செய்தி:
**********
ஆமதாபாத், பிப்.22: 2002-ம் ஆண்டு கோத்ராவில் ரயில் எரிக்கப்பட்ட வழக்கில், ரயில் எரிப்பு சம்பவம் திட்டமிட்ட சதியே என்று கூறிய ஆமதாபாத் சிறப்பு நீதிமன்றம், இதில் தொடர்புடைய 31 பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்துள்ளது. இவர்களுக்கான தண்டனை விவரம் பிப்ரவரி 25-ம் தேதி அறிவிக்கப்படும். மேலும் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 63 பேரை விடுதலை செய்தும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2002-ம் ஆண்டு பிப்ரவரி 27-ம் தேதி சபர்மதி எக்ஸ்பிரஸின் எஸ்-6 பெட்டி எரிக்கப்பட்ட சம்பவத்தில் 90 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. ரயில் எரிக்கப்பட்டதில் 59 பேர் உயிரிழந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் அயோத்தியில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த கரசேவகர்கள். ரயில் எரிப்பு சம்பவம் திட்டமிட்ட நடத்தப்பட்டது என முதல்வர் நரேந்திர மோடி அறிக்கை வெளியிட்டார். இருப்பினும் இந்த சம்பவம் தானாக திடீரென நடந்தது என ஆரம்பகட்ட போலீஸ் விசாரணைகள் தெரிவித்தன.
***************
மேலும் ரயில் திட்டமிட்டு நடுவழியில் நிறுத்தப்பட்டிருக்கிறது. ரயிலின் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்கிறது. மிக அதிகளவில் பெட்ரோல் ஊற்றப்பட்டே ரயில் கொளுத்தப்பட்டிருக்கிறது என்ற ஆதாரங்களின் அடிப்படையிலேயே நீதிமன்றம் இதனை திட்டமிட்ட கொலை என்று ஏற்றுக்கொண்டிருக்கிறது. ஆனால் இவை எதுவும் மீடியாக்களுக்கு கொலையாகத் தெரியவில்லை . அதன் எதிர்வினையான கலவரம் மட்டுமே பூதாகரமாக்கப்பட்டு அதைக்கொண்டு அரசியல் நடத்தப்பட்டும் வருகிறது.
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் கூறுகையில், தீர்ப்பின் விவரம் தெரியவில்லை. தீர்ப்பைப் படித்த பிறகுதான் எதையும் சொல்ல முடியும் என்றும் தீர்ப்பு எப்படி இருந்தாலும் அதன் பிறகு நடந்த கலவரம் தான் முக்கியம் என்றும் நாகூசாமல் பேட்டியளிக்கிறார். இவர்களுக்கு திட்டமிட்ட கொலைபாதகத்தால் இறந்தவர்கள் பற்றி பரிதாபம் கூட இல்லை.
என் டி டி வி யோ இந்த தீர்ப்பு குறித்து செய்தி வெளியிடும் போது கூட குஜராத் காயங்களுக்கு இந்த தீர்ப்பு மருந்தாகுமா? என்று கலவரத்தை மையப்படுத்தியே செய்தி வெளியிடுகிறது. திட்டமிட்ட ஒரு படுகொலை மதத்தின் பெயரால் நடத்தப்பட்டிருப்பது பற்றி இந்த இந்து விரோத டி வி கவலை கொள்ளவில்லை. மேலும் பர்க்காதத் 63 பேர்களில் 31 பேர்தான் குற்றவாளிகளென்று அறிவிக்கப்பட்ட நிலையில் மீதமிருந்த 32 அப்பாவிகள் இத்தனை வருடம் சிறையில் இருந்தார்களே அவர்களிடம் அரசாங்கம் மன்னிப்பு கேட்குமா என்று வருத்தப்படுகிறார்! ரயில் கொலையில் இறந்து போன 59 நபர்கள் வாழ்க்கை பற்றி வருத்தப்பட்டு பேசாத பர்காதத் 32 அப்பாவிகள் சிறையில் உயிருடனும் நலமுடனும் இருந்ததைப் பற்றி கவலைப்பட்டதை பார்க்கும் போது கண்ணீர் தான் வந்தது!
தனது உன்னைப் போல் ஒருவன் படத்தில் கலவரத்தின் போது கர்பினிப் பெண் ஒருத்தி கருவருக்கப்பட்டதாக உருகி உருகி வசனம் பேசிய கமலஹாசன் ரயிலில் கொடூரமாக திட்டமிட்டு எரிக்கப்பட்ட இந்துக்களுக்காக வசனம் வைக்காதது ஏனோ? 'எத்தனையோ ராமர்களும், கிருஷ்ணர்களும் இருந்தும் யாரும் அந்தப் பெண்ணை காப்பாற்றவில்லை என்று எழுதியவர், எத்தனையோ நபிமார்கள் கூட்டமாக இருந்தும் யாரும் ரயில் எரிப்பை தடுக்கவில்லையே, மனிதர்கள் கருகிச்சாவதைத் தடுக்கவில்லையே" என்று வசனம் வைக்காதது ஏனோ? கமலஹாசனுக்கும் இந்துக்கள் இறந்தால் அது விபத்து, பிற இனக்குழு இறந்தால் அது மட்டும் கலவரம் போல?
குஜராத் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களை பற்றி வருடக்கணக்காக பேசிக்கொண்டிருப்பவர்கள் ரயிலில் திட்டமிட்டு தீ வைத்து கொளுத்தப்பட்டவர்களுக்காக இரக்கப்பட்டு கூட பேசாதது ஏன்?
கொலை செய்தாலும் ஒரு சாரார் அப்பாவிகள், கொலையுண்டு செத்தாலும் இந்துக்கள் பாவிகள் என்கிற மனோநிலையில் இருக்கும் மீடியாக்களிடமிருந்தும், செக்யூலரிச அரசியல் வாதிகளிடமிருந்தும் நடுநிலையான ஞாயத்தை இந்துக்களுக்கான பாதுகாப்பை எதிர்பார்க்க முடியுமா?
.
யார் இறந்தாலும் பிரிவினைக்கார அரசியல் வாதிகளுக்கு அள்ள அள்ள (பி)பணம்!
இறந்தவர்களின் ஆத்மா இப்போதாவது சாந்தியடையட்டும்!
.

