Thursday, April 26, 2012

மகாபாரதத்துடன் தொடர்புடைய இரண்டு செய்திகள்!தினமணியில் வெளியான இதிகாச தொடர்புள்ள முக்கியமான செய்தி! நம் இதிகாசம் என்றால் இது நடந்தது எனப் பொருள் என்று பெரியோர்கள் கூறுவார்கள். அவ்வாறு நடந்த சம்பவங்களுக்கு நிஜமான புவியியல் தொடர்புகள் இருக்கும். அவற்றை மெய்பிக்கும் வகையில் இந்த செய்தி இருக்கிறது


**
மகாபாரதத்துடன் தொடர்புடைய இரண்டு செய்திகள் அண்மையில் ஊடகங்களில் வெளியாகின. முதலாவதாக, பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் கடஸ்ராஜ் சிவன் ஆலயத்தில் உள்ள நச்சுப்பொய்கை வற்றுகிறது என்பது. இரண்டாவது, உத்தரப் பிரதேச மாநிலம், பாராபங்கி மாவட்டத்தில் உள்ள கிந்தூர் கிராமத்தில் இருக்கும் சிவன் கோயிலின் பாரிஜாத மரம் பட்டுவிட்டது என்பது.

நீர் அருந்த நச்சுப்பொய்கைக்குச் சென்ற பாண்டவர் சகோதரர்கள், அதைப் பாதுகாத்து நின்ற பூதத்தின் கேள்விகளுக்குப் பதில் சொல்லத் தெரியாமல் மயக்கமுற, தருமர் அனைத்துக் கேள்விகளுக்கும் விடையளித்து மீட்டு வந்ததாக மகாபாரதத்தில் ஒரு கட்டம் வரும். "யட்சப் பிரஸ்னம்' என்று சொல்லப்படும் அந்தக் கேள்வி பதில்கள் பல உள்ளார்ந்த தத்துவங்களை வெளிப்படுத்துவதாக அமையும். கோன் பனேகா குரோர்பதி, டீலா நோ டீலா, கோடீஸ்வரர் ஆகலாம் போன்ற இன்றைய வெற்றிபெற்ற டிவி நிகழ்ச்சிகளுக்கெல்லாம் முன்னோடி இந்த வினா-விடை போட்டி.

அதேபோன்று பாஞ்சாலி கேட்டதற்காக பாரிஜாத மலரை வீமன் தேடிக் கொண்டு வந்ததாக மகாபாரதம் சொல்கின்றது. தாய் குந்தியின் வழிபாட்டுக்காக பாரிஜாத மரத்தையே அர்ஜுனன் கொண்டுவந்ததாகவும், அதனைக் குந்தி இங்குள்ள சிவன் கோயிலுக்கு அளித்துவிட்டதாகவும் மரபுவழியிலான மகாபாரத கிளைக் கதைகள் சொல்கின்றன. கிராமத்தின் பெயரே (கிந்தூர்) குந்தி என்பதன் திரிபுதான் என்கிறார்கள்.

இந்தியாவில் பிற இடங்களில் மிக அரிதாக பாரிஜாத மரங்கள் இருந்தாலும்கூட, கிந்தூரில் உள்ள பாரிஜாத மரம் பல வகையிலும் மாறுபட்டது. பூக்கள் பூக்கும் தருணம் அந்தச் சூழலே ரம்யமாக மாறிவிடுமாம். மணம் பரப்பும் வெண்மையான மலர்கள் உதிரும்போது பொன்நிறமாக மாறிவிடும் என்கிறார்கள்.

இதன் பூக்கள் காயாகி விதையாவதில்லை. இதன் கிளைகளைக் கொண்டு பதியம் போட்டு மரம் வளர்க்கலாம் என்றால் அதுவும் நடைபெறவில்லை. ஏனென்றால், பாரிஜாத மரத்தில் இது ஆண் வகை. உலகத்திலேயே இந்தவகைப் பாரிஜாத மரம் ஒன்றுதான் இருக்கிறது என்கிறார்கள் தாவரவியல் வல்லநுர்கள்.

ஃபைசாபாத்தில் உள்ள நரேந்திர தேவ் வேளாண் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் தாவரவியல் பேராசிரியர்கள் குழு இந்தப் பாரிஜாத மரத்தை அண்மையில் ஆய்வு செய்து, பட்டுவரும் இந்த பாரிஜாத மரத்தைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ஆனால், இங்குள்ள மக்கள் இதற்குப் பெருந்தடையாக இருக்கிறார்கள். பேராசிரியர்கள் மரத்தை ஏதாவது செய்து கொன்றுவிடுவார்களோ என்கின்ற அச்சம்தான் காரணம். சுமார் 1000 ஆண்டுகள் முதல் சுமார் 4000 ஆண்டுகள் வரை இதன் வயது இருக்கலாம் என்கிறார்கள். இந்த அரிய மரம் பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்று.

பாரத மக்கள் அனைவரும் தொன்றுதொட்டு இயற்கை வழிபாட்டில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பதன் அடையாளம்தான் கோயில்களில் உள்ள மரங்கள். இந்திய மண்ணில்தான் மரங்கள் தெய்வமாக வழிபடப்படுகின்றன. ஒவ்வொரு கோயிலுக்கும் ஒரு ஸ்தல விருட்சமும், தீர்த்தமும் (குளம்) உண்டு. எந்த தட்பவெப்பத்தில், எத்தகைய மண்வளத்தில் கடல்மட்டத்திலிருந்து எந்த அளவுக்கு உயர்ந்த இடத்தில் என்னென்ன மரங்கள் வளரும் என்பதையும், அதன் மருத்துவக் குணங்களையும் தெரிந்துதான் கோயில்களில் ஸ்தல விருட்சங்களை வைத்துள்ளனர் நமது மூதாதையர். மா, பலா, புன்னை, மகிழம், மருதம், வன்னி, பன்னீர், பத்திரி, அரசு, வேம்பு என பல்வேறு மரங்களை ஸ்தல விருட்சமாக வைத்துப் பாதுகாத்து வந்தனர்.

கோயில்களில் பாதுகாக்கப்பட்ட ஸ்தல விருட்சங்கள் அந்த வகை மரங்களிலேயே மிகவும் தனித்துவமானவை. இந்த மாமரம் போனால் இன்னொரு மாமரம் என்பதைப் போன்றதல்ல. அதைத்தான் கிந்தூர் பாரிஜாத மரம் நமக்கு உணர்த்துகின்றது. அவை மிக அரிதான மரங்கள். ஆகையால்தான் இந்த மரங்களுக்கு அதீத மருத்துவக் குணங்கள் இருந்தன.

தீர்த்தம் (குளம்) என்பதும், அந்தக் கோயில் அமைந்துள்ள மண்ணின் கனிமத் தன்மையால் குளத்து நீர் வேதியியல் மாற்றம் பெற்று மருத்துவக் குணம் பெறும் வகையிலேயே அமைக்கப்பட்டன. ஒவ்வொரு கோயில் குளத்துக்கும் ஒரு விசேஷம். ஆகவேதான், ஒவ்வொரு நோய்க்கும் ஒரு கோயில் குளத்தின் நீரைப் பரிந்துரைத்தார்கள்.

இன்று எல்லா கோயில்குளங்களும் வற்றிக் கிடக்கின்றன. திருநள்ளாறு, கும்பகோணம் மகாமகம் குளங்களில் விழாக் காலங்களில் லாரிகளில் நீரைக் கொண்டு வந்து நிரப்புகிறார்கள். பல்லாயிரம் பேர் குளிப்பதால், சுகாதாரம் கருதி குளோரினைக் கொட்டுகிறார்கள். இதனால் என்ன பலன் கிடைத்துவிடும்? ஆன்மிகப் பலனும் இல்லை. அறிவியல் உண்மையும் இல்லை.

சமயத்துடன் இணைந்து இறைவழிபாட்டின் ஒரு பகுதியாக மரங்களை ஸ்தல விருட்சங்களாக்கிய நமது மூதாதையரின் தொலைநோக்குப் பார்வையை வியக்காமல் இருக்க முடியவில்லை. ஸ்தல விருட்சங்களுக்குப் புனிதத் தன்மை தரப்படுவதால் அந்த மரங்கள் பாதுகாக்கப்படும் என்பதும், கோயில் தோறும் குளம் அமைப்பதால் நிலத்தடி நீர் பாதுகாக்கப்படும் என்பதும் விஞ்ஞானம் வளராத காலத்து மூதாதையருக்கு இருந்தது. படித்துப் பட்டம் பெற்றதாலேயே புத்திசாலிகளாகி விட்டதாகக் கருதும் நம்மால் அவர்கள் வைத்துவிட்டுப் போனதைக் காப்பாற்றக்கூட முடியவில்லை.

இருப்பதையும் இழந்துவிடாமல் இருக்க வழி காண வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. குறைந்தபட்சம், நமது தமிழகத்திலாவது...

**
சரி ஒரு சுவாரஸ்யமான கேள்வி பதிலைப் பார்க்கலாம்.  "யட்சப் பிரஸ்னம்' என்று சொல்லப்படும் அந்தக் கேள்வி பதில்கள் என்னவாக இருந்தன என்று தெரிந்து கொள்ல வேண்டுமா?

யட்சன்: காற்றைக் காட்டிலும் வேகமானது எது?
தருமர்: மனிதனின் மனம்.

யட்சன்: தூங்கும்போது கண்களை மூடாமல் இருப்பது எது?
தெருமர்: மீன்.

யட்சன்: பிறந்தும் அசைவற்று இருப்பது எது?
தருமர்: முட்டை

இப்படி சுவாரஸ்யமான கேள்வி பதில்கள். அவற்றை இன்னும் விளக்கமாக படிக்க வேண்டுமா

Monday, April 23, 2012

இயற்கைக்கும் ஆன்மாவிற்கும் ஆரம்பம் இல்லை!பார்த்தா! இயற்கைக்கும், ஆன்மாவிற்கும் ஆரம்பம் இல்லை என்பதைத் தெரிந்து கொள். மாறுதல்கள்குணங்கள் அனைத்தும் இயற்கையிலிருந்து தான் தோன்றுகின்றன என்பதையும் அறிந்து கொள்.

உடலுக்கும், புலன்களுக்கும் காரணம் இயற்கை எனப்படுகிறது. இன்ப, துன்பங்களை
அனுபவிப்பதற்குக் காரணம் ஆன்மா எனப்படுகிறது.

ஆன்மா இயற்கையில் நின்று இயற்கையிலிருந்து தோன்றும் குணங்களை அனுபவிக்கிறது. இந்த குணத்தின் மீது கொண்ட பற்றே அதற்கு நன்மை அல்லது தீமையோடு கூடிய பிறவி எடுக்கக் காரணம் ஆகிறது.

இந்த உடலில் உள்ள பரம புருஷனானவன் - சாட்சி, அனுமதிப்பவன், ஆதாரம் ஆனவன், அனுபவிப்பவன்இறைவன், பரமாத்மன் என்றும் அழைக்கப்படுகிறான்.

இவ்வாறு ஆன்மா, உடல் ஆகிய இரண்டைப் பற்றியும், அவற்றின் இயல்புகளைப் பற்றியும்
நன்கு உணர்ந்த ஒருவன் வாழ்வில் எந்த நிலையில் இருந்தாலும், அவன் மீண்டும்
பிறப்பதில்லை.

- பகவான் ஸ்ரீ க்ருஷ்ணர்

Wednesday, April 18, 2012

மதமாற்று நிறுவனங்கள்!


என் அலுவலக ஹெச் ஆர் மேனேஜருக்கு கலர்புல்லான சில போட்டோக்களுடன் நல்ல அச்சுக்காதிதத்தில் ஏழை சிறுவர் சிறுமியர், பசித்திருக்கும் மூதாட்டி போன்றோரை காண்பித்து நோட்டீஸ் வந்திருந்தது. அதைப் பிரித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். எதேச்சையாக அவரைக் கடந்து போகையில் கவனித்தேன். அது வேர்ல்ட் விஷன் என்கிற தொண்டு நிறுவனத்தின் நோட்டீஸ். வேறென்ன நன்கொடை கொடுங்கள் என்று கேட்டுத்தான்.

அந்த நான் அவர் அருகே நின்று அது என்ன என்று சில வினாடிகள் பார்த்தேன். அந்த மேனேஜர் என்னை ஏறிட்டுப் பார்த்தார். ஒரு சிறு புன்னகையுடன் "இல்லை, வேர்ல்ட் விஷன்' னு போட்டிருகே, குழந்தைகள் படங்களோட அதான் பார்த்தேன்" என்றேன்.

"ஆங், டொனேஷன் ரெக்வெஸ்ட். இப்டி டெய்லி நிறைய வரும்"!

"நீங்க குடுப்பீங்களா?"

"கொஞ்சம் ரிலையபிளா தோனிச்சின்னா ஹெச் ஆர் ஜிம் கிட்ட வெப்போம், அவர் சொன்னா ஐநூறோ ஆயிரமோ கொடுப்போம்" என்றார்.

"இந்த வேர்ல்ட் விஷன் னுக்கு?"

"முன்னாடி ரெண்டு வாட்டி குடுத்தோம், அப்புறம் என்ன தோனிச்சோ நடுவில நிறுத்தினாங்கஇப்போ மறுபடி வந்திருக்கு, என்ன டீட்டெய்லா கேக்றீங்க"

"ஒன்னுமில்ல சும்மாதான், இந்த வேர்ல்ட் விஷன் ஏழைகளுக்கு டொனேஷன் னு நம்ம கிட்டயே காசு வாங்கிட்டு நம்மாளுங்களையே மத மாற்றம் பன்றாங்கன்னு கேள்விப்பட்டேன். அதான் கேட்டேன்!"

ஹெச் ஆர் மேனேஜர் கண்களில் ஒரு பிரகாசம் தெரிந்தது. என்னை உற்றுப் பார்த்தார்.

"ஆமாம், எனக்கும் தெரியும். நான் பெரும்பாலும் இந்த நோட்டீஸை கொண்டு குடுக்க மாட்டேன்! ஆனா சில சமயம் அவங்களே நோட்டிஸைப் பாத்தா டொனேஷன் அனுப்பி வெப்பாங்க. தெரிஞ்சி செய்றாங்களா, தெரியாம செய்றாங்களான்னு தெரியாது."

'என்ன சார், இது கூடவா புரியலை, நம்ம வேலை பாக்றது எம் என் ஸி கம்பெனி. அதுக்கு ஓனர் இத்தாலி, அமெரிக்கான்னு அங்கெதான் இருக்காங்க. அவங்களுக்குள்ள காண்ட்டாக்ட் இருக்கலாம். அவன் நாட்டு அமைப்புக்கு அவன் விசுவாசமா இருக்க மாட்டானா?" என்றேன்.

கொஞ்சம் அமைதியாக இருந்தார். "ம்..நம்ம காசு குடுக்காட்டாலும் உள்நாட்டில் இருந்துக்கிட்டே அவங்களுக்கு அவங்க ஆளுங்களே குடுத்துப்பாங்க போலருக்கு. நம்ம என்னவோ தோக்கற சைட்ல இருக்கறமாதிரியே ஒரு ஃபீலிங் வருது" என்றார். "சரி, இந்த வேர்ல்ட் விஷன் டீட்டெயில் எல்லாம் உங்களுக்கு எப்டி தெரியும்."

"என்ன சார், இவங்க மாதிரி ஆளுங்க கருனை காட்டறதே மத வியாபாரத்துக்குத் தானே, அது போக ஏற்கனவே நிறைய படிச்சிருக்கேன். வாங்கும் டொனேஷனையெல்லாம் வெச்சி,  சர்சு கட்டுவாங்க. இருக்கிற டிவி மற்றும் இதர மீடியால பூராம் புகுந்து மதப்பிரச்சாரம் பன்றாங்க. தெரிஞ்சது தானே! அது மட்டுமில்லை, இப்போ சமீபத்துல அரவிந்தன் நீலகண்டன் எழுதி ரிலீசான "உடையும் இந்தியா" ங்கற புத்தகத்துல கூட ரொம்ப டீட்டெயிலா நிறைய எடுத்துச் சொல்லிருக்காங்க.

"அப்டியா?" என்றார்.

"ஆமாம், படிச்சுப் பாத்தீங்கன்னா உங்களுக்கே மலைப்பா இருக்கும், உதாரணத்துக்கு சில வரிகளை சுருக்கமா சொல்றேன் பாருங்க -

அதிகார ஆற்றல் கொண்ட ஒரு கிறிஸ்தவ வலைப்பின்னல் வட அமெரிக்கா முழுவதும் பரவிக்கிடக்கிறது. அதற்கு இந்தியாவில் உள்ள கிறிஸ்தவக் குழுக்களுடன் மிக நெருக்கமான
உறவு இருக்கிறது. இந்த அமெரிக்க அமைப்புக்கள் இந்தியக் குழுக்களுக்கு அரசியல் கோட்பாடுகளையும் நிதியுதவிகளையும் வழங்குகின்றன.

உலகின் மிகப்பெரிய கிறிஸ்தவ பன்னாட்டு நிறுவனங்களில் மத மாற்றத்தில் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் அமைப்புகளில் ஒன்று வேர்ல்ட் விஷன். அதன் மோசடித்தன்மையை ஒரு மேற்கத்திய அறிஞரே விளக்குகிறார்.

"பல சமயங்களில் வேர்ல்ட் விஷன், அமெரிக்க அரசுக்கு உளவு சேகரிக்கும் கரமாகவே இயங்கியுள்ளது. 1970 களில் வேர்ல்ட் விஷன் சி ஐ ஏ க்காக வியட்நாமிலிருந்து களத்தகவல்களைத் திரட்டி அளித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. அமெரிக்கத் துருப்புக்கள் இப்பகுதியை விட்டுப் போன பிறகு வேர்ல்ட் விஷன் அகதிகள் முகாம்களுக்குப் பொறுப்பேற்றுக் கொண்டது."

வேர்ல்ட் விஷன் அமைப்பின் இந்திய இணையதளம் அதனை மனித நேயத்தன்மை கொண்ட ஓர் அமைப்பாகக் காட்டுகிறது. வேர்ல்ட் விஷனும் அதைப் போன்ற மிஷனரி அமைப்புகளும் வெளிப்புறச் சக்திகளாகச் செயல்படுகின்றனர். அவை அந்தந்த பிராந்திய / வட்டாரச் சமுதாயங்களின் சமூக அமைப்பையோ அல்லது மதப் பண்பாட்டையோ மதித்து அவற்றுக்காக உழைப்பதில்லை.

வேர்ல்ட் விஷன் உள்ளூர் சர்ச்சுகளை ஆதரிக்கிறாது. பாஸ்டர்களுக்குத் தலைமைப் பண்புப்
பயிற்சிகளை அளிக்கின்றது.

- அரவிந்தன் நீலகண்டன், உடையும் இந்தியா

இப்படி பல தகவல்கள்."

"அடேங்கப்பா" என்று ஆச்சரியப்பட்டார்.

"சார், நான் ரெண்டொரு வரிகளை ஒரு சாம்பிளுக்குத் தான் எடுத்துச் சொன்னேன். அந்த புத்தகத்தை வாங்கிப் படிச்சீங்கன்னா உங்களைச் சுத்தி இன்னொரு உலகம் தனியா இயங்கிக்கிட்டிருக்கறமாதிரி ஃபீல் பண்ணுவீங்க" என்றேன்.

கண்களை அகல விரித்துப் பெருமூச்சு விட்டார். அதுவரை கையில் வைத்திருந்த வேர்ல்ட் விஷன் நோட்டீஸை சுக்கு நூறாக கிழித்து காலடியில் இருந்த குப்பைக் கூடையில் போட்டார்.

இன்று ஒரு நல்லகாரியம் என நினைத்து என் இருக்கைக்குப் போனேன்!


* * * * * * * * * 
ஒரிசாவில் மிஷனரிகளின் கைக்கூலிகளான மாவோயிஸ்டுகளின் அட்டகாசம்!           80 வயதான சுவாமி லக்ஷ்மனானந்தாவின் கொடூரக் கொலை! 

மீடியாக்கள் இவற்றை மறைத்து விட்டு கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடந்தது என்றே விளம்பரம் செய்யும்!

மிஷநரிகள்! ஜாக்கிரதை!

Monday, April 16, 2012

ஒரு தாய் வயிற்றுக் குழந்தைகள் - வெவ்வேறு குணங்கள்!ஒரு தாய் தந்தையருக்கு மூன்று அல்லது நான்கு குழந்தைகள் இருந்தாலும் அவை ஒவ்வொன்றும் விதவிதமான குணங்களும் வாழ்க்கையையும் கொண்டு இருப்பதற்கு பல காரணங்கள் ஒருங்கே அமையப் பெறுகின்றன.

இதில் ஒரு விஞ்ஞான உண்மை புதைந்து இருக்கிறது. முதல் குழந்தை உருவாகும் பொழுது தாய், தந்தையரின் மனநிலை, வயது, உடல்நிலை, செல்வம், அறிவு இவைகளைப் பொறுத்தும், இப்பிரபஞ்சத்தில் அக்கால கட்டத்தில் கோள்களின் சஞ்சாரநிலைபஞ்ச பூதங்களில் ஏற்படுகின்ற ரசாயன மாற்றம் இவற்றைப் பொறுத்தும் அக்குழந்தையின் உருவ அமைப்பு, குணம் முதலியன ஏற்படுகின்றன.

பின் மூன்று அல்லது நான்கு வருடம் கழித்த பின்பு, தாய் தந்தையரின் மனம், உடல், கோள்கள் பஞ்ச பூதங்கள் இவற்றின் நிலையில் எத்தனையோ மாறுதல்கள் ஏற்பட்டு இருக்கும். இந்நிலைக்கேற்றவாறு அடுத்த குழந்தையின் உருவ அமைப்பு, குணம் முதலியன வேறுபடும்.

எனவே இந்நிலையில் முதல் குழந்தைக்கும், அடுத்த குழந்தைக்கும் மாறுதல்கள் இருக்கத்தான் செய்யும். ஒரு மனிதன் வேறொரு மனிதனிடமிருந்து கருவமைப்பு தொடங்கி பல்வேறு பழக்க வழக்கம், ஒழுக்கம், கலையுணர்வு போன்ற பல குணங்களில் மாறுபடுகிறான். அவ்வாறு மாறுபடும் குணத்தைப் பொறுத்தே அவனது உருவமைப்பு , அறிவின் உயர்வு கீர்த்தி, உடல் வலிவு, உடல் நலம் மற்றும் செல்வம் போன்றவை உண்டாகிறது.

ஆக கரு ஒன்று உருவாகும் காலமும் அக்காலகட்டத்தில் சஞ்சாரிகும் கோள்களின் தாக்கமும் கருவின் மீது தனது ஆதிக்கத்தை செலுத்தி வெவ்வேறு குணமும் உடல் வலிவும் கொண்ட வேறுபட்ட மனிதர்களை உருவாக்குகிறது.

- யோகிராஜ் வேதாந்திரி மகரிஷி

Saturday, April 14, 2012

நகரப்பள்ளிகளிலும் கட்டாயக் கிறிஸ்தவம்! பாதிரிகளின் அடிமைகள் நாம்!எஸ் பி ஓ ஏ பள்ளியில் அட்டூழியம் -   ஹிந்து நாளிதழ் செய்தி!


LAVANYA M.

A chemistry teacher of SBOA School and Junior College in Anna Nagar West was suspended last week for ‘manhandling and misbehaviour', but the teacher claimed that she was punished for reciting a Hindu prayer to students of Class XII .

On March 13, as the students were gearing up for their examination, teachers were about to recite their routine prayer. “Since the usual group of teachers pray before every examination, I volunteered this time. I said a prayer invoking the blessings of Hindu, Christian and Muslim Gods,” said the teacher, P. Abirami.
Even as Ms. Abirami was reciting the prayer, some of the other teachers allegedly turned off the microphone. “If they had an issue with my prayer, they could have called me aside and spoken to me rather than behaving rudely in front of students,” she said. “I did not give up but continued to say the prayers even more fervently,” she added.

Students on Wednesday said it was unusual for teachers to behave in this way. “Usually a Christian prayer is said before we write examinations. But last week a teacher said some Hindu mantras and the other teachers tried to stop her by turning off the microphone,” said a student.

Principal P. C. Selvarani, said that disciplinary action was taken against the teacher for behaving in an inappropriate manner . “The teacher does not handle Class XII and was on paper-correction duty that day. In spite of this, she came to up the dais, grabbed the mike and started speaking,” she said. “It was against the code of conduct. She just intervened.,” she said.

This sparked off protests by the BJP, VHP and the Hindu Munnani. Their activists staged a protest outside the school on Wednesday, following which 60 people were arrested and later released.

Keywords: SBOA School


லாவன்யா என்கிற இந்த ரிப்போர்ட்டர் நேர்மையும், துணிவும் கொண்டவர் எனக் கூறப்படுகிறது. பொதுவாக கிறிஸ்தவ மற்றும் சீன மாவோயிஸ ஜால்ரா தட்டப்படும் ஹிந்து நாளிதழில் இப்படிப்பட்ட உண்மைகள் வெளிவரும் போது அந்த நாளிதழின் மீது மதிப்பு வருவது போல் தோற்றம் உண்டாகிறது.

மேலே காண்பது இருபது நாட்களுக்கு முன்னால் வந்த பழைய செய்தி தான். இப்போது ஞாபகம் வரக்காரணம், நேற்று என் அலுவலக நண்பர் மாவோயிஸ்டுகள் எவ்வளவு நல்லவர்கள் தெரியுமா என்று அவர்களுக்காக நெஞ்சுருகிப் பேசிக்கொண்டிருந்தார். கொஞ்சம் நேரம் பேசிய பின் தான் தெரிந்தது அவர் தொடர்ந்து வீட்டில் ஹிந்து பேப்பர் படிப்பவர் என்று. நான் அவரிடம் சொன்னேன் ஐயா தொடர்ந்து இப்படி ஹிந்து பேப்பர் மட்டுமே படித்தீர்களென்றால் நீங்கள் சீன ஆதரவாளர்களாகவும் மவோ, நக்சல் போன்ற தீவிரவாத இயக்கங்களின் நெருங்கிய நண்பராகவுமே ஆகி விடுவீர்கள். ஏனெனின் ஹிந்து பத்திரிக்கையின் சார்பு நிலை அப்படி. துப்பாக்கியை தூக்கிக் கொண்டு சாலையில் இறங்கிவிடாமல் உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள் என்றேன்! அது தான் ஹிந்து பத்திரிக்கையின் நிலை!

அப்படி ஒரு பத்திரிக்கை கிறிஸ்தவ சார்பில்லாமல் பாதிக்கப்பட்ட ஹிந்துக்களின் நிலையை இப்போது வெளியிட்டிருக்கிறது. இதை வெளியிட்ட ரிப்போர்ட்டர் லாவன்யாவை அந்த பத்திரிக்கை திட்டாமல் விட்டால் சரிதான்! ஹிந்துப் பத்திரிக்கையின் இந்த மாற்றம் என்னை மீண்டும் இந்த செய்தியைப் பற்றி நினைவு கொள்ளச் செய்தது. ஹிந்துப் பத்திரிக்கையின் இந்த நல்ல மாற்றம் தொடருமானால் அதன் நம்பகத்தன்மை அதிகரிக்கும்.

எஸ்பிஓஏ பற்றி!

எஸ்பிஓஏ பள்ளி ஒரு கிறிஸ்தவ பள்ளி அல்ல. ஆனாலும் அங்கே பாதிரியார்களின் ஆதிக்கமும் சர்ச்களின் சொற்படி மாணவர்களை கிறிஸ்தவ சார்புள்ளவர்களாக ஆக்கும் நிகழ்ச்சிகளும் தொடர்ந்து நடப்பதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. அங்கிருக்கும் கிறிஸ்தவ ஆசிரியர்கள் மாணவர்களை கிறிஸ்தவ சார்புள்ளவர்களாக ஆக்க தொடர் முயற்சிகள் மேற்கொள்து இப்போது வெளிப்படையாக தெரிந்து விட்டது. இன்னும் பல பள்ளிகளின் இது போன்ற நிலைமை வெளித்தெரியாமல் இருக்கிறது.

பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்படக் கூடாது என்கிற ஒரே காரணத்திற்காக பெற்றோர்கள் இது போன்ற நிலைமைகளை சகித்துக் கொள்வதை கிறிஸ்தவ ஆசிரியர்கள் தங்களுக்குச் சாதகமான சூழலாக எடுத்துக் கொள்கிறார்கள். இது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய விஷயம்.

எஸ்பிஓஏ பள்ளி பெயருக்குத்தான் ஸ்டேட் பாங்க் ஆஃபீசர்ஸ் அசோஷியேஷனே அன்றி உண்மையில் பெரும்பாலான அனேகமாக 80% ஆசிரியர்கள் கிறிஸ்துவர்களாகவே இருக்கிறார்கள். இதை நடத்தும் ஸ்டேட் பாங்க் ஆபீசர்ஸ் அசோஷியேஷன் நிர்வாகிகள் யார் என்பதைப் பார்த்து அவர்களிடம் இந்து தலைவர்கள் பேச வேண்டும். 

சென்னை எஸ்பிஓஏ பள்ளியிலும் அவர்களின் பிற ஊர் கிளைகளிலும் பெரும்பாலான ஆசிரியர்கள் கிறிஸ்துவர்களே. ஸ்டேட் பேங்க் ஆபீசர்ஸ் அசோஷியனின் சில கிறிஸ்துவ நிர்வாகிகள் ஆரம்ப காலத்திலேயே கிறிஸ்துவர்களை மட்டுமே ஆசிரியர்களாக நியமித்து விட்டதன் பலனாக இன்று வரை சர்ச் சொல்லும் ஆட்களையே ஆசிரியர்களாக அப்பாயிண்ட்மெண்ட் செய்து வருகிறார்கள். இந்தப் பிரச்சினையை முதலில் ஸ்டேட் வங்கி ஆபீசர்ஸ் அசோஷியனில் எழுப்ப வேண்டும் . சென்னை பள்ளியில் அந்த டீச்சர் ப்ரேயரில் குருப் பிரம்மா குரு விஷ்ணு ஸ்லோகத்தை படித்ததற்காக சஸ்பெண்ட் செய்யப் பட்டிருக்கிறார். அதே ப்ரேயரில் தினமும் பைபிள் கதைகளும் வாசகங்களும் படிக்கப் படுகின்றன. இதே நிலைதான் அனைத்து எஸ்பிஓஏ பள்ளிகளிலும் என்றாலும் எதுவும் செய்ய முடியாத மைனாரிட்டி நிலையில்தான் இந்து டீச்சர்கள் இருக்கிறார்கள். பள்ளிக்குள்ளேயே அடிக்கடி அவர்கள் கூடி ப்ரேயர்கள் நடத்திக் கொள்வதும் சர்ச் உத்தரவின் பேரில் செயல் படுவதும் தினமும் நடப்பதாக் கூறப்படுகிறது.

இந்தப் பிரச்சினையை வி எச் பி எடுத்துக் கொண்டு போராடிய பின்னால் பெற்றோர்களை ஏமாற்ற ப்ரேயர் ஒன்றில் கந்தர் சஷ்டி கவசம் ஒலிக்க வைத்திருக்கிறார்கள். தொடர்ந்து இந்து இயக்கங்கள் எஸ் பி ஓ ஏ ஆபீஸர் அசோஷியனின் நிர்வாகிகளுக்கு அழுத்தம் கொடுத்தால் இந்த நிலை மாறும்.  

அனைத்து இந்து டீச்சர்களுக்கும், இந்து மாணவர்களுக்கும் இந்து இயக்கங்களின் நடவடிக்கைகள் பெருத்த சந்தோஷத்தை அளிப்பதாக இருந்திருக்கிறது.

இந்து அமைப்புகள் முனைப்புடன் இருப்பது சிறிய அளவிலேனும் உரிய பலனை அளிப்பது திருப்தியளிக்கிறது. மீண்டும் அந்த ஆசிரியையை பணியில் சேர்க்கும் வரைக்கும் நம் அமைப்புகள் இந்த விஷயத்தைக் கையில் எடுத்துப் போராட வேண்டும். மேலும் எஸ்பிஓஏ பள்ளிகளில் உள்ள கிறிஸ்துவ ஆசிரியர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கும் ஸ்டேட் வங்கியில் உள்ளவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்களின் பெற்றோர்களும் பொதுமக்களும் இது போன்ற கிறிஸ்தவர்களின் அட்டூழியத்திற்கு எதிராக போராட வேண்டும்.

ஹிந்துக்களின் அமைப்புகள் மட்டும் இது போன்ற விஷயங்களுக்காகப் போராடினால் அது அரசியலாக மட்டுமே ஆகும். ஒவ்வொரு ஹிந்துவும் போராடும் இயக்கங்களுடன் சேர்ந்து கொண்டு உணர்வுப்பூர்வமாக ஆதரவு தெரிவித்து இயங்கவும் வேண்டும். அப்போதுதான் நிரந்தரத்தீர்வுகள் பல எட்டப்படும். இல்லையே ஹிந்துக்களுக்கெதிரான இது போன்ற பள்ளிக்கூட அட்டூழியங்கள் ஒழிக்கப்படவே முடியாமல் போய்விடும்!

ஹிந்துக்கள் மெஜாரிட்டியாம்! என்ன கொடுமை சரவணா!

Thursday, April 12, 2012

தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

நந்தனம்


அன்பர்கள் நண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! புத்தாண்டில் நண்பர்கள் அனைவரது வாழ்விலும் நல்ல மாற்றமும் ஏற்றமும் உண்டாகி மகிழ்ந்திருக்க வேண்டுமாய் இறைவனைப் பிரார்த்திக்கிறேன்!Tuesday, April 10, 2012

இனியவனே! அவனுக்குத் தலைவன் எவனும் இல்லை!இனியவனே! இறைவன் தான் இந்த அனைத்துமாக இருக்கிறார். கர்மங்கள், தவம் என்று மட்டுமல்ல அழிவற்ற மேலான பிரம்மமாக இருப்பதும் அவரே. இதயக் குகையில் உறைகின்ற அவரை அறிபவன் அறியாமைத் தளையிலிருந்து இப்போதே விடுபடுகிறான்.

அவனுக்குத் தலைவனாக உலகில் எவனும் இல்லை. அவனை ஆள்பவனும் இல்லை. அவனுக்குக் அடையாளமும் இல்லை. அவனே அனைத்திற்கும் காரணம். கரணங்களுக்கு அதிபனான ஜீவனுக்கு அவனே அதிபன். அவனுக்குத் தந்தையும் இல்லை. அதிபனுமில்லை.

சிலந்திப்பூச்சியும் பட்டுப்பூச்சியும் தனது நூல்களால் தன்னை மறைத்துக் கொள்வது போல் இயற்கையாகவே பிருக்ருதியில் (பிரபஞ்சம்) தோன்றும் பொருள்களால் எந்த தேவன் தானொருவனாகவே தன்னை மறைத்துக் கொள்ளுகிறானோ அவன் நமக்கு பிரம்ம ஸாயுஜ்யத்தை அளிக்கட்டும்.

ஒருவனேயாகிய தேவன் எல்லா உயிர்களிலும் மறைந்துறைகிறான். அவன் எங்கும் வியாபித்தவன். எல்லா உயிர்களுக்கும் அந்தராத்மா; எல்லாச் செயல்களையும் மேல்பார்ப்பவனாயும் எல்லா உயிர்களுக்கும் வாசஸ்தானமாயும் அவன் உளன். 

அவன் ஸாஷி, அறிவு வடிவினன், தனித்திருப்பவன். குணங்களால் பற்றப்படாதவன்.

செயலற்றிருக்கும் பலவற்றையும் தன் வசங்கொண்டுள்ள எந்த ஒருவன் வித்தாகிய ஒன்றை பலவாய்ச் செய்கிறானோ, அவனைத் தங்களிடம் உறைபவனாய் எவர் ஆழ்ந்து காண்கிறார்களோ அவர்களுக்கே அழிவில்லாத இன்பமுண்டு. பிறர்க்கில்லை.

நிலையுள்ள பொருள்களிடை நிலையுள்ளவனாகவும், அறிவுள்ள உயிர்களின் அறிவாயும், ஒருவனாய் நின்று அனைவருடைய ஆசைகளையும் அளிப்பவனாயும், அனைத்திற்கும் காரணமாயும், ஞான யோகத்தால் அடைதற்குரியவனாயும் உள்ள அந்த தேவனை அறிந்து ஒருவன் எல்லாத் தளைகளினின்றும் விடுபடுகிறான்.

இவ்வுலகில் நடுவில் உள்ளவன் ஹம்ஸன் (பரமாத்மா) ஒருவனே. அவனே அக்கினியாகவும் நீரினுள் புகுந்து உறைபவனாகவும் இருக்கிறான். அவனை அறிந்தே ஒருவன் சாவைக் கடந்து செல்லுகிறான்.

- ச்வேதாச்வதர உபநிஷத்து


Sunday, April 8, 2012

வாஸ்துவும் முருங்கைக்காயும்!


முன்பெல்லாம் மொத்தமாக சில காய்கறிகள் வாங்கத்தான் பட்ஜெட் போட வேண்டியிருக்கும். இப்போதெல்லாம் ஏதாவது ஒரு காய் வாங்க நினைத்தால் கூட அதுக்கு தனித்தனியாக பட்ஜெட் போட வேண்டியிருக்கும் போலிருக்கிறது.

முருங்கைக்காய், கருவேற்பிலை, எலுமிச்சை, பச்சை மிளகாய், மனத்தக்காளி போன்ற வீட்டு சமையலுக்கு அடிக்கடி பயன்படும் சில வகைக் காய்கறிகளை வீட்டு நிலத்தில் சிறிதளவு மண் நிலம் இருந்தால் கூட நாம் விதைத்து விடமுடியும். அவற்றை வளர்த்து பயனடைய முடியும். ஆனால் நாம் அதைச் செய்வதில்லை. வீட்டைச் சுற்றி இருக்கும் இடங்களைக் கொஞ்சம் கூட மிச்சம் வைக்காமல் சிமெண்ட் போட்டு மூடி விடுகிறோம். ஏன் சிலர் கிணற்றைக் கூட இடித்து மூடி போட்டு மேலே மூடி அந்த சமதளத்தை கார் பார்க்கிங்காக ஆக்கி விடுகிறார்கள்.

இப்படி எல்லோருமே இருக்கும் நிலத்தை உபயோகிக்காமல் மூடி போட்டு மூடி விட்டால் வானத்தில் இருந்தா காய்கறி கொட்டும்? யாரொ ஒருவர் நிலம் வைத்திருக்கிறார், அவர் விளைவித்துக் கொடுப்பார் என்று நம்பி எல்லோருமே சிமெண்ட் போட்டு மண்ணை மூடிவிட்டால் விளைவிக்கப் போவது யாரோ?

வீட்டில் தோட்டம் வைப்பது என்பது இன்றைக்கு ரோஜாப்பூந்தொட்டியை வாங்கி வைப்பதும், பணம் கொட்டும் என்று மணி ப்ளேன்ட் வாங்கிப் படர விடுவதற்கும் என்று ஆகிப்போனது. அன்றாடக் காய்கறிக்கும் பலகோடி மக்கள் சில ஆயிரம் விவசாயிகளை நம்பி இருந்தால் எதிர்காலத்தில் காய்கறி கிடைக்குமா?

உள்ளங்கையளவு நிலம் இருந்தாலும் அதில் அன்றாடத் தேவைக்கான ஏதாவது ஒரு காய்க்கும் செடியை விதைத்து அதிலிருந்தே எடுத்துக் கொள்ள வேண்டும். சொந்த வீடு வாடகை வீடு என்றில்லாமல் எங்கே வசித்தாலும் அங்கே கொஞ்சம் மண் இருந்தால் அதில் காய் விளையும் செடிகளை விதைத்து அது இலவசமாகக் கொடுக்கும் கொத்துக் கொத்தான காய்களை அனுபவிக்கலாம். பூமி அதற்கு நம்மிடம் காசு வாங்குவதில்லை. 'விதைத்து வை போதும், நாம் தருகிறேன்' என்கிறது. ஆனால் நாம் அதற்கு தயாரில்லை. அதை விட்டு விட்டு காய்கறி விற்பவரை நொந்து கொள்கிறோம்!

சரி விஷயத்திற்கு வருகிறேன்.

முருங்கைக் காயும், முருங்கைக் கீரையும் மருத்துவ குணம் கொண்டது என்பர். ஆனால் அதை விதைப்பதை பலர் விரும்புவதில்லை. அவர்கள் கூறும் காரணம் 'அதிலே கம்பளிப் பூச்சி வரும்'. அது கடிக்குமாம்! சார்புயிரி இல்லாமல் எந்தப் பயிரும் விளைவிக்க முடியாது. சார்புயிரி இல்லாமல் எந்த ஜீவனும் வாழவும் முடியாது. மனிதனே ஒரு சார்புயிரி தானே. ஆனால் இதனைப் புரிந்து கொள்ளாமல் முருங்கை மரத்தை வளர்க்க யோசிக்கிறோம்.

அப்படியே யாரேனும் அந்தக்காலத்திலிருந்தே முருங்கை மரம் வளர்த்து வந்து அதிலிருந்து கொத்துக் கொத்தாக முருங்கைக் காய் மற்றும் கீரையை அனுபவித்து வந்திருந்தால் அதற்கும் இப்போது வினை வந்து விட்டது. அதற்குப் பெயர் வாஸ்து!

எந்த வாஸ்து புத்தகத்தில் யார் சொல்லி வைத்தார்கள் என்று தெரியவில்லை.., நிறையபேர் வீட்டில் இருந்த முருங்கை மரங்களையெல்லாம் வாஸ்து பிரகாரம் செய்ததாகக் கூறி வெட்டி விடுகிறார்கள். வாஸ்துக்காரர்களுக்கு முருங்கை மரம் மேல் ஏதாவது கோபமா? வேதாளத்திற்கும் முருங்கை மரத்திற்கும் சம்பந்தம் இருக்கிறது என்று நம்பிவிட்டார்களா? அல்லது ஏதாவது ஒரு முருங்கை மரத்தில் அவசரத்துக்கு ஒதுங்கிய வாஸ்துக்காரரின் 'அந்த' இடம் பார்த்து கம்பளிப் பூச்சி விழுந்து தொலைத்ததோ என்னமோ?, பல வீட்டு முருங்கை மரத்திற்கு வாஸ்துக்காரர்கள் இப்போது எமனாகி இருக்கிறார்கள்.

அதுவும் வீட்டில் கொல்லைப் புறத்தில் முருங்கை மரம் இருப்பது வீட்டுக்கு ஆகாது என்றும் பரப்பி வருகிறார்கள் இந்த வாஸ்துக்காரர்கள். வீட்டுக்கொல்லையில் தோட்டம் வைப்பது தானேய்யா காலங்காலமாக நடந்து வருகிறது. வாஸ்தவமாகச் சொன்னால்இயற்கையோடு இயைந்து வாழக் கற்றுக்கொடுப்பதுதான் வாஸ்து என்பார்கள். ஆனால் இன்றைக்கு வாஸ்துப் பெயரைச் சொல்லி இயற்கையை அழிக்கிறார்கள். இந்த வாஸ்துக்காரர்கள், ஏதேனும் காய்கறி விற்கும் சூப்பர் மார்கெட் காரர்களுக்கு கைக்கூலிகளாக மாறி விட்டார்களா என்றும் தெரியவில்லை. கலிகாலம், எதுவும் நடக்கும்.

இது பற்றிப் பேசும் போது தான் தெரிந்தது, என் அலுவலகத்தில் வேலை பார்க்கும் இரண்டு பேர் இதே போல் வாஸ்துக்காரன் சொன்னார் என்று அவரவர் வீடுகளில் இருந்த அருமையாக காய்த்துப் போடும் முருங்கை மரத்தை வெட்டியிருக்கிறார்கள். நான் அவர்களைக் கடிந்து கொண்டேன், "ஏன் சார், ஒரு முருங்கைக்காய் பத்து ரூபாய்க்கி வெளியே விக்குது, ஓசிக்கு கொத்துக் கொத்தா குடுத்துக்கிட்டு இருந்த மரத்தைப் போய் வெட்டிட்டீங்களே!' எப்டி சார் மனசு வந்தது?" என்றேன். ஹி ஹி என அசடு வழிந்தனர்.

இப்போ எதுக்கு இந்தப் பேச்சு என்கிறீர்களா...சொல்றேன்.

இன்று என் பக்கத்து விட்டுக்காரர் காய்கறி விற்கவந்த தள்ளுவண்டிக் காரனை ஏதோ திட்டிக் கொண்டே வந்தார். என்ன வென்று விசாரித்தால்...

"ஈர்குச்சி மாதிரி இருக்கும் ஒரு முருங்கைக்காயை ஏழு ரூபாய்ங்கறான் தம்பி! கொஞ்சம் தடிசா இருக்குதேன்னு இன்னொன்னைக் கேட்டா பத்து ரூபாய்ங்கறான்! முருங்கைக்காய் கெட்ட கேட்டுக்கு பத்துரூபாயா குடுக்றதுநல்லாத்தான் கொள்ளையடிக்றாங்க!" என்று கூறியபடியே உள்ளே சின்றுவிட்டார்.

பின்னே, அவர் கோபம் ஞாயம் தானே! 'முருங்கை கெட்ட கேட்டுக்கு!!' இவ்ளோ விலை கொடுக்க அவரால் முடியுமா?? ஏனெனில், போனவாரம் தான் வாஸ்துவின் பெயரால் அவர் வீட்டுக் கொள்ளையில் இருந்த ரெண்டு முருங்கை மரங்களை வெட்டிக்கொன்றார்.

ஒரு கேள்வி: முருங்கை மரத்தை வெட்டிக் கொன்ற பாவம் வீட்டுக்காரருக்கா? அல்லது வாஸ்து சொன்னவருக்கா?

Sunday, April 1, 2012

கீதோபதேசம் - பக்தியால் மட்டுமே உணர முடிபவன் நான்!
அர்ஜுனன் கூறினான்..

ஜனார்தனா! உன்னுடைய இந்த இனிய மானுட வடிவத்தினை கண்டு இப்பொழுது நான் மனம் தெளிந்து என் இயல்பான நிலையை அடைந்தானாக இருந்க்கிறேன்.

பகவான் சொன்னது..

எவராலும் காண்பதற்கரிய என்னுடைய இந்த வடிவை பார்த்திருக்கிறாய். இந்த வடிவத்தைத் தரிசிக்க தேவர்கள் எப்பொழுதும் ஆவலாக உள்ளார்கள்.

நீ என்னை எவ்வாறு கண்டாயோ, அவ்வாறு நான் வேதங்களாலும், தவத்தாலும், தானத்தாலும், யாகத்தாலும் தரிசிக்க இயலாதவன்.

அர்ஜுனா! என்னிடம் மாறாத பக்தி செலுத்துவதால் மட்டுமே இவ்வடிவத்தோடு என்னை உள்ளபடி உணர முடியும். காணமுடியும். அடைய முடியும்.

பாண்டவா! எனக்காகவே கர்மம் செய்கிறவனும், என்னையே மேலான லட்சியமாகக் கொள்பவனும், என்னிடம் பக்தி செலுத்துபவனும், பற்றற்றவனும், எல்லா உயிர்களிடத்திலும் பகைமை பாராட்டாதவனும்
எவனோ அவன் என்னை வந்தடைகிறான்.

- பகவான் ஸ்ரீ க்ருஷ்ணர்.