ இடத்தில் திரண்டனர்.

தகவல் அறிந்து, மாநகரக் காவல் துணை ஆணையர் .ஜி.பாபு தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் அங்கு விரைந்து வந்தனர்.

ரமேஷ் உடலை போலீஸார் எடுக்க முயற்சித்த போது அதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆனால், அவர்களைச் சமாதானம் செய்து, ரமேஷின் உடலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போலீஸார் எடுத்துச் சென்றனர்.

பாஜக புகார்: ரமேஷுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் இருந்து வந்ததாகவும், அவருக்கு போலீஸார் பாதுகாப்பு வழங்கத் தவறி விட்டதாகவும் பாஜகவினர் குற்றம்சுமத்தினர்.

சோதனைச் சாவடிகளுக்கு சீல்: இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட மர்மக் கும்பல் தப்பி ஓடிவிடாமல் இருக்க, சேலம் மாநகரில் உள்ள அனைத்து சோதனைச் சாவடிகளுக்கும் சீல் வைக்கப்பட்டது. மாநகரின் முக்கிய இடங்களில் எவ்வித அசம்பாவிதச் சம்பவங்களும் நடைபெறாமல் இருக்க போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். மரவனேரி பிரதான சாலையில் பாஜகவினர் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த இரு அரசுப் பேருந்துகள் கல்வீசித் தாக்கப்பட்டன. இதனால், சேலம் மாநகரம் முழுவதும் பதற்றம் நிலவுகிறது. கொலை செய்யப்பட்ட ஆடிட்டர் ரமேஷுக்கு சுபா என்ற மனைவியும், பிளஸ் 1 படிக்கும் ஸ்மிருதி என்ற மகளும் உள்ளனர்.

No comments: