Sunday, June 16, 2013

ஈ.வெ.ரா.வை காப்பாற்றிய ஐயர்!

ஞானதேசிகன்

மதுரை வைத்தியநாத ஐயர்

'மதுரை வைத்தியநாத ஐயர்' - இந்த பெயரை எங்கோ கேள்விப்பட்டது போல் இருந்தால் உங்களுக்கு பாராட்டுக்கள். இல்லை என்றால் மேலே படிக்கவும்.

தமிழ் நாட்டில் தாழ்த்தப் பட்டோருக்காக பாடுபட்டவர்கள் தாங்கள் தான் என உரிமை கொண்டாடி அதனை அரசியல் ஆதாயத்திற்காக உபயோகப்படுத்திக்கொள்ளும் பலர் நிஜ தியாகிகளை சமூகத்திற்காக பாடுபட்டவர்களை திட்டமிட்டு மறைத்து விடுவர். சமூகத்தில் நடக்கும் இது போன்ற வெற்றுக் கூச்சல்கள் மதுரை வைத்யநாத ஐயர் போன்றவர்களை மறக்கடிக்கச் செய்துவிடும்அத்தகைய ஒருவரை பற்றி பார்ப்போம்.


தமிழ்நாட்டின் மறக்கப்பட்ட அல்லது மறக்கடிக்கப்பட்ட சுதந்திரப் போராட்ட தியாகி இவர். ஹரிஜனங்களின் தந்தை என்று அழைக்கப்பட்டவர். தியாகி 'கக்கன்' இவருடைய சீடர்1935 முதல் 1955 வரை தமிழ்நாடு ஹரிஜன சேவா சங்கத்தலைவர். இவர் வாழ்க்கையில் நடந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளை பார்ப்போம்.

மதுரை ஆலயப்பிரவேசம்:

1939 ஜூலை 8 தமிழக வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நிகழ்வு..

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஹரிஜன ஆலயப்பிரவேசம் நடைபெற்றது. இந்த போராட்டத்தை நடத்திக்காட்டியவர் மதுரை வைத்யனாதய்யர். இன்றைக்கு தாழ்த்தப்பட்டவர்களுக்காக வக்காலத்து வாங்கிப் பேசும் பலரும் பிராமணர்களுக்கெதிரான வசைகளையே முன்னிறுத்தி பேசுவார்கள். அதே தாழ்த்தப்பட்டவர்கள் என அழைக்கப்பட்ட மக்களை ஆலங்களுக்குள் அனுமதிக்க வேண்டும் என போராட்டம் நடத்தி அதற்கு தலைமை தாங்கியவர் இந்த பிராமணர் என்பதை எங்குமே பேசமாட்டார்கள். அப்படிப் பேசிவிட்டால் பிறகு பார்ப்பன எதிர்ப்பு கோஷமும் திராவிட திராபைகோஷமும் அடிபட்டுப் போய்விடும் என்கிற ஞாயமான பயம் காரணமாக இருக்கலாம்.

அத்தகைய ஆலய பிரவேச தினத்தன்று தமிழ்நாடு ஹரிஜன சேவா சங்கச்செயலாளர் எல்.என்.கோபால்சாமி, P.கக்கன், உசிலம்பட்டி V.முத்து, P.R.பூவலிங்கம், V.S.சின்னையா, முருகானந்தம்ஆலம்பட்டி S.S.சண்முக நாடார் மற்றும் பல ஹரிஜன அன்பர்கள் வைத்யனாதய்யருடன் ஆலய பிரவேசம் செய்தனர். மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலர் திரு R.S.நாயுடு இந்த நிகழ்வுக்குமிகவும் உதவியாக இருந்தார். மேலும் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் இந்த போராட்டத்திற்கு ஆதரவு அளித்ததோடு தன் தோழர்களை அய்யருக்கு துணையாக அனுப்பினார்.



இந்த முக்கிய நிகழ்வுக்கும் எதிர்ப்பு இருந்தது. சில வைதீகர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். வைதீகர்களின் இந்த வழக்கை முறியடிக்க வேண்டுமென ராஜாஜி விரும்பினார். எனவே ஆலய பிரவேசம் செல்லும் என்று ராஜாஜி 'அரசு ஆலய பிரவேசம்' என்ற சட்டத்தை முந்தேதியிட்டு பிறப்பித்து, ஆலய நுழைவை செல்லுபடி ஆக்கினார். அதாவது வைதீகர்களின் வழக்கு தேதிக்கு முந்தேதியிட்டு ஆலயப்பிரவேச சட்டத்தை அமல்படுத்தி விட்டதால் வைதீகர்களின் வழக்கு முறியடிக்கப்பட்டதுஇந்த நிகழ்ச்சி மதுரையில் நடக்கும் போது மதுரை காந்தி என்று அழைக்கப்பட்ட திரு N.M.R.சுப்பராமன் மதுரை நகராட்சி தலைவராக இருந்தார். இவர் ஒரு ஹரிஜனரை அறங்காவலர் குழுவில்நியமிக்கச் செய்தார். தமிழகத்தில் இது ஒரு முன் மாதிரி நடவடிக்கை.

திரு. வைத்தியநாத ஐயர் தமிழகத்தின் முக்கிய சுதந்திர போராட்டங்களான உப்பு சத்தியாகிரகம், கள்ளுக்கடை மறியல் போன்ற முக்கிய போராட்டங்களில் பங்கேற்றுள்ளார். அய்யரும் அவர்
குடும்பமும் பல முறை தேசத்திற்காக சிறை சென்றுள்ளனர்.


.வெ.ரா.வை காப்பாற்றிய ஐயர்

இங்கே இன்னொரு சுவாரஸ்யமான சம்பவம் பற்றியும் பார்ப்போம். 'பாம்பைக் கண்டால் விடு பாப்பானைக் கண்டால் அடி' என்று துவேஷப் பிரச்சாரம் செய்தும், பிராமணர்களை எதிர்த்தும் அவமதித்தும் பேசிவந்த ராமசாமி நாயக்கர் பிராமணராலேயே காப்பற்றப்பட்ட சம்பவத்தைப் பார்க்கலாம்.
               
1946 ம் ஆண்டு வைகை வடகரையில் தி. மாநாடு நடந்தது. தி. தொண்டர்கள் மீனாட்சி கோயிலுக்கு சென்று கிண்டலும் கேலியும் செய்துள்ளனர். மதுரை மக்கள் தி. தொண்டர்களை விரட்டிமாநாட்டுப் பந்தலுக்கு தீ வைத்துள்ளனர். ஷெனாய் நகரில் இருந்த .வே.ரா வை மக்கள் சூழ்ந்து விட்டனர். போலீஸாரால் தடுக்க முடியவில்லை. இதனைக் கேள்விப்பட்ட வைத்தியநாத ஐயர்  அங்கு சென்று மக்களை அமைதிப்படுத்தி வெ ரா உட்பட அனைவரையும் ஊருக்கு பத்திரமாக அனுப்பினார். ஆக பிராமணரை அடி என்று கூறிய ராமசாமி நாயக்கருக்கு பிராமணரான வைத்தியநாத  ஐயர் பாதுகாப்பளித்த சம்பவம் இன்றும் அழியாத வரலாறாக இருக்கிறது. ஆனால் என்ன நடந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என வெட்கமில்லாமல் திரியிம் திராவிடக்காரர்கள் இந்தச் சம்பவங்களை  வஞ்சகமாக மறைத்து ராமசாமி நாயக்கருக்கு குருட்டுத்தனமான பக்தர்கள் உருவாக பெரிதும் பாடுபட்டனர்.

மதுரை வைத்தியநாத ஐயர் தான் இறக்கும் வரை (1955) ஹரிஜன சேவா சங்க தலைவராக இருந்தார். ஹரிஜன சேவா சங்கம் இவரை பாராட்டி ஹரிஜனங்களின் தந்தை என்று அழைத்தனர்சுதந்திரப் போராட்ட தியாகியை ஹரிஜனங்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக பாடுபட்ட பின்னர் வஞ்சகமாக மறக்கடிக்கப்பட்ட இந்த மாமனிதரை நெஞ்சினில் நிறுத்திடுவோம்.

நினைவில் வைத்துப் போற்றுவோம்.


மேலதிக தகவல்களுக்கு

1)            'விடுதலை போரில் தமிழகம்' ஸ்டாலின் குணசேகரன் - பாகம் 2
இந்த புத்தகத்தில் இந்த கட்டுரையை இயற்றியவர் தியாகி மாயாண்டி பாரதி. இவர் வைத்யனாதய்யருடன் நெருங்கி பழகியவர்.

2)            'மதுரை காந்தி' , நா.மா.ரா.சுப்பராமன்  அல்லயன்ஸ் பதிப்பகம். சென்னை.

இப்படிப் பட்ட பல தியாகிகளின் தியாகங்கள் பெரும்பாலும் பேசப்படுவதில்லை. இந்த தியாகங்களை பற்றி வருங்காலத்திற்கு தெரிவிக்க வேண்டியது நம் கடமை.


4 comments:

Anonymous said...

ஆயிரம் காலம் அடிமை என்றாயே, ஹரிசனன்னு பேரு வைக்க யாரடா நாயே!!

Dr.R.Giridhar PhD said...

ஹரிஜன் என்று பெயர் வைத்து மகாத்மா காந்தி.

Anonymous said...

காடுகளனிகளும் சொல்லும் என் பேர..
சேத்துக்குள்ள இருக்கும்
மீனும் சொல்லும் என் பேர
ஹரிராமன் பெத்த புள்ளையா டா
RSS நாயே...!

Anonymous said...

ஹிரஜனுன்னு பெயரை வைக்க யாரடா நாயே..?