Thursday, April 30, 2009

ராமக்ருஷ்ண பரமஹம்ஸரின் பொன்மொழிகள்!இறைவனுக்கு நீ கொடுக்கின்ற ஒவ்வொன்றும் பன்மடங்காக உன்னிடமே திரும்பி வரும். எனவே மோசமான, தீய எதையும் இறைவனிடம் சமர்ப்பிக்காதே.  

பகவான், பாகவதம் (தெய்வீக நூல்கள்), பக்தன் மூவரும் ஒன்றே.  

மீன் எவ்வளவோ தூரத்தில் இருக்கலாம். ஆனால் கவர்கின்ற விதத்தில் ஏதாவது உணவைப் போட்டால் எங்கிருந்தாலும் விரைந்து அங்கு வந்து சேர்ந்து விடும். அது போல் அன்பும் நம்பிக்கையும் உடைய பக்தனின் இதையத்தில் இறைவன் விரைந்து வந்து குடிகொள்கிறான்.  

உருவமின்றியும் உருவத்துடனும் கடவுள் விளங்குகிறார். இந்த இரு நிலைகளை கடந்தும் அவரே விளங்குகிறார். அவர் எப்படியெல்லாம் இருக்கிறார் என்பதை அவர் மட்டுமே அறிவார்.  

ஓர் எறும்பு எவ்வளவு தான் முயற்சி செய்து வயிறார உண்டாலும் எடுத்துச் சென்றாலும் ஒரு பெரிய சர்க்கரை குன்று சிறிதும் பாதிக்கப் படுவதில்லை. முன்பிருந்த படியே அது இருக்கிறது. கடவுள் அது போலவே, பக்தர்கள் எவ்வளவு தான் பரவச நிலையில் ஆடினாலும் பாடினாலும் அவர் இன்னும் யாராலும் முழுமையாக அறியப்படாதவராகவே இருக்கிறார். முழுமையாக அவரை அறியவும் அவரது பெருமைகளை அனுபவிக்கவும் யாராலும் முடியாது.  

சீடன் ஒருபோதும் குருவை பழிக்கக் கூடாது. அவரது கட்டளைக்கு எவ்வித மறுப்பின்றி அவன் பணிய வேண்டும்.  

இறையருள் என்னும் காற்று இடயீடின்றி எப்போதும் வீசிக்கொண்டிருக்கிறது. சோம்பேறி படகோட்டி போன்றவர்கள் பாய்மரத்தை விரித்து அதை பயன்படுத்திக் கொள்வதில்லை. ஆனால் சுறுசுறுப்பான வலிமையானவர்கள் தங்கள் மனமாகிய பாய்மரத்தை எப்போதும் விரித்து வைத்திருந்து தாங்கள் சேர வேண்டிய இடத்தை விரைவில் எளிதில் அடைகிறார்கள்.  

குரு, தரகர் போன்றவர். ஆணையும் பெண்ணையும் தரகர் இணைத்து வைப்பது போல குரு மனிதனையும் இறைவனையும் சேர்க்கிறார்.

Tuesday, April 28, 2009

முல்லா நசுருதீன் கதைகள்


முல்லா பெரிய அறிவாளி என்றும் எவ்வளவு பெரிய ஆபத்து ஏற்ப்பட்டாலும் தம்முடைய அறிவாற்றலாலேயே அந்த ஆபத்திலிருந்து தப்பிவிடுவார் என்றும் ஊரில் உள்ளவர்கள் பலர் கூறுவது மன்னரின் காதில் விழுந்தது.  

அவரது அறிவாற்றலைப் பரிசோதிப்பதற்க்காக மன்னர் ஒரு நாள் முல்லாவை தமது சபைக்கு வரவழைத்தார்.  

முல்லா வந்து வணங்கி நின்றார்.  

"முல்லா , உமது அறிவை பரிசோதனை செய்ய நினைக்கிறேன், நீங்கள் ஏதேனும் ஒன்றைக் கூறும், நீர் சொல்வது உண்மையாக இருந்தால் உமது தலை வெட்டப்படும் , நீர் சொல்வது பொய்யாக இருந்தால் நீர் தூக்கிலிடப்படுவீர்" என்றார் மன்னர்.  

முல்லா உண்மை சொன்னாலும் பொய்யைச் சொன்னாலும் அவருக்கு ஆபத்து தயாராக இருக்கிறது. முல்லா நிலைமையை எவ்வாறு சமாளிக்கப் போகிறார் என்று அவையோர் அவரையே கவனித்தனர்.  

முல்லா மன்னரை நோக்கி, " மன்னர் அவர்களே, தாங்கள் என்னை தூக்கில் போடப்போகிறீர்கள்" என்று பதற்றம் ஏதும் இன்றிக் கூறினார். அதைக் கேட்ட மன்னர் திகைப்படைந்தார்.  

முல்லா சொன்னது உண்மையானால் அவருடைய தலை வெட்டப்பட வேண்டும் அவ்வாறு வெட்டப்பட்டால் அவர் கூறியது பொய்யாகிவிடும். முல்லா கூறியது பொய் என்று வைத்துக் கொண்டால் முல்லாவைத் தூக்கில் போட வேண்டும். 

தூக்கில் போட்டால் அவர் கூறியது உண்மை என்று ஆகிவிடும். உண்மை என்று கருதினால் அவரை தூக்கில் போடாமல் கழுத்தை வெட்ட வேண்டும். 

இப்படி ஒரு குழப்பத்தை தமது அறிவாற்றலால் தோற்றுவித்து முல்லா மன்னரை திக்குமுக்காட வைத்துவிட்டார்.  

அவரது அறிவாற்றலை கண்ட மன்னர் மிகவும் மகிழ்ச்சி அடைந்து அவருக்கு பொன்னும் பொருளும் பரிசாக கொடுத்து அனுப்பினார்.

Thursday, April 23, 2009

தெனாலிராமன் கதைகள்ஒரு முறை தெனாலிராமனுக்கு கத்தரிக்காய் சாப்பிட வேண்டும் என்று அதீத விருப்பம் ஏற்ப்பட்டது. அரண்மனைத் தோட்டத்தில் பிஞ்சு கத்திரிக்காய் அதிகமாக விளைந்திருப்பதைக் கேள்விப்பட்டார்.  

ஆனால் அது அரசாங்கத்திற்குச் சொந்தமானது. நாம் உபயோகிக்கக் கூடாது என்ன செய்வது. 

என்னவென்றாலும் இன்று கத்தரிக்காய் சாப்பிட்டே தீருவது என்று தீர்மானித்த தெனாலிராமன் ஒரு ஆலோசனை செய்தார்.  

காவலாளிக்கு தெரியாமல் கத்தரிக்காய் அனைத்தையும் சத்தமில்லாமல் பறித்துக் கொண்டார்.

வீட்டுக்கு சென்று மனைவியிடம் "இன்றைக்கு விதவிதமாய் கத்தரிக்காய் பதார்த்தம் செய்" என்றார். தெனாலிராமன் கொண்டுவந்த கத்தரிக்காய் அரண்மனை தோட்டத்திலிருந்து பறித்து வந்தது என்று தெரிந்ததும் தெனாலிராமனது மனைவி மிகவும் கலக்கமடைந்தார். 

தெனாலிராமன் "நீ பயப்படாதே! எல்லாவற்றையும் நான் பார்த்துக் கொள்கிறேன். நீ சமைத்து வை " என்றார். அவரது மனைவியும் மறுபேச்சு பேசாமல் கத்தரிக்காய் குழம்பு, கத்தரிக்காய் கூட்டு என்று வித விதமாக செய்து வைத்தார். இருவரும் சாப்பிடத்தயாரானார்கள்.  

தெனாலிராமன் தனது மகனை எங்கே என்று கேட்டார். அவன் வெளித்தின்னையில் படுத்து உறங்கிக் கொண்டிருப்பதை மனைவி தெரிவித்தார். உடனே தெனாலிராமனுக்கு ஒரு யோசனை தோன்றியது. 

அவர் ஒரு குடம் நிறைய தண்ணீரைக் கொண்டுவந்து தின்னையில் படுத்திருந்த தனது மகன் மீது ஊற்றினார். பதறியடித்து எழுந்த மகனைப் பார்த்து "வெளியே மழை பெய்கிறது, உள்ளே போய் படுத்துக் கொள்" என்று கூறினார்.  

ரைத்தூக்கத்தில் இருந்த மகனும் அவர் சொன்னதைக் கேட்டவுடன் வேக வேகமாக வீட்டுக்குள் சென்றான். படுத்துறங்கப் போன்றவனை தெனாலிராமன் எழுப்பி "கத்தரிக்காய் சாப்பாடு ருசியாய் இருக்கிறது , சாப்பிட்டு விட்டு தூங்கு" என்று கூறினார். 

அவனும் தூக்கக்கலக்கத்துடனேயே நன்றாகச் சாப்பிட்டான். பிறகு எல்லோரும் படுத்து நிம்மதியாய் தூங்கினார்கள்.  

மறுநாள், தெனாலிராமன் அரண்மனைத் தோட்டத்தில் கத்தரிக்காய் பறித்த விஷயம் எப்படியோ மன்னருக்குத் தெரிந்து போனது.  

மன்னர் தெனாலிராமனை அழைத்து வரச் சொன்னார். நடக்கப் போவதை யூகித்துக் கொண்ட தெனாலிராமனும் மன்னர் முன் சென்று நின்றார்.  

மன்னர் தெனாலியைப் பார்த்து கேட்டார்" தெனாலிராமா ! அரண்மனைத் தோட்டத்தில் கத்தரிக்காய் எல்லாம் காணாமல் போனது உனக்குத் தெரியுமா ? என்றார். தெனாலிராமனோ எதுவும் அறியாதது போல "என்ன? அரண்மனைத் தோட்டத்துக் கத்தரிக்காய் காணாமல் போனதா?" என்றார்.  

மன்னரோ விடுவதாய் இல்லை. "ஒன்றும் அறியாதது போல் கேட்கிறாய் ராமா! நீ தான் கத்தரிக்காய் அனைத்தயும் பறித்ததாக நான் கேள்விப்பட்டேன். உண்மையை ஒத்துக் கொள்" என்றார். தெனாலி ராமனோ "இல்லவே இல்லை" என்று சாதித்தார்.  

மன்னர் உடனே தெனாலிராமா "நீ உனது மகனை அழித்துவா. குழந்தைகள் பொய் சொல்லாது. நேற்று நீங்கள் என்ன சாப்பிட்டீர்கள் என்பதை நான் உன் மகனை விசாரித்து தெரிந்து கொள்கிறேன். " என்றார்.  

தெனாலிராமனது மகனை காவலாளிகள் அழைத்து வந்தார்கள். மன்னன் சிறுவனிடம் அன்பாக விசாரித்தார். "தம்பி நேற்று உஙகள் வீட்டில் என்ன சாப்பிட்டீர்கள்?" உடனே சிறுவன் சொன்னான் "கத்தரிக்காய் குழம்பு , கத்தரிக்காய் கூட்டு மற்றும் சாதம் எல்லாம் சாப்பிட்டோம். மிகவும் ருசியாக இருந்தது."  

உடனே மன்னன் தெனாலிராமனைப் பார்த்தார். இப்போது மாட்டிக் கொண்டாயா தெனாலிராமா. இபோதாவது உண்மையை ஒத்துக் கொள்" என்றார். தெனாலிராமனோ விடாப்பிடியாக மறுத்தார். "மன்னா, இவன் இரவில் கனவு கண்டு அதை உளறுகிறான். நன்றாக விசாரியுங்கள். நீங்கள் நம்பும்படியாக அவன் கூறினால் நான் உண்மை என‌ ஒத்துக் கொள்கிறேன்". என்றார்.  

மன்னன் சிறுவனைப் பார்த்து மீண்டும் கேட்டார்."குழந்தாய் நேற்று உங்கள் வீட்டில் என்ன நடந்தது என்று விளக்கமாகச் சொல்" சிறுவனோ நேற்று இரவு ஜோ வென்று மழை பெய்ததா! அப்பா என்னை வீட்டுக்குள் கூட்டிக் கொண்டு போனாரா...! அப்போ கத்தரிக்காய் வைத்து சாப்பிடச் சொன்னார்களா...! சாப்பிட்டிவிட்டு பிறகு நான் உறங்கி விட்டேன்" என்றான்.  

தெனாலிராமனோ நேற்று மழை பெய்ததா மன்னா! நீங்களே சொல்லுங்கள் என்று மன்னரை கேள்வி கேட்டார்.  

மன்னர் குழம்பிப் போனார். அவையில் இருந்தவர்களை விசாரித்தார். நேற்று நகரத்தின் எந்தப்பகுதியிலும் மழை பெய்யவில்லை என்று எல்லோரும் சொன்னார்கள்.  

மன்னரும் சரி தெனாலிராமன் சொன்னதைப்போல குழந்தை கனவில் கண்டதைத்தான் சொல்கிறான் என்று சொல்லி தெனாலிராமனையும் விடுவித்தார். மனதிற்குள் மகிழ்ந்து கொண்டே தெனாலிராமனும் இடத்தை காலிசெய்தார்.  

பிறுதொருநாள் மன்னரிடம் தாம்தான் கத்தரிக்காயை திருடியதாக ஒத்துக் கொண்டு நடந்தவைகளை சொல்ல மன்னர் ஆச்சரியமாத்துடன் சிரித்து மகிழ்ந்தார். பிறகு தெனாலிராமனின் சாதுர்யத்தை மெச்சி பல பரிசுகளை அளித்து மகிழ்ந்தார்.

ராமக்ருஷ்ண பரமஹம்ஸரின் பொன்மொழிகள்!


ராமக்ருஷ்ண பரமஹம்ஸரின் பொன்மொழிகள்!  


துறவியின் காவியுடை இயல்பாகவே மனத்தில் தெய்வீக எண்ணங்களை எழுப்புகிறது. உடைக்கென்று தனி மதிப்பு எதுவும் இல்லையென்றாலும் சில குறிப்பிட்ட உடைகள் நம் மனத்தில் குறிப்பிட்ட எண்ணங்களைத் தோற்றுவிப்பது உண்மைதான்.  


பிறரை விட அதிகமாக மதிப்பும் மரியாதையும் பணிவும் எங்குக் காண்பிக்கப்படுகிறதோ அங்குத் தெய்வீக ஆற்றல் அதிகமாக இருக்கிறது என்று பொருள்.  


இறைவனிடம் பக்தியின்றி செய்யப்படும் செயல்கள் நிலைக்காது. அது மணலில் கட்டப்பட்ட அஸ்திவரம் போன்றது. முதலில் பக்தியை வளர்த்துக் கொள். பின்னர், நீ விரும்பினால், பள்ளிகள் , மருத்துவமனைகள் கட்டித் தொண்டுகள் புரிவதில் ஈடுபடு.  


இறைவனை மனம் , வாக்கு, உடல் இவற்றால் வழிபடுவதே பக்தி, அவரையும் அவரது பெருமைகளையும் சிந்திப்பது மனத்தால் செய்யும் பக்தி, அவரது திருப்புகழை வாயாரப் பாடுவது வாக்கினால் செய்யும் பக்தி, திருக்கோவிலை வலம் வருவதும் தொண்டுகள் செய்வதும் உடலால் செய்யும் பக்தி.  


கடவுள் விரும்பினால் யானையையே ஊசியின் காது வழியாகச் செலுத்த முடியும். நினைத்ததைச் செய்ய வல்லவர் கடவுள்.  


கடவுளின் மனிதத் தூதனே அவதாரம். அரசனுக்குத் தளபதி போல கடவுளுக்கு அவதாரம். நாட்டில் குழப்பம் நிலவும் பகுதியில் அரசன் தளபதியை அனுப்பி அதை அடக்குகிறான். அது போல் உலகில் அறம் சீர்குலையும் போது இறைவனும் தமது அவதார பிறப்பை அனுப்பி அறத்தைக்காக்கவும் வளர்க்கவும் செய்கிறார்.

Wednesday, April 22, 2009

கந்தர் சஷ்டி கவசம் படித்தால் கிடைக்கும் நன்மை என்ன?


சில வருடங்களுக்கு முன் ஒரு நிறுவனத்தில் நான் பணிபுரிந்து கொண்டிருந்த போது அங்கே தொழிலாளர்களை உற்சாகப்படுத்தும் சில வகுப்புகள் நடத்தப்படுவதுண்டு.

அது ஒரு பங்குச்சந்தை வியாபார நிறுவனமாக இருந்ததால் மார்க்கெட்டிங் வேலை மிக முக்கியமானதாக இருந்தது. பங்குச்சந்தை மார்க்கெட்டிங் என்றால் சாதாரனம் இல்லை. உங்களிடம் இருக்கும் பணத்தை நீங்கள் முழித்திருக்கும் போதே உங்கள் சட்டைப்பையிலிருந்து எடுத்து நிறுவனத்திற்கு கொடுத்துவிட வேண்டும்.

இது குளோப்ளைசேஷன் மூலமாக வந்த புதிய வியாபார உத்தி. அது ஒரு புறம் இருக்கட்டும்.

தொழிலாள‌ர்களுக்காக நடத்தப்படும் இந்த வகுப்பில் மனதை அமைதியாக வைத்துக் கொள்ளவும், உடலைப் பேணிப் பாதுகாக்கவும் சில விஷயங்களைச் சொல்லிக் கொடுப்பார்கள். அதில் ஒன்று அதி டென்ஷனாகவே வாழும் நாம் மனதை எப்படி அமைதிப்படுத்திக் கொள்வது என்பதற்க்கு ஒரு புதிய முறையைக் கற்றுக் கொடுத்தார்.

இதை அறிமுகப்படுத்தியவர் என்று சொல்லி ஒரு ஆங்கிலேயரின் பெயரைச் கூறினார். மனோவியல் ரீதியாக அவர் கொடுக்கும் இந்தப் பயிற்ச்சி நல்ல பலனைக் கொடுத்தது என்றும் கூறி அதை செய்யச் சொன்னார்.

அவர் சொன்னதாவது:

முதலில் கண்களை மெதுவாக மூடிக்கொள்ளுங்கள்.

உங்கள் வாயால் இப்பொழுது மெதுவாகச் சொல்லுங்கள்...ஆங்கிலத்தில் துவங்கினார்..

மை ஐஸ் ஆர் ரிலாக்ஸ்!

மை நோஸ் ஆர் ரிலாக்ஸ்!

மை மௌத் இஸ் ரெலாக்ஸ்!

மை ஹான்ட்ஸ் ஆர் ரிலாக்ஸ்!

என்று ஒவ்வொரு பாகத்தையும் வாயால் சொல்லி மனதால் ரிலாக்ஸ் படுத்தினார்.

இவற்றை சொல்லி முடித்து விட்டு இப்பொழுது கண்களை மெதுவாக திறங்கள். இப்பொழுது உங்கள் மனதும் உடலும் ரிலாக்ஸாக இருக்கிறதா? என்று எல்லோரிடமும் கேட்டு தெரிந்து கொண்டார்.

பிறகு நிகழ்ச்சி பற்றி எல்லோரிடைய கருதையும் கேட்டார்.

என் முறை வந்தது. நான் சொன்னேன்..."சார் இது என்ன பிரமாதம் இதை நான் குழந்தைப் பருவம் முதலே செய்து கொண்டிருக்கிறேனே!" என்றேன்.

ஆச்சரியத்துடன் பார்த்த அவர் "அது எப்படி? எனக்குத் தெரிந்த வரை இது புதிய மனோவியல் முறை! இதை எப்படி நீங்கள் குழந்தைப் பருவத்திலிருந்தே செய்ய முடியும்" என்று கேட்டார்.


குற்றால அருவியில குளிச்சது போல் இருக்குதா?நான் சொன்னேன் "சார் நீங்க என்னவெல்லாம் சொன்னீர்களோ அது அனைத்தும் நான் சிறு வயது முதலே சொல்லும் கந்தர் சஷ்டி கவசத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. உடலின் ஒரு அவயவம் விடாமல் தியானிக்கும் பயிற்ச்சியை அது ஆன்மீக ரீதியாக மிக அருமையாக கொடுக்கிறது" என்றேன்.

மிகவும் ஆர்வமாக இதைக் கேட்ட அவர் கந்தர் சஷ்டி கவசத்தைச் சொல்லுவதால் ஏற்படும் பயனைப் பற்றி விளக்கமாக சொல்லச் சொன்னார்.

நானும் சொல்லத் துவங்கினேன்.

கந்தர் சஷ்டி கவசம் சொல்லும் போது நம் உடலில் உள்ள ஒவ்வொரு பாகங்களையும் ஒவ்வோரு வேல் காக்குமாறு பிரார்த்திக்கிறோம்.

உதாரணமாக ஒரு சில வரிகளைப் பார்ப்போம்.

கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க‌!

விதிச்செவி இரண்டும் வேலவர் காக்க‌!

நாசிகளிரண்டும் நல்வேல் காக்க‌!

பேசிய வாய் தனைப் பெருவேல் காக்க‌!

கன்னமிரண்டும் கருனைவேல் காக்க‌!

என் இளங்கழுத்தை இனியவேல் காக்க‌! .

என்று இப்படியே உடலில் ஒரு அங்கம் விடாமல் வேல் காக்க என்று கூறுகிறோம்.

இப்படி தினசரி நாம் வாயால் ஒவ்வொரு அவயவங்களைப் பற்றி சொல்லும் போது நமது மனது அந்த அங்கத்தில் நிலை கொள்கிறது. மனது தியானிக்கும் அங்கத்தினை நமது மூளை தானாகவே ஒருசில வினாடிகள் கூர்ந்து கவனிக்கிறது.

இப்படி மூளையின் தனி கவனத்திற்க்கு வரும் போது அந்த பாகத்திற்குரிய மூளையின் செயல்பாடுகள் சிறப்படைகிறது. இப்படி தினசரி மிகவும் அமைதியான மனநிலையில் நாள் இருமுறை நம் உடல் பாகத்தினை மூளையின் கவனத்திற்க்கு கொண்டு வந்தால் உடலின் சிறு சிறு குறைபாடுகளை மூளை தாமாகவே சரி செய்து கொள்ள தூண்டுதலாக அமையும்.

மனோவைத்திய ரீதியாக உடல் நோய்களைப் போக்க முடியும் என்று தற்காலங்களில் நாம் ஆராய்ச்சியாளர்கள் சொல்லி கேட்பதில்லையா. இன்றைக்கு ஆராய்ச்சி என்று சொல்லி வெள்ளைக்காரன் கண்டுபிடித்ததாகச் சொல்லுவதை நம் முன்னோர்கள் ஏற்கனவே கண்டறிந்தது மட்டுமல்லாமல் அவற்றைப் பயன்பாட்டில் செயல்படுத்தியும் வந்திருக்கிறார்கள்.

இந்த மனோவைத்திய முறை நம் வாழ்க்கை முறையாகவும் இருக்கிறது.

கந்தர் சஷ்டியை தினசரி சொல்லும் போது நம் உடல் முழுவதும் மூளை செயல்பாடு அதிகரிப்பதால் இது ஒரு பாதுகாப்பு கவசமாக இருப்பதாலேயே இதை கந்தர் சஷ்டி கவசம் என்று கூறினார்கள்.

இந்த கவசத்தில் வரும் வரிகளில் நவகோள் மகிழ்ந்து நன்மை அளித்திடும் என்று ஒரு வரி உண்டு. வார்த்தைகளால் சொல்லும் மந்திரத்தினால் நவகோள்கள் எப்படி நன்மை செய்யும் என்றும் தோன்றலாம். நவ கிரகங்களின் மாறுதல்களால் பூமியின் மீதே பாதிப்பு ஏற்படும் போது மனித உடலில் பாதிப்பு ஏற்படாதா என்ன?

கிரகங்களின் மற்றத்தால் நமது உடலில் ரத்த ஓட்டம் மற்றும் வாத பித்த பாதிப்புகள் ஏற்படுகிறது. உடலில் ஏற்படும் எந்த ஒரு வியாதிக்கும் இவற்றில் ஏற்படும் மாற்றமே அடிப்படை. ஆனால் கவசம் படிப்பதன் மூலமாக தினசரி மூளை நமது உடலை உற்று நோக்கி தானே தன்னைச் ச‌ரிசெய்யும் வேலையை செய்து கொண்டே இருப்பதால் நவ கோள்களால் ஏற்ப்படும் உடல் மாறுபாடு கூட பாதிப்பை ஏற்படுத்தாது என்பதே இதன் சாரம். அதையே நவகோள்கள் கூட மகிழ்ந்து நன்மை அளிப்பதாக கூறினார்கள்.


விபூதி பூசிக்கொள்வது ஏன்?

இப்படி கந்தர் சஷ்டி கவசம் தொடர்ந்து படிப்பதில் மனோவியல் ரீதியான‌ நன்மைகள் உள்ளன.

ஆனால் ஆராயாமலே தற்க்காலத்தில் எல்லாவற்றையுமே மூடநம்பிக்கை என்று சொல்லும் பகுத்தறிவு மடையர்களுக்கு இது புரிவது சாத்தியமில்லை. ஏனென்றால் அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு அடிப்படை அறிவே கூட இருப்பதில்லை என்பதே உண்மை.

ஆகையால் இந்து தர்மத்தில் சொல்லப்படும் பல அறிவியல் மற்றும் மனோரீதியான சூட்சுமங்களை புரிந்து கொள்ளும் நீங்கள் தான் உண்மையான பகுத்தறிவாளர்கள். ஆகையால் சொல்கிறேன் இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் ஆகும்". இவ்வாறு சொன்னவுடன் பயிற்சியாளர் மிகவும் மகிழ்ந்து என்னைப் பாராட்டினார்.

அவரும் கந்தர் சஷ்டி கவசம் படிப்பதில் உள்ள நன்மைகளை ஏற்றுக் கொண்டார். நீங்களும் இதை ஏற்றுக் கொண்டால் தாமதிக்காமல் இன்றே படிக்கத் துவங்கலாமே!


காக்க காக்க கனகவேல் காக்க!

நோக்க நோக்க நொடியில் நோக்க!

Tuesday, April 21, 2009

முல்லா நசுரிதீன் கதைகள்


முல்லா வசித்த ஊரில் நெடு நாட்களாக நீதிபதி யாரையும் மன்னர் நியமிக்கவில்லை. 

மக்கள் இது குறித்து மன்னரிடம் முறையிட்டனர்.  

"தற்பெருமை சற்றும் இல்லாத அடக்கமான ஒருவரை உங்கள் ஊரில் நீதிபதியாக நியமிக்க எண்ணியிருக்கிறேன். இதுவரை அத்தகைய தகுதி படைத்தவர் ஒருவர் என் கண்ணில் படவில்லை. அதனால் தான் உங்கள் ஊரில் நீதிபதி யாரையும் நியமிக்கவில்லை" என்று மன்னர் பதிலளித்தார்.  

இந்தச் செய்தியை முல்லா அறிந்தார்.  

ஒரு நாள் காலை முல்லா ஒரு பழைய மீன் பிடிக்கும் வலையை உடலில் போர்த்தியவாறு அரண்மனைப் பக்கமாக நடமாடிக்கொண்டு இருந்தார்.  

அரண்மனை உப்பரிகையில் இருந்து இந்த காட்சியைப் பார்த்த மன்னர், தனது பணியாளரை அனுப்பி முல்லாவை அழைத்து வரச்சொன்னார்.  

"முல்லா நீர் ஏன் இப்படி மீன் பிடிக்கும் வலையைப் போர்த்திக் கொண்டு உலவுகிறீர்?" என்று கேட்டார்.  

"மன்னர் அவர்களே, நான் அந்த காலத்தில் மீன் பிடிக்கும் தொழில் தான் செய்து கொண்டிருந்தேன். நான் என்னதான் முல்லா ஆகிவிட்டாலும் பழைய தொழிலை மறக்கலாமா? எந்தத் தொழிலையும் கேவலமாகக் கருதக்கூடாது என்பதற்க்காக மறுபடியும் மீன் பிடிக்கப் போகிறேன்" என்று கூறினார் முல்லா.  

இத்தனைக் காலமாக நாம் தேடிக்கொண்டிருந்த அடக்கமான மனிதர் முல்லா தான் என்று மன்னர் நினைத்தார். அதனால் அவரையே மன்னர் நீதிபதியாக நியமித்தார்.  

சில நாட்கள் கழித்து மன்னர் உப்பரிகையில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தார். 

அப்பொழுது முல்லா மீன் வலை இல்லாமல் வந்து கொண்டிருந்ததைப் பார்த்தார்.  

உடனே முல்லாவை வரவழைத்து "என்ன முல்லா மீன் வலையைக் காணோம்" என்று கேட்டார்.  

உடனே முல்லா "மன்னர் பெருமானே மீனைப் பிடித்து விட்ட பிறகு வலை எதற்கு?" என்றார்.  

முல்லா மீன் என்று சொன்னது நீதிபதி பதவியை என்பது மன்னருக்குப் புரியவில்லை.

Monday, April 20, 2009

மதுரை மீனாக்ஷி அம்மன் கோவில்

மதுரை மீனாக்ஷி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் : நேரில் பார்க்க முடியவில்லை என்றால் இப்படி பார்த்து அறிந்து கொள்ளலாமே!

Saturday, April 18, 2009

முல்லா நசுரிதீன் கதைகள்


ஒரு தடவை முல்லா ஒரு திருமணத்திற்க்கு சென்றார். பல முறை அவர் திருமணங்களுக்கு சென்று திரும்பி வரும் போது அவரது செருப்பு காணாமல் போய்விட்டது.  

அதனால் இந்த திருமண வீட்டில் செருப்பை வெளியில் வெட்டுச் செல்ல முல்லாவிற்க்கு மனம் வர வில்லை. செருப்புக்களை இழக்க விரும்பாத முல்லா அதனை யாருக்கும் தெரியாதவாறு ஒரு துணியில் சுற்றி கையில் வைத்துக் கொண்டார்.  

முல்லாவின் கையில் ஏதோ பொட்டலம் இருப்பதைப் பார்த்த திருமண வீட்டுக்காரர், "முல்லா அவர்களே ஏதோ பொட்டலம் வைத்திருக்கிறீர்களே, அதில் என்ன இருக்கிறது? மணமகனுக்கு அளிக்க வேண்டிய பரிசா? என்று கேட்டார்.  

"இதுவா, இது மிகவும் புனிதமான வேதாந்த நூல்" என்று முல்லா சமாளித்தார்.  

"வேதாந்த நூலா? இதை எங்கே வாங்கினீர்கள்?" என்று திருமண வீட்டுக்காரர் கேள்விகளை அடுக்கிக் கொண்டே போக எரிச்சலான முல்லா பதிலளித்தார்,  

"செருப்புக் கடையில் வாங்கினேன்".

Thursday, April 16, 2009

தமிழ்ப் புத்தாண்டை சித்திரை ஒன்றில் ஏன் கொண்டாடுகிறோம்?


தமிழ்ப் புத்தாண்டை சித்திரை ஒன்றில் ஏன் கொண்டாடுகிறோம் என்பதற்கு நமது பெரியோர்கள் சொன்ன மேலும் சில விளக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன்!

சித்திரை 1 ஐ தமிழ்புத்தாண்டாக கொண்டாடி வந்த வழக்கத்தை மாற்றி, தமிழக அரசு தை 1 ஐ தமிழ் புத்தாண்டாக அறிவித்தது. சித்திரை ஒன்று அன்று வழக்கமான பஞ்சாங்கம் படிப்பதைக்கூட கோவில்களில் வாய்மொழியாக தடைசெய்யப்பட்டதாக செய்திகள் வந்தன. ஆண்டு என்பது மாதம், வாரம் மற்றும் நாள் ஆகிவற்றால் ஆனதால் இவைபற்றி பார்ப்போம்.


காலத்தை அளவு செய்வதன் அளவுகோல் வானவியலை சார்ந்தது. பருப்பொருள்களின் நகர்தலினால்தான் காலம் என்பதே உருவானது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நாம் பின்பற்றி வரும் நமது பாரம்பரிய வானசாஸ்த்திரம் வான் கோள்களின் மாறாத இயக்கத்தை காலக்கடிகாரத்தின் முற்களாய் கொண்டு அளந்தது. நாள், வாரம், திங்கள்,வருடம் எல்லாம் கோள்களின் சுழற்சியினால் கணிக்கப்படுவது. நாளின் மணித்துளிகளை ஹோரை என்றனர் (இதுவே Hour ஆனது). நாழி, விநாழி (தமிழில் வினாடி ஆனது) என்பன நேரத்தின் அளவுகோல்கள்.


நமது வானசாஸ்த்திரம் அனைத்து வகையான காலப்பகுதிகளுக்கும் கோள்களின்/கிரஹங்களின் பெயரைச் சூட்டியது. எனவேதான் கிழமைகளின் பெயர்கள் ஞாயிறு மற்றும் ஏனைய கிரஹங்களின் பெயரில் அமைந்தது. [கிரஹிக்கும் அதாவது ஈர்க்கும் சக்தியினால் (Gravitation) இயங்குவதால் கிரஹம் என்றனர். எனவேதான் சூரியனும் ஜோதிட நோக்கில் மையத்தில் உள்ள ஒரு கிரஹம்தான், நவகிரஹங்களில் காண்பது போல். (சுய ஒளி உடையது நட்சத்திரம், பூமி முதலியன கோள்கள்/கிரஹங்கள் என்பது சமீபகாலத்தில் நம் பள்ளிகளில் எழுதப்பட்டது).


ராகு கேது ஆகியன வெறும் நிழற்கோள்களானதால் அவை கிழமைகளில் இல்லை. திதி என்பது தமிழில் தேதி என ஆனது. பனிரெண்டு ராசிகளால் பனிரெண்டு மாதங்களாயின. இந்தப் பதிவின் முக்கியமான விஷயம் கிழமைப்பெயர்களைப் போன்று தமிழ் மாதங்களின் பெயர்களும் வானவியலை சேர்ந்தது என்பதும் அதில் சித்திரைதான் வருடத்தின் முதல் மாதமாக வைக்கப்பட்ட காரணங்களும் இதனை மாற்றக்கூடாததிற்கான காரணங்களைப் பற்றி விவரிப்பதற்காகவும்.

சித்திரையில் தொடங்கி பங்குனி வரையிலான தமிழ்மாதத்தில், அம்மாதத்தின் பெளர்ணமி அன்று வரும் நட்சத்திரத்தின் பெயரையே மாதத்தின் பெயராக வைத்துள்ளனர்(விவரம் கீழே காண்க). எனவே தமிழ் மாதப்பெயர்கள் வானசாஸ்த்திரத்தை அடிப்படையாக கொண்டவை.


ஒரு ஆண்டு என்பது பூமி சூரியனை ஒருமுறை சுற்றிவர ஆகும் காலம். ஒரு வட்டத்தின் முதற்புள்ளியை எப்படி கணிப்பது? சுற்றும்போது பூமியின் சாய்வினால் சூரியன் வடக்கு தெற்க்காக நகர்கிறது. சூரியன் பூமத்திய ரேகையில் நேராக பிரகாசிக்கும் மாததை முதற்புள்ளியாய் ஆண்டின் தொடக்கமாக கொண்டுள்ளனர் நமது பெரியோர்.


பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள நமது நாட்டிக்கும் இதுதான் சரி (சித்திரை கத்திரி வெயில்). பனிரெண்டு ராசியினால் பனிரெண்டாக பகுக்கப்பட்ட ஆண்டில் நம்மீது நேராக பிராகசிக்கும்போது சூரியன் மேஷ ராசியில் இருப்பான். எனவேதான் மேஷம் முதல் ராசியானது. இப்படி நேராக பிரகாசிக்கும் மாதம் சித்திரை. எனவேதான் சித்திரை முதல் மாதமானது. தைமாதத்தில் சூரியன் கீழே ஆஸ்திரேலியா மீது நேராக பிரகாசித்துக்கொண்டிருப்பான்.


எனவே முதல் மாதமாக சித்திரை தவிற வேறு எந்தமாதமும் நமக்கு பொருத்ததமாகாது. ஆதலின் சித்திரை முதலான மாதப்பெயர்களை உடைய ஆண்டின் முதல் மாதம் சித்திரையாக மட்டுமே இருக்கமுடியும். எப்படி அர்த்தமே இல்லாமல் தை முதல் மாதமாகமுடியும்?


ஒவ்வொரு மாதத்தின் பெளர்ணமி அன்று வரும் நட்சத்திரத்தின் பெயரே தமிழ்மாதத்தின் பெயராக வைத்துள்ளனர். மட்டுமல்லாது அன்றைய தினம் விஷேச தினமாகவும் இருக்கும். சித்திரை மாதம் பெளர்ணமி அன்று சித்திரை நட்சத்திரம் வரும். எனவே மாதத்தின் பெயர் சித்திரையானது. அந்நாளும் சித்ராபெளர்ணமியாக கொண்டாடப்படுகிறது.


சித்திரை = சித்திரை [சித்திரா பெளர்ணமி]


விசாகம் = வைசாகம் = வைகாசி [வைகாசி விசாகம்]


அனுசம் = ஆனி


பூராடம் - பூராடி = ஆடி


சிரவணம் - ச்ராவணி = ஆவணி [திருவோணம் வடமொழியில் ஸ்ராவண நட்சத்திரம்]


பூரட்டாதி = புரட்டாசி [புரட்டாசி பெளர்ணமி பூரட்டாதி நட்சத்திரத்தில் வரும்]


அஸ்வினி = ஐப்பசி [வடமொழியில் ஆஸ்வீஜம்]


கார்த்திகை =கார்த்திகை [கார்த்திகை பெளர்ணமி]


மிருகஷீர்சம்= மார்கஷீர்சம் =மார்கழி


பூசம் வடமொழியில் புஷ்யம் என்பது. இதற்கு தைஷ்யம் என்று மற்றொரு பெயருண்டு. இது தை ஆனது. [தை பூசம்]


மகம் - வடமொழியில் மாக = மாசி [மாசி மகம்]


உத்திரம் -வடமொழியில் உத்திரப் பல்குனி = பங்குனி [பங்குனி உத்திரம்].


ஒவ்வொரு மாதத்தின் பெளர்ணமியன்று அதற்குரிய நட்சத்திரம் வருவதை காணலாம். இந்த நட்சத்திரப் பெயர்கள் ஏதோ வலிந்துபொருத்துவதற்காக அங்கொன்றும் இங்கொன்றுமாக எடுக்கப்பட்டவை அல்ல. சித்திரையில் தொடங்கி பிற நட்சத்திரங்கள் தொடர்ச்சியாக 30 அல்லது 31 நாட்சுழற்சியில் வரும். சித்திரையிலிருந்து 31 வது நாள் விசாக(வைசாக) நட்சத்திரம் மற்றும் இதுபோல. மேலும் வைகாசி விசாகம், தை பூசம், மாசி மகம், பங்குனி உத்திரம் போன்ற பண்டிகைகளில் மாதத்தின் பெயருக்கும் நட்சத்திரதிற்கும் உள்ள தொடர்பை தெளிவாக காணலாம்.


இன்னும் அனேகவிஷயங்கள் உள்ளன. இப்படி காலஅளவுகள் நமது பெரியோர்களால் வானசாஸ்த்திரத்தில் அறிவியல் பூர்வமாக கணித்து வழக்கத்தில் உள்ள வருடத்தின் முதல் நாளை மாற்றுவது தவறு. தமிழ் உணர்வு என்பது எல்லாருக்கும் உண்டு. இதனை தேவையில்லாத இடங்களில் புகுத்தி மக்களை உசிப்பேற்றி குளிர்காயக்கூடாது. தமிழை காரணங்காட்டி வங்கிக் கணக்குகளுக்கான வருட ஆரம்பத்தை தை 1 க்கு மாற்ற அரசு உத்தரவிட முடியுமா? தேவையா?


முடிவாக, மாதங்களின் பெயர் சித்திரை முதல் பங்குனி வரை இருக்கும்போது, சூரியன் சித்திரையில் நம்மீது நேராக பிராகசிக்கும் வரை சித்திரை தான் வருடத்தின் முதல் மாதமாக இருக்கமுடியும். முதல்மாதம் தை என்பது வெறும் வீம்பாகத்தான் இருக்க முடியும். இதை மக்கள் உணர்ந்து தெரிந்தவர்கள் இவ்விஷயங்கள் தெரியாதுபோன்று இருக்கும் நம் அரசுக்கு உணர்த்தவேண்டும். தெரியாதவர்களுக்கு எடுத்துச்சொல்வோம்.


மேலும் இந்து தர்மம் என்பது வெறும் இறை வழிபாடு கிடையாது. இந்த பூமியில் ஒரு மனிதன் வாழ எதுவெல்லாம் ஒரு மனிதனுக்கு உதவுகிறதோ அது அனைத்தையும் பற்றி தெரிந்து கொண்டு எல்லாவற்றிலும் இருக்கும் ஒரு அபரிமிதமான சக்தியைப் புரிந்து கொண்டு அதனை போற்றி வழிபடுவதே இந்து தர்மமாகும். இந்து தர்மத்தில் மூடநம்பிக்கை என்று எதுவுக் கிடையாது. இந்து தர்மம் என்பது பார்ப்பனர்களுக்கு மட்டுமே சொந்தமானதும் கிடையாது. ஏதோ பஞ்சாங்கம் வாசிக்கும் பிராமணர்களை பழிவாங்கவும், அவர்களது சம்பிரதாயங்களை உடைத்தெறியவும் செய்யப்படும் பகுத்தறிவு காரியம் போல நினைத்துக் கொண்டு தமிழர் பண்பாட்டையும் இந்துப் பண்டிகையையும் மாற்ற நினைப்பது ‍ பகுத்தறிவல்ல. வடிகட்டின முட்டாள் தனமே! இதில் சந்தேகமே இல்லை.

அம்பேத்கர் பிறந்தநாளை யாரும் கொண்ட்டாடுவதில்லை என்று, அம்பேத்கரை ஜாதி சங்க தலைவராக ஆக்கிவிட்டவர்கள் பகுத்தறிவு தாத்தாவிடம் புலம்பியதால் , ஜாதி ஓட்டு வங்கிக்காக ஒட்டு மொத்த இந்துக்களின் உணர்ச்சியையும் மதிக்காமல் தமிழ்ப்புத்தாண்டை சித்திரை ஒன்று அதாவது ஏப்ரல் பதினான்கிலிருந்து வேறு தேதியில் மாற்றிவிட்டார் பகுத்தறிவு தாத்தா.

ஓட்டு வியாபாரம் தான் பகுத்தறிவு என்பதும் இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதும் தான் பகுத்தறிவு என்பதும் வெளிச்சமாகத் தெரிகிறது.

ஆனால் இதற்கு இவர்கள் சொல்லும் காரணம் வள்ளுவர் ஆண்டு என்பது. அதாவது வள்ளுவர் பிறந்த ஆண்டு முதல் தமிழ் ஆண்டு கணக்கிடப்படுகிறதாம். வள்ளுவரின் பர்த் சர்டிபிகேட் பார்த்துதான் இந்த பகுத்தறிவு வாதிகள் வள்ளுவர் ஆண்டைக் கணித்தார்களோ என்னமோ!

ஆனால் உண்மையில் 'ஜாதீய அடிப்படைக் காரணங்களுக்காகவே' ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பண்டைய தமிழ் விவசாயிகளால் உருவாக்கப்பட்டு, அறிவியல் ரீதியாகவும் கால நிலைப் பற்றிய கணிப்பாகவும் பயன்படுத்தப்பட்டு பாரம்பரியமாக கோடிக்கணக்கான மக்களால் கொண்டாடப்பட்டு வந்த தமிழ்ப் புத்தாண்டு தினத்தை ஒரு குறுகிய அரசியல் வியாபாரத்திற்காக ஒரு தனிமனிதன் தன் சுய நலத்திற்காக‌ மாற்றுவது சுத்த அயோக்கியத்தனம்.

இத்தகைய அயோக்கியத் திருடர்களுக்கு இந்துக்கள் காலத்திற்கும் ஓட்டு போட்டு, நம் சொந்த கலாச்சாரத்திற்கு ஆட்காட்டி விரலால் ஆப்பு வைத்துக்கொள்ளாதீர்கள். அதில் உறுதியாக இருங்கள். சொந்த நாட்டில் மத உரிமைக்காகப் பேசுவது மதவாதமாகாது என்பதை ஒவ்வொரு இந்துக்களும் புரிந்துகொள்ளுங்கள். இல்லையேல் நாளைய நம் தலைமுறைக்கு பாதுகாப்பு நம்மிடம் இல்லை.

பாரத் மாதாகீ ஜெய்! ஹிந்து தர்ம கீ ஜெய்! வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

மீண்டும் சொல்கிறேன், இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் ஆகும்!

Wednesday, April 15, 2009

எத்தனை காலம் தான் எமாற்றுவார் இந்த நாட்டிலே?


தமிழகத்தில் பிராமனர்கள் இன்னும் எத்தனை நாளைக்கு தான் தலை குனிவைச் சந்த்திக்கப்போகிறார்களோ தெரியவில்லை. அயோத்தியா மண்டபம் வாசலில் ஐம்பது பைசா இலாபத்திற்கு பூனூல் விற்கும் அறுபது வயது பிராமணரை அருவாளால் வெட்டி விட்டு ஓடும் இனவெறி பிடித்தவர்கள் இந்தியாவில் இங்கே தான் அதிகம்.

ஆனால் சமூகத்திற்கு பிராமணர்கள் ஆற்றிய தொண்டுகளை வசதியாக யாருக்கும் எடுத்துக்கூட சொல்லாமல் மறைத்துவிடுவது அதைவிட கொடுமை. இன ரீதியாக ஒரு சமூகத்தையே ஒதுக்கி உணர்ச்சிக்கொலை செய்பவர்கள் அந்த சமூகமே இல்லாமல் அழிந்து போகவேண்டும் என்று நினைப்பவர்கள் இலங்கையில் தமிழ்ச் சமூகம் அழிக்கப்படுவதை மட்டும் அய்யோ இனப்படுகொலை நடக்கிறதே என்று வாய் விட்டுச் சொல்லி பத‌றுகிறார்கள். சிட்டுக்குருவி இனம் போல கண்ணுக்குத் தெரியாமல் அழிந்து போகும் தருவாயில் இருக்கும் பிராமணர்கள் பற்றி கவலைப்பட அரசியல் வேடதாரிகளுக்கு இப்போது நேரம் இல்லை. அவற்றை தெரிந்து கொள்ளும் ஆர்வமும் மக்களுக்கு இல்லை.

ஆனால் ஆதி காலம் முதல் நம் சமூகத்தில் பிராமணர்களின் பங்கு பற்றி ஒரு சிறு துளிகளாவது நான் படித்தவை கேட்டவை மற்றும் கண்டவைகளைக் கொண்டு இங்கே கொஞ்சமேனும் சொல்லி விட வேண்டும் என்ற எண்ணத்தில் சிறு துளியைத் தெளிக்கிறேன்.

'கடவுள் இல்லை ' என்று வேத காலத்திலேயே கூறியவர் சார்வாக மகரிஷி

தென்னாட்டில் நாத்திகம் பேசிய பிராமணப் புலவர் கபிலர்! மறுபிறப்புத் தத்துவத்தைத் தூள் ஆக்கிய 18 சித்தர்களில் சிலர் பிராமணர்கள்!


வேதக் கருத்துக்களை மறுத்த சமணம் புத்தம் போன்ற மதங்களில் முதன்மையான சீடர்களாய் விளங்கியவர்கள் பிராமணர்களே!


கருத்துப் புரட்சிகளை முதலில் வரவேற்று நடந்தவர்களும் பிராமணர்களே!


உடன்கட்டை ஏறுதலைத் தடுத்தல், விதவா விவாகம் போன்றவற்றை ஆதரித்துப் போர் நடத்தியவர்களூம் அவர்களே!


வேதத்திற்கு நிகராக தமிழ் மொழியில் 'திராவிட வேதம் ' என்ற திவ்யப் பிரபந்தத்தை உருவாக்கியவர்களும் அவர்களே!


வேதத்தை வெளியே சொல்லக்கூடாது என்ற சட்டத்தை மீறி உடைத்து திருக்கோட்டியூர் மதில் மீதி நின்று வேதகீதம் கிளப்பிய புரட்சிக்காரர் ராமானுஜர்.


நாய்களோடு திரிந்த சண்டாளனைத் தனது குருவாக ஏற்றுக்கொண்ட ஆதிசங்கரர் பிராமணரே!


ஆதிதிராவிடர்களைத் தீண்டக் கூடாது என்றிருந்த காலத்தில் திருப்பாணாழ்வார் என்ற ஆதிதிராவிடரை ஸ்ரீரங்கம் பூசுரர்களின் தோள்மீது ஏற்றி கோவிலுக்குள் கொண்டு வந்ததும் அவர்களே!


மேலை நாட்டவரே வியக்கும் சித்தாந்த வேதாந்தங்களையும் ஆக்கியவர்களும் அவர்களே.


வான சாத்திரத்தில் பலநூறு ஆண்டுகளூக்கு முன்பு சீரிய சிந்தனையைப் படைத்தது ஆரியப் பட்டரே! கலைகளில் இலக்கணங்களை வகுத்ததும் பிராமணர்களே! அரசியலில் சாத்திரங்களை இயற்றியதும் அவர்களே! சர்.சி.வி ராமனும் பிராமணனே. கணக்கு மேதை ராமானுஜமும் பிராமணனே!


(செக்ஸி) பால் உறவுகளையும் இலக்கணமாக்கிச் சொன்னதும் வாத்ச்யாயனர் என்ற பிராமணரே!


அண்மைக் காலத்தில் - கம்யூனிசத்தை இந்தியாவில் பரப்பியவர்களும் பிராமணரே!


காந்தியாருடன் பணியாற்றிக் கொண்டே நாத்திகம் பேசிய 'கோரா 'வும் பிராமணரே!


பி.ஆர்.அம்பேத்கார் என்ற புரட்சிக்காரரின் பெயரிலுள்ள 'அம்பேத்கார் ' அவரை ஆதரித்து வளர்த்த பிராமணரின் பெயரே!


காந்தியார் என்ற வைசியரின் மகனுக்குத் தனது திருமகளைத் தந்த பிராமணர்தான் மூதறிஞர் ராஜாஜி.


முதல் உலகப்போரில் இந்தியர்கள் பிரிட்டனுக்கு ஒத்துழைத்தால், யுத்தம் முடிந்த பிறகு இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்கப்படும் என்று அறிவித்து, பின்னர் போருக்கு ஒத்துழைத்த இந்தியர்களை ரௌலட் சட்டம் என்ற கடுமையான அடக்கு முறை சட்டம் இயற்றி ஏமாற்றிய வெள்ளைக்காரர்களை ராஜியப் பிரதிநிதி சபையில் கடுமையாக எதிர்த்து வாதிட்டு காந்தியடிகளிடமும் பாராட்டுப் பெற்ற தஞ்சாவூரைச் சேர்ந்த சீனிவாச சாஸ்திரி பிராமணரே!


தமிழைப் பேணிக் காப்பதிலும் பிராமணர்கள் முன்னணியில் இருந்தார்கள்; இருக்கிறார்கள்!


தமிழின் முதல் முனியான அகத்தியனே பிராமணன்தான்! தொல்காப்பியரைக் கூட அப்படிக் கூறுவதுண்டு! தமிழின் அழகிய பனுவல்கள் அவர்களால் ஆக்கப்பட்டதுண்டு! வடமொழிக்கு நிகரான தமிழ் இலக்கணங்களை - இலக்கியங்களை ஆக்கிட முனைந்து நின்றவர்களும் அவர்களே!


தமிழனே முதலில் தோன்றிய இனம்; குமரிக் கண்டத்து நாகரீகமே - முதல் நாகரீகம் என்று ஆதாரத்தோடு பேசியவர்கள் ராகவ ஐயங்காரும் சீனிவாச ஐயங்காரும்.


அழிவு நிலையில் இருந்த தமிழ் இலக்கியங்களை ஊர் ஊராக அலைந்து திரிந்து யாசகம் கேட்டு ஓலைச் சுவடிகளைத் திரட்டி எட்டுத் தொகை , பத்துப்பாட்டு என்று இலக்கியங்கள் அனைத்தையும் புத்தகத்தில் அச்சேற்றி தமிழுக்கு பெரும் தொண்டாற்றியவர் உ வே சுவாமிநாத ஐயர் என்ற பிராமணரே. இல்லையேல் இன்றைக்கு தமிழினத்திற்க்கே தாம் தான் தலைவன் என்று கிரயப் பத்திரம் காட்டுபவர்களும், புலியை முறத்தால் அடித்த பெண்மனி பற்றி வாய்கிழிய வீரம் பேசி கூடவே பிராமண எதிர்ப்பும் பேசும் வாய்ச் சொல் வீரர்களுக்கு தமிழ் வீரம் பேச புறநானூறு ஏது?.தமிழ் சினிமாவில் பிராமணர்கள்-பாகம் 2


சமஸ்கிருதம் கலவாத தனித்தமிழ் இயக்கத்தின் தூண் பரிதிமாற் கலைஞர் என்ற சூரியநாராயண சாஸ்திரி.


தமிழ்க் கவிதையுலகில் புரட்சி செய்த பாரதியாரும் பிராமணரே! இன்றைக்கும் புதுக்கவிதை என்ற புரட்சியைச் செய்யும் சி.சு.செல்லப்பாவும் பிராமணரே!


காண்டேகரைத் தமிழுக்குத் தந்த கா.ஸ்ரீ.ஸ்ரீ.யும், சகல கலா வல்லவராய் இருந்து அகில இந்தியப் பத்திரிகையுலகில் சாதனை புரிந்த கல்கியும் வாசனும் பிராமணர்களே!


வெளிநாடுகளில் உள்ள தமிழ்ச்சங்கங்களைக் காத்து நிற்பவர்களூம் அவர்களே!


வெளிநாட்டுக்குச் சென்றால் அந்த நாகரீகத்தை ஏற்காமல்... நமது நாகரீகம் காத்து, விடாப்பிடியாக வீடுகளில் தமிழ்பேசும் குடும்பங்களும் பிராமணக் குடும்பங்களே!


தமிழில் புரட்சி செய்து - விஞ்ஞானக் கருத்துகளை - புதுமைக் கருத்துகளைத் துணிவுடன் சொல்லிவரும் சுஜாதா போன்றவர்களும் பிராமணர்களே!


முகலாய சாம்ராஜ்யத்தின் ஆதிக்கம் தென்னாட்டில் நுழைய விடாமல் ஹரிஅரபுக்கர்களை உருவாக்கிய வித்யாதரரும் பிராமணரே!


தென்னாட்டுப் போர்க்களங்களில் வீரசாகசம் நிகழ்த்தி - மைசூர் அரசை நடுநடுங்க வைத்த திருமலை நாயக்கரின் படைத் தளபதி ராமப்பையர் பிராமணரே!


வெள்ளையனை எதிர்த்த சுதந்திரப் போரில் (வட நாட்டில்) பிராமண மன்னர்களூம், தளபதிகளும் இருந்தார்கள்.


தென்னாட்டில்... பகத்சிங்குக்கு முன்பு மணியாச்சி ஸ்டேஷனில் வெள்ளைக்காரனைத் துப்பாக்கியால் சுட்ட வீரனான வாஞ்சிநாதன் - பிராமணனே!


வெள்ளையரை கிடுகிடுக்க வைத்த ஆயுதப் புரட்சியைத் தமிழகத்தில் நிகழ்த்தியவர் வ.வே.சு. அய்யர்.


திருப்பூர் குமரனின் குருவாய் இருந்து போலீஸ் தடியடிக்கு ஆளாகி நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் எலும்புகளில் முறிவு ஏற்பட்ட திருப்பூர் பி.எஸ். சுந்தரம் பிராமணரே.


1938 இந்தி எதிர்ப்புப் போரில் துணிவாக ஈடுபட்டவர் சி.வி.ராஜகோபாலாச்சாரியார்!


1965-ல் இந்தி எதிர்ப்புப் போரில் ஈடுபட்டு தமது போலீஸ் வேலையைத் தூக்கி எறிந்த போலீஸ் வெ.கண்ணனும் பிராமணரே!


இந்தியா-பாகிஸ்தான் போரில் வீரமரணம் அடைந்து வீரப்பதக்கம் பெற்ற தமிழர்களில் பலர் - செங்கற்பட்டு சென்னை மாவட்டங்களைச் சார்ந்த பிராமணர்களே!


இப்போதும் மார்வாடிகளை எதிர்த்து - வட்டி வாங்குவதை எதிர்த்து சிறை புகுந்து கடுமையான வீரப்போர் நிகழ்த்துகின்ற மாவீரன் எம்.கே. சீனிவாசனும் பிராமணரே!


இதுமட்டுமில்லை; நவீன - மார்டன் துறைகளிலும் அவர்கள் சிறந்து விளங்குகிறார்கள். புதிய பாஷன்களை, புதிய டிசைன்களை விரும்பி ஏற்பதும் பிராமணர்களே!


மீசை வைப்பது பிராமண தர்மத்துக்கு விரோதம்; ஆனால் மீசையோடு தாடியும் வைத்து அழகாகப் பவனி வருபவர்கள் பிராமணர்கள்!


மடிசார் அதிகமாக இல்லை; மேக்சி - பெல்பாட்டம் - ஜீன்ஸ்தான் அதிகம்!


உடையில் - உணவில் - பழக்கவழக்கத்தில் மட்டுமில்லாமல் மன ஒப்பனையிலும் (மெண்டல் மேக்கப்) அவர்களுக்கு பழைய பஞ்சாங்கத் திமிர்த்தனம் கிடையாது! மேல்மதிப்பு என்ற மமதை இல்லை!


இந்தியாவின் அண்டை நாடுகளைக் கூட அதட்டி வைத்திருந்த இரும்புப் பெண்மணி இந்திரா காந்தி கூட பிராமணப் பெண் தானே!

அயோக்கிய அரசியல் வாதிகளையெல்லா ஆடிப்போகச் செய்து, தேர்தல் ஆணையம் என்று ஒன்று இருக்கிறது, அதற்கு இத்தனை வலிமை இருக்கிறது என்று வெளிப்படுத்திய தைரியசாலி டி என் சேஷன் ஒரு பிராமணர்.

ஏன் இன்று கூட சமூகத்தில் நடக்கும் சட்ட விரோத செயல்களுக்கு எதிராக தன்னந்தனி ஆளாக யாருக்கும் பயப்படாமல் அநீதிக்கு எதிராக நீதிமன்றம் போய் போராடி அரசாங்கத்தையே அவர் சொல்வதைப் போல் செயல்பட வைக்கும் டிராபிக் இராமசாமி ஒரு பிராமணரே. பிராமணர் என்றால் கோழைகளென்று காதில் பூசுற்றும் தமிழ் சினிமா சமூகம் இந்த தைரியமுள்ள பிராமணரை கதாநாயகனாகக் கொண்டு படம் எடுக்குமா?


ஒரு கருத்து கணிப்பு வெளியிட்டாலே பத்திரிக்கை அலுவலகம் புகுந்து அங்குள்ளவர்களை கொலை செய்து விடும் அரக்கர்கள் வாழும் அரசியலில், சமூக நீதிக்கு தவறான காரியங்கள் நடத்தப்படும் போது அவற்றை இன்றளவும் சிறிதும் பயமில்லாமல் பத்திரிக்கையில் கண்டிப்பதும் உண்மைகளை வெளிப்படுதுவதும் ஒரு கடமையாகவே செய்து கொண்டிருக்கும் துக்ளக் ஆசிரியர் சோ. ராமசாமி ஒரு பிராமணரே!


இப்படி சமூகத்தில் எல்லா திசைகளிலும் தமிழருடன் வாழ்ந்து தமிழுக்குத் தொண்டாற்றி தமிழனாகவே வாழ்ந்து கொண்டிருக்கும் பிராமணர்களை இன்னும் எத்தனைக் காலம் தான் அவமதித்து மிதித்து நடப்பார்களோ இந்த பார்ப்பன எதிர்ப்பு வீரர்கள்!.

பகுத்தறிவு என்ற பெயரைச்சொல்லி தமிழர்களை அடி முட்டாள்களாக மாற்றி ஐம்பது வருடம் ஆகி விட்டது. இன்னும் எத்தனைக் காலம் தான் எமாற்றுவார் இந்த நாட்டிலே?! இந்த நாட்டிலே! தமிழ் நாட்டிலே....?????