Showing posts with label காந்தி. Show all posts
Showing posts with label காந்தி. Show all posts

Sunday, September 29, 2013

காந்தி ஜி கொலையால் யாருக்கு லாபம் ?

- ஆனந்த் கனேஷ்


கோட்ஸே ஹிந்து மகாசபாவில் உறுப்பினராக இருந்தார். பத்திரிக்கை நடத்தினார். ஆனால், ஆர்.எஸ்.எஸ் நடவடிக்கைகள் எதிலும் அவர் கலந்துகொண்டது கிடையாது. ஏனெனில், அவர் ஆர்.எஸ்.எஸோடு தொடர்பு கொண்டவர் கிடையாது. இதை படேல் நேருவுக்கு எழுதிய கடிதத்தில் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டு இருக்கிறார். 
  
இருப்பினும், ஆர்.எஸ்.எஸ். மேல் ஏன் பழி போடப்படுகிறது ? 
  
ஏனென்றால், அதனால் நேருவுக்கு பல லாபங்கள் இருந்தது. இப்படிப் பழியைப் போட நேருவுக்கு கிடைத்த சாக்கு என்ன தெரியுமா ?
  
காந்தி ஜி கொல்லப்பட்டபோது ஆர்.எஸ்.எஸ்காரர்கள் பலர் சந்தோஷப்பட்டார்களாம் ! 
  
அதை காரணமாக வைத்து நேரு அந்த இயக்கத்தை தடை செய்தார். 

 காந்தி ஜி கொலை என்னும் சாக்கை வைத்து நேரு பல மாங்காய்களை அடித்தார். வரலாற்றுப் பொய்யை உருவாக்கியது அவற்றில் ஒன்று. 
  
கொலை செய்தது யார் ?
  
ஹிந்து மகாசபை உறுப்பினர்கள் சிலர் சேர்ந்து நடத்திய கொலை காந்தி ஜியின் கொலை. அப்படி ஒரு விஷயம் நடக்க்ப்போவது ஆர்.எஸ்.எஸுக்குத் தெரியவே தெரியாது. கொல்லப்பட்டது தெரிந்தவுடன் மிகக் கடுமையான கண்டனங்களை ஆர்.எஸ்.எஸ். எழுப்பியது. 
  
கொலையை ஆதரித்த கொலைகாரர்களை ஆதரித்த ஹிந்து மகாசபையை இன்னொருவரும் மிக வன்மையாக இந்த விஷயத்தில் கண்டித்தார். 

 அவர் யார் ? பின்பு சொல்கிறேன். 

 ஆனால், உண்மை இதுதான். காந்தி ஜி கொலைக்கு முன்னாலோ பின்னாலோ ஆர்.எஸ்.எஸ்ஸானது கோட்ஸேவுக்கு எந்தவிதமான உதவிகளையும் தரவில்லை. 

 இதுகுறித்த இந்திய சட்ட பத்திரிக்கையில் வெளியான கட்டுரையில் இருந்து சில பகுதிகள்:
  
Sardar Vallabhai Patel, the then Home Minister of India wrote to Jawaharlal Nehru on 27 February 1948 that amidst many findings regarding the Mahatma’s murder: 
  
“It also clearly emerges from the statements that the RSS was not involved in it at all”. 

It is interesting to note that Sri. C K Daphtary, the then Advocate General, Bombay who was in charge of the prosecution did not involve RSS in the controversy. The prosecution did not even hint, much less prove even the remotest connection of RSS with the murder of the Mahatma. 

RSS is not blamed anywhere in the judgement delivered in the case. 

Not even a single inquiry the Government of India later made into the Mahatma Murder case involved the RSS in it. 

In 1966 the government set up a commission under Sri. J L Kapur, a retired judge of the Supreme Court, to make a fresh and thorough inquiry into the conspiracy that led to the murder of Gandhiji. 

The Commission, which sat at different places and examined about 101 witnesses and 407 documents, published its reports in 1969. 

It nowhere blamed RSS as the Gandhi assassin, and cleared the organisation of any connection with the crime. 

One of the important witnesses, Sri R N Banerjee, ICS (witness 19) who was the Home Secretary of the Central Government at the time of Gandhi murder had given the evidence that “It has not been proved that they (the accused) were members of the RSS”.(Kapur Commission Report) 

The witness further says that even if the RSS had been banned earlier, it would not have affected the conspirators or the course of events, “because they have not been proved to have been members of the RSS nor has that organization been shown to have a hand in the murder”.

R N Banerjee further stated, “Although RSS was banned it should be taken to be an acceptance by the Government of the allegation that the murder of Mahatma Gandhi was by the members of RSS as such”. 

The Commission further comments: “In Delhi also there is no evidence that the RSS as such was indulging in violent activities as against Mahatma Gandhi or the top leaders of the Congress”. 

The facts are thus by all means self evident and more eloquent than all the propaganda by the interested parties. 

RSS was thus not the organization that assassinated Mahatma Gandhi.

http://www.indialawjournal.com/volume2/issue_2/nathuram_godsay_trial.html

ஆகவே, காந்தி ஜி கொலையில் ஹிந்து மகாசபை உறுப்பினர்களின் பங்கு தெளிவாக ஊர்ஜிதப்படுத்தப்பட்டது. ஆனால், ஆர்.எஸ்.எஸுக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதும் தெளிவு.

காந்தி ஜி கொலையில் ஹிந்து மகாசபையைக் கண்டித்த ஒருவரைப் பற்றி பிறகு சொல்கிறேன் என்று சொல்லி இருந்தேன் அல்லவா ? 

அவர் ஹிந்து மகாசபையின் தலைவர்களில் ஒருவர். அவரது பெயர் ஷியாமா ப்ரஸாத் முகர்ஜி.

காந்தி ஜி கொலையை எதிர்த்து அவர் ஹிந்து மகாசபையில் இருந்து விலகினார். ஹிந்து மகாசபைக்கு எதிராக ஒரு கட்சியை ஆரம்பித்தார். அந்தக் கட்சியின் பெயர் ஜன சங்கம். இந்த ஜனசங்கத்தின் தற்போதைய பெயர் பாரதிய ஜனதா கட்சி.

காமராஜர் உள்ளிட்ட பலர் உருவாக்கிய ஸ்தாபன காங்கிரசுக்கும் ஜனசங்கத்துக்கும் ஒரு வித்தியாசமும் கிடையாது. ஜிபிஐ கட்சிக்கும் ஸிபிஐ (மார்க்ஸிஸ்ட்) ஒரு வித்தியாசமும் கிடையாது. இவை அனைத்தும் இணைந்து உருவானது ஜனதா கட்சி. 

இதில்தான் ஜெயப்ரகாஷ் நாராயணன், க்ருபாளினி, மொரார்ஜி தேசாய், இடதுசாரிகள் உள்ளிட்ட பலர் இணைந்து செயல்பட்டார்கள்.

அதாவது, காந்தி ஜி கொலையைக் கண்டித்து எதிர்த்து உருவான அரசியல் பாரம்பரியத்தில் வருவதுதான் பாரதிய ஜனதா கட்சி. 

இந்தக் கட்சிக்கும், ஜனதா கட்சியின் தற்போதைய வடிவ கட்சிகளுக்கும் ஆதிகாலத்தில் இருந்தே ஒரே கொள்கைதான். ஒரே அரசியல் நீரோட்டம்தான். 

ஹிந்து மகாசபை என்ன செய்கிறது ?

காந்தி ஜியின் கொலையைக் கண்டித்து ஆரம்பித்த பாரதிய ஜனதா கட்சியுடன் சேராமல் இன்றுவரை ஹிந்து மகாசபை தனிக்கட்சியாகவே இருக்கிறது. 

பாரதிய ஜனதா கட்சியோடு கூட்டணிகூட வைத்துக்கொள்ளாத அளவு ஹிந்து மகாசபை விலகி நிற்கிறது. 

பாரதிய ஜனதா கட்சியின் எதிர்ப்புத் தரப்பாகவே ஹிந்து மகாசபை இருக்கிறது. 

சுருங்கச் சொன்னால், காந்தி ஜி கொலையானது ஹிந்துத்துவ குடும்பத்தை இரண்டாக உடைத்து பங்காளி பிரிவினையை உருவாக்கியது. 

இங்கனம் காந்தி ஜி கொலையை எதிர்க்கும் போக்கு கொண்ட பிரிவுகளான ஆர்.எஸ்.எஸ்ஸின் மேலும் பாரதிய ஜனதா கட்சியின் மேலும் காந்தி ஜியைக் கொன்ற பழியை போடுவது காங்கிரஸ் அரசியலின் அருவருப்பான சாக்கடை முகத்தையே காட்டுகிறது.

காந்தி ஜி கொலையைக் கண்டித்து அரசியல் கட்சி ஆரம்பித்த ஸ்யாமா ப்ரசாத் முகர்ஜி என்ன ஆனார் ?

அவர் சிறையில் வைத்துக் கொலை செய்யப்பட்டார். 

அதற்குக் காரணமானவர் காந்தி ஜியின் கொலைப் பழியை ஆர்.எஸ்.எஸ். மேல் போட்டார்.

அவர் பெயர் ஜவஹர்லால் நேரு. 


Friday, May 25, 2012

ஜுனூன் ஜுனூன்!



'ஜுனூன்' என்று ஒரு தொலைக்காட்சி டப்பிங் தொடரை யாரும் மறந்திருக்க முடியாது. தமிழில் 'பிடிவாதம்' என்று மொழி மாற்றி போட்டுக் கொண்டிருந்தார்கள். இந்த டப்பிங் தொடர் அதன் கதையை விட அதில் பேசப்பட்ட தமிழாலேயே ப்ரபலானது எனலாம். அப்படி ஒரு சிரிப்பை வரவழைக்கும் கேலிக்குரிய தமிழாக்கமாக இருந்தது. இன்றைக்கும் நண்பர்களை மிரட்டும் தொனியில் பேசிவிளையாடினால், "போடா போ, நாங்கல்லாம் தாத்தா நகர்க்கரையே பாத்தவைங்க, எங்கிட்டயேவா" என அந்தத் தொடரின் வில்லன் கதாபாத்திரத்தை நினைவுபடுத்திப் பேசுவார்கள். அந்த அளவுக்கு அந்த தொடரின் பாத்திரங்கள் பழகிப்போய் இருந்தன. ஜுனூன் தமிழ் என்றே ஒரு தமிழ் ப்ரபலமானது தனி கதை. சரி இப்போது எதற்கு அந்த விவரணங்கள் என்று கேட்கிறீர்களா?

ஒன்றுமில்லை, பிடிவாதம் பற்றி நினைத்துக் கொண்டிருக்கையில் ஏனோ இந்த தொலைக்காட்சித் தொடர் ஞாபகம் வந்தது.

பிடிவாதம் என்பது மனிதர்களுக்கு இயற்கையாகவே உடன் பிறந்த ஒரு குணம். அந்த உணர்ச்சியை பயன்படுத்தி காரியம் சாதிக்காதவர்கள் இருக்க முடியாது. கூடவே அதே குணத்தால் தானே அழிவதும் அல்லது பிறரது அழிவுக்கு வழிவகுக்கவும் கூட முடியும். பிடிவாதம் என்கிற உணர்வை நாம் எந்த நோக்கில் செலுத்துகிறோம் என்பதைப் பொறுத்தே விளைவுகள் அமைகிறது. சரி விஷயத்திற்கு வருவோம்!

பிடிவாதம் என்றவுடன் நினைவுக்கு வரும் நபர் திரு.காந்தி! அவரது பிடிவாதம் உலகம் முழுவதும் ப்ரசித்தம்! அந்தப் பிடிவாதத்தின் விளைவுகளை வெவ்வேறு நபர்கள் வெவ்வேறு விதமாக அனுபவித்தார்கள். அவரது பிடிவாதமே அவருக்கு எதிர்தரப்பாளர்களை எப்போதும் உருவாக்கிக் கொண்டே இருந்தது. விமர்சிக்கப்படவும் வைத்தது! ஆனால் அவர் பிடிவாதமாக தனது பிடிவாத குணத்தைத் தொடர்ந்தார்.

காரணம் அவரது நோக்கம் சமூகத்தின் நலன்கருதியதாக இருந்ததே காரணம். சிலர் ஏதாவது ஒரு சித்தாந்தத்தை அல்லது கொள்கைகளை விடாப்பிடியாக பிடித்துக்கொண்டே இருப்பார்கள். ஆனால் எந்த ஒரு சித்தாந்தமோ கொள்கைகளோ நீண்ட நாட்களுக்கு சரியானதாக இருப்பதில்லை. அவை மாறுதலுக்கு உட்பட்டதாகவே இருந்திருக்கிறது. காந்தியாரும் தனது வாழ்க்கையில் அஹிம்சை என்கிற கொள்கையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருந்தார். ஆனால் அவரது கொள்கைப் பிடிப்பு அவரது கடைசி காலங்களில் யாருக்கும் பிரயோஜனப்படாமல் அவர் கண் முன்னாலேயே ரத்த ஆறுகளும் வன்முறைகளுமே பிரச்சனைக்குத் தீர்வாகக் காணப்பட்டது. இதை அஹிம்சையின் தோல்வியாக கொள்ள முடியாவிட்டாலும் நீண்ட நாளைக்கு எந்த ஒரு கொள்கையும் ஒரே மாதிரியாக தட்டையான சிந்தனையில் எடுபடாது என்பதை தெளிவுபடுத்துகிறது. அஹிம்சாவாதியின் மரணம் ரத்தத் துளிகளால் முடித்துவைக்கப்பட்டது வினோதம்!



காலம் எல்லாவற்றையும் புரட்டிப் போடும். எந்த ஒரு மனிதனின் சிந்தனையின் படி உலகம் செல்வதில்லை! அது தன்னைத் தானே செதுக்கிக் கொள்கிறது. இந்திய தேசியத்தை தட்டியெழுப்பி மிகப்பெரிய நிலத்து மக்களையெல்லாம் ஒரே குடையின் கீழ் ஒன்றாக நிறுத்தி மிகப்பெரிய சாம்ராஜ்ஜியத்தை ஆட்டம் காணவைத்த ஒரு மாபெரும் ஆத்ம சக்தி அதன் கடைசி காலங்களில் இயலாமையின் பிடியில் சிக்கி தான் வளர்த்த சக்திகள் தம்மையே பதம் பார்க்க, சோகத்தில் மடிய நேர்ந்தது காலத்தின் கோலம் தான்!



இது காந்தியின் ஜுனூன்!

காந்தியடிகள் இந்தியாவில் சுதந்திரப்போராட்டத்தை முழுவீச்சில் துவங்குவதற்கு முன் தென்னாப்பிரிக்காவில் சிறிது காலம் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். அங்கேயே வெள்ளையர்களுக்கு எதிரான தனது போராட்டத்தை துவங்கியுமிருந்தார்.

ஒரு முறை ஜொஹனஸ்பர்க் செல்லும் வழியில் தனக்கு நேர்ந்த அவமதிப்பையும் அவர் அதை எவ்வாறு எதிர் கொண்டார் என்பதையும் அவரே தன் சுயசரிதையில் விளக்குகிறார்.

"அப்போதெல்லாம் சார்லஸ் டவுனிலிருந்து ஜொஹனர்ஸ்பர்க் செல்ல குதிரைகள் பூட்டிய கோச் வண்டி தான் இருந்தது. அதில் என்னைப் போன்றவர்களை ஒரு கூலியாகக் கருதினார்கள். பிரயாணிகளை வண்டிக்குள்ளே உட்காரவைக்க வேண்டும். ஆனால் புதியவனாக தென்பட்ட
என்னை வெள்ளைக்காரப் பிரயாணிகளுடன் உட்கார வைக்காமல்கோச் வண்டிக்கு வெளியே வண்டியோட்டிக்கு இரு பக்கங்களிலும் இருக்கும் ஆசனங்களில் ஒன்றில் என்னை உட்காரவைத்தார். சாதாரணமாக அது வண்டித் தலைவர் உட்காரும் இடம்.

ஆனால் என்னை வெளியே உட்கார வைக்க வேண்டுமென்பதற்காக அவர் உள்ளே அமர்ந்து கொண்டு அந்த இடத்தில் என்னை உட்காரச் செய்தார். அது எனக்கிழைத்த பெரிய அநியாயமும் அவமதிப்பும் என்பதை உணர்ந்தேன், என்றாலும் அதையும் சகித்துக்கொள்ள முடிவு செய்தேன். ஒருவேளை கட்டாயப்படுத்தி நான் உள்ளே போய் உட்கார்ந்து கொள்ள முயன்றால் என்னை ஏற்றிக் கொள்ளாமலேயே வண்டி போயிருக்கும்.

இந்த சூழலில் வண்டி போய்க்கொண்டிருந்தது. ஓரிடத்தை அடைந்ததும் வண்டியின் தலைவர் நான் உடகார்ந்திருந்த இடத்தில் தாம் உட்கார்ந்துகொள்ள விரும்பினார். அதனால் அவர் வண்டியோடியிடமிருந்து ஒருகோணித்துண்டை எடுத்து, வண்டியில் ஏறும் கால்படிமீது அதை விரித்து என்னைப் பார்த்து "இதன் மீது நீ உட்காரும், வண்டியோட்டியின் பக்கத்தில் நான் உட்கார வேண்டும்" என அதிகாரம் செய்தார்! இந்த அவமதிப்பு இன்னும் அதிகம். அதனை என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை.

நான் அந்த அவமதிப்பை ஏற்க பிடிவாதமாக மறுத்தேன். அவரிடம் கூறினேன் "என்னை உள்ளே உட்கார வைக்கவேண்டி இருந்தும் நீர்தான் என்னை இங்கே உட்காரவைத்தீர். அந்த அவமதிப்பையும் சகித்துக் கொண்டேன். இப்போது நீர் வெளியே உட்கார்ந்து சுருட்டுப் பிடிக்க விரும்புதற்காக என்னை உமது காலடியில் உட்காரச் சொல்கிறீர். அப்படி உட்காரமாட்டேன். வேண்டுமானால், வண்டியின் உள்ளே உட்காரத் தயார்" என்றேன்.

இவ்விதம் நான் தட்டுத் தடுமாரிச் சொல்லிக் கொண்டிருந்த போதே அவர் என்னிடம் வந்து என் கன்னங்களில் ஓங்கி அறையத் தொடங்கினார். என் கையைப் பிடித்து இழுத்துக் கீழே தள்ளவும் முயன்றார். வண்டியின் பித்தளைக் கம்பிகளை நான் கெட்டியாகப் பிடித்துக் கொண்டேன். மணிக்கட்டுகளின் எலும்புகள் முறிந்தாலும் பிடியை விடமாட்டேன் என்று உறுதியாயிருந்தேன். அவர் என்னைத் திட்டி, இழுத்து அடிப்பதும், நான் நான் பிடிவாதமாகவும் அதே நேரத்தில் சும்மா இருப்பதுமாகிய அக்காட்சியை சகப்பயணிகள் பார்த்துக் கொண்டிருந்தனர். அவரோ பலசாலி, நானோ பலவீனமானவன். பயணிகளில் சிலருக்கு இரக்கம் உண்டாயிற்று. "அவரை விட்டுவிடு. அடிக்காதே! அவர் மீது குற்றம் இல்லை. அவர் செய்தது. சரியே! அவர் அங்கே இருக்க முடியாதென்றால் இங்கே வந்து எங்களுடன் உட்கார்ந்து கொள்ளட்டும்" என்றனர்.

"அது முடியாது" என்று வீம்புக்கு மறுத்தார் வண்டியின் தலைவர். அவருடைய இனவெறி அதை ஒத்துக்கொள்ள மறுத்தது. ஆனாலும் பயணிகள் தடுத்ததால் என்னை தொடர்ந்து தாக்க முடியவில்லை. என்னை அடிப்பதை நிறுத்திக் கொண்டார். கொஞ்சம் அவமானம் அடைந்து விட்டவர் போலவே காணப்பட்டார். என் கையை விட்டுவிட்டு கொஞ்ச நேரம் திட்டிக் கொண்டிருந்தார். பிறகு வண்டிப் பெட்டியின் அந்தப் பக்கத்தில் இருந்த மற்றொரு பணியாளை அங்கிருந்து எழுப்பி விட்டு தான் அங்கே உட்கார்ந்து கொண்டார். இப்படியாக ஊர்போய்ச் சேர்ந்தேன்."

ஆக, பிடிவாதமாக நினைத்ததை சாதிக்கும் தனது உள்ள உறுதியினால் அவர் தன்மானத்தை இழக்காமல் அன்று இனவெறியை வென்றார்.

அதே போன்று இன்னொரு சூழலில் தன்னை கிறிஸ்தவத்திற்கு மதம் மாற்றியே தீருவது என்று கங்கனம் கட்டி வந்தவர்களிடம் தனது பிடிவாதத்தால் மதம் மாறாது காத்துக் கொள்ள வேண்டி வந்தது.

அது பற்றி அடுத்த பதிவில் பிடிவாதமாகப் படிப்போம்!

ஜுனூன் ஜுனூன்... ஜுனூன் ஜுனூன்!


Wednesday, June 16, 2010

பதின் வயது திருமணம் குற்றமா?




பத்தாம் வகுப்பு மாணவி பள்ளிக்கூடத்தில் பிள்ளை பெற்றாள். நல்ல செய்தி!

ராமநாதபுரத்தில், பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், பள்ளி கழிப்பறையிலே பெண் குழந்தையை பெற்றெடுத்து அப்படியே போட்டு சென்றுள்ளார் என்கிறது அந்த செய்தி. மாணவியின் இச்செயலை கண்டித்து அவருக்கு டி.சி.,யை கொடுத்துள்ளதாம் பள்ளி நிர்வாகம். பின்ன, ஒரு பள்ளிக்கூடம் என்ன தான் செய்ய முடியும். ஆட்டு மந்தைகளை கூடத்தில் அடைப்பது போல ஆள் சேர்ப்பது, பின்னர் டி சியை கொடுப்பதும் மட்டுமே வேலையாக கொண்டிருக்கும் பள்ளிக் கூடங்களால் வேறென்ன செய்ய முடியும். கலாச்சாரம் , ஒழுக்கம் போன்றவற்றை பள்ளிக்கூடங்கள் போதிப்பதற்கு முன்னால் கற்பு பற்றியும் திருமணத்திற்கு முன்னால் உடலுறவு வைத்துக் கொள்வது எப்படி என்பது பற்றியும் குஷ்பு போன்றவர்கள் கற்றுக்கொடுத்து விடுகின்றனரே! பிறகு பள்ளிக்கூடங்களால் பிள்ளைகளுக்கு என்ன கற்றுக் கொடுக்க முடியும்!

செய்தியின் மிச்சத்தையும் படியுங்கள் - "தனியார் மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்த இந்த யுவதி திருமணம் ஆகாமலே கர்ப்பிணியாக இருந்துள்ளார். மாணவி சற்று குண்டாக இருந்ததால் , கர்ப்பமாக இருந்தது வீட்டிற்கோ, பள்ளியிலோ யாருக்கும் தெரியாமல் இருந்துள்ளது இதனிடையே கோடை விடுமுறை முடிந்த நிலையில், வழக்கம் போல் கர்ப்பிணி மாணவி பள்ளிக்கு வந்துள்ளார். பள்ளியில் படித்த கொண்டிருந்த போது மாணவி , திடீரென கழிப்பறை செல்ல அனுமதி கேட்டு சென்றுள்ளார். அங்கு யாருடைய உதவியுமின்றி தானாக குழந்தையை பெற்று, அந்த பச்சிளம் குழந்தையை கழிப்பறையில் போட்டுவிட்டு வகுப்பறை வந்துள்ளார். கழிப்பறையில் மற்ற மாணவிகள் சென்ற போது, பச்சிளம் குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது .

இதை பார்த்த அவர்கள் ஆசிரியர்களிடம் கூறினர். ஆசிரியர்கள் கழிப்பறையில் பெண் குழந்தை இருந்ததை கண்டு ஆச்சரியப்பட்டு, உடனடியாக குழந்தையை மீட்டு உரிய சிகிச்சை அளித்துள்ளனர். பின் சந்தேகமான மாணவியிடம் விசாரித்ததில் குழந்தை பெற்றதை ஒப்புகொண்டார். ஆசிரியர்கள் குழந்தை பெற்ற மாணவியின் உடையை மாற்றி உடனடியாக அவரை ஆட்டோவில் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். பள்ளியில் மாணவி குழந்தை பெற்றது பெரும் சர்ச்சையை எழுப்பியதால் பள்ளி நிர்வாகம், மாணவியின் டி.சி.,யை அவரது பெற்றோரிடம் வழங்கினர்." செய்தி இங்கே .

சரி. இப்படி நடந்தது அதிர்ச்சியான தகவலா என்றால் இல்லை என்றே கூற வேண்டும். ஏனெனில் இந்த இயற்கையின் படைப்பில் ஆடு, மாடு, நாய், நரி, ஓநாய், கழுதை, குதிரை, பன்றி, யானை, ஒட்டகம், ஈ, கொசு, பூச்சிகள், வண்டுகள், பறவைகள், மீன்கள் மற்றும் மரம் செடி கொடிகள் என்று எல்லா ஜீவராசிகளுமே இனப்பெருக்கத்திற்கான வயதை எட்டியவுடன் தன் இனையைக் கூடுகிறது. இது இயற்கையின் நியதி தானே!

அதைப் போலத்தானே இப்போது இந்த பள்ளியில் படிக்கும் யுவதியின் விஷயத்திலும் நடந்திருக்கிறது. இணை சேரும் காலம் வந்தது. இணையைக் கூடினாள். இயற்கையின் நியதிப்படி இது சரியே! இந்தச் செய்தியில் அடிபட்ட யுவதியோ அல்லது அவளுடன் கூடியவனோ தண்டிக்கப்படக் கூடியவர்கள் அல்ல. பருவம் எய்தியவுடன் இணையைக் கூடுவது குற்றமும் அல்ல.

ஆனால் மனிதர்களாக வாழும் நாம் உணர்ச்சிப் பூர்வமாக நம் வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருக்கிறோம். உணர்வுகளின் அடிப்படையில் எழும் சில உணர்ச்சிப் போராட்டங்களைத் தவிர்க்கவும், உரிமைப் போராட்டங்கள் இல்லாமல் அமைதியாக வாழவும், வாழும் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்க முயன்றும் சில விதிகளை நமக்குள்ளே நிர்ணயித்துக் கொண்டிருக்கிறோம். அதற்குப் பெயர் தான் நாகரீகம். அது தான் நாகரீகம் அடைந்தோம் என்று நம்மை நாமே கூறிக்கொள்ளும் மனித வாழ்க்கை ஆகும்.

விலங்குகளைப் போல கூடினோமா, குட்டிப்போட்டோமா பின் விட்டுச் சென்றோமா என்று சென்று விடுவது எளிது தான். ஆனால் பெற்றுப் போட்ட குட்டியின் நிலை என்ன என்ற உணர்ச்சிப் பூர்வமான கேள்வியை மனிதன் சிந்தித்த நாள் முதல் தான் மனிதன் விலங்குகளிடமிருந்து வேறுபடத்துவங்கி இருப்பான். இந்த சிந்தனை விரிவடைந்து ஒரு ஆணும் பெண்ணும் தான் பெற்ற பிள்ளைகளின் வாழ்க்கைக்குப் பொறுப்பாகிறார்கள் என்ற ஆத்மார்த்தமான சிந்தனை தான் மனிதனை விலங்குகளிடமிருந்து பிரித்து மேலும் செம்மையான நாகரீகத்திற்கு கொண்டு போனது என்றால் மிகையாகாது.

இப்படி ஒருவர் வாழ்க்கைக்கு மற்றவர்கள் தானாகவே பொறுப்பேற்றுக் கொண்டதனால் குடும்பம் என்ற அமைப்பு உண்டானது. குடும்பம் என்ற அமைப்பு உணர்வுப்பூர்வமாக உண்டான ஒரு அமைப்பு. இந்த அமைப்பை முறைப் படுத்தவே சில வழி முறைகளை பின்பற்றப்பட்டன. அதில் முக்கியமான வழி முறை தான் திருமனம் என்று அழைக்கப் படுகிறது.

இப்போது விஷயத்திற்கு வருவோம், நமது தாத்தா பாட்டி காலத்தில் அவர்கள் திருமணம் செய்து கொண்ட வயதைக் கேட்டுப்பாருங்கள். கண்டிப்பாக எல்லோரும் இணை தேடும் பருவத்தில் மணம் புரிந்து கொண்டிருப்பார்கள். நம் முன்னோர்கள் ஒன்றும் பத்தாம் பசலிகளும் இல்லை. ஒன்றும் தெரியாத முட்டாள்களோ, காட்டு மிராண்டிகளாகவோ இருக்கவில்லை. பன்பட்ட நாகரீக மனிதர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள்.

ஆடு, மாடு, நாய், நரிகளைப் போல வாழாமல் முறையான மனித வாழ்க்கை வாழ்ந்து வந்திருக்கிறார்கள். பருவத்தே கூட வேண்டியது இயற்கையின் நியதி என்பதை புரிந்து கொண்டு அதற்கு அணை போடாமல் அதை முறைப்படுத்தி, குடும்பம் என்ற அமைப்பு சிதையாமலும் தாங்களே தங்கள் வாரிசுகளுக்கு வயதிற்கேற்ற வரன் தேடிக்கொடுத்தும், முறையான வழியில் இணையைச்
சேரக் கற்றுக் கொடுத்தும் வாழ்கைக்கு வடிகால் வைத்துக் கொடுத்திருந்தார்கள்.

ஆனால் பதின் வயதில் திருமணம் செய்து கொள்வதை நாம் இன்று குழந்தைத் திருமணம் என்று அழைக்கிறோம். இது என்ன முரண்பாடு? பதினைந்து வயது யுவனும் யுவதியும், பாதுகாப்பு முறைகளுடன் உடலுறவு கொண்டால் தவறில்லை என்பது நாகரீகம் என்கிறார்கள். அதே பாதுகாப்பை ஒரு குடும்பம், திருமணம் என்ற அங்கீகாரத்துடன் அதே யுவனுக்கும் யுவதிக்கும் கொடுத்தால் அதை மூட நம்பிக்கை என்கிறார்கள். திருமண வயது பதினெட்டு என்பது என்ன கணக்கு? ஏன் பதினைந்து என்று வைத்துக் கொண்டால் யார் குடி முழுகிப்போகிறது?

பதின் வயதுகளில் இனக்கவர்ச்சி உண்டாகும் என்பதை ஒத்துக்கொள்ளும் அறிவு ஜீவிகள், பதின் வயதுகளில் சைட் அடிப்பது வயதிற்குரிய மாற்றம் என்று ஒத்துக்கொள்ளும் அறிவு ஜீவிகள், பதின் வயதுகளில் காதல் வரும் என்பதை ஒத்துக்கொள்ளும் அறிவு ஜீவிகள், பதின் வயதுகளில் காம உணர்வு வரும் என்பதை ஒத்துக்கொள்ளும் அறிவு ஜீவிகள், அத்தகைய காதல் காம உணர்வுகளுக்கான வடிகால்கள் என்ன என்பதை ஏன் வெளிப்படையாக சொல்வதில்லை? அப்படியே வெளிப்படையாக சொல்வதாகக் கூறிக் கொள்பவர்கள் உடலுறவு செய்து கொள்ளுங்கள். ஆனால் கருத்தடை சாதனங்களை உபயோகியுங்கள் என்று அறிவுரை கூறுகின்றன. இது தான் முறையான வடிகால் என்பதா?

பதினைந்து வயதில் உடலுறவு கொள்வது சட்டப்படி தவறில்லை என்றால், அதை திருமணம் மூலம் குடும்பம் என்ற அமைப்போடு முறைப்படுத்துதலை மட்டும் சட்ட விரோதம் ஆக்கி இருப்பது என்ன நியாயம்? பதின் வயது உடலுறவு சட்டப்படி தவறில்லாத போது அதை முறைப்படுத்தும் திருமணத்தையும் சட்டப்படி தவறில்லை என்று அறிவிக்க வேண்டும். பதினான்கு வயது பூர்த்தியானவர்கள் திருமணம் செய்து கொள்ளலாம் என்று சட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும். பிள்ளைகள் வழிதவறிப் போவதற்கு முன்னால் அவர்களை பாதுகாப்பாக குடும்ப அமைப்புக்குள் கொண்டு வந்து வாழ்க்கையின் பொறுப்புக்களை புரிய வைக்க ஒரு வழியாவது கிடைக்கும். கருத்தடை சாதனங்களை மளிகை சாமான் லிஸ்டிலேயே சேர்த்து வாங்கிப் போட்டு விட்டால், கண்டவர்களுடன் உறவு கொள்ளாமல் கணவன் மனைவி உறவாக உடலுறவு முறைப்படுத்தப்பட்டு வாழ்க்கை கேள்விக்குறி ஆகாமல் குடும்பத்தில் வாழ்கிறோம் என்ற பாதுகாப்பு உணர்வாவது மிஞ்சும். இதைத்தான் அக்காலத்தில் நம்முன்னோர்கள் கையாண்டிருக்கிறார்கள். காந்தியடிகளுக்கு பதிமூன்று வயதில் திருமணம் நடந்ததாம்! என்ன குறைந்து போனது? தேசத்தந்தை ஆகவில்லையா?



தேசத்தந்தை காந்தி மனைவியுடன்

நம் பிள்ளைகளை குடும்பத்தந்தையாகவேனும் ஆவதற்கான முறையான வழிகாட்டுதல் ஏற்படுத்திக் கொடுக்க வில்லை என்றால் எதிர்காலத்தில் தந்தை பெயர் தெரியாத ஒற்றைப் பெற்றோர்கள் இந்தியாவிலும் பெருகிவிடுவார்கள் என்பது தின்னம்.

பிறகு கண்ட இடத்தில் கூடி, கழிவறையில் குட்டி போட்டு நாய்க்கும் மனிதர்களுக்கும் வேறுபாடில்லாத மிருக வாழ்க்கையைத் தான் எதிர்கால சந்ததியினர் கற்றுக்கொள்ளும். குஷ்புவும் மகிழ்ச்சி அடைவார்.
__________________________________________________________________________

எச்சரிக்கை: இந்திய நாணயங்களில் தொடர்ந்து கிறிஸ்தவ மதச் சிலுவையும் கிறிஸ்தவ கன்னியாஸ்திரிக்களின் படங்களும் அச்சிடப்பட்டு வருகின்றன. நாம் இந்தியாவில் வாழ்கிறோமா அல்லது இத்தாலியில் வாழ்கிறோமா என்ற குழப்பத்தை ஏற்படுத்துகிறது.



கேரளாவைச் சேர்ந்த மறைந்த கன்னி(?)யாஸ்திரி அல்போன்ஸாவின் உருவத்தைப் ஐந்து ரூபாய் நாணயங்களில் பொறித்து இத்தாலி அரசு கிறிஸ்தவ மதப் பிரச்சாரம் செய்து வருகிறது. இது வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியதாகும். இதேயே பி ஜெ பி காலத்தில், நாணயத்தில் ராமர் படமோ, சாய் பாபா படமோ போட்டிருந்தால் இந்துத்துவாவைத் தினிக்கிறது என்று கூறி ஒரு கலவரத்தையே நிகழ்த்த முன்னின்றுவிடும் நமது அரசியல் கட்சிகள் இப்போது மட்டும் வாய் மூடி வேடிக்கை பார்ப்பதேன்!

இந்து கடவுளரின் உருவம் பொறிக்கப்படும் போது இந்துத்துவா தினிக்கப்படுகிறது என்று கொண்டால், கிறிஸ்தவ பாதிரிகளின் படம் பொறிக்கப்படும் போது கிறிஸ்தவத்தை தினிப்பது ஆகிறதே! இதை தட்டிக்கேட்க மட்டும் தமிழகத்தின் பகுத்தறிவு வாதிகள் காணாமல் போய்விட்டனரே!

தமிழக அரசுச் சின்னத்தில் கோபுரம் இருப்பது மதச்சார்பாக இருக்கின்றது என்று கூறி அதை அகற்றி விட்ட கருணாநிதி, இந்திய ரூபாய் நாணயங்களில் பொறிக்கப்படும் மத சின்னங்களை எதிர்த்துப் பேசுவாரா? கோபுரத்திற்கு எதிராக சட்ட சபையில் உரை நிகழ்த்தியவர்கள், இந்த கிறிஸ்தவ அடையாளங்களுக்கு எதிராக குரல் கொடுப்பார்களா?

இந்துக்களே நினைவில் கொள்ளுங்கள்!. காங்கிரஸ் மற்றும் தி மு க ஆகிய இரு கட்சிகளும் இந்துக்களுக்கு எதிரானவையே! இந்துக்களின் பாரம்பரியத்தை அழிக்க அவதாரம் பூண்டவையே! இனி இறக்கும் வரை இவர்களுக்கு வாக்களிப்பதில்லை என்று இந்துக்கள் தீர்மானித்தாலே ஒழிய இந்துக்கள் சொந்த நாட்டின் மத அடிமைகளாகப் போகும் நாள் வெகு தூரத்தில் இல்லை!