Thursday, September 18, 2008

ஹாய் ஜோக்ஸ் , சும்மா டைம் பாஸ்

என்னுடைய கதை என்று ஒருவர், நம் படத்தைப் பார்த்து விட்டு கேஸ் போட்டிருக்கிறார்.

கவலைப்படாதே, கேஸ் தோற்றுவிடும். ஏன்னா நம்ம படத்துல கதையே இல்லையே.

******

உன்னைக் குற்றவாளி இல்லை என்று விடுதலை செய்கிறேன்

அப்படினா நான் திருடின நகைகளை என்கிட்ட ஒப்படைக்க உத்தரவிடுங்கள் எஜமான்

******

பேப்பர் ரோஸ்ட் கேட்டா என்னப்பா ஃபைலைக் கொண்டு வந்து வைக்கிறே ?

பிரிச்சுப் பாருங்க சார்.. . ரோஸ்ட்டை ஃபைல் பண்ணி வச்சிருக்கோம்

******

உன்னுடைய கடைசி ஆசை என்ன?

என்னைத் தூக்கில் போடறதை, வீடியோவில் எடுத்து எனக்குப் போட்டுக் காட்டணும்.

******

சாப்பாட்டுக்கு முன்னாடி சாப்பிட வேண்டிய மருந்தை சாப்பாட்டுக்குப் பின்னாடி குடிச்சிட்டேன்!

அடடா... அப்புறம்?

மறுபடியும் ஒரு தடவை சாப்பிட வேண்டியதாயிடுச்சு!

******

அந்த போட்டோகிராபரைக் காதலிச்சியே, என்னடி ஆச்சு?

க்ளிக் ஆயிடுச்சு.

******

காதுக்கு வைத்தியம் பார்க்கிற டாக்டர்னு நினைச்சு, தெரியாம பல் டாக்டர்கிட்ட போய்த் தொலைச்சிட்டேன்.

அப்புறம்?

அப்புறம் என்ன, ஒரு காதை பிடுங்கட்டாரு.

******

ஃபைலை எடுத்துக்கிட்டு வர ஏன்யா இவ்வளவு நேரம்?"

"ஹெட்-கிளார்க் ஏகாம்பரம், இந்த ஃபைலைத் தலையில் வைச்சுத் தூங்கிட்டிருந்தார். அவரை எழுப்பி, எடுத்துட்டு வர லேட்டாயிடுச்சு சார்!

******

என் மாமியாருக்கு அலோபதி, ஹோமியோபதி, யுனானி இப்படிப் பலவிதங்களில் முயற்சி செய்தும் பிரயோஜனமில்லை!

அடடா... போயிட்டாங்களா?

ம்ஹும். குத்துக் கல்லாட்டம் இருக்காங்க!

******

எதுக்கு சார், லஞ்சம் வாங்கும்போது உங்க கை இப்படி நடுங்குது?

ரெண்டு மாசமா லீவ்ல இருந்ததுனால டச் விட்டுப்போச்சுய்யா.

******

டார்லிங், என்னை மட்டும் பிடிக்கலேன்னு தயவு செய்து சொல்லிடாதே!

சரி... உன் குடும்பமே பிடிக்கலை.

******

எங்க ஆஃபீஸ்ல ஸ்டிரிக்டா சொல்லிட்டாங்க.

என்ன சொன்னாங்க?

ஒண்ணு வேலை செய்யனுமாம், இல்லை தூங்கணுமாம்! ரெண்டும் பண்ணாம சும்மா இருக்கக் கூடாதாம்!

******

"அம்மா, நம்ம வீட்டு பலகாரத்துக்கும் எதிரில் உள்ள ஹோட்டல் பலகாரத்துக்கும் என்ன வித்தியாசம்?"

"ஒரு நாள் வித்தியாசம்"

******

"வயித்துவலி தாங்க முடியலை. தற்கொலை பண்ணிக்கலாம்னு கூடத் தோணுது டாக்டர்."

"அதான் ஆபரேஷனுக்குத் தேதி குறிச்சாச்சே! அதுக்குள்ளே ஏன் அவசரப்படறீங்க?"

******

என்ன, புதுசா கார் வாங்கிட்டு நடந்து போறீங்க?

கார் வாங்க லோன் கொடுத்த பாங்க்ல, பெட்ரோல் போட லோன் தரமாட்டேனுட்டாங்களே!

******

"ஆசையே துன்பத்துக்குக் காரணம்னு இப்பதான் நான் தெரிஞ்சுக்கிட்டேன்!"

எப்படி?

"என் மனைவியை நான் ஆசைப்பட்டுத் தானே கல்யாணம் பண்ணிக்கிட்டேன்!"

'ஏன்யா இப்பிடி ஆளாளுக்கு பீதிய கிளப்புறீங்க?"

******

"அடுத்த மாசம் எனக்கும் என் அத்தை பையனுக்கும் கல்யாணம் பண்ணி வைக்கப் போறதா எங்கப்பா சொல்லிட்டார். நீ என்ன பண்ணப் போறே?"

"ஒரு குத்துவிளக்கு பிரசென்ட் பண்ணிடறேன்."

******

டாக்டர் : நீங்க தினமும் எட்டு டம்ளர் தண்ணி குடிக்கனும்.

நோயாளி : டாக்டர்! எங்க வீட்ல நாலு டம்ளர் தான் இருக்கு

******

"என் பொண்ணு பின்னால சுத்தாதேன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்?"

"கரெக்டா தெரியாது! சுமாரா முன்னூறு தடவை இருக்கும்"

******

"டார்லிங்! உனக்காக, என்னோட உடல், பொருள், ஆவி எல்லாத்தையும் தர நான் தயாரா இருக்கிறேன்."

"நீங்க என்ன தர்றது, கல்யாணத்துக்கப்புறம் நானே எடுத்துக்குவேன்"

******

"தொண்டை ஆபரேஷனுக்கு அப்புறம் என் மனைவியால பேச முடியலை."

"அடடா, அப்புறம்?"

"டாக்டர் எனக்கு செஞ்ச மகத்தான தொண்டை நினச்சு சந்தோஷமா இருக்கேன்."

******

"ஏமாந்து போவோம்னு தெரிஞ்சும், ஏன் எல்லாரும் பைனான்ஸ் கம்பெனியிலே பணம் போடறாங்க?"

"கஷ்டப்படுவோம்னு தெரிஞ்சும், கல்யாணம் பண்ணிக்கிறது இல்லையா?"

******

"தினமும் காலையும் மாலையும் வந்து ஸ்டேஷன்ல கையெழுத்து போட்டுட்டுப் போகணும் தெரியுதா?"

"சரிங்கய்யா, அப்புறம் வழக்கம் போலத் திருடப் போகலாமில்லே?"

****** என் புருஷனை அவ்வளவு லேசா யாரும் பார்த்துவிட முடியாது!

அவ்வளவு பெரிய ஆளா?

இல்லையா பின்னே, ஜெயில் கைதி ஆச்சே!

******

டாக்டர் : ஆபரேஷன்ல உங்க மாமியார் பொழைச்சிட்டாங்க.

பெண் : சே! உங்களைப் போய் கைராசி டாக்டர்னு சொல்றாங்களே.

******

அம்மா: ஏன்டி, நேத்து ராத்திரி எவனோ ஒருத்தனோட ஜாலியா நடந்து போய்க்கிட்டிருந்தியாமே, எனக்கு நியூஸ் வந்தது!

மகள் : நீதானம்மா சொன்னே, சாயந்திரம் விளக்கு வைச்சதுக்கப்புறம் வயசுப் பொண்ணு தனியா வெளியில போகக் கூடாதுன்னு!

******

ஏய், உன் காதலிக்கு நல்லா சமைக்கத் தெரியுமாமே! நீ அதிர்ஷ்டகாரண்டா!

அதனால எனக்கு என்ன பிரயோஜனம்? அவளை கல்யாணம் பண்ணிக்கப் போறவன்தானே அதிர்ஷ்டசாலி.

******

நாளைக்கு நான் ஒரு பெரிய நகைக் கடையைத் திறக்கப் போறேன்.

அப்படியா, நல்ல கூட்டம் வரும்னு சொல்லுங்க.

காசிமேடு கபாலி : பூட்டை உடைக்கிறதுக்கெல்லாம் கூட்டம் சேர்க்க முடியுமா?

******

நானும் என் கணவரும் வீட்டு வேலையைச் சமமா பங்கு போட்டுச் செய்வோம்!

எப்படி?

பத்துப் பாத்திரம் தேய்ச்சாக்கூட, ஆளுக்கு அஞ்சா பிரிச்சுப்போம்!

எங்க வீட்டுலும் சமமா பிரிச்சுத்தான் வேலை பார்ப்போம்.

அப்படியா?

ஆமா அவர் சமைப்பாரு. நான் சாப்பிடுவேன்.

******

அம்மா அடிச்சா... நான் ஓ...ன்னு அழுவேன்!

அப்புறம் என்னாகும்?

"அப்பா மாதிரி நீயும் நல்ல பிள்ளையா... அடிச்சா அழக்கூடாது"ன்னு சமாதானப்படுத்துவாங்க!"

******

இன்னிக்கு 8 மணிக்கு கடுமையான மழையும் காற்றும் வரும்னு டீவியில‌ சொன்னாங்க...

நீங்க கேட்டீங்களா?

இல்லை அவங்களே சொன்னாங்க...

******

டாக்டரம்மா ஏன் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்ட தேடி பதட்டமா அலையறாரு?

அது போஸ்ட்மார்ட்டம்னு ஞாபகமில்லாமல் "ஸ்கேன் ரிப்போர்ட், எக்ஸ்ரே, ப்ளட் டெஸ்ட் ரிப்போர்ட் எல்லாம் வந்த பிறகுதான் ஆபரேசன் பண்ணலாம். எப்படியும் காப்பாத்திரலாம்"னு வழக்கமான வசனத்தை எழுதிட்டாங்களாம்.

******

உன் காதலி வடபழனியிலதான் கல்யாணமே வச்சிக்கணும்னு சொன்னதும் நீ என்ன சொன்னே...?

"என்னதான் இருந்தாலும் லேடீஸ் பர்ஸ்ட் இல்லையா? அதனால அவ இஷ்டப்படி வடபழனியை அவ கல்யாணத்துக்கு விட்டுக்குடுத்துட்டு... என் கல்யாணத்தை தீர்த்த மலையில வச்சிக்கிட்டேன்!"

******

ஏன் உன் தலைமுடி உதிர்ந்து விட்டது??

கவலை...

என்ன கவலை??

முடி உதிருதேன்னு கவலை...

******

நம்ம கிராமத்துக்கு மின்சாரம் வந்தாச்சு, இனிமேல் நாமும் பட்டணவாசிகளைப் போல அனுபவிக்கலாம்....

என்னத்தை??

வேறு என்னத்த, பவர்-கட்ட தான்...