Thursday, February 16, 2012

சாணக்கியன் சொல் கேளீர்!



செல்வம் மட்டும் எல்லாதவன் ஏழையல்ல, அவன் நிச்சயமாகச் செல்வந்தன். ஆனால் படிப்பில்லாதவன் எல்லா விதத்திலும் ஏழ்மை அடைகிறான்.

கண்களால் சுற்று முற்றும் நன்றாகப் பார்த்து விட்டு வெளியே செல்லக் காலடி எடுத்து வைக்க வேண்டும்!

தண்ணீரைச் சுத்தமான துணியால் வடிகட்டிக் குடிக்க வேண்டும்!

சாஸ்திரங்களுக்கு ஒத்ததான பேச்சையே பேச வேண்டும்.

மனச்சாட்சியைப் பின்பற்றிக் காரியங்களைச் செய்ய வேண்டும்.

கஞ்சனுக்கு யாசகன் எதிரி. முட்டாளுக்கு ஆசான் எதிரி, மலடிக்குக் கணவன் எதிரி. திருடர்களுக்கு நிலவொளி எதிரி!

ஆற்றோரத்தில் உள்ள மரங்களும், மற்றவர்கள் வீடுகளில் வசிக்கும் பெண்களும்மதியுள்ள மந்திரிகளில்லாத அரசர்களும், விரைவிலேயே சந்தேகமில்லாமல் அழிவடைகிறார்கள்.

அதிகமாகப் பிரயாணம் செய்வதால் ஒரு மனிதன் விரைவில் கிழத்தன்மையை அடைகிறான்.

கட்டிப்போடப்பட்ட குதிரைகள் விரைவிலேயே கிழத்தன்மையை அடைகின்றன.

ஆண்களுடன் சேர்க்கை இல்லாவிடில் பெண்கள் விரைவில் கிழவிகளாகிறார்கள்.

அதிக நேரம் வெயிலில் காய்ந்த துணிகள் விரைவில் கிழிந்து போகின்றன.

சந்தண மரங்கள் நிறைந்திருக்கும் மலையில் விளையும் மூங்கில் சந்தன மரமாகாது.
அதுபோல, புத்தியில்லாதவனுக்குக் கூறும் நல் வார்த்தைகள் வீணே ஆகும்.

ஒவ்வொருவருடைய உண்மையான குணத்தை அதற்கான நேரங்களில் சரியாகத் தெரிந்து
கொள்ளலாம். ஒரு பணியாளனை வெளியே வேலைக்காக அனுப்பும் போது அவனைப்
பற்றித் தெரிந்து கொள்ளலாம். சுற்றத்தைத் துன்பத்திலும், நட்பை ஆபத்து காலத்திலும்,
மனைவியை ஏழ்மையிலும் தெரிந்து கொள்ளலாம்.

- சாணக்கியர்

Tuesday, February 14, 2012

காதலுக்கு ஒரு தினமாம்!


கோவையில் குண்டு வெடிப்பு!

போஸ்டருக்கு நன்றி : இந்து மக்கள் கட்சி!

இன்று காதலர் தினமாம், சிலர் வாழ்வுரிமை மாநாடு நடத்த திட்டமிட்டுத் தேர்ந்தெடுத்ததிந்த தினமாம்!

ஆனால் இதே பிப்ரவரி 14 ல் பயங்கரவாதம் என்றால் என்னவென்றும்,  தீவிரவாதம் என்றால் என்னவென்றும் தெரியாத அப்பாவித் தமிழர்கள் மதத்தின் பெயரால் வைக்கப்பட்ட குண்டுக்கு இறையானார்கள். அந்தக் கொடிய நாள் இன்று! 1998 ல் இதே பிப்ரவரி 14 ல் வீட்டில் அன்பு மனைவிக்கு டாட்டா காட்டி காலை அலுவலகம் சென்ற கணவன் மார்களும், செல்லக்குழந்தைகளை பாட்டியிடம் விளையாட விட்டுவிட்டு கடைத்தெருவிற்கு பொருள் வாங்க வந்த தாய்மார்களும், குடும்ப பாரத்தை இறக்க தெருவில் வந்து வேலை செய்தாக வேண்டுமென்ற கடமையின் காரணமாக தெருவெங்கும் நடமாடிக் கொண்டிருந்த பல அப்பாவித் தமிழ் மக்கள் கொடூர வெடுகுண்டுத் தொடர் தாக்குதலுக்கு இறையான தினம் இன்று!

கோயம்புத்தூரில் இறந்து போன அப்பாவித் தமிழர்களுக்கு தீவிரவாதம் என்றால் என்னவென்று தெரியுமா? இஸ்லாம் என்றால் தான் என்னவென்று தெரியுமா? அல்லது அப்துல் நாசர் மதானியைத்தான் யாரென்று தெரியுமா? ஆனால் இறந்தார்கள். அவர்களில் பலரது குடும்பங்கள் இன்று அனாதரவான நிலையில்...பல குழந்தைகள் அனாதைகளாக! 

 எல்லை தாண்டிய இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள் என்று வீர முழக்கமிட்டு, வீறு கொண்டு எழுந்து வா, புறப்படுவோம், சக தமிழனே போரிடப் புறப்படுவோம், ஓடி வாருங்கள், தோள்கள் துடிக்கிறாது, கண்கள் சிவக்கிறது கப்பலேரிப் போய் காப்பாற்றுவோம் தமிழரையென்று வீரமுழக்கம் இட்டார்களே பல பெட்டைக் கோழிகள்! அவர்களில் ஒரு குஞ்சு கூட கோயம்புத்தூரில் தொடராக வெடித்த கொலை குண்டில் இறந்து போன தமிழர்களுக்காக இந்த நாளில் முனங்கக்கூட இல்லையே ஏன்?

வெளிநாட்டு மோகம் என்பது இது தானா? சொந்தத் தமிழன் கூட எல்லை தாண்டி இருந்தால் தான் அவன் குண்டடி பட்டவுடன் நமக்கு கோபம் வருமாவெளிநாட்டுத் தமிழனின் உயிருக்காக கோஷம் போடுபவர்கள், உள்நாட்டில் சிதறிச் செத்துப்போன தமிழர்களுக்காக ரோஷப்பட்டு பேச வராதது ஏன்? சொந்த மாநிலத்தில் ஒன்றாய்ச் சோறுண்டு , ஆடிப்பாடி விசிலடித்து, விவாசாயம் செய்துணக்குச் சோறும் போட்ட சொந்தத் தமிழன்  கேட்பாரற்று, ஆனாதையாக உடல் சிதறிக் கிடந்த இந்த நாளில் இறந்து போன அந்தத் தமிழர்களுக்காக அஞ்சலி செலுத்தவோ அவர்கள் தம் குடும்பங்களுக்கு ஆறுதல் சொல்லவோ மானமுள்ள தமிழுணர்வாளர்கள் எங்கேயடா காணோம்!

1998 பிப்ரவரி 14 ல் உடல் சிதறிக்கிடக்கும் கோவைமாநகரச் செந்தமிழர்கள்!


என்ன ஒரு அநியாயம் சீனத்து பயங்கரவாதிகளின் கைக்கூலி ஸ்ரீலங்க்கன் கொன்றால் தான் அதனைக் கண்டிப்போம், அதற்கெதிராக கூச்சலிடுவோம், கூப்பாடு போடுவோம் உள்ளூர் பயங்கரவாதிகள் கொன்றால் அதனை கண்டும் காணாமல் அமைதியாய் இருப்போமென்று என்ன ஒரு அநியாயம்!

தமிழர்களுக்கு ஆறுதல் சொல்ல ஒரு தேசியத் தலைவர் தான் வரவேண்டி இருக்கிறது!        கொலைக்களத்தைப் பார்வையிடும் அத்வானி!

எல்லை தாண்டி செத்துப்போன தமிழர்களுக்கெல்லாம் இரங்கல் கடிதம் எழுதி மூக்கு சிந்தி அழுபவர்கள் சொந்த மாநிலத்தில் சிதறிப்பலியான தமிழர்களை நினைவில் கூட வைக்காமல் போவதேன்!

அல் உம்மா பாஷா! என்ன ஒரு புன்சிரிப்பு!


பாகிஸ்தானுக்கும், அரபு நாட்டுக்கும் மட்டுமே விசுவாசிகளாக இருந்து உள்நாட்டுக் குடிமக்களை கூறு போடத் துணிபவர்களை கண்டிக்க தமிழுணர்வாளர்கள் ஏன் வக்கற்றுப் போனார்கள்! சொந்த மண்ணில் ஏன் எதற்கென்றே காரணம் தெரியாமல் இறந்து போன இந்தத் தமிழர்களுக்கென்று ஒரு நினைவு நாள் கூட கிடையாது! காரணம் அவர்கள் அரபு விசுவாசிகளால் கொல்லப்பட்டார்கள்! சீன விசுவாசிகளால் அல்லவே!


பார்வையிட்டு என்ன பயன்? பின் கைகொடுத்து அனுப்பினீரே கொலை பாதகனை               அவன் வீட்டுக்கு! அந்தப் பாதகத்தைப் பார்வையிட்டோர் யார்?

கோயம்புத்தூர் குண்டு வெடிப்புகளில் 58 பேர் கொல்லப்பட்டனர், 200க்கும் மேலான மக்கள் காயமடைந்தனர். இத்தனைக்கும் காரணமாம் இவனென ஒருவனைத் துறத்திப் பிடித்துக் காவலில் வைத்தால், ஆங்கோராயிரம் ஓட்டிற்கு அவனை உச்சி முகர்ந்து வழியனுப்பிய கொலைகாரத் தலைவர்களை தமிழகம் தான் மன்னிக்குமோ! தமிழர்கள் தான் மறப்பரோ!


ரத்த வெறி பிடித்து உரக்கப் பேசி சூளுரைத்து மாந்தர்தம் உயிர் குடிக்கும் கொலைபாதகச் சிந்தனைகளை என்று தான் நிறுத்துவரோ இக்கயமை கொண்ட மானிடர்கள்! என்று தான் நிறுத்துவரோ தன் இறையின் பெயரால் கொட்டும் ரத்தங்களை!


அப்துல் நாசர் மதானி!

நன்றி: vedaprakash!

சில குமுறல்கள், சில கதறல்கள்!





குட்டி பாகிஸ்தானான கேரளத்தில் இது போன்ற ஆயிரம் மதானிகள் பாலூற்றி தேனூற்றி வளர்க்கப்படுகிறார்கள். யாரால்? அப்பாவி ஹிந்துக்களின் ஓட்டுக்களை வாங்கி ஆட்சி அதிகாரங்களில் அமர்ந்து கொண்டு ஓட்டு வங்கிக்காக அராபிய விசுவாசிகளின் கால்களைக் கூடக் கழுவத் தயங்காத  அரசியல்வாதிகளால்! அச்சுதானந்தன்களும், ஈகே நாயனார்களும் வெட்கமின்றி வளர்த்தெடுத்ததார்கள் இந்த வெளிநாட்டு விசுவாசிகளை. விளைவு, இந்த  பாகிஸ்தான் விசுவாசிகள் கல்லூரி பேராசிரியர் கையை வெட்டி விட்டு ஷரியா சட்டப்படி தண்டனை கொடுத்தோம் என்று மார்த்தூக்கி எச்சரிக்கிறார்கள்!

என்று தணியும் இந்த செக்யூலரிச மோகம்? என்று தணியும் இந்த ஓட்டு வங்கி மயக்கம்? என்று கிடைக்கும் பாரதத்தில் உண்மையான சுதந்திரம்?

கோயம்புத்தூரில் கொலை பாதகர்களால் உடல் சிதறி இறந்து போன அப்பாவித் தமிழர்களின் ஆன்மா தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்! 

போலித் தமிழுணர்வாளர்களால் மறக்கப்பட்டாலும், நம் இதயங்களில் வாழும் இறந்து போன கோயம்புத்தூரின் சொந்தத் தமிழர்களின் ஆன்மா சாந்தி அடைய ஒவ்வொரு பிப்ரவரி 14 லிலும் பிரார்திப்போம்! மிச்சமிருக்கும் அப்பாவித் தமிழர்களை இது போன்ற கொலைபாதகர்களிடமிருந்து காக்கச் சூளுரைப்போம்! தீவிரவாதம் எந்த முகம் கொண்டு வந்தாலும் அதனை எதிர்த்து போரிடுவோம்!


ஜெய்ஹிந்த்!


Saturday, February 11, 2012

நம்மோடு பேசும் மழை!



அது ஒரு அனுபவம்!

ஆம் சுவையான அனுபவம்! அனுபவங்கள் தான் நம்மைச் செதுக்கும் சிற்பி! அனுபவங்கள் உளியைப் போன்றது. உளி தரமாக இருந்தால் செதுக்கப்படும் சிற்பம் சிலையாகும். உளி ஒழுங்கற்றிருந்தால் கல் தூளாகுமே ஒழிய சிற்பமாகாது. நல்லனுபவங்கள் நம்மை சிற்பமாக செதுக்குகின்றன.

கேரளாவில் பாலக்காடு அருகே நெல்லியம்பதி என்று ஓரிடம் இருக்கிறது. மலைகளினூடே செல்லும் சாலைகள். சாலையைக் குறுக்கே கடந்து செல்லும் அழகான சிறிய நீர்வீழ்ச்சிகள். நூற்றாண்டுகளைக் கடந்து கம்பீரமாக நிற்கும் உயர்ந்த மரங்கள். பச்சைப் பசேலெனத் தேயிலைத் தோட்டங்கள் என்று அற்புதமான மலையுச்சி அது.


அந்தப்பகுதி மக்களின் அழகான ஊட்டி. அன்றொரு ஓணம் பண்டிகையின் போது அந்த இடம் சென்று வர வாய்ப்பு கிடைத்தது. வளைந்து வளைந்து செல்லும் அருமையான
மலைப்பாதையில் மேலே செல்லச்செல்ல அற்புதமான அனுபவம். ஆம், மலை உச்சியின் மேலேயே சேட்டிலைட்டுக்குப் போட்டியாக சுற்றிக்கொண்டிருக்கும் மேகக்கூட்டம் சேட்டிலைட்டுகள் பார்த்து பொறாமைப்படும் படியாக மலைச்சாலைகளில் இறங்கி  நடமாடத்துவங்கியது.


எதிரே குறிப்பிட்ட தூரத்திற்கு என்ன இருக்கிறது என்று தெரியாத அளவிற்கு பனி மூட்டம் சூழ்ந்திருந்தது. இரு சக்கர வாகனத்தில் சென்ற எனது தலையில் தண்ணீர்படலம்! நான் மேகங்களை அனைத்துக் கொண்டு உறவாடினேன். மெல்லிய காற்று சில்லென்று என்னை குளுமைப்படுத்தியது. மேகங்களோடு சேர்ந்து காற்றும் என்னை வரவேற்று, ஒன்றாய்க் கூடித் தழுவிக் கொண்டதாகவே மகிழ்ந்தேன். 

ஆம், நாம் நேசித்தால் அவைகள் நம்மோடு உறவாடும். இயற்கைக்கும் உணச்சிகள் உண்டு. அவைகள் நம்முடன் பேசும். கட்டிக்கொள்ளும். தழுவும். தாலாட்டுப் பாடி உறங்கச்செய்யும். சப்தம் போட்டு எழுப்பும்! அடித்துத் துறத்தும். எல்லாவற்றிர்கும் காரணங்கள் உண்டு. அதனை உணர்ந்து கொள்ளும் பக்குவத்திலிருந்து நாம் வெகு தூரம் வந்துவிட்டோம். இயற்க்கையுடனான உணர்ச்சி ததும்பும் உறவாடலை நாம் மறந்து விட்டோம். அவற்றை அக்ரினையாகப் பார்க்கக் கற்றுக் கொண்டுவிட்டோம்.

ஆனால் இயற்கை என்பது, தாய், தந்தை, சகோதரன், நண்பன், தெய்வம், குறிப்பிட்டுச் சொன்னால் இவை எல்லாமும் நானே என்று கூறும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்.

உச்சிமலை சென்று செங்குத்துப் பாறையின் ஓரத்தில் அமர்ந்திருக்கும் போதும் அந்த மேகங்கள் என்னை விடவில்லை. முகத்தோடு ஒட்டி உரசி விளையாடிச் சென்றது. காற்றில் அவற்றை உறிஞ்சிக் குடித்தேன். கைகளால் தொட்டு மகிழ்ந்தேன். ஒரு அடி எடுத்து வைத்தால் அதள பாதாளம். ஆனால் பயம் வரவில்லை. அவற்றை நேசித்தேன்.

பண்டிகை நாளென்பதால் மனித நடமாட்டமே இல்லாமல் இருந்த அந்த இடத்தில் ராஜாக்களாக விளையாடிக் கொண்டிருந்தார்கள் என் நண்பர்கள்! சின்னதும் பெரிதுமாக பல வகையில் குரங்குகள்.

சிறுவயதில் 'கபீஷ்' என்ற பெயரில் சித்திரக்கதையில் படித்துப் பாசத்தின்பாற்பட்ட குரங்குகள் என்றைக்கும் என் குழந்தைப் பருவ நண்பர்களாகவே இருக்கிறார்கள்.

உச்சிப்பாறையின் உச்சியில் இவன் மட்டும் தனியாக இருக்கிறானே என்றெண்ணி அவர்கள் அருகே வந்தனர். என் பைகளின் என்ன வென்று நோட்டம் போட்டனர். முன்னே வந்து என் முகத்தைப் எட்டிப் பார்த்துவிட்டு சுற்றி சுற்றி வட்டமிட்டு வேறு வேலை பார்க்கச் சென்றுவிட்டனர்.

அந்தக் 'கபீஷ்' கள் முகத்தில் எத்தனை மகிழ்ச்சி, எத்தனை ஆர்வம், எத்தனை உற்சாகம், பூமிப்பந்தின் மொத்த ராஜ்ஜியமும் தமக்கே என்கிற ஆனந்தம். அவைகளை அன்புடன் உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தேன்.


பல மணி நேரம் அந்த மலை உச்சியின் அமைதியை ரசித்து விட்டு கிளம்பலானேன். மிக அருகே இருந்தமேகம் இன்னும் குளிர்ந்து மழையாகப் பெய்தது. நனைந்தேன். அந்த ஈரத்தை ரசித்தேன். புறப்படும் நேரத்தில் இன்னும் நெருக்கமாக என்னைத் தழுவிக்கொண்டதாக மகிழ்ந்தேன். 

வானத்தைப் பார்த்து நாக்கை நீட்டி மழை நீரை வாஞ்சையுடன் குடித்தேன். என்னைத் தழுவிக்கொண்ட உன்னோடு நான்  என்றும் ஜீவித்திருப்பேன் என்று மனதாரக் கூறிவிட்டு புறப்பட்டேன். மழையோடு காற்றும் கைகோர்த்துக் கொள்ள குளிரில் பற்கள் டைப்படித்தன. வீடு போகும் வரை என்னை மறக்காதே என்று காற்று என்னைக் குளிர்வித்தனுப்பியதாக பூரித்தேன். வீடு சென்றேன். வீடு செல்லும் வரை என்மீது விழுந்த மழையின் துளிகளைத் துடைக்கவில்லை.



அன்று ஒரு வரண்ட நாள். வெறித்த வெள்ளை வானம் சூடாக சுட்டெரித்த தினம்.

இரவு கண்ணயர்ந்த நேரம். வாசலில் அழைப்புமணி சத்தம். வெளி வேலையாகச் சென்ற என் சகோதரர் இரவு தாமதமாக வீடு வந்தார். கதவைத் திறந்து விட்டு உள்ளே சென்று மீண்டும் படுத்துக் கொண்டேன்.

அயர்ந்த உறக்கத்தில் அப்படி ஒரு சப்தம். பலமான காற்று! ஜன்னல் கதவுகள் அடித்துக் கொண்டன. ஜன்னலுக்கு வெளியே இருந்த தகடுகள் மற்றும் தட்டுமுட்டு சாமான்களில் தண்ணீர் தடதடவென விழும் சப்தம். ஆம், திடீரென வெளியே மழை!

விழிப்பு வந்த நிலையில் கூடத்திற்குவந்தேன். அதிர்ச்சி காத்திருந்தது. வாசற்கதவு பெரிதாகத் திறந்திருந்தது. கூடத்திற்கு வெளியே சென்று பார்த்தால் வாசலில் இரும்புக்கதவு முழுதுமாகத் திறந்திருந்தது. மணியைப்பார்த்தேன். சரியாக ஒன்று! நள்ளிரவில் கதவு திறந்து கிடக்க ஒரு வித பதற்றத்துடன் வீடு முழுவதும் அவசர அவசரமாக சுற்றிப் பார்த்தேன். மழை நீர் விழும் சப்தம் வெளியே இன்னும் கேட்கிறது.

வீட்டுக்குள் யாரும் இல்லை. அரையில் சகோதரர் நன்றாக உறங்கிக்கொண்டிருக்கிறார். அப்போது தான் பொறி தட்டியது. அவர் வரும்போது கதைவைத் திறந்துவிட்ட நான் பூட்டாமல் உள்ளே சென்று விட்டேன். நான் பூட்டுவேன் என்றெண்ணி சகோதரரும் போய் தூங்கிவிட்டார். ஆனால் கதவு திறந்தபடியே இருந்திருக்கிறது. முன்னிரவு தாண்டி நள்ளிரவும்!

அவசரமாக ஓடிச்சென்று வாசற்கதவைப் பூட்டி, கூடத்தின் கதவையும் நன்றாகப் பூட்டிவிட்டு உள்ளே சென்றேன். அப்படா என மனது சமாதானம் அடைந்தது.

பூட்டிய வீட்டிலேயே ஆட்டயைப் போடுபவர்கள் ரோட்டுமேலிருக்கும் ஒரு வீடு, வாசல் திறந்து வா வா எனக் கூப்பிட்டால்...!

நல்ல வேளை அப்படி ஏதும் நடப்பதற்குள் மழை வந்து எழுப்பியது என்றெண்ணினேன்.

ஆமாம், மழை எங்கே?

வெளியே இப்போது தண்ணீர் சொட்டுச் சொட்டாக விழுந்து கொண்டிருக்கும் சப்தம் கேட்டுக் கொண்டிருந்தது.

காற்றில்லை! முழுவதும் அமைதியான சூழல்! ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தேன்!

அதே வரண்ட வானம்!

யார் என்னை எல்லாவற்றிலும் காண்கிறானோ, என்னிடம் எல்லாவற்றையும் காண்கிறானோ, அவன் என் பார்வையிலிருந்து மறைவதில்லை. நானும் அவனது பார்வையிலிருந்து மறைவதில்லை! 

- பகவான் ஸ்ரீ க்ருஷ்ணர்!

Thursday, February 9, 2012

கிறிஸ்தவ மாதா!

இந்தியாவை கிறிஸ்தவ நாடாக மாற்றுவதே லட்சியம்!


Wednesday, February 8, 2012

கொஞ்சம் டைம்பாஸ்!


அண்ணே! நாங்க குடிக்க வெச்சிருக்கறதே அந்த ஒரு க்ளாஸ் கஞ்சி தான்னே! அதையாவது மிச்சம் வைங்க ரவுல் வின்ஸி அண்ணே!



இப்படியெல்லாம் சீன் போட்றதுக்கு எங்க எங்க தல எவ்ளவோ மேல் (Male)!

தல போல வருமா!

Monday, February 6, 2012

கீதோபதேசம் - சத்துவம், ரஜோ, தமோ!



அர்ஜுனன் கேட்கிறான்:

க்ருஷ்ணா! சாஸ்திர விதிகளை மீறி - ஆனால் அக்கறையோடு வேள்வி செய்தோர்க்கு எந்த நிலை கிடைக்கிறது? 'சத்துவம்' என்ற தூய நிலையா 'ரஜோ' என்ற ஆசை நிலையா? 'தமோ' என்ற மயக்க நிலையா?

ஸ்ரீ பகவான் சொல்கிறார்:

அர்ஜுனா! உயிர்களுக்கு இயற்கையாக சாத்விகி, ராஜஸி, தாமசி என்ற மூன்று வைகையான நம்பிக்கை உண்டாகிறது. அதை விளக்குகிறேன் கேள்.

பாரத குமாரா! ஒவ்வொருவருக்கும் அவரவரது இயல்பினைப் பொறுத்தவாறு நம்பிக்கை உண்டாகிறது. மனிதன் நம்பிக்கையிலே நிலைத்தவன். சத்துவம் என்ற தூய்மையில் ஒருவன் நம்பிக்கை வைத்தால், அவன் அவ்வாறே ஆகிறான். அப்படியே ஆசையிலோ, மயக்கத்திலோ நம்பிக்கை வைத்தால் அவ்வண்ணமே மாறுகிறான்.

தூய நம்பிக்கை (சத்துவம்) உள்ளவர்கள் மூலமான என்னையே வழிபடுகிறார்கள். ஆசையில் (ரஜொ) நம்பிக்கை வைத்தவர்கள் குட்டித் தேவதைகளையும், அரக்கர்களையும், வழிபடுகிறார்கள். மயக்க (தமோ) குணம் உள்ளவர்கள் மூதாதையர்களையும் பூதங்களையும் பேய்களையும் வணங்குகிறார்கள்.

சாஸ்திரத்தில் இல்லாத கடுமையான தவத்தை சிலர் மேற்கொள்கிறார்கள். ஆடம்பரமும் ஆணவமும் அவர்கள் தலையைச் சுற்றி அடிக்கின்றன. அவர்கள் செய்யும் தவத்தால் தங்கள் உடலையும் வருத்திக் கொள்கிறார்கள். அந்த உடலுக்குள் இருக்கும் என்னையும் துன்புறுத்துகிறார்கள். அவர்கள் அரக்க குணம் உள்ளவர்கள்.
  
அர்ஜுனா கேள்!

எல்லோருக்கும் பிரியமான உணவு மூன்று வகையாகும். அப்படியே யாகமும் தபனமும் கூட மூன்று வகைப்படும். அந்த பேதத்தைக் கூறுகிறேன் கேள்.

ஆயுளை வளர்ப்பது, மன வலிமை உடல் வலிமை தருவது, நோய் தராதது, சுகத்தை வளர்ப்பது, சாறுடன் கூடியது, குழம்பாக உள்ளது, நெய்ச்சத்து கலந்தது, மனதுக்கும் சுகம் அளிப்பது, இந்த வகையான உனவுதான் சாத்வீகம் என்று சொல்லப்படும். முதற்குணம் படைத்தவர்களுக்குப் பிடித்தமானது.

கசப்பானது, புளிப்பானது, உப்பு முகுந்தது, உலர்ந்தது, அதிகச் சூடானது, காரம் மிகுந்தது, பசியெடுக்காமல் செய்வது, குடல் எரிச்சலை உண்டு பண்ணுவது இந்த வகை உணவுதான், ராஜஸகுணம் என்னும் இரண்டாவது குணம் படைத்தவர்களுக்குப் பிடித்தமானதாக இருக்கிறது. இவ்வகை உணவுப்பழக்கம் துன்பம், கவலை நோய்களைத் தரக்கூடியது.

வேகாதது, பழையது, குழம்பில்லாமல் வற்றிப் போவது, கெட்ட நாற்றம் அடிப்பது, முன்பு சாப்பிட்டு மிச்சம் வைத்தது, அசுத்தமானது - இந்த வகை உணவு தாமச குணம் என்னும் மூன்றாவது குணம் படைத்தவர்கள் விரும்பும் உணவாகும்.
  
அது போலவே அர்ஜுனா யாகத்திலும் மூன்று குணங்கள் உண்டு. அவற்றைச் சொல்கிறேன் கேள்!

எந்த வித லாபத்தையும் கருதாமல் சாஸ்திரம் காட்டும் சரியான வழியில் 'இது என் கடமை. ஆகவே இந்த யாகத்தைச் செய்கிறேன்' என்று செய்யும், யாகத்துக்கு "சாத்வீகம்" எனப் பெயர்.

ஏதாவது கிடைக்கும் என்றோ, அல்லது ஊரார் மதிப்பதற்காகவோ எந்த யாகத்தையும் செய்வதன் பெயர் "ராஜஸம்".

சாஸ்திர நெறி தவறி - அன்னதானம் செய்யாமல் - மந்திரங்களை உச்சரிக்காமல், தட்சணை வைக்காமல் - அக்கறையோ நம்பிக்கையோ இல்லாமல் செய்யப்படும் யாகத்தின் பெயர், "தாமசம்".

அர்ஜுனா! அவ்வாறே இனி உடல், வாக்கு, மனம் மூன்றாலும் செய்யப்படும் தவத்தை விவரிக்கிறேன் கேள்!

தூயகுணம் படைத்தோர், ஆச்சரியார்கள், ஞானிகள் ஆகியோரைப் பூஜித்தல்; புனித நீராடி உடல் சுத்தம் செய்தல்; நேர்மையைக் கடைப் பிடித்தல்; பிரம்மச்சரியத்தைக் (கடுமையான ஒழுக்கம்) கைக்கொள்ளுதல் அகிம்சையைப் பின்பற்றல் இவைகள் யாவும் சரீரத்தால் செய்யப்படும் தவமுறைகள் ஆகும்.

யாரையும் புண்படுத்தாத சொல்வன்மை; உண்மையையே உரைத்தல்; நல்லதையே கூறுதல்; கனிவாக உரைத்தல் வேதம் ஓதுதல் - இவை வாக்கினால் செய்யப்படும் தவமுறைகளாகும்.

தெளிந்த உள்ளம்; பரம சாதுவாக இருத்தல்; மௌனத்தையே தாய்மொழியாகக் கொள்ளுதல்; மனத்தைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருத்தல்; ஆத்மாவைத் தவிர ஒன்றை நினையாதிருத்தல் - இவை மனத்தினால் செய்யப்படும் தவமுறைகளாகும்.

இவற்றில் பலனை விரும்பாத சுயநலமற்ற நம்பிக்கை மிகுந்த முதல் தவம் சாத்வீகத் தவம்.

ஊரார் மதிக்க வேண்டும் என்பதற்காகவும், மரியாதை கிடைக்க வேண்டும் என்பதற்க்காகவும், தன் பெருமை வெளிப்பட வேண்டியும் செய்யும் தவம் ராஜஸ தவமாகும்.

காரணம் இல்லாமலும், தேவை இல்லாமலும் பிடிவாதமாகவு, தன்னை வருத்திக் கொண்டு செய்யும் தவமும் மற்றவர்களை ஒழிப்பதற்காகச் செய்யப்படும் தவமும், தாமசத் தவமாகும்.

அர்ஜுனா! இவற்றில் உயர்ந்தவை எதுவோ அதையே நீ செய்வாய்!


- பகவான் ஸ்ரீக்ருஷ்ணர்.