Sunday, April 27, 2014

இத்தாலி ராணியும் மங்குனி அமைச்சரும்!







மியூட் மோஹன் அசிங்கத்திற்கு ஈகோவே கிடையாதாம். யாருக்கு வேணும்னாலும் கூப்டவுடன் போய் வேலை செய்வாராம்.

ராபர்ட் வத்ரா: யாரெங்கே, யாரங்கே, அடேய் யாரங்கே...

மியூட்மோகன்:  இதோ வந்திட்டேன்,

ராபர்ட் வத்ரா:  அடேய் மங்குனி அமைச்சனே, எவ்ளோ நேரம் கத்துறது கூப்ட ஒடனே வரத்தெரியதா?

மியூட்மோகன்: இல்லை , ராகூல் பையனுக்கு கை தொடைக்க டிஷ்யூ பேப்பர் இல்லியாம், அவசரமா கூப்டாங்க.அதான் போய் எடுத்து குடுத்துட்டு வந்தேன். அதுக்குள்ள நீங்க கூப்டுடீங்க.

ராபர்ட் வத்ரா: சரி சரி, என்னோட ரியல் எஸ்டேட் மோசடி வழக்கு பைல் எங்கே,

மியூட்மோகன்:  இதோ இங்கே இருக்கு

ராபர்ட் வத்ரா: அதை எரிச்சி போட்ரு காணோம்னு நீயே பத்திரிக்கைக்கு சொல்லிடு. சரி, அப்டியே ப்ரீயா இருந்தா ப்ரியங்காவைப் போய்ப் பாரு. புள்ளைங்க ஸ்கூல்லருந்து இன்னும் வரிலியாம். என்னன்னு விசாரிச்சி வை.

மியூட்மோகன்: : ஓகே சார், மியாவ்

ஆ.ராசா: மிஸ்டர் மன்மோகன்,

மியூட்மோகன்:  யெஸ் ஸார். அந்த 2 ஜி ஊழல் பைலை  ஒளிச்சி வையின்னு சொன்னேனே செஞ்சியா?

மியூட்மோகன்:  இல்லை சார். மறந்திட்டேன்.

ஆ.ராசா: யோவ், ஒனக்கு மண்டைல டர்பன் தான் பெரிசா இருக்கு, அதுல மூளை கொஞ்சம் கூட இல்லியே!! நான் கலைஞ்சர் ட்ட சொன்னா என்ன நடக்கும்னு தெரியுமா?

மியூட்மோகன்:  சாரி சார், மியாவ், நான் இப்பவே அந்த வேலையை பாத்திடறேன்.

ஆ.ராசா:  சரி சரி, இதுல அது பத்தி ஒரு அறிக்கை எழுதி வெச்சிருக்கேன். உன்னோட கையெழுத்து வாங்கி ஒனக்கு தெரிஞ்சி தான் எல்லாமே நடந்திருக்குன்னு எழுதிருக்கு.  சோனியாகிட்டயும் சொல்லிட்டேன். நாளைக்கு பத்திரிக்கைல  அப்டியே குடுத்திரு.

மியூட்மோகன்:  அப்படியா?  இருந்தாலும்...சார், அது வந்து..

ஆ.ராசா: என்னய்யா யோசிக்கிற, சோனியாட்ட சொன்னா என்ன நடக்கும்னு தெரியுமா, பதவி வேணுமா வேணாமா?

மியூட்மோகன்:  வேணும் வேணும்,

ஆ.ராசா: ம்ம் அப்ப்போ சொன்னதை செய், போ!! அஹ்.. ஸ்ஸப்பா,

மியூட்மோகன்: என்ன சார்,

ஆ.ராசா: என் பேப்பர்ஸெல்லாம் கீழ விழுந்திடிச்சி,

மியூட்மோகன்:  இதோ நான் குனிஞ்சி எடுத்து தர்றேன் சார்...

ஆ.ராசா: ம்ம் குட் பாய். கலைஞ்சர் ட்ட உன்னைப் பத்தி நல்லவிதமாச் சொல்றேன்...வர்ட்டா.

ஆ.ராசா: ஓகெ மியாவ்!