Saturday, September 28, 2013

ஹிந்து சேவை அமைப்புகள் ஒரு பார்வை - 2


- ஞானதேசிகன்


கச்சி மூதூர் அர்ச்சகர் வெல்பேர் டிரஸ்ட்

அன்பர்களே! கடந்த முறை ஹிந்து சேவை அமைப்பில் அமர்சேவா சங்கம் பற்றி பார்த்திருந்தோம்.

இந்து சேவை அமைப்புகளின் பட்டியலில் இந்த முறை ஒரு வித்தியாசமான அமைப்பு பற்றி பார்ப்போம். 

இந்து மதத்தின் தூண்களில் முக்கிமானவை நம் ஆலயங்கள். நமது நாட்டில் பல ஊர்கள், நகரங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பிரதான ஆலயத்தை சுற்றியே அமைந்தன. இந்த அமைப்புகள் சிதைவுற ஆரம்பித்த போது இதன் தாக்கத்தை அனுபவித்தவர்கள் கோயில் பணியாளர்கள். குறிப்பாக ஆலய அர்ச்சகர்கள்,பூசாரிகள்.

குறிப்பாக 1980 களுக்கு பிறகு, பல கிராம ஆலயங்கள் பூஜை இல்லாமல் கைவிடப்பட்டன. கோயில் பணியாளர்களை பற்றிய ஒரு கேலியான எண்ணங்கள், மாற்று மத பிரச்சாரம், நகரங்களுக்கு இடம் பெயர்தல், திராவிட இயக்கங்கள் வைத்த பிரச்சாரங்கள் போன்றவகள் பல குக்கிராம ஆலயங்கள் கைவிடப்பட்டமைக்குக் காரணம் ஆகும். குறிப்பாக, ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் பல ஆலயங்கள் கைவிடப்பட்டன. நித்திய பூஜைகள்,திருவிழாக்கள் போன்றவை இல்லாமல் ஆகின. 

ஆலயங்களை மட்டுமே நம்பி வாழ்ந்தவர்கள் அர்ச்சகர்கள், பூசாரிகள் ஆகியோர். அவர்கள் போதிய ஆதரவின்றி வேறு வேறு தொழில்களை நோக்கிச் செல்ல ஆரம்பித்தனர். இப்படி நலிவடைந்த நிலையில் கோவில்களை நம்பி ஆனால் ஆதரவின்றித் தவிக்கும் அர்ச்சகர்கள் மற்றும் பூசாரிகளுக்கு உதவுவதற்காக கச்சி மூதூர் அர்ச்சகர் வெல்பேர் ட்ரஸ்ட் துவங்கப்பட்டது.

1986ம் ஆண்டு இந்த அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது. ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் வழிகாட்டுதலுடன் இந்த அமைப்பு துவங்கப்பட்டது. அவர் இந்த அமைப்பு எப்படி நடத்தப்பட வேண்டும் என வரையரையை தெரிவித்தார். பக்தர்களிடம் நன்கொடை பெற்றே இந்த அமைப்பின் திட்டங்கள் 
நடத்தப்பட வேண்டும் என்றார். மேலும் இசை,கலை நிகழ்ச்சிகள் போன்றவை மூலம் பணம் வசூலிக்க கூடாது என்றும் கூறியுள்ளார். மாத சம்பளமாக ரூபாய் 4000 மேல் வாங்குவோர்கள, நம் சனாதன தர்மத்தில் நம்பிக்கை உள்ளவர்கள், தம் வாழ்வில் ஒரு முறையேனும் தம் ஒரு மாத சம்பளத்தை  இந்த அமைப்புக்கு தர வேண்டும் என்று கேட்டுள்ளார். 

அமைப்பின் சிறப்புகள்:

சிவாச்சாரியார்கள், பட்டாச்சாரியர்கள், பூசாரிகள் போன்றவர்களை ஆதரிப்பதே இந்த அமைப்பின் நோக்கம்.

முக்கியமாக கிராமப்புற கோயில் அர்ச்சகர்களை ஆதரிப்பதே இதன் நோக்கம். கிராமக் கோயில்களில் “முறை” இல்லாமல் பூஜை செய்பவராக இருக்க வேண்டும். கோயில் 1940க்கு முற்ப்பட்டதாக இருக்க வேண்டும்.அர்ச்சகரின் மாத வருமானம் ரூபாய் 3000 க்கு குறைவானதாக இருக்க வேண்டும்.

இப்படிப்பட்ட அர்ச்சகர்களுக்கு மாத வருமானமாக ரூபாய் 1000 வழங்கப்படும். மேலும் காப்பீட்டுத் திட்டமும் உண்டு.

இப்போது 426 அர்ச்சகர்களுக்கு உதவி செய்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் தினசரிகளில் விளம்பரம் கொடுக்கப்படும். இந்த அமைப்பிற்கு விண்ணப்பம் 
செய்பவர்களுக்கு சிறு தேர்வு வைக்கப்படும். தேர்வில் தேறியவர்களுக்கு அதன் பிறகு மாத உதவித்தொகை வழங்கப்படும்.

நன்கொடை வழங்க வேண்டும் என்று நினைப்பவர்கள்.

onations by Money Order/ Crossed Cheque/ Demand Draft, drawn in favour of 'Kachchi Moodoor Archakas Welfare Trust' may kindly be sent to the Administrative office

KACHCHI MOODOOR ARCHAKAS WELFARE TRUST 
Regd. & Admn.Office: New 16, (Old 10), Second Main Road,Kottur Gardens, 
Chennai 600 085, India
Phone: +91-44-24471936

http://kmawt.org/

காஞ்சிப் பெரியவர் கூறியபடி பக்தர்கள் நன்கொடை அளிக்க பலர் முன்வந்துள்ளனர்.

காஞ்சி பெரியவர் வேதனை கலந்த வேடிக்கையாக இப்படிக் கூறியதாக எனக்கு நினைவு - 'கல்யாண பத்திரிக்கையில் என் பெயர் போட்டவர்கள் யாரும் வரதட்சிணை வாங்க கூடாது என்றேன். உடனே நிருத்திவிட்டார்கள். வரதட்சிணை வாங்குவதை அல்ல.. பெயர் போடுவதை நிருத்திவிட்டார்கள்' என்று. 

அப்படி எதுவும் நடக்காமல் பக்தர்கள் இந்த அமைப்பிற்கு பெரியவரின் வாக்குப் படி நன்கொடை அளித்தால் பல அர்ச்சகர்களின் வாழ்க்கைக்கு இது உதவும்.

No comments: