Tuesday, December 28, 2010

ஜன்னலோரம் குழந்தை!

உங்கள் வீட்டில் கம்பியில்லா ஜன்னல் இருக்கிறதா? குழந்தைகளை ஜன்னலோரம் தனியாக விளையாட விடுவீர்களா? ஜாக்கிரதை!

Sunday, December 26, 2010

ராமக்ருஷ்ண பரமஹம்ஸரின் அருள்மொழிகள்!


உருவமின்றியும் உருவத்துடனும் கடவுள் விளங்குகிறார். இந்த இரு நிலைகளை கடந்தும் அவரே விளங்குகிறார். அவர் எப்படியெல்லாம் இருக்கிறார் என்பதை அவர் மட்டுமே அறிவார்.  

ஓர் எறும்பு எவ்வளவு தான் முயற்சி செய்து வயிறார உண்டாலும் எடுத்துச் சென்றாலும் ஒரு பெரிய சர்க்கரை குன்று சிறிதும் பாதிக்கப் படுவதில்லை. முன்பிருந்த படியே அது இருக்கிறது. கடவுள் அது போலவே, பக்தர்கள் எவ்வளவு தான் பரவச நிலையில் ஆடினாலும் பாடினாலும் அவர் இன்னும் யாராலும் முழுமையாக அறியப்படாதவராகவே இருக்கிறார்.  முழுமையாக அவரை அறியவும் அவரது பெருமைகளை அனுபவிக்கவும் யாராலும் முடியாது.  

மீன் எவ்வளவோ தூரத்தில் இருக்கலாம். ஆனால் கவர்கின்ற விதத்தில் ஏதாவது உணவைப் போட்டால் எங்கிருந்தாலும் விரைந்து அங்கு வந்து சேர்ந்து விடும். அது போல் அன்பும் நம்பிக்கையும் உடைய பக்தனின் இதையத்தில் இறைவன் விரைந்து வந்து குடிகொள்கிறான்.  

இறைவனின் திருப்புகழைப் பாடுகின்ற இடத்தில் தீய சக்திகள் நெருங்குவதில்லை.  நோயும் உடலும் ஒன்றை ஒன்று பார்த்துக் கொள்ளட்டும். மனமே நீ எப்போதும் ஆனந்தமாக இரு.  

இறைவனை நெருங்க நெருங்க ஒருவன் அவரைப் பற்றி மேலும் மேலும் அறிந்து கொள்கிறான். முடிவில் அவரிலேயே ஒன்று கலந்துவிடுகிறான்.  

இறையருள் என்னும் காற்று இடயீடின்றி எப்போதும் வீசிக்கொண்டிருக்கிறது. சோம்பேறி படகோட்டி போன்றவர்கள் பாய்மரத்தை விரித்து அதை பயன்படுத்திக் கொள்வதில்லை. ஆனால் சுறுசுறுப்பான வலிமையானவர்கள் தங்கள் மனமாகிய பாய்மரத்தை எப்போதும் விரித்து வைத்திருந்து தாங்கள் சேர வேண்டிய இடத்தை விரைவில் எளிதில் அடைகிறார்கள்.  

எப்போதும் சிந்தித்துப் பேசு. மனமும் வாக்கும் ஒன்றினைந்து செய்யப்படும் பிரார்த்தனைகளுக்கு பதில் கட்டயம் கிடைக்கும்.  

- ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்


Friday, December 24, 2010

மதவாதசார்பு அரசியல் ஆபத்து நிறைந்த சமூகச் சூழல்!


இது மதச்சார்பற்ற நாடு. ஆனால் அரசாங்கம் என்னவோ மதம் சார்ந்தது. ஆனால் இஸ்லாம் சார்ந்ததா அல்லது கிறிஸ்தவம் சார்ந்ததா என்பதை அரசியல் வாதிகள் வெளிப்படையாகச் சொல்லவில்லை. இந்துக்களுக்கு எதிரானது என்பது மட்டும் நிச்சயிக்கப்பட்டு விட்டது என்கிற தோற்றத்தை உண்டாக்க அரசாங்கம் தவறவில்லை.

சமீபத்தில் நண்பர் ஒருவர் அவரது மகள் "அப்பா என்னை ஏன் நீ கிறிஸ்டியன் என்று பள்ளியில் சொல்லக்கூடாது. என் நண்பர்கள் எல்லாருக்கும் பணக் கொடுக்கிறார்கள். நானும் கிறிஸ்டியனாக இருந்தால் வாங்குவேன் இல்லையா?" என்றாளாம். சிறுபான்மையின மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் என்ற பெயரில் பணம் கொடுத்து இந்துப்பிள்ளைகளின் மனதில் ஏக்கத்தை விளைவிப்பதன் மூலம் அரசே மதம் மாற்றத்திற்கு தூண்டுதலை ஏற்படுத்துகிறது. பல ஊடகங்களில் இப்படி நடக்கிறது என்ற செய்தி படிக்கும் போது மனதில் உண்டான பாதிப்பை விட அருகிலேயே இருக்கும் நண்பர் கூறும் போது மிகவும் வேதனையாக இருந்தது. இந்த நிலையில் தமிழகத்தின் அரசியல் தலைவர்கள் இருவரும் கிறிஸ்தவர்கள் கால்களில் விழாத குறையாக பேசியிருப்பதை கொஞ்சம் பார்க்கலாம்.நீங்கள் சொல்லும்படி நடப்போம் என்பதற்கு இந்த அரசு சான்றாக உள்ளது.
சிறுபான்மை மக்களின் கோரிக்கையை நாங்கள் அலட்சியப்படுத்த மாட்டோம்.
ஆதிதிராவிடர்களுக்கான சலுகைகள், உரிமைகள், ஆதிதிராவிட கிறிஸ்தவர்களுக்கும் வேண்டுமென்ற கோரிக்கை நியாயமானது. பார்லிமென்டில் இந்த கோரிக்கையை நிறைவேற்றும் பொறுப்பை தி.மு.க., ஏற்றுக்கொள்ளும். காங்., துணையுடன் நிறைவேற்றி வைக்கப்படும். கோரிக்கையை நிறைவேற்ற போராடவும் தயங்க மாட்டேன். இதற்காக எந்த தியாகமும் செய்யத் தயாராக இருக்கிறேன். (கடவுளே இல்லை என்பாராம், ஏசு பிறந்தநாளை கொண்டாடுவாராம்!)

- மு.கநான் கிறிஸ்தவ பள்ளியிலேயே படித்தேன். உலகம் முழுவதும் கல்வி, மருத்துவப்பணியை இறைப்பணியாக ஏற்று மக்களின் வாழ்க்கøயில் மகிழ்ச்சியையும், சமாதானத்தையும் வழங்கிய கிறிஸ்தவ மிஷனரிகளையும் (அப்படியா?!), அதில் பணியாற்றியவர்களையும் வாழ்த்தி வணங்குகிறேன். கல்லூரியில் படிக்கும் போது அங்குள்ள வழிபாட்டு கூடத்துக்கு செல்வேன். பைபிள் படிப்பேன். அது இன்றும் எனது மனதில் பசுமரத்தாணி போல் பதிந்துள்ளது. உலகெங்கும் உள்ள கிறிஸ்தவ மிஷனரிகள் பல தொண்டுப்பணிகள் செய்கின்றன. இதைதான் நான் கிறிஸ்துமஸ் செய்தியாக சொல்ல விரும்புகிறேன் (என்ன ஒரு செய்தி!!). அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் அமைந்தால் ஹஜ் யாத்திரை செல்ல அரசு உதவி செய்வது போல, ஜெருசலம் யாத்திரை செல்ல அரசு உதவிகள் செய்யும். கன்னியாகுமரி மாவட்டத்தில் பட்டா நிலத்தில் சர்ச் கட்டுவதற்கு உள்ள தடையை மாற்ற அரசு நடவடிக்கை எடுக்கும். (ஏற்கனவே அந்தப் பகுதிகளில் இந்துக்களை வீட்டு வாசலில் பொங்கல் வைத்து கும்பிடக்கூடாது என்று கிறிஸ்தவர்கள் தொல்லை தருகிறார்கள் என்று கேள்வி...!) அதுபோல ஆதிதிராவிடர் கிறிஸ்வதர்களுக்கு ஆதிதிராவிடர்களுக்கான சலுகைகள் கிடைக்க, அதற்குரிய கமிஷனில் அதற்குரிய ஆணையை பெற்று நடவடிக்கை எடுக்கப்படும்

- ஜெயா

என்னவோ ஏசு பிறந்த ஜெருசலேமுக்குச் செல்லமுடியவில்லை என்று அத்தனை கிறிஸ்தவர்களும் ஒப்பாரி வைப்பது போல தாமாகவே முன்வந்து இப்படி காலில் விழும் ஜெயாவும் சரி மதம் மாறினாலும் ஒதுக்கீடு வேண்டும் என்று நீங்கள் கேட்பது ஞாயம் தான் என்று காலில் விழும் மு.க வும் சரி இந்துக்களின் எதிர்காலத்தை பாரத தேசத்தில் குழி தோண்டி புதைத்தே தீருவோம் என்று சூளுரைத்தாற்போல் தான் இருக்கிறது. இந்துக்களின் புனித க்ஷேத்திரமான காசிக்கும் ராமேஸ்வரத்திற்கும் சென்று வழிபாடு நடத்த முடியாத இந்துக்கள் பற்றி இவர்கள் கவலை கொள்ளவில்லை. 108 திவ்ய தேசங்களின் பல கோவில்களுக்குச் செல்ல சரியான பேருந்து வசதிகள் கூட கிடையாது. ஆனால் விமான கட்டனம் இலவசமாக கொடுத்து சிறுபான்மையினரின் வழிபாட்டிற்கு உதவுகிறோம் என்று சூளுரைப்பது பெரும்பான்மை ஓட்டுக்களைக் கொடுத்து தங்களை ஜெயிக்க வைக்கும் இந்து சமூகத்தினருக்கு செய்யும் துரோகம் எனபதே நிஜம்.

கொசுறு: தட்ஸ்தமிழ் இணைய செய்தி தளத்தில் புக்மார்க்ஸ் பகுதியில் வலைப்பூக்களை புக்மார்க் செய்து வைக்கும் வசதி கொடுக்கப்பட்டிருப்பது பலருக்கும் தெரியும். சமீபகாலமாக அந்த புக்மார்க் பகுதியில் இந்துக்களை அவமதித்தும் அசிங்கப்படுத்தியும் எழுதும் பதிவுகளை முன்பக்கத்தில் எப்போதும் தெரியும் படி வைக்கிறார்கள். இந்து மதத்தைப் பற்றிய விளக்கங்களுடன் வரும் பதிவுகள் கவனத்துடன் நீக்கப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல் அதை பதிவுட உதவும் யூஸர் ஐடியையும் நீக்கி விடுகிறார்கள். புதிது புதிதாக யூஸர் ஐடி பதிவு செய்து புக்மார்க் செய்தாலும் அவற்றையும் நீக்கி விடுகிறார்கள். இப்படி எனது 15 வெவ்வேறு யூஸர் ஐடிக்கள் நீக்கப்பட்டுள்ளன.

இதை இங்கே எடுத்துரைப்பதன் காரணம் அந்த தளத்தில் நமது சுட்டியை பதிவிட முடியவில்லை என்கிற வருத்தத்தால் அல்ல. அதனால் நெல்முனையளவும் நஷ்டம் இல்லை. இங்கே நாம் கவனிக்க வேண்டியது ஊடகங்கள் எப்படி மிகவும் வெளிப்படையாக இந்துக்களுக்கு எதிராக செயல்பட துணிந்திருக்கின்றன என்பதை தான்.

இந்த சூழலில் கருணாநிதியும் ஜெயலலிதாவும் சிறுபான்மையினர் ஓட்டுக்காக இந்துக்களின் வாழ்க்கையை முற்றிலுமாக அடகு வைக்கும் நிகழ்ச்சியை தொடர்ந்தால் இந்துக்களின் எதிர்கால சந்ததியினர் மிகப்பெரிய சங்கடங்களை அனுபவிக்க நேரிடுமோ என்கிற அச்சம் எழுவதை தவிர்க்க முடியாமல் போகிறது.

அரசியல்வாதிகள், ஊடகங்கள், மிஷனரிகள், இஸ்லாமிய அடிப்படை வாதிகள், அந்நியசக்திகளின் தூண்டுதல்கள் இவை அனைத்தையும் மீறி இந்துக்களுக்கு ஒரு பாதுகாப்பான எதிர்காலம் பாரதத்தில் இருக்கும் என்பது நம்பமுடியாத விஷயமாகவே தோன்றுகிறது.

இந்துக்களே! விழிப்படையுங்கள்! இந்துக்களைப் புறக்கனிக்கும் விதமான மதச்சார்பு அரசியலுக்கு வெளிப்படையாக எதிர்ப்பு குரல் கொடுங்கள். இல்லையேல் தமிழகத்திற்கு ஒரீசா பக்கமாகிவிடும்!


Sunday, December 19, 2010

தமிழ் சினிமாவில் பிராமணர்கள் - 5சமீபத்தில் காவல் துறையினர் தீவிர வாதிகள் ஊருக்குள் புகுந்தால் எப்படி நடவடிக்கை எடுப்பது என்று நடித்துப் பார்த்து பயிற்சி எடுத்துக் கொண்டனர். அதில் தீவிரவாதிகள் போல நடித்த சக போலீஸ்காரர்கள் தாடி வைத்திருந்தார்கள். உடனே முஸ்லீகள் எல்லோரும் ஒன்று கூடி தீவிரவாதியை முஸ்லீம் போல சித்தரித்து விட்டீர்கள் என்று தர்ணா நடத்தினாகள். காவல் துறையினர் தேச துரோகம் குற்றம் புரிந்து விட்டதைப் போல விழுந்தடித்து வந்து முஸ்லீம்களிடம் சமரசம் பேசி மன்னிப்பும் கோரினார்கள். இங்கே ஒரு விஷயம் எனக்கு நினைவுக்கு வருகிறது. அங்காடித் தெரு படத்தில் ஏன் பிராமண பெண் கொடுமைக்காரியாக காட்டுகிறீர்கள் என்று கேட்டதற்கு வசனகர்த்தா ஜெயமோகன் இவ்வாறு தெரிவித்திருந்தார்.. "அங்காடித்தெரு எங்கே ’பிராமணர்களை’ காட்டுகிறது? ஒரு பிராமணப்பெண்ணை காட்டுகிறது. உங்கள் வாதம் சரி என்றால் ஒரே ஒரு பிராமணர்கூட அப்படி இல்லாமல் இருக்க வேண்டும். அப்படி நம்பும் மனக்கோளாறு உங்களுக்கு இருக்கலாம். நான் ஏன் அதை ஏற்கவேண்டும்?" என்று கூறுகிறார். தொடர்புடைய சுட்டி!


ஆக ஒரே ஒரு பிராமணப் பெண் கொடுமைகாரியாக இருந்தால் கூட பிராமணப் பெண்கள் எல்லோருமே அப்படித்தான் என்று அடையாளப்படுத்தும் அளவிற்கு சினிமாவில் அதைப் பெரிதுபடுத்திக் காண்பிப்பார்களாம். அப்படியெனில் தமிழ் சினிமாவில் முஸ்லீம் ஒருவனை தீவிரவாதியாக காண்பிப்பதை முஸ்லீம்கள் எதிர்க்கிறார்கள். அவர்களிடம் ஒரே ஒரு முஸ்லீம் தீவிரவாதியாக இருந்தால் கூட நாங்கள் முஸ்லீம்களை தீவிரவாதியாக சித்தரித்து படம் எடுப்பேன் என்று திமிரோடு கூறுவதற்கு இவர்களால் முடியுமா?

இவ்வளவுக்கும் சமீபத்திய வாரனாசி குண்டு வெடிப்பு நிகழ்த்தியது முஸ்லீம் அமைப்பு தானே? அதைச் செய்தது நாங்கள் தான் என இந்தியன் முஜாகிதீன் என்ற அமைப்பு பொறுப் பேற்றதையும் செய்திகள் கூறுகின்றனவே! அதனால் நாங்கள் தீவிரவாதி கதாபாத்திரம் என்றாலே முஸ்லீம் பெயருள்ள தாடி வைத்த தலையில் தொப்பி அணிந்த ஒரு முஸ்லீமாகவே காட்டுவேன் என்று இவர்கள் கூறமுடியுமா? முஸ்லீம்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் போது காவல் துறையே மன்னிப்பு கேட்கிறது. சினிமாக்காரர்கள் காலிலேயே கூட விழுவார்கள்.

முஸ்லீம் பெண்ணை கதாநாயகியாக சித்தரித்து பம்பாய் என்ற படம் எடுத்ததற்காக மணிரத்தை கொலை செய்ய குண்டு விச்சப்பட்டது. அதற்குப் பிறகு தமிழ் சினிமாவில் முஸ்லீம் பெண்ணை கதாநாயகியாக சித்தரித்து ஒரு திரைப்படமும் வரவில்லை என்பதை கவனித்தாலே இந்த பயந்தாங்கொல்லி வீரர்கள் பற்றி புரிந்து கொள்ளலாம். பத்து சினிமாக்களில் எட்டு சினிமாக்கள் பிராமணப் பெண்ணையே கதாநாயகியாகச் சித்தரித்து படம் எடுப்பதில் மட்டும் இவர்கள் சலிப்பதே இல்லை. பிராமணர்களை மட்டும் எப்படி வேண்டுமானாலும் காட்டி விட்டு ஒருத்தர் கூட உங்களில் அப்படி இல்லையா?
என்று எதிர் கேள்வி கேட்பார்களாம். என்ன நியாயம்?


துரோகி என்றொரு படம். ஒரு பிராமணப் பையனை துரோகி என சித்தரிக்கும் படியாக காட்சியமைத்து பூனூலுடன் அவனை அம்மனமாக சுற்றவைத்து, "போடா துரோகி, சொம்பை, சப்பை" என்று இன்னும் என்னவெல்லாம் வக்கிரமாக வசைபாட முடியுமோ அத்தனை வசைகளையும் அந்த பிராமண கதாபாத்திரத்தின் மீது மொழிவதாக காட்டப்படுகிறது. இது படம் எடுத்தவர்களின் ஜாதீய காழ்ப்புணர்ச்சியும் குறிப்பிட்ட ஜாதியினரை எப்படி எல்லாம் திட்டித்தீர்க்க அவர்(கள்) தனிப்பட்ட முறையில் ஆசைப்படுகிறார்களோ அதையே காட்சிப்படுத்தி இருக்கிறார்கள் எனபது தெளிவாகிறது.

மனநலம் பாதிக்கப்பட்ட சைக்கோக்கள் குறிப்பிட்ட ஒருவரை நேரடியாக தாக்க முடியாத போது அவரது உருவத்தை வரைந்து அதன் மீது கத்தியால் குத்துவார்கள். இன்னும் என்னென்ன செய்ய முடியுமோ அது போல வக்கிரமாக அந்த உருவகத்தின் மீது செய்து பார்த்து தங்கள் வக்கிரத்தைத் தீர்த்துக்கொள்வார்கள். அது போல பிராமண காழ்ப்பு கொண்ட தமிழக சைக்கோக்கள் சினிமாவில் பல்கிப்பெருகி இருக்கிறார்கள் என்பதற்கு இது போன்ற படங்களே சாட்சி! பிராமணர்கள் மீது தனக்கு இருக்கும் சொந்த காழ்ப்புணர்ச்சியை திரைக்கதை என்ற பெயரில் காட்சிப்படுத்தி அந்த உருவகத்தை கேவலமாக வசனம் என்ற பெயரில் வசைபாடி மகிழ்கிறது இந்த சினிமாக்கூட்டம்.

இதே துரோகி என்ற படத்தில் இன்னொரு காட்சியில் இரட்டை அர்த்தம் தொனிக்கும் வகையில், பிராமணர் தனது மனைவியை கதாநாயகனின் ஆசைப்படி அவருக்கு வழங்க ஒத்துக்கொள்வது போல கேவலமான காட்சிப்படுத்தலும் இருந்தது. அந்த காட்சி என்னமோ வேறு ஒரு காரணத்திற்காக கதாநாயகன் பேசுவது போலத்தான் இருக்கும். ஆனால் காட்சிப்படுத்தலின் போது இருக்கும் இரட்டை அர்த்தம் ஏறக்குறைய கூட்டிகொடுக்க சம்மதிக்கும் பிராமணரை சித்தரிப்பது போன்ற பார்க்க சகிக்காத ஆபாசக் காட்சியாகவே காட்டி இருப்பார்கள்.

இவ்வாறு பிராமணர்களை காட்சிப்படுத்துவது பிராமனர்கள் பற்றிய மிகவும் கொச்சையான ஆழ்மன வக்கிரம் தான். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அந்த வக்கிர புத்தியை வெளிப்படுத்துகிறார்கள். பிராமணப் பெண்களை எப்படியாவது பெண்டாட வேண்டும் என்கிற பொறுக்கித்தனமான கற்பழிப்பு புத்தி என்றே இதனை எடுத்துக் கொள்ள முடியும். தமிழ் சினிமாவில் கதாநாயகியரை எல்லாம் பிராமண கதாபாத்திரமாகவே காட்டுவதும் இப்படிப்பட்ட வக்கிர புத்தியின் வெளிப்பாடாகவே பார்க்கமுடிகிறது.

இங்கே இன்னொரு பரிமானத்தை நாம் கவனிக்க வேண்டும். ஒரு இனத்தை அடியோடு அழிக்க வேண்டுமெனில் அந்த இனப்பெண்களின் கருப்பைகளைப் கைப்பற்ற வேண்டும் என்பது இன அழிப்பு யுக்தி. தமிழகத்தைப் பொறுத்தவரை பிராமண இனத்தை அடியோடு அழிக்க அந்த இனப்பெண்களின் ஆழ்மனதில் வேறு ஜாதிக்காரன் தான் உனது ஹீரோ என்பதை நிலை நிறுத்திவிட்டால் - அப்பெண்களின் கருப்பைகளை கைப்பற்றி விட்டால் இனி அடுத்த சந்ததி அந்த இனத்திற்கு துளிர்க்க வாய்ப்பே இல்லை என்னும் மிகப்பெரிய திட்டமிடலும் வக்கிரமான அழிப்பு குணமும் இதன் பின்னால் ஆழமாக இருக்கிறது. தமிழ் சினிமாவில் பத்திற்கு எட்டு படங்கள் பிராமண கதாநாயகிராகவே சித்தரித்து அவர்கள் கண்டிப்பாக வேறு ஜாதிக்காரனைத்தான் திருமணம் செய்யவேண்டும் என்கிற நியதியை காட்சிப்படுத்தலும் கருப்பையை கைப்பற்றத்துடிக்கும் இந்த இன அழிப்பு நோக்கமே ஆகும்.

மேலோட்டமாகப் பார்த்தால் இது வெறும் கற்பனை காட்சிப்படுத்தல் தானே என்று நினைக்கத் தோன்றும். ஆனால் அருவெறுக்கத்தக்க இன துவேஷமும் ஆழமான இன அழிப்புச் செயல்களும் கங்கனம் கட்டி நடத்தப்படுகிறது என்று சாதாரன பிராமணனுக்குத் தெரியாது. தங்களை முற்போக்கு பிராமணனாக காட்டிக் கொள்பவனுக்கு இது புரியாது. பிராமணர் அல்லாதவர்களுக்கு அப்படி ஒன்று நடப்பதாகவே உணர முடியாது.

இப்படி பிராமணர்களை மிகவும் கேவலமான வக்கிரங்களுடன் பார்ப்பதும் அவரவர் பார்வைக்குத்தகுந்தாற்போல் படமாக்கி தங்கள் கீழ்தரமான ஆழ்மன வக்கிரங்களை பிராமண காட்சிப்படுத்தல் மூலம் வெளிப்படுத்துவதும் இன்றைக்கு தமிழ் சினிமாவில் சகிக்க முடியாத அளவிற்கு பெருகியிருக்கிறது என்றால் மிகையாகாது.

இந்த சூழலில் சமீபத்திய இன்னொரு செய்தி பற்றி படிக்கும் போது சினிமாக்காரர்களின் ஜாதீய வெறி பிராமணர்களுக்கெதிரான கீழ்தரமான காழ்புணர்ச்சி வெட்டவெளிச்சமாக வெளிப்பட்டது.

இது செய்தி

"உத்தம புத்திரன் விவகாரத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த, தனுஷ், மித்ரன் R ஜவகர் உள்ளிட்ட முக்கிய நபர்கள் அடங்கிய ‘உத்தமபுத்திரன்’ படக்குழுவினர், சர்சைக்குள்ளான காட்சிகள் நீக்கப்பட்டுவிட்டதாக கூறியதோடு, தங்கள் வருத்தங்களையும் தெரிவித்துக் கொண்டனர். கௌண்டர் சமூகத்தாரை இழிவுபடுத்துவது போன்ற காட்சிகளையும், வசனங்களையும் நீக்க வேண்டும் என கொங்குநாடு முன்னேற்ற கழகத்தினர்
போராட்டம் நடத்தியதை தொடர்ந்து, படத்தை தடை செய்யும்படி மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டதாக நாம் முன்பே செய்தி அளித்திருந்தோம். சேலம், கோவை, திருச்சி, கரூர் உள்ளிட்ட இடங்களில் 80ற்கும் மேற்பட்ட இடங்களில் படத்திற்கு தடை விதிக்கப்பட்டது".
இந்த கேவலமான ஜாதி காழ்ப்புணர்ச்சி கொண்ட சினிமா வியாபாரிகளிடம் சில கேள்விகள் கௌண்டர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் போது படக்காட்சிகளை நீக்கி அவர்களிடம் மன்னிப்பும் கோரும் திரையுலகம், முஸ்லீம் கதாபாத்திரத்தை நெகட்டிவாக படமாக்ககூட பயப்படும் திரையுலகம் ஏன் பிராமணர்களை மட்டும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு கேவலமாகவும் கேலியாகவும் காட்ட முற்படுகிறார்கள்?

பிராமண பாலச்சந்தராலேயே தொடங்கி வைக்கப்பட்ட இந்த கேவலமான காரியத்தை ஒரு மனிதாபிமானத்திற்கு கூட ஏன் சினிமாக்காரர்கள் இன்று வரை நிறுத்த மறுக்கிறார்கள்?

பிராமணர்களை சித்தரித்தே நாம் ஏன் கதை அமைக்க வேண்டும் என்றும் அதை விட்டுவிடலாமே என்றும் ஏன் ஒரு சினிமாக்காரருக்கு கூட தோன்றமாட்டேன் என்கிறது?

ஒரு நடிகை நீதிமன்றத்திற்கு பர்தா அனிந்து வந்ததையே முஸ்லீம்களின் உடை என்று கூறி அதற்கு எதிர்ப்பு தெரிவித்த முஸ்லீம்களின் பேச்சை சாடாத அரசியல் வாதிகள் சினிமாக்காரர்கள் ஏன் மடிசார் பிராமணர்களின் உடை அதை அணிந்து ஏன் ஆபாசமாக நடிக்கிறீர்கள் என்று கேட்டால் மட்டும் உன் முப்பாட்டனை பழிவாங்கவே அவ்வாறு செய்கிறேன் என்று எகத்தாளமாக பேசுவது ஏன்?

இதே ஜவஹர் இயக்கி தனுஷ் நடித்த யாரடி நீ மோகினி படத்தில் பிராமண கதாபாத்திரத்தை எவ்வளவு சுதந்திரமாக பயன்படுத்தினார்கள். எல்லா பிராமண மாமிகளும் ஒரு டாட்டா சுமோவில் தனுஷை அமுக்கி அவன் மீது லஜ்ஜையே இல்லாமல் விழுந்து விழுந்து பிரயாணிப்பது போல காட்டினார்களே அப்போது ஏன் இவர்களுக்கு தான் ஒரு குறிப்பிட்ட ஜாதியினரை மிகவும் அபத்தமாக காண்பிக்கிறோமே என்று தோன்றவில்லை? ஜவஹர் வீட்டுப் பெண்கள் எல்லோரும் ஒன்றாகக் கூடி இப்படி குடும்பத்திற்கு சம்பந்தம் இல்லாத ஒரு ஆண்மகனோடு மேலே விழுந்து ஒட்டி உரசி வண்டியில் ஒன்றாகச் செல்வார்களா? தன் குலப் பெண்களைப் பற்றி அவ்வாறு நினைக்க முடியாத ஒருவர் மற்ற குலப்பெண்கள் இப்படி நடந்து கொள்வார்கள் என்று நினைப்பது ஆழ்மன வக்கிரத்தின் வெளிப்பாடில்லையா?

சீந்திப்பீர்களா சினிமாக்காரர்களே...? சிந்திப்பீர்களா?

தமிழ் சினிமாவில் இன்னும் எவ்வாறெல்லாம் பிராமணர்கள் கேலிக்குரியவர்களாக கேவலமாகவும் காட்சிப்படுத்தப்படுகிறார்கள் என்பதை தொடர்ந்து பார்ப்போம்...

தொடரும்....
Friday, December 17, 2010

இது செக்யூலரிச நாடு - ராகுலுக்கு சில கேள்விகள்..?


செய்தி இங்கே!

"இந்து தீவிரவாத அமைப்புகளால்தான் இந்தியாவுக்கு பேராபத்து உள்ளது. முஸ்லீம் தீவிரவாதத்தை விட இந்து தீவிரவாதம்தான் மிகப் பயங்கரமானதாக இருக்கும் என நான் கருதுகிறேன்." - ராகுல். (இவர்கள் காந்தி என்ற அடைமொழிக்கு லாயக்கற்றவர்கள்)
உருப்படியாக நாட்டிற்கு எதையும் செய்திடாத இத்தாலி ராணியின் மகன், இத்தாலி இளவரசன் ராகுல் வாய்மொழிந்த முத்துக்கள் தான் மேலே கண்ட வரிகள். குடிசை குடிசையாகத் தூங்கி, ஏழைகள் வைத்திருந்த ஒரு வேளை கஞ்சியையும் அவர்களுக்கு இல்லாமல் பிடுங்கிக் குடித்து புகைப்படத்திற்கு 'போஸ்' கொடுத்த இந்த இத்தாலி வாரிசு இந்து தீவிர வாதம் முஸ்லீம் தீவிரவாதத்தை விட பயங்கரமானது என்று அலறி அடித்துக்கொண்டு கூறியிருக்கிறார். அதுவும் வெள்ளைக்காரனிடம் மூக்கு சிந்தி இருக்கிறார்.

நாட்டிற்கு பிரயோஜனமாக எதையும் செய்துவிடாட்டாலும் ஓட்டு பொறுக்கி அரசியலில் தான் யாருக்கும் சளைத்தவரில்லை என்று நிரூபிக்கப்பார்க்கிறார். ஆனால் அதற்கு முன் சில கேள்விகளுக்கு ராகுல் பதில் கூற வேண்டும்.

அப்சல் குரு என்பவன் வாயில் விரல் வைத்தால் கடிக்கத்தெரியாத குழந்தை என்று கூறுகிறாரா ராகுல்?

அப்சல் குருவால் உயிர்கள் கொல்லப்பட்டது பயங்கரமானதாக தெரியவில்லையா?

அஜ்மல் கசாப் ரயில்வே நிலையத்திலும், தாஜ் ஹோட்டலிலும், துப்பாக்கியால் சுட்டு அப்பாவிகள் உயிரை எடுத்தது பயங்கரமானதாக ராகுலுக்குத் தெரியவில்லையா? வாயில் விரல் வைத்தால் கடிக்கத்தெரியாத குழந்தை தான் அஜ்மல் கசாப் என்று அவனுக்கு வக்காலத்து வாங்குகிறாரா ராகுல்?

சமீபத்தில் காசியில் குண்டு வைத்து ஒன்னரை வயது குழந்தையை துடிக்கத்துடிக்க கொன்ற தீவிரவாதிகள் முஸ்லீகள் இல்லையா?
நாங்கள் தான் இந்த கொலையைச் செய்தோம் என்று பெருமையாக கூறிக்கொள்ளும் முஸ்லீம் தீவிரவாதிகள் ராகுலுக்கு பயங்கரமானவர்களாக தெரியவில்லையா?

எந்த தீவிரவாதமானாலும் அதைத் தடுக்க உதவும் 'பொடா' சட்டத்தை ஆத்தாளும் மகனுமாக சேர்ந்து வாப்பஸ் வாங்கினார்களே ஏன்?

தீவிரவாதம் எதுவுமே பயங்கரமென்று பின்னால் சப்பைக்கட்டு கட்டுபவர்கள் அப்சல் குருவையும், அஜ்மல் கசாப்பையும் ஏன் இன்னும் உயிருடன் வைத்து எங்கள் வரிப்பணத்தில் கறி சோறு பிரியானி போட்டு வளர்க்கிறார்கள்?

ஒரு முஸ்லீம் தீவிரவாதி என்றாலும் அவன் செல்லப்பிளை.. ஆனால் காவி கட்டி கோபப்பட்டாலே அவன் தீவிரவாதி என்பது தான் ராகுலின் கருத்தா?

கீழ்வரும் படுகொலைகள் எல்லாம் பயங்கரமானதாக இத்தாலி சிறுவன் ராகுலுக்கு தெரியவில்லையா?Major Terrorist Attacks In India

March 12, 1993 - A series of bomb blasts, planted by Muslim underworld figures, rock the country's commercial capital of Bombay, killing some 260 people and injuring 713.

February 14, 1998 - 46 persons were killed and more than 200 injured when 13 blasts ripped through Coimbatore, members from Al-Umma, All India Al-Jihad Committee, and Peoples Democratic Party were found to be behind the attack.

December 24-31, 1999 – Pakistani militants hijack an Indian Airlines flight from Kathmandu to New Delhi with 189 people aboard, kill one passenger and force the release of three jailed Muslim in exchange.

December 22, 2000 - Lashkar-e-Taiba attack the Red Fort in Delhi that left two Army personnel and a civilian dead.

October 1, 2001 - At least 21 people killed in a suicide bomb explosion and gunfire at the assembly in Kashmir in an attack by suspected Islamic persons.

December 13, 2001 - Heavily armed Islamic terrorist group opened fire in Parliament complex, killing several people in an unprecedented attack on the seat of power in the world's biggest democracy.

January 22, 2002 - Four people were killed in an attack on the American Center, Kolkata by Lashkar-e-Taiba.

March 30, 2002 - Seven Hindus killed in an attack by Islamic militants on the Raghunath Temple in Jammu.

May 14, 2002 - More than 30 army men were killed in a terrorist attack on an Army camp near Jammu.

September 24, 2002 - 35 people were killed when 2 Lashkar-e-Taiba terrorists attacked the Akshardham temple in Gandhinagar, Gujarat.

December 2, 2002 - Two persons were killed and 31 injured in a powerful explosion in a bus outside the crowded Ghatkopar railway station in Mumbai. Students Islamic Movement of India was suspected to be behind the blasts

December 6, 2002 - Twenty-five people were injured in a bomb blast by members of the Students Islamic Movement of India at McDonalds fast food restaurant at Mumbai Central railway station. The bomb was planted in the airconditioner duct. It was suspected to be a crude bomb.

January 27, 2003 - At least 30 people were injured when a bomb planted on a bicycle went off throwing splinters of sharp nails outside Vile Parle railway station in Mumbai. Members of SIMI were found to be behind the attack.

March 13, 2003 - A powerful bomb blast shattered a bogie of a local train at Mulund railway station in Mumbai during peak hours killing 11 people and injuring more than 65. This was the most powerful serial explosion.

August 23, 2003 - Two bombings at the Gateway of India and the Mumba Devi temple in Mumbai killed 52, injured 167. Terrorists from Lashkar-e-Taiba and the Students Islamic Movement of India were found to be behind the attacks.

July 28, 2003 - Bus blast kills 3 and injures 31 others in Mumbai. Pakistani intelligence agency: ISI and members of the Students Islamic Movement of India were found to be behind the blast.

July 5, 2005 - Five Bangladeshi terrorists, trained by the Jaish-e-Mohammad, attacked the Ram Janmabhumi in Ayodhya, all 5 killed, 1 civilian died.

October 29, 2005 - 67 people were killed and 224 injured in serial bombings in major Delhi markets on Diwali eve. A Pakistani group, Islamic Inquilab Mahaz, claimed responsibility for the attack. The group is linked to Lashkar-e-Taiba.

March 7, 2006 - At least 20 persons were killed and over 101 injured when two blasts rocked Varanasi. The first blast took place at the Sankat Mochan Hanuman temple, the second at the Varanasi railway station. Terrorists from Lashkar-e-Taiba were found to be behind the attack.

June 1, 2006 - Three heavily armed terrorists were killed in an encounter with the police when they tried to drive through the security cordon guarding the RSS headquarters in Nagpur. Two policemen were injured in the encounter.

July 11, 2006 - Seven explosions ripped through crowded commuter trains and stations in Mumbai, killing at least 200 people and leaving 700 more bloodied and injured. Lashkar-e-Taiba and local Students Islamic Movement of India (SIMI) activists were found to be behind the attacks.

Massacre of Hindus and Sikhs in Kashmir

2006 மட்டுமே எத்தனை படுகொலைகள் ஜிகாதி தீவிரவாதிகளால், இது ராகுலுக்கு பயங்கரமானதாகத் தெரியவில்லையா?

2006 April 30: 19 Hindus killed in remote villages of Panjdobi and Thava in Doda district of Jammu and Kashmir
May 1: 13 Hindus killed in Vasantpur area of Udhampur district of Jammu and Kashmir
May 23: 7 Hindu tourists killed in grenade attack in Srinagar
May 25: 3 Hindu tourists killed, seven injured in grenade attack in Srinagar
May 31: 21 Hindu tourists wounded in grenade attack in Srinagar
June 12: 1 Amarnath pilgrim killed, 31 wounded in grenade attack in Jammu
June 12: 8 Hindu laborers killed, 5 wounded in Anantnag district
June 21: 5 Hindu Amarnath pilgrims injured in grenade attack in Ganderbal area of Srinagar
July 11: A series of grenade attacks - targeting Hindu tourists - killed eight people and injured 41 in Srinagar
July 12: 7 Hindu tourists were injured in a grenade attack in Srinagar

2004
April 5: Seven persons killed in Pahalgam area of Anantnag district
June 12: 5 Hindu tourists killed in Pahalgam

2003
March 24: 24 Hindus killed in Nadimarg village near Shopian in Pulwama
July 7: 5 Hindus killed in Nowshahra

2002
January 1: 6 Hindus killed in Magnar village of Poonch
January 7: 17 Hindus killed in Ramsoo area of Jammu district, 6 killed in Sonway in Pogal area of Banihal
February 17: 8 Hindus gunned down at Bhambal-Nerla village in Rajouri district
May 14: 33 persons, killed at Kaluchak on the Jammu-Pathankote highway
July 13: 28 Hindus killed in Rajiv Nagar in Jammu
August 6: 9 Amarnath pilgrims killed and 32 wounded at a base camp at Nunwan near Pahalgam
August 29: 10 Hindus killed in Rajouri and Doda districts
November 24: 14 killed and 53 injured at the historic Raghunath temple in Jammu
2001
February 3: 8 Sikhs gunned down in Mahjoornagar in Srinagar
February 11: 15 Gujjar families massacred in Kot-Chadwal in Rajouri district
March 17: 8 killed near Atholi in Doda district
May 10: 8 Hindus killed in Paddar Kishtwar, Doda
July 21:
13 Hindus killed in Amarnath attack
July 21: 20 Hindus killed in Kishtwar, Doda
July 22: 15 Hindus killed in Cheergi and Tagood villages in Doda district of Jammu and Kashmir
August 4: 15 Hindus gunned down in Shrotidar village in Doda district of Jammu and Kashmir

2000
February 28: Five Hindu drivers killed near Qazigund in Anantnag district
February 29: Five Sikh drivers killed in Qazikund, Kashmir Valley
March 20: 35 Sikhs killed in Chittisinghpura village near Jammu
August 1: 31 Hindus including Amarnath pilgrims killed in Pahalgam in Anantnag
August 1: 27 labourers killed in Qazigund and Achabal in Anantnag district
August 2: 7 Hindus killed in Kupwara district
August 2: 12 Hindus killed in Doda district of Jammu
August 2: 8 Hindus killed in Marwah, Doda
November 24:
Five Hindus killed in Kishtwar, Doda

1999
February 13: Five Hindus killed in Udhampur
February 19: 19 Hindus killed in Rajouri, 4 in Udhampur
June 29: 12 Hindu labourers from Bihar killed in Santhu village of Annatnag
July 1: Nine Hindus killed in Mendhar Poonch
July 15: 15 Hindus of Thathri village of Doda killed
July 19: 15 Hindus killed at Layata in Doda

1998
Januaryuary 26: 23 Kashmiri pandits killed in Wandhama in Valley
April 17: 29 Hindus killed in Prankot and Dhakikot villages of Udhampur
April 18: 27 Hindus killed at Prankote (Doda)
May 5: Five Hindus killed in Surankot Poonch
May 6: 11 Hindu Village Defence Committee members killed
June 19: 25 Hindus killed in Chapnari (Doda)
July 27: 20 Hindus killed in Kishtwar, Doda
August 8: Thirty-five labourers killed in Kalaban, bordering Doda and Chamba district of Himachal Pradesh

1997
January 25 17 Hindus killed in Sumber area of Doda district
January 26: 25 Kashmiri Pandits killed in Wundhama, Srinagar
April 7: Seven Kashmiri Pandits killed in Sangrampur
June 24: 8 Hindus killed in Swari (Rajouri)
September 24: Seven Hindus killed in Sawari village of Rajouri

1996
January 5: 16 Hindus killed in Barshalla village of Doda
Januaryuary 12: Seven Hindus killed in Bhaderwah, Doda
May 6: 17 Hindus killed in Sumbar Ramban tehsil of Doda
June 7-8: Nine Hindus killed in Kamladi village of Doda

1993
August 1: 17 Hindus killed in Sarthal in Bhaderwah area of Doda when Hindus were segregated from a bus.


இப்படி என்னிலடங்கா கொலைகள் எல்லாம் இந்துக்களுக்கு எதிராக நடந்திருப்பது எல்லாம் சிறுவன் ராகுலின் கண்களுக்குப் படவில்லையா? அவை எல்லாம் பயங்கரமானதாக ராகுலுக்குத் தெரியவில்லையா?

இப்படி காஷ்மீர ஹிந்துக்கள் சொந்த நாட்டை விட்டு துரத்தப்பட்டதற்கு எதிராக பேசத் தெரியாத ராகுல், இந்துக்களை டிவி சீரியல் போல தொடர் கொலைகளாக கொன்று குவித்து வருவதை எதிர்த்து எதுவும் பேசத்தெரியாத குழந்தை ராகுல் இந்து தீவிரவாத அமைப்புகளால் இந்தியாவுக்கே பேராபத்து வந்து விட்டதாக துடிதுடித்துப் போயிருப்பது பரிதாபகரமான விஷயம்.

இப்படி தீவிரவாதம் குறித்து கவலைப்படும் ராகுல் தீவிர வாதிகளான அஜ்மல் கசாபையும் அஃப்சல் குருவையும் சோறு போட்டு வளர்ப்பது ஏன்? ஏதாவது கடத்தல் நாடகம் நடந்தால் அதை வைத்து இவ்விருவரையும் விடுதலை செய்ய நேரம் பார்த்துக்கொண்டு இருக்கிறாரா?

இந்த தீவிரவாதிகளை எப்போது தூக்கில் போட உத்தரவிடப்போகிறார்?

தீவிரவாதிகளை கடுமையாக எதிர்க்க இருந்த 'பொடா' சட்டத்தை மீண்டும் கொண்டு வருவாரா? அதற்கு நிகரான அல்லது அதைவிட கடுமையான தீவிரவாதத்திற்கு எதிரான சட்டம் காங்கிரஸின் ஆட்சியில் இதுவரை எதுவும் கொண்டு வராதது ஏன்?

இப்படி அடுக்கடுக்கான சந்தேகங்களுக்கு பதில் சொல்லும் அளவிற்கு மதிப்பிற்குரிய ராகுல் அவர்களுக்கு பக்குவமோ வயதோ இருக்கிறதா? இருந்தால் தயவு செய்து பதில் கூறுங்கள் இத்தாலி வாரிசு ராகுல் அவர்களே!... காத்திருக்கிறோம்....

கொஞ்சம் டைம்பாஸ்!எந்திரன் ரஜினியால் பாதிக்கப்பட்ட யாரோ அதீதமாக ஒரு கற்பனை கலாட்டா செய்திருக்கிறார்கள். மின்னஞ்சலில் வந்த ரஜினி பற்றிய கற்பனைகள் சில.... இந்தியாவின் தேசிய மொழியில் அப்படியே...!


RAJANIKANTH DID HIS KG FROM SEVEN DIFFERENT PLACES..TODAY THOSE PLACES ARE KNOWN AS IITs!!!!!!
* GOVERNMENT OF INDIA PAYS TAX TO RAJANIKANTH FOR LIVING IN INDIA!!!!!!!

* DEFINITION OF SOLAR ECLIPSE:
WHEN RAJANIKANTH STARES AT SUN WITH ANGER, SUN HIDES BEHIND THE MOON. THIS GREATEST PHENOMENA IS CALLED SOLAR ECLIPSE.........!!!!!

* RAJANIKANTH WOKE UP ONE DAY AND DECIDED HE SHOULD SHARE ATLEAST ONE PERCENT OF HIS KNOWLEDGE WITH THE WORLD......
THUS....................... THE GOOGLE WAS BORN!!!!

* THINK WHAT WOULD HAVE HAPPENED IF RAJANI WOULD HAVE BORN 150 YEARS AGO..?????
BRITISH WOULD HAVE FOUGHT FOR INDEPENDANCE....
* BEST RAJANI JOKE!!!!!!
EVEN GHAJINI REMEMBERS RAJANI!!!!

* AN EMAIL WAS SENT FROM MYSORE TO BANGALORE
RAJANIKANTH STOPPED IT AT MANDYA .... (சூப்பரப்பு)
* WHY DO EARTHQUAKE OCCURS?????
BECAUSE AT THAT TIME RAJANIKANTH'S MOBILE IS ON VIBRATION MODE!!!!!!!!! (ஓவரா இருக்கே)

* ONCE RAJANIKANTH BUNKED A WHOLE DAY IN SCHOOL.....!
SINCE THEN THAT DAY IS KNOWN AS
................
..............
SUNDAY!!!!!!!!!!!!!

* THE PYRAMIDS IN EGYPT ARE ACTUALLY.................................
..........RAJANIKANTHS PRIMARY SCHOOL CRAFT PROJECTS!!!!!!!!!!!!
* BREAKING NEWS:
ISRO DOES NOT EXISTS ANYMORE.....!!
RAJANIKANTH PURCHASED ALL THE ROCKETS FOR DIWALI CELEBRATION!!!!!!!!!!!!!!!!!!!!!!! (Happy Diwali folks)

* WHY DID RAJANI BUY AN ACRE OF LAND WTH 4 WELLS ON EACH CORNER?????
....................... TO PLAY CARROM!!!!!!
* BEFORE TOM CRUISE, RAJANI WAS APPROACHED FOR THE MOVIE MISSION IMPOSSIBLE, BUT RAJANI REFUSED AS HE FOUND THE TITLE INSULTING..
* .Rajnikanths next project. Titanic in Tamil. Climax revised. Both survive. Rajnikant swims across the Atlantic Ocean with heroine in one hand and… Titanic in the other.

**********

ஒரு கடி..


மொளச்சு மூணு எல கூட விடலை, அதுக்குள்ள என் மகன் என்ன பண்ணிட்டான் பாத்தியா??

என்ன பண்ணிட்டான்..??


.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
. செடிய புடுங்கிட்டான்! :-)


*******

இறைவனிலிருந்தே எல்லாம் தோன்றியது!உலகின் முக்கியமான மதங்கள் பலவும் இறைவன் என்ற ஒருவன் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பொருளை படைத்ததாகவும் அவனே ஆணையும் அவனது விலா எலும்பிலிருந்து பெண்ணையும் படைத்ததாக கூறிவருகையில் இந்து தர்மத்தின் உபநிஷத்துக்கள் பிரபஞ்சத்தோற்றத்தை அப்படியே கண் முன் கொண்டு வருவதாக இருக்கிறது என்றால் மிகையில்லை. இந்த பிரபஞ்சம், சூரியன், சந்திரன், கோடான கோடி ஜீவராசிகள் அனைத்தையும் ஒருவர் கிழமைதோறும் படைத்திருக்க முடியாது. ஒன்றிலிருந்து ஒன்று தாமாகவே உருவாகியிருக்க வேண்டும்.

உலகில் பெரும்பான்மையினரால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் டார்வினின் பரினாமக் கொள்கை கூறுவதும் இதையே! அதனையே பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் உபநிஷத்துக்கள் மூலமாக ரிஷிகளும் முனிவர்களும் நமக்கு எடுத்துரைத்திருக்கின்றனர்.

"எவ்வாறு சிலந்தி தன்னிடமிருந்து வலைநூலை வெளிப்படுத்தவும் தன்னிடமே அடக்கிக் கொள்ளவும் செய்கிறதோ, எவ்வாறு பூமியிலிருந்து செடி கொடிகள் தோன்றுகின்றனவோ, வாழ்கின்ற மனிதனில் எவ்வாறு முடி வளர்கிறதோ அவ்வாறே அழிவற்ற இறைவனிடமிருந்து இந்த பிரபஞ்சம் தோன்றுகிறது"

இங்கே 'இறைவனிடமிருந்து தோன்றுகிறது' என்று தான் கூறப்பட்டிருக்கிறதே தவிற இறைவன் என்கிற ஒரு கதாபாத்திரம் இவற்றை தோற்றுவித்தது என்று கூறவில்லை என்பதை குறித்துக் கொள்ளவும். ஆக கடவுள் என்கிற உருவகத்திற்கும் அப்பால் நம்மை இறைவன் என்பது நம் கற்பனைக்கெட்டாத மிகப்பெரிய பிரபஞ்சப்பேரியக்கம் பற்றியது என்கிற உண்மையை நமக்கு உணர்த்துகிறது உபநிஷத்து. தலையில் முடிவளர்வது நம்முடைய கட்டுப்பாட்டில் இல்லை. ஆனால் நம் உடலிலிருந்து வெளிப்படும் இறந்த செல்களின் கூட்டாக அது தாமே உருவாகிறது. இது ஒரு உதாரணம் தான். அதே போல பிரபஞ்சத்தின் கற்பனைக்கெட்டாத ஒரு மூலமான மைய சக்தியிலிருந்து இந்த பேரியக்கம் தோன்றி இயங்கிக்கொண்டு இருக்கிறது.

சிலந்தி தான் வசிக்க இடம் வேண்டுமெனில் நூலை வெளியேற்றுகிறது. பிறகு போதுமென்று நினைக்கும் போது அந்த நூலை உள்ளிழுத்துக் கொள்கிறது. அது போல பிரபஞ்சத்திலிருந்து எத்தனை உயிர் பொருட்கள் வெளியே வந்தாலும் அவையனைத்தும் இறுதிக்காலத்தில் மூலப்பிரக்ருதியான அண்டபிரம்மாண்டத்தின் மைய சக்தியையே சென்றடைந்து விடுகிறது.பிரபஞ்சத்தின் கருஞ்சுழி!

சமீப காலங்களில் ப்ரபஞ்சத்தில் ப்ளாக் ஹோல் எனப்படும் கருஞ்சுழிப் பகுதி பற்றி நிறைய ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. அண்டவெளியில் இருக்கும் கோடான கோடி கிரகங்களும் சூரியன்களும் நட்சத்திரங்களும் அந்த கருஞ்சுழியின் மையப்பகுதிக்குள் சென்றவுடன் மிகப்பெரிய பிரகாசமான ஒளியைக் கொடுத்துப் பின் நீர்த்துப் போய் கருமை நிறமடைந்து காணாமல் போகின்றன என்பதே அவர்களது ஆய்வுகள் அறிவிக்கின்றன. நாம் இருக்கும் இந்த மில்கி வே கேலக்ஸி கூட அதே கருஞ்சுழியை நோக்கிய நகர்வைக் கொண்டிருக்கின்றது என்பதும் அவர்களது ஆய்வு முடிவுகளே!

ஆக எந்த பிரபஞ்சத்தின் மைய சக்தியிலிருந்து இந்த அண்டத்திலுள்ள அத்தனையும் தோன்றியதோ அதே மைய சக்தியில் அவை கரைந்து முடிகின்றன என்பதும் தெரியவருகின்றன. இப்போது மீண்டும் உபநிஷத்தின் வரிகளைப் படிப்போம்.. "எவ்வாறு சிலந்தி தன்னிடமிருந்து வலைநூலை வெளிப்படுத்தவும் தன்னிடமே அடக்கிக் கொள்ளவும் செய்கிறதோ" அவ்வாறே பிரபஞ்சமும் தன்னிடமிருந்து வெளிவருவருவனவற்றை தன்னுள்ளேயே இழுத்துக் கொண்டுவிடுகிறது.ப்ளாக் ஹோல்!

இனியவனே! இது உண்மை. கொழுந்துவிட்டு எரிகின்ற நெருப்பிலிருந்து அதே இயல்புடைய ஆயிரக்கணக்கான நெருப்புப் பொறிகள் எவ்வாரு உண்டாகின்றனவோ, அவ்வாறே அழிவற்ற இறைவனிலிருந்து பலவிதமான உயிரினங்கள் உண்டாகின்றன. அவரிலேயே ஒடுங்கவும் செய்கின்றன.
இறைவன் ஒளிமயமானவர், உருவமற்றவர், இதயத்தில் உறைபவர், அகமும் உறமும் நிறைந்தவர், பிறப்பவற்றவர், பிராணன் இல்லாதவர், மனம் இல்லாதவர், தூயவர், மேலானவர், பிரகிருதியைவிட உயர்ந்தவர்.
பிராணன், மனம், புலன்கள், வெளி, காற்று, நெருப்பு, நீர், அனைத்தையும் தாங்குகின்ற பூமி எல்லம் அந்த இறைவனிலிருந்தே தோன்றின.
அந்த இறைவனுக்கு சொர்க்கம் தலையாக அமைந்துள்ளது. சந்திர சூரியர்கள், கண்கள்; திசைகள், காதுகள்; வெளிப்பட்ட வாக்கு, வேதங்கள், காற்று, பிராணன், பிரபஞ்சம், மனம், பூமி, கால்கள். அந்த இறைவனே எல்லா உயிர்களின் உள்ளும் உறைகிறார்.
அந்த இறைவனிடமிருந்து வானுலகம் உண்டாயிற்று. சூரியன் அந்த வானுலகை ஒளிரச் செய்கிறான். சந்திரனிலிருந்து மேகங்கள் உண்டாயின. பூமியில் வளர்கின்ற செடிகொடிகள் மேகங்களின் காரனமாக உண்டாயின. ஆண் பெண்ணிடம் விந்துவை விடுவதன் மூலம் உயிர்கள் தோன்றின. இவ்வாறு அந்த இறைவனிலிருந்தே பலவிதமான உயிரினங்கள் உண்டாகின்றன.

- முண்டக உபநிஷத்து!

ஆக அந்த இறைவன் என்பவன் கற்பனைக்கெட்டாத பிரபஞ்சத்தின் மைய சக்தி என்பதை நாம் உணர உபநிஷத்து நமக்கு உதவுகிறது. அத்தகைய மைய சக்தி என்பது என்ன? அதன் சக்தி எத்தகையது என்று நம்மால் உணர முடியுமா? அதன் வடிவம் என்ன? அதன் இயக்கம் எவ்வாறு

இருக்கும்? இன்னும் விடைகாணமுடியாத பல கேள்விகள் இருக்கின்றன. அதனை சாதகம் மூலமாகவே உணர முடியும். அவ்வாறு உணர்ந்து அதனை எடுத்துக்கூறியவர்களே மகான்கள், ரிஷிகள். அவர்களால் கூறப்பட்டதே உபநிஷத்துக்கள். அதனை இன்னும் ஆராய்ந்து இறைவன் என்கிற பெரியவனை அறியவும் அடையவும் தொடர்ந்து முயல்வோம்!.

Thursday, December 16, 2010

கிறிஸ்தவர்கள் தொல்லை தாங்கலடா சாமி! - 2செய்தி இங்கே!


********
ஐதராபாத்தில், "லிட்டில் பிளவர் ஜூனியர் கல்லூரி' உள்ளது. கிறிஸ்தவ மிஷினரி சார்பில் நடத்தப்படும் இந்த கல்லூரியின் முதல்வராக, பிராங்லின் உள்ளார். சபரிமலை செல்வதற்காக கறுப்பு உடை அணிந்து 41 நாட்கள் விரதம் இருக்கும் மாணவர்கள், கல்லூரிக்கு செருப்பு அணியாமல் வந்தனர். இவர்களை தடுத்து நிறுத்திய முதல்வர் பிராங்லின், கல்லூரிக்குள் வரக்கூடாது எனக் கூறினார். இருப்பினும் அவர்கள் கல்லூரி நிர்வாகத்தினரிடம் விவாதம் செய்தனர். இதனால், அவர்கள் கல்லூரிக்கு வெளியே அப்புறப்படுத்தப்பட்டனர்.

கல்லூரி நிர்வாகத்தின் இந்த செயலால் கோபமடைந்த மாணவர்கள், மற்ற கல்லூரி மாணவர்களுடன் சேர்ந்து, இந்து மத உணர்வுகளை புண்படுத்துவதாகக் கூறி, கல்லூரிக்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
********

இத்தாலிக்காரி ஆளும் இந்தியாவில் இந்துக்கள் இரண்டாம் தரக்குடிமக்களாகவே நடத்தப்படுகிறார்கள் என்பது இந்துக்களுக்கெதிராக நடந்து வரும் பல்வேறு சம்பவங்கள் தெரிவிக்கின்றன. கிறிஸ்தவ மிஷனரி சார்பில் கூலிக்கும் மாரடிக்கும் ஒரு மத வியாபாரி இந்தியாவின் பெரும்பான்மை மக்களையும் அவர்களது வழிபாட்டு உணர்வையும் எப்படி ஏளனம் செய்கிறான் என்றும் அவமதிக்கிறான் என்றும் பார்க்கும் போது இந்த நாட்டின் ஒவ்வொரு இந்துவும் தங்கள் மத உணர்வினை அவமதிப்பவர்களை எதிர்த்து போராட துணிய வேண்டும்.

இந்து மதத்தினரை அவமதிக்கும் தி மு க மற்றும் காங்கிரஸ் போன்ற கட்சிகளுக்கு வாழ்நாள் முழுவதும் ஓட்டு போட்டு ஆதரிக்காமல் இருப்போம் என்று இந்துக்கள் ஒவ்வொருவரும் சபதம் மேற்கொள்ள வேண்டும்.

இந்தியா இந்துக்களின் பெரும்பான்மை கொண்ட நாடாக இருக்கும் வரைதான் இங்கே சமத்துவம் பற்றி பேசப்படும் என்பதை ஒவ்வொரு இந்துவும் உணர வேண்டும். கிறிஸ்தவர்களோ முஸ்லீம்களோ பெரும்பான்மை மக்களாக இந்த பூமியில் ஆகிவிடும் போது இங்கே இந்த புன்னிய பூமி ரத்த பூமியாக ஆவதற்கு நீண்ட நாள் பிடிக்காதோ என்ற ஐயம் மிஷனரிக்காரர்களின் நடத்தைகளிலிருந்து உண்டாகிறது.

திருந்துவார்களா மிஷனரிக்காரர்கள்? இந்துக்களின் உணர்வுகளை பாதுகாப்பார்களா அரசியல் வாதிகள்? விழிப்புணர்ச்சி கொள்வார்களா இந்துக்கள்?

ஈஷ்வரோ ரக்ஷது!

Sunday, December 12, 2010

தமிழ் சினிமாவில் பிராமணர்கள் -4அந்த நாள் அலுவலக நேரம். பேருந்திற்காக எல்லோரையும் போல காத்துக்கொண்டிருந்த காலை. பேருந்து நிலையத்தில் ஒரு பேருந்து புறப்பட தையாரானது. தூரத்திலிருந்து ஒரு அறுபது வயது மதிக்கத்தக்க பிராமணப் பெரியவர் அந்தப் பேருந்தில் ஏற ஓடி வந்தார். அதற்குள் பேருந்து நகர்ந்து விடவே 'நிறுத்துங்கோ! நிறுத்துங்கோ!' என்று கத்திக் கொண்டே அருகே வந்து அடித்துப் பிடித்து ஏறினார். ஐயோ பாவம் பெரியவருக்கு என்ன அவசரமோ என்று நான் எண்ணிக்கொண்டிருந்த நேரத்தில் 'கல கல' வென சிரிப்புச் சத்தம் கேட்டது. அருகாமையில் நின்றிருந்த கல்லூரி யுவதிகள் மூன்று பேர் குடுமி வைத்த அந்த பெரியவர் பேருந்தை நோக்கி நிறுத்துங்கோ! நிறுத்துங்கோ! என்று கூறி ஓடி வந்ததைப் பார்த்து பொத்துக் கொண்டு சிரித்தார்கள்.

அவர்கள் அந்தக் காட்சியை ஒரு நகைச்சுவை காட்சியைப் போல் பார்த்திருக்கிறார்கள். ப்ராமணப் பெரியவரின் அவஸ்தை இவர்களுக்கு சிரிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. காரனம் தமிழ் சினிமா. நடிகர் விவேக் முதல் பலதரப்பட்ட நடிகர்களும் குடுமி வைத்த ப்ராமணரைக் காட்டியே சிரிப்பு மூட்டி பழக்கப்படுத்தி விட்டதால் இந்த குடுமி வைத்த பிராமணரைப் பார்த்த உடன் விழுந்து விழுந்து சிரிக்கின்றனர் இந்த யுவதிகள். அவசரத்தின் அவஸ்தையில் ஓடும் ஒரு வயதானப் பெரியவர் என்ற பச்சாதாபம் கூட அவர்களிடம் உண்டாகவில்லை. என்ன அவசரத்தில் என்ன அவஸ்தையில் ஒரு பெரியவர் பேருந்து பிடிக்க ஓடியிருப்பாரோ என்கிற யோசனையையும் மீறி பிராமணப் பெரியவர் அவஸ்தைப் படுவது பொத்துக் கொண்டு சிரிப்பை வரவழைத்தது பிராமணர்களை தொடர்ந்து காமெடி பீஸுகளாகவே அடையாளப்படுத்தின் தமிழ் சினிமாவின் தாக்கம்.

சமீபத்தில் குரு சிஷ்யன் என்ற சத்தியராஜ் சுந்தர் சி நடித்த பட்த்தை பார்க்க நேர்ந்தது. படத்தில் ஒரு காட்சி வருகிறது. சுந்தர் சி சத்தியராஜை ஒரு விபச்சாரி வீட்டிற்கு விஷயத்தைச் சொல்லாமல் அழைத்துப் போகிறார். அங்கே ஷகிலா பல பெண்களை சத்தியராஜிடம் காட்டி விட்டு கடைசியாக திருநெல்வேலி அக்கிரஹாரத்து பொன்னு, இவ மகுடிக்கு மயங்காத ஆம்பளைங்களே கிடையாது என்று கூறி ஒரு பெண்ணை வரவைப்பதாகக் காட்சி. வருபவள் ஷ்பஷ்டமாக மடிசார் கட்டிக்கொண்டு வருகிறாள். “கேட்டேளோ இங்கே வரமாட்டேளோ அங்கே” என்ற பழையாடலின் ரீமிக்ஸில் அத்தனை பெண்களும் மடிசார் கட்டிக்கொண்டு ஆடுகிறார்கள்.

பிராமணப் பெண்கள் இன்று மடிசார் கட்டிக்கொண்டு இருக்கவில்லை தான்
(சில வைதீக பிராமணர் வீடுகளில் இன்றும் தினசரி மடிசார் உண்டு). ஆனால் மடிசார் என்றாலே ப்ராமணர்களின் உடை என்று சினிமாவினாலேயே அடையாளப்படுத்தி விட்டு அதே போன்று பெண்களை விபச்சாரிகளாகக் காட்டி ஆடவிடுவதும் ஒரு ஜாதியினரை அசிங்கப்படுத்தும் செயலாக சினிமாக் காரர்களுக்கு ஏன் தோன்றாமல் போகிறது?

சில மாதங்களுக்கு முன்பு வெளியான அங்காடித்தெரு திரைப்படத்தில் வயதிற்கு வந்த சின்னப்பெண்ணை ஒரு பிராமண மாமி நாய் கூண்டில் அடைத்து வைத்தது போன்ற காட்சிப்படுத்தல் வைத்திருந்தார்கள். 'நாங்க ரொம்ப ஆச்சாரமானவா, உன் தங்கச்சிய பின்னாடி வெச்சிருக்கேன் போய் கூட்டின்டு போ' என்று வசனம் பேசும் பிராமண மாமியையும் காட்டி இருப்பார்கள். நாய் கூண்டுக்குள் அடைத்து வைக்கும் அளவிற்கு கொடுமைக்காரியை சித்தரிக்க இவர்களுக்கு பிராமண சமூக பெண்கள் தான் கிடைத்ததா? எல்லா ஜாதியிலும் விதவிதமான கொடுமைக் காரர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். பொதுவான ஜாதியில்லாத ஒரு கொடுமைக்கார பெண்ணை சித்தரித்திருக்க கூடாதா?
கொடுமைககரர்களை அம்பலப்படுத்தும் துணிவு மிக்க இந்த கனவான்கள் எந்த படத்திலாவது 'தலித்' மனிதன் வாயில் மலம் தினித்த ஜாதிக்காரர்களை அவர்கள் ஜாதீய அடையாளத்தை குறிப்பிட்டு காட்சிப்படுத்தி இருப்பார்களா? எங்கள் தெருவில் செருப்பு போட்டுக்கொண்டு கூட நீ நடக்ககூடாது என்று கூறும் ஜாதீய மனிதர்களை அவர்களின் ஜாதி அடையாளத்தோடு இவர்கள் காட்சிப்படுத்தி இருப்பார்களா? கீழ்விஷாரம், காயல்பட்டினம் போன்ற ஊர்களில் முஸ்லீம் பெரும்பான்மையினரால் இந்துக்கள் எப்படி அடிமைப்படுத்தப்பட்டு நடத்தப்படுகிறார்கள் என்பதை படமாக்கி இருப்பார்களா? அவற்றிர்கெல்லாம் துணிவு தான் இவர்களுக்கு இருக்கிறதா?

ஆனால் பிராமணர்கள் என்றாலே கொடுமைக்காரர்கள் என்கிற உணர்ச்சியை மக்கள் மத்தியில் அதிகப்படுத்தி அதன் மூலம் பிராமண காழ்புணர்ச்சியை தூண்டி விட்டு குளிர்காய எத்தனிக்கிறார்களே ஒழிய சமூகத்தின் நிஜமான கொடுமைகள் இவர்களால் வெளிக்கொண்டு வரப்படுவதில்லை.

இப்படி வெளியான இந்த அங்காடித்தெரு திரைப்படத்தின் வசனகர்த்தாவான திரு. ஜெயமோகனிடம் இது பற்றி வினவியபோது அவரது பதில் "நீங்கள் பிராமணராக உணரும் வரை அந்த அம்புகள் வந்து தைத்தபடியேதான் இருக்கும். இந்தப்புண்படுதல் சங்கதியை நீங்கள் கொஞ்சம் அடக்கிக்கொள்ளத்தான் வேண்டும்" என்பதுதான். (தொடர்புடைய சுட்டி) அதாவது பிராமணர்களை இப்படி மோசமாக காட்டாதீர்கள் எங்கள் மனம் புண்படுகிறது என்று கூறினால் அப்படித்தான் புண்படும். நீங்கள் அடக்கிகொள்ளுங்கள் என்கிறார்கள்.

'உத்தம புத்திரன்' பட விவகாரத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த, தனுஷ், மித்ரன் R ஜவகர் உள்ளிட்ட முக்கிய நபர்கள் அடங்கிய ‘உத்தமபுத்திரன்’ படக்குழுவினர், கௌண்டர்களை இழிவு படுத்தியதாக கூறப்பட்ட காட்சிகள் நீக்கப்பட்டுவிட்டதாக கூறியதோடு, தங்கள் வருத்தங்களையும் தெரிவித்துக் கொண்டனர்.

ஆனால் அப்படித்தான் செய்வோம், நீங்கள் அடக்கிகொள்ளுங்கள் என்ற பதிலை இந்த சினிமாக்காரர்களால் கௌண்டர்களிடம் ஏன் கூற முடியவில்லை? தேவர்களும் கௌண்டர்களும் புண்படும் போது அவர்களிடம் மன்னிப்பு கோர தயாராகும் திரையுலகம் ஏன் பிராமணர்களை மட்டும் எப்படி வேண்டுமானாலும் திரையில் காட்சிப்படுத்துகிறார்கள்?

இது போன்ற பல கேள்விகளை அடுக்கிய பின்னர் ஜெயமோகன் அவர்கள் ஒரு விஷயத்தை ஒத்துக்கொண்டார். அதாவது "அதேசமயம் தம்ழி சினிமாக்களில் பலர் பிராமணர்களை திட்டமிட்டே இழிவுசெய்கிறார்கள், பிறசாதிகளை அப்படிச்செய்ய துணிவதில்லை என்பதை நானும் ஒத்துக்கொள்கிறேன்" என்றார். (தொடர்புடைய சுட்டி) இந்தக் கருத்தை வெளிப்படையாக சொல்வதற்கு கூட பலர் தயங்கும் நிலையில் திரைத்துறையிலும் தனது முத்திரையைப் பதித்திருக்கும் ஜெயமோகன் எழுத்துக்களில் பார்ப்பது ஆறுதல் அளிக்கிறது. இந்த ஒரு வரியாவது ஏதாவது ஒரு சினிமா கதாசிரியரையோ, இயக்குனரையோ அல்லது நடிகர்களையோ யோசிக்க வைத்தால் அதுவே பெரிய நிகழ்வாக இருக்கும்.

ஜாதியில்லாமல் சினிமா எடுத்தால் கதை கெட்டு விடும் என்பது மதிப்பிற்குரிய ஜெயமோகனின் கருத்தாக இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை சமூகத்தில் ஜாதி ஒழிய வேண்டும் என்று கூச்சல் போடும் சினிமாக்காரர்களால் கேவலம் இரண்டரை மணிநேர சினிமாவை ஜாதி இல்லாமல் எடுக்க முடியாது என்று கூறுவது பொட்டைத்தனமான வாதம். 

பிராமண துவேஷிகளை அதிர வைத்த திரைப்படம் 'அந்நியன்'

இங்கே குறிப்பிடப்படப்பட வேண்டிய ஒரு விஷயம் இருக்கிறது. அந்நியன் படம் வந்த போது 'பார்ப்பனத் திரைப்படத்தை பார்க்காதீர்கள்' என்று போஸ்டர் அடித்தே ஒட்டினார்கள் பிராமண துவேஷிகள். அதன் காரணம் பின்னால் தான் புரிந்தது. வழக்கமாக பிராமணர்களை காமெடிப்பீஸாகவும், ஆபாசமாகவும், கொடுமைக்காரர்களாகவும் மட்டுமே சித்தரித்து வெளிவரும் சினிமாக்களைப் பார்த்து பழகிப்போய் மகிழ்ச்சியில் திளைத்துக்கொண்டிருந்த பிராமண துவேஷிகள் நவீன கலத்தில் பிராமணனை சமூக அக்கரை உள்ளவனாகவும், இரக்கமுள்ளவனாகவும், நல்லவனாகவும் காட்டியது பொறுக்கவில்லை.

அவர்களால் தாங்கிகொள்ள முடியாத இன்னொரு முக்கியமான விஷயமும் இதில் இருக்கிறது. அதாவது பிராமணப் பெண் பிராமண ஆணையே கல்யாணம் செய்வதாக அந்தத் திரைப்படத்தில் க்ளைமாக்ஸ் வைத்து விட்டார்கள். இந்த அதிர்ச்சியை பிராமண துவேஷிகளால் ஜீரணிக்கவே முடியவில்லை. ஏதோ தாங்கள் மோசம் போய்விட்டதாக எண்ணினார்கள். அதெப்படி சினிமா விதிகளை மீறி ஒரு ப்ராமணப் பெண் பிராமண ஆணையே திருமணம் செய்ய முடியும். ஆகவே இது ஒரு பார்ப்பனத் திரைப்படம் என்று கூறி அதை பார்க்காதீர்கள் என்றும் போஸ்டர் அடித்து ஒட்டி விட்டார்கள். சினிமாவில் பிராமண துவேஷத்தை வியாபாரமாக்கியே தீருமளவிற்கு இருக்கும் இந்த நிலை இன்னும் எத்தனை நாள் நீடிக்கும் என்பது விடைதெரியாத கேள்வியாக இருக்கிறது.

பிராமணர்களுக்கு சங்கங்கள் இருந்தும் இது போன்ற விஷயங்களுக்கெல்லாம் போராடிக் கொண்டிருப்பதில்லை. அது நேரத்தை வீனடிக்கும் செயல் என்றும் அந்த நேரத்தில் நாம் உருப்பட ஏதாவது வழியைப்பார்க்கலாம் என்றும் இருந்து விடுகிறார்கள். இரண்டாவது இவர்களிடம் போராடி ஒன்றும் பிரயோஜனப்படாது என்கிற எண்ணமாகவும் இருக்கலாம். மூன்றாவது நாம் ஏதாவது போராடப்போய் இன்னும் அதிகமான தாக்குதல்களை எதிர்கொள்ள நேரலாம் என்ற பயமும் காரணமாக இருக்கலாம். ஆனால் கேள்விகள் மட்டும் மனதில் எழாமல் இருப்பதில்லை.

தியேட்டருக்கு முன்னே போய் படத்தை ஓடவிடமாட்டோம் என்று போராடினால் பயப்படும் திரையுலகம் தூரத்தில் இருந்து கொண்டே இப்படிச் செய்ய வேண்டாமே என்று மெதுவாகக் கேட்டால் ஏறி மிதிப்பது ஏன்?

ஸ்ரீரங்கத் தெருவில் மறைந்த ராமசாமி நாயக்கரின் தோற்றம் கொண்ட உருக்கல்லை யாரோ சேதப்படுத்தினார்கள் என்பதற்காக சென்னை அயோத்தியா மண்டபத்தில் சென்னை அயோத்தியா மண்டப வாசலில் ஐம்பது பைசா லாபத்திற்கு பூனூல் விற்றுக்கொண்டிருந்த கிழவரை பிராமண துவேஷ காழ்ப்புணர்ச்சியால் வெட்டிப் போட்டது ஒரு கும்பல். எத்தனையோ பிராமணர்கள் உடன் பழகுபவர்களாலேயே தினந்தோறும் பரிகசிக்கப்பட்டு வருகிறார்கள். இது போன்ற சினிமாக்காரர்கள் பிராமண துவேஷ காட்சிப்படுத்தலை மிகைப்படுத்தி தொடர்ந்து காட்டுவதன் மூலம் ஏற்கனவே பிராமணர்கள் பற்றிய வெறுப்புணர்ச்சியை சைக்கோத்தனமாக வளர்த்துக்கொண்டவர்கள் இன்னும் ஆத்திரம் கொள்ள மாட்டார்களா? அப்படி காழ்புணர்வு தூண்டப்பட்ட பலர் இன்னும் பல பிராமணர்களை வெட்டி வீழ்த்த கிளம்பமாட்டார்களா? பிராமணப் பெண்களை மானபங்கம் செய்ய அலைய மாட்டார்களா? அதைத்தான் இந்த திரையுலகம் விரும்புகிறதா? (தொடர்புடைய சுட்டி)

அதே போல 'துரோகி' என்றொரு கேவலமான ப்ராமண துவேஷ படம்..அது பற்றி அடுத்த பதிவில்

தமிழ் சினிமாவில் இன்னும் எவ்வாறெல்லாம் பிராமணர்கள் கேலிக்குரியவர்களாக மாற்றப்பட்டுள்ளனர் என்பதை தொடர்ந்து பார்ப்போம்...

தொடரும்.......

தமிழ் சினிமாவில் பிராமணர்கள் - 5