Wednesday, March 31, 2010

மகாபாரதத்தில் ஒரு நாள் - 2பிறர் துன்பத்தைத் தன் துன்பம் போல் கொள்!அறிவினால் ஆகுவது உண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை

பிறிதொருவர் துன்பத்தைத் தன் துன்பம் போல கொள்ளாதவன் மிகப்பெரிய அறிவாளியானாலும் அவனால் உலகிற்கு ஆகப்போகும் பயன் தான் என்ன? என்று கேள்வி எழுப்புகிறார் வள்ளுவப் பெருந்தகை.

வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்றார் வள்ளலார். அன்பும் இரக்கமும் கொண்டவரே ஆத்ம சாந்தி அடைவார்கள் என்கிறார்கள் பெரியவர்கள்.

உண்மையான ஆன்மா எப்போதும் பிற உயிரின் துன்பத்தை தன் துன்பம் போல பாவித்து விடும். ஒரு காலத்தில் நம் மக்கள் அறிவை விட உணர்ச்சியாலேயே வாழ்ந்து வந்திருக்கின்றனர். ஒவ்வொரு மனிதரும் தனது பருவத்திற்குத் தகுந்த உணர்வை முழுமையாக ஏற்று வாழ்ந்து வந்தனர்.

பல குழந்தைகளின் தாயானவள் வேறு பிள்ளைகளின் துன்பத்தைப் பார்க்கும் போதெல்லாம் தன் பிள்ளையின் துன்பமாகவே கருதி அந்த பிள்ளைக்கு உதவுவாள். எங்கேனும் யாரேனும் துன்புற்றால் கூட யார் பெற்ற பிள்ளையோ இப்படி கஷ்டப்படுகிறதே என்று இன்னொரு தாயின் மனதை தங்கள் மனதால் வெளிப்படுத்தும் களங்கமற்ற மக்களைக் கொண்டதே நமது பூமி.

இதன் சிறப்பும் பாரம்பரியமும் இந்நாட்டு கலாச்சாரக் கட்டிடத்தின் ஒவ்வொரு செங்கல்லிலும் இருக்கிறது. ஆன்மீகத்தின் ஒவ்வொரு அங்கத்திலும் இருக்கிறது.

அப்படிப்பட்ட தியாகத்தை இந்துக்களின் புராணங்களும் இதிகாசங்களும் எல்லா இடங்களிலும் கற்றுக் கொடுத்து நம்மை வழிநடத்தி வந்திருக்கின்றன.மகாபாரத புராணத்தில் இப்படி ஒரு கருணை மிக்க நாள் ஒன்றைப் பற்றி நாம் பார்ப்போம். மகாபாரத புராணம் மேலோட்டமாகப் பார்த்தால் வெறும் சண்டைச் சச்சரவுகளைக் கொண்ட கதையாகத் தோன்றினாலும், அந்த அற்புத இதிகாசத்தின் ஒவ்வொரு கதாபாத்திரமும் தர்மத்தை வலியுறுத்தும் போதனைகளாகத்தான் காட்சி தருகின்றன.

இந்த இதிகாசத்தில் தர்மபுத்திரரான யுதிஷ்டிரரும், தனது அந்திமக் காலத்தின் கடைசி நிமிடத்தில் கூட ஒரு பிராணியின் துன்பத்தைத் தன் துன்பம் போல கருதி அதற்கு பின்னரே சொர்கம் சென்றார் என்ற அழகான நிகழ்வு சொல்லப்படுகிறது. அந்த அழகான கதையைக் கொஞ்சம் பார்ப்போம்.

தங்கள் வாழும் காலம் முடிந்ததையரிந்து சொர்கலோகத்திற்கு பஞ்சபாண்டவர்கள் திரௌபதியுடன் இமாலயத்தின் உச்சத்தில் கால்நடையாக நடந்து சென்றுகொண்டே இருந்தார்கள். செல்லும் வழியில் முதலில் திரௌபதி விழுந்தாள். சிறிது தூரம் சென்றவுடன் நகுல சகாதேவர்கள் ப்ராணன் பிரிந்து விழுந்தார்கள். பிறகு அர்ஜுனன், அதன் பின் பீமன் என்று ஒவ்வொருவராக விழுந்தார்கள்.

இப்போது தர்மபுத்திரர் மட்டும் தான் மிச்சம். அவர் கூடவே ஒரு நாய் ஒன்று பின் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது.

இப்போது தர்மர் சொர்காரோகனம் என்றழைக்கப்படும் சொர்க்கத்தின் பாதையை அடைந்து விட்டார். இனி சொர்கத்திற்கு ஏற வேண்டியது தான் பாக்கி. அப்போது கூடவே வந்து கொண்டிருந்த நாய் கேட்டது. "தர்மராஜரே! எனது உடம்பின் மீது நிறைய கிருமிகள் படர்ந்துவிட்டது. அவைகளால் நான் மிகவும் துயரத்தில் இருக்கிறேன். அந்த கிருமிகளிடமிருந்து எனக்கு விடுதலையைக் கொடுத்து விட்டு நீ சொர்கத்திற்கு போயேன்!" என்றது.

தர்மரும் சரி என்று கூறி "கிருமிகளைத் தட்டி உதறிவிட்டுவிடலாம். அவைகள் உன் உடலிலிருந்து சிதறி கீழே விழுந்து விட்டால் நீ விடுதலை அடைந்து விடுவாய்" என்று கூறி நாயின் உடலைத் தட்ட முற்பட்டார்.

அப்போது கிருமிகள் எல்லாம் பதறிப்போய் பேசலாயின "தர்மபுத்திரரே! கிருமிகளாகிய நாங்கள் இந்த நாயினிடத்தில் இருப்பதை உண்டு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இங்கே வேறு உணவு கிடைக்காது. நீங்கள் நாயை உதறி எங்களை கீழே தள்ளிவிட்டுவிட்டால் எங்கள் எல்லோருடைய
ஜீவனும் போய்விடுமே! அதனால் சற்று கருணைகாட்டுங்கள். அப்படிச் செய்து விடாதீர்கள்" என்று கிருமிகள் கூறின.

இதனைக் கேட்ட தருமபுத்திரரின் மனம் மிகவும் வருந்தியது. நாயின் கோரிக்கையை நிறைவேற்றாமல் சொர்கம் செல்ல முடியாது. நாயைக் காப்பாற்றும் பொருட்டு கிருமிகளைக் கொன்றுவிட்டாலும் சொர்க்கத்தை அடைய முடியாது. நாயையும் காப்பாற்ற வேண்டும். கிருமிகளையும் காப்பாற்ற வேண்டும். நானும் சொர்கத்திற்கு போக வேண்டும். எல்லோரும் வாழ வேண்டும். என்ன செய்யலாம் என்று யோசிக்கலானார் தர்மபுத்திரர்.

என்ன செய்தார் தெரியுமா? நாயின் மீதிருந்த கிருமிகளை எல்லாம் தன் உடல் மீது போட்டுக் கொண்டார். இப்போது கிருமிகளும் பிழைத்தன. நாய்க்கும் நன்மை பிறந்தது. கிருமிகளின் துன்பத்தையும் தன் துன்பமாக நினைத்து தன்னையே தியாகம் செய்தார் தருமர்.

பிறர் துன்பத்தைத் தன் துன்பம் போல் நோக்காதவனிடம் அறிவிருந்து என்ன பயன் என்றார் வள்ளுவர். இங்கே தர்மபுத்திரர் பிறர் துன்பத்தைத் தன் துன்பம் போல கொண்டு அவர்களைக் காக்க அறிவை உபயோகப்படுத்துகிறார். அறிவும் கருணையும் ஒன்றாக இருந்தால் அதுவே சொர்கத்திற்கு வழி என்று ஒரு கதா பாத்திரத்தின் வடிவில் நின்று அற்புதமாக விளக்குகிறார் தர்மபுத்திரர்.

இவ்வாறு பிறரின் துன்பத்தை தன் துன்பமாகவே கருதிய தர்மருக்கு இந்திரனும், எமதர்மராஜனும் காட்சிதந்து அவரை அன்போடு சொர்கத்திற்கு அழைத்துச் சென்றனர்.

இந்த அவசர யுக வாழ்க்கையில் பெற்ற தாய் தந்தையரின் துன்பத்தைக் கூட தனது துன்பமாக ஏற்று கருணையோடு காக்கும் குணம் இயந்திரமயமான மனிதர்களிடம் இருப்பதில்லை என்று பரவலாக அறியப்படுகிறது. ஆனாலும் நமக்குள்ளே இருக்கும் குறைந்தபட்ச இரக்க உணர்வை வெளிப்படுத்துவோம். அனைவரிடத்தும் அன்பும் கருணையும் காட்டியே வாழ முயல்வோம். அதுவே நமது கடமையென நமது புராணங்களும், இதிகாசங்களும், ஆன்மீகமும் நமக்கு போதிக்கின்றன. அதையே பின்பற்றி வாழ்ந்து நாமும் அமைதி என்ற சொர்கத்தை எய்துவோமாக.

Sunday, March 28, 2010

மரணத்திற்கு அப்பால் - 12எமதர்மனே! மரணத்திற்குப் பிறகு மனிதன் வாழ்கிறான் என்று சிலரும், இல்லை என்று சிலரும் கூறுகின்றனர். உண்மை என்ன?

இது நசிகேதன் எமதர்மனிடத்தில் கேட்டது. அதற்கு எமதர்மன் பகர்ந்த விடையும் அது சார்ந்த விளக்கங்களும் தான் இது வரை நாம் பார்த்து வந்தோம். மேலும் தொடர்ந்து செல்வதற்கு முன் நாம் வந்த பாதையைச் சுருக்கமாகச் சற்றே திரும்பிப் பார்ப்போம்.

தந்தையின் கோபமான கட்டளையால் எமலோகத்தை அடைந்த நசிகேதன் அங்கே எமனுக்காக காத்திருக்க நேருகிறது. நசிகேதனை காத்திருக்க வைத்தமைக்காக எமதர்மன் நசிகேதனுக்கு மூன்று வரங்களைக் கொடுக்கிறான். அதில் மூன்றாவதாக நசிகேதன் கேட்ட வரம் தான் 'மரணத்திற்கு அப்பால் மனிதனுக்கு நடப்பது என்ன?' என்பதை அறிந்துகொள்ள வேண்டும் என்ற வரம்.

பெரிய தயக்கத்திற்கு பிறகு எமதர்மன் நசிகேதனுக்கு அவற்றை விளக்குகிறார். அதைப் பற்றி கூறுவதே கட உபநிஷதம்.

இங்கே எமதர்மன் மனிதன் ஆத்ம சுவரூபமானவன் என்றும் உடல் வேறு ஆத்மா வேறு என்பதை முதலில் நசிகேதனுக்குப் புரியவைக்கிறார். பின் ஆத்மா எத்தைகையது என்றும் உடலில் எங்கே இருக்கிறது என்பதையும் எடுத்துச் சொல்லி ஆத்மா பற்றிய ஒரு புரிதலை நசிகேதனுக்கு உண்டாக்குகிறார். பிறகு ஆத்மாவின் சக்தியைப் பற்றியும் இறைவன் என்கிற கடைசிப் புகலிடத்தை அடைவதற்கான வழி என்ன என்பதையும் ஒரு வரிசைக்கிரமமாக விளக்கிச் சொல்கிறார். இந்த வரிசையைச் சற்றே சுருக்கமாகப் பார்ப்போம்.

இதுவரை நசிகேதனுக்கு ஆன்மா பற்றி எமதர்மன் விளக்கியது:

1. மனிதன் உடல் வேறு ஆன்மா வேறு.

2. ஆன்மா என்பது சலனமற்றது. நிரந்தரமானது. அது அழியாதது. மீண்டும் பிறப்பெய்தக் கூடியது.

3. ஆன்மா தொப்புளிலிருந்து ஒரு ஜான் உயரத்தில் இதயக்குகையில் ஒரு கட்டைவிரல் அளவில் இருக்கக்கூடியது.

4. புலன்களை ஒரு தேரோட்டி போல கட்டுப்படுத்துபவன் மட்டுமே அதனை உணர முடியும்.

5. உலகப் பொருட்கள், மனம், புத்தி, ப்ரபஞ்ச ஆற்றல் இவற்றையெல்லாம் முழுமையாக வசப்படுத்தினால் கடைசிப் புகலிடமான இறைசக்தியை அடையலாம்.

6. பேச்சைக் குறைத்தால் மனம் வசப்படும், மனம் வசப்பட்டால் புத்தி விழிப்புற்றிருக்கும், புத்தி விழிப்புற்றவன் ஆன்மாவை அறிவான்.


இவ்வாறு எமதர்மன் பல விஷயங்களை விளக்கமாகக் கூறியதை வெவ்வேறு உதாரணங்களுடன் இதுவரைப் பார்த்தோம். இனி இதற்கும் மேலே பயணித்தால் மரணத்தை வெல்லக்கூடியவன் யார், மரணத்திற்கு பிறகு ஆன்மா என்ன நிலையை அடைகிறது என்று எமதர்மன் மேலும் விளக்குகிறார். அவற்றைப் பார்ப்போம்.

எமதர்மன் மேலும் தொடர்கிறார், "எழுங்கள், விழியுங்கள், தகுந்த குருவை அடைந்து அனுபூதி பெறுங்கள். கூரான கத்தியின் முனைமீது நடப்பது போன்று இறைநெறி கடினமானது என்று சான்றோர்கள் கூறுகின்றனர்."

"ஒலி, தொடு உணர்ச்சி, காட்சி, சுவை, மணம் என்று புலன்களால் உணரக்கூடிய அனைத்தையும் கடந்த, அழிவற்ற, என்றென்றும் உள்ள, ஆரம்பம் இல்லாத, முடிவற்ற, புத்தியைவிட மேலான நிலையான இறைவனை அனுபூதியில் உணர்பவன் மரணத்தின் பிடியிலிருந்து விடுபடுகிறான்."

மரணம் என்பது ஒரு நிகழ்வு. அந்த நிகழ்வின் போது உடலும் மனமும் ஒரு வித அவஸ்தைக்கு உள்ளாகிறது என்கிறார்கள் பெரியோர்கள். ஆன்மாவை உணர்ந்து அதனோடு ஒன்றிப் போகிறவன் உடல் வேறு ஆன்மா வேறாகப் பிரியும் தருணத்தை உணரமாட்டார்கள். எனவே அவர்கள் மரணம் என்கிற அவஸ்தையிலிருந்து விடுபடுகிறார்கள். ஏனெனில் ஏற்கனவே அவர் ஆன்மாவாகவே வாழ்ந்து கொண்டிருப்பதால் உடலை விட்டுப் பிரியும் போதும் மரணம் என்று உணராமலேயே வாழ்ந்துகொண்டே இருக்கும் நிலையை அடைவார்கள்.

அதற்கு நாம் செய்ய வேண்டியதெல்லாம் நாம் ஐம்புலன்களால் உணரக்கூடிய அனைத்தையும் கடந்த ஒரு நிலையை உணர வேண்டும். இதற்கு மனதை அமைதிப்படுத்தி ஆழ்மன அமைதியை உணரச்செய்யும். தியானமும் அதற்கான தொடர் பயிற்சியும் மட்டுமே கை கொடுக்கும். பொதுவாக மனத்தால் எதையும் நினைக்காமல் சலனமற்ற முறையில் அமைதியாக ஒரு மணிநேரம் உட்கார்ந்திருந்தாலே யோகமாக கருதப்படுகிறது. சலனமற்ற மனமே ஆன்மாவைப் பற்றி சிந்திக்கச் செய்யும். சலனமற்ற மனமே இறைநிலையை உணரச்செய்யும். இந்த வேகமாக இயங்க வேண்டிய உலகில் இதற்கென்று நேரம் ஒதுக்கி பயிற்சி எடுத்தாலொழிய இந்த லட்சியத்தை அடைய முடியாது.

இந்த இடத்தில் உபநிஷத்தைக் கற்பதாலும் கேட்பதாலும் ஏற்படும் நன்மைகள் கூறப்படுகின்றது.

நசிகேதமுபாக்யானம் ம்ருத்யு ப்ரோக்தம் ஸனாதனம்|
உக்தா ஷ்ருத்வா ச மேதாவீ ப்ரஹ்ம லோகே மஹீயதே||

"நசிகேதனுக்கு எமதர்மன் கூறிய இந்தப் பழமையான விஷயத்தை விழிப்புணர்வு பெற்ற ஒருவன் சொல்லவும் கேட்கவும் செய்தால் உயர் உலகங்களில் போற்றப்படுகிறான். மேலான, பொருளாழம் மிக்க இந்த உபநிஷதத்தைச் சான்றோர்களின் சபையிலோ சிரார்த்த காலத்திலோ தூயவனான ஒருவன் படித்தால் அது எல்லையற்ற பலனைத் தருகிறது".

பொதுவாக உபநிஷதங்கள், பகவத் கீதை போன்றவற்றைப் படிப்பது புண்ணிய செயலாகவே கருதப்படுகிறது. கேரளாவில் உள்ள கோவில்களில் இன்றைக்கும் தினசரி யாரேனும் பகவத் கீதையை சுலோகத்துடன் படித்து அவற்றை எடுத்துச் சொல்லிக் கொண்டு இருப்பார்கள். இது தினசரி ஒரு சாதாரண நிகழ்வாகும். இதற்கென்று பெரிய சொற்பொழிவாளர் வரவேண்டியது இல்லை. அதனைப் படிப்பதையும் அமர்ந்து கேட்பதையும் ஒரு புண்ணியமாகவே கருதுவதால் (தமிழர்கள் போல் அல்லாமல் அவர்கள் இது போன்ற விஷயங்களுக்கு மரியாதை கொடுப்பதால்) இது கேரளக் கோவில்களில் தொடர்கிறது.

மேலும் உபநிஷதத்தை வெறுமனே வாசிப்பதால் பலனில்லை என்றும் அதன் உட்பொருளை தூய உள்ளத்தோடும் உணரத்துடிப்பவரே உபநிஷதங்கள் படிப்பதனால் பலனடைவார்கள் என்றும் உபநிஷதத்தின் முக்கியத்துவம் பற்றி கூறப்படுகிறது.

ஆக இதுவரை படித்ததை மனதில் நிறுத்தி அசைபோடுங்கள். ஆன்மாவை உணர முயற்சியுங்கள்.

இனி கட உபநிஷத்தின் இரண்டாம் பாகம் தொடங்குகின்றது. அங்கே எமதர்மன் நசிகேதனுக்கு "அதுவே நீ"" என்று ஆன்மாவை வெவ்வேறு கோணங்களில் விளக்குகிறார். மேலும் மரணத்திற்கு பின்னால் ஆன்மாவிற்கு என்ன நடக்கிறது என்றும் விளக்கமாக நசிகேதனுக்கு விளக்குகிறார். இனி வரும் நாட்களில் இன்னும் ஆழமாக ஆன்மாவைத் தரிசிப்போம்.


கொசுறு: உபநிஷத்தும், ஸ்ரீமத் பாகவதம் போன்றவற்றைப் படிப்பதற்கு முன்னால் எளிய பகவத் கீதையை அன்பர்கள் ஓரிரு முறை படிப்பதும் மிகவும் நல்லது. ஆத்மா பரமாத்மாவை பற்றிய சிந்தனைகளுக்கு பகவத்கீதையே வாசற்கதவாக இருக்கும். மேலும் அனைத்து உபநிஷத்துக்களின் எளிமையான சாரமே பகவத் கீதை என்றும் பெரியோர்களால் வழிகாட்டப்படுகிறது. எனவே பகவத் கீதையை ஒரு முறையேனும் ஒருநிலையான மனதுடன் முழுமையாக வாசித்தால் நல்லது.


மரணத்திற்கு அப்பால் - 13

Saturday, March 27, 2010

பஞ்சதந்திரக் கதைகள் - 4 - நான்கு நண்பர்கள் கதை!


அமராவதி நகரத்தில் நான்கு நண்பர்கள் இருந்தார்கள். அவர்களை வறுமை மிகக் கொடுமையாக வாட்டியது. எனவே அவர்கள் தேஸாந்திரம் சென்று பிழைத்துக் கொள்ள முடிவெடுத்துப் புறப்பட்டார்கள். அப்படிச் சென்றவர்கள் ஒரு ஊரை அடைந்ததும் அங்கு சக்தி வாய்ந்த ஒரு யோகி இருப்பதாக அறிந்தார்கள்.

அவரிடம் சென்று தங்களின் தீராத வறுமைக்கு ஏதாவது தீர்வு கூறும்படி கேட்கலாம் என்று தீர்மானித்தார்கள். உடனே அவரிடம் சென்றார்கள். யோகி இந்த நான்கு நண்பர்களையும் பார்த்து "யார் நீங்கள்? எம்மிடம் வரக் காரணமென்ன?" என்று கேட்டார்

நண்பர்கள் நால்வரும் தங்கள் குறைகளைக் கூறினார்கள். அடிகளே! நாங்கள் கொடிய வருமையால் துன்புற்றிருக்கிறோம். வறுமை போக்க பொருள் தேடி தேசாந்திரமாக புறப்பட்டுள்ளோம்" என்று கூறினர்.

மேலும் "நீங்களோ பெரிய யோகி. எங்கள் நால்வருக்கும் பொன்னும் பொருளும் கிடைக்கும் வழியைக் காட்டித்தாருங்கள். எங்கள் கோரிக்கையை ஏற்று அருள்புரியுங்கள். இல்லையேல் இங்கேயே உயிர் விடுவோம்" என்று கெஞ்சினார்கள் அந்த நால்வரும்.

யோகிக்கு அவர்கள் மீது இரக்கம் உண்டானது. அவர் பொருள்கிடைக்க தான் வழி செய்வதாகக் கூறினார். பின் நால்வர் தலையிலும் பருத்தியாலான திரிசீலைகளை வைத்தார். “இதோ பாருங்கள்! இத்திரிசீலையைத் தலையில் வைத்தபடியே இமயமலையை நோக்கிச் செல்லுங்கள், போகும்போது எவன் தலையிலிருந்து திரிசீலை எவ்விடத்தில் விழுகிறதோ அவனுக்கு அவ்விடத்தில் பொருள் கிடைக்கும். அதாவது புதையல் கிடைக்கும்”, என்று கூறி அனுப்பினார்.

இதைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்த அந்நால்வரும் அத்துறவியின் ஆணைப்படி இமையமலையை நோக்கி நடந்தார்கள்.

சிலநாட்கள் நடந்திருப்பார்கள், ஒருவரின் தலையிலிருந்த திரிசீலை கீழே விழுந்தது. உடனே அவன் அங்கு தோண்டிப் பார்த்தான். செம்பு உலோகம் எக்கச்சக்கமாக இருந்தது. மகிழ்ந்துபோன அவன் மற்ற மூவரையும் பார்த்து “நீங்களும் வேண்டிய மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்” என்றான்.

ஆனால் அவர்களோ “முட்டாளாகப் பேசாதே. இதனால் நம் வறுமை எந்த அளவும் குறையாது. நீ வேண்டுமானால் கொண்டு போ" என்று கேலியாகக் கூறி வேகமாக நடக்கவும் செய்தனர். முதலாமவனோ தன்னால் இயன்ற அளவுக்குத் செம்பு உலோகத்தை எடுத்துக்கொண்டு தன் ஊர்நோக்கித் திரும்பிவிட்டான்.

மீதமிருந்த மூவரும் தொடர்ந்து சில மைல்கள் தூரம் நடந்திருப்பார்கள், மூவரில் ஒருவன் தலையிலிருந்த திரிசீலை கீழே விழுந்தது.

உடனே அந்தத் திரிசீலைக்குரியவன் அந்த இடத்தில் தோண்டினான். வெள்ளிக் கட்டிகள் ஏராளமாக இருந்தன. “நாம் இவைகளை எடுத்துக் கொண்டு ஊருக்குப் போகலாம்”, என்றான் அந்த இரண்டாமவன்.

ஆனால் மற்ற இருவருக்கும் ஆசை அதிகமாகியது. முதலில் செம்பு பிறகு
வெள்ளி என்றால் இன்னும் போய்ப் பார்ப்போம். நமக்கு தங்கம் வைரம் என்று மேன்மேலும் கிடைக்கலாம் என்று எண்ணலாயினர். உடனே மீதமிருந்த இருவரும் வெள்ளிக்கட்டிகள் கிட்டியவனைப் பார்த்து “இது யாருக்கு வேண்டும்? இது நம் வறுமையை முற்றிலும் ஓட்டாது. நீ வேண்டுமானால் கொண்டு செல்”, என்று கூறி நடக்கலானார்கள்.

இரண்டாமவன் அவ்வெள்ளிக் கட்டிகளை எடுத்துக் கொண்டு தன் ஊர்நோக்கித் திரும்பினான். சில மைல்கள் இருவரும் நடந்தார்கள்.

ஒருவன் தலையிலிருந்த திரிசீலை கீழே விழுந்தது. அவன் அங்கு தோண்டினான். பொன் கட்டிகள் புதையலாக இருந்தன. “நாமிருவருமே இதை எடுத்துக்கொண்டு ஊர் போய்ச் சேரலாம் வா”, என்றான் மூன்றாமவன் மற்றவனிடம்.

ஆனால் கடைசிக்காரனுக்கு இப்போது பேராசை தொற்றிக் கொண்டுவிட்டது. அவன் இன்னும் மேலே போய்ப் பார்க்க எண்ணினான். அதனால் அவன் தங்கக்கட்டி கிடைத்தவனிடம் அலட்சியமாக "இது யாருக்கு வேண்டும்? எத்தனை நாட்களுக்கு இது நம் வறுமையை போக்கும்? இன்னும் போனால் எனக்கு நவரத்தினக் குவியலே கிடைக்கும். நீ வேண்டுமானால் எடுத்துக் கொண்டு உன்னூர் போய்ச் சேர்" என்று துச்சமாகப் பேசிச் சென்றுவிட்டான்.

மூன்றாமவன் அத்தனைத் தங்கக் கட்டிகளையும் மூட்டை கட்டிக்கொண்டு தன் சொந்த ஊர் நோக்கித் திரும்பினான்.

முதலாமவனுக்கு செம்பு கிடைத்தது, இரண்டாமவனுக்கு வெள்ளி கிடைத்தது, மூன்ராமவனுக்கோ தங்கக் கட்டிகள் கிடைத்தது, அப்படிஎன்றால் நான்காவதாளான தனக்கு நவரத்தினங்கள் தானே கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நான்காவது ஆள் நடந்து கொண்டே இருந்தான் இமையமலையை நோக்கி. நடக்க, நடக்க அவனுக்குப் பசியும் களைப்பும் அதிகமாகி தடுமாறியது. அப்பொழுது அவனெதிரில் ஒருவன் எதிர்பட்டான். அவன் தலையில் ஒரு சக்கரம் சுழன்று கொண்டிருந்தது. உடலெல்லாம் இரத்தம் வழிந்து கொண்டிருந்தது.

அதைப் பார்த்த நான்காமவன் அவனை நோக்கி நீ யார்? உன் தலைமேல் ஏன் சக்கரம் சுழல்கிறது? என்று கேட்டான். அப்படி கேட்கும்போதே அந்தச் சக்கரம் கேட்ட அந்த நான்காமவனான பேராசைக்காரன் தலைமேல் வந்துவிட்டது.

திடுக்கிட்ட அவன் “இதென்ன அநியாயம்? நான் கேட்கும்போதே உன் தலையிலிருந்தது என் தலைமேல் வந்து இந்தச் சக்கரம் சுற்ற ஆரம்பித்துவிட்டதே” என்று பதறினான்.

இதுவரை நான் இந்தச் சக்கரத்தின் பிடியில் சிக்கிக்கொண்டு துயரப் பட்டுக்கொன்டிருந்தேன்.

இன்று காலை குபேரன் வந்து, ஒருவன் தலையில் திரிசீலையோடு வருவான், வருபவன் பேசுவான், பேசும்போது இந்தச் சக்கரம் அவன் தலைக்கு மாறி உனக்குச் சாபவிமோசனம் ஆகும் என்று கூறினான். அவன் கூறினபடி நீ வந்தாய். வந்து என்னை விடுவித்தாய். நான் வருகிறேன் என்று அவன் புறப்பட்டுப் போனான்.

"சரி எனக்கு எப்போது இதிலிருந்து விமோசனம் கிடைக்கும்" என்றான் நாலாமவன்.

"அடுத்த பேராசைக்காரன் வரும் போது" என்றான் விடுதலையானவன்.

பாடம்: பேராசை பெருநஷ்டம். நமக்கென்று கிடைக்கும் பொருளை வைத்து இன்புற்று வாழத் தெரியாதவன் எதையும் அனுபவிக்காமல் இருப்பதையும் இழந்து நிற்பான்.

நம் பாரம்பரிய கதைகளை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வது நமது கடமையே ஆகும்.

Friday, March 26, 2010

குஷ்புவும் திருமணத்திற்கு முன்னால் உடலுறவும்!


இனி தமிழ் சமுதாயம் இவர் போன்ற நடிகைகளிடமிருந்துதான் ஒழுக்கத்தையும் கலாச்சாரத்தையும் கற்றுக்கொள்ள வேண்டும்.


சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் குஷ்புவின் வழக்கிற்கான தீர்ப்பில் திருமணத்திற்கு முன் செக்ஸ் வைத்துக் கொள்வது தவறல்ல என்று கூறியிருப்பது பெரும் சர்ச்சையை உண்டு பண்ணி இருக்கிறது.

பொதுவாக ஒரு வழக்கிற்கான தீர்ப்பை வெளியிடும் முன்னர் தீர்ப்பு அவ்வாறு வழங்கப்பட்டதை விளக்கி அதனால் இந்தத் தீர்ப்பை கொடுக்கிறோம் என்ற வண்ணத்தில் நீதிபதிகள் சில கருத்தை முன் வைப்பதுண்டு. அப்படித் தெரிவிக்கப்படும் கருத்து அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட இருவர் சார்ந்ததாக இருக்கும். ஆனால் ஒரு சமூகத்தைச் சார்ந்ததாக இருந்தால் அந்த தீர்ப்பினால் சமூகத்தில் ஏற்படப்போகும் தாக்கம் எத்தகையது என்பதை நீதிபதிகள் யோசிக்க வேண்டும்.

இந்த வழக்கைப் பொறுத்தவரை சட்டப்படி தவறல்ல என்பதால் திருமணத்திற்கு முன்னால் உடலுறவு கொள்ளலாம் என்கிறார்கள் நீதிபதிகள். ஆனால் சட்டப்படி தவறில்லை என்பதற்காகவே எல்லோரும் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்ற எண்ணம் பரப்பப்படுவது சமூகத்திற்கு நல்லதல்ல. தாயும் மகனும் உடலுறவு கொண்டால் கூட சட்டப்படி தவறில்லை என்பதற்க்காக நீதிபதியின் இந்தத் தீர்ப்பை வரவேற்றுப் பேசுபவர்கள் அவ்வாறு தங்கள் வீட்டில் நடந்து கொள்வார்களா? அப்படி ஒரு முறையற்ற உறவு பற்றிய வழக்கு வந்தால் அதற்கும் இந்த நீதிபதிகள் இதே போல சட்டப்படி தவறில்லை என்றே தீர்ப்பு சொல்வார்களா?

நித்தியானந்தா கூட சட்டப்படி குற்றம் செய்யவில்லை. ஆனால் ஆத்திகர் நாத்திகர் என்ற பேதமில்லாமல் அதற்கு மட்டும் அனைவரும் கொதிப்பது ஏன்? சட்டப்படி குற்றம் அல்ல என்பதற்காக எல்லா குற்றச் செயல்களையும் நாம் சட்டமாக்கி விட முடியாது தானே!

இந்து திருமணச் சட்டம் மற்றும் இஸ்லாம் திருமணச் சட்டம் போன்றவை திருமணத்திற்கு முன்பான வாழ்க்கையை எப்படி வரையறுத்துள்ளது என்பதை நீதிபதி விளக்கி இருக்க வேண்டும். இந்து மற்றும் இஸ்லாமியர்களுக்கான திருமணச் சட்டங்களில் திருமணத்திற்கு முன்பான உடலுறவுக்கு அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறதா என்பதை தெளிவாகக் குறிப்பிட்டு பின்னர் இந்த தீர்ப்பை வெளியிட்டிருக்க வேண்டும்.

அப்படி இல்லாமல் பொதுப்படையாக எல்லோருக்கும் இந்தத்தீர்ப்பு செல்லுபடியாகும் என்றால் எதற்கு ஒவ்வொரு மதத்திற்கும் அவரவர் மத உணர்வுகளை மதிக்கும் பொருட்டு தனித்தனியாக திருமணச்சட்டம் வைக்கப்பட்டிருக்கிறது என்பதையும் நீதிபதிகள் தான் விளக்க வேண்டும்.

சமூகத்தின் கட்டமைப்பைப் பாதுகாக்கவும், மனிதர்களின் உணர்வுகளைப் பாதுகாக்கவும் மனிதர்களால் எழுதப்பட்டது தானே சட்டம் என்பது. ஆனால் அத்தகைய சட்டம் சமூகத்திற்கு எதிராகவும் மனிதர்களின் உணர்வுகளை பாதிப்பதாகவும் இருந்தால் அந்தச் சட்டம் எதற்காக? அப்படி ஒரு சட்டம் புத்தகத்தில் எதற்காக இருக்க வேண்டும்? மனிதர்களின் உணர்வுகளையும் வாழ்க்கையையும் பாதுகாப்பதற்க்காக உருவாக்கப்பட்ட சட்டம் அவர்களுக்கு எதிராகவே செயல்படும்போது அத்தகைய சட்டம் இருக்க வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி எழுகிறது.

உலகின் எல்லா நாடுகளும் தங்கள் மத மற்றும் சமூகக் கட்டுப்பாடுகளைச் சார்ந்தே தங்கள் சட்டங்களை இயற்றி இருக்கின்றன. இந்தியாவில் மட்டும் தான் மத ரீதியாகவும் இல்லாமல் சமூகக் கட்டுப்பாடு சார்ந்தும் இல்லாமல் கார்பரேஷன் குப்பைத்தொட்டி போல ஒரு சட்டத்தை வைத்திருக்கிறார்கள். இந்தியாவைப் பொறுத்தவரை சமூகக்கட்டுப்பாடு என்றாலே அது இந்துமதக் கட்டுப்பாடு என்றே புரிந்துகொள்ளப்பட்டிருப்பதால் அவற்றை மதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்ற விதத்திலேயே சட்டத்தைக் கையாள்கிறார்கள் என்பது இந்த சமூகத்திற்கு வாய்த்த கொடுமை.

தொலைக்காட்சி ஒன்றில் பேட்டியளித்த ஒரு முஸ்லீம் பெண் இந்த தீர்ப்பை கடுமையாக கண்டித்தார். இது குடும்பம் என்கிற அமைப்பை உடைக்கும் தீர்ப்பு என்றும், பணப்பரிமாற்றம் இல்லாத விபச்சாரத்தை இந்த தீர்ப்பின் மூலம் தூண்டிவிடப்பார்க்கிறார்கள் என்று வன்மையாக கண்டித்தார். மேலும் குஷ்பு பற்றிய பேச்சு வரும்போது, ஏற்கனவே ஒழுக்கம் இல்லாதவர்கள் ஒழுக்கம் இல்லாத வாழ்க்கையைத்தான் மற்றவர்களிடமும் போதிப்பார் என்றும் போட்டுத் தாக்கினார்.கலாச்சார ஆசிரியை

அதே நிகழ்ச்சியில் பேசிய இந்து அமைப்பிலிருந்து வந்த ஒருவரோ, குஷ்பு திருமணத்திற்கு முன்னாடியோ பின்னாடியோ உடலுறவு வைத்துக் கொள்வது சரி என்று நினைத்தால் அது சுந்தர் சி யின் பிரச்சனை. சுந்தர் சி அனுமதித்தால் அவர் எப்படி வேண்டுமானாலும் வாழலாம். ஆனால் அந்தக்கருத்து சமூகத்தின் மீது திணிக்கப்படுவது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று வாதிட்டார்.

திருமணத்திற்கு முன்னால் எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்றால் திருமணத்திற்கு அவசியமே இல்லையே. அதைத்தானே இந்த இத்தாலி நாட்டு அரசாங்கமும் நாத்திக அரசாங்கமும் விரும்புகிறது. ஏற்கனவே இந்தியாவின் கலாச்சாரப் பாரம்பரியத்தை அழிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் மிஷனரிகள் இந்தத் தீர்ப்பினால் ஒயின் விருந்து வைத்துக் கொண்டாடி இருப்பார்கள்.

இப்படிப்பட்ட சூழல் பெருகவேண்டும் என்று நினைத்தால் நிம்மதியான ஒரு மன வாழ்க்கையை எல்லோரும் பெறுவது சாத்தியமில்லாத ஒன்றாகி விடும். ஒவ்வொருவரும் திருமணத்திற்குப் பின்னால் தன் மனைவியையோ கணவனையோ எப்படியும் யாருடனோ வாழ்ந்தவ(ள்)ர் தானே என்ற ஒரு அலட்சியப் போக்குடனேயே வாழ்க்கை நடத்துவார்கள். ஒருவர் மீது ஒருவருக்கு அக்கரை இருக்காது. பின்னர் மேலை நாட்டு விபச்சாரக் குடும்ப வாழ்க்கை போல இங்கேயும் அலட்சியமான ஒரு குடும்ப வாழ்க்கையே மிஞ்சும். பிறக்கும் பிள்ளைகளும், எப்படியும் இவர்கள் நம்மைப் பெற்றவர்கள் இல்லை. இவர்களுக்காக நாம் ஏன் கஷ்டப்பட வேண்டும் என்று தன் போக்கில் வாழத்துவங்கி விடுவார்கள். குடும்பம் என்ற அஸ்திவாரம் ஆட்டம் கண்டு போகும். பிறகு அமெரிக்கா போன்றே குடும்பமும் நாடும் ஸ்திரத்தன்மையற்ற வாழ்க்கையையே எதிர் நொக்கி இருக்கும்.

யாருக்கும் நாகரீகமோ பாரம்பரியமோ இருக்காது. உலக நாடுகள் எல்லாம் பொருளாதாரத்தில் கீழே விழுந்து சிதறிய போது இந்தியா பெரிய பாதிப்பு இல்லாமல், விழாமல் தனது பொருளாதாரத்தைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறதே, அதற்குக் காரணம் நமது குடும்பம் குடும்பமாக வாழும் அமைப்புதான் என்று உலகத்தின் அனைத்து பொருளாதார நிபுணர்களும் ஒத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நாமோ கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கல் எரிவதை பெருமையாக நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

குஷ்புவுக்கும் இரண்டு பெண்குழந்தைகள் இருக்கிறார்கள். சுந்தர் சியும் குஷ்புவும் மேலை நாட்டு ஸ்டைலில் தன் பெண்பிள்ளைகளின் புத்தகப் பையில் கருத்தடை மாத்திரைகளை இன்று முதல் கொடுத்து அனுப்புவார்கள் என்று நம்பலாம். ஆனால் அது அவர்கள் வீட்டோடு போகட்டும்.கலாச்சார ஆசிரியை

விவேகானந்தரின் சொற்பொழிவுத் துளிகள்!


என் துடிப்பு மிக்க சகோதர சகோதரிகளே, இந்நாட்டின் இளம்பிராயத்தவர்களே! ஒன்றை மட்டும் நன்றக கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள். ஆன்மீக லட்சியத்தைப் புறக்கணித்துவிட்டு மேலை நாட்டு லௌகீக நாகரீகத்தின் பின்னால் நீ செல்வாயானால் அதன் விளைவாக மூன்றே தலைமுறைகளில் உனது இனம் அழிந்து போய்விடும். ஏனென்றால், நமது நாட்டின் முதுகெலும்பு முறிந்து, எந்த அடிப்படையின் மீது இந்நாட்டின் கட்டிடம் எழுப்பப்பட்டுள்ளதோ அந்த அடித்தளம் ஆட்டம் கண்டுவிடும். மேலை நாட்டு நாகரீகத்தின் பின்னால் சென்றால் நாலா பக்கங்களிலும் அழிவைத்தான் நீ காண்பாய்.

இந்துக்கள் தங்களுடைய கடந்த கால வரலாற்றை ஆழ்ந்து படிக்கும் அளவிற்கு ஏற்ப, அவர்களின் எதிர்காலம் மேலும் மேலும் பெருமைக்கு உரியதாக அமையும்.

யார் ஒருவர் இந்தியாவின் கடந்த காலப் பெருமைகளை வீடுதோறும் கொண்டு சென்று போதிக்கிறாரோ, அவரே நம் தாய்நாட்டிற்கு மிகப் பெரிய அளவில் நன்மை செய்தவராவார்.

இந்தியக் கலாச்சாரத்தின் வீழ்ச்சி பண்டைக் காலத்தில் நிலவிய சட்டங்களும் பழக்க வழக்கங்களும் தவறானவையாக இருந்த காரணத்தால் ஏற்பட்டுவிடவில்லை. மாறாக, அவற்றுக்கு உரிய ஞாயமான முடிவு கிட்டும் வரையிலும் அவற்றைக் கடைப்பிடிப்பதற்கு அனுமதி அளிக்கப்படாத
காரணத்தால் தான் இந்த வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது.

செய்து முடிக்கப்பட வேண்டிய பணிகள் மிகவும் ஏராளமாக இருக்கின்றன. நம்மிடம் அறிவு இருக்கிறது. ஆனால் பணி புரிவதற்கான கைகள் தான் இல்லை. நம்மிடம் வேதாந்தக் கருத்துக்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு உரிய ஆற்றல் இல்லை. நமது நூல்களில் உலக சமத்துவம் பற்றிய கொள்கை கூறப்பட்டிருக்கிறது. ஆனால் நடைமுறை வாழ்க்கையிலோ நாம் பெருமளவுக்கு வேற்றுமை பாராட்டுகிறோம்.

இதே இந்தியாவில் தான், மிகவும் உயர்ந்த சுயநலமற்ற பயன்கருதாத பணியைக் குறித்த உண்மைகள் போதிக்கப்பட்டன. ஆனால் நடைமுறையில் நாம் மிகவும் கொடூரமானவர்களாக இருக்கிறோம். இதயம் இல்லாதவர்களாக இருக்கிறோம். நமது சதைப் பிண்டமாகிய உடலைத் தவிர வேறு எதைப்பற்றியுமே நினைக்க முடியாதவர்க்ளாக இருக்கிறோம்.

செல்வச் செழிப்பை இழந்து, அதிர்ஷ்டத்தை இழந்து, பகுத்தறிவையும் அறவே இழந்து, நசுக்கப்பட்டு என்றைக்கும் பட்டினியால் வாடியபடி சண்டை சச்சரவுகளில் ஈடுபட்டவர்களாகவும் பொறாமை கொண்டவர்களாகவும் உள்ள இந்த இந்திய நாட்டு மக்களை, யாரேனும் ஒருவர் மனப்பூர்வமாக நேசித்தால், இந்தியா மீண்டும் விழித்துக்கொள்ளும் என்று நான் தீர்க்கமாக நம்புகிறேன்.

எப்போது, பரந்த இதயம்படைத்த நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் வாழ்க்கையின் ஆடம்பரங்களைத் துறந்துவிட்டு, ஆதரவற்ற நிலை மற்றும் அறியாமை ஆகிய நீர்ச்சூழலில் சிறிது சிறிதாக மூழ்கிச் சென்று கொண்டிருக்கும் நம் நாட்டின் கோடானு கோடு மக்களின் நல்வாழ்விற்காக வருந்தி முழு ஆற்றலையும் கொடுத்து உழைக்க முன்வருவார்களோ, அப்போது தான் இந்தியா விழித்தெழும்.

- சுவாமி விவேகானந்தர்


Sunday, March 21, 2010

முதல்வனும், முதல்வரும் - ஒரு நிழலும் ஒரு நிஜமும்!

நீங்கள் கீழே காணப்போகும் நிழல் பேட்டிக்கும் நிஜப்பேட்டிக்கும் ஒரு ஆச்சரியமான ஒற்றுமை இருக்கிறது. முதல்வன் படத்தில் பேட்டி காணும் அர்ஜுன் இக்கட்டான கேள்விகளை அடுக்கும் போது அதற்கு பதில் சொல்ல விரும்பாத ரகுவரன், குடிக்கத் தண்ணீர் கேட்பார். பின் கேமிரா ஓடுவதை நிறுத்தச் சொல்வார். தான் பேச விரும்பவில்லை என்பதை அவரது செய்கைகளால் வெளியிடுவார்.

அதே போலவே குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் செய்கைகளும் இருப்பதைக் காணலாம். இப்படி ஒரு பேட்டி நிகழ்ந்தால் நிஜத்தில் ஒருவர் எப்படி எல்லாம் செய்யக்கூடும் என்பதை இயக்குனர் ஷங்கர் தத்ரூபமாகவே வடிவமைத்திருந்திருக்கிறார் என்பது நன்றாகத் தெரிகிறது. முதல்வன் படம் வெளிவந்தது 1999 ல், கோத்ரா ரயில் எரிப்பினால் அப்பாவி இந்துக்கள் கொல்லப்பட்ட
சம்பவம்
நிகழ்ந்தது 2002.

வீடியோவும் சுட்டியும் கீழே!

நிழல் முதல்வர் ரகுவரனிடம் முதல்வன் அர்ஜுன் பேட்டி காணும் காட்சி!

நிஜ முதல்வர் நரேந்திர மோடியை கரன் தாப்பர் பேட்டி காணும் காட்சி!


Wednesday, March 17, 2010

மரணத்திற்கு அப்பால் - 11"ஆன்மா பிறப்பதில்லை, இறப்பதும் இல்லை. இது எதிலிருந்தும் உண்டானதில்லை. எதுவும் இதிலிருந்தும் உண்டாவதில்லை. இது பிறப்பற்றது, என்றென்றும் இருப்பது. நிலையானது, பழமையானது; உடம்பு அழிக்கப்பட்டாலும் அழியாதது."


ஐந்து குதிரைகளைக் கட்டுப்படுத்தி தேரைச் செலுத்தும் ஒரு தேரோட்டியைப் போல புலன்களை அடக்க வேண்டும் என்று எமதர்மன் விளக்குகிறார்.

இனி உலக மாயையும், புத்தியும், ஆன்மாவும் ஒன்றைவிட ஒன்று வலிமையானது என்பதை எமதர்மன் விளக்குகிறார்.

இந்த்ரியேப்ய: பராஹ்யர்த்தா: அர்த்தேப்யச்ச பரம் மன:|
மனஸஸ்து பரா புத்தி: புத்தேராத்மா மஹான் பர:|

"நசிகேதா! புலன்களைவிட உலகப் பொருட்கள் வலிமை வாய்ந்தவை. பொருட்களைவிட மனம் வலிமை வாய்ந்தது. மனத்தைவிட புத்தி வலிமை வாய்தது. மகிமை வாய்ந்ததான ஆன்மா புத்தியைவிட வலிமை வாய்ந்தது."

மஹத: பரமவ்யக்தம் அவ்யக்தாத் புருஷ: பர:|
புருஷான்ன பரம் கிஞ்சித் ஸா காஷ்ட்டா ஸா பராகதி:|

"மகிமை வாய்ந்ததான ஆன்மாவைவிட அவ்யக்தம் வலிமை வாய்ந்தது.(அவ்யக்தம் என்றால் ப்ரபஞ்சத்தின் ஆற்றல்) அவ்யக்தத்தைவிட இறைவன் வலிமை வாய்ந்தவர். இறைவனைவிட வலிமை வாய்ந்தது எதுவும் இல்லை. அவரே அறுகிப் பொருள், அவரே கடைசிப் புகலிடம்".

இவ்வாரு உலக நிகழ்விகளிலிலிருந்து இறைவன் வரை உயர்வானதை எடுத்துக் கூறுகிறார் எமதர்மன். இவ்வாறு கூறக்காரணம் இறைவனை அடையும் லட்சியத்திலிருந்து அதாவது இறைநிலையை நம் ஆன்மா பெற்று, நாமே இறைவன் என்று இரண்டர கலக்கும் நிலையிலிருந்து நாம் எவ்வளவு தூரம் கீழே இருக்கிறோம் என்பதை இதை வைத்தே நாம் புரிந்து கொள்ளலாம்.

'புலன்களை விட உலகப் பொருட்கள் வலிமை வாய்ந்தவை' என்கிறார். அதாவது உலகத்தில் இருக்கும் பொருட்கள் எல்லாமே நம் புலன்களைக் கவரக்கூடியதாக இருக்கிறது. இயற்கைக்கு மயங்குகிறோம். மலரைப் பார்த்தால் கண் மயங்குகிறது. வாசனை நாசியை இழுக்கிறது. அழகிய பறவைகள் கவனத்தை இழுக்கின்றன. அதன் சப்தங்கள் செவியை கவர்கின்றன. உணவின் சுவை நாவை கட்டுப்படுத்துகிறது. காமம் உடலைக் கவர்கிறது. இவ்வாறு உலகப் பொருட்கள் நம் புலன்கள் முழுவதையும் கவர்ந்து மனதைக் கவர்ந்து விடுவதால் புலன்களை விட உலகப் பொருட்கள் வலிமை வாய்ந்தவை என்பதை தெளிவுபடுத்துகிறார் எமதர்மன்.

ஆக நாம் முதலில் நம் புலன்களைக் கட்டுக்குள் கொண்டுவந்து இந்த உலகப் பொருட்களைக் காணும்போது அதனால் கவரப்படாத அளவிற்கு மனதைப் பக்குவப்படுத்த வேண்டும். அப்போது தான் புலன்களை விட வலிமை வாய்ந்த உலக பொருட்கள் மீதான மயக்கத்தை நாம் வெல்ல முடியும்.

உலகப் பொருட்களின் மீதான மயக்கத்தை வென்றால் அதற்கடுத்தபடியாக வலிமை வாய்ந்ததான மனத்தை வெல்ல முடியும். இப்படி படிப்படியாக உயர்வை அடையும் போதே இறைவனை அடைய முடியும். இவை யாவும் தொடர் முயற்சியாலு அதனைச் செய்யத் துணிவதாலும் மட்டுமே நடக்கும். அப்படி படிப்படியாக செய்தாலும் நடக்குமா, இறைநிலையை நாம் அடைய முடியுமா என்ற கேள்விகள் எழலாம்?.
இமயத்தின் சிகரம் பார்த்து மலைக்கக் கூடாது. முதல் அடி நம் காலடியில் தானே இருக்கிறது. நாம் தான் அடியெடுத்து அருகிலிருக்கும் அடுத்த அடியைத் தாண்ட வேண்டும். நம் அருகில் இருக்கும் தரையில் நாம் காலெடுத்து வைக்கத் தயங்கினால் சிகரத்தை எப்படித் தொட முடியும். அதே போல் தான் நம் உடம்பில் இருக்கும் புலன்களை கட்டுப்படுத்தி முதலில் உலக பொருட்களின் மீது உண்டாகும் மயக்கத்திலிருந்து விடுவித்தால் அடுத்ததும் சாத்தியம் ஆகும்.

இந்தப் படிப்படியான உயர்வுகளையே ஒன்றைவிட ஒன்று எவ்வாறு வலிமையாக இருக்கிறது என்றும் இறைநிலையை அடைய எங்கிருந்து பயிற்சியைத் தொடங்க வேண்டும் என்றும் அழகாக எடுத்துரைக்கிறார் எமதர்மன்.எமதர்மன் மேலும் தொடர்கிறார் "நசிகேதா! இந்த ஆன்மா எல்லா
உயிர்களிலும் மறைவாக உள்ளது; வெளிப்பட்டுத் தெரிவதில்லை. ஆனால் ஒருமைப்படுத்தப்பட்ட, நுண்ணிய புத்தியால் மகான்கள் இந்த ஆன்மாவைக் காண்கின்றனர்."

"அக நாட்டம் உடையவன் பேச்சை மனத்தில் ஒடுக்க வேண்டும். மனத்தை விழிப்புற்ற புத்தியில் ஒடுக்க வேண்டும். புத்தியை மகிமை வாய்ந்த ஆன்மாவில் ஒடுக்க வேண்டும். ஆன்மாவை அமைதியில் இருப்பிடமான இறைவனில் ஒடுக்க வேண்டும்."

பொதுவாக எண்ணங்கள் கட்டுப்பாட்டில் இல்லாத போது அதிகம் பேச்சு வெளிப்படும் என்பார்கள். பேச்சைக் குறைத்தால் எண்ணங்கள் குறையும். எண்ணங்கள் குறையும் போது புத்தி விழிப்படையும். குறிப்பாக தியானம் செய்பவர்கள் எண்ணங்களையே கட்டுப்படுத்துகிறார்கள். அதனால் அவர்களால் விழிப்புடன் பல விஷயங்களை கவனிக்க முடிகிறது.

உதாரணமாக தசாவதானி என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். ஒரே நேரத்தில் நடக்கும் பத்து விஷயங்களை கவனித்து ஒன்றன்பின் ஒன்றாக சரியாகச் சொல்வார்கள். இப்படி நூறு விஷயங்களைச் சொல்பவர்களும் இருக்கிறார்கள்.

உதாரணமாக ஒரு தசாவதானி அமர்ந்திருக்கிறார் என்று கொள்வோம். அவர் முன் ஒருவர் திருக்குறளை வரிசையாகப் படிக்கிறார். குறள் படிக்கும் போதே ஒரு மணியோசை ஒலிக்கும். அதே நேரத்தில் வேறு ஒருவர் ஒரு ஆங்கில வார்த்தையை உச்சரிப்பார். ஒரு சினிமா பாடலின் இரண்டு வரி பாடும், கடிகாரம் மணியடிக்கும். வாசலில் ஒருவன் காய்கறி கூவி விற்பான். இவை அனைத்தும் ஒரே நேரத்தில் நடக்கும். இந்த தசாவதானி திருக்குறள் என்னென்ன படிக்கப்பட்டது என்று திருப்பிச் சொல்லும்போதே, எத்தனை முறை மணியடித்தது என்றும், கடிகாரத்தின் நேரம் என்ன என்றும், அதே நேரத்தில் பாடிய சினிமாப் பாடல் வரி என்ன என்றும், அருகிலிருந்தவர் வாசித்த ஆங்கில வார்த்தை என்ன என்றும் தெருவில் போன காய்கறிக்காரன் என்னென்ன காய்களின் பெயர்களைச் சொல்லி கூவிவிட்டுப் போனான் என்றும் ஒன்று விடாமல் மிகச் சரியாகச் சொல்வார்.

இப்படி ஒரே நேரத்தில் நடக்கும் நூறு விஷயங்களைச் சொல்பவர்களும் நம் நாட்டில் உண்டு. சிறு வயதில் தூர்தர்ஷனில் ஒரு தசாவதானியை வைத்து இப்படி ஒரு நிகழ்ச்சி நடத்தி காண்பித்தார்கள். மிகவும் ஆச்சரியமாக இருந்தது. நாமும் தசாவதானி ஆக வேண்டும் போல இருந்தது. அதனாலேயே தியானத்தின் மீதும் ஆர்வம் புறப்பட்டது.

ஆனால் இன்றைய குழந்தைகள் பாவம். அவர்களுக்கு மனதை ஒருங்கினைக்கும் ஆவலைத் தூண்டுவதற்குப் பதிலாக மனதை சலனப்படுத்தும் விஷயங்களே தொலைக்காட்சிகளில் காண்பிக்கப்பட்டன. சரி விஷயத்திற்கு வருவோம்.

இப்படி பேச்சைக் குறைத்து எண்ணங்களை கட்டுப்படுத்தினால் மனம் வசியப்படும் என்றும் எமதர்மன் அழகாக எடுத்துரைக்கிறார். பேச்சைத்தானே குறைக்க வேண்டும். குறைந்த பட்சம் அதையாவது செய்து பார்ப்போமே.

மேலும் மரணத்தில் இருந்து யாரால் விடுபட முடியும் என்றும் எமதர்மன் போதிக்கிறார்.

(தொடர்ந்து கேட்போம்...)மரணத்திற்கு அப்பால் - 12

Tuesday, March 16, 2010

ஆப்பு அசைத்த குரங்கின் கதை!


என் கூட ஐஸ் க்ரீம் சாப்டரீங்களா!
ஒரு காட்டுப் பகுதியில் குரங்கு ஒன்று வெகுநாட்களாக வசித்து வந்தது. அது மிகவும் சேட்டைக்கார குரங்காக இருந்தது. பின் விளைவுகளை எண்ணாமல் மிகுந்த குரும்புத்தனம் செய்யும் குரங்காக இருந்தது.

அந்த குரங்கு வசித்த மரத்தடியில் ஒரு விறகு வெட்டி இருந்தான். காட்டுப் பகுதிக்குள் இருந்தது அவன் குடிசை. மரங்களை வேட்டிவருவது, கோடரியால் பிளப்பது, துண்டுகளாக்கி பக்கத்து கிராமங்களுக்குக் கொண்டு விற்று அதைக்கொண்டு குடும்பம் நடத்துவது என அவனது அன்றாட வேலை. அன்று அப்படித்தான் ஒரு பெரிய அடிமரத்துண்டை கோடரியால் பிளக்க ஆரம்பித்தான். களைப்பு வந்து அடிமரத்தைப் பாதியளவு பிளந்திருந்த அப்பிளவுக்கு இடையில் ஒரு மரச்சக்கையை (ஆப்பு) வைத்துவிட்டு ஓய்வெடுக்கச் சென்றான்.

விறகு வெட்டியின் செயலை வேடிக்கைப் பார்த்துக்கொண்டே இருந்த குரங்கு அவன் சென்றவுடன் கீழே இறங்கி வந்தது.

விறகு வெட்டி விட்டுச் சென்ற மரத்துண்டின் மீதேறி பிளவுப்பட்ட பகுதியில் வால் முழுவதும் விட்ட நிலையில் அமர்ந்து கொண்டது. தனது வால் மரத்துண்டின் பிளவில் இருப்பதை அது அறியவில்லை. பின் தனது குறும்பு வேலையைச் செய்ய ஆரம்பித்தது. ஆப்பாக செருகி இருந்த மரத்துண்டை ஆட்டி ஆட்டி எடுக்க ஆரம்பித்தது.

திடீரென்று அந்த ஆப்புத்துண்டு குரங்கின் கையோடு வந்துவிட்டது. உடனே பிளவுபட்டப் பகுதியின் இடைவெளி குறைந்துவிட்டது. பிளவுக்குள் தொங்கியிருந்த வால் நசுங்க குரங்கு அலறியது. ஓய்வாக உள்ளே இருந்த மரவெட்டி அலறல் கேட்டு அலறி அடித்துக் கொண்டு ஓடி வந்தான். அதற்குள் குரங்கு வலி தாங்காமல் பரிதாபமாக மாண்டு போனது.

பாடம்: 'பின்' விளைவுகளை ஆராயாமல் எந்த காரியத்தையும் செய்யக்கூடாது.

நமது பாரம்பரிய கதைகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வது நமது கடமையே ஆகும்.


ஆட்ரா ராமா! ஆட்ரா ராமா!


எவ்வளவு நேரந்தாண்டா என்ன ஆடச்சொல்லுவ!

Friday, March 12, 2010

எம் எஃப் ஹுஸேனும் இந்துக் கடவுளரும்!


பழைய சோறுதான் , கொஞ்சம் புதிய பானையில்!!

நண்பர் ஒருவரிடமிருந்து இப்படி இமெயில் வந்தது...வழக்கம் போல போலி செக்யூலரிசம் மீது அதிருப்தி அடைந்து, இத்தாலி சாம்ராஜ்யத்திற்கு எதிராக எதுவும் செய்ய முடியாமல், tired of secularism என்று புலம்பும் சக மனிதர்களாய்! அதைக் கொஞ்சம் பார்ப்போம்.


Judge yourself................please read and see the picture


If a person dresses like a Sikh Guru, thousands of Sikhs gather and destroy their establishments , threaten to kill him, announce a bounty on his head - Sikhs are not criticised for being communal and intolerant, If a Danish journalist depicts the Prophet of the Muslims , Muslims all over the world rise in anger, there is violence, a booty on the head of the Journalist - Muslims are not criticised for being communal and intolerant,

If MF Hussain draws paintings depciting Hindu Gods and Goddesses positions (which relations are not borne out by ancient texts at all ) and Hindus merely protest , they are called communal, intolerant and taught lessons in secularism by one and all.


The problem apparently is not with Sikhs and Muslims, it is with Hindus , because we are not violent, we accept what ever is dished out to us , we do not have the guts to say that this is wrong , we seek acceptance from outsiders rather than from our conscience. We worship the same GOds and Godesses but dont stand up for them when the time comes.


Be a judge yourself of Hussain ' s paintings below.Goddess Durga union with TigerProphet ' s Daughter Fatima fully clothedGoddess Lakshmi naked on Shree Ganesh ' s head
M.F. Hussain ' s Mother fully clothed
Naked SaraswatiMother Teresa fully clothedNaked Shri Parvati
Hussain ' s Daughter well clothed
Naked Draupadi.

Well clothed Muslim Lady.

Naked Lord Hanuman and Goddess Sita sitting on thigh of Ravana


Muslim poets Faiz, Galib are shown well clothed

Full Clad Muslim King and naked Hindu Brahmin. The above painting clearly indicates Hussain ' s tendency to paint any Hindu as naked and thus his hatred..


Naked Bharatmata - Hussain has shown naked woman with names of states written on different parts of her body. He has used Ashok Chakra, Tri-colour in the painting. By doing this he has violated law & hurt National Pride of Indians. Both these things should be of grave concern to every Indian irrespective of his religion.


!


Out of the four leaders M. Gandhi is decapitated and Hitler is naked. Hussain hates Hitler and has said in an interview 8 years ago that he has depicted Hitler naked to humiliate him and as he deserves it ! How come Hitler ' s nudity cause humiliation when in Hussain ' s own statement nudity in art depicts purity and is in fact an honour ! This shows Hussain ' s perversion and hypocrisy.


கடைசி ஓவியத்தின்படி, ஹுஸேன் ஹிட்லரை வெறுக்கிறாராம். அதனால் அவரை அவமானப்படுத்த வேண்டியே அவரது உருவத்தை நிர்வாணமாக வரைந்ததாக சில வருடங்கள் முன்பு ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார். அதன் படி பார்த்தால் இந்துக்கடவுளரை அவர் வெறுத்ததாலேயே நிர்வாணமாக வரைந்திருக்கிறார் என்றும் தெரிகிறது.


இதை தட்டிக்கேட்கும் இந்துக்களும் இந்து அமைப்புகளும் மதவாதிகளாக சித்தரிக்கப் படுகிறார்கள் என்பதே வேதனை. மேலும் எம் எஃப் ஹுஸேனின் ஓவியத்தை கலை என்றும் அதைக் கலைக் கண்ணோடுதான் பார்க்க வேண்டும் என்றும் நம் ஆட்களே கூட சப்பைக் கட்டு கட்டுகிறார்கள். ஆனால் அதே கலைக்கண்ணோடு அவர் ஏன் தன் தாயையோ தன் மகளையோ, வேறு இஸ்லாம் பெண்களையோ அல்லது நபிகளையோ கூட வரையவில்லை. கலை அறிவு அவருக்கு இஸ்லாத்தை வரையும் போது மட்டும் வேலை செய்யவில்லையா என்ன?


இந்துக்களில் சிலரே இந்துக் கோவில்களில் இருக்கும் சிலைகளும், ஏன் சாமி சிலைகள் கூட நிர்வாணமாகத்தானே இருக்கின்றன. அதை இந்த ஓவியர் வரைந்தால் அதை ஏன் பெரிதுபடுத்துகிறீர்கள் என்றும் கூறுவார்கள். நிர்வாணம் குற்றம் அல்ல. இந்து மதம் உடல் ரீதியான விஷயங்களை பெரிதுபடுத்தி ஆன்மீகம் முழுவதையும் உடல் மீது வைக்கவும் இல்லை. ஆனால் ஒரு ஓவியன்,தம் குலப் பெண்டீரை நிர்வாணமாக வரைவது அவர்களை அவமதிக்கும் செயல் என்று நினைப்பவனாக இருந்தால், தம் கடவுளரையோ மத குருக்களையோ அப்படி வரைவது கூடாது என்ற சிந்தனை கொண்டவனாக இருந்தால் அதே உணர்வையும் மரியாதையையும் அவன் எல்லா பெண்களின் மீதும் எல்லாக் கடவுளரின் மீதும் காண்பிக்க வேண்டியது தானே ஞாயம்.


மேலும் ஒருவனை நிர்வாணமாக வரைவதென்பது அவனை அவமதிக்கும் ரீதியான ஒரு பழிவாங்கும் உணர்ச்சியாக நினைப்பவன் யாரை நிர்வாணமாக வரைந்தாலும் அதே உணர்வாகத்தான் புரிந்துகொள்ளப்படும்.


ஆனால் நாம் இதைப்பற்றியெல்லாம் பேசக்கூடாது. பேசினால் மதவாதிகள் என்ற பட்டம் தான் மிஞ்சும். ஏனெனில் இது செக்யூலரிச நாடாயிற்றே!


சிறிது காலத்திற்கு முன்பாக டாவின்சி கோட் என்ற திரைப்படம் கிறிஸ்தவ பாதிரியார்களின் மூலைச்சலவை மதமாற்றம் பற்றி தோலுரித்துக் காட்டுவதாக இருக்கிறபடியால் அதை வெளியிடக்கூடாது என்று பலத்த எதிர்ப்பு பாதிரிமார்களாலும் மிஷனரிகளாலும் தெரிவிக்கப்பட்டது.அரசாங்கம் இதில் உடனே அக்கரை காட்டி அந்தப் படத்தை தடை செய்தது. ஆனால் இந்த அக்கரை எம் எஃப் ஹுஸேனின் ஓவியங்களை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் மீது காட்டப்படவில்லை.


ஆனால் நாம் இதைப்பற்றியெல்லாம் பேசக்கூடாது. பேசினால் மதவாதிகள் என்ற பட்டம் தான் மிஞ்சும். ஏனெனில் இது செக்யூலரிச நாடாயிற்றே!


இந்த செக்யூலரிசத்தின் பயனாக இப்போதெல்லாம் மும்பை வாசிகள் எப்படி பேசிக்கொள்கிறார்கள் தெரியுமா?


ஒயே! அம்ச்சா மும்பை மேன் க்யா ஹால் ஹே!


ஹரே! கப்டே கே சாத் புல்லட் ப்ரூஃப் பீ கரீத் லேனா!