Tuesday, December 27, 2011

கொஞ்சம் நொறுக்ஸ் - கொஞ்சம் டைம் பாஸ்!
 • ஒரு மாதத்துக்கு 10 லட்சத்துக்கும் அதிகமான இணையதளப் பெயர்கள் பதிவு செய்யப்படுகின்றன. ஆனால் அவை அனைத்தும் இயங்குகிறதா என்று கேட்டால், இல்லை என்பதே பதிலாகக் கிடைக்கும்.

 •  இணையதளத்தில் பேனர் விளம்பரம் முதன்முறையாக 1994ம் ஆண்டு வெளியிடப்பட்டது.


 • கம்ப்யூட்டரின் முதல் மவுஸ், மரத்தால் செய்யப்பட்டது. இதை 1964ம் ஆண்டு டாவ்க் ஏங்கல்பார்ட் என்பவர் வடிவமைத்தார்.

 • 2012ம் ஆண்டுக்குள் 17 பில்லியன் சாதனங்கள் இணையத்துடன் இணைக்கப்பட்டிருகும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

"புகை பிடிப்பது தவறுதான், ஆனால் புகையிலையே அபாயமானதா? என் தாத்தா சாகும் வரை வெற்றிலைசீவலில் புகையிலை சேர்த்து சவைத்து வந்தார். 75 வயதில் தூங்கும் போது நிம்மதியாகப் போய் சேர்ந்தார்! ஒரு வியாதியும் கிடையாது. ஆனால் இன்றோ புகையிலை சுவைத்தாலே புற்றுநோய் வரும் என்று கிளப்பி விடுகிறார்கள்! அதான் ஒரே டவுட்டு!"
 • ஆறு வயது குழந்தை ஒரு நாளைக்கு சிரிப்பதில் மூன்றில் ஒரு பங்கு அளவு கூட பெரியவர்கள் சிரிப்பதில்லை - நல்லா சிரிங்கப்பு!

 • மின் விளக்கைக் கண்டுபிடித்த தாமஸ் ஆல்வா எடிசனுக்கு, இருட்டைக் கண்டால் பயம் - இது அவரே சொன்னதாம்.

 • அமெரிக்காவில் திருமணமான ஜோடிகளில் ஒரு ஜோடிஇணையம் வழியாக சந்தித்து திருமணம் செய்து கொண்டவர்களாக இருக்கிறார்கள்.
இவங்க எங்கய்யா சந்திச்சிகிட்டாங்க..! சு சுவாமியை கேட்டா தெரியும்?


 • மின்னல் தாக்குவதால் அதிக சேதங்களை அடிக்கடி சந்திக்கும் பகுதிம் அமெரிக்காவின் ஃபுளோரிடா.

 • மனிதர்களால் கண்களை மூடாமல் தும்ம முடியாது. - வேணும்னா ட்ரை பண்ணி பாருங்க..!


 • மழையில் விட்டமின் B12 உள்ளது - மழைபெய்யும் போது வெளியே நின்னு நாக்கை நீட்டுங்க. விட்டமின் சத்து கிடைக்கும்!


 • ஒரு மழைத்துளியின் வேகம் மணிக்கு 17 மைல்கள் - டூவில்லர்ல கூட இந்த வேகத்தில போக முடியலை, நம்ம ரோட்டுல.


 • யானை தனது துதிக்கையில் இரண்டு கண அடி அளவுக்கு தண்ணீரை உறிஞ்சி வைத்திருக்கும் திறன் கொண்டது - தமிழ் நாடு முழுவதும் யானை வளர்த்து தண்ணீர் தராத மாநிலத்திலிருந்து உறிஞ்சி கொண்டுவந்துடலாம்.

கட்டழகான ராமர் படம், பிடித்த வரைபடங்களுல் ஒன்று!


Monday, December 19, 2011

சபரிமலை பயணத்தைக் குலைக்கச் சதி முல்லைப் பெரியாறு!அப்புசாமி: குப்பு, அதென்னய்யா டிவிய தொறந்து மூடினா எப்பப்பாரு முல்லைப்பெரியாறு முல்லைப்பெரியாறு ன்னு பொழுதன்னிக்கும் காட்டிக்கிட்டே இருக்காங்களே..அப்டி என்னய்யா ப்ரச்சனை?

குப்புசாமி: அப்பு, தமிழக கேரள எல்லைல இருக்கும் டேம் தான் முக்கியப் பிரச்சனை. ஏதோ டேம் ஒடஞ்சிருமாம், அதை வெச்சி அரசியல்வாதிங்க மக்களை பயமுறுத்திக்கிட்டே வர்ராங்க.

அப்புசாமி: அதான் பிரச்சனையா, அதுக்கெத்துக்குப்பா ஐயப்பசாமிக்கு மாலை போட்டவங்களையெல்லாம் அடிக்கனும்? தினசரி, ஏதோ சபரிமலைக்குப் போறவங்களுக்குப் பிரச்சனைன்னு திராவிடக்காரங்களோட திராவகச் சேனல்ல காமிச்சிக்கிட்டே இருக்காங்களே? அவங்க மேலே என்ன கோவமாம்?

குப்புசாமி: ஆங், இப்போதான் நீ விஷயத்துக்கே வந்திருக்க அப்பு, இந்த முல்லைப்பெரியாறு பிரச்சனை இருக்கே அது வெறும் டேம் பிரச்சனைன்னு எல்லாரும் நினைச்சிக்கிட்டு இருக்காங்க. ஆனா அதோட மையப் பிரச்சனையே வேற...! இந்த டேம் பிரச்சனைகுப் பின்னாடி பல முகமூடி சதி வேலைங்கல்லாம் இருக்கப்பு..!

அப்புசாமி: என்ன குப்பு சொல்ற, அப்போ இது வெறும் டேம் பிரச்சனை இல்லையா?

குப்புசாமி: ஆமாம் குப்பு உண்மையா சொல்லப்போனா ஒரு பெரிய பிரச்சனையை நேரடியா செய்யாம அதுக்கு இந்த டேமை ஒரு காரணப் பிரச்சனையா கையிலெடுத்து பண்ணிக்கிட்டு இருக்காங்க...

அப்புசாமி: குப்பு, கொஞ்சம் புரியரமாதிரி சொல்லேன்!

குப்புசாமி: அப்பு, சொல்றேன் கேளு, மொதல்ல டிவில என்னல்லாம் நியூஸ் போடறான், யாரெல்லாம் பேசுறாங்க, அப்புறம் எதப் பத்தி முக்கியமா திரும்ப திரும்ப சொல்றாங்கன்னு கவனிச்சா ஒனக்கே புரியும்.

தினமும் எங்கேயாவது, யாராவது டேம் விஷயமா ஆர்பாட்டம் பண்ணினாங்கன்னு நியூஸ் போட ஆரம்பிப்பாங்க. அப்புறம் உடனே கேரளாவில் ஐயப்ப பக்தர்கள் தாக்கப்பட்டார்கள்ன்னு மேட்டருக்கு வருவாங்க. கடைசியா, ஏன் சபரிமலைக்குப் போரீங்க, எல்லாரும் தமிழ் நாட்டு ஐயப்பன் கோவில்லயே மாலையை கழட்டுங்கன்னு வந்து முடிப்பாங்க. இப்போ தெரியுதா என்ன பிரச்சனைன்னு!

அப்புசாமி: அட ஐயப்பா..! நீ சொல்றதப் பாத்தா ஏதோ திட்டம் போட்டு இந்த சபரிமலை சீசனையே கெடுத்து ஹிந்துக்களோட ஐயப்ப வழிபாட்டையே சீர்குலைக்கனும்னு நடத்திவர்ர பிரச்சனையாவுல்ல தெரியுது..!

குப்புசாமி: ஆங்! அதுதான் பாயிண்ட்டு, டேம் பிரச்சனைங்கர பேர்ல நடக்கிற இந்தப் பிரச்சனையின் மையப் பகுதி எதுன்னு தெரியுதா?

அப்புசாமி: அடேங்கப்பா, 'வொய் திஸ்ஸு கொலவெறி' இந்த பாடாவதிங்களுக்கு? இதெல்லாம் யாரோட திட்டம், ஏன் இப்படியெல்லாம் செய்றாங்க? இதனால் யாருக்கு லாபம்?

குப்புசாமி: அப்பு, அடிப்படையில கேரளா ஹிந்துக்களை மைனாரிட்டிகளாகக் கொண்ட மாநிலம். அங்கே முஸ்லீம்களும், கிறிஸ்தவர்களும் தான் அதிகம். மிச்சம் மீதி கேரள ஹிந்துக்களையும் முஸ்லீம்கள் லவ் ஜிகாத் மூலமாகவோ, அல்லது மிரட்டியோ மதம் மாத்த முயற்சிக்கறதும், கிறிஸ்தவங்க மிஞ்சியிருக்கரவங்களை கருனை வலைக்குள்ள கொண்டு வரனுமுன்னும் பெரிய வேலைங்களையெல்லாம் செஞ்சிக்கிட்டு வர்ராங்க. அது மாதிரி ஆளுங்களுக்கு தொழிலே அதுதான்.

ஆனா இதுக்கெல்லாம் பெரிய முட்டுக்கட்டையா இருக்கறது அங்க இருக்கிற முக்கியமான சில ஹிந்துக் கோவில்கள். சரியா சொல்லனும்னா, திருவனந்த புரம் பத்மனாபர்சுவாமி கோவில்குருவாயூரப்பன் கோவில் மற்றும் சபரிமலைன்னு சில முக்கியமான கோவில்கள் அதிகளவு ஹிந்துக்களை ஒரே இடத்திற்கு ஈர்க்கும் கோவிலா இருக்கு.

அதுலயும் குறிப்பா சபரிமலை ஐயப்பன் கோவில் இருக்கே, அது வாட்டிகன் மற்றும் மெக்காவை மிஞ்சும் அளவிற்கு ஒரே நாளில் உலகிலேயே அதிக மக்கள் கூடும் முக்கியக் கோவில் என்ற பெயரை பெற்றதோடல்லாமல், உலகிலேயே 4.5 முதல் 5 கோடி மக்கள் மிகக்குறுகிய காலத்தில் வருடம் தோறும் அமைதியாக கூடிக்கலையும் புரம்மாண்டக் கோவிலாக இருக்கிறது என்பது பல அந்நிய மதக்காரர்களுக்கு கண்ணை உறுத்திக்கிட்டே இருக்கு.

இப்படி கேரளத்தை மதரீதியாக அபகரித்து அங்கே தனியாக ஒரு மதத்தின் நாடு உருவாக்க திட்டம் தீட்டிக்கொண்டிருப்பவர்களுக்கு, இந்தியாவின் பல பகுதிகளிலிருந்து ஐயப்பன் பெயரைச் சொல்லி கூட்டம் கூட்டமாக மக்கள் வந்து போவது மிகுந்த தொந்தரவாக இருக்கு. இந்தியாவின் முக்கியப் பகுதியாக அதுவும் ஹிந்துக்களின் முக்கியப் பகுதியாக இன்னும் கேரளம் தென்பட்டுக் கொண்டே இருந்தால் கேரளத்தை தனியொரு மதத்தினரின் பகுதியாகப் பிரிப்பது என்பது கனவிலும் நடக்க முடியாமல் போயிடும்.

அது மட்டுமல்ல, தங்கள் சாமி தான் உலகை காக்கப் போகிறது என்று சொல்பவர்கள் கண்முன்னாலேயே ஐயப்பன் தான் எங்களைக் காக்கிறான் என்று சொல்லி இத்தனை லக்க்ஷம் பேர் ஆண்டு தோறும் பிரயாணம் செய்வது மிஷ'நரி'களின் தோல்வியை அப்பட்டமாக தோலுரித்துக் காட்டும் வைபவமாகவும் இருக்கு. அதனால் இதனை எப்படியாவது சீர்குலைத்திட வேண்டும்னு திட்டமிட்டு ஒவ்வொரு ஐயப்ப சீசன் வரும்போதும் ஏதாவது பிரச்சனையை உண்டு பண்ண காத்துக்கொண்டே இருக்காங்க, அதுப்படி செய்யவும் செய்றாங்க.

இப்போது இந்த முல்லைப் பெரியாறு பிரச்சனையும், ஐயப்ப சீசனை சீர்குலைக்க வேண்டும் என்கிற திட்டத்துடன் நடக்கும் ஒரு பிரச்சனை தான்.

அப்புசாமி: குப்பு, எனக்கு தலையே சுத்துதய்யா! ஒரே ஒரு பிரச்சனைக்குப் பின்னாடி இத்தனை முகமூடிப் பிரச்சனை இருக்கா..? ஆனா அதை ஒரு முதலமைச்சரே செய்ய நினைப்பாரா என்ன?

குப்புசாமி: என்ன அப்பு ஒலகம் தெரியாதவனா இருக்க? கோயமுத்தூர்ல குண்டு வெச்சதுக்காக ஜெயில்ல இருந்த மதானியை விடுதலைப் பண்ணுங்கன்னு தமிழக முதலமைச்சரை நேர்ல பாத்து சொல்லிட்டுப்போனது கேரள முதலமைச்சர் அச்சுதானந்தன் ங்கறத மறந்திட்டியா? சிறுபான்மை போர்வைய போத்திக்கறதுக்காக கேரள முதல்வருங்க என்ன வேனாலும் பண்ணுவாங்க! அதுலயும் காங்கிரஸும், கம்யூனிஸ்ட்டுகளும் ஹிந்துக்களுக்கு எதிராவே தான் இதுவரைக்கும் நடந்திக்கிட்டு வருதுன்னு எல்லோருக்கும் தெரியும். அப்படி இருக்கும் போது இதுபோல சதிவலைக்கு அதிகாரத்தில இருக்கறவங்க ஏன் உதவி பண்ண மாட்டாங்க?

அப்புசாமி: ஓஹோ, இந்த ஜெயமாலாங்கற நடிகை ஐயப்பன் சிலையை தான் தொட்டதா சொல்லி நாட்காமாடினாளே அதுவும் இதுமாதிரி கேஸ்தானா?

குப்புசாமி: ஆமாம் அப்பு, ரொம்பநாளாவே சபரிமலையை அபகரிக்கனுமுன்னும், அதைச் சுத்தி ஹிந்துக்கள் மலைக்குப் போற வர்ர வழிகளையெல்லாம் எப்படியாவது அடைச்சி சபரிமலை பிரயாணத்தையே தடுத்து நிறுத்தனுமுன்னும் கிறிஸ்தவ மிஷனரிங்க நிறைய வேலை செஞ்சிக்கிட்டு வர்ரதா ஏற்கனவே பல செய்திகள் வந்திருக்கு.

இந்த செய்தியை படிச்சிப் பாரு உனக்கே புரியும்!


அப்புசாமி: ஆத்தி...! என்னய்யா மலை முழுங்கி மகாதாவனுங்களா இருக்கானுங்க..! விட்டா மொத்த இந்தியாவையும் மிஷ'நரி'ங்க வெல குடுத்து வாங்கி நம்மள தொறத்திடுவானுங்க போல இருக்கு!

குப்புசாமி: ஆமாம், இப்படித்தான் பத்மநாபர்சாமி கோவிலை கேரள அரசாங்கம், தேவசம் போர்டுகிட்ட இருந்து பிடுங்கிக்க பார்த்தது. ஆனால் தேவசம் போர்டு காரங்க பிடிவாதமா இருந்ததாலேயும், அங்கிருந்த ஹிந்துக்களின் ஒட்டுமொத்த கடுமையான எதிர்ப்பாலயும் தான் தப்பிச்சது.

இப்படி படிப்படியா ஹிந்தக்களுடைய பெருமைக்குரிய உத்வேகமான வழிபாடுகளையெல்லாம் சிதைக்கனும்ங்கறது தான் இங்களோட நோக்கம். அதுக்காக என்ன வேனும்னாலும் செய்வாங்க.

கீழே உள்ள படத்தைப் பாரேன், கரெக்ட்டா ஐயப்ப சீசன்ல தான் பெரும்பாலும் முல்லைப் பெரியாறு பிரச்சனையை ஊடகங்களை விட்டு அதிகப்படுத்தறாங்கன்னு புள்ளி விபரம் சொல்லுது..


அதோட இந்த ஆங்கில செய்தியையும் படிச்சிப் பாரு..


நவம்பர் முதல் ஏப்ரல் வரையிலான காலத்தில் தான் எல்லா செய்தித் தாள்களும் ஊடகங்களும்  முல்லைப் பெரியாறு பிரசினையைப் பற்றிய செய்திகளை  மிக அதிகமாக வெளியிடுதுன்னு செய்தி சொல்லுது!

தமிழகத்திலிருந்து  வரும் ஐயப்ப பக்தர்களுக்கு எதிராக  கேரளத்தில் துவேஷ உணர்வை உண்டாக்கி, அதனால்  தமிழர்கள்  சபரி யாத்திரையை  விட வைக்க வேண்டும்  என்பது உள்நோக்கம்மாம்!

அப்புசாமி: ஆமாம், குப்பு, நானும் பாக்கறேன், விஜயகாந்தில இருந்து கிறிஸ்தவ சைமனும், வைக்கோலும் மற்றும் எல்லாப்பயலும் 'ஏன் சபரிமலைக்குப் போறே?' ன்னு ஒரே கேள்வியைத்தான் கேக்கறாங்க..! நீ சொல்றது சரிதான்!

குப்புசாமி: இப்போ புரியுதா அப்பு, முல்லைப் பெரியாறு பிரச்சனைக்குப் பின்னாடி இருக்கறது, டேம் பிரச்சனை இல்லை, சபரிமலை சம்பந்தப் பட்ட மதப் பிரச்சனைன்னு!

அப்புசாமி: ஆமாம் குப்பு, இது நம்ம நாடு, நம்ம சபரிமலை, எத்தனை பிரச்சனை வந்தாலும் சபரிமலைக்கு போகும் நம் உரிமையை விட்டுக்கொடுக்க கூடாது. ஒரு சுதந்திர நாட்டின் பக்கத்து ஊருக்கு போகக்கூட பாதுகாப்பு தரமுடியாத அரசியல் வாதிங்க, அங்க ஏன் போறேன்னு கேட்டு பிரித்தாளும் சூழ்ச்சியில மட்டும் வீராப்பா இறங்கிடறாங்க!

குப்புசாமி: ஆமாம் குப்பு, ஒரு கோவிலுக்கு நிம்மதியா போய்ட்டு வர்ர அளவுக்கு அமைதியா நாட்டை வெச்சிக்க தெரியாத இவங்களை நம்பி பிரயோஜனம் இல்லை. வர்ரது வரட்டும்ன்னு நம்ம பூமியையும் நம்ம உரிமையையும் நாமதான் காப்பாத்திக்கனும்! அப்பு, நான் இந்த சீசனுக்கே மாலை போட்டு மகரஜோதிக்கு சபரிமலைக்குப் போய் தரிசனம் செய்யத்தான் போறேன்!

அப்புசாமி: குப்பு, நானும் வர்ரேன், நம்ம சபரிமலைய நம்மகிட்டருந்து எவன் பிரிச்சிடுவான்னு நானும் பக்கறேன். இன்னிக்கே போய் மாலை போட்டு ஐயப்பனை நம்பி புறப்படுவோம்..!

குப்புசாமி: இது நம்ம நாடு, நம்ம கேரளம், நம்ம சபரிமலை, நம்ம ஐயப்பன்!

அப்புசாமி: சாமியே சரணம் ஐயப்பா! சாமியே சரணம் ஐயப்பா!

குப்புசாமி: சாமியே சரணம் ஐயப்பா! சாமியே சரணம் ஐயப்பா!

சாமியே சரணம் ஐயப்பா! சாமியே சரணம் ஐயப்பா! சாமியே சரணம் ஐயப்பா!


Sunday, December 18, 2011

லாகவ கௌரவ நியாயம்!வராஹமிஹிரர் "பிருஹத் ஸம்ஹிதை" என்று ஒரு க்ரந்தம் எழுதியிருக்கிறார். அதில் இல்லாத விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளே இல்லை.

வெறும் ஆகாசத்தில் இந்தக் கிரஹங்களெல்லாம் இருக்கின்றனவே, விழாமல் எப்படி நிற்கின்றன? இதற்குக் காரனத்தை நியூட்டன் என்பவர் தான் கண்டுபிடித்தார் என்று எல்லோரும் நினைக்கிறார்கள். மிகப் பழைய காலத்தில் உண்டான சூரிய சித்தாந்தத்தின் ஆரம்பத்தில் இருக்கிற சுலோகமே, பூமி விழாமல் இருப்பதர்கு ஆகர்ஷன சக்தி தான் காரணம் என்று கூறுகிறது. பூமிக்கு ஆகர்ஷண சக்தி இருக்கிறது என்று சொல்லப்பட்டிருக்கிறது.

ஆகர்ஷண சக்தி என்றால் ஈர்க்கும் சக்தி என்று பொருள். ஒரு வஸ்துவை மேலே வீசிப் போட்டால் அது மறுபடியும் கீழே வந்து விழுகிறது. அப்படி விழுவது அந்தப் பொருளினுடைய ஸ்வபாவகுனம் அல்ல. அது பூமியில் ஈர்ப்பு சக்தியே அதற்கு காரணம். ப்ராணன் மேலே போகும்; அபானன் அதைக் கீழே இழுக்கிறது. ஆகவே கீழே இழுக்கிற சக்திக்கு அபானசக்தி என்று பெயர்.

ப்ரச்நோபநிஷத்தில் 'பூமியின் தேவதையே மநுஷ்ய சரீரத்தில் அபானனை இயக்குகிறது' என்று வருகிறது. அதன் பாஷ்யத்தில் ஆசார்யாள், மேலே போட்ட பொருளைப் பூமி ஆகர்ஷிக்கிற மாதிரி மேலே போகிற ப்ராணனை அபானம் கீழே இழுக்கிறது. இந்த இருவகை ஈர்ப்பு மனித உடலில் நிகழ்ந்து கொண்டே இருப்பதால் தான் உடல் இயங்குகிறது என்கிறார்.

இவ்வாறு உபநிஷத்திலேயே Law of Gravitation பேசப்படுகிறது. இவைகளைப் போல பல அருமையான விஷயங்கள் நம் சாஸ்திரங்களில் இருக்கின்றன. அவைகள் பற்றி நமக்குத் தெரியாததால் தேசாந்திரத்தில் இருக்கின்றவர்கள் நமக்கு எவ்வளவோ காலம் பிற்பட்டு எழுதியவைகளுக்கு அளவில்லாத கௌரவத்தைக் கொடுக்கிறோம்.

'பூமிதான் நம் பிரபஞ்சத்துக்கு மத்தியாக நின்ற இடத்தில் நின்று கொண்டிருக்கிறது. ஸூர்யனே அதைச் சுற்றி வருகிறான். அதனால் தான் இரவு பகல் உண்டாகியிருக்கின்றன' என்றே மேல் நாட்டுக்காரர்கள் பதினாறாம் நூற்றாண்டு வரை நினைத்து வந்தார்கள். இதற்குக் கொஞ்சம் மாறாக யாராவது ஆராய்ச்சி மூலம் சொன்னால் அவரை மதகுருமார்கள் நெருப்பிலே போட்டுக் கொளுத்தினார்கள். ஆனால் ரொம்பவும் பூர்வ காலத்திலேயே நமக்கு இந்த விஷயங்கள் தெரிந்திருந்தன.

பூமிதான் சூரியனைச் சுற்றுகிறது, சூரியன் பூமியைச் சுற்றுவதில்லை என்ற விளக்கத்திற்கு, ஆர்யபட்டர் ரொம்ப அழகாக 'லாகவ-கௌரவ நியாயம்' என்று பேர் வைத்திருக்கிறார். லகு என்றால் லேசானது, சின்னது என்று அர்த்தம். அதற்கு அட்ஜெக்டிவ் 'லாகவம்'. சின்னதைக் குறித்த 'லாகவம்', லேசாக', 'லைட்டாக ஒன்றை எடுத்துக் கொண்டு செய்வதைத்தான் 'கைலாகவம்', 'ஹஸ்த லாகவம்' என்கிறோம்.

'லகு' வுக்கு எதிர்ப்ப்பதம் 'குரு'. கனமானது. பெரியது எதுவோ அதுவே 'குரு'. கனவான் என்று ஆச்சாரியாரை அழைக்கிறோம். குருவாக இருக்கும் ஆச்சாரியாரை லகுவான சிஷ்யர்கள் சுற்றுவது தானே நியாயம். நம் பிரபஞ்சத்தில் குருவானது சூரியன் தான். லகு பூமி. குருவைத்தான் லகு பிரதக்ஷிணம் செய்யும் என்பதே லாகவ கௌரவ நியாயம். இதன் படி பூமிதான் சூரியனைச் சுற்ற வேண்டும். இப்படி ப்ரபஞ்சத்தை குரு சிஷ்ய கிரமமாகப் பார்த்து, சாஸ்திரமாகவும் ஸயின்ஸாகவும் ஆர்யபட்டர் சொல்லியிருக்கிறார்.

- ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

Monday, December 12, 2011

கர்பினிப் பெண்களை தாய் வீட்டிற்கு அழைத்துப் போவதேன்?
நம் கலாச்சாரத்தில், பாரம்பரியத்தில் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ஒவ்வொரு விதமான சம்பிரதாய பழக்கங்கள் இருக்கும். அவை அனைத்திற்கும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஏதாவது காரண காரியம் இருக்கும். அதனை அனுபவத்தாலேயே பலர் பல நேரங்களில் உணர்வார்கள்.


கருவுற்ற பெண்களுக்கு வளைக்காப்பு வைப்பது ஏன் என்று முன்பு பார்த்தோமல்லவா. கருவுற்ற கர்பினிப் பெண்ணை குறிப்பிட்ட காலத்தில் தாய் வீட்டிற்கு அழைத்துச் செல்வதும் அவளது தலைப்பிரசம் தாய் வீட்டிலேயே நடக்குமாறு பார்த்துக் கொள்வதும் நம் சம்பிரதாயங்களில் ஒன்றாக இருக்கிறது.

இதற்கு மனோவியல் ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் பல காரணங்கள் உள்ளன. அறிவியல் ரீதியாக, உடலியல் ரீதியான காரணத்தை முதலில் பார்ப்போம்.

பெண் கருவுருதல் என்பதே ஒரு உயிருக்குள் உயிர் உண்டாகும் அதிசயம். ஒரு உடலுக்குள் இன்னொரு உடல் பூக்கும் அற்புதம். கருவுற்ற பெண்ணை அவளது உடல் மாற்றங்களை உண்ணிப்பாகவும், பாதுகாப்பாகவும் கவனிக்க வேண்டும். ஓர் உயிர் உண்டாகும் இயற்கயின் சூட்சுமம் என்று அதனைப் புனிதமாகப் பார்க்க வேண்டும்.

ஆனால் மனிதர்கள் பொதுவாகவே உணர்ச்சி வசப்பட்டு வாழும் குணம் கொண்டவன் என்பதால் கணவனும், மனைவியும் நெருங்கியிருக்கும் நேரத்தில் உணர்ச்சியால் உந்தப்பட்டு நிலை மறந்து பெண் கருவுற்ற காலத்தில் உடலுறவு கொண்டுவிட வாய்ப்பிருக்கிறது.

கரு உண்டான ஐந்து மாதத்திற்குப் பிறகு ஆண், பெண் உறவு கூடாது என்பார்கள் பெரியோர்கள். அதற்கு காரணம் உண்டு. நம் சமுதாயத்தில் பண்பாட்டு வழிவந்த உண்மை என்னவென்றால் பெண் கருத்தரித்த பின் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மேல் உடலுறவு கொண்டால் கருவிலுள்ள குழந்தைக்கு அதிர்ச்சி ஏற்படும். அதனால் குழந்தை பாதிக்கப்பட்டால் இதன் விளைவாக குழந்தை ஊணமாகப் பிறக்கும்.

மேலும் கர்பப்பைக்கும் பலவீனம் ஏற்படும். ஆண் மற்றும் பெண்ணின் உடல் உறுப்பில் இருக்கும் கிருமித் தொற்று கருப்பையில் இருக்கும் குழந்தையை அடைந்து பாதிப்பை ஏற்படுத்தும்.

பிறந்த குழந்தையின் உடலுக்குள் கருவளர்ந்திருப்பது பற்றியெல்லாம் செய்தி படித்திருப்போம். காரணம் விந்து சக்தி ஜீரனமாகாத அணுக்களைக் கொண்டது. அத்தகைய ஆற்றல் பெற்றது விந்தணுக்கள். அவை ஒவ்வொன்றும் உலகை மாற்றத்துடித்துக் கொண்டிருக்கும் உயிர்கள் அல்லவா! அவை தாய் வயிற்றில் தேங்கியிருந்து கருவாகி, அக்கரு நகர்ந்து சென்று கருப்பையில் வளர்ந்து வரும் குழந்தையின் கருப்பைக்குள் தங்கி விட்டால், அங்கு அது முளைத்து விடும். இவ்வாறு நடந்து விடுவதை செய்திகளில் பார்த்திருப்போம். பிறந்து ஒரு மாதமே ஆன குழந்தையின் வயிற்றில் இன்னொரு குழந்தை இருந்த செய்தி இதோ..குழந்தைக்குள் குழந்தை!!

இதைப் பற்றியக் கல்வி பலருக்குத் தெரியாமல் இருக்கலாம். அதற்காகத்தான் முற்காலத்தில் பெரியவர்கள் சில சடங்கு முறைகளை வைத்திருந்தார்கள். மனைவிக்கு ஐந்து மாத கர்ப்பம் என்றால் கணவன் தாடி வைத்துக் கொள்ள வேண்டும். மனைவிக்கு கணவன் மீதான ஈர்ப்பு குறைய அது வழிவகுக்கும்.

அதாவது கணவனுக்கு அக்காலம் சன்னியாசம் ஆகும். ஆனால் இப்பொழுது தாடி வைத்துக் கொண்டு அலுவலகத்திற்குச் செல்ல முடியாது. எனவே அந்தப் பழக்கம் போய்விட்டது.

பெண்ணைத் தாய் வீட்டிற்கு அழைத்துச் சென்று விடுவார்கள். காரணம் கூடவே இருந்துவிட்டால், ஆசையின் உந்துதலால் காமத்தில் ஈடுபட்டு அதனால் பிறக்கும் குழந்தை ஊனமாகி ஒரு உயிரின் எதிர்காலமே கேள்விக்குறியாகாமல் இருக்க கர்பினிப் பெண்ணை தாய் வீட்டிற்கு அழைத்துச் செல்லும் பழக்கத்தை நம் முன்னோர்கள் உண்டாக்கி இருக்கிறார்கள்.

மேலும் எந்த ஒரு பெண்ணிற்கும் அவளது தாய் தான் முதல் தோழி. பிரசம் என்பது பெண்ணிற்கு மறுபிறப்பு என்பார்கள். ஆக தாயின் அரவனைப்பில் தன் பிரசவத்தை சந்திக்கப் போகிறோம் என்ற மனநிம்மதியுடன் கர்பினிப்பெண் இருப்பாள். வயிற்றில் கருவைத் தாங்கிய பெண் மன அமைதியுடனும் பாதுகாப்புணர்வுடனும் இருந்தால், பிறக்கும் குழந்தையின் ஆழ்மனமும் அமைதியும் நிம்மதியும் கொண்டதாக இருக்கும்.

அவ்வாறு ஆழ்மனத்தில் அமைதியைக் கொண்டு பிறக்கும் குழந்தைகள், நல்ல சிரித்துப் பேசும் ரசனைகளுடனும், நட்புணர்வுடனும், சாந்தமான குணத்தையும் கொண்ட மனிதராக வளரும் வாய்ப்பு அதிகப்படும். அல்லாமல், கர்பினிப் பெண் போராட்ட உணர்வுடனும், பாதுகாப்பற்ற உணர்வுடனும் இருப்பாளேயானால், அவளுக்குப் பிறக்கும் குழந்தையின் ஆழ்மனத்தில் அந்த உணர்வின் படிமங்கள் ஆழப்பதியும். அவ்வாறு பிறக்கும் குழந்தை பயந்த சுபாவம் கொண்டதாகவும்கோபம், சண்டை, பிடிவாதம், போன்ற குணங்களைக் கொண்ட மனிதராக வளர வாய்ப்புக்கள் உண்டாகும். காரணம், கருவுற்றிருக்கும் பெண்ணின் மனோநிலை பிறக்கப் போகும் குழந்தையின் டி என் ஏ வையே மாற்றும் வல்லமை கொண்டது என்கிறார்கள் மருத்துவர்கள்.

அதனாலேயே தான் நம் வீட்டில் கர்பினிப் பெண்கள் மீது யாரேனும் கோபம் கொண்டால் கூட புள்ளத்தாச்சி புள்ளயை அழவைக்காதே, திட்டாதே, மசக்கைக் காரியை ஒன்றும் சொல்லாதே என்று பரிந்து பேசுவார்கள். கர்பினிப் பெண்களுக்கு பிடித்ததையெல்லாம் செய்துகொடுத்து அல்லது வாங்கிக் கொடுத்து மகிழ்ச்சியுடனிருக்கச் செய்வார்கள். இவ்வாறு மனோரீதியாகவும் அறிவியல் பூர்வமாகவும் பல சூட்சுமங்களை அறிந்தே நம் முன்னோர்கள் பல சம்பிரதாயங்களையும், வழக்கங்களையும் நடைமுறையில் கையாள்கிறார்கள்.

எனவே கர்பினிப் பெண்ணின் மனதில் அமைதி தவழவும், குழந்தை எந்தக் குறையும் இல்லாமல் ஆரோக்கியமாகப் பிறக்கவும், அந்தப் பெண்ணின் முதல் தோழியான அவள் தாயாரின் அரவனைப்பில் அவள் வீட்டில் குழந்தைப் பெற்றுக் கொள்ளுமாறு சம்பிரதாயம் அமைக்கப்பட்டது.

அது இன்னும் நம் சமூகங்களில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது என்பது மகிழ்ச்சியே!

ஹிந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் ஆகும்!
.

Sunday, December 11, 2011

மோடியின் சாதனைகளும் முஸ்லீம்களின் மகிழ்ச்சியும்!நாங்கள் 13.11.2011 மதியம் 12 மணிக்கு திரு நரேந்திர மோடி அவர்களைச் சந்தித்தோம். பாதுகாப்பு ஏற்பாடுகளின் காரணமாக எங்களுக்குப் பல சோதனைகள் இருக்கும் என்று நினைத்தோம். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.

நாங்கள் அமர்ந்து சிற்றுண்டி அருந்திக் கொண்டிருந்த பொழுது 'வணக்கம்' என்று ஒரு கம்பீரமான குரல் கேட்டது. எழுந்து நின்று திரும்பிப் பார்த்தால், மோடி சிரித்த படியே வந்து கொண்டிருந்தார். 'ஸ்வாகதம்' என்று கூறினார். நாங்கள் பதிலுக்கு அவருக்கு வணக்கம் தெரிவித்து, எங்கள் குழுவினர் எல்லோரையும் அரிமுகப்படுத்தினோம். அவர் முகத்தில் மிகவும் மகிழ்ச்சி பொங்கியது.

தன்னுடைய சட்டசபைத் தொகுதியில் அதிகம் பேர் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள் தான் என்றும் அவர்களுடைய பிரதிநிதியாக திகழ்வதில் தனக்கு எப்போதும் மனமகிழ்ச்சி என்றும் அவர் கூறினார்.

மோடி "நீங்கள் உள்ளே வரும்போது செக்யூரிட்டி காரணமாக பெரிய தொந்திரவுகள் எதுவும் இருந்தனவா?" என்று கேட்டார். "நாங்கள், அப்படி எதுவும் இல்லை' என்றோம்.

ஆனால் 'என்னென்ன சோதனைகள் செய்யப்பட வேண்டுமோ, அத்தனையும் முறைப்படி செய்யப்பட்டன. அது உங்களுக்குத் தெரியாத வகையில் நடந்தது. அது தான் இங்குள்ள அதிகாரிகளின் திறமையும், நிர்வாகத்தின் சாமர்த்தியமும்" என்று விளக்கினார்.

ரயில் பயணத்தின் போது, குஜராத் எல்லையில் நுழைந்தவுடனேயே எங்களுக்குப் பெரிய வித்தியாசம் தெரிய ஆரம்பித்தது. எல்லா கிராமங்களிலும் விளக்கு வசதி இருப்பது நன்றாகவே தெரிந்தது. ஒவ்வொரு தெருவின் இறுதிவரை, பிரகாசமான தெருவிளக்குகள் எரிவதைப் பார்க்க முடிந்தது. கார்களில் பயணிக்கும் போது, தெருக்கள் எவ்வளவு சுத்தமாக இருக்கின்றன என்பதையும், அங்கு சாலைகள் எவ்வளவு சீராக அமைக்கப்பட்டிருக்கின்றன என்பதையும் பார்த்து மகிழ்ச்சி அடைந்தோம்.

அஹமாதாபாத்திலும், சூரத்திலும் நாங்கள் சென்ற கார்களை ஓட்டியவர்கள் அனேகமாக முஸ்லிம்களாகத்தான் இருந்தார்கள். அவர்கள், 'மோடியினால் தான் நாங்கள் சந்தோஷமாக வாழ்க்கை நடத்துகிறோம்' என்று மனத் திருப்தியுடன் சொன்னது, எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. பத்திரிகைகளும், டெலிவிஷன் சேனல்களும் சொல்வதும், நடைமுறை உண்மையும் வெவ்வேறாக இருக்கின்றன என்பதைக் கண்ணால் பார்த்தோம், காதால் கேட்டோம், புரிந்து கொண்டோம்.

நாங்கள் பல இடங்களுக்குச் சென்றோம். எங்கு சென்றாலும் அங்கு மக்கள், 'இந்த வசதி எங்களுக்கு மோடியால்தான் வந்தது... இந்த விஷயத்தை மோடிதான் உருவாக்கினார்.. நாங்கள் செய்த புன்ணியம் மோடி எங்களுக்கு முதல்வராகக் கிடைத்திருக்கிறார்..' என்றெல்லாம் பெருமிதத்தோடு கூறியது, குஜராத்தில் அவருக்குள்ள மதிப்பையும் மரியாதையையும் எங்களுக்கு உணர்த்தியது.

நரேந்திர மோடியைச் சந்திக்கச் சென்றபோது, எங்கள் குழுவில் ஒருவர் உனர்ச்சி வசப்பட்டு, அவர் காலில் விழுந்தார். மோடி அவரைத் தடுத்து, 'தயவு செய்து என் காலில் விழாதீர்கள். உங்கள் தலை என் காலில் பட்டால் என் தலையில் கனம் ஏறி விடும்' என்றார்.

-'டி வி' புகழ் வரதராஜன்

நன்றி:- இவ்வார துக்ளக்இம்முறை ஜெயலலிதாவிற்கு ஓட்டுப் போட்டவர்களெல்லாம் அவரிடம் இத்தகைய ஒரு ஆட்சியை எதிர்பார்த்து தான் என்பதை ஜெயா உணர்வாரா?

Thursday, December 8, 2011

உடையும் இந்தியா?
ஆரியம் திராவிடம் என்கிற வரலாற்று மோசடி மற்றும் பல அரிய தகவல்களைத் தாங்கி வெளிவரப்போகும் புத்தகம் குறித்து ஒரு உரையாடல்!

Sunday, December 4, 2011

ரமண மகரிஷியின் அருள் மொழிகள் - ஆன்மா


 

ஆன்மா இதயக்குகையினில் இருக்கிறது என்று உபநிஷத்து கூறுகிறது. அத்தகைய ஆன்மா வேறெங்கிருந்தோ வருவதில்லை. அது உள்ளது உள்ள படியே இருப்பது. என்றென்றும் நிலைபேறானது. ஆட்டமோ அசைவோ இல்லாதது. மாற்றம் காணாதது. காணப்பெறும் மாற்றங்கள் ஆன்மாவைச் சார்ந்தவை அல்ல. ஏனெனில் ஆன்மா இதயத்தில் குடிகொண்டுள்ளது.

ஜீவநாடி, ஆத்மநாடி அல்லது பரநாடி என்று கூறப்படும் ஒரு நாடி உள்ளது என்றே யோகிகள் சொல்கிறார்கள். இதயத்திலிருந்து வெளியே செல்லும் முக்கிய நாடிகள் 101 என்றும், அவற்றிலொன்று நேரே ஸஹஸ்ராரத்திற்குச் செல்கிறதென்றும் உபநிஷத்துக்களில் கூறப்பட்டுள்ளது.

கர்ப்பத்தின் ஏழாம் மாதத்தில் பிரும்ம-அந்தரத்தின் அதாவது சிசுவின் தலையில் மண்டை ஓடு வளர்ச்சி பெறாத நிலையில் மென்சதை மட்டுமே உடைய உச்சி மையத்தின் வழியே ஜீவனுடன் அகந்தை உடலுக்குள் ப்ரவேசிப்பதாகவும், உடல் முழுவதும் பரவியுள்ள ஆயிரக்கணக்கான நாடி நரம்புகள் மூலம் அது இயங்குகிறது என்பதாகவும் கூறப்படுகிறது.

ஆகவேதான், பேருண்மையை நாடுவோர் உச்சந்தலை மூளைப்பகுதியில், மனம் குவித்துத் தியானித்து மூல சக்தியைத் திரும்பப் பெறவேண்டும் என்று கூறுகிறார்கள். மேலும் நாபி அதாவது தொப்புள் நரம்பு முடிவலையில் சுருண்டு பதுங்கிக் கிடக்கும் குண்டலினி சக்தியை எழுப்புவதற்குப் பிராணாயாமம் யோகிகளுக்கு உதவுகிறது என்றும் அந்த சக்தி முதுகுத் தண்டினுள் பதிந்து மூளைவரையில் செல்லும் சுழுமுனை எனும் நரம்பு வழியே மேலெழும்புவதாகவும் விளக்கப்படுகிறது.

சூக்ஷும்னா என அழைக்கப்படும் சுழுமுனை என்பது ஒரு வளைவுக்கோடு போன்றது. நாபியிலிருந்து தொடங்கி முதுகுத் தண்டின் வழியே மூளைக்குச் சென்று, அங்கிருந்து வளைந்து கீழிறங்கி இதயத்தில் முடிவுறுகிறது. இவ்வாறு இதய மையத்தை எட்டும்போது தான் யோகியின் சமாதி நிலைபேறாகிறது. ஆகவே இதயமே முடிவான மையம் என்பதே இதிலிருந்து அறியலாம்.

- பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி


ஒரு முறை ரமண மகரிஷியிடம் ஒரு வெள்ளைக்காரர் "நான் ஆன்மாவை எப்படி அடைவது?' என்று கேட்டாராம். அதற்கு ரமணரோ, 'அதுவாகவே நீ இருக்கும் போது அதனை அடைய முயற்சிப்பது என்பது அறியாமையே!' என்றாராம்.
.

Monday, November 28, 2011

ரம்பைத் த்ரிதியை!
மக்களின் பக்தி ஆன்மீகத்தை வியாபாரமாக ஆக்கி கல்லா கட்டுபவர்கள் இருவர். ஒன்று பத்திரிக்கை, மற்றவர் நகைக்கடைக்காரர்கள். மக்களின் ஆன்மீக நம்பிக்கையை வைத்து அவர்களை குழப்பி முட்டாளாக்கி, இந்த கோவிலுக்குச் சென்றால் படிப்பு வரும், இந்த கோவிலுக்குச் சென்றால் பிள்ளை பிறக்கும், இந்தக் கோவிலுக்குச் சென்றால் பணம் கொட்டும், இதற்கு இன்ன பரிகாரம் என்றெல்லாம் ஒவ்வொரு கோவிலாக மக்களை அலையச் செய்து காசுபார்க்கிறது பத்திரிகைகள். அதே போன்ற வேலையை வேறுவிதமாகச் செய்பவர்கள் நகை வியாபாரிகள்.

அக்ஷயத்ரிதியை அன்று நகை வாங்கினால் வீடெல்லாம் கூரையைப் பிய்த்துக் கொண்டு தங்கமாகக் கொட்டும் என்று மக்களிடம் விளம்பரப்படுத்தி கல்லா கட்டுகிறார்கள் நகைக்கடைக் காரர்கள். இப்போது புதிதாக ஒரு நகைக்கடை விளம்பரத்தில் ரம்பைத் த்ரிதியையில் நகை வாங்கினால் வீடெல்லாம் நகை பெருகும் என புதிய தினத்தை அறிமுகம் செய்து கொண்டு இருக்கிறது.

பொதுவாக அக்ஷ்யத் த்ரிதியை தினத்தை வடக்கத்திக் காரர்கள் தொழில் துவங்க, சுப காரியங்கள் துவங்க நல்ல நாள் என்று அந்த தினத்தை கருதி அதை அனுசரித்து முதல் கொள்முதல், முதல் விற்பனை என்று நடத்தி வந்தார்கள். சென்னையைப் பொறுத்தவரை சௌக்கார் பேட்டை நகைக்கடைகளில் மட்டும் தான் அக்ஷயத் த்ரிதியை அன்று பெண்கள் வீட்டிற்கு தேவையான அல்லது நீண்ட நாள் வாங்க நினைத்திருந்த நகைகள் வாங்க அந்த தினத்தை தேர்ந்தெடுத்து வாங்கி வந்தனர். காரணம் ஜெயின் மதத்தினர் தங்களது முக்கிய கடவுளான தீர்த்தங்கரர் ரிஷபவ தேவர் தன் தவக்காலத்தை நிறைவு செய்த நாள் என்றும்  அந்த நாளில் செய்யும் அனைத்து காரியங்களும் வெற்றி பெறும் என்றும் நம்புகின்றனர். பின்னாளில் இந்த தினம் அப்படியே தமிழகமெங்கும் விளம்பரப்படுத்தி அதை நகை வாங்கும் நாளாகவே ஆக்கி வியாபாரம் செய்யத் துவங்கிவிட்டனர் நகை வியாபாரிகள்.

சரி ஏற்கனவே இருந்த நம்பிக்கையை இப்படி உபயோகப்படுத்துகிறார்கள் என்று பார்த்தால், இப்போது ரம்பைத் த்ரிதியையாம். இப்படி புதிது புதிதாக ஏதாவது ஒரு கதை பரப்பி மக்களின் சாதாரண நம்பிக்கையில் கில்லி விளையாடுகிறார்கள் சுயநல வியாபாரிகள்.

மக்களின் பக்தி சார்ந்த நம்பிக்கையை வைத்து ஏமாற்றிப் பிழைக்கும் போலிச் சாமியார்களுக்கும், இது போன்ற நகைக்கடை வியாபாரிகளுக்கும் எந்த வித்யாசமும் இல்லை. இது போன்ற சுயநல வியாபாரிகள் விஷயத்தில் விழிப்புடன் இருந்து அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து புறக்கனிக்க வேண்டும். இப்படி விளம்பரப்படுத்துபவன் கடைக்கு யாரும் சென்று நகைவாங்காமல் தவிர்த்து அவனுக்கு புத்தி புகட்ட வேண்டும். 

இல்லையேல் நீங்கள் கடுமையாக உழைத்து சம்பாதித்த பணம் இவர்களால் சுருட்டப்படும். கையில் காசிருந்தால் எப்போது வேண்டுமானாலும் தங்கத்தைக் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்ட வைக்க முடியும். அதற்கு எந்த த்ரிதியையும் தேவையில்லை.

விழிப்புடனிருப்பீர். கைக்காசைக் காப்பீர்!

.

Saturday, November 26, 2011

சொந்தத்தில் திருமணம் செய்தால் குழந்தை ஊனமாகப் பிறக்குமா?நம்முடைய முந்தைய தலைமுறையினர் தமது பிள்ளைக்கோ பெண்ணிற்கோ திருமணம் செய்து வைக்க துவங்கும் போது அதிகம் விரும்பியது 'சொந்த பந்தத்துல நல்ல வரன் இருந்தா நம்ம புள்ளைக்கு பாத்திரலாம்' என்பது தான்.

சொந்தத்தில் திருமண பந்தத்தை  பெரியோர்கள் நிச்சயிக்க விருப்புவதற்கு பல காரணங்கள் இருக்கிறது. சம்பந்திகள் சொந்தங்களாக இருப்பதால் உரிமையுடன் பழகமுடியும். சங்கோசமில்லாமல் புழங்க முடியும். மேலும் இரு குடும்பத்தினர் ஒருவரின் நிறை குறைகளை மற்றவர்கள் நன்றாகப் புரிந்து கொண்டே உறவாடுவதால், பின்னாட்களில் தம்பதிகளுக்குள்ளோ அல்லது அந்தக் குடும்பத்தினருக்கிடையிலோ உண்டாகும் பிரச்சனைகளின் தன்மை உணர்ந்து அதற்கேற்றபடி அவர்களுக்கு உதவுவதற்கும் அல்லது குறைந்த பட்சம் பிரச்சனைகளைத் பேசித் தீர்க்கவும் சாத்தியக்கூறுகள் அதிகம் இருக்கும்.

பழைய கால பாசப்பரிமாற்ற நினைவுகளே பல நேரங்களில் பிரச்சனைகளைத் தீர்க்க உதவிவிடும்.

இப்படி பல நெகிழ் தன்மைகள் இரு வீட்டாருக்கும் இடையில் இருப்பதால் நல்ல நாள் பண்டிகைகள் கொண்டாட்டங்கள் என்று உறவுகள் மகிழ்ந்து வாழ, வருடங்கள் கடப்பது தெரியாமல் வாழ்க்கை ஓடிவிடும். மேலும் திருமணம் முடித்துக் கொள்ளும் தம்பதிகள் இளம் பருவத்தில் அறிந்தவர்களாக இருப்பார்கள். அவர்களது இளமைக்கால நினைவுகள் அவர்களின் வாழ்க்கையில் நெருக்கத்தை அதிகரிக்க உதவுகிறது. ஒரே மாதிரியான குழந்தைப் பிராயத்து நினைவலைகள் அவர்களின் நெருக்கத்தை அதிகரிக்கிறது. இதனால் தம்பதிகள் ஒருவருக்கொருவர் பாசத்தையும், உரிமையையும் நெருக்கமாக வெளிப்படுத்திக் கொள்வர். பிறக்கும் குழந்தைகள் மீது அப்படியே அந்த பாசம் பிசகின்றி செலுத்தப்படும்.

இப்படி பல்வேறு நன்மைகள் இருப்பினும், திடீரென மருத்துவ ரீதியாக எனக்கூறி ஒரு பெரிய புரட்டு இடைக்காலத்தில் பரப்பப்பட்டது. அது நெருங்கிய சொந்தத்தில் திருமணம் செய்தால் குழந்தை ஊனமாகப் பிறந்து விடும் என்பதாகும். அதெப்படி? நெருங்கிய சொந்தத்தில் திருமணம் செய்தாலே பிறக்கும் குழந்தை எல்லாம் ஊனமாகத் தான் பிறந்து விடுமா என்ன? ஏன் இந்த பித்தலாட்டப் பொய் பரப்பப் பட்டது?

இந்தக் கூற்றை புரட்டு, பித்தலாட்டம் என்று கூறலாமா என உங்களுக்குச் சந்தேகம் வருகிறது. சந்தேகமே வேண்டாம், அது வெறும் புரட்டு தான். பித்தலாட்டம் தான். காரணம் ஒரு கிராமத்திற்குச் சென்று பார்த்தால் அந்த கிராமத்தின் சுற்றுவட்டாரக்காரர்கள் எல்லோருமே ஏதாவது ஒரு விதத்தில் ஒருவருக்கொருவர் மாமன், மச்சான், சகலை, பங்காளி என சொந்தக்காரனாக மட்டும் தான் இருப்பார்கள். அனைவருமே முறைப் பெண், ஒன்றுவிட்ட அத்தைப் பெண், சின்ன மாமன் மகன் என்று ஏதாவது ஒரு உறவில் மணமுடித்து அப்படியே உறவுக்குள்ளேயே திருமணங்கள் செய்து கொண்டவர்களாகத் தான் இருப்பார்கள். அப்படி இருப்பதால் மட்டுமே ஒரு கிராமத்திற்குள் இருக்கும் குறிப்பிட்ட பிரிவினர் என்று எடுத்துக் கொண்டால் அவர்கள் யாவரும் சொந்தபந்தங்களாகவே இருக்க வாய்ப்புகள் உண்டாகிறது.

அப்படி ஒரு கிராமமே சொந்தத்தில் திருமணம் செய்து பங்காளிகளாக வாழும்போது அவர்கள் அத்தனை பேருமே ஊனமுற்றவர்களாகவும் நோயாளிகளாகவுமே தான் இருக்கிறார்களா என்ன? இந்த புரட்டின் படி நடக்குமானால் ஒரு கிராமமே ஊனமுற்றவர்களாலும், கொடிய வியாதிக்காரர்களை மட்டுமே கொண்ட கிராமங்களாகத்தானே நம் நாட்டு கிராமங்கள் எல்லாம் இருந்திருக்க முடியும்.

இப்படி விரிவாக எடுத்துக் கூறி கேள்வி கேட்டால் இந்த புரட்டைப் பரப்புபவர்கள் உடனே ஒரு அடிக்கும் ஜல்லி, 'நாங்கள் ஊனமாகத்தான் பிறக்கும் என்று சொல்லிவிடவில்லை. 'நெருங்கிய உறவினர்களுக்குள் சம்பந்தம் செய்தால் ஒரு சில நோய்கள் குழந்தைகளைத் தாக்கும் சாத்தியக் கூறுகள் அதிகம்' என்று தான் கூறுகிறோம்'. என்பார்கள்.

இந்தியாவில் இருக்கும் ஜாதி முறையே உறவு முறையிலான மனிதக்குழுக்களின் தொகுப்புதான். அப்படி இருக்கையில் இது போன்ற முடிவுகளை வெளியிடுபவர்கள் எந்த விதத்தில் இந்த சாத்தியக் கூறுகளை ஆராய்ச்சி செய்தார்கள்? எத்தனை நெருங்கிய உறவுத் திருமணத்தை ஆராய்ந்தார்கள்?. இதனை முதன் முதலில் வெளியிட்டவர் யார்? இது போன்ற ஆராய்ச்சியை நடத்தியவர்கள் யார்?

இதெல்லாம் நமக்குத் தெரியாது. ஆனால் ஒரு பெரிய விளம்பரங்கள் ஏதாவது ஒரு அமைப்பினர் மூலம் பரப்பப்படும். அது பெரிய அளவில் பேசப்படும். அவற்றை அப்படியே ஊடகங்கள் செய்திகளாக்கிவிடும். அவ்வளவு தான். நம் மக்கள் உடனே அது தான் சரி என்றும் முடிவு கட்டி விடுவார்கள்.

நாம் தான் படித்த நாகரீக சமுதாயமாயிற்றேஏற்கனவே 'சொந்தக்காரர்களை விட ப்ரென்ட்ஸ் 
தாம்ப்பா எனக்கு எல்லாம்' என்று சொந்தங்களை வெறுப்பதை ஒரு நாகரீகப் பேச்சாகவே 
கொண்டிருக்கும் நம் புதிய தலைமுறை வர்கத்தினர் இது தான் சாக்கென்று 'சொந்தத்தில் 
பெண்ணெடுக்கப் போவதில்லை, என் பெண்ணைக் கொடுக்கப் போவதில்லை. குழந்தை
ஊனமாகப் பிறக்குமாமே!' என்று கூறி உறவுக்குள் திருமனத்தை உடைத்தெரிந்து மகிழ்வார்கள்.

ஆனால் இதன் பின்னால் இருக்கும் சூழ்ச்சியோ உண்மைத் தன்மையைப் பற்றியோ, இதை ஆராய்ந்து ஏதோ ஆராய்ச்சி முடிவுகளைப் போல இதைப் பரப்புபவர்கள் யார் என்பது பற்றியோ எந்த சிந்தனையும் உதிக்காது.

உதாரணமாக இப்படி ஒரு நிகழ்வு நடக்கிறாது எனக் கொள்வோம். ஒருவர் சொந்தத்தில் அல்லாமல் அந்நியத்தில் பெண் பார்க்கச் செல்கிறார், பெண்ணின் தந்தைக்கு உடல் முழுவதும் ரோமம் வெள்ளைப் படுதலால் பாதிக்கப் பட்டு இருக்கிறது. ஆனால் பெண் மிகவும் அழகாக எந்த உடல் குறைபாடும் இல்லாமல் இருக்கிறார். அந்த வீட்டில் பெண் எடுப்பார்களா? பின்னங்கால் பிடறியில் இடிபட ஓட்டம் பிடிப்பார்கள். எவ்வளவு வரதட்சினை கொடுத்தாலும், ஐயா சொத்தையே எழுதித் தருகிறேன் என்றாலும் 'நாம ஏன் ரிஸ்க் எடுக்கனும்?' என்று காணாமல் போய் விடுவார்கள்.

ஏன் இந்த ஓட்டம்? நெருங்கிய சொந்தத்தில் திருமணம் செய்தால் தானே பரம்பரை நோயோ அல்லது தாத்தா பாட்டிகளின் நோயோ பேரன்களுக்கு வரும்? அந்நியத்தில் தானே பெண் பார்த்தோம். பெண்ணின் தந்தைக்கு இருக்கும் சருமப் பிரச்சனை 'அந்நியப்' பெண்ணிற்குப் பிறக்கும் குழந்தைக்கு எப்படி வரும்?

அந்நியத்தில் பார்க்கும் ஒரு ஆண்மகனுக்கு சர்க்கரை வியாதி இருக்கிறது. நெருங்கிய சொந்தமல்லாத அவனை திருமணம் செய்து கொள்ளும் பெண்ணுக்கு பிறக்கும் குழந்தை அதே சர்க்கரை வியாதியுடன் பிறக்காது என்று உறுதியாக நம்பி சர்க்கரை வியாதி உள்ள ஒரு ஆணை எந்த பெண் வீட்டிலாவது தனது மகளுக்கு மணம் முடிப்பரோ? அப்பொழுதும் 'எஸ்கேப்' தான்.

ஒரு வீட்டினரின் பெரியவர்களுக்கு இருக்கும் ஏதாவது நோய் அவர்கள் வீட்டுச் சந்ததியினருக்கு மரபணு வியாதியாக தொடர வாய்ப்பிருக்கிறது என்பது ஒரு பொதுவான கருத்து. அது சொந்தமானாலும் அந்நியமானாலும் அப்படியே. ஆனால் சொந்தத்தில் திருமணம் செய்தால் மட்டும் தான் மரபுப்படியான நோய் அடுத்த சந்ததியினருக்கு வரும் என்பது போல செய்தி பரப்புகின்றனர்.

ஆனால் ஏன் இந்த புரட்டு பரப்பப் பட வேண்டும்? இதனால் யாருக்கு என்ன லாபம்? இந்தியாவைப் பொறுத்தவரை பல்வேறு விதமான இறுக்கமான உறவு முறைகள் நிலவுகின்றன. உறவுமுறைத் திருமணங்கள் பெருகி சந்ததினர் ஒரு குழுவினராக அறியப்பட்டு பின்னர் அதுவே ஒரு குறிப்பிட்ட இனக்குழுவாக பின்னாலில் பெரிய ஜாதியாகவும் வளர்ந்து விடுகிறது.

தற்காலத்தில் ஜாதிகளாக இருப்பவைகளில் பல அதற்கு முன்னதாக ஒரு பெரிய குடும்பத்தைக் கொண்ட குழுவாக இருந்திருக்கும். அவைகள் எல்லாமே உறவுகளுக்குள்ளேயே உறவுகளை வளர்த்து சந்ததிகளைப் பெருக்கிக் கொண்ட இனக்குழுக்களாகவே இருந்திருப்பர்.

அப்படித்தான் கிராமங்களில் எங்கு பார்த்தாலும் ஒரே சொந்தங்களைக் கொண்ட பங்காளிகளாகவே இருப்பதைப் பார்க்கிறோம். உறவுமுறைக்காரர்களாக இருப்பதைப் பார்க்கிறோம். ஆக ஒரு ஜாதிக்காரர்கள் என்றால் அவர்கள் ஏதாவது ஒரு வகையில் உறவுக்காரர்களாகத் தான் இருப்பார்கள் என்பது தெளிவாகிறது. இவ்வகையில் தான் ஒரே ஜாதியினர் ஒருவரை ஒருவர் உள்ளுணர்வு உந்த ஆதரித்துக் கொள்வதும் பல இடங்களில் பார்க்க முடிகிறது.

இந்த ஜாதீய குழு உணர்வை உடைக்க முயற்சிப்பவர்களில் அதனால் ஆதாயம் தேடுபவர்களில் முக்கியமானவர்கள் மதமாற்றிகளே! காரணம் ஒரு குறிப்பிட்ட மனிதனை இறுக்கமாக பிணைக்கப்பட்ட அவன் ஜாதியில் இருந்து பிரிப்பது மதமாற்றிகளுக்கு எளிதான காரியமாக இருக்கவில்லை.

மதம் மாற்றிகளின் முக்கியமான வேலை ஒருவரை மதம் மாற்றும் போது, அவனிடமிருந்து பழைய மதத்தில் இருந்த கலாச்சார சம்பிரதாயங்களையெல்லாம் வேரோடு பிடுங்கி எறிந்து
விடுதல் தான்.

அவ்வாறு ஒருவர் ஒரு ஜாதியிலிருந்து வெளியேற்றப்படும் போது அவர் பல தலைமுறைகளாக செய்து வந்த ஜாதீய சடங்குகளை அடுத்து வரும் நாட்களில் செய்ய முடியாமல் போய் விடுகிறது.
அது வாழ்நாள் முழுவதும் ஒரு இழப்பாகவே ஆகிவிடுகிறது.

குடும்பத்தின் எந்த ஒரு நிகழ்விற்கும் அவரவர் ஜாதியின் வழக்கப்படி சடங்குள் இருக்கின்றன. உதாரணமாக பெண் வயதிற்கு வந்தால் அதற்கு ஒரு சடங்கு, பிறப்போ இறப்போ அவற்றிர்கு ஒரு சடங்கு, திருமணம் வளைகாப்பு என்றால் அதற்கு ஒரு சடங்கு என்று குடும்பத்தின் எந்த ஒரு முக்கிய நிகழ்வானாலும் ஜாதியின் அடிப்படையிலான சடங்கிற்கு உட்பட்டே அதனை கொண்டாட வேண்டிவருகிறது. அவரோடு சேர்ந்து வீட்டின் முக்கிய நிகழ்ச்சிகளை கொண்டாட வரும் உறவுக்காரர்கள் ஜாதிய சடங்கின்படி நடக்கவில்லையென்றால் அவர்கள் அதனை ஒரு விஷேஷமாகவே கருதாமல் ஒதுங்கிவிடுவர்.

ஆக ஒருவர் தனது ஜாதிக்கட்டுக்குள்ளிருந்து வெளியேறுவது தனது மொத்த சமூகத்தின் ஆனிவேரை இழந்து விடுதலுக்குச் சமமாகிறது. உறவுகளை முழுமையாக இழக்க நேரிடுகிறது.
இதற்கெல்லாம் பயப்படுவோரும், உறவுகளையும், சொந்தங்களையும், பல தலைமுறைகளாக கட்டிக்காத்து வந்த நடைமுறைச் சம்பிரதாயங்களையும் இழக்க விரும்பாதவர்கள் வேற்று மதம் பற்றிய யோசனைக்கே வருவதில்லை.

இந்த உறவுகளுக்குள்ளான நெருக்கமான சங்கிலிப் பிணைப்பு மத மாற்றிகளுக்கு பெரிய உபத்திரவமாகவே இருக்கிறது. ஒவ்வொரு தனி மனிதனையும் மதம் மாற்ற அதீத பிரயத்தனம் 
செய்ய வேண்டி வருகிறது. அதில் களைத்துப் போய் விடுகிறார்கள். ஆக இந்த நெருக்கமான உறவுகளை உடைத்தால் கொஞ்சம் கொஞ்சமாக அதில் ஒரு நெகிழ் தன்மை கிடைக்கும். அந்த உறவுகள் எல்லாம் திருமண பந்தத்தின் மூலமாகத்தான் உண்டாகின்றன. எனவே சொந்தத்தில் திருமணம் செய்தால் குழந்தை ஊனமாகப் பிறக்கும் என்று கதை கட்டிவிட்டால் கொஞ்சம் கொஞ்சமாக உறவுகளின் நெருக்கங்கள் அந்நியப்பட்டுபிறகு அப்படியே ஜாதிய அடிப்படையின் ஆணி வேரை அசைத்து விடலாம், தொன்று தொட்டு நடைமுறையில் இருக்கும் சம்பிரதாயங்களை அழித்து விடலாம் என்கிற நோக்கத்தில் பரப்பப்படுகிறது

எனக்குத் தெரிந்த மனிதர்களுள் சொந்த அத்தை மகளை, மாமன் மகனை, ஏன் தாய் மாமனை திருமணம் செய்து கொண்ட பலரும் மிகவும் ஆரொக்கியமான குழந்தைகளைப் பெற்று சுபிட்ஷமாக இருப்பதைப் இந்தக் காலத்திலும் பார்க்க முடிகிறது. அந்நியத்தில் திருமணம் செய்தவர்களுக்குக் கூட சிறிய வயதிலேயே சர்க்கரை வியாதி வரும் பிள்ளைகள் பிறப்பதும் உண்டு. பிறந்து சில வருடங்களே ஆன குழந்தைக்கு கேன்சர் வந்து இறந்த செய்திகளும் உண்டு. அவர்கள் அந்நியத்தில் திருமணம் செய்தவர்களாகவே இருந்தனர்.

மரபணு பற்றி அராய்ச்சி செய்யும் விஞ்ஞானிகள், குழந்தை கருவிலே உருவாகும் போதே அது ஆண், பெண் என தீர்மானிக்கப்படுகிறது. அப்படித் தீர்மானிக்கப்படும் போதே, அந்தக் குழந்தையின் மரபணுக்களில் கோட் வேட் போல சில சங்கேதக்குறிப்புகள் எழுதப்பட்டுவிடுகின்றன. அதில் அந்தக்குழந்தையின் உடல் வளர்ச்சி, மனவளர்ச்சி, அதன் அறிவு, ஆற்றல் என அனைத்துமே பதிவு செய்யப்பட்டு விடும்.

அதன்படியே அந்தக்குழந்தையின் உடல் வளர்ச்சி, பருவம் அடைதல் அனைத்துமே, ஏற்கனவே எழுதப்பட்டது போல, நடந்து கொண்டே வரும் என்று கூறுகிறார்கள். ஆக மரபணுவில் யாருடைய மரபணுவில் என்ன எழுதியிருக்கிறதென்று படித்து தெரிந்துகொள்ள முடியாது என்பது தான் நிதர்சனம். அப்படி இருக்கையில் சொந்தத்தில் அல்லாமல் அந்நியத்தில் திருமணம் செய்பவர்களுக்கு, எந்த நோய் நொடியுமே அண்டாத குழந்தைதான் பிறக்கும் என்பதற்கு என்ன உத்தரவாதம்? அதை யார் கொடுக்கப்போகிறாகள்?

மேலும் ஒருவருக்கு நோய் உண்டாவதற்கு வெறும் மரபணு ரீதியான காரணங்கள் மட்டுமே இருந்துவிடப்போவதில்லை என்பதும் நிதர்சனம்.

ஆக எல்லோருக்கும் மரபணு உண்டு, சொந்தத்திலோ அந்நியத்திலோ, எங்கே யாருடன் திருமணம் செய்தாலும் பிறக்கப் போகும் குழந்தையின் நலன் என்பது மனிதர்களால் நிர்ணயிக்கப்படுவது இல்லை என்பது உறுதி. 'நாங்கள் கூறும் வகையில் நீங்கள் திருமணம் செய்தால் தான் குழந்தை ஆரோக்கியமாகப் பிறக்கும்' என்று கூற யாருக்கும் தகுதி இல்லை.

எனவே நெருங்கிய சொந்தத்தில் திருமணம் செய்தால் குழந்தை ஊனமாகப் பிறக்கும் என்பது சுத்தப் பித்தலாட்டம் என்று அறிக. உங்கள் பிள்ளைக்குப் பெண்ணோ, பெண்ணிற்கு பிள்ளையோ உறவுகளில் இருந்தால், அவர்களுடன் திருமண பந்தத்தை பயமின்றி உறுதி செய்து உறவுகள் சிதறாமல் அள்ளிக்கொள்க. புதிய சிந்தனை, கண்டுபிடிப்பு என்றெல்லாம் பெயர் சொல்லி நமது பாரம்பரிய குடும்ப கலாச்சாரத்தை உடைக்கப் பார்க்கும் குப்பைகளை அள்ளி குப்பைத்தொட்டியில் இடுக.

உண்மைகளை உணருங்கள். உறவுகளைப் பேணுங்கள்.


வாழ்க வளமுடன்!
.