Friday, August 31, 2012

பற்றின்மையால் இறைவனை அடைவாய்!


உலகியலின் நடுவில் வாழ்கின்ற மூடர்கள் தங்கலை அறிவாளிகள் என்றும் பண்டிதர்கள் என்றும் கருதி மூப்பு, மரனம் ஆகியவற்றின் வசப்பட்டு உழல்கிறார்கள். குருடனால் வழிகாட்டப்பட்ட குருடர்களைப் போல இவர்கள் மீண்டும் மீண்டும் பிறவிச் சூழலில் உழல்கிறார்கள்.

பக்குவமற்ற அவர்கள் உலகியலில் பலவிதமாக உழல்கிறார்கள். தாங்கள் லட்சியத்தை அடைந்து விட்டதாக நினைக்கின்ற அவர்கள் உண்மையை அறிவதில்லை. அவர்கள் பற்றுடன் கர்மம் செய்பவர்கள். எனவே துயருற்று, புண்ணியம் தீர்ந்ததும் சொர்கத்திலிருந்து கீழே வீழ்கிறார்கள்.

இந்த வடிகட்டின முட்டாள்கள் யாகங்களும் நற்பணிகளுமே எல்லாம் என்று நினைக்கிறார்கள். அதற்கு மேலான எதையும் அவரக்ள் அறிவதில்லை. சொர்க்க லோகங்களில் புண்ணிய பலனை அனுபவித்து பிறகு அவர்கள் இந்தப் பூமியையோ இதைவிட இழிந்த உலகங்களையோ அடைகிறார்கள்.

புலக்கட்டுப்பாடு உடைய அறிவொளி பெற்ற சான்றோர் பிச்சையேற்கும் வாழ்வொலோ காட்டில் சிரத்தையுடன் கூடிய தவ வாழ்க்கை வாழ்வதிலோ ஈடுபடுகிறார்கள்.  அவர்களின் வினைப்பயன்கள் அகல்கின்றன. அவர்கள் உத்தராயண பாதை வழியாக மரணமற்ற, அழிவற்ற இறைவனை அடைகிறார்கள்.

சான்றோன் ஒருவன், தான் செயல்களின் பலனாகப் பெற்ற உலக அனுபவங்களைமுதலில் ஆராய்ந்து பார்க்க வேண்டும். அதன் விளைவாக, 'கர்மங்களால் இறைவனை அடைய முடியாது, பற்றின்மையால்தான் முடியும்' என்பதை உனர்ந்து பற்றின்மை பெற வேண்டும்.

நிலையுள்ள பொருள்களிடை நிலையுள்ளவனாகவும், அறிவுள்ள உயிர்களின் அறிவாயும், ஒருவனாய் நின்று அனைவருடைய ஆசைகளையும் அளிப்பவனாயும், அனைத்திற்கும் காரணமாயும், ஞான யோகத்தால் அடைதற்குரியவனாயும் உள்ள அந்த தேவனை அறிந்து ஒருவன் எல்லாத் தளைகளினின்றும் விடுபடுகிறான்.

- முண்டக உபநிஷத்து.

Wednesday, August 29, 2012

பொன் ஓனம் வாழ்த்துக்கள்!


கேரளத்தில் மைனாரிட்டிகளாக மாறிவிட்ட ஹிந்துக்களின் வாழ்வை பொன்ஓனம் மலரச் செய்யட்டும்!

Sunday, August 26, 2012

இந்தியாவும் இத்தாலி ராஜ்ஜியமும்!இத்தாலி சோனியாவிற்கு மக்கள் இரண்டாவது முறையாக நாடாள வாய்ப்பு கொடுத்தாலும் கொடுத்தார்கள் அவரது முசோலினி மனப்பான்மை நாளுக்கு நாள் வெளிப்பட்டுக் கோண்டே வருகிறது. காங்கிரஸ் என்கிற இத்தாலி நாட்டுக் கம்பெனியின் ஊழல்களும், பாரத தேசத்தை வெள்ளையனின் பாதக்கமலங்களில் வெட்கமில்லாமல் சமர்ப்பித்து இந்தியர்களை அடிமைகளாக்கும் கேவலங்களும் சொல்லவொன்னா விதத்தில் கோரத்தாண்டவம் ஆடுகின்றன.

இத்தனை கேவலங்களையும் தன்னகத்தே வைத்துக் கொண்டு ஒரு இத்தாலிய அரசு இந்தியர்களின் கருத்துச் சுதந்திரத்தை உண்மைகளை உரக்க ஒலிக்கும் உணர்வுச் சுதந்திரத்தை முழுவதுமாக பறித்து வருகிறது. வெள்ளையனே வெளியேறு என்று கூவிக்கூவி நாட்டை வெள்ளையர்களிடமிருந்து பறித்துப் பெற்று மீண்டும் வெள்ளைக்காரியையே இந்த நாட்டின் தலைவியாக்கி நாம் மீண்டும் அடிமைகளாகி விட்டதை அப்பட்டமான முசோலினி அரசு வெளிப்படுத்தி வருகிறது.

சமீபகாலமாக இத்தாலிக் கம்பெனியான காங்கிரஸ் இந்தியர்களின் கருத்துச் சுதந்திரத்தை முடக்கி வருகிறது. காங்கிரஸின் முகமூடியைக் கிழித்துத் தோலுறித்துக் காட்டும் எந்த ஒரு இணணய தளத்தையும் தொலைத் தொடர்புத் துறைக்கு ஆணையிட்டு அவற்றை செயல்படுத்த விடாமல் தடுத்து வருகிறது. இணைய தளப்பக்கங்களின் மீது அப்படி என்ன கோபம் இவர்களுக்கு எனத் தோன்றலாம். தொலைக்காட்சிமற்றும் பத்திரிக்கை மீடியாக்கள் ஏற்கனவே இத்தாலிய அடிமைகளாகவும், செக்யூலரிச பீடைகளாகவும், ஹிந்து அழிப்பு ஊடகங்களாகவும் வலம் வருகின்றன. இதனால் இத்தாலி சோனியாவுக்கு அவைகள் செல்லப் பிள்ளைகள். 

ஆனால் இணைய தளங்கள் அப்படி இல்லாமல் மக்களின் உண்மை உணர்வுகளை வெளிப்படுத்தும் ஊடகங்களாக இருக்கின்றன. கல்வியறிவு பெற்றவர்களும் கணிணி உபயோகிப்பாளர்களும் அதிகரித்துள்ள இக்காலத்தில் இணையத்தின் மூலமாக இத்தாலிக் கம்பெனியான காங்கிரஸுக்கு எதிராக வீரியமாகப் பிரச்சாரம் நடந்து வருகிறது. அது காங்கிரஸிற்கு மறைமுகமாகவும் நேரடியாகவும் பல இடங்களில் பின்னடைவை உண்டாக்கியும் வருகிறது.

இதனைக் கருத்தில் கொண்டு ஏற்கனவே இந்தியாவில் face book இணையதளத்தை தடை செய்ய திட்டமிட்டனர். பின்னர் அதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பும் என்பதாலும் அப்படி ஒரேயடியாகத் தடை செய்து விட முடியாது என்று கருதியும் முகநூல் பக்கங்களை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பலரது முகநூல் பக்கங்கள் அதன் படி செயல்பாடுகள் முடக்கப்படுவதாகவும் தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.

இவை மட்டுமல்லாமல் வீரியமாகச் செயல்படும் பலரது ட்விட்டர் கணக்குகளை கண்காணித்து அவற்றையும் முடக்கி வருகிறது இத்தாலிக் கம்பெணி கங்கிரஸ். இவற்றிற்கெல்லாம் என்ன காரணம்ஏன் இந்தளவிற்கு கருத்துச் சுதந்திரத்தில் தலையிடுகிறார்கள்? பயம்! பயம் மட்டுமே காரணம். 

இத்தாலி சோனியாவின் நிஜப் பெயர் ஆண்டோனியோ மொய்னோ, அவரது செல்லப் புதல்வன் ராகுல் காந்தியின் நிஜப் பெயர் ரவுல் வின்ஸி என்றும் எப்படி பெயரை மாற்றி ஊரை ஏமாற்றுகிறார்கள் என்பது வரை அவர்களது முகமூடியைக் கிழித்து, அவர்களது குடியுரிமை, நிஜமாக என்ன படித்திருக்கிறார்கள் என்று பல விஷயங்கள் இணையத்தின் மூலமாக தோலுரித்துக் காட்டப்படுகிறது. முக்கியமாக இத்தாலி சோனியாவின் செக்யூலரிச, ஹிந்து விரோத அரசை எதிர்க்கும் ஹிந்து சார்பு தளங்கள் இதனை வீரியமாக மக்களிடம் கொண்டு சேர்த்து வருகின்றன. இதனால் எரிச்சலடைந்த இத்தாலிக் கம்பெனி காங்கிரஸ் எப்படியாது காங்கிரஸ் விரோத மற்றும் ஹிந்து சார்பு இணைய தளங்களை வேகவேகமாக முடக்கி வருகிறது.


அவற்றில் முக்கியமாக சமீபத்தில் ஹிந்துஜாக்ருதி அமைப்பின் hindujagruti.org என்ற பிரபலமான இணையதளம் முடக்கப்பட்டுவிட்டது. ஹிந்து ஜாக்ருதி கோவா மற்றும் கர்நாடகத்தில் மிகவும் வீரியமாக செயல்பட்டு வரும் ஹிந்து அமைப்பு. இந்த அமைப்பினர் இத்தாலிச் சோனியாவின் ஹிந்து விரோத செயல்கள், போலி செக்யூலரிசம், ஓட்டு வேட்டைக்காக பங்களாதேஷி முஸ்லீம்களின் ஊடுருவலை அனுமதித்தல், இத்தாலிக் கம்பெனி காங்கிரஸின் ஊழல்கள், கிறிஸ்தவ மதமாற்றம் எப்படி இத்தாலிக் கம்பெனியாரின் ஆதரவுடன் ஜோராகச் செயல்படுகிறது, இஸ்லாமிய தீவிரவாதிகளின் கால்களை எப்படி இத்தாலிக் கம்பெனியான காங்கிரஸ் நக்கி வருகிறது போன்ற பல தகவல்களை மக்களிடம் எடுத்துச் சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அவர்களது சனாதன் ப்ரபாத்தின் தினசரி கார்ட்டூன்கள் மிகவும் ப்ரசித்தம். இத்தாலிக் கம்பெனியான காங்கிரஸுக்கு எதிராக அக்கம்பெனி பற்றிய உண்மைகளை எடுத்துக் கூறி தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவற்றைப் பார்த்து கடுப்பான இத்தாலிப் பெண்மணியும், அவரது கம்பெனியும் ஹிந்து ஜாக்ருதி அமைப்பினர் நடத்தும் ஆஸ்ரமங்களுக்குள்ளும், அதன் பூஜை அரைகளிலும் சோதனை என்கிற பெயரில் பூட்ஸ்கால்களுடன் பலரை நுழைய வைத்து பூஜை அரையிலிருக்கும் இறை உருவங்களை அவமதிக்கச் செய்து அட்டூழியம் செய்தும் வந்ததாகக் கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் இவர்களது அமைப்பையே முழுவதுமாக தடை செய்து அமைப்பை நடத்துபவர்களையும் கைது செய்யும் திட்டமும் வைத்திருந்தது என கூறப்படுகிறது. ஆனால் அவற்றிற்கெல்லாம் பலத்த எதிர்ப்பு உண்டாகும் என கணித்த இத்தாலிக் கம்பெனி ஹிந்துஜாக்ருதி அமைப்பின் இணைய தளத்தை சத்தமில்லாமல் முடக்கி விட்டது.

இத்தனை அடக்குமுறையில் ஈடுபடுமளவுக்கு ஹிந்துஜாக்ருதி அமைப்பினர் செய்தது தான் என்ன? இத்தாலி கம்பெனியான காங்கிரஸின் போலி செக்யூலரிசத்தையும், ஹிந்து விரோதப் போக்கையும் கடுமையாக எதிர்த்தார்கள். இத்தாலிக் கம்பெனியான காங்கிரஸின் ஊழல்களை ப்ரச்சாரம் செய்தார்கள். அதற்கு இத்தனை அடக்குமுறைகளா?

இதனை எதிர்த்து அந்த அமைப்பினர் நடத்திய கூட்டம் பற்றிய விபரம் இதோ!Friday, 24 August 2012
Mumbai : Hindus stage fiery demonstrations against ban on HJS website at Azad Maidan ! 
HJS set to launch nation-wide agitation in New Delhi against ban – Mr. Ramesh Shinde

Mumbai : “The Congress government has banned Hindu Janajagrui Samiti’s website. For this evil act, the Government will have to suffer the curse of the ardent Hindus for sure. The curse will also be instrumental in finishing the Congress party. From ancient times, the Hindus consider going to jail as going to a Holy place and an offence being registered against him as getting an award. 

The Government is under the impression that if Hindu Janajagruti Samiti (HJS) is banned, the Hindu Nation will not come into being. However, the Hindu Nation will be established for sure; because the power of Dharma is greater than that of the Government. The agitation in Azad Maidan is only a beginning. Later, to teach a lesson to the people in the Government in New Delhi, the HJS is going to stage a much greater agitation at Jantar Mantar. Along with this, protest march and agitations will also be launched in the states throughout the country,” warned Mr. Ramesh Shinde, National Spokesperson, HJS to the Government.

More than 350 ardent Hindus participated in the agitation which was held in Azad Maidan, Mumbai by HJS from 2 to 5 p.m. today. Views expressed by some of the respected personalities who participated in the agitation are given here. 
This is the true power of Hindu Dharma !
Mr. Bandal said, “In spite of my mother being in the hospital, I came here as my duty towards Dharma as soon as I learnt about the ban on the website.” The Samiti thanked Mr. Bandal. (We need such ardent Hindus everywhere ! – Editor SP) 

www.HinduJagruti.org


இந்த இத்தாலி கம்பெனியான காங்கிரஸ் குண்டு தயாரிக்கும் மதரஸாக்களை இப்படி சோதனை போடவில்லை. பிரிவினை சிந்தனை ஊட்டி தீவிரவாதிகளை உருவாக்கும் மதமாற்ற கேந்திரமான மிஷனரிகளிடம் எந்த கடுமையும் காட்டுவதில்லை. ஆனால் பாரதத் திருநாட்டின் மண்ணின் மைந்தர்கள் சொந்த பூமியில் நடக்கும் அந்நிய ஆட்சியை எதிர்த்துப் பேசும் போது அவர்களின் குரல்வளைகளை நெரிக்கிறது.

மண்ணின் மைந்தர்களே! கவனியுங்கள்! 

இனியும் இத்தாலிக்கு அடிமைகளாகத்தான் வாழப்போகிறோமா?

இத்தாலிக் கம்பெனியான காங்கிரஸை நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆதரிக்கத்தான் வேண்டுமா?Friday, August 24, 2012

விதுர நீதி - செயல்கள் மூலம் உயர்ந்து நில்!தன் மகன் துரியோதனது நடவடிக்கையினால் வருந்தி கையறுநிலையில் இருக்கும் திருதிராஷ்டிரனிடம் விதுரர் இவ்வாறு கூறுகிறார்.

பிறரால் தக்கப்பட்டுக் காயமடைந்தவனும், தனது நெருங்கிய நண்பனுக்குத் துரோகம் செய்தவனும், தன் சொத்து-சுகத்தையெல்லாம் இழந்தவனும் இரவு நேரத்தில் தூங்க முடியாமல் புலம்பிக்கொண்டே இருப்பார்கள். அது போலவே ஒருவன் தான் அறிந்த உண்மையைத் துணிச்சலாக வெளியிடாவிடில் தன் வாழ்நாள் முழுவதையும் துயருடன் கழிப்பான்.

ஒருவன் தனது வளர்ப்பு பிராணிக்காக பொய் சொன்னால் அவனுடைய முன்னோர்களில் ஐந்து பேர் நரகத்தில் தள்ளப்படுவர். தனது பசுவிற்காகப் பொய் சொன்னால் பத்து முன்னோர்களும், தனது குதிரைக்காகப் பொய் உரைத்தால் நூறு முன்னோர்களும் நரகத்தில் தள்ளப்படுவர். தனக்கு வேண்டிய மனிதனுக்காகப் பொய் கூறினால் அவனையும் சேர்த்து ஆயிரம் முன்னோர்கள் நரகத்தை அடைவார்கள்.

தங்கம் பெறுவதற்காகப் பொய் கூறுபவன், தன் குடும்பத்தினர் அனைவருக்கும், எதிர்காலத்தில் தன் குடும்பத்தில் பிறக்கப் போகிறவர்களுக்கும் அழிவு ஏற்படச் செய்கிறான். நிலம் சம்பந்தமாகப் பொய் கூறுபவன் தன்னிடம் உள்ளவையும் தன்னைச் சார்ந்தவையும் எதுவும் மிஞ்சாமல் அழிந்துவிடும். ஆகவே ஒருபொழுதும் நிலம் பற்றிப் பொய் கூறக்கூடாது.

முதுமைத் தளர்ச்சி நமது அழகையும், ஆசை பொறுமையையும் சீர்குலைக்கும். சாவு உயிர் முச்சை நிறுத்தி விடும். பொறாமை நன்னெறியில் செல்வதைத் தடுக்கும். கோபம் செல்வச் செழிப்பையும், தீயோர் நட்பு நமது நன்னடத்தையையும் பாதிக்கும். காமம் மான-அவமான உணர்வை மரத்துப் போகச் செய்யும். கர்வமோ நம்மிடமுள்ள அனைத்தையும் அழித்தொழித்துவிடும்.

இரவு நேரத்தில் தீகுச்சியைக் கொளுத்தினால் பொருட்கள் கண்ணுக்குத் தெரியும். அதுபோலவே ஒருவன் செய்கின்ற செயல் மூலம் அவன் எவ்வளவு உயர்ந்தவன் என அறியலாம்.

ஆகவே மன்னா, தங்கள் புதல்வர்களை அவர்களின் செயல்களின் மூலம் உயர்ந்தவர்களாக இருக்கச் செய்யுங்கள்!

- மகான் விதுரர்.

Wednesday, August 22, 2012

தோற்கும் அரசும் ஜெயிக்கும் ஜிகாதும்!


எழுத்து: பால. கௌதமன்


நீண்ட இடைவேளைக்குப் பிறகு இந்தியப் பாராளுமன்றம் ஒரே குரலில் ஒலித்தது. ஊடகங்கள் அனைத்துக் கட்சித் தலைவர்களின் வீர உரைகளை எதிரொலித்தது.செய்தித்தாள்களும் பாரத நாடே வடகிழக்கு மாநிலத்தினரை பாதுகாக்க வீதிக்கு வந்துவிட்டது போல் பக்கம் பக்கமாக செய்திகளை வெளியிட்டது.இந்தப் பேரொலி என்ன? இந்த ஒலியின் மதிப்புத்தான் என்ன?

அசாம் மற்றும் பர்மாவில் முஸ்லீம்களுக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல்களை கண்டித்து முஸ்லீம்கள் நாடு முழுக்க நடத்திய போராட்டங்களும், ஒரு உருது தொலைக்காட்சி 'முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறை'என்று ஒரு காட்சிப் படத்தை ஒளிபரப்பியதும், பாரதத்தின் பல பகுதிகளில் முஸ்லீம்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட வன்முறைக்கு முஸ்லீம்கள் பழிவாங்கப் போகிறார்கள் என்று அனுப்பப்பட்ட குறுந்தகவல் (எஸ் எம் எஸ்) செய்திகளும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலத்தவரின் மனதில் பீதியை ஏற்படுத்தியது.இதன் விளைவாக இம்மாநிலங்களைச் சார்ந்தவர்கள் சாரை சாரரயாக தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களை விட்டு வெளியேறி, தத்தம் சொந்த மாநிலங்களுக்குச் சென்றனர்.ஹூப்ளியில் நேபாளத்தைச் சார்ந்த ஒருவர் வடகிழக்கு மாநிலத்தவரின் தோற்றத்தில் இருந்த காரணத்தினால் கத்தியால் குத்தப்பட்டார். மைசூரில் வடகிழக்கு மாநிலங்களைச் சார்ந்தவர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டதாக ஒரு செய்தி வெளியானது. புனேயில் மணிப்பூரைச் சேர்ந்த ஒரு பெண் தாக்கப்பட்டார். இந்தச் சம்பவங்கள் ஒரு இனமே ஒட்டுமொத்தமாக காலி செய்யும் அளவுக்கு கொடூரமானதாக எப்படி எடுத்துக் கொள்ள முடியும்? ஏன் இவர்கள் ஊரை விட்டுக் ஓடினர்? இவர்கள் மனதில் இப்படி ஒரு பீதி ஏற்ப்படக் காரணம் என்ன?

அசாம் மாநில அமைச்சர்கள், மத்திய அமைச்சார்கள், மாநில அமைச்சர்கள், காவல் துறை உயரிய அதிகாரிகள், மூத்த அரசு அதிகாரிகள், போன்றோர் நேரில் சென்று வடகிழக்கு மாநிலத்தவரை பாதுகாப்போம் என்று உறுதிமொழி கூறிய பின்பும் இந்த மாநிலத்தவர்கள் இவர்களது இந்த வாக்கை நம்பவில்லை. இதிலிருந்து இந்த அரசாங்கத்தின் மீது சொந்த நாட்டு மக்களுக்கே நம்பிக்க இல்லை என்பது தெளிவாகிறது. இது வடகிழக்கு மாநிலத்தவரின் தவறா? அல்லது நம்பிக்கை ஏற்படும் வகையில் நடந்து கொள்ளத் தவறிய அரசின் தவறா?அசாம் கலவரம் மற்றும் பர்மாவில் முஸ்லிம்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் ஆகியவற்றை கண்டித்து மும்பையில் உள்ள 'ஆஜாத்' மைதானத்தில் ஒரு கண்டனக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாகிஸ்தான் கொடியை  பறக்க விட்டு, கூட்டத்தினர் வன்முறையில் ஈடுபட்டனர்.கலவரக்காரர்கள் போலீஸ் வாகனங்கள் மற்றும் பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தி அங்கே பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீசாரிடம் தகாத முறையில் நடந்து கொண்டனர். 58 காவலர்கள் காயமடைந்தனர். அது மட்டுமா? அதன் அருகாமையில் இருந்த போர் வீரர்கள்  நினைவுச் சின்னத்தையும் அவர்கள் துவம்சம் செய்தனர். நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசு என்ன செய்தது தெரியுமா?

ஆகஸ்ட் 11ஆம் தேதி நடந்த இந்த வன்முறைக் கலவரத்தில் ஈடுபட்ட முஸ்லீம் கலவரக்காரர்களை ரம்ஜானுக்குப் பின் கைது செய்யலாம் என்று முடிவெடுத்து முஸ்லீம்களுடன் சேர்ந்து வானத்தில் பிறையை எதிர் நோக்கிக் காத்துக்கொண்டிருந்த்து. கிட்டத்தட்ட 25 கலவரக்காரர்களை கைது செய்ய போலீசார் ரம்ஜான் கொண்டாட்டம் முடிவதற்காக கத்துக்கொண்டிருக்கின்றனர் என்ற செய்தியை டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேடு ஆகஸ்ட் 16ஆம் தேதி வெளியிட்டிருந்தது. Times of India News! முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறையைக் கண்டித்து லக்னோவிலும் முஸ்லீம்கள் கலவரத்தில் ஈடுபட்டனர்.

புத்தர் சிலை உடைக்கப்பட்டது. உத்திரப் பிரதேச மாநிலம் பரேலியில், அம்பேத்கார் சிலை உடைக்கப்பட்டது. இச்சம்பவங்களைத் தடுக்கவும் கலவரக்காரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் அரசாங்கம் தவறியது. அம்பேத்கார் 'கார்ட்டூனு'க்காக அலையெனப் பொங்கிய அரசியல் கட்சிகளும் அம்பேத்கார் இயக்கங்களும், பௌத்தமே எங்கள் மதம் என்று சொல்லி பௌத்தத்தை வைத்து ஜாதி அரசியல் செய்யும்அரசியல் கட்சிகளும் அமைப்புக்களும் மௌனிகளாயின.

இந்த இஸ்லாத்தின் இயல்பும், முஸ்லீம்களின் கண்டனக் கலவரங்களை அடக்க தவறிய அரசாங்கத்தின் செயல்படா நிலையும், முஸ்லீம்களால் என்ன வேண்டுமென்றாலும் இந்த நாட்டில் செய்ய முடியும்,அரசாங்கத்தால் அறிக்கை மட்டும் தான் விடமுடியும் என்ற எண்ணத்தை அப்பாவி மக்கள் மனதில் விதைத்து விட்டது. இந்த நாட்டின் பாராளுமன்றம் தாக்கப்பட்டது . அப்சல் குருவிற்கு தூக்கு தண்டனை உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்டது. தூக்குத் தண்டனையை நிறைவேற்றினால் சட்டம் ஒழுங்குப் பிரச்சனை ஏற்ப்படும் என்று டில்லி அரசாங்கம், உள்துறை அமைச்சகத்திற்கும் ஜனாதிபதிக்கும் கடிதம் அனுப்புகிறது.

நம் ஜனநாயகத்தின் உயிர் மூச்சான பாராளுமன்றத்தை தாக்கியவனை தூக்கிலிட்டால் கலகம் வெடிக்கும் என்று இஸ்லாமிய தாக்குதலுக்கு ஆயுதம் தாங்கிய போலீஸ், ராணுவம் போன்றவற்றை வைத்திருக்கும் சர்வ வல்லமை வாய்ந்த அரசாங்கமே அஞ்சி நடுங்கும்போது, அஞ்சுக்கும் பத்துக்கும் பிழைப்பு நடத்தும் நிராயுதபாணியான பொதுமக்கள் எப்படி பயப்படாமல் இருப்பார்கள்?தீவிரவாதத்தையும் பயங்கரவாதத்தையும் இரும்புக் கரம் கொண்டு அடக்க உதவிய போட்டோ (POTO) சட்டம் முஸ்லீம்களின் ஓட்டுக்காக ரத்து செய்யப்பட்டது. முஸ்லீம்களின் ஒட்டு மொத்த ஓட்டிற்காக IMDT என்ற புதிய குடியுரிமைச் சட்டம் இயற்றப்பட்டது. இந்தச் சட்டம் தேசத் துரோகம் என்று உச்ச நீதி மன்றம் பின்னர் தளுபடி செய்தது. உச்ச நீதிமன்றம் விவாகரத்து செய்தால் முஸ்லீம் பெண்ணுக்கு ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கிய உடன் பாராளுமன்றம் முஸ்லீம்கள் ஜீவனாம்சம் கொடுக்க வேண்டாம் என்று சட்டத்திருத்தம் செய்தது.


இப்படி முஸ்லீம்களின் ஓட்டிற்காக தீவிரவாதத்தையும்,பிரிவினை வாதத்தையும், எல்லைகளுக்கு அப்பாற்ப்பட்ட முஸ்லிம் அடையாளத்தை (pan Islamic Identity) வளர்த்து விட்டு இன்று முஸ்லீம்களின் அராஜகத்திற்கு முன்பு அரசு இயந்திரம் தலை குனிந்து நிற்கிறது.அசாமில் கலவரம் தொடங்கியவுடன் மோகன்பூர்,சொனாரிப்பூர்  போன்ற கிராமங்களில் பாகிஸ்தான் கொடியேற்றப் பட்டது. அசாமில் உள்ள பல தலைவர்கள் வங்க தேசத்திலிருந்து படகு மூலமாக நவீன ஆயுதங்கள் வந்திறங்கி உள்ளது என்று தெரிவித்தனர். இதனை மறுத்து, உள்துறைச் செயலர் திரு.ஆர்.கே.சிங்,  இக்கலவரத்தில் அந்நியத் தலையீடு இல்லை என்று ஜூலை 25 ஆம் தேதி பேட்டியளித்தார். Sify News!.

இப்போது வடகிழக்கு மாநிலத்தவர்கள் தென் மாநிலங்களை விட்டு முஸ்லீம்களின் தாக்குதலுக்கு பயந்து ஒட்டு மொத்தமாக வெளியேறத் துவங்கியவுடன் இது அனைத்தும் பாகிஸ்தானின் சதி என்று ஆகஸ்ட்19 அன்று  பேட்டியளித்துள்ளார். உள்துறை செயலரின்  எந்தப் பேட்டியை நாம் நம்புவது?’’இந்தக் கலவரங்களில் அன்னியத்தலையீடு உள்ளது என்று நான் சொல்லிவருவது இப்பொது நிரூபணமாகி விட்ட்து’’ என்று உள்துறை செயலரின் பேட்டியை ஜுலை 19 அன்று மேற்கோள்காட்டினார் அஸ்ஸாம் முதல்வர் திரு.தருண் கோகோய். NDTV News! இக்கலவரங்கள் அனைத்தும் பாகிஸ்தானின் சதி என்றால் அசாமில் முஸ்லீம்கள் தாக்கப்படுகின்றனர்,அவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்று பாகிஸ்தான் கொடியேற்றிய முஸ்லீம்களுக்குப் பரிந்து பேசி உள்துறை அமைச்சரை சந்தித்த எம் பிக்கள் குழுவில் இடம் பெற்ற அனைத்து எம் பிக்களும் பாகிஸ்தான் சதிக்கு உடந்தையானவர்கள் என்று அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உள்துறை அமைச்சகம் தயாரா? அவர்கள் எம்.பி பதவியை பறிக்க அரசு தயாரா ? Hindustan Times! 

இந்த ஊடுறுவிய முஸ்லீம்களுக்காக பரிந்து பேசி ஜூலை 26 ஆம் தேதியில் மாநாடு நடத்திய அரசு சார்பற்ற முஸ்லீம் இயக்கங்களை உள்துறை அமைச்சகம் தடை செய்யுமா? இதன் நிர்வாகிகளைக் கைது செய்யுமா? அது பற்றிய செய்தி!

இது பாகிஸ்தான் சதி என்று தெரிந்த பின்பு இந்த கண்டனக் கூட்டங்களுக்கு அனுமதியளித்த மாநில அரசாங்கங்களும் பாகிஸ்தான் சதிக்கு உடந்தையா?அடுத்த வீட்டு அருணாசலத்தை விட அரபு மத அபூபக்கரே மேல். பக்கத்து ஊர் பத்தமடையை விட பாடர் தாண்டிய பங்களாதேஷே உயர்ந்தது என்ற  எல்லைகளுக்கு அப்பாற்ப்பட்ட முஸ்லிம் அடையாளம்  (pan Islamic Identity)  இப்போது நம் நாட்டின் அரசாங்கத்தை ஒரு கைப்பிடி ஜிகாதிகள் முன்பு பணியவைத்து விட்டது.உலகம் முழுவதும் முஸ்லீம் ஜிகாதிகளால் நடத்தப்படும் வன்முறை வெறியாட்டங்கள், மக்கள் மனதில் ஒரு அச்ச உணர்வையும் ஏற்படுத்தி விட்டது. காவல்துறையும், ராணுவமும், அரசு இயந்திரங்களும் தங்களைப் பாதுகாக்கும் என்ற நம்பிக்கயை நாட்டு மக்கள் இழந்து விட்டனர் என்பதையே இந்த வடகிழக்கு மாநிலத்தவரின் ஒட்டு மொத்த வெளியேற்றம் நமக்கு புலப்படுத்துகிறது.இந்த ஒட்டு மொத்த வடகிழக்கு மாநிலத்தவர்களின் வெளியேற்றம் நம் நாட்டின் இறையான்மைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் விடுக்கப்பட்ட சவால். வங்க தேசத்திலிருந்து இந்தியாவிற்கு ஊடுருவிய முஸ்லீம்களுக்காகவும், பர்மாவில் தாக்கப்படும் முஸ்லீம்களுக்காகவும் பாரத நாட்டவர்கள் ஊரைவிட்டு ஓட வேண்டிய அவலம் ஏற்பட்டுவிட்டது. ’’எங்களால் இந்தியாவை சின்னாப்பின்னம் ஆக்க முடியும்” என்று ஜிகாத் அடிப்படை வாதம் தன்னை பிரகடனப்படுத்திவிட்டது.

இங்கிருந்து வெளியேறுபவர்கள் அசாம் மட்டுமின்றி நாகாலாந்து, மணிப்பூர், மேகாலயா, மிசோரம்,அருனாச்சலப் பிரதேஷ் போன்ற மாநிலத்தவர்கள்.இதில் நாகாலாந்து, மேகாலயா, மிசோரம் போன்ற மாநிலங்களில் இந்தியாவிற்கு எதிராக,  கிறிஸ்தவப் பின்னணியில்,ஆயுதமேந்திய பல தீவிரவாதக் குழுக்கள் இயங்குகின்றன. இந்த சூழ்நிலையை பயன்படுத்திக் கொண்டு ''இந்தியா உன்னைக் காப்பாற்றாது, அதனால் தனி நாடே தீர்வு'' என்ற விஷமப் பிரசாரத்தை வடகிழக்குத் தீவிரவாத அமைப்புக்கள் முடுக்கிவிட இது ஒரு காரணியாகிவிட்டது. பிரிவினைவாதிக்கு ஒரு கல்லில் இரண்டு மாங்காய்!

இனியாவது பிரிவினை வாதத்தையும், பயங்கரவாதத்தையும், எல்லைகளுக்கு அப்பாற்ப்பட்ட முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ அடையாளங்களை   (pan Islamic and Christian Identity)   ஊக்குவிக்கும் காரணிகளைத் தடுத்து நிறுத்தி பிரிவினை வாதத்திலிருந்து இந்த நாட்டை பாதுகாக்க அரசாங்கம் விழித்துக் கொண்டு செயல்படுமா?அல்லது


ஜிகாதிகள் ஜெயிக்க அரசு தொடர்ந்து தோற்குமா?

Friday, August 17, 2012

கீதோபதேசம் - நம்பிக்கையோடு இரு!
ஆன்மீக ஞானத்தால் தீமையிலிருந்து விடுபடும் ரகசியத்தை அர்ஜுனனுக்கு உபதேசிக்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணர்!

பகவான் சொல்கிறார்..

அர்ஜுனா கேள்!

அனுபவத்தோடு கூடிய ஞானமாகிய இந்த மிகப்பெரிய ரகசியத்தை இப்பொழுது உனக்குச் சொல்லுகிறேன். இதைத் தெரிந்து கொள்வதால் நீ தீமையிலிருந்து விடுபடுவாய்.

இந்த ஆன்மீக ஞானம் வித்தைகளுக்கு அரசன். மிகச் சிறந்த ரகசியம். தூய்மை தருவதில் மிகச் சிறந்தது. மறைபொருளில் மேலானது. கண்கூடாக உணர்த்தற்குரியது. தர்மத்தோடு கூடியது. செய்வதற்கு மிகவும் சுலபமானது. அழிவில்லாதது.

பரந்தபா! இந்த ஆன்மீக ஞானத்தில் நம்பிக்கையற்றவர்கள் என்னை அடையாமல், மரணத்தோடு அமைந்த சம்சார வழியிலேயே உழல்கின்றனர்.

அருவம் என் இயல்பு. இந்த இயல்பினால் நான் இந்த உலகம் முழுவதும் நிறைந்திருக்கிறேன். உயிர்கள் அனைத்தும் எனக்குள்ளே வசிக்கின்றன. ஆனால் நான் அவற்றிற்குள்ளே இல்லை.

பொருட்கள் என்னிடம் நிலை கொள்ளவே இல்லை. ஈஸ்வரனுக்குரியதாகிய என்னுடைய யோகத்தைப் பார். உயிர்கள் தோன்றுவதற்கு மூலக்காரணமாக இருந்து அவைகளைக் காக்கவும் செய்கின்ற நான் அவைகளுக்குள் இல்லை.

இடைவிடாமல் எங்கும் அலைந்து திரிகின்ற காற்று விண்வெளியில் நிலை பெற்றிருப்பதைப் போல், உயிர்கள் அனைத்தும் என்னிடம் தங்கி உள்ளன என்று அறிந்து கொள்.

அர்ஜுனா! எல்லா உயிர்களும் பிரளய காலத்தில் எனக்குள்ளே வந்து அடைகின்றன. அடுத்த கல்பத்தின் ஆரம்பத்தில் நான் அவைகளை மறுபடியும் தோற்றுவிக்கிறேன்.

என்னுடைய இயல்பை அருள் உடையதாகச் செய்து கொண்டு சுதந்திரமில்லாத இந்த உயிர்களை எல்லாம் இயற்கையின் வசத்தால் மீண்டும் மீண்டும் படைக்கிறேன்.

தனஞ்ஜெயா! இச்செயல்கள் என்னைக் கட்டுப்படுத்துவதில்லை. ஏனென்றால் நான் அவற்றைப் பொருட்படுத்தாமலும், பற்றற்றும் இருக்கிறேன்.

குந்தியின் மகனே, என் மேற்பார்வையில் இயற்கை அசையும் பொருட்களையும் அசையாப் பொருட்களையும் படைக்கிறது. இதன் காரணத்தால் உலகம் சுழல்கிறது என்பதை அறிவாயாக!

- பகவான் ஸ்ரீ க்ருஷ்ணர்

Monday, August 13, 2012

செக்யூலரிச பீடைகள்!இந்தியாவைப் பிடித்த பீடை இந்த செக்யூலரிசம். திரு எம்.கே.காந்தி துவங்கி வைத்த நாடகம் இது. அரசியல் வாதிகளும் மீடியாக்களும் மாறி மாறி நீரூற்றி வளர்க்கும் விஷச் செடி இந்த செக்யூலரிசம்.

இந்த செக்யூலரிசமும் அதனால் உண்டான செக்யூலரிச மனப்பான்மை என்பதும் அடிக்குருத்தில் வெண்ணீர் ஊற்றி ஆளுயரச் செடியை காயச்செய்யும் கொடூரச் செயல். வேருக்குள் அமிலம் ஊற்றி மரத்தை மெதுவாகப் பட்டுப் போகச் செய்யும் மோசமானக் கொலைச் செயல்.

இந்த செக்யூலரிச மனம் படைத்தவர்கள் எங்கெல்லாம் வியாபித்திருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்வதும் அவர்களை அடையாளம் கண்டு களை பிடுங்க வேண்டியதும் ஆகப் பெரிய வேலையெனத் தோன்றும். ஆனால் வேறு வழியில்லை. செய்து தான் ஆக வேண்டும். அது பாரதத்தின் தலையெழுத்து.

சரி எதற்கு இப்போது இந்த வெறுப்பு என்கிறீர்களா?

இரண்டு பேர் தினசரி அடிக்கும் அரட்டைக் கச்சேரியில் அவ்வப்போது எழும் இந்த செக்யூலரிச மனப்பாங்கு ஒரு உறுத்தலாகவே இருக்கிறது. அதைப் பற்றி கொஞ்சம் பேசலாம் என்று நினைத்ததால் தான் இந்த அங்கலாய்ப்பு.

அரட்டை அடிக்க எல்லோருக்குமே பிடிக்கும்.அதுவும் பிறர் சுவாரஸ்யமாக பேசிக் கொண்டிருந்தால் கண் கொட்டாமல் வாய் பார்த்துக் கொண்டே இருக்க நமக்கு எப்போதுமே பிடிக்கும் தான். ஆனால் அவர்கள் ஹிந்து விரோத தொலைக்காட்சியில் அமர்ந்து கொண்டு செக்யூலரிச மனப்பாங்குடன் தினசரி உளரிக் கொட்டுவது கொஞ்சம் கடுப்படிக்கத்தான் செய்கிறது.

அவர்கள் வேறாருமல்ல. தினசரி காலையில் எட்டு மணி முதல் ஒரு பத்து நிமிஷம் பேசிவிட்டுச் செல்லும் பட்டிமன்ற ராஜாவும், பாரதி பாஸ்கரும் தான். பேசுவது சன் டிவியில்.

பொதுவாக சமூக விஷயங்கள் அல்லது ஏதாவது புதிய செய்தியைக் கொண்டு தான் பேசுவார்கள். சாதாரணமாக நல்ல உரையாடல்களாகவே இருதாலும் சில நேரங்களில் உறுத்தும்.
காரணம் கூர்ந்து கவனித்தால் சில விஷயங்கள் புரியவரும்.

1. இவர்கள் தங்களது பேச்சில் ஹிந்து கடவுளர் அல்லது புராணக் கதைகளிலிருந்து உதாரணங்கள் அல்லது மேற்கோள் காட்டுவதை கவனமாகத் தவிர்ப்பார்கள்.

2. எந்த விஷயம் பற்றிப் பேசினாலும் பெரும்பாலும் பைபிளில் இப்படி ஒரு வசனம் இருக்கிறது என்பார்கள் அல்லது குரானில் இப்படிச் சொல்லப்பட்டிருக்கிறது என்று கூறுவார்கள்.

3. ஹிந்து நம்பிக்கைகளைப் பற்றிய பேச்சு வந்தால் அது மக்களின் அறியாமை சார்ந்தது என்றும் அதீத நம்பிக்கை என்றும் பேசுவதில் உற்சாகம் கொள்வார்கள்.

4. கதைகளுக்கு உதாரணம் வேண்டுமென்றாலும் கூட அரபு நாட்டுக் கதைகள் பற்றிப் பேசுவதில் ஒரு அறிவுஜீவித்தனம் இருப்பதைப் போல காட்டிக் கொள்வார்கள்.

மேற் சொன்ன இவைகள் எல்லாம் நான் சில மாதங்களாகப் பார்க்க நேர்கையில் கவனித்தவை. அதையே வருடக்கணக்காக யாரேனும் பார்த்திருந்தால் வேறு ஏதானும் செய்து சொல்லலாம்.

சரி இப்படி இவர்கள் பேசுவதால் என்ன ஆகி விட்டது என்று நினைக்கலாம். இவ்வாறு பேசுவது தவறில்லை. ஆனால் சொந்த நாட்டின் புராணங்களையும் பாரம்பரியக் கதைகளையும் இவர்கள் வேண்டுமென்றே ஒதுக்கி வைத்து பைபிள் வசனங்களையும், குரான் மேற்கொள்களையும் வலியத் திணித்து அவ்வாறு பேசுவது ஒரு வித அறிவுஜீவித்தனம் என்றும் காட்ட நினைக்கிறார்கள். இது ஒரு தவறான போக்கு.

ஒரு உதாரணத்திற்குச் சொல்கிறேன். ஒரு நிகழ்ச்சியில் குழந்தைகளின் முக்கியத்துவம் பற்றிப் பேச்சு வருகையில் பாரதி பாஸ்கர் உடனே "பைபிளில் கூட, 'குழந்தைகள் என்னிடம் வருவதைத் தடுக்காதீர்கள். நான் அவர்களுக்கு பிரியமானவனாக இருக்கிறேன்', என்று ஏசு சொல்வதாக வசனம் இருக்கிறது" என்று சிலாகித்துக் கொண்டார்.

ஆனால் அவருக்கு இறைவனையே குழந்தையாகக் கொஞ்சும் நம் புராணக் கதைகளைப் பற்றி சொல்லத் தோன்றவில்லை. ஸ்ரீ க்ருஷ்ணரை குழந்தையாக்கி வீடு தோறும் அவரவர் வீட்டுக் குழந்தைகளையெல்லாம் க்ருஷ்ணராகவே பாவித்து மகிழும் நம் பாரம்பரியத்தைப் பற்றிப் பேசத் தோன்றவில்லை. அல்லது கவனமாகத் தவிர்க்கிறார்.

இது செக்யூலரிச முகமூடியா? அல்லது ஹிந்து சாமிகளை பற்றி பேசிவிட்டால் மூட நம்பிக்கை என்ற நினைப்பா? அல்லது பைபிள் குரான் பற்றிய மேற்கோள்களுடன் பேசுவது தான் அறிவு ஜீவித்தனம் என்று காட்ட நினைக்கிறார்களா? அல்லது இவர்களை ஒளிபரப்பும் டிவி சேனல் அவ்வாறு கவனமாகப் பேசச் சொல்கிறதா?

இன்னொன்று, ஒரு நிகழ்ச்சியில் வழிவழியாக மக்களிடம் புழங்கும் கதைகள் பற்றி பேசினார்கள். சரி, நம்மூரில் தான் அம்புலி மாமா, தெனாலிராமன், மரியாதை ராமன், விக்ரமாதித்தன் கதைகளெல்லாம் நிறைய இருக்கிறதே, அது பற்றி பேசுவார்கள் என்று பார்த்தால் உடனே அரபு நாட்டு 'ஆயிரத்தி ஓரு இரவுகள்' கதைக்குள்ளே போய் நம்மை அரபுக்கு அழைத்துச் சென்று விட்டனர் இருவரும். அலிபாபாவும் நாற்பது திருடர்களும், பின்னர் வேறு கதைகளைப் பற்றிப் பேசியும் சிலாகித்து விட்டுப் பின் நேரம் முடியும் தருவாயில் நம்மூரில் கூட தெனாலிராமன், மரியாதைராமன் போன்ற கதைகளெல்லாம் இருக்கிறதே என்று ஒரு வரியில் பேசி முடித்து விட்டார்கள்.

இதில் எனக்கு என்ன வருத்தமென்றால் மரியாதை ராமன் கதைகளும் தெனாலி ராமன் கதைகளுமே இக்காலத்தில் நம் பிள்ளைகளுக்குத் தெரியவில்லை. வீடியோ கேம் கதாபாத்திரத்தை ஞாபகமாகக் கூறும் குழந்தைகளுக்கு தெனாலிராமன் தெரிவதில்லை. அது போன்ற கதைகளைப் பற்றி பேசி நம் மக்களுக்கு அதன் மீது ஆர்வம் உண்டாகும் படிச் செய்யாமல் அரபுநாட்டுக் கதைகளுக்குச் சென்று விட்டார்களே என்று தோன்றியது.

இத்தனைக்கும் ஒரு விஷயத்தை எப்படியெல்லாம் அலசி ஆராய்ந்து நடுநிலையாக முடிவெடுக்க வேண்டும் என்கிற அறிவைச் சொல்லித் தருவது மரியாதை ராமன் கதை. இக்கட்டான சூழலில் எப்படி சமையோசிதமாகச் சமாளிப்பது எனச் சொல்லித் தருவது தெனாலி ராமன் கதை. இவைகளைப் பற்றிப் பேச பாரதி பாஸ்கருக்கும் ராஜாவுக்கும் நேரம் கிடைக்கவில்லை.

அது மட்டுமா, ஒரு நாள் "நாய்ஸ் பொல்யூஷன்" பற்றிப் பேசினார்கள். நகரங்களில் எப்படியெல்லலம் சப்தம் அதிகரித்திருக்கிறது என்று பேசிக்கொண்டார்கள். நான் நினைத்தது போலவே மறக்காமல் மாரியம்மன் கோவில் திருவிழா பற்றிப் பேச்சு வந்தது. அப்போது பாரதி பாஸ்கர் "அம்மன் கோவில் திருவிழா வந்தா போதும், தெருவில் இந்த மைக் செட் வைத்து கத்த விடுவார்களே, அப்பப்பா" என்று கண்ணத்தைப் பிடித்துக் கொண்டு கரித்துக் கொட்டினார்.

நான் தெரியாமல் தான் கேட்கிறேன், மாரியம்மன் கோவில் திருவிழாவோ அல்லது விநாயகர் சதுர்த்தியோ எதுவும் வருடம் ஒரு முறை சில நாட்கள் சப்தமிட்டு ஓய்ந்து போகும். ஆனால் நாள் தவறாமல் தினசரி ஐந்து வேளை தங்கள் கட்டிடத்தைத் தாண்டி இரண்டு மூன்று தெருவிற்கு கேட்குமளவுக்கு மைக் செட் வைத்து "அல்லா ஹு அக்பர் அல்லாஆஆஆஆஆஆஆஅஹ்ஹ்ஹ்ஹ்" என்று தொடர்ந்து கத்துகிறார்களே இது "நாய்ஸ் பொல்யூஷனில் அடங்காதா? அது பற்றி பேசவேண்டும் என்று பாரதி பாஸ்கருக்கோ ராஜாவுக்கோ ஏன் தோன்றவில்லை? 365 நாளில் பத்து நாள் அம்மன் கோவிலில் பாட்டு வைப்பது இவர்களுக்கு "நாய்ஸ் பொல்யூஷனாம்" , 365 நாட்களும் ஐந்து வேளையும் கத்தவிடும் மசூதிகளின் ஒலிபெருக்கிச் சத்தம் இவர்களின் காதுகளுக்கு தேனாம்!

என்ன ஒரு செக்யூலரிச மாயை, ஹிந்து விரோதம் மனப்பான்மை!

அதோடு விடுகிறார்களா என்றால் அதுவும் இல்லை. இன்றைய நிகழ்ச்சியில் கோவில்களில் மக்கள் அறியாமையோடு சாமி கும்பிடுகிறார்கள் என்று கோவில்களில் சாமி கும்பிடும் பழக்கத்தை ஒரு பத்து நிமிடம் நையாண்டி செய்தார்களே பார்க்கலாம்.

"மக்கள் எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்று பல பரிகாரக் கோவில்களுக்குப் போய் அந்தக் கோவிலின் மூலக் கடவுளை விட்டு விட்டு நவக்கிரகங்களையும் பரிகாரக் கடவுளையும் கும்பிடுகிறார்கள். மக்களின் அறியாமை, பாவம்" என்றெல்லாம் அங்கலாய்த்துக் கொண்டிருந்தார் பாரதி பாஸ்கர்.

ஏன், இவர்களுக்கு அறியாமை கொண்ட கிறிஸ்தவ மக்கள் பற்றி அங்கலாய்க்கத் தெரியவில்லை. ஜபம் செய்தால் கண் வந்துவிட்டது என்றும், கர்த்தரைக் கூப்பிட்டவுடன் காது கேட்டு விட்டது என்றும் கூவிக்கூவி ஜப வியாபாரம் செய்பவர்களிடம் ஏமாந்து நிற்கும் அப்பாவிகள் பற்றியும் அப்படி அறியாமை கொண்டவர்களை ஏமாற்றுபவர்கள் பற்றியும் ஏன் பேசத்தெரியவில்லை?

எல்லாம் செக்யூலரிச மாயை. அவர்கள் அமர்ந்திருக்கும் டிவி சேனலில் லீலை.

ஹிந்து புராணங்களை கவனமாக ஒதுக்கி, பைபிள் குரானைப் பற்றி பேசுவதை அறிவு ஜீவித்தனம் என்ற தோற்றத்தை முன்னிருத்தி, ஹிந்து சம்பிரதாயங்களை எள்ளி நகையாடிப் பேசுவதை ஒரு சிந்தனை என்றும் காட்டிக் கொள்கிறார்கள்.

இவர்கள்...

செக்யூலரிசப் பீடைகள்.

Sunday, August 5, 2012

விவேகானந்தரின் பொன் மொழிகள்!
சமயசாதனையின் நுட்ப ரகசியமெல்லாம் கொள்கைகளில் இல்லை. அதை அனுஷ்டிப்பதில் தான் அடங்கியிருக்கிறது. நல்லவனாகவே இருந்து நன்மை செய்வது தான் சமயசாதனையின் முழு உண்மையாகும். 'கடவுளே! கடவுளே!' என்று அழைத்துக் கொண்டிருப்பவன் சமயச் சான்றோன் ஆகிவிடமாட்டான். இறைவனின் விருப்பத்தை நிறைவேற்றுகிறவனே சான்றோன் ஆகிறான்.

ஆன்மிக வாழ்க்கைக்கோ மனதுக்கோ உடலுக்கோ பலவீனத்தை உண்டு பண்ணும் எதையும் உன் கைவிரலாலும் தீண்டாதே. மனிதனிடம் இயற்கையாகப் புதைந்திருக்கும் ஆற்றலை வெளிப்படுத்துவதே சமய வாழ்க்கையாகும்.

லௌகீக உலகம் பற்றிய சக்தியின் மையமாக ஐரோப்பா இருக்கிறது. அது தன்னுடைய இந்த நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும். ஆன்மீகத்தை அடிப்படையாகக் கொண்ட வாழ்க்கையாக அது தன்னை மாற்றி அமைத்துக் கொள்ளாவிட்டால், இன்னும் ஐம்பதே ஆண்டுகளில் நொறுங்கி அழிந்துவிடும். ஐரோப்பாவை இத்தகைய அழிவிலிருந்து காப்பாற்றக் கூடியவை உபநிஷத உண்மைகளே ஆகும்.

ஒழுக்கம் உள்ளவனாக இரு. தைரியம் உள்ளவனாக இரு. இதயபூர்வமான, உறுதி பிறழாத ஒழுக்கத்தில் நிலை பெற்றிரு. 

கோழைதான் பாவம் செய்கிறான். தைரியசாலி ஒரு போதும் பாவம் செய்வதில்லை. மனதால் கூட அவன் பாவத்தை நினைப்பதில்லை. 

சுயநலமே ஒழுக்கக் கேடு. சுயநலமின்மையே நல்லொழுக்கம். இது தான் ஒழுக்கத்திற்கு நாம் கொடுக்ககூடிய ஒரே இலக்கணம் ஆகும்.

- ஸ்வாமி விவேகானந்தர்

Saturday, August 4, 2012

மடிந்த உயிர்களும் மறைந்த உண்மைகளும் !

எழுத்து:  பால. கௌதமன்

கலவரங்ளை திட்டமிட்ட கலவரம், திடீர் கலவரம் என்று இரண்டு வகையாகப் பிரிக்கலாம். இதில் திட்டமிட்ட கலவரம் லாப நோக்கத்தோடு திட்டமிட்ட ரீதியில் நடத்தப்படும். இதில் அடைய வேண்டிய இலக்குகள் சரியாக நிர்ணயிக்கப்பட்டு, மிகச் சாதூர்யமாக காய்கள் நகர்த்தப்படும். கலவரம் எதற்கு நடந்தது என்று தெரியாமல் மக்கள் ஈடுபடுவர். தடுக்க வேண்டியவர்கள், லாபம் வரும் வரை காத்திருந்துவிட்டு, தடுக்கும் நடவடிக்கைகளில் இறங்குவர். இப்படிப்பட்ட திட்டமிட்ட கலவரம் சமீபத்தில் ஜூலை மாதம் 2012 ல் அஸ்ஸாம் மாநிலத்தில் நிகழ்ந்தது.


ஜூலை 19 அன்று கொக்ரஜார் மாவட்டத்தில் சில போடோ இன மக்கள் வசிக்கும் வீடுகள் மீது, ஊடுறுவிய பங்ளாதேசிகள் கல்வீசித் தாக்கியுள்ளனர். இத்தாக்குதலை விசாரிக்க, சரணடைந்த நான்கு போடோ தீவிரவாதிகள் ஜூலை 20 அன்று அவ்வீடுகளுக்குச் சென்றுள்ளனர். அவர்களை ஊடுறுவிய வங்க தேசத்தினர் கொன்றனர். இதுதான் கலவரத்தின் ஆரம்பம். இக்கலவரம் ஜூலை 27 வரை 400 கிராமங்களுக்குப் பரவி 59 உயிர்களை குடித்துள்ளது. 4 லட்சம் மக்கள் அகதிகளாகி 270 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இது செய்தி. இச்செய்தி சில கேள்விகளை எழுப்பியுள்ளது.

இந்தக்கலவரத்தில் யார் லாபமடைந்தார்கள்?

எப்படி லாபமடைந்தார்கள்? இதன் பின்னணி என்ன?

அன்னிய ஊடுறுவல்

பாரதத் திருநாட்டின் வடகிழக்கில் அமைந்துள்ள இயற்கை எழில் கொஞ்சும் மாநிலம் அஸ்ஸாம். பிரம்மபுத்திரா மற்றும் அதன் கிளை நதிகள் பாய்ந்து வண்டல் பரப்ப,அமுதசுரபியாக விளங்கும் இம்மாநிலம், பல பழங்குடிகளின் இருப்பிடமாகும். 1901 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 84.55% அஸ்ஸாமியர்கள் ஹிந்து/பாரம்பரிய மலைவாழ் சமய நம்பிக்கை உடையவர்களாக இருந்துள்ளனர். 2001 ஆம் ஆண்டு கணக்கெடுப்பன்படி இவர்கள் 65.4% ஆக குறைந்து, 1901 ல் 15% ஆக இருந்த முஸ்லீம்கள் 2001 ல் 31% ஆக உயர்ந்து விட்டனர். எப்படி இந்த மாற்றம் நிகழ்ந்த்து?


அஸ்ஸாம் மாநிலம், வங்க தேசத்தை எல்லையாகக் கொண்டுள்ளது. வங்தேசத்திலிருந்து முஸ்லீம்கள் ஊடுறுவி அஸ்ஸாமில் குடி அமர்கின்றனர். தடுக்க வேண்டிய மத்திய,மாநில அரசுகள் முஸ்லீம்களின் ஒட்டு மொத்த ஓட்டுக்காக, இந்த தேச ஆக்கிரமிப்புச் செயலுக்கு தூபம் போடுகின்றன. இந்த ஊடுறுவலால் பாதிக்கப்படும் பல பழங்குடி இனம்களில் ஒன்று போடோ பழங்குடிகள். 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி,Tibeto-Burman பிரிவை சார்ந்த போடோ மொழியை தாய் மொழியாக்க் கொண்ட இனத்தவர்கள் சுமார் 13 லட்சம். இவர்கள் கோக்ராஜார், பஸ்கா, சிராங், உடல்குரி மாவட்டங்களின் பூர்வ குடிகள். இந்த ஊடுறுவலால் இந்த பூர்வ குடிகளின் வாழ்வாதாரங்கள் பறிக்கப்பட்டு, அவர்களின் பண்பாடு, மொழி மற்றும் பாரம்பரியம் அழியும் நிலை ஏர்ப்பட்டு விட்ட்து.

போடோ புரட்சி  மற்றோர் தேசிய அபாயம்

வங்கதேச ஊடுறுவல் கட்டுக்கடங்காமல் போவதும், அடிப்படை வசதிகள் வேலை வாய்ப்பு போன்றவற்றை ஊடுருவும் வங்கதேசத்தினர் தட்டிப் பரிப்பது போடோ இன மக்கள் மனதில் கடும் கோபத்தை ஏற்படுத்தியது. சொந்த மண்ணில் இரண்டாம் தரக் குடிமகனாக மாற்றப்பட்ட நிலையில், போராடுவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலைக்கு வந்துவிட்டனர் போடோக்கள். இதை வாய்ப்பாக பயன் படுத்தி, இவர்களின் போராட்டத்தை பாரதத்திற்கு எதிராகத் திருப்ப, இவ்வின மக்களை ஆயுதப் புரட்சியில் ஈடுபடுத்தி ஐரோப்பிய- அமெரிக்க ஆதரவு பெற்ற கிறிஸ்தவ மிஷனரிகள் வெற்றி கண்டனர். இதன் விளைவாக, போடோ இனமக்கள் கிறிஸ்தவர்களாக மதமாற்றம் செய்யப்பட்டனர். 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பன்படி, 9.4% போடோக்கள் கிறிஸ்தவர்கள். சலுகைக்காக பலர் தங்களை கிறிஸ்தவர்கள் என்று பதிவு செய்யாமல்,ஹிந்து என்று பதிவு செய்கின்றனர் அதனால் கிறிஸ்தவ மக்கள் தொகை 15% இருக்கும் என்று சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இந்த போடோ புரட்சி அமைப்பில் ஒன்று National Democratic Front of Bodoland. இது கிறிஸ்தவ ஆதிக்கம் மிகுந்த அமைப்பு. அது மட்டுமல்லாமல் உல்பா (ULFA) போன்ற பிரிவினைவாத அமைப்புடன் தொடர்புடையது. இந்த அமைப்பு, போடோ பகுதிகளை பாரதத்திலிருந்து பிரித்து தனி நாடு அமைக்க வேண்டும் என்ற கோரிகையை முன் வைத்து, பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் தடை செய்யப்பட்ட ஒரு நாசகார அமைப்பு.

2003 ஆம் ஆண்டு, 3082 கிராமங்களை உள்ளடக்கிய போடோ டெரிடோரியல் கவுன்சில் (Bodo Teritorial Council) என்ற சுய ஆட்சி பகுதி அடல்பிஹாரி வாஜ்பாய் அவர்களின் ஆட்சியில் ஏற்ப்படுத்தப்பட்டது. போடோ லிபரேஷன் டைகர்ஸ் (Bodo Liberation Tigers) என்ற ஆயுதம் தாங்கிய அமைப்பினர் சுமார் 2500 பேர் அரசிடம் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு, ஜனநாயகப் பாதைக்குத் திரும்பினர். இதில் பெரும்பாலானோர் மத்திய ரிசர்வ் காவல் படையில் (CRPF) வேலையில் அமர்த்தப்பட்டனர். ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு ஜனநாயக வழிக்கு வரமாட்டோம் என்று சொல்லி, இன்றும் நம் நாட்டிற்க்கு எதிராக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது National Democratic Front of Bodoland என்ற கிறிஸ்தவ ஆதரவு அமைப்பு.

போடோ மொழிக்கென்று தனி எழுத்துக்கள் இல்லாத காரணத்தால் அவர்கள் பெங்காலி எழுத்துக்களையும், தேவநாகரி எழுத்துக்களையும் பயன்படுத்துகின்றனர். இந்த இந்திய மொழித் தொடர்பை துண்டிக்க, கிறிஸ்தவ மிஷனரிகள், இலத்தீன் எழுத்தை பயன்படுத்தும் முறையை அறிமுகப் படுத்தி வருகின்றனர். இப்படி, போடோக்களை தேசிய நீரோட்ட்த்திலிருந்து பிரிக்கும் நடவடிக்கைகள் ஒரு புறம் நடந்து வருகிறது.


ஓட்டு வங்கி அரசியல் அபாயம்

1947-ல் பாரதம் விடுதலை அடைந்த பின்னர் தான், வட கிழக்கு மாநிலங்களில் கல்வி பரவலாக்கப்பட்டது. இதன் விளைவாக, வெளி மாநிலத்தவர்கள் உள்ளூர் மக்களின் நிலங்களையும், சலுகைகளையும் அபகரிக்கிறார்கள் என்று உணர ஆரம்பத்தினர். அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர். இந்நிலையில் பலத்த எதிர்பார்ப்புடன் சுதந்திர பாரதத்தில் ஆட்சியை தொடங்கிய காங்கிரஸால், மக்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியவில்லை. வறுமை, வேலையில்லா திண்டாட்டம், ஊழல்,தவறான அரசியல் கொள்கை என்று பலதுறைகளில் தோல்வி அடைந்ததால், மக்கள் செல்வாக்கு சரியத் தொடங்கியது. இந்நிலையில், அக்கட்சி பதவியை பாதுகாக்க ஓட்டு வங்கி அரசியலில் இறங்கியது.  பாரதம் துண்டாடப்பட்டு பாகிஸ்தான் உருவாக முஸ்லீம்கள், மத ரீதியாக ஒன்றுபட்டு ஓர் அரசியல் சக்தியாகத் தங்களை வெளிக்காட்டினார்கள். இந்த மத ஓட்டு வங்கியை பயன்படுத்தி தன் சரியும் செல்வாக்கை ஈடுகட்ட காங்கிரஸ் முடிவு செய்தது. ஓட்டுக்காக தேசத்தின் நலனை அடகு வைக்க காங்கிரஸ் வங்கதேச முஸ்லீம்களை குடியமர்த்த ஏதுவாக Illegal Migrants(Determination by Tribunal) (IMDT) என்ற சட்டத்தை 1983 ல்அஸ்ஸாம் மாநிலத்திற்கு மட்டும் பொருந்தும் படியாக கொண்டு வந்தது.

இந்தச் சட்டம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, சட்டமாக்கப்படும் போது அஸ்ஸாமிலிருந்து ஓர் உறுப்பனர் கூட நாடளுமன்றத்தில் இல்லை என்பது குறிப்பிடதக்கது. 1983 முதல் 2005 வரை பல லட்சம் வங்கதேச முஸ்லீம்கள், இந்தியக் குடிமகன்களாக நம் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர். இந்தச் சட்ட்த்தை பயன்படுத்தி குடியேறிய வங்கதேச முஸ்லீம்கள் அஸ்ஸாமின் பண்பாடு, மொழி போன்றவற்றை அழித்துவிட்டனர் என்று சுட்டிக் காட்டி இச்சட்டத்தை உச்சநீதி மன்றம் 2005-ல் ரத்து செய்தது. இந்தச் சட்ட்த்தின் வாயிலாக அன்னியப் படையெடுப்பு மற்றும் உள்நாட்டு கலகங்களிலிருந்து மாநிலங்களை பாதுகாக்க வேண்டிய அரசியல் சாஸனம் 355 குறிப்பட்டுள்ள கடமையை மத்திய அரசு நிறைவேற்ற தவறிவிட்டது என்று இந்தச் சட்ட்த்தை ஒரு தேசத் துரோகச் சட்டமாக அறிவித்தது நம் உச்ச நீதிமன்றம்.

இந்தச் சட்டத்தை ரத்து செய்ய கோரிய வழக்கில் கூட அரசியல் விளையாடியிருக்கிறது. 1999ல் அஸ்ஸாம் அரசு இந்தச் சட்ட்த்தை ரத்து செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தில்Affidavit தாக்கல் செய்தது. மத்தியில் ஆண்ட வாஜ்பாய் அரசும் அவ்வண்ணமே Affidavitதாக்கல் செய்தது. 2001 ல் அஸ்ஸாமில் நடைபெற்றத் தேர்தலில், ஊடுறுவிய அன்னிய முஸ்லீம்களின் ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியவுடன், இந்த IMDT என்ற தேச விரோதச் சட்டம் தொடரவேண்டும் என்று திருத்தப்பட்ட Affidavit  ஐ முந்தைய 1999Affidavit ஐ, பின்வாங்கிவிட்டு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்தச் சட்டம் உச்சநீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டவுடன், இது போன்ற மாற்றுச்சட்டத்தை கொண்டுவருவோம் என்று சொன்னார் அஸ்ஸாமின் காங்கிரஸ் முதல் அமைச்சர்.


இந்தச் சட்டம் தேச விரோதம், அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு புறம்பானது என்று தெரிந்தே தான் இச்சட்டம் கொண்டு வரப்பட்டது. 2004 வாஜ்பாய் ஆட்சி முடிவுக்கு வந்து,2005 ல் உச்சநீதிமன்றம்  சட்டத்தை ரத்து செய்த குறுகிய ஓராண்டு காலத்திற்குள் அஸ்ஸாமின் வாக்காளர் எண்ணிக்கை 15.1% ஆக உயர்ந்தது. அஸ்ஸாமிலுள்ள அனைத்து ஜீவராசிகளும் 18 ஆண்டுகளுக்கு முன் குட்டி போட்டால் கூட 15.1% உயர்வு இருக்குமா என்பது சந்தேகமே! இப்படி, எதைப் பற்றியும் கவலைப்படாமல் ஓட்டுக்காக அன்னிய நாட்டவரை குடியமர்த்திய தேசத் துரோகம் காங்கிரஸ்ஸால் நிகழ்த்தப்பட்டது.

இப்படி அஸ்ஸாம் அரசியலின் இந்த மூன்று கதாநாயகர்களான வெளிநாட்டு முஸ்லீம்கள், பிரிவினையைத் தூண்டி மதமாற்றம் செய்யும் கிறிஸ்தவர்கள், ஓட்டு அரசியல் நடத்தும் அரசியல்வாதிகள் இந்தக் கலவரத்தால் எப்படி பயனடைவார்கள்?எப்படி காய் நகர்த்துகின்றனர்?

குடியுரிமை பெறப்போகும் லட்சக்கணக்கான வங்கதேச முஸ்லீம்கள்

இந்தக் கலவரத்தில் அகதிகளாக்கப்பட்ட 4 லட்சம் பேரில் 2.5 லட்சம் முஸ்லீம்கள். இந்த 2.5 லட்சம் முஸ்லீம்களும் சட்ட விரோதமாக நம் நாட்டிற்குள் ஊடுறுவியவர்கள். இவர்கள் அனைவரும் இப்போது இந்தியக் குடிமக்களாகப் போகிறார்கள். இவர்கள் யார் என்று யாரும் இப்போது கேள்வி கேட்கப் போவதில்லை. இதற்கான அடித்தளம் இப்போது அமைக்கப்பட்டுவிட்டது. அப்பாவி முஸ்லீம்கள் கொல்லப்படுகிறார்கள். அவர்களை மாநில அரசால் காப்பாற்ற முடியாது. எங்களுக்கு மாநில அரசின் மீது நம்பக்கை இல்லை என்று காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் திரு.ரஹுமான் கான் தலைமையில் பல கட்சிகளை சார்ந்த முஸ்லீம் எம்.பிக்கள் குழு உள்துறை அமைச்சர் திரு.ப.சிதம்பரத்தை சந்தித்து ஜூலை 26 அன்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். அது மட்டுமின்றி ஒரு முஸ்லீம் குழு அஸ்ஸாம் செல்ல வேண்டுமாம்!


இதே ஜூலை 26 அன்று மும்பையில் முஸ்லீம்களின் அரசு சாரா நிறுவனங்களின் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் அனைத்து இந்திய உலோமா கவுன்சில், மர்கசுல் மாஆரிப் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம், மும்பை அமான் கமிட்டி,  கைர்-இ-உம்மத் அறக்கட்டளை, மூவ்மண்ட் ஃபார் ஹுமன் வெல்பெர் போன்ற அமைப்பின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு திட்டமிட்ட முறையில் அஸ்ஸாமில் முஸ்லீம்கள் இன அழிப்பு செய்யப்படுகிறார்கள் என்றும், வெளியேற்றப்பட்ட முஸ்லீம்கள் அதே கிராமங்களில் குடியமர்த்தப்பட வேண்டும் என்றும், ஊடுறுவிய முஸ்லீம்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என்றும் அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்தக் கலவரத்தில் நவீன ரகத் துப்பாக்கி போன்ற ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவைகள் வங்கதேசத்திலிருந்து படகுகள் மூலம் அஸ்ஸாமுக்குள் எடுத்துவரப்பட்டதாக போடோ தலைவர்கள் பத்திரிகைகளில் செய்தி வெளியிட்டிருந்தனர். இதை உல்பா அமைப்பைச் சேர்ந்தவர்களும் உறுதி செய்தனர். ஆனால் இந்திய உள்துறை செயலாளர் திரு.ஆர்.கே.சிங் ஜூலை 25 அன்று இந்தக் கலவரத்தில் எந்த அன்னியத் தலையீடும் இல்லை என்றும், சர்வதேச எல்லை சீல் வைக்கப்பட்டுள்ளதால் யாராலும் அஸ்ஸமிற்குள் நுழைய முடியாது என்றும் தெரிவித்தார்.

இந்தப் பேட்டிகளும், கோரிக்கைகளும் தில்லியிலும், மும்பையிலும் அரங்கேரும்போது,கலவர பூமியான அஸ்ஸாம் மோகன்பூர் மற்றும் ஸோனாரிப்பூரில் பாகிஸ்தான் கொடி பரப்பதை டைம்ஸ் நௌ (Times Now) என்ற ஆங்கிலச் செய்தி ஊடகம் ஒளிபரப்பியது. கலவரத்தில் பாதிக்கப்பட்ட அப்பாவி இந்திய முஸ்லீம்கள் ஏன் பாகிஸ்தான் கொடி ஏற்றவேண்டும்? பாகிஸ்தான் அன்னிய நாடில்லையா? இந்த பாகிஸ்தான் ஆதரவு சதியர்கள் தான் அப்பாவி முஸ்லீம்களா? இந்த வெளிநாட்டவரை காப்பாற்றி, இந்திய வம்சாவளி போடோக்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைப்பது இந்திய நாடாளுமன்ற முஸ்லீம் உறுப்பினர்கள். இவர்களுக்கு குடியுரிமை கொடுக்க வேண்டும் என்கிறார்கள் முஸ்லீம் அரசு சாரா அமைப்புகள்.வெளி நாட்டு தலையிடு இல்லை என்கிறார் உள்துறைச் செயலாளர். அப்படியாக முழு பூசணிக்காய் சோற்றில் மறைக்கப்பட்டு, தீவிரவாத வெளிநாட்டு கும்பல் அகதி வேஷம் போட்டு, அனுதாபங்களை சம்பாதித்து குடியுரிமை பெறவும் போகிறது. ஜூலை 29 அன்று அஸ்ஸாம் சென்ற பிரதமர் மன்மோகன் சிங், 300 கோடி ரூபாய் நிவாரணமும், பாதிக்கப்பட்டவர்கள் குடி அமர்த்தப்படுவார்கள் என்று அறிவித்தும் விட்டார்.


ராணுவத்தை அவமதித்த முதல்வர்

கலவரத்தை அடக்க துரித நடவடிக்கை எடுக்க முதல்வர் தருண் கோகாய் தவறினார் என்ற புகார் வந்ததும், முதல்வர் பழியை ராணுவத்தின் மீது திருப்பிவிட்டார். நான் ராணுவத்தை அழைத்தேன் அவர்களோ, தில்லியிலிருந்து உத்திரவு வந்தால் தான் வருவோம் என்று கூறிவிட்டனர். அதனால் கால தாமதம் ஏற்பட்டது. ராணுவம் சரியான நேரத்தில் வந்திருந்தால், கலவரத்தை அதிகம் பரவவிடாமல் கட்டுக்கு கொண்டு வந்திருக்கலாம் என்கிறார் முதல்வர். இது உண்மையா பொய்யா என்பது ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம். இவர் அழைத்து ராணுவம் வரவில்லை என்று பழிபோடுகிறாரே,அப்படி என்றால் ஊடுறுவும் வங்கதேசத்தினர் ஆபத்தானவர்கள் என்று ராணுவம் கருதுகிறது என்று தானே பொருள்? தருண் கோகாய் பொய் சொல்கிறார் என்றால், இந்திய ராணுவத்தின் மீது முஸ்லீம்களுக்கிருக்கும் வெறுப்பை மேலும் வளர்க்கிறார் என்று தானே அர்த்தம்?


எந்த இனம் அழியப் போகிறது?

வங்கதேச அன்னிய முஸ்லீம்கள், இப்போது அனாதைகள் என்ற போர்வையிக் குடியமர்த்தப்படுவார்கள். கலவரத்தால் பாதிக்கப்பட்ட போடோக்களோ அக்கிரமக்காரர்களாக இனம்காட்டப்படுவார்கள். அகதிகள் முகாமிலிருக்கும் 1.5 லட்சம் போடோக்கள் அனாதையாகவே இருப்பர். போடோக்கள் மீது வழக்கு தொடரப்படும். அன்னிய முஸ்லீம்களின் ஜனத்தொகை பெருகும். போடோக்கள் வாய்ப்பு இழப்பர். போடோக்களின் அவல நிலையை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு கிறிஸ்தவர்கள் போடோக்களை மதமாற்றம் செய்து இந்தியாவுக்கு எதிராகப் போரிடச் செய்வர். அரசியல் கட்சிகளோ, ஒட்டு மொத்த ஓட்டுக்காக, மைனாரிட்டி என்ற பெயரில் முஸ்லீம்களையும்,கிறிஸ்தவர்களையும் தாஜா செய்து தேசிய நலனை பணயம் வைத்து ஆட்சிக் கட்டியலில் அமர்ந்து கொள்ளும். பாவம் மண்ணின் மைந்தன் மண்ணை இழப்பான். அன்னிய சதிகார்ர்கள் ஆளுமை செலுத்துவர். அப்படியாக மூன்று கதாநாயகர்களும் பயனடைவர்.பத்திரிகைகளுக்கும் ஓரு வார விருந்து பரிமாரப்பட்டுவிட்ட்து. கலவரத்தின் நோக்கமும் நிறைவேரிவிட்ட்து.

பாவம் அந்த 59 ஜீவன்கள்! இந்த மூவர் நலனுக்காக இவ்வுலகை விட்டு முந்திச் சென்றுவிட்டன!