மக்கள் மத்தியில் தெனாவட்டாகத்திரியும் வழிபறி கொள்ளையர்களாக வலம் வருகிறார்கள் இந்த ஆட்டோக்காரர்கள். இந்த கொடூர கொள்ளையர்களிடம் நாமே போய் கொள்ளை கொடுக்க வேண்டி இருப்பது தமிழர்களின் தலை விதி. தமிழக மக்களுக்க்கு மட்டுமே இந்த தலைவிதி. இந்தியாவில் வேறெங்கும் இப்படிப்பட்ட மோசமான வழிபறி நடப்பதில்லை. அத்தியாவசிய மற்றும் அவசிய போக்குவரத்து சாதனமான ஆட்டோக்கள் பெரும்பாலும் போலீஸ்காரர்கள் கையிலும் லோக்கல் ரவுடிகள் கையிலும் தான் உள்ளது என பத்திரிக்கைகள் எழுதுகின்றன. இவர்கள் எப்படி அரசு மீட்டர் சட்டத்தை மதிப்பார்கள்.
ஆட்டோ ஓட்டுனர்கள் என்ற பெயரில் இயங்கும் இந்த அயோக்கிய கொள்ளைக்காரர்களுக்கு உழைத்துச் சோறு திண்ண வேண்டும் என்கிற எண்ணமே பெரும்பாலும் இருப்பதில்லை. ஆனால் பாடு பட்டு உழைத்துத் திண்பவர்கள் வயிற்றில் அடித்துப் பிடுங்கித்திண்பதற்கு காக்கிச் சாட்டை போட்டுக் கொண்டு ஆட்டோவில் வலம் வருகிறார்கள். ஆட்டோ ஸ்டான்ட்டில் உட்கார்ந்து கொன்டு வெட்டி அரட்டை அடித்து நேரம் போக்கினாலும் போக்குவார்கள் ஆனால் ஞாயமான ரேட்டுக்கு ஆட்டோ ஓட்ட வரமாட்டார்கள். அரசு மீட்டர் திருத்தி அதற்கான சட்டத்தையும் அமல் படுத்தினால் கூட அதனை எப்படியெல்லாம் மீறுவது என்பதிலேயே குறியாய் இருக்கிறார்கள் இந்த கேடுகெட்ட வழிபறி கொள்ளையர்கள்.
இந்த கொள்ளையர்கள் மீட்டர் ரேட்டிலிருந்து தப்பிப்பது பல ரகம். மீட்டர் போடு என்று சொன்னால் ஆட்டோ வராது என்று விருட்டெனச் சென்று விடுவார்கள். சிலர் 'எவ்வளவு தருவீங்க?" என தெனாவட்டாகக் கேட்பார்கள். நாம் மீட்டர் படி எவ்வளவு வருமோ அதைக் கேட்டால் ஒரு வேளை கோபித்துக் கொள்வானோ எனப்பயந்து இருமடங்காக நாமே ஒரு தொகையைச் சொன்னால் 'ம்ச்' என்று கூறிவிட்டு திரும்பிப் பார்க்காமல் போய்விடுவார்கள் சிலர்.
சில ஆட்டோக்காரர்கள் 'மீட்டர் போடுறேன், மேல 100 ரூபாய் தரணும்" என்று மிரட்டுவர். அந்த மிரட்டலுக்கு பயந்து ஆட்டோவில் ஏறினால் சரி, இல்லையென்றால் அடுத்தடுத்த ஆட்டோக்கள் வேண்டுமென்றே அதிகமாக கேட்டு ஏற்கனவே மிரட்டப்பட்டவனுக்கு மயக்கம் வர வைத்து விடுவார்கள். இதுவல்லவோ வழிபறிக்கொள்ளை. சில ஆட்டோக் கொள்ளையர்கள் வேறு மாதிரி 'சார் மீட்டர் போட்றேன், ஆனா அதுல வர்ர அமௌண்ட்ல மூணுல ஒரு பங்கு கூட குடுக்கணும்' என்பார்கள். புரியலியே என்றா' அதான்சார், 100 ரூபா மீட்டர்ல வந்தா 130 தரணும். இப்போ 300 ரூபா வந்தா 100 ரூபா சேத்து போட்டு 400 தரனும் என்பார்கள். அதாவது ஏற்கனவே இவர்கள் கொள்ளையடித்துக் கொண்டிருந்த கட்டணத்தோடு மீட்டர் கட்டணத்தை சமன் செய்கிறார்களாம். எப்படி பர்ஸன்டேஜ் எல்லாம் பேசுது பாரு இந்த திருட்டுக் கூட்டம் என மனதுக்குள் திட்டிக் கொண்டேவேற ஆளைப் பார்க்க வேண்டி இருக்கும்.
இத்தனைக்கும் மீட்டர் கட்டணத்துக்கும் இவர்களது வழிபறி கட்டணத்திற்கும் இமாலய வித்தியாசம் இருக்கிறது. உதாரனமாக சென்னை கோயம்பேடிலிருந்து எக்மோர் ரயில்வே ஸ்டேஷன் வரை அதிக பட்சம் 10 முதல் 12 கிலோமீட்டர் தான் இருக்கும். மீட்டர் போட்டால் 93 ரூபாய் வருகிறது. அதுவே ஆட்டோக்காரர்கள் வழிபறி செய்தால் 250 முதல் 300 வரை கேட்ட்டுப் பிடுங்கிக் கொள்வதுண்டு.
ஞாயமான லாபத்திற்கு வண்டி ஓட்டுவதற்கு வலிக்கும் இவர்கள் வக்கனையாகவும் நக்கலாகவும் பலவாறு பயணிகளிடம் பேசுவதுன்டு. ஞாயமாக வசூலிக்க வேண்டிய தொகைக்கு 3 மடங்கு வாங்காமல் இவர்களுக்கு தூக்கம் வராது. அதாவது வழிபறி செய்யாமல் வாழமுடியாத கூட்டம் இந்த ஆட்டோ ஓட்டுனர் கூட்டம். அது தமிழகத்தில் மட்டும் தான்.
இப்போது இவர்கள் இன்னும் பழி வாங்கும் நோக்கத்தோடு கூட்டாக வேறு செயல்படுகிறார்கள். ஒரு ஆட்டோ காரர் நிராகரித்தால் அடுத்தடுத்த ஆடோக்காரர் வேண்டுமென்றே வலிய வந்து கூப்பிட்டு அதிக ரேட் சொல்லி கிரங்கடிக்கச் செய்து எரிச்சல் மூட்டி சண்டை வளர்த்து வேடிக்கை பார்க்கிறார்கள். பொது மக்களை மனோரீதியாக இவர்கள் கொடுமைக்கு உள்ளாக்குகிறார்கள் என்பதே நிஜம்.
இதனை எல்லாம் பார்த்துக் கொன்டு தமிழக அரசாங்கம் தூங்குகிறது. தமிழக முதல்வர் ஜெயலலிதா தைரியமாக திட்டங்களை அமல்படுத்தும் பெண்மணி, அவங்க ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு என்பதெல்லாம் பழங்கதை. ஆட்டோ ஓட்டுனர்களை மீட்டர் படி வாங்கி ஓட்டச்செய்யும் கண்டிப்பு கூட இல்லாத நிலையில் இருக்கிறார். மாறாக ஆட்டோ ஓட்டுனர்கள் இவர் அமல் படுத்திய சட்டத்தால் கடுப்படைந்து மக்களை இன்னும் அதிகமாக வதைக்கிறார்கள் என்பதே உண்மை. தமிழக முதல்வர் உண்மையில் இந்த ஆட்சியில் ஒரு புரட்சி செய்து மக்களிடம் பெயர் வாங்க முடியும் என்றால் இந்த ஆட்டோக்காரர்களை குறைந்த பட்சம் இவர் ஆளும் காலம் வரைக்குமாவது மீட்டர் கட்டணம் வாங்கிக்கொள்ளும் படி கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த குறைந்த பட்ச நடவடிக்கையை கூட உறுதியாக எடுக்க முடியவில்லை என்றால் இவரை தைரியமான பெண்மணி நல்லாட்சி கொடுப்பார் என நம்பி ஓட்டுப் போட்டவர்களுக் கெல்லாம் இவர் செய்யும் துரோகமாகவே அது அமையும். இனி ஒருக்காலும் இந்த கையாலாகாத முதல்வரை தமிழக மக்கள் ஆதரிக்க மாட்டார்கள் என நம்புவோமாக.
கொஞ்சம் உழைத்துச் சாப்பிடுங்கள் ஆட்டோக்காரர்களே!
கொஞ்சம் உழைத்துச் சாப்பிடுங்கள் ஆட்டோக்காரர்களே!
No comments:
Post a Comment