1971ஆம் வருஷம் பொதுத் தேர்தல் வந்தது.காமராஜ் மாபெரும் வெற்றி பெறுவார் என்று மக்களும், நாளேடுகளும் தெரிவித்தன. எப்படியும் காமராஜைத் தலையெடுக்கவிடாமல் செய்ய வேண்டுமென்பது, அன்னை இந்திராவின் திட்டம். நாட்டிற்கு நல்ல திட்டங்களைச் செயல்படுத்த முடியாதவர்கள் கெடுதல் செய்வதற்குத்தானே திட்டமிடுவார்கள்.
காமராஜை நாடுபூராவும் நன்றாக அறியும், 'காலா காந்தி காமராஜ்' என்று மக்கள் பேசுவது இந்திராகாந்திக்கு அடியோடு பிடிக்கவில்லை. காமராஜைத் தோற்கடிக்கத்திட்டமிட்டார். தனி விமானத்தில் சென்னைக்குப் பறந்து வந்தார். அன்றைய கழக முதல்வரைச் சந்தித்து, எப்படியும் காமராஜ் தோற்க வேண்டும் அதற்கு எந்த வழியையும் பின்பற்றிச் செயல்படலாம் என முடிவுக்கு வந்தார். பணப் பெட்டிகளும் கைமாறின.
அப்போது தமிழக முதல்வராக இருந்தவர் இந்திராகாந்திக்கு ஒரு யோசனை சொன்னார். தமிழக மக்கள் பகுத்தறிவு வாதிகள்.பழையன மறப்பார்கள், புதிய பொய்யை நம்புவார்கள். நாங்கள் 1967 ல் கொடுத்த வாக்குறுதிகளை இப்போது யாரும் நினைப்பதில்லை. அதனால் நாம் இப்போது ஒரு நாடகம் ஆட வேண்டும். அதாவது, சேலம் உருக்காலை திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினால் போதும், அதை வைத்தே நாங்கள் காமராஜ் என்ன, அவர்கள் வளர்த்த காங்கிரஸ் என்ன, தேசியம் என்ன, எல்லாவற்றையும் மரணமடைய வைப்போம்' என்று யோசனை கூறினார்.
இந்திராகாந்தி மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். திமுகவினரின் துணையோடு இந்திரா காமராஜரை தோற்கடித்தார். 'காமராஜ் பெரிய ஊழல் பேர்வழி என்றும், அவருடைய பேரிலே ஹைதராபாத் பாங்கில் 6 கோடி ரூபாய் இருப்பதாகவும், ஏழைப் பங்காளன் காமராஜ் குடியிருக்கும் பங்களா அவருக்கே சொந்தம்' என்றெல்லாம் படம் போட்டு விளம்பரம் செய்தனர். 'ராஜாவின் கூஜா காமராஜ்' என்று சுவரொட்டிகளும் பேனர்களும் போடப்பட்டன. அந்தத் தேர்த்லில் காமராஜ் தோற்றார். தேசியம் தோற்றது. உண்மையான மக்கள் தொண்டர்கள் தோற்றனர்.
- கண்டு கொள்வோம் கழகங்களை
ஜூலை 15, 1903 - கர்மவீரர் காமராஜ் பிறந்தநாள்.
No comments:
Post a Comment