Wednesday, August 21, 2013

சாணக்கியன் சொல்!



அரசனாக இருப்பவன் நாட்டின் செல்வ வளத்தை அதிகரிக்கும் வழிமுறைகளின் மீது கவனமுள்ளவனாக இருக்க வேண்டும்.

·         நாட்டின் செழிப்பை நிலைநாட்டுதல்

·         சிறந்த முயற்சிகளையும், வெற்றிமிக்க கொள்கைகளையும் தொடர்தல்

·         அரசு அலுவலர்கள் மீதான கட்டுப்பாட்டை நிலை நிறுத்துதல்

·         வேளாண்மை உற்பத்தியைப் பெருக்குதல்

·         வணிகத்தை மேம்படுத்துதல்

·         பிரச்சினைகள் மற்றும் அபாயங்களைத் தவிர்த்தல்

·         இவ்வகையில் பணவரவை அதிகரித்தலில் கவனம் செலுத்த வேண்டும்.

அரசாங்க உடைமைகளைத் தவறாகப் பயன்படுத்துதல், அரசாங்க அலுவலர்களால் எழுதப்படும் பொய்க்கணக்கு போன்றவற்றை கண்காணித்து தடுக்க வேண்டியது அரசனின் கடமை.

அது போக, நடிகர்களும் கலைஞர்களும் நிரந்தரமாய் தங்குவதை தடை விதிப்பதன் மூலம் மக்கள் கவனச்சிதறல் இன்றி ஆக்கப்பூர்வமான பணிகளில்  ஈடுபடுவார்கள்.

மேலும், எவ்விதக் கவனச் சிதைவும் இல்லாத நிலையில் மக்கள் வேலைகளில் முழுமையாய் ஈடுபட்டால் அதன் விளைவாய் பணம், வணிகப்பொருள்கள், தானியங்கள், மற்றும் வேலையாட்களின் வரவு கருவூலத்தில் அதிகரிக்கும்

- சாணக்கியர்


No comments: