Monday, June 20, 2011

மதன் மோகன் மால்வியா!

இன்று ஒரு மின்னஞ்சல் கவர்ந்தது. ஏற்கனவே இந்த செய்தி பல சுற்றுக்கள் வந்திருப்பது கூகிளிட்டால் தெரிகிறது. இருந்தாலும் இதை அப்படியே நமது தேசிய மொழியில் இங்கேயும் பேஸ்டுகிறேன். 



Madan Mohan Malaviya was a freedom fighter, author, editor & publisher of newspapers, educationist. He is credited with popularising the slogan "Satymeva Jayate". He was the first one to establish a private university in India which is based on the model of historical Nalanda, Takasheela Vidya Peethams.


When Malaviya was trying to build a good university, he had to overcome many difficulties and barriers. He worked with determination to start the university. There was funds crisis; but he did not get dishearted. He went from town to town, met many rich people and traders to collect donations.


He went to the Nizam of Hyderabad (then reputedly the richest man in the world) to request him for funds. The Nizam was furious, " How dare you come to me for funds ?  that too for a Hindu university?  " He roared with anger, took off his footwear and flung it at Malaviya.


Malaviya picked up the footwear and left silently. He went directly to the market place and began to auction the footwear. As it was Nizam's footwear, many came forward to buy it. The bids kept going up.


When Nizam heard of this, he became uneasy. He thought it would be an insult if his footwear were to be bought by someone for a pittance. So he sent one of his attendants with the instruction, 'Buy that footwear no matter whateverthe price be!'


Thus, Malaviya managed to sell the Nizam's own footwear back to him, for a huge amount. He used that money to build the Banaras Hindu University.

Moral : It doesn't matter what you have, but how you make use of what you have, in your life!


.

Friday, June 3, 2011

மனித நேய மக்கள் கட்சியும் சில சந்தேகங்களும்???


பால் குடிக்கும் பூனை!!!??
இந்து சாமியாரிடம் ஆசிபெறும் இந்த நல்லிணக்கம் நம்பகமானதா?

-"இராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜவாஹிருல்லா எப்படிப்பட்டவர், இவரின் தொடர்புகள் எப்படிப்பட்டவை என்பதைப் பார்த்தால் மிகப் பெரிய பயங்கரவாத இயக்கத்தின் ஊற்றுகண் என்பது வெட்ட வெளிச்சமாகும்."-


- "1998-இல் கோவையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பிற்குப் பின் ஹைதர் அலி கைது செய்யப்பட்டதால் தமுமுக-வின் தலைவராக பொறுப்புக்கு வந்தவார் ஜவாஹிருல்லா என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்." -


- "1993-ஆம் ஆண்டிலிருந்து 1998-ஆம் ஆண்டு வரை தமிழகத்தில் நடைபெற்ற பல்வேறு தாக்குதல்களில் சம்பந்தப்பட்ட இயக்கம் அல்-உம்மாவும் பின்னர் பெயர்மாற்றம் செய்யப்பட்ட தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகமும் ஆகும்" -


- "1996-ஆம் ஆண்டு மே மாதம் 18-ஆம் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்திலும் தமுமுக-விற்குப் பங்கு உண்டு. " -


- "1980-ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் நடைபெற்ற பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களின் பின்னால் செயல்பட்ட பயங்கரவாத இயக்கங்கள் அனைத்திலும் ஜவாஹிருல்லாவின் பங்கு உண்டு என்பது காவல் துறையினரின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்" -


- " தீவிரவாதம் தவிர்த்து இவர்களின் முக்கியப் பணி பல்வேறு இடங்களில் உள்ள தலித்களை இஸ்லாமியார்களாக மதமாற்றம் செய்வதாகும்" -


மேற்கண்ட விபரங்களைப் பற்றி விரிவாகப் படிக்க க்ளிக்குவீர் -> தமிழ் ஹிந்து.காம்


மேலும் பல அரிய தகவல்களுக்கு இங்கே சுட்டவும் -> இங்கே சுட்டவும்.

.

அழகிய பாடல் , பாடல் போல பெண்கள்!



.

Thursday, June 2, 2011

விலைவாசி உயர்ந்ததற்கு யார் காரணம்?




இந்த படக்காட்சியை பார்த்த போது தோன்றிய விஷயம், கடந்த ஐந்தாண்டுகளில் சகல பொருட்களின் மீதும் உண்டான மோசமான விலைவாசிக்கு யார் காரணம்?

வீட்டு வாடகை மற்றும் ரியல் எஸ்டேட் முதல் காய்கறி வரை சகல விலைவாசிகளும் உயர்ந்ததற்கு சாஃப்ட்வேர் நிறுவனங்களில் அதிக சம்பளம் வாங்குபவர்கள் தான் காரணம் என்று கூறி படமே வந்தது. ஆனால் கடந்த ஐந்தாண்டுகளில் ஏறிப்போன மோசமான விலைவாசி உயர்விற்கு பொறுப்பற்ற பிரமதமரையும், கொள்ளை கும்பல் முதல்வரையுமே கொண்ட அரசாங்கமும், அரசியல் வாதிகளின் கணக்கில்லா கருப்புப்பண புழக்கமே காரணம் என்று தோன்றுகிறது.

இனியாவது கட்டுக்குள் நிற்குமா? நடுத்தர வர்கத்தினர் வாழ வழிகிடைக்குமா? என்று தெரியவில்லை.

கேள்விகள் தான் மிச்சம்!

.

Wednesday, June 1, 2011

வேதம் வளர்த்ததெங்கள் தமிழ்நாடு!




கரிகால சோழனின் சாஸனம் ஒன்று இருக்கிறது. அது நல்ல சமஸ்கிருத பாஷையில் அமைந்திருக்கிறது.


பாத்ராகலித வேதானாம் சாஸ்தர மார்க்கா நுஸாரிணாம்!
ததேது அரிகாலஸ்ய கரிகாலஸ்ய சாஸனம்!


கரிகாலன் இதில் தன்னை 'அரிகாலனாகிய கரிகாலன், என்று கூறிக்கொள்கிறான். 'அரி' என்றால் விரோதி என்றும் அர்த்தம். விரோதிகளுக்கு யமனாக இருக்கிற வீராதி வீரன் தான் 'அரிகாலன்'. சரி, கரிகாலனுடைய அந்த விரோதிகள் யார்?


வேத சாஸ்திர மார்கத்தை அனுசரிக்காதவர்கள் அனைவரும் அவனுடைய விரோதிகள் என்கிறான். வேத சாஸ்திர வழியில் செல்கிறவர்களை ரக்ஷிக்க வேண்டும் என்பதே கரிகாலனின் சாஸனம்.


பிரசித்தி பெற்ற நம்முடைய தமிழ் மன்னர்கள் வைதிக மதத்தை மனமார வலர்த்தார்கள் என்பதற்கு இதுவே சான்று. 


'பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி' என்றே ஒரு சங்ககால அரசனுக்குப்
பெயர் இருந்திருக்கிறது. 'வழுதி' என்றால் பாண்டிய ராஜா, பிற்காலத்திலும் கல்வெட்டுக்களில் எங்கு பார்த்தாலும் தமிழரசர்கள் வேத வித்துக்களுக்கு வரியில்லாத 'இறையிலி'யாக நிலத்தை சாஸனம் செய்தது தெரிகிறது. நான்மறைகளின் வளர்ச்சிக்காகவே தானமாக வழங்கப்பட்ட பல கிராமங்கள் 'சதுர் வேதி மங்கலம்' என்ற பெயரில் உள்ளன.




வெளிநாட்டு விஷயம் ஒன்று புதிதாக நம் ஊருக்கு வந்தால், அதற்கு உள்ளூர் மொழியில் வார்த்தைகள் இருப்பதில்லை. ரேடியோ, டெலிபோன், பஸ் முதலியவற்றுக்கெல்லாம் நம் பாஷையில் வார்த்தையில்லை. பிற்பாடு இப்போது இவற்றுக்குக்கும் ஏதேதோ புரியாத தமிழில் வார்த்தைகளை உண்டாக்கிக் கொண்டிருக்கிறோம். ஆனாலும் அது பழக்கத்தில் சரளமாக வரமாட்டேன் என்கிறது.


வேதம், யாகம் முதலியன சிலர் சொல்கிற மாதிரி தமிழ்நாட்டின் ஆதி நாகரிகத்துக்குப் புறம்பாகப் பிற்பாடு வெளியே இருந்து வந்தவை என்றால், யாகம் வேதம் முதலிய பதங்களுக்குச் சரியான தமிழ் வார்த்தை இருக்க முடியாது. ஆனால், மிக மிகப் பழைய தமிழ் இலக்கியங்களிலேயே 'வேதம்' என்பது 'மறை' என்றும், 'யாகம்' என்பது 'வேள்வி' என்றும் புகழ்ந்தும் பேசப்படுகின்றன. இவை மிகவும் அர்த்த புஷ்டி நிறைந்த பதங்கள் என்பதை
சமச்கிருத பண்டிதர்கள், தமிழ்ப் புலவர்கள் இருவருமே ஒப்புக்கொள்வார்கள்.


தமிழ்மறை என்று சொல்கிற குறள் முழுக்க முழுக்க வைதிகமானதே என்பது என் அபிப்பிராயம். வைதிக சமயத்தில் பித்ருக்களுக்குத் தான் முதலிடம். அப்புறம் தான் வேத யக்ஞம். பித்ருக்களைக் குறித்த தர்ப்பணமும் திவஸமும் செய்தபின் தான் வேத பூஜை செய்ய வேண்டும். இதே வரிசையில் திருவள்ளுவரும் சொல்கிறார்.


தென்புலத்தார் தெய்வம் விருந்துஒக்கல் தான்என்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.


பித்ருக்கள், தெய்வம், அதிதி, சுற்றத்தார்கள், தான் என்று ஐந்து பேரையும் போஷிக்க வேண்டும் என்கிறார். முதலில் பித்ருக்களான தென்புலத்தாரைச் சொல்லி, அப்புறம் தெய்வத்தைச் சொல்கிறார். யமனுடைய திக்கான தெற்கில் பித்ருக்கள் இருப்பதாக வைதிக நம்பிக்கையிலேயே மூதாதையர்களைத் 'தென்புலத்தார்' என்கிறார். ஆக திருவள்ளுவர் வைதிகத்தைத் தான் சொல்லி
இருக்கிறார் என்பது தெளிவாகிறது.


இந்தத் தமிழ்நாட்டில் வேத பாடசாலைகளை வைத்து நடத்துவதில் பிராம்மணரல்லாதார் செய்திருக்கிற கைங்கரியம் கொஞ்சம் நஞ்சமல்ல. நிலமாகவும் பணமாகவும் வாரிக்கொடுத்து இந்தப் பெரிய தர்மத்துக்குப் பரமோபகாரம் செய்திருக்கிறார்கள்.


இப்போதும் கூட ஏதோ அரசியல் காரணங்களுக்காக வைதிகத்திற்கு எதிரான, நாஸ்திகமான அபிப்பிராயங்கள் கொஞ்சம் தலை தூக்கியிருந்தாலும், மொத்தத்தில் தமிழ் மக்களுக்கு உள்ளூர வைதிக சிரத்தையும், பழைய சாஸ்திர ஏற்பாடுகளில் பக்தியும் நம்பிக்கையும் அப்படியே தான் இருக்கிறது என்பது எனது அபிப்பிராயம்.


எல்லோருடைய அன்பிற்கும் பாத்திரர் ஆகிற மாதிரி பிராம்மணர்கள் மட்டும் இன்னும் கொஞ்சம் ஆசார அனுஷ்டான சீலர்களாக ஆகிவிட்டால், இங்கே வேத ரஷணம் நிரம்பவும் நன்றாக நடந்துவிடும் என்பதே என் நம்பிக்கை.

- ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்.





.