Sunday, December 19, 2010

தமிழ் சினிமாவில் பிராமணர்கள் - 5



சமீபத்தில் காவல் துறையினர் தீவிர வாதிகள் ஊருக்குள் புகுந்தால் எப்படி நடவடிக்கை எடுப்பது என்று நடித்துப் பார்த்து பயிற்சி எடுத்துக் கொண்டனர். அதில் தீவிரவாதிகள் போல நடித்த சக போலீஸ்காரர்கள் தாடி வைத்திருந்தார்கள். உடனே முஸ்லீகள் எல்லோரும் ஒன்று கூடி தீவிரவாதியை முஸ்லீம் போல சித்தரித்து விட்டீர்கள் என்று தர்ணா நடத்தினாகள். காவல் துறையினர் தேச துரோகம் குற்றம் புரிந்து விட்டதைப் போல விழுந்தடித்து வந்து முஸ்லீம்களிடம் சமரசம் பேசி மன்னிப்பும் கோரினார்கள். இங்கே ஒரு விஷயம் எனக்கு நினைவுக்கு வருகிறது. அங்காடித் தெரு படத்தில் ஏன் பிராமண பெண் கொடுமைக்காரியாக காட்டுகிறீர்கள் என்று கேட்டதற்கு வசனகர்த்தா ஜெயமோகன் இவ்வாறு தெரிவித்திருந்தார்.. "அங்காடித்தெரு எங்கே ’பிராமணர்களை’ காட்டுகிறது? ஒரு பிராமணப்பெண்ணை காட்டுகிறது. உங்கள் வாதம் சரி என்றால் ஒரே ஒரு பிராமணர்கூட அப்படி இல்லாமல் இருக்க வேண்டும். அப்படி நம்பும் மனக்கோளாறு உங்களுக்கு இருக்கலாம். நான் ஏன் அதை ஏற்கவேண்டும்?" என்று கூறுகிறார். தொடர்புடைய சுட்டி!


ஆக ஒரே ஒரு பிராமணப் பெண் கொடுமைகாரியாக இருந்தால் கூட பிராமணப் பெண்கள் எல்லோருமே அப்படித்தான் என்று அடையாளப்படுத்தும் அளவிற்கு சினிமாவில் அதைப் பெரிதுபடுத்திக் காண்பிப்பார்களாம். அப்படியெனில் தமிழ் சினிமாவில் முஸ்லீம் ஒருவனை தீவிரவாதியாக காண்பிப்பதை முஸ்லீம்கள் எதிர்க்கிறார்கள். அவர்களிடம் ஒரே ஒரு முஸ்லீம் தீவிரவாதியாக இருந்தால் கூட நாங்கள் முஸ்லீம்களை தீவிரவாதியாக சித்தரித்து படம் எடுப்பேன் என்று திமிரோடு கூறுவதற்கு இவர்களால் முடியுமா?

இவ்வளவுக்கும் சமீபத்திய வாரனாசி குண்டு வெடிப்பு நிகழ்த்தியது முஸ்லீம் அமைப்பு தானே? அதைச் செய்தது நாங்கள் தான் என இந்தியன் முஜாகிதீன் என்ற அமைப்பு பொறுப் பேற்றதையும் செய்திகள் கூறுகின்றனவே! அதனால் நாங்கள் தீவிரவாதி கதாபாத்திரம் என்றாலே முஸ்லீம் பெயருள்ள தாடி வைத்த தலையில் தொப்பி அணிந்த ஒரு முஸ்லீமாகவே காட்டுவேன் என்று இவர்கள் கூறமுடியுமா? முஸ்லீம்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் போது காவல் துறையே மன்னிப்பு கேட்கிறது. சினிமாக்காரர்கள் காலிலேயே கூட விழுவார்கள்.

முஸ்லீம் பெண்ணை கதாநாயகியாக சித்தரித்து பம்பாய் என்ற படம் எடுத்ததற்காக மணிரத்தை கொலை செய்ய குண்டு விச்சப்பட்டது. அதற்குப் பிறகு தமிழ் சினிமாவில் முஸ்லீம் பெண்ணை கதாநாயகியாக சித்தரித்து ஒரு திரைப்படமும் வரவில்லை என்பதை கவனித்தாலே இந்த பயந்தாங்கொல்லி வீரர்கள் பற்றி புரிந்து கொள்ளலாம். பத்து சினிமாக்களில் எட்டு சினிமாக்கள் பிராமணப் பெண்ணையே கதாநாயகியாகச் சித்தரித்து படம் எடுப்பதில் மட்டும் இவர்கள் சலிப்பதே இல்லை. பிராமணர்களை மட்டும் எப்படி வேண்டுமானாலும் காட்டி விட்டு ஒருத்தர் கூட உங்களில் அப்படி இல்லையா?
என்று எதிர் கேள்வி கேட்பார்களாம். என்ன நியாயம்?






துரோகி என்றொரு படம். ஒரு பிராமணப் பையனை துரோகி என சித்தரிக்கும் படியாக காட்சியமைத்து பூனூலுடன் அவனை அம்மனமாக சுற்றவைத்து, "போடா துரோகி, சொம்பை, சப்பை" என்று இன்னும் என்னவெல்லாம் வக்கிரமாக வசைபாட முடியுமோ அத்தனை வசைகளையும் அந்த பிராமண கதாபாத்திரத்தின் மீது மொழிவதாக காட்டப்படுகிறது. இது படம் எடுத்தவர்களின் ஜாதீய காழ்ப்புணர்ச்சியும் குறிப்பிட்ட ஜாதியினரை எப்படி எல்லாம் திட்டித்தீர்க்க அவர்(கள்) தனிப்பட்ட முறையில் ஆசைப்படுகிறார்களோ அதையே காட்சிப்படுத்தி இருக்கிறார்கள் எனபது தெளிவாகிறது.

மனநலம் பாதிக்கப்பட்ட சைக்கோக்கள் குறிப்பிட்ட ஒருவரை நேரடியாக தாக்க முடியாத போது அவரது உருவத்தை வரைந்து அதன் மீது கத்தியால் குத்துவார்கள். இன்னும் என்னென்ன செய்ய முடியுமோ அது போல வக்கிரமாக அந்த உருவகத்தின் மீது செய்து பார்த்து தங்கள் வக்கிரத்தைத் தீர்த்துக்கொள்வார்கள். அது போல பிராமண காழ்ப்பு கொண்ட தமிழக சைக்கோக்கள் சினிமாவில் பல்கிப்பெருகி இருக்கிறார்கள் என்பதற்கு இது போன்ற படங்களே சாட்சி! பிராமணர்கள் மீது தனக்கு இருக்கும் சொந்த காழ்ப்புணர்ச்சியை திரைக்கதை என்ற பெயரில் காட்சிப்படுத்தி அந்த உருவகத்தை கேவலமாக வசனம் என்ற பெயரில் வசைபாடி மகிழ்கிறது இந்த சினிமாக்கூட்டம்.

இதே துரோகி என்ற படத்தில் இன்னொரு காட்சியில் இரட்டை அர்த்தம் தொனிக்கும் வகையில், பிராமணர் தனது மனைவியை கதாநாயகனின் ஆசைப்படி அவருக்கு வழங்க ஒத்துக்கொள்வது போல கேவலமான காட்சிப்படுத்தலும் இருந்தது. அந்த காட்சி என்னமோ வேறு ஒரு காரணத்திற்காக கதாநாயகன் பேசுவது போலத்தான் இருக்கும். ஆனால் காட்சிப்படுத்தலின் போது இருக்கும் இரட்டை அர்த்தம் ஏறக்குறைய கூட்டிகொடுக்க சம்மதிக்கும் பிராமணரை சித்தரிப்பது போன்ற பார்க்க சகிக்காத ஆபாசக் காட்சியாகவே காட்டி இருப்பார்கள்.

இவ்வாறு பிராமணர்களை காட்சிப்படுத்துவது பிராமனர்கள் பற்றிய மிகவும் கொச்சையான ஆழ்மன வக்கிரம் தான். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அந்த வக்கிர புத்தியை வெளிப்படுத்துகிறார்கள். பிராமணப் பெண்களை எப்படியாவது பெண்டாட வேண்டும் என்கிற பொறுக்கித்தனமான கற்பழிப்பு புத்தி என்றே இதனை எடுத்துக் கொள்ள முடியும். தமிழ் சினிமாவில் கதாநாயகியரை எல்லாம் பிராமண கதாபாத்திரமாகவே காட்டுவதும் இப்படிப்பட்ட வக்கிர புத்தியின் வெளிப்பாடாகவே பார்க்கமுடிகிறது.

இங்கே இன்னொரு பரிமானத்தை நாம் கவனிக்க வேண்டும். ஒரு இனத்தை அடியோடு அழிக்க வேண்டுமெனில் அந்த இனப்பெண்களின் கருப்பைகளைப் கைப்பற்ற வேண்டும் என்பது இன அழிப்பு யுக்தி. தமிழகத்தைப் பொறுத்தவரை பிராமண இனத்தை அடியோடு அழிக்க அந்த இனப்பெண்களின் ஆழ்மனதில் வேறு ஜாதிக்காரன் தான் உனது ஹீரோ என்பதை நிலை நிறுத்திவிட்டால் - அப்பெண்களின் கருப்பைகளை கைப்பற்றி விட்டால் இனி அடுத்த சந்ததி அந்த இனத்திற்கு துளிர்க்க வாய்ப்பே இல்லை என்னும் மிகப்பெரிய திட்டமிடலும் வக்கிரமான அழிப்பு குணமும் இதன் பின்னால் ஆழமாக இருக்கிறது. தமிழ் சினிமாவில் பத்திற்கு எட்டு படங்கள் பிராமண கதாநாயகிராகவே சித்தரித்து அவர்கள் கண்டிப்பாக வேறு ஜாதிக்காரனைத்தான் திருமணம் செய்யவேண்டும் என்கிற நியதியை காட்சிப்படுத்தலும் கருப்பையை கைப்பற்றத்துடிக்கும் இந்த இன அழிப்பு நோக்கமே ஆகும்.

மேலோட்டமாகப் பார்த்தால் இது வெறும் கற்பனை காட்சிப்படுத்தல் தானே என்று நினைக்கத் தோன்றும். ஆனால் அருவெறுக்கத்தக்க இன துவேஷமும் ஆழமான இன அழிப்புச் செயல்களும் கங்கனம் கட்டி நடத்தப்படுகிறது என்று சாதாரன பிராமணனுக்குத் தெரியாது. தங்களை முற்போக்கு பிராமணனாக காட்டிக் கொள்பவனுக்கு இது புரியாது. பிராமணர் அல்லாதவர்களுக்கு அப்படி ஒன்று நடப்பதாகவே உணர முடியாது.





இப்படி பிராமணர்களை மிகவும் கேவலமான வக்கிரங்களுடன் பார்ப்பதும் அவரவர் பார்வைக்குத்தகுந்தாற்போல் படமாக்கி தங்கள் கீழ்தரமான ஆழ்மன வக்கிரங்களை பிராமண காட்சிப்படுத்தல் மூலம் வெளிப்படுத்துவதும் இன்றைக்கு தமிழ் சினிமாவில் சகிக்க முடியாத அளவிற்கு பெருகியிருக்கிறது என்றால் மிகையாகாது.

இந்த சூழலில் சமீபத்திய இன்னொரு செய்தி பற்றி படிக்கும் போது சினிமாக்காரர்களின் ஜாதீய வெறி பிராமணர்களுக்கெதிரான கீழ்தரமான காழ்புணர்ச்சி வெட்டவெளிச்சமாக வெளிப்பட்டது.

இது செய்தி

"உத்தம புத்திரன் விவகாரத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த, தனுஷ், மித்ரன் R ஜவகர் உள்ளிட்ட முக்கிய நபர்கள் அடங்கிய ‘உத்தமபுத்திரன்’ படக்குழுவினர், சர்சைக்குள்ளான காட்சிகள் நீக்கப்பட்டுவிட்டதாக கூறியதோடு, தங்கள் வருத்தங்களையும் தெரிவித்துக் கொண்டனர். கௌண்டர் சமூகத்தாரை இழிவுபடுத்துவது போன்ற காட்சிகளையும், வசனங்களையும் நீக்க வேண்டும் என கொங்குநாடு முன்னேற்ற கழகத்தினர்
போராட்டம் நடத்தியதை தொடர்ந்து, படத்தை தடை செய்யும்படி மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டதாக நாம் முன்பே செய்தி அளித்திருந்தோம். சேலம், கோவை, திருச்சி, கரூர் உள்ளிட்ட இடங்களில் 80ற்கும் மேற்பட்ட இடங்களில் படத்திற்கு தடை விதிக்கப்பட்டது".
இந்த கேவலமான ஜாதி காழ்ப்புணர்ச்சி கொண்ட சினிமா வியாபாரிகளிடம் சில கேள்விகள் கௌண்டர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் போது படக்காட்சிகளை நீக்கி அவர்களிடம் மன்னிப்பும் கோரும் திரையுலகம், முஸ்லீம் கதாபாத்திரத்தை நெகட்டிவாக படமாக்ககூட பயப்படும் திரையுலகம் ஏன் பிராமணர்களை மட்டும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு கேவலமாகவும் கேலியாகவும் காட்ட முற்படுகிறார்கள்?

பிராமண பாலச்சந்தராலேயே தொடங்கி வைக்கப்பட்ட இந்த கேவலமான காரியத்தை ஒரு மனிதாபிமானத்திற்கு கூட ஏன் சினிமாக்காரர்கள் இன்று வரை நிறுத்த மறுக்கிறார்கள்?

பிராமணர்களை சித்தரித்தே நாம் ஏன் கதை அமைக்க வேண்டும் என்றும் அதை விட்டுவிடலாமே என்றும் ஏன் ஒரு சினிமாக்காரருக்கு கூட தோன்றமாட்டேன் என்கிறது?

ஒரு நடிகை நீதிமன்றத்திற்கு பர்தா அனிந்து வந்ததையே முஸ்லீம்களின் உடை என்று கூறி அதற்கு எதிர்ப்பு தெரிவித்த முஸ்லீம்களின் பேச்சை சாடாத அரசியல் வாதிகள் சினிமாக்காரர்கள் ஏன் மடிசார் பிராமணர்களின் உடை அதை அணிந்து ஏன் ஆபாசமாக நடிக்கிறீர்கள் என்று கேட்டால் மட்டும் உன் முப்பாட்டனை பழிவாங்கவே அவ்வாறு செய்கிறேன் என்று எகத்தாளமாக பேசுவது ஏன்?





இதே ஜவஹர் இயக்கி தனுஷ் நடித்த யாரடி நீ மோகினி படத்தில் பிராமண கதாபாத்திரத்தை எவ்வளவு சுதந்திரமாக பயன்படுத்தினார்கள். எல்லா பிராமண மாமிகளும் ஒரு டாட்டா சுமோவில் தனுஷை அமுக்கி அவன் மீது லஜ்ஜையே இல்லாமல் விழுந்து விழுந்து பிரயாணிப்பது போல காட்டினார்களே அப்போது ஏன் இவர்களுக்கு தான் ஒரு குறிப்பிட்ட ஜாதியினரை மிகவும் அபத்தமாக காண்பிக்கிறோமே என்று தோன்றவில்லை? ஜவஹர் வீட்டுப் பெண்கள் எல்லோரும் ஒன்றாகக் கூடி இப்படி குடும்பத்திற்கு சம்பந்தம் இல்லாத ஒரு ஆண்மகனோடு மேலே விழுந்து ஒட்டி உரசி வண்டியில் ஒன்றாகச் செல்வார்களா? தன் குலப் பெண்களைப் பற்றி அவ்வாறு நினைக்க முடியாத ஒருவர் மற்ற குலப்பெண்கள் இப்படி நடந்து கொள்வார்கள் என்று நினைப்பது ஆழ்மன வக்கிரத்தின் வெளிப்பாடில்லையா?

சீந்திப்பீர்களா சினிமாக்காரர்களே...? சிந்திப்பீர்களா?

தமிழ் சினிமாவில் இன்னும் எவ்வாறெல்லாம் பிராமணர்கள் கேலிக்குரியவர்களாக கேவலமாகவும் காட்சிப்படுத்தப்படுகிறார்கள் என்பதை தொடர்ந்து பார்ப்போம்...

தொடரும்....




16 comments:

paarvai said...

The author has spent a lot thinking so much to write the long essay to air his/her feeling. You see, in Thirunelveli area, people of all caste, Pillai, Thevar, Nadar, Arundhathiyar etc, speak the one and the same language with a local accent but not a Brahmin. So is the case in Coimbatore, Thanjavur, Vellore etc areas. Everywhere, the only exception is Brahmin. Even those Brahmin who eat meat, drink alcohol and behave all alongwith others speak such a Tamil called Brahmin Tamil. Can you find a jew behaves with such a distinction like these Brahmins do wherever they live? Bharathi was condemned by you people for behaving and doing things as any fellow human being. Today, you people celebrates him not accepting what he said but for a reason well known to you and me as well.

hayyram said...

//You see, in Thirunelveli area, people of all caste, Pillai, Thevar, Nadar, Arundhathiyar etc, speak the one and the same language with a local accent but not a Brahmin. So is the case in Coimbatore, Thanjavur, Vellore etc areas. Everywhere, the only exception is Brahmin// ஐயா பார்வை, அதே போல எந்த ஊரில் வாழ்ந்தாலும் முஸ்லீம் முஸ்லீமாகத்தானே வாழ்கின்றனர். ஒரு முஸ்லீம் இன்னொரு முஸ்லீமை பார்த்தவுடன் உருதுவிலோ அல்லது தத்தக்கா பித்தக்கா ஹிந்தியிலோ தானே பேசிக்கொள்கிறார்கள். அது மட்டும் உங்கள் கண்ணுக்குத் தெரியவில்லையா? தெரியவில்லையென்றால் உங்கள் பார்வையில் பிராமணர்களுக்கெதிரான ஜாதி துவேஷம் தான் நன்றாக தெரிகிறது..

ராமகுமரன் said...

அறிந்தும் அறியாமலும் திரைபடத்தில் தேவையே இல்லாமல் ஹீரோ நவ்தீப்பின் அம்மாவை பிராமண பெண்ணாக காட்டி இருப்பார்கள் , அவளது அப்பா வேண்டுமெண்டே மாப்பிளை பிரகாஷ்ராஜை வஞ்சிப்பது போல காட்டியிருப்பார்கள் , வேண்டுமென்றே பிராமணர்கள் கொடுமைகாரர்களாக காட்ட வேண்டும் என்று செய்திருப்பார்கள்.மன்மதன்அம்புவிலும் வேண்டுமென்றே மாதவனின் அம்மா ,மாதவன் போன்றோரை பிராமணர்களாக காட்டி அவர்களை கொடுமைகாரர்களாக காட்டியிருப்பார்கள்

hayyram said...

//அவளது அப்பா வேண்டுமெண்டே மாப்பிளை பிரகாஷ்ராஜை வஞ்சிப்பது போல காட்டியிருப்பார்கள்// அதுவும் பிரகாஷ்ராஜ் பிராமணரைத் திட்டும் காட்சியில் கருப்பு சட்டை போட்டிருப்பதாக எடுத்திருப்பார்கள். அயோக்கியர்கள். எல்லா அயோக்கியர்களும் சேர்ந்து அவரவர் அயோக்கியத்தனத்தை மறைக்க பிராமணரை பலிகடா ஆக்கி வருகிறார்கள்.

kkrn said...

I accept most of your views, but not all... Tamil cinema Logic for Heroine is: She must be beautiful, Clean, innocent, educated and etc..in this first three or four categories Brahmin girls fit perfectly..May be this is the reason for atleast 20% movies what you mentioned...

hayyram said...

// Tamil cinema Logic for Heroine is: She must be beautiful, Clean, innocent, educated and etc// தமிழ் நாட்டில் மற்ற ஜாதிப் பெண்கள் எல்லாருமே படிப்பறிவற்ற, கிரிமினல் புத்திகொண்ட அவலட்ஷணமான அசுத்தமான பெண்களாகவே தான் இருக்கிறார்களா என்ன? இன்றைய தேதியில் முதலியார், பிள்ளை, செட்டியார் பெண்கள் எல்லாம் அழகில் பிராமணப்பெண்களையே தோற்கடித்து விடுவார்கள்! காதல் ரச ஹீரோயின் என்றால் ஐயர் பெண்ணும் , அரைகுரை ஆடையுடன் வக்கிரமாக காண்பிக்க வேண்டுமென்றால் கேரளப்பெண்களையும் , விபச்சாரியாக காட்ட ஆந்திரப்பெண்கள் என ஒரு சைக்கோத்தனமான ஃபார்முலா வைத்திருக்கிறார்கள் நம் சினிமாக்காரர்கள். அவரவர் ஆழ்மன வக்கிரங்கள் திரையில் சிரிக்கிறது. அவ்வளவு தான்.

kkrn said...

ippadi oru kevalamaana kelvi varum entru theriyum ..20% entren athuvum May be entren..Purinthukolla mudiyavittal enna seivathu? Muslim entraal Sampiraani poduravan..theeviravaathi, appuram christian entraale.full anki father or big black rowdy called antony..ithuthaan logic..Naan ninaiththani muzhuvathum solla oru pakkam vendum..enakku neram illai..unkal kelviyai jeyamohan pakkathil paarththa gnapakam..athanaal karuththu sonnen... it..ithu mayiru logic pesum thimirpitiththavan en pathile veru maathiyaaka irukkum.....

kkrn said...

அசுத்தமான பெண்களாகவே தான் இருக்கிறார்களா என்ன? இன்றைய தேதியில் முதலியார், பிள்ளை, செட்டியார் பெண்கள் எல்லாம் அழகில் பிராமணப்பெண்களையே தோற்கடித்து விடுவார்கள்! காதல் ரச ஹீரோயின் என்றால் ஐயர் பெண்ணும் , அரைகுரை //ஆடையுடன் வக்கிரமாக காண்பிக்க வேண்டுமென்றால் கேரளப்பெண்களையும் , விபச்சாரியாக காட்ட ஆந்திரப்பெண்கள் என ஒரு சைக்கோத்தனமான ஃபார்முலா வைத்திருக்கிறார்கள் நம் சினிமாக்காரர்கள். அவரவர் ஆழ்மன வக்கிரங்கள் திரையில் சிரிக்கிறது. அவ்வளவு தான்// add this Tamil women as laobr and house maid.pure tamil name ugly looking girl...Villain With Pure Tamil NAme...Sankrit name for Hero...I can list it down more...

kkrn said...

Malayalam padamum konjam paarthuttu pesunka..thamizhan innaa karuppa, asinkamaa, mataiyaana kaamikkira padaththa kaanpikkattumaa?

kkrn said...

pilai, chetti, muthaliyarai vida mukkulathoril thanjai kallar, vanniyaril padaiyaachi peenkla mika azhagu..naan solla vanthathu inke aerpaduththapattirukkum maayai...neenkal pathil sonna vitham maha erichal uuttum vithamaaka irukkirathu...ottu moththam thamizh penkalaiaye izhizhu paduththum vithamaaka maatri vittu irukkireer neenkal unkal purithalaal....

hayyram said...

//naan solla vanthathu inke aerpaduththapattirukkum maayai.// உங்களுக்கு எதிரான ஒரு குதர்க்க கேள்வியை கேட்டதாக நினைத்துக் கொள்ள வேண்டாம்.நானும் அவ்வித மாயையைப் பற்றி விளக்கினேன் அவ்வளவு தான். உங்களுக்கு எரிச்சல் உண்டு செய்யும் வகையில் அது இருந்தால் மன்னிக்கவும். நான் சொல்ல வந்ததை இன்னும் தெளிவாக சொல்கிறேன்.. பிராமண கதாபாத்திரத்தில் நடிக்கும் பெண்கள் பெரும்பாலும் பிராமணர்கள் இல்லை! பிராமண அழகுள்ள பெண்ணாக வேறு ஜாதிப் பெண்களை காட்டும் போது, அவ்வாறு நடிக்கும் அழகான பெண்ணின் ஜாதி எதுவோ அந்த பெண்ணை அந்த ஜாதிப் பெண்ணாகவே கட்டி நடிக்க வைக்கலாமே! அது தான் பிராமணப் பெண்ணைப் போல அழகுள்ள பெண்கள் வேறு ஜாதியிலும் இருக்கிறார்கள் என்பது அந்தந்த ஜாதி நடிகைகள் மூலமே நிரூபணம் ஆகிறதே! அதற்கு பிராமண கதாபாத்திரம் எதற்கு என்று தான் கேட்க வந்தேன்.

kkrn said...

Jayamohan than azhakaaka sonnaare" neenkal unkalai pirmanaraaka unaraatha varai thaakkuthal thodarum" Evvalavu aazhamaana karuthhtu...Neenkal chettiyar, pillai penkalai azhagu entru sonnavudan enakku kovam vanthathu..ithaithaan unarthal entru sonnaar pola..." Kurippaaka anna thirunelveli Ayyer ponnu vipachaari" Antha padaththai kandu enakke kovam vanthathu..unkalukku????

gujjan said...

i read all the 5 parts... an article which really makes me to think.....
1. mistake in bringing up the child
2. feeling of insecurity
3. frightening feelings

these are the reasons why brahman community is being ill treated

thamilini. said...
This comment has been removed by the author.
thamilini. said...
This comment has been removed by the author.
Unknown said...

Directors are begging from Brahmins community..so they are making all the character as Brahmin..Then only their film comes up with colour. when a popular people degraded then only the other people likes to c the filim..Since the persentage of other community is more, Directors are earning money by degrading Brahmins. Dont worry Brahmins are always popular people..these directors can fill their empty stomach.