Sunday, September 25, 2011

ராமாயணம் தரும் பாடம் - அனுகூல க்ஷத்ரு!
அனுகூல க்ஷத்ரு என்று சிலரைக் கூறுவார்கள். அப்படியென்றால் யார்?

எப்படி இருப்பார்கள்?

நமக்கு நன்மை செய்வதாகச் சொல்லி தீமைக்குழியில் தள்ளிவிடுபவர் எவரோ அவரே அனுக்கூல க்ஷத்ரு என அழைக்கப்படுகிறார்கள்.

சட்டென புரியும் படியாகச் சொல்லவா?

"ரொம்ப ஜலதோஷம் மச்சான். மூக்கடைச்சிக்கிட்டு ரெண்டு நாளா ஒரே தொல்லை" என்று உங்கள் நண்பரிடம் கூறும்போதே 'மச்சி மெளகு பொடியத் தூவி கட்டிங் வுட்டேன்னா எல்லாம் சரியாயிடும்! நான் சொல்லித்தர்ரேன் பாரேன்" என்று ஆரம்பிப்பவர் யாரோ அவரே அனுக்கூல க்ஷத்ரு! நம்முடைய ஜலதோஷத் தொல்லை நீங்க வழி செய்யும் உதவி மனப்பான்மையோடு
அவர் சொல்வதாகத் தான் இருக்கும். அது நண்பனின் அடையாளம்.

ஆனால் நமக்கு செய்ய நினைக்கும் நன்மை இன்னொரு தீமையின் ஆரம்பமாக இருந்துவிட்டால் அது நமக்கெதிராக செயல்பட நினைக்கும் க்ஷத்ருவின்
அடையாளம். இப்படி நமக்கு நன்மைசெய்வதாகக் கூறி தீமைக்குழிக்குள் யாரேனும் தள்ளிவிட்டால் அவரே அனுகூல க்ஷத்ரு.

காதலியைப் பற்றி சக நண்பர்களிடம் கூறி புலகாங்கிடம் அடையும் இளவட்டங்கள் இருப்பார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் கொஞ்சியது கெஞ்சியது மிஞ்சியது என அனைத்தையும் பகிர்ந்து கொள்வார்கள். ஆனால் எப்போதாவது காதலியுடன் சண்டை, கோபம் என்று வந்தவுடன் தான் இந்த அனுகூல க்ஷத்ருக்களுடைய வேலை ஆரம்பமாகும். 'மச்சி, அவ என்னைய மதிக்கவே இல்லடா, நேத்து என்னாச்சு தெரியுமா?' என சக நண்பர்களிடம் கூறுவர். ஆறுதல் கூறுவதாக நினைத்துக்கொண்டு அவர்கள் கூறும் யோசனை தான் அந்த காதலுக்கே சமாதி கட்டும் வேலையாக இருக்கும்.

'அவ எதிர்ல வந்தா கூட பாக்காம போ மச்சான். ரெண்டு நாளைக்கு
ஃபோனை ஸ்விட்ச் ஆப்ல வெச்சிடு. அடிச்சி புடிச்சு உன்னைப் பாக்க ஓடிவர்ராளா இல்லையான்னு பாரு!' இப்படி யோசனைகள் பறக்கும். டவுசர் போட்ட காலத்திலிருந்தே கூடப்பழகும் உற்ற நண்பன் தனக்கு நல்லதைத்தான் சொல்லுவான் என்றும் அவன் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்றும் கண்ணை மூடிக்கொண்டு நம்புபவன் அப்படியே செய்தும் பார்ப்பான்.

அவ்வளவு தான் சிறிய ஈகோ பிரச்சனையில் துவங்கியதை, ஒரு கெஞ்சலில் முடிந்து விடக்கூடிய ஊடலை, பெரிய விரிசலாக மாற்றி காதலே உடைந்து காதலர்கள் பிரிந்து போகும் சூழலுக்குத் தள்ளிவிடும், இந்த யோசனைகள். நண்பர்களால் சொல்லப்பட்டவை எல்லாம் நமது நன்மைக்கே என்கிற மாயத்தோற்றம் காதல் முறிந்து காலம் கடந்த பின் தெரியும்.

'பின்னொரு காலத்தில் உங்களால தாண்டா இதெல்லாம் நடந்திச்சி. உங்களை யார்ரா என் காதல்ல குறுக்க வரச்சொன்னது?' என அவர்களிடமே கேட்டு நட்பையும் இழக்கும் அசமஞ்சங்களாக நாம் இருப்போம். எல்லாம் நமது அனுகூலத்திற்காக செயல்படுபவர்கள் என சிலரை நம்பி அவர்களே க்ஷத்ருக்களின் வேலையைச் செய்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ளாத வினையால் ஏற்படும் விளைவுகள்.

இப்படி பலபேர் பல இடங்களில் பல நேரங்களில் நம்மைச் சுற்றி இருந்து கொண்டே இருப்பார்கள். சூழ்நிலை காரணமாக நாம் அவர்களை நம்பிவிட நேரலாம். ஆனால் விழிப்புடன் நடந்து கொண்டால் சில நுணுக்கமான க்ஷத்ரு அவதாரம் அவர்களிடமிருந்து வெளிப்படுவது மெல்லத் தெரியவரும்.

கல்லூரியில் படிக்கும் போது சக நண்பர்கள் உற்சாகப்படுத்துவார்கள். எதற்கு? பரீட்சையில் பெயிலாய்ப் போவதற்கு! 'மச்சி, அரியர்ஸ் வெக்காத மனுஷன் அரை மனுஷன்டா.' என்பான். 'நாமல்லாம் என்னிக்கு மச்சான் ஒரே அட்டெம்ப்ட்ல பாஸாயிருக்கோம்?' என வடிவேலு பாஷையில் பேசி புளகாங்கிதம் அடைந்து கொள்வான். அதையெல்லாம் தாண்டி 'மச்சி, இந்த வயசில தாண்டா என்ஜாய் பண்ணும், க்ளாஸை அப்பறம் பாத்துக்கலாம், உனக்கும் சேத்து டிக்கெட் எடுக்கறேன் மச்சான், படத்துக்கு போகலாம் வா' என்று நட்புணர்வு பொங்க வாஞ்சையாய் அழைப்பான். அவன் தான் மாணாக்கனின் அனுகூல க்ஷத்ரு!

ஒரு மனைவி தன் கணவனிடம் கோபித்துக் கொள்கிறாள் என வைத்துக் கொள்வோம். அதை உடனே தனது தோழியிடம் பகிர்ந்து கொள்கிறாள். அவள் கருத்தேதும் சொல்லாமல் வெறுமனே கேட்டுக் கொண்டிருந்தால் அவள் தோழி. அல்லது அதெல்லாம் சின்ன சின்ன உரசல் தானே. எல்லாம் சரியாப் போய்டும் என்று ஆறுதல் கூறினால் அவள் தோழி.

ஆனால் அதே தோழி இந்த பிரச்சனையைத் தீர்க்க ஆலோசனை கூறினால்? அங்கே தான் அனுகூல க்ஷத்ருவை அடையாளம் கண்டு கொள்ளவேண்டிய அவசியம் இருக்கும். விழிப்புடனிருக்க வேண்டும். அந்த யோசனைகளைச் செய்யலாமா வேண்டாமா என்று நம் குடும்பச் சூழலை அனுசரித்து பலமுறை சிந்தித்துச் செயல்பட வேண்டும்.

தோழிக்கு ஆறுதலாக கூறுவதாக நினைத்து "நீ எவ்ளோ கஷ்டம் படற, உன் புருஷனுக்கு அது புரியலியே! நீ பேசாம இரு! அவரே பேசிக்கிட்டு வரட்டும்!  என்ன தான் செய்றாருன்னு பாரு! சமைச்சுப் போடாத! ராவக்கு கிட்ட விடாத! நீ என்ன கொறஞ்சி போய்ட்டியா?" என்று தோழிக்கு வக்காலத்தாக பேசுவதாக நினைத்து குடும்பததையே உடைக்கும் பெண்கள் அனுகூல க்ஷத்ருக்கள்! பலபேருக்கு இப்படிப்பட்ட அனுகூல க்ஷத்ருவால் மோசமான அனுபவம் உண்டாகி இருக்கலாம்! 'சே அவ பேச்சை கேட்டு பண்ணினது எனக்கே வினையா போச்சு!" என்று புலம்பும் குரல்களைக் கேட்டிருக்கலாம். ஏனெனில் அனுகூல க்ஷத்ருவின் விளைவுகள் காலம் கடந்து சூழ்நிலை மாற்றம் பெற்றவுடன் தான் மெல்லத் தெரியவரும். அதற்குள் நாம் பல விளைவுகளை சந்தித்திருப்போம்.

இப்படித்தான் அருகிலேயே இருந்த அனுகூலம் செய்வதாகச் சொல்லி ஒரு வம்சத்திற்கே வினையானாள் ஒருத்தி. அந்த அனுகூல க்ஷத்ருவின் பெயர் மந்தரை.

தனக்கு என்றைக்குமே நன்மையைச் சொல்லுபவள் தான் மந்தரை என்று கைகேயி முழுமையாக நம்பினாள். ராமனுக்கு முடிசூட்டப் போகிறார்கள் என்று மந்தரை வந்துச் சொன்னவுடன் கழுத்தில் கிடந்த முத்தாரத்தை கையால் அவிழ்த்து மந்தரையின் கழுத்தில் மகிழ்ச்சி பொங்க போட்டுப் பரிசளித்தள் கனிவான கைகேயி!

மாசுள்ளம் கொண்ட மந்தரைக்கு முத்தாரமும் முத்துமணிகளும் ஏனோ மகிழ்ச்சியளிக்கவில்லை. தான் மிகுந்த பிரியம் வைத்திருக்கும் கைகேயிக்கு ராமன் பட்டம் சூட்டிக்கொள்வதால் பெருமையென்ன இருக்கிறது என்று நினைத்தாள். கோசலையின் மகன் ராஜாவானால் கோசலைக்குப் பெருமை. கைகேயி ஏன் கால்கை புரியாமல் குதித்து கூத்தாட வேண்டுமென எண்ணினாள் மந்தரை. அதனால் கைகேயியின் மீது தனது பிரியத்தைக் காட்டுவதாக எண்ணி அவளுகு போதித்தாள்.

'கோசலை மகன் ராமன் 'கோ' மானாக இருப்பதால் உனக்கு என்ன பெருமை?
பெருமையெல்லாம் கோசலைக்கன்றோ?' 'நீயும் நானும் கோசலையின் தாசியாக இருக்கப்போகிறோமா? சக்கரவத்தித் திருமகளும், சக்கரவர்த்தியின் பத்தினியுமான நீ கோசலைமுன் பெருமை ஒன்றுமில்லாமல் சிறுமை பட்டு நிற்பாயோ?' என கைகேயிக்குப் பரிகாட்டுவதாக எண்ணி அவளுக்குப் போதித்தாள்.

இதைக் கேட்ட கைகேயி நற்குலப் பெண்களுக்கே உரிய நற்குணத்தின் வெளிப்பாடாக ராமனைப் புகழ்ந்தே கூறலானாள் 'மந்தியின் புத்தி கொண்ட மந்தரையே! எனக்கு ராமனும் ஒன்றுதான், பரதனும் ஒன்றுதான், இருவரில் மகுடம் யாருக்கெனினும் மன்னவனாவது என் மகன் தான்!'

தம்பிகளுக்கொரு குறையென்றால் தாளமாட்டாத தனையன் என் மகன் ராமன். கோசலையின் மீதிருக்கும் பாசத்தை விட கோடிப்படிகள் உயர்வாக என்மீது பாசம் காட்டுபவன் என்மகன் ராமன். பெரியோர்களிடம் அன்பும் பக்தியும் உடைய ராமன் முடிசூட்டிக்கொள்வது இந்த நல்லுலகிற்கு கிடைத்த பாக்கியமன்றோ?' என்றாள்.

ஆனால் மந்தரை விடவில்லை. என்ன தான் ராமன் மீது அதிக பாசம் கொண்டவள் கைகேயி என்றாலும் பரதன் அவள் புதல்வன் தானே. அவன் மீதும் அவனது எதிர்காலம் மீதும் சிந்தனை கொண்டவள் தானே. அந்த இடத்தை தட்டிவிட்டாள் மந்தரை.

'இன்றைக்கு ராமன் நாடாளலாமடி கைகேயி, ஆனால் நாளை நீ யார்? உன் மகன் யார்? அவன் மகன் என்னவாக இருப்பான்? ராமனுக்குப் பிறகு பரதன் அரசாள்வானா? ராமனுக்குப் பிறகு அவன் மகன் முடிச்சுட்டிக் கொள்வான், பிறகு அவன் மகன்.. அப்படியே போனால் பரதனுக்கென்று என்ன மிஞ்சும்? உன் மதி கெட்ட தனத்தால் 'நம் பிள்ளை' பரதன்' நாடாளும் வாய்ப்பைக் கெடுத்து நீயே அவனது நல்வாழ்விற்கு நாசம் விளைவிக்கிறாய். காரியத்துடன் சொல்லி விட்டேன், அவனை வீரியத்துடன் காப்பது உன்கடன் கைகேயி, உன் கடன்' என்று போதித்து நகர்ந்து விட்டாள் அனுக்கூல க்ஷத்ரு.

மந்தரை கைகேயி மீது பிரியம் கொண்டவள். அவளது அனுகூலத்திற்காகவும், அவள் பெற்ற பிள்ளையின் அனுகூலத்திற்காகவும் பேசியவள் தான். பிரியம் கொண்டதால் உரிமை வந்ததெனப் பேசலாம் தான். ஆனால் அவற்றைக் கேட்ட கைகேயி அதன் படி நடக்க வேண்டுமா? வேண்டாமா? என முடிவு செய்திருக்க வேண்டும். ஒரு கணம் அமைதியாக சிந்தித்திருக்க வேண்டும். ஆனால் தனது அனுகூலத்திற்காகத் தான் மந்தரை சொல்வதாக எண்ணி அதனுள்ளிருக்கும் க்ஷத்ரு குணத்திற்கு தானே பலியானாள். மந்தரையின் பேச்சைக் கேட்டு
மதிகெட்டுப் போனதை எண்ணி பின்னாளில் மனம் வருந்தினாள்.

கைகேயின் அனுகூல க்ஷத்ருவானாள் மந்தரை. அவள் பேச்சைக் கேட்டதால் தசரதன் மடிந்தான், ராமனும் சீதையும், லக்ஷமனனும் காடு சேர்ந்தனர். பரதன் நாடேற்க மறுத்தான். லங்காபுரி அழிந்தது. ராவண குடும்பம் மாண்டது!


எல்லாம் நம் கூடவே இருக்கும் அனுகூல க்ஷத்ருக்கள் யாரென்று புரிந்து கொள்ளாததால் வந்த வினை.

உங்களைச் சுற்றியும் உங்களுக்கு நன்மை மட்டுமே செய்யக்கூடியவர்களாக சிலர் இருப்பார்கள். அவர்கள் நல்லவர்கள் தான். ஆனால் இக்கட்டான சூழலில் மற்றவர்கள் யோசனையைக் கேட்க நேரிடும் போது அவற்றை செயல்படுத்தலாமா வேண்டாமா என்பதை நாமே சரியானபடி தீர்மானித்துக் கொள்ள வேண்டும்! நமக்கு நன்மை செய்வதாக நினைத்து தீமைக்கு வித்திடுபவர்களை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும்.

இல்லையேல் காலம் கடந்து ஞானம் பிறக்கும்.

நாம் இருப்பது அயோத்தியும் இல்லை! நமக்கு ஒதுங்க இங்கே காடுகளும் இல்லை!

அனுகூல க்ஷத்ருக்கள் ஜாக்கிரதை! இது ராமாயணம் தரும் பாடம்!
.

Thursday, September 15, 2011

பிறர் மனைவியை மோகிப்பவன் ஆவியாய் அலைவான்!
பிறருடைய பொருளையும் மனைவியையும் அபகரிப்பவன் எவனோ, அவனே இறந்த பிறகு வேறு சரீரத்தை யடையாமல் காற்று ரூபமாக பிரேத ஜென்மதை அடைந்து பசி தாகத்தோடு வருந்தி யமனுடைய காவலையும் நீங்கி எங்கும் திரிவான்.

இறந்தவர்களின் பொருள்களை அபகரித்துக் கொள்பவன், தீய நரகங்களை எல்லாம் அனுபவிப்பான்.

மோசம் செய்து பிறர் பொருட்களை அபகரிப்பவன் கொடுமையான பாவத்தைச் செய்பவனாகிறான். அவன் பிரேத ரூபமெடுத்து யாரையும் நிம்மதியாக இருக்கவிட மாட்டான். தன் சொந்த புத்திரன் முதலியோருக்கு கூட சந்ததி உண்டாகாமல் வம்சம் நாசமடையும் படி செய்வான். அவர்களுக்கு பல துன்பங்களை உண்டாக்கி வருத்தப்படுவான் என்று கூறி அருளினார்.

அந்தணோத்தர்களின் பொருள்களையும் தெய்வ சொத்துக்களையும், ஸ்த்ரி, பாலகன், அந்தகன், ஊமை, செவிடன் ஆகியோர்களின் பொருள்களை அபகரித்தவன் எவனாயினும், எத்தகைய தானங்களைச் செய்தவனாயினும் பிரேத ஜென்மத்தை அடைவான்.

தன் கோத்திரத்தில் பிறந்த பெண்ணையும், பிறனுக்குரியவளையும் விரும்பியவன் பிரேத ஜென்மத்தை அடைவான்.

தாமரை மலர்களையும் பொன், பொருள், ஏழைகளை ஏமாற்றி பொருள்களை அடைந்தவர்களும் திருடினவர்களும் பிரேத ஜென்மத்தை அடைவார்கள்.

போரில் புறங்காட்டி ஓடியவனும், செய் நன்றி மறந்தவனும், நல்லது செய்தவனுக்கே தீமைகளைச் செய்தவனும் பிரேத ஜென்மத்தை அடைவார்கள்.

பிரேத ஜென்மம் அடைந்தவன் தான் சார்ந்த குலத்தையே அதிகப்பிடிப்பான்.
தருமங்கள்.

நற்கருமம் எதையும் செய்யாதவனுக்கும், பாகவதரை நிந்திப்பவனுக்கும் தெய்வ பக்தி இல்லாதவனுக்கும், புலால் உண்பவனுக்கும் மது அருந்துவோன்னுக்கும், பொய் சொல்பவனுக்கும் பிரேத ஜென்மம் அடைந்தவனால் அதிகமான துன்பங்கள் உண்டாகும்.

தானங்கள் செய்பவருக்கும் ஹரி நாம சங்கீர்த்தனம் செய்பவருக்கும்,
திருஸ்தலங்களுக்குத் தீர்த்த யாத்திரை ஷேச்த்ராடனம் முதலியவற்றைச் செய்பவருக்கும் பிரேத ஜென்மம் அடைந்தவனால் ஒரு துன்பமும் நேராது.


.

Wednesday, September 14, 2011

முத்தூட் பைனான்ஸிற்கு சு. சுவாமி கடிதம்!
Dr Swamy takes up Talibanic dress code of Muthoot
12/09/2011 00:36:12  

10th September, 2011.

To
Ms. Shiney Thomas,
Executive Secretary,
Muthoot Fincorp Ltd.
Muthoot Center
Punnen Road, Trivandrum.

Dear Ms.Thomas:

I am given to understand that you have issued a circular dated 17th March, 2011
resuring a dress code which discriminates against Hindu values and practices (see
enclosed).

If this circular is still operative, please let me know. As it stands, it is violative of a
Hindu’s fundamental rights.

Yours sincerely,

(SUBRAMANIAN SWAMY)
பின்னூட்டங்களுடன் படிக்க க்ளிக்கவும் ---> ஹிந்தவா கேரளம் செய்தி!
.

Tuesday, September 13, 2011

பதின் வயது திருமணம் குற்றமா? - 2"நள்ளிரவில் தோட்டத்து சாலையில் புகுந்த ஒடிசா வாலிபர்கள் 4 பேர், அங்கு கட்டி வைக்கப்பட்டிருந்த கன்றுக் குட்டியுடன், இயற்கைக்கு மாறான முறையில் உறவு கொள்ள முயன்றனர்."

மேலே காணும் செய்தி பல சமூக கலாச்சார சிதைவுகளை எடுத்துச் சொல்லக் கூடிய விஷயம். ஆனால் இதைப் பற்றி கலாச்சார ரீதியாக விவாதிக்க, தீர்வு காண யாரும் தயாரில்லை என்றே தோன்றுகிறது. காரணம் இது போன்ற சமாச்சாரம் பல நடைமுறைச் சிக்கல்களை உள்ளடக்கியதாக இருக்கிறது.

காமம் என்பதும் பசி, தாகம், காலையில் எழுந்தால் கழிவறை போகவேண்டியது போன்றதுமான ஒரு உடலின் உந்துதல் தான். வயிற்றுக்குச் சோறும் , நாவிற்கு தண்ணீரும் கொடுப்பது போல, காலை எழுந்தவுடன் உந்துதல் வந்து கக்கூஸ் போவது போல காமத்தின் உந்துதல் வந்தால் அதனை கழிவு செய்து விடுதலும் இன்றியமையாத அவசியமே!

ஆனால் அதை மிகவும் அலட்சியமாக நம் சமூகம் கையாண்டு வருகிறது. பதின் வயது என்பது சக மிருகங்களுக்கு இருப்பது போல மனிதர்களுக்கும் இனச்சேர்க்கைக்கான வயது. நம் முன்னோர்கள் அந்த வயதின் முக்கியத்துவம் கருதி பதின் வயதில் - ஆண் பெண் இனக்கவர்ச்சி உண்டாகும் சரியான பருவத்தில் - திருமணம் செய்து வைத்தனர்.

ஏழுவயதில், ஐந்து வயதில் திருமணம் செய்து வைத்து பருவத்திற்காக காத்திருப்பதும் நடந்திருக்கிறது அக்காலத்தில். அது கொஞ்சம் அதிகம்தான். அறியாமையால் வந்தவை. ஆனால் அந்த இனச்சேர்க்கைக்கான வயதை இன்றைக்கு முற்றிலுமாக புறந்தள்ளுகிறது நம் சமூகம்.

இனச்சேர்க்கைக்கான சரியான பருவத்தில் மனிதர்களை உடலுறவு கொள்ளவிடாமல் கலாச்சாரம், ஒழுக்கம் என்று கட்டிப் போட்டு விடுகிறோம்.
படிப்பு பணம் சம்பாத்தியம் என்கிற பெயரிலும் அதையே செய்கிறோம். இது ஒரு பெரிய மனிதக்கொடுமை. உடலுறவுக்கான எந்த வடிகாலும் இனச்சேர்க்கை பருவத்தில் நம் வீட்டுப் பிள்ளைகளுக்கு நாம் கொடுபப்தும் இல்லை.

பள்ளிப்பிள்ளைகள் உடலுறவு கொள்வதைத் தூண்டும் வகையில் 'காண்டோம்' விளம்பரங்கள் கொடிகட்டிப் பறக்கின்றன. வீட்டிற்குத் தெரியாமல்
இக்காலத்தில் சில யுவன்களும் யுவதிகளும் வெளியே உடலுறவு கொண்டு சுகம் கண்டு திரும்புகின்றனர். வீட்டுக்கு வந்தால், ஒன்றும் தெரியாத பிள்ளைகள் போல அம்மா, அப்பாவிடம் கொஞ்சிப்பேசி நல்ல பிள்ளைகளாக நடிக்கவும் செய்யலாம். ஆனால் வீட்டிற்கு வெளியே பிள்ளைகள் என்னவாக
இருக்கிறார்கள் என்பதை நம்மால் கவனிக்க முடியுமா?

அப்படியே அவர்கள் திருமணம் என்கிற கலாச்சார வழியைப் பின்பற்றாமல்
திருட்டுத்தனமாக ஆனால் வயதிற்குத் தேவையான உடலுறவை வீட்டிற்கு வெளியே ரகசியாமாக செய்துவிட்டு வந்தால் நமக்குத் தெரியாமல்
அனுபவித்துக் கொள்கிறார்கள், விட்டு விடுவோம் என்று விடலாமா?

அது சரியா?

அது சரி என்றால் வெள்ளையர்களின் வாழ்க்கையை நாம் அப்படியே ஏற்றுக்கொண்டு விட்டோம். இனச்சேர்க்கைக்கான வயதின் வடிகால்
நம் மனிதர்களுக்கும் கிடைத்து விடுகிறது. இயற்கைக்கு மாறாக மனிதன் கட்டுப்படுத்தப்படவில்லை என்று கொள்ளலாம். பிறகு திருமணம்
கலாச்சாரம் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது.

அது தவறு என்றால் இனச்சேர்க்கைப் பருவத்திற்கான வடிகால்களை இளைஞர்களுக்கு எவ்வகையில் வழங்குகிறோம்? கலாச்சாரம் என்கிற
பெயரிலும் ஒழுக்கம் என்கிற பெயரிலும் இனச்சேர்க்கைப் பருவத்தில் உடலுறவு கொள்வதை தடுத்துவைப்பது மனித படைப்புக்கு எதிரான
செயல் இல்லையா? படிப்பு , பணம், உத்தியோகம் என்கிற பெயரிலும் அதே தானே நடக்கிறது?

இதற்கு என்ன தீர்வு? ஆளுக்கொரு கன்றுக்குட்டியையாவது கொடுத்து உடலுறவு கொள்ளுவதற்கு அனுமதி கொடுத்தால் சரியான தீர்வாக
இருக்குமா?

மேலே இடப்பட்ட செய்தியில் அதற்கும் அனுமதி மறுக்கப்பட்டு அவர்களை காம கொடூரர்களாக சித்தரிக்கப் பார்க்கிறார்கள். பெண்களைக் கற்பழிக்காமல் கன்றுக்குட்டியுடன் முடித்துக்கொண்ட இவர்களது 'நாகரீகத்தைக்' கூட நம்மால் பொறுக்கமுடியவில்லையென்றால், அந்த வயதில் உடலுறவுக்கு என்ன வழி?

செய்தியில் உள்ள இளைஞர்கள் கூட்டமாக ஒரிசாவிலிருந்து இங்கே வந்து தங்கி வேலை பார்ப்பவர்கள். அதனால் அவர்களுக்கு சரியான வடிகால் கிடைக்கவில்லை என்று நாம் உச்சுக்கொட்டலாம். அப்படியென்றால் பெற்றோருடன் தங்கியிருக்கும் இனச்சேர்கைக்கு ஆசைப்படும்
இளைஞர்களுக்கோ, யுவதிகளுக்கோ நாம் என்ன வடிகால் வைத்துக் கொடுத்திருக்கிறோம்?

செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கும் இளைஞர்களின் வயதினருக்கு இனச்சேர்க்கையின் பிரச்சனை இந்தளவிற்கு இருக்குமானால் அதே வயதுள்ள நம் வீட்டுப் பிள்ளைகளுக்கும் அதே உந்துதல் இருக்குமல்லவா? இவர்களை காமக் கொடூரர்கள் என்று கூறிவிட்டால் போதுமா?

இந்த விஷயத்தில் நாம் ஏன் நம் முன்னோர்களைப் பின்பற்ற வெட்கப் படுகிறோம்? ஏன் வெளிப்படையாக பேச, இனச் சேர்க்கைப் பருவத்தில்
உடலுறவு தேவை என்பதை ஆதரிக்க மறுக்கிறோம்?

பதின்வயதில் உடலுறவுத தேவைப்படும் இனச்சேர்க்கைப் பருவத்தில் திருமணம் செய்து, பருவத்தே அதை அனுபவித்த நம் முன்னோர்கள் அறிவிலிகளா? அதை ஏன் நாம் இழந்தோம்?

நம் வீட்டுப் பிள்ளைகள் திருட்டுத் தனமாக உடலுறவு கொள்வதை நாம் ஊக்குவிக்கிறோமா? அனுமதிக்கிறோமா? முறையாக பருவத்தில் இனச் சேர்க்கையில் ஈடுபட இந்த தலைமுறைக்கு என்ன வடிகால் செய்திருக்கிறோம்? என்ன வழி?

ஆண்களுக்கு அவரவர் உள்ளங்கையும், பெண்களுக்கு ரப்பர் குழாயும் கொடுத்துவிடுவது சரியான வழியாக இருக்குமா? கலாச்சாரமும் கெடாமல்
ஒழுக்கமும் மீறாமல், உடலின் உந்துதலும் தனிந்துவிட்டதாக கலாச்சார ஆர்வலர்கள் மகிழ்ந்து கொள்ளலாமா?

இதைப்பற்றி சிந்தித்து அவரவர் வீட்டுப் பிள்ளைகளுக்கு பெற்றோர்களே உரிய வடிகால்களை ஏற்படுத்திக் கொடுத்துவிடலாம் என்று சிந்தித்தால் நன்மை பயக்கும் தானே.

அவ்வாறு ஒவ்வொரு வீட்டிலும் சிந்திக்கும் போது தானாகவே பாதுகாப்பான உடலுறவு குடும்பத்தினர் சம்மதத்துடன் நடக்க எல்லோர் வீடுகளிலும் ஏற்பாடாகும். அதன் பெயர் திருமணம் என்றாகும். அது பதின் வயதில் நடந்தேறும். நம் தாத்தா பாட்டி என்ன காரணத்திற்காக பதின் வயதுகளில் திருமணம் செய்தார்களோ, அவர்களது பெற்றோர்கள் அவர்களுக்குச் செய்து வைத்தார்களோ அது மீண்டும் நடக்கும்.

வயது காரணமாக பிள்ளைகள் வீட்டிற்கு வெளியே தவறிழைப்பதும் தடுக்கப்படும். பருவத்தின் உறவு சுகத்தை இயற்கைக்கு மாறாக அனுபவிக்காமல் இழப்பதும் தடுக்கப்படும்.

எச்சரிக்கை: - ஆயிரம் காரணங்களையும், நடைமுறைச் சிக்கல்களையும் பற்றி ஆய்ந்தாலும் சகல ஜீவராசிகளுக்கும் இனச்சேர்க்கைக்கென்று ஒரு பருவம் இருக்கிறது. அதே போல் மனிதர்களுக்கும் ஒரு பருவம் இருக்கிறது. அந்தப் பருவத்தில் இனச்சேர்க்கை தடைபடுவது அப்பிறவியையே வீனடிக்கும் செயலாகும்.

'என் மச்சனுக்கு மயிலப்பசுவு தோதாச்சு' என்ற கிழக்குச் சீமையிலே படப்பாடல் வரிகள் நினைவிற்கு வருகிறது.
பாடலின் முதல் வரி 'ஆத்தங்கரை மரமே'

மேலும் படிக்க க்ளிக்கவும் ---> பதின் வயது திருமணம் குற்றமா? பாகம்-1

.

இனியவனே! இது உண்மை, நீ இறைவனிடமிருந்தே வந்தாய்!
இனியவனே! இது உண்மை. கொழுந்துவிட்டு எரிகின்ற நெருப்பிலிருந்து அதே இயல்புடைய ஆயிரக்கணக்கான நெருப்புப் பொறிகள் எவ்வாறு உண்டாகின்றனவோ, அவ்வாறே அழிவற்ற இறைவனிலிருந்து பலவிதமான உயிரினங்கள் உண்டாகின்றன. அவரிலேயே ஒடுங்கவும் செய்கின்றன.

இறைவன் ஒளிமயமானவர், உருவமற்றவர், இதயத்தில் உறைபவர், அகமும் உறமும் நிறைந்தவர், பிறப்பவற்றவர், பிராணன் இல்லாதவர், மனம் இல்லாதவர், தூயவர், மேலானவர், பிரகிருதியைவிட உயர்ந்தவர்.

பிராணன், மனம், புலன்கள், வெளி, காற்று, நெருப்பு, நீர், அனைத்தையும் தாங்குகின்ற பூமி எல்லம் அந்த இறைவனிலிருந்தே தோன்றின.

அந்த இறைவனுக்கு சொர்க்கம் தலையாக அமைந்துள்ளது. சந்திர சூரியர்கள், கண்கள்; திசைகள், காதுகள்; வெளிப்பட்ட வாக்கு, வேதங்கள், காற்று, ப்ராணன், பிரபஞ்சம், மனம், பூமி, கால்கள். அந்த இறைவனே எல்லா உயிர்களின் உள்ளும் உறைகிறார்.

அந்த இறைவனிடமிருந்து வானுலகம் உண்டாயிற்று. சூரியன் அந்த வானுலகை ஒளிரச் செய்கிறான். சந்திரனிலிருந்து மேகங்கள் உண்டாயின. பூமியில் வளர்கின்ற செடிகொடிகள் மேகங்களின் காரனமாக உண்டாயின. ஆண் பெண்ணிடம் விந்துவை விடுவதன் மூலம் உயிர்கள் தோன்றின.
இவ்வாறு அந்த இறைவனிலிருந்தே பலவிதமான உயிரினங்கள் உண்டாகின்றன.

வேதங்கள், பாடல்கள், மந்திரங்கள், சடங்குகள், வேள்விகள், பல்வேறு கர்மங்கள், தட்சினைகள், காலம், வேள்விகளைச் செய்பவர்கள், சந்திரன் வளர்க்கவும் சூரியன் தகிக்கவும் செய்கின்ற உலகங்கள் ஆகிய அனைத்தும் அந்த இறைவனிலிருந்தே தோன்றின.

பல்வேறு தேவர்கள், சாத்யர்கள், மனிதர்கள், மிருகங்கள், பறவைகள், உள்மூச்சு, வெளிமூச்சு, நெல், பார்லி, தவம், சிரத்தை, உண்மை, சுயக்கட்டுப்பாடு, கடமைகள் எல்லாம் அந்த இறைவனிலிருந்தே தோன்றின.

அந்த இறைவனிடத்திலிருந்தே ஏழு புலன்கள், ஏழு சுடர்கள், ஏழு எரிபொருட்கள், ஏழு ஆஹுதிகள் எல்லாம் தோன்றின. இதயக்குகையில் பிராணன் செயல்படுகின்ற உயிர்னங்கள் வாழ்கின்ற ஏழு உலகங்களும் அவரிடமிருந்தே தோன்றின. அனைத்தையும் ஏழு ஏழாக அவரே படைத்தார்.

அந்த இறைவனிடமிருந்தே கடல்கள், மலைகள் எல்லாம் தோன்றின. பல்வேறு நதிகளும் அவரிடமிருந்தே பெருகி ஓடுகின்றன. செடிகொடிகள் அனைத்தும் அவரிடமிருந்தே உண்டாயின. இவ்வாறு அனைத்து இயற்கையாலும் சூழப்பட்டதாக உள்ளது ஆன்மா.

இனியவனே! இறைவந்தான் இந்த அனைத்துமாக இருக்கிறார். கர்மங்கள், தவம் என்று மட்டுமல்ல அழிவற்ற மேலான பிரம்மமாக இருப்பதும் அவரே. இதயக்குகையில் உறைகின்ற அவரை அறிபவன் அறியாமைத் தளையிலிருந்து இப்போதே விடுபடுகிறான்.

- முண்டக உபநிஷத்து


படியுங்கள் ---> ப்ளாக் ஹோல் ரகசியம்


Saturday, September 10, 2011

நாம் தெய்வீகமானவர்கள்!
விதி என்று எதுவும் கிடையது. நமது வாழ்க்கை நமது முன்வினைப் பயனின், நமது கர்மத்தின் விளைவு இவற்றால் உண்டான பலனே விதி எனப்படுகிறது. இவ்வாறு நாமே நமது கர்மத்தை உருவாக்கி இருக்கிறோம் என்றால், அதை அழிக்கவும் நம்மால் முடியும் என்பதே உண்மை.

'வண்ணத்துப் புழு தன் உடலிலிருந்து சுரக்கின்ற பொருளால் தன்னைச் சுற்றித் தானே கூடமைத்துக் கொண்டு அதில் தானே நிறைப்படுகிறது. அங்கே கிடந்தவாறு அது அழலாம், கதறலாம், ஓலமிடலாம். ஆனால் அதன் உதவிக்கு யாரும் வரமாட்டார்கள். இறுதியில் அதுவே ஞானம் பெறுகிறது, அழகிய வண்ணத்துப் பூச்சியாக வெளிவருகிறது.

அதுபோலத்தான் நமது தளைகளைப் பொறுத்தவரையிலும் யுக யுகங்களாக நாமும் பிறப்பு இறப்பு என்று சுழன்று வருகிறோம். இப்போது துன்பத்தை உணர்கிறோம். நாம் கட்டுண்டிருப்பதை எண்ணி அழுது புரள்கிறோம். ஆனால் அழுவதாலும் புரள்வதாலும் எந்தப் பயனும் இல்லை. இந்தத் தளைகளை உடைப்பதில் நாம் முனைந்து செயல்பட வேண்டும்.

'எல்லா தளைகளுக்கும் முக்கியக் காரணம் அறியாமை, மனிதன் இயல்பிலேயே தூயவன், முற்றிலும் புனிதமானவன். ஒவ்வொரு மனிதனும் தெய்வீகமானவன். நீ காண்கின்ற ஒவ்வொரு மனிதனும் இயல்பிலேயே கடவுள் தான்.

இந்த இயல்பு அறியாமையால் மறைக்கப்பட்டிருக்கிறது. இந்த அறியாமையே நம்மைக் கட்டுண்டவர்களாக ஆக்கியிருக்கிறது. எல்லா துன்பங்களுக்கும் அறியாமையே காரணம். அறிவு உலகை நல்லதாக்குகிறது. அறிவு எல்லா துன்பங்களையும் ஒழிக்கிறது, அறிவு நம்மைச் சுதந்திரர்களாக்குகிறது. எந்த அறிவு? வேதியலா? இயற்பியலா? வான இயலா? பூமியியலா?

அவை எல்லாம் நமக்குச் சிறிது உதவுகின்றன, மிகச்சிறுது உதவுகின்றன. ஆனால் முக்கியமான அறிவு என்பது உங்கள் இயல்பே, "உன்னை அறிந்துகொள்," நீங்கள் உண்மையில் யார், உங்கள் உண்மையான இயல்பு எது என்பதை அறிந்து கொள்ள வேண்டும். அந்த எல்லையற்ற இயல்பை உங்களுக்குள் உணர வேண்டும். அப்போது தளைகள் எல்லாம் தானே நொறுங்கிப்போகும்!

நாம் தெய்வீகமானவர்கள், எப்படி? ஏன் தெய்வீகமானவர்கள்?

நாம் மூலசக்தியும் மகா சக்தியுமான தெய்வத்திடமிருந்து தோன்றியவர்கள். தெய்வம் என்னும் மாபெரும் ஜோதியிலிர்ந்து தோன்றிய சுடர்கள் நாம். பாலில் செய்த பண்டங்கள் அனைத்திலும் பாலின் தன்மை இருப்பது போல தெய்வத்திலிருந்து தோன்றிய நம்மிடமும் தெய்வீகம் உள்ளது. நாம் தெய்வீகமானவர்கள்.

நாம் மட்டுமல்ல, உயிரினங்கள் மட்டுமல்ல; மகாசக்தியிடமிருந்து தோன்றியதான இந்தப் படைப்பிலுள்ள ஒவ்வொன்றும், மரமும், செடியும், மண்ணும் விண்ணும், கடலும் மலையும் எல்லாம் தெய்வீகமே!

- ஸ்வாமி விவேகானந்தர்


.

Friday, September 9, 2011

ஓனம் பண்டிகை வாழ்த்துக்கள்!நண்பர்கள் அனைவருக்கும் பொன் ஒனம் தினத்தின் நல்வாழ்த்துக்கள்!Thursday, September 8, 2011

முத்தூட் பைனான்ஸ் - கண்டிப்பாக பொட்டு வைக்கக் கூடாது!
விரிவாகப் படிக்க க்ளிக்கவும் ---> ஹிந்தவா கேரளம் செய்தி!


.

மீண்டும் குண்டுவெடிப்பு!
தீவிரவாதிகள் அப்பாவி மக்களை கொலை செய்து என்ன தான் சாதிக்கப் போகிறார்களோ தெரியவில்லை. இந்த காங்கிரஸ் அரசும் அதன் உளவுத்துரையும் அது சார்ந்த மந்திரிகளும் என்ன தான் செய்து கொண்டிருக்கிறார்களோ தெரியாது. தீவிரவாதிகளை ஒடுக்கும் விஷயத்தை மதசாயத்தோடு காங்கிரஸ் அனுகுவதாலேயே இவர்களால் அடிக்கடி நடக்கும் குண்டு வெடிப்புக்களை தடுக்க முடியவில்லை என்று நன்றாகத் தெரிகிறது!

சரி குண்டு வெடித்தாகி விட்டது. சில அப்பாவிகளும் இறந்துவிட்டார்கள். அடுத்தது சோனியா அரசு என்ன செய்யும்?

ஒரு கற்பனை!


பிரதமர்: இது துரதிஷ்டவசமானது. கோழைத்தனமானது. எங்களை இப்படி எல்லாம் மிரட்டி விட வேண்டும் என எண்ணுபவர்களின் சிந்தனை பலிக்காது. எத்தனை முறை குண்டு வெடித்தாலும் நாங்கள் இதுக்கெல்லாம் பயப்பட மாட்டோம்!

சோனியா: இப்படி மனிதாபிமானம் அற்ற செயலைச் செய்பவர்களை வன்மையாக தண்டிக்க வேண்டும். குண்டு வெடிப்பில் இறந்தவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ராகுல்: முஸ்லீம் அமைப்புகள் தீவிரவாத செயல்கள் செய்வதுகூட பரவாயில்லை. ஆனால் ஹிந்து அமைப்புகளின் எழுச்சிதான் கவலை கொள்ளச் செய்கிறது.

ப.சிதம்பரம்: இது அந்நிய நாட்டு சக்திகளின் வேலையாக இருக்கலாம். உளவுத்துறை எச்சரிக்கத் தவறிவிட்டது. ஆனால் உளவுத்துறையின் தவறு அல்ல. ஏனென்றால் உளவுத்துறைக்கே தெரியாமல் குண்டு வைத்து விட்டார்கள். இது போன்ற குண்டு வெடிப்பை நடக்கவிடாமல் கண்காணிப்பது அந்த மாநில முதல்வரின் வேலை. குண்டு வெடிப்பு நடந்துமுடிந்து விட்டபடியால் இந்தியா முழுவது அனைத்து பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் பொதுமக்களை பஸ் ரயில் பிடிக்கவிடாமல் தொடர்ந்து சோதனை போட்டு படுத்துமாறு உத்தரவு பிறப்பித்து இருக்கிறோம். அடுத்த குண்டு வெடிப்பிற்கு முன்பாக சோதனையை நிறுத்தி விடுவோம்! தீவிரவாதிகள் என்ன செய்கிறார்கள் என்று என் ஒருவனால் மட்டுமே பார்த்துக்கொண்டிருக்க முடியாது. ஆதலால் மக்கள் தான் தங்களைத் தாங்களே பார்த்துக்கொள்ள வேண்டும்.

காங்கிரஸ் கோஷ்டிகள்: ஆர் எஸ் எஸிர்க்கு தொடர்பு இருக்கிறதா என பார்க்க விசாரிக்க வேண்டும். 

அத்வானி: தீவிரவாதத்தை தடுக்க காங்கிரஸ் அரசு தவறிவிட்டது.

மக்கள்: போங்கடா பொசக்கெட்ட பயலுகலா... குண்டு வெக்கிறவன் இந்த அரசியல் வாதிங்க வீடா பாத்து வெச்சாதாண்டா இவனுகளுக்கு பயம் வரும். அதுவரைக்கும் இப்டிதாண்டா பேசிக்கிட்டே இருப்பானுவ!

தீவிர வாதிகள்: அடுத்த குண்டுவெடிப்பு அட்டவனை:

செப்டம்பர் 25: ஹைதராபாத் 

அக்டோபர் 10 : வாரனாசி....

(திட்டமிட்டபடி மீண்டும் குண்டு வெடிக்கிறது...மீண்டும் அதே அறிக்கைகள்...அடப்போங்கய்யா..)

....

Saturday, September 3, 2011

போலி செக்யூலரிசம் - நம் பண்டிகைகளுக்கு ஆபத்து?
ஹிந்தவா கேரளம் செய்தி!

Fatwa against Onam celeberations in Schools
02/09/2011 14:54:57 HK

Kozhikode:Pookalam (Floral carpets) competitions are organised across the state from Educational institutions to Government offices as part of Onam celeberations. Jihadi groups in Kerala since last several years are waging a covert war against Onam festival, for them it is too much to digest that why the whole state celeberate Onam.


In Calicut girls Higher Secondary school, following threatening and opposition from Three teachers School authorities were forced to cancel Pookalam competition. The opposition came from three Jihadi teachers , According to them such competitions are against their Islamic law.


As the news leaked, DYFI cadres in the area raised to the occassion ( HK - Had always criticized DYFI for it’s pseudosecularism, but congratulate them in this case) and protested inside School campus against the School’s decision to succumb to Jihadi pressure. Following protests, Staff council decided to conduct the competition today.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், எந்த தொலைக்காட்சியும் இது போன்ற ஹிந்து எதிர்ப்பு விஷயங்களை செய்திகளில் சொல்வதில்லை. நாளிதழ்கள் இது போல் ஹிந்துக்களுக்கு எதிரான செயல்களை செய்திகளாக்கி வெளிப்படுத்துவதில்லை.

நான் மதுரையில் அரசுப்பள்ளிகளான சேதுபதி மற்றும் மதுரைக்கல்லூரி மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கையில் தினசரி காலை 'ப்ரேயர் அஸெம்ப்ளியில்' சரஸ்வதி வணக்கத்திற்கு பாடல் பாடுவார்கள். இப்போது அதெல்லாம் நடக்கிறதா என்று தெரியவில்லை! தெரிந்தவர்கள் கூறுங்கள்!

பாரதத்தில் ஹிந்துக்கள் பெரும்பான்மை மக்களாம்! வெட்கக்கேடு!

.

Friday, September 2, 2011

கீதோபதேசம் - நீ யோகியாக இரு!


அர்ஜுனன் கேட்கிறான்:

ஹே கிருஷ்ணா! யோகத்தில் நம்பிக்கை உடையவன், நிலை பெறாமல் அலையும் மனம் காரணமாக முயற்சி குறைவினால் யோகத்தில் பூரண நிலையை எட்டாவிடில் அவன் என்ன கதியை அடைகிறான்?

கண்ணா! உறுதியான நிலை இல்லாமல் பிரம்ம மார்க்கத்திலிருந்து நழுவியவன், இரண்டு வழிகளிலும் வீழ்ச்சியடைந்து சிதறிய மேகத்தைப் போல் அழிந்து போகிறான் அல்லவா?

இந்த சந்தேகத்தை நீ முற்றிலும் தீர்த்து வைக்க வேண்டும். உன்னைத் தவிர வேறு யாராலும் இந்த சந்தேகத்தைத் தீர்க்க முடியாது.


பகவான் சொல்கிறார்:-

அர்ஜுனா! அவனுக்கு இவ்வுலகிலும் மறு உலகிலும் அழிவு கிடையாது.  'உண்மையில் நற்காரியங்களைச் செய்யும் எவரும் எப்பொழுதும் துன்பம் அடைய மாட்டார்கள்.'

பார்த்தா! யோகத்திலிருந்து வீழ்ச்சி அடைந்த ஒருவன் நல்வினை செய்தவர்களுடைய உலகங்களை அடைந்து அங்கு நீண்ட காலம் இருந்து பிறகு தரும நெறியுள்ள ஆன்மாக்களின் தூய்மையும், செல்வமும் நிறைந்த ஒரு குடும்பத்தில் மறுபடியும் பிறப்பான்.

அல்லது அவன் ஞானவானாகிய யோகி ஒருவரின் வீட்டில் பிறப்பான், உண்மையில் இவ்வுலகில் இம்மாதிரியான ஒரு பிறவி கிடைப்பது மிகவும் கடினமானது.

அர்ஜுனா! அவனுக்கு முற்பிறவியில் பெற்ற ஞானத்தோடு தொடர்பு ஏற்படுவதால் பக்குவநிலை அடைய இப்பொழுது வெகு தீவிரமாக முயற்சி செய்கிறான்.

முற்பிறவியில் அவன் செய்த பயிற்சியின் காரணமாக, அவன் தன்னை அறியாமலேயே அதிக தீவிரத்துடன் பயிற்சியை மேற்கொள்ளுகிறான். யோகத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற விருப்பம் மட்டுமே இருந்தாலும், வேதம் சொல்லும் கர்ம பலனைக் கடந்தவன்
ஆகிறான்.

பார்த்தா! உறுதியுடன் விடாமுயற்சி செய்துவரும் யோகி, பாபங்கள் நீங்கித்
தூய்மை பெற்று, ஒவ்வொரு பிறவியிலும், படிப்படியாகப் ப் அக்குவம் அடைந்து மேலான இலட்சியத்தை அடைகிறான்.

தவங்கள் புரிந்தவனை விட யோகியே மேலானவன், கல்வி ஞானம் உடையவர்களை விட அவன் மேலானவனாகக் கருதப்படுகிறான்.

செயலில் ஈடுபடுபவர்களை விடவும் யோகி மேலானவன்.

எனவே அர்ஜுனா! நீ ஒரு யோகியாக இரு!

எல்லா யோகிகளுக்குள்ளும், எவன் ஒருவன் முழு நம்பிக்கையுடன் என்னிடம் முழு மனத்தையும் வைத்து, என்னிடமே லெயித்து என்னை வழிபடுகிறானோ, அவனையே நான் மிகச் சிறந்த யோகிகாகக் கருதுகிறேன்.

- பகவான் ஸ்ரீ க்ருஷ்ணர்.


.