Sunday, December 30, 2012

கருக் முருக் நொறுக்ஸ்!


அஞ்சலி!
கொடூரமாக கொல்லப்பட்ட இந்தப் பெண்ணுக்கு நடந்த கொடுமை போல வேறு யாருக்கும் இனி நடக்காமல் இருக்க வேண்டும். காவல் துறையும் சட்டமும் அதற்கான கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மனிதர்கள் உருவில் கொடிய மிருகங்கள் நடமாடும் உலகில் அப்பாவிப் பெண்கள் சமூகத்தின் மீது பழி போடாமல் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியதன் அவசியத்தையும் இந்நிகழ்ச்சி உணர்த்துகிறது.

டெல்லி வாழ் நண்பர் மூலமாக ஒரு விஷயம் கேள்விப்பட நேர்ந்தது. அதாவது டெல்லி மாநகரக்காவல் துறை முழுக்க முழுக்க 'உள்துறை அமைச்சரின்' கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது என்றார். அதனால் முதல்வர் நேரடியாக தலையிட்டால் கூட அமைச்சரே கேட்கவில்லை இவருக்கென்ன வேலை என்று காவல்துறை மேலதிகாரிகள் மெத்தனமாக இருக்கக்கூடும் என்றும் தெரிவித்தார்.

ஒரு நாட்டின் தலைநகரம், அத்தனை உயர் மட்ட ஆட்சியாளர்களும் குடியிருக்கும் பகுதியில் இந்தளவு அட்டூழியம் நடக்கிறது என்றால் மேல்மட்டத்திலிருந்தே அவைகள் வெளிக்கு வெளி தெரியாமல் நடந்து வருகிறது என்றே தோன்றுகிறது. அதனால் தான் 'இவர்களா நம்மைக் கேட்கப் போகிறார்கள்?' என்று சமூக விரோதிகள் அத்தகைய சூழலை தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்றே தோன்றுகிறது. அதைப் பார்த்து சில ஒழுக்கம் கெட்ட மிருகங்கள் நம்மளும் இதே போல செய்யலாமே என்று கொடூரங்களை நிகழ்த்தி விடுகிறார்கள் போல!.

மிகக்கடுமையான கண்காணிப்பு மற்றும் காவல்துறை பாதுகாப்பும் டெல்லி மட்டுமல்ல நாட்டின் எல்லா பகுதிகளுக்கும் தேவையாகிறது.

இது ஒரு புறம் இருக்க, ஓரிரு தினங்களுக்கு முன்பாக கனிமொழி சுப்பையா என்பவனின் பாலியல் கொலையை கண்டித்து ஒரு தெரு முனைக் கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்ததை தொலைக்காட்சியில் காட்டினார்கள்.

இது செய்தி:
"தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் அருகேயுள்ள கிளாக்குளத்தைச் சேர்ந்த சவுந்திரபாண்டியன் மகள் புனிதா (13). பள்ளி சென்றுவிட்டு வீடு திரும்பும் வழியில் பாலியல் பலாத்கார செய்து படுகொலை செய்யப்பட்டார். இது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மணியாச்சி அருகேயுள்ள பாறைகுட்டத்தை சேர்ந்த சின்னத்துரை மகன் சுப்பையா(36) என்பவரை கைது செய்தனர்."
அதே நேரம் இந்த வார நக்கீரனில் (25-12-2012) பாலியல் கொடுமை செய்த பாதிரியார் பற்றிய செய்தி வந்திருந்தது. பெண்களுக்கெதிரான பாலியல் கொடுமைகள் பற்றிப் பேசிய எந்த அரசியல் தலைவரும், தொலைக்காட்சி மீடியாக்களும் இந்த விஷயத்தை கையிலெடுத்துப் பேசவில்லை.

நக்கீரனில் வந்திருந்த விபரங்களில் சில...

கும்பகோனம் முத்துப்பிள்ளை மண்டபத்தில் இருக்கும் இருதய ஆண்டவர் செவிலியர் கல்லூரியின் இயக்குநரும் பாதிரியாருமான மரியபிரான்சிஸை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று மானவிகள் நடத்திய போராட்டத்திற்கு முன்நின்றவர் மாணவி திருத்துறைப்பூண்டி ராஜலட்சுமி. அந்த ராஜலட்சுமி தான் "என் மரணத்திற்குப் பிறகாவது அந்த ஆபாச பாதிரியாரிடமிருந்து மாணவிகளுக்கு நீதி கிடைக்கட்டும்" என்று உருக்கமான கடிதம் எழுதி வைத்து விட்டுத் தூக்கிட்டு தன் உயிரை மாய்த்துக் கொண்டார்.


"போன பொங்கலுக்கு லீவு விடாமல் மதப்பிரச்சாரத்திற்காக வேளாங்கண்ணிக்கு அழைத்துப் போனார்கள். அங்கே பாதர் மரியபிரான்ஸிஸ் பாக்கெட் தண்ணீரை மார்பில் பீச்சியடித்துவிட்டு 'ரொம்ப புத்துணர்ச்சியா இருக்கா?" என்று ரெட்டை அர்த்தத்தில் கிண்டலடித்தார்....."

"...திருமணத்திற்கு முன்னால் செக்ஸ் வைத்துக் கொண்ட மாணவிகள் எல்லாம் கையைத் தூக்குங்கள்' என்று ப்ரேயரில் பகிரங்கமாகக் கேட்டு எங்களைத் தலை குனிய வைத்தவர் அவர்"...

இப்படி போகிறது அந்தச் செய்தி. பாலியல் வன்கொடுமை பற்றி பரபரப்பாக அனைவரும் விவாதங்கள் செய்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில், ஒரு பாதிரியார் மரியபிரான்ஸிஸ் என்பவனின் பாலியல் வன்முறை காரணமாக ஒரு பெண் தற்கொலை செய்து கொண்ட  செய்தி பற்றி ஏன் யாரும் விவாதிக்கவில்லை எனத் தெரியவில்லை. பாதிரியாகள் செய்தால் அது பாலியல் வன்கொடுமை வரிசையில் வராதா அல்லது அப்படி ஒரு சம்பவத்தால் அவமானப்பட்ட பெண் தானே தற்கொலை செய்து கொண்டால் அது பாலியல் வன்கொடுமை ஆகாதா? சுப்பையா பற்றி பேசத்தெரிந்த கனிமொழிக்கு ஏன் பாதிரியார் மரியபிரான்ஸிஸ் பற்றி பேசத்தெரியவில்லை?

செலக்ட்டிவ் அம்னீஷியா?

தொடர்புடைய பழைய செய்தி!

பாதிரியார்கள் பற்றிய சம்பவமெல்லாம் தினக்கதை தானே..ஸ்பெஷலாக ஒன்றுமில்லையே என்று விட்டு விட்டார்கள் போல.

இனி இவ்வார துக்ளக்கில் திரு.சுப்பு எழுதும் திராவிட மாயை பகுதியிலிருந்து சில சுவாரஸ்யங்களைப் பார்ப்போம்:


திரு.சுப்பு

"பிரமணர்களுக்குத் தமிழ் மீது மரியாதை கிடையாது. தமிழர் மீது துவேஷம் உண்டு" என்று பிரசாரம் செய்தார் ஈ.வெ.ரா." ஆனால்...

"காஞ்சிபுரத்தில் இருந்த தன்னுடைய மிகப்பெரிய வீட்டை பெண்களுக்கான பள்ளிக்கூடம் நடத்துவதற்காக நன்கொடையாகக் கொடுத்தார் ஒரு பிராமணர். நூறாண்டுகளுக்குப் பிறகு இப்போது அந்த எஸ்.எஸ்.கே.வி. பள்ளியில் 7000 மாணவ, மாணவிகள் படிக்கிறார்கள்."

"தமிழ் இலக்கண இலக்கியங்களை மனப்பாடமாக வைத்துக் கொள்ளும் மரபு தமிழில் இருந்து வந்துள்ளது. கோபாலய்யர் இந்த மரபின் இறுதிக் கண்ணி என்று துணிந்து கூறலாம்.. 'பிராமணருக்குத் தமிழபிமானம் கிடையாது' என்ற ஈ.வெ.ரா. கட்சியின் வாதங்களை தவிடு பொடியாக்க கோபாலய்யரின் உழைப்பால் உருவான 'தமிழ் இலக்கணப் பேரகராதி' யின் பதினேழு தொகுதிகளே போதும். தமிழ் இலக்கிய வரலாற்றில் இந்த நூல் ஒரு சாதனையாகக் கருதப்படுகிறது."

- (02.01.2013) துக்ளகில் திராவிட மாயை; திரு. சுப்புகொஞ்சம் வரலாறு:

1972 - ல் எம் ஜி ஆரின் பேட்டியை தினத்தந்தியின் வரலாற்றுச் சுவடுகளில் படிக்க சுவாரஸ்யமாக இருந்தது.

நிருபர்: தி.மு.க. மந்திரிசபை கவிழ்ந்து விடுமா?

எம்.ஜி.ஆர்: கவிழ்ந்தால் ஆச்சரியம் இல்லை.

நிருபர்: தமிழ்நாட்டில் இப்போது நிலைமை எவ்வாறு உள்ளது?

எம்.ஜி.ஆர்: என் கட்சிக்காரர்கள் தாக்கப்படுகிறார்கள். பீதி நிலைமை நீடிக்கிறது.

நிருபர்: தமிழ் நாட்டில் உங்களுக்கு எவ்வளவு ஆதரவு?

எம்.ஜி.ஆர்: 1000 க்கு 999 பேர் என் பக்கம். ஒருவர் தி.மு.க பக்கம்.

நிருபர்: இவ்வளவு பலம் பொருந்திய நீங்கள் ஏன் அவர்கள் (தி.மு.க) தாக்குவதாகப் புகார் செய்கிறீர்கள்?

எம்.ஜி.ஆர்: அந்த 1000 பேரில் ஒருவர், ஆட்களுடன் வந்து தாக்குகிறார்கள்.


Saturday, December 29, 2012

'கனபாடிகள்' எனப்படுபவர் யார்?


எமதர்மனிடம் சென்ற நசிகேதன் கதை பற்றி ஏற்கனவே நாம் பார்த்திருக்கிறோம். எமதர்மனால் காத்து நிற்க வேண்டி வந்ததால் நசிகேதனுக்கு மூன்று வரங்களை எமதர்மன் வழங்கினான். அப்போது இரண்டாவது வரத்தைக் கேட்கலானான் நசிகேதன். "எமதர்மனே! சொர்கத்தில் வாழ்பவர்கள் தேவத் தன்மையைப் பெறுகின்றனர். அங்கே அழைத்துச் செல்லக்கூடிய யாகத்தைப் பற்றி உனக்குத் தெரியும். கவனமுடன் புரிந்துகொண்டு அதன் படி நடந்து சொர்கத்தை அடைய விரும்பும் எனக்கு அத்தகைய யாகத்தைப் பற்றி சொல்வாயாக. இதனை எனது இரண்டாவது வரமாகக் கேட்கிறேன்" என்றான்.

எமதர்மனும் அதை ஏற்றுக்கொண்டு ஆதிகாலத்தில் நிகழ்த்தப்பட்ட அத்தகைய யாகங்களை விளக்கிச் சொன்னான். நசிகேதனும் அதனைக் கேட்டு புரிந்து கொண்டான். தான் கேட்டதை அப்படியே திருப்பிச் சொல்லி தெளிவாகக் கற்றுக் கொண்டான். நசிகேதனின் கவனமும் புரிந்துகொள்ளும் தன்மையும் கண்ட எமதர்மன் மிகவும் மகிழ்ந்து போனான். வண்ணமயமான தனது மாலை ஒன்றை பரிசாகக் கொடுத்தான். பின் கூறினான் "நசிகேதா! சொர்கத்திற்கு அழைத்துச் செல்கின்ற யாகத்தைப் பற்றி நீ விரும்பிய படியே எடுத்துக் கூறிவிட்டேன். மக்கள் அந்த யாகத்தை இனி உன் பெயராலேயே அழைப்பார்கள்" என்றான்.

இங்கே கற்பித்தல் மற்றும் கற்றல் பற்றிய ஒரு விஷயத்தை நாம் அவசியம் கவனிக்க வேண்டும். நசிகேதன் எமதர்மன் சொல்லிக் கொடுத்த யாக வித்யைகளை அப்படியே அவர் சொல்லிக் கொடுத்தபடியே ஒன்று கூட மறக்காமல் அக்ஷரம் பிசகாமல் திருப்பிச் சொல்லி தான் புரிந்து கொண்டதன் ஆழத்தை வெளிப்படுத்தினான். அவ்விடத்தில் எமதர்மன் ஒரு குருவாகவும் நசிகேதன் ஒரு சிஷ்யனகவும் மாறியிருந்தார்கள். தகுதிவாய்ந்த சீடனிடம் குருவிற்கும் ஏற்படுகின்ற உணர்ச்சியாகவே எமதர்மன் நசிகேதனின் பெயராலேயே அந்த யாகம் நடைபெறட்டும் என்ற வரத்தையும் வழங்கினான்.

நம் பழங்கால கற்றல் முறையும் இந்த நிகழ்ச்சியின் மூலம் வெளிப்படுகிறது. ஏறக்குறைய வெள்ளையர்கள் தங்களது ஆங்கில வழிக்கல்வியை பாரதத்தில் தினிப்பதற்கு முன்பாக குருகுலக் கல்வி இந்த முறை தான் இருந்தது. அதாவது சொல்லிக்கொடுக்கப்படும் பாடத்தை மனதில் வாங்கி அதனை மனனம் செய்து அப்படியே பிசகின்றி திருப்பிச் சொல்லி மனதில் மதியவைக்கும் முறை. இம்முறையில் பாடம் கற்றால் அப்பாடம் இறக்கும் வரை மறக்காது.

சிறு வயதில் பள்ளிக்கூடத்தில் வாய்ப்பாடு படித்திருப்போம். ஓரெண்ட் ரெண்டு, ஈரெண்டு நாலு, முவி ரெண்டு ஆறு என்று சொல்லிச் சொல்லி படிக்கும் வாய்ப்பாடு. அவ்வழி கற்ற வாய்ப்பாடு வாழ்நாள் முழுதும் நினைவிருக்கும். மேலை நாடுகளுக்குச் செல்லும் இந்தியர்கள் அங்கே சிலர் கால்குலேட்டர் கொண்டு கணக்குப் போட்டு முடிக்கும் முன்னர் மனக்கணக்கில் அதன் விடையைச் சொல்லுவதைப் பார்த்து அந்நாட்டவர் ஆச்சரியப்படுவதுண்டு என்று கேள்விப்படுகிறோம். இவ்வாறு மனனம் செய்யும் கல்விமுறை வேகமாக புரிந்து கொள்ளுதலுக்கு உதவுகிறது. 

இன்னொரு விஷயத்தை முக்கியமாக கவனத்தில் கொள்க. மனனம் செய்வது என்றால் வெறும் உதவாத பாடத்தை பத்தி பத்தியாக மனனம் செய்யும் கல்வியாக அக்காலக் கல்வி இருந்ததில்லை. சூத்திரங்களை மனப்பாடம் செய்தல் தான் மூலக்கல்வி. அவற்றை மனப்பாடம் செய்துவ்ட்டால் அச்சூத்திரங்களை மனதில் கொண்டு பிற வேலைகளை மிகவும் எளிமையாக முடித்து விடலாம். அது தான் அதன் சூக்ஷமம். நாம் கற்ற வாய்ப்பாடு என்பது கணிதம் போடுவதற்கான அடிப்படை சூத்திரம். அது மனதில் ஆழப்பதிந்திருந்தால் எந்தகணக்கையும் எளிதாக மனக்கணக்காவே போட்டுவிடலாம். இக்கால மாணவர்கள் படிப்பது போல குப்பைகளானாலும் மணப்பாடம் செய்தால் மதிப்பெண் என்கிற முறையாக அக்காலத்தில் இல்லை. சூத்திரங்களை மனப்பாடம் செய்தலே முக்கியத்துவம் பெற்றிருந்தது.

வேதங்களையும் அப்படிப்பட்ட மனனம் செய்தல் முறையிலேயே கற்றும் கற்பித்தும் வந்திருக்கிறார்கள். காரணம் வேதங்கள் ஓதுகையில் சப்தங்களின் அளவு மிக முக்கியமானதாகும். அவை இம்மி பிசகாமல் அக்ஷரசுத்தம் மாறாமல் சொல்லப்பட வேண்டியவை என்பதலால் அதை குரு வாயால் கூறக்கேட்டு அதனை மாணவர்கள் அவ்வழியே திருப்பிச் சொல்லி மனனம் செய்தார்கள். இன்றைக்கும் வேதம் ஓதும் பயில்விப்பு அப்படியே நடந்து வருகிறது.

வேதம் ஓதும் கடினமான பல வழிமுறைகள் பற்றி நம் பெரியோர்கள் மேலும் இப்படி விளக்குகிறார்கள். பத பாடம், கிரம பாடம் என்று இரண்டு வழிகள் உள்ளது. அதன் பின்னர் மனனம் செய்து ஒப்பிப்பதில் எட்டு விதமான வழிமுறைகள் உள்ளது என்றும் கூறுகிறார்கள். ஜடை, மாலை, சிகை, ரேகை, த்வஜம், தண்டம், ரதம், கனம் என்று இது போன்ற எட்டு பெயர்களில் அவை அழைக்கப்படும். ஜடை என்ற உடன் நமக்கு கூந்தலை ஒன்றோடொன்று இணைத்து பிரிக்க முடியாமல் பிண்ணுதல் ஞாபகம் வரலாம். மாலையும் அப்படியே. ஓதப்படும் சொற்களை பல வார்த்தைக் கோர்வைகளால் ஆக்கி பிசகில்லாமல் ஒப்பித்தல். இது ஒரு கடினமான ஒப்புவித்தல் முறையாகும். அதாவது முதல் வார்த்தையுடன் இரண்டாவது வார்த்தை, இரண்டாவது வார்த்தையுடன் மூன்றாவது சேர்த்துப் பிரித்து ஒப்பித்தல்.

உதாரணமாக, "அம்பிகையே மகாசக்தி அகிலாண்ட நாயகியே" என்பது மந்திரம் என வைத்துக் கொள்வோம், அதனை "அம்பிகையே அம்பிகையே மகா மகா அம்பிகையே சக்தி.." என்று தொடர்தல் அல்லது "அம்பிகையே மகாசக்தி, சக்தி சக்தி அம்பிகையே, மகா மகா சக்தி சக்தி அகிலாண்ட அம்பிகையே, நாயகியே நாயகியே அம்பிகையே மகா சக்தி.." "அகிலாண்ட அகிலாண்ட அகிலம் ஆண்ட அகிலம் ஆண்ட அகிலாண்ட மகாசக்தி" என்று இப்படி வார்த்தைகளை வெவ்வேறு கோர்வைகளாக பாடிப்பாடி மனப்பாடம் செய்தால் அந்த வார்த்தைகளும் ஒலியும் உச்சரிப்புக்களும் நரம்பு நாளங்கள் அனைத்திலும் பதிவாகி காலம் முழுதும் ஞாபகம் இருக்கும். இதில் கனம் என்கிற வகையில் மனனம் செய்வதில் உள்ள சொற்கோர்வைகள் மிகவும் சிக்கலானவையாக இருக்கும் என்றும் கூறுவார்கள். இதை நன்கு கற்றறிந்து, இவ்வழியில் ஓதுவதில் வித்தகர்களாக விளங்குபவர்களையே, கனம் பாடம் அறிந்தவர்கள் - அதாவது "கனபாடிகள்" என்று பெரியோர்கள் அழைக்கிறார்கள்.

ஆக இவ்வாறு கற்று கற்றதை அப்படியே க்ரஹித்து ஒப்பித்தும் நசிகேதன் எமதர்மனின் ஆசியைப் பெறுகிறான். ஆக நசிகேதன் இவ்வழியான பாரத மண்ணின் பழம்பெரும் அறிவான கற்கும் வித்தையை நமக்கு நினைவூட்டுகிறான்.

Saturday, December 15, 2012

இதிகாச நாயகன் குறித்து பால கௌதமன் தொலைக்காட்சி பேட்டி!

இந்த நாட்டின் இதிகாச நாயகனுக்கு நினைவுச்சின்னம் வேண்டுமா அல்லது இடையில் நட்டைக் கொள்ளையடிக்க வந்த பாபருக்கு நினைவுச் சின்னம் வேண்டுமா?

ஹிந்து எழுச்சிநாளில் திரு பால கௌதமன் கேப்டன் டி வியில் உரையாற்றிய காட்சிகள்!கோவிலை இடித்து மசூதி கட்ட அவர்கள் மார்கத்தில் இடம் கிடையாதாம்..! பேசுகிறார்கள்..!


தமிழ் நாட்டில் ரங்கநாதர் கோவிலும் மீனாக்ஷி அம்மன் கோவிலும் எத்தனை நாள் பூஜை இல்லாமல் முஸ்லீம்களால் உடைக்கப்பட்டது என்பதற்கு வரலாறு இருக்கு...!


கொசுறு:

டிசம்பர் - 1025. பதினேழாவது முறையாக புழுதி பறக்க ராஜஸ்தான் பாலைவனத்தைக் கடந்து குஜராத்தின் தென்கோடியில் உள்ள சோமநாத் கோவிலுக்கு வருகிறான் கஜினி முகமது.

கர்பகிரகத்தில் காட்சி அளிக்கும் சிவலிங்கம் அந்திரத்தில் மிதக்கும் படி அமைத்திருந்தது ஓர் அதிசயம்! அந்தக் கோவிலின் தனிச்சிறப்பு!

கோவிலை கொள்ளையடிக்க முயன்ற கஜினியை நோக்கி அவனே எதிர்பார்த்திராத அளவில் பல்லாயிரக்கணக்கான ஊர் மக்கள், கோயிலில் பணிபுரிபவர்கள், அர்ச்சகர்கள் திரண்டெழுந்து கூவிக்கொண்டும், அழுது கொண்டும் கதறிக் கொண்டும் ஓடி வந்து கையில் கிடைத்ததையெல்லாம் எடுத்துக்கொண்டு கஜினியின் படையை எதிர்த்துப் போரிட்டார்கள்.

ஆனால், சுமார் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்டவர்களைக் கொன்று பின் கோவிலுக்குள் இருந்த ஆபரனம் , விக்கிரகம் என்று ஒன்றுவிடாமல் மூட்டை கட்டினர் கஜினியின் படைகள். பின் கஜினியின் பார்வை அந்தரத்தில் மிதக்கும் சிவலிங்கத்தின் மீது விழுந்தது. பிரமித்துப் போனான்.

சிவலிங்கத்தைச் சுற்றி நாலாபுறமும் கண்களை சுழற்றிப் பார்த்தான். பின்னர் கூறினான் "பலே! சாமர்த்தியமாகத்தான் அமைத்திருக்கிறார்கள்! மேலே கூரையிலும் பக்கவாட்டிலும் உள்ள அந்தக் கற்களை அகற்றித் தள்ளுங்கள்...இது ஏதோ காந்த சக்தியின் வேலை!" என்று கஜினி ஆணையிட, வீரர்கள் உடனே செயல்பட்டனர். சுற்றிலும் கற்கள் உடைக்கப்பட்டு அகற்றப்பட்டன. சிவலிங்கம் மெள்ள மெள்ள அசைந்தது. பிறகு கீழே இறங்கி இறங்கி..'தொப்' என்று வீழ்ந்தது. தன் இரு கைகளாலும் அலாக்காக அந்த சிவலிங்கத்தைத் தூக்கி வந்து கோயிலின் முன் போட்டு உடைத்தான் முகமது கஜினி. படை வீரர்கள் 'ஹோ' வென்று ஆரவாரிக்க வானமும் சிவந்தது..!

- சோமநாதர் கோயிலில் நடந்தேறிய இத்தனை கொடூரத்தையும் விவரமாக, சற்று வருத்தத்துடன் எழுதியிருப்பவர் அல் காஸ்வினி என்னும் அரபு நாட்டுச் சரித்திர ஆராய்ச்சியாளர்.

- மதன் எழுதிய வந்தார்கள் வென்றார்கள் புத்தகத்திலிருந்து

Sunday, December 9, 2012

ஜாதிகள் ஒரு சக்கர வியூகம்!


ஒரு பத்திரிக்கை இரண்டு செய்திகள்:

*** கவுண்டர் சமுதாயத்துக்குன்னு ஒரு பெரிய பாரம்பரியமும், மரியாதையும், கலாச்சாரமும் இருக்குதுங்க. ஆனா, காதல் மற்றும் கலப்புத் திருமணத்தால் எங்க சமுதாய அடையாளம் அநியாயத்துக்கும் அழிஞ்சுபோகுது. 'கவுண்டச்சியைக் கட்டுவோம், கவுண்டனை வெட்டுவோம்' னு சூளுரையோட செயல்படுறாங்க குறிப்பிட்ட சில சமூகப் பசங்க. காதல், சாதி மறுப்புத் திருமணம்னு தடம் மாறிப் போயி சீரழிஞ்ச எங்க பொண்ணுங்களோட எண்ணிக்கை கொத்துக்கொத்தாக் கிடக்குதுங்க. எதையும் ஆதாரம் இல்லாம நான் சொல்லலை. இந்த வருஷத்தில் (2012) இதுவரை 936 கவுண்டர் சமுதாயப் பெண்கள், தலித் பையன்களைத் திருமணம் செய்து இருக்காங்க. அதில், 716 திருமணங்கள் மணமுறிவை சந்திச்சிருக்குது. 12 பொண்ணுங்க தற்கொலை செய்திருக்காங்க, 36 பெற்றோர் தற்கொலை செய்திருக்காங்க" - கொங்கு வேளாளக் கௌண்டர்கள் பேரவை அமைப்பின் மாநிலத்தலைவர் மணிகண்டன்.

*** "தமிழகத்தின் எந்தப் பகுதியிலும் பார்ப்பனரால் கலவரம் தூண்டப்படுவது இல்லை. எந்தப் பார்ப்பனரும் 'தீண்டாமைச் சுவர்' எழுப்புவது இல்லை. எல்லா இழிவுகலையும் அரங்கேற்றுபவர்கள் சாதி இந்துக்களாக வலம் வரும் பார்ப்பனர் அல்லாதோர் திருக்கூட்டமே. ஆனால், பழக்க தோஷத்தில் பெரியார் இயக்கங்கள் 'பார்ப்பன ஆதிக்கம்' என்ற பழைய பஞ்சாங்கத்தையே புரட்டுகின்றனர்". - தமிழருவி மணியன்

ஜூனியர் விகடன் - 28.11.2012

ஜாதிகள் அழிந்தால் என்ன ஆகும்? ஒரு அலசல்!
'ஜாதி முழுதாக அழிந்தாலொழிய, கிறிஸ்தவ மதமாற்றாத்துக்கு எவ்வித நம்பிக்கையும் இல்லை' - ராபர்ட் கால்டுவெல் சொன்னது!

கால்டுவெல்லின் மதமாற்ற முயற்சியும் அதன் பொருட்டு உண்டான பல புரட்டுக்கள் பற்றியும் 'உடையும் இந்தியா' புத்தகத்தில் திரு. அரவிந்தன் நீலகண்டன் அவர்கள் பல்வேறு தரவுகளுடன் விளக்கி இருக்கிறார்.

இங்கே ஒரு விஷயத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு சமூகம் என்பது விருக்ஷம், அதன் ஆணிவேர் மதம், அடிவேர்களாக மன்னோடு மன்னாக ஒட்டிப்பிடித்து உறவாடிக் கொண்டிருப்பது ஜாதிகள். மதங்கள் கூறும் தத்துவங்களை, காலச் சூழல் மற்றும் புவியியல் சார்ந்த வாழ்க்கை மற்றும் வழிபாட்டு முறையையும் உள்ளடக்கியது தான் இந்த ஜாதீய வாழ்க்கை முறை.

இந்த ஜாதிகளும் அந்த ஜாதியினருக்குள்ளே இருக்கும் சமூகக் கட்டுப்பாடுகளும், அந்த மக்களின் வாழ்க்கைச் சூழலை உடைத்து பிறர் உள்ளே வந்துவிடாத ஒரு சக்கர வியூகமாக செயல்பட்டு வருகின்றது. அப்படி இறுக்கமாக இருக்கும் தனித்தனிக் குழுக்களை உடைத்து உதிரிகள் ஆக்காமல் அவர்களை ஆளுக்கொரு மதத்திற்கு மாற்ற முடியாது என்பதை புரிந்து கொண்டான் கால்டுவெல் என்பது இங்கே தெளிவாகத் தெரிகிறது. லட்டுவை உடைத்து பூந்தியாக்கினால் தானே பலரும் பகிர்ந்து கொள்ள முடியும். அதனடிப்படையில் எழுந்தது தான் ஜாதி ஒழிப்பு கோஷங்கள். ஆனால் வரட்டுத் தனமாக திராவிடம் பேசும் சமூகப் போலிகள் ஜாதி ஒழிப்பு என்பதை அரசியல் ஆதாயத்திற்காக கையிலெடுத்து சமூகத்தின் அடித்தட்டு வாழ்க்கை முறைகளை அடியோடு சிதைக்க முயற்சிக்கின்றனர். 

வெளிநாடுகளிலெல்லாம் கூட ஜாதிகள் இருக்கின்றன. பல்வேறு பெயர்களில் பிரிவுகள் உள்ளன. ஆனால் அவைகளெல்லாம் ஒருவரை ஒருவர் அடிமைப்படுத்தவும் ஒருவர் செல்வங்களை பிறர் அபகரித்துக் கொள்வதற்குமே உருவானவையாக இருக்கும். ஆனால் பாரதத்தைப் பொருத்தவரை இங்கே இருக்கும் ஜாதிச் சமூகங்கள் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்வதற்காக உருவானவை. ஒரு இனத்தவர் இல்லாமல் போனால் பிரிதொருவர் வாழ்க்கை முறையை அது பாதிக்கும் என்னுமளவிற்கு நெருக்கமான சார்பு நிலை கொண்ட ஒரு சங்கிலிப் பிணைப்புள்ள சமூகமாக இருந்திருக்கிறது. அத்தகைய சமூகம் இந்த பெரிய சமுதாயத்தின் அடிவேர். அடிவேரான ஜாதிகள் பிடுங்கி எறியப்பட்டால், ஆணிவேராகிய மதம் தனியாக சமூகம் என்கிற விருக்ஷத்தை தாங்காமல் ஒடிந்து விடும். அப்படியே சாயும் சமூகத்தை கிறிஸ்தவம் என்கிற மாயையால் முட்டுக் கொடுத்து மதம் மாற்றிவிடலாம் என்பது தான் ராபர்ட் கால்டுவெல்லின் கணிப்பு.அதன் ஆழத்தைப் புரிந்து கொள்ளாமல் ஜாதியினை ஒழிப்போம் என்று மிஷனரிகளுடன் கைகோர்த்து சமூகச் சங்கிலிப் பிணைப்பை உடைத்தெரிந்து சமூகத்தின் போக்கை மூர்கத்தனமாக சீர்குலைக்க விளைகின்றனர் முற்போக்குவாதிகள் என தங்களைக் கூறிக்கொள்பவர்கள்.

ஜாதியத்தில் இவர்கள் கூறும் ஒரே குற்றச்சாட்டு அவற்றில் அடுக்குமுறைகளும் ஏற்றத்தாழ்வுகளும் இருப்பதைத் தான். அப்படிப்பட்ட அடுக்குமுறைகள் இல்லாத அமைப்புகளே உலகில் கிடையாது. கம்யூனிஸ கட்சி என்றாலும் ஒருவர் மட்டும் தான் தலைவராக இருப்பார். அதுவே அடுக்குமுறையின் உச்சம் தானே! மனிதச் சமூகமும் அப்படித்தான். ஆனால் அது காலத்தேவைகளுக்குத் தகுந்தவாறு இடம் மாறிக் கொண்டே இருக்கக் கூடியது. அத்தகைய மாற்றங்கள் சமூக அழுத்தத்தின் அகக்காரணங்களைக் கொண்டு தானாக நடந்துவிடும். நாம் பொருளாதார ரீதியான சமத்துவத்தை அனைவருக்குமாக வழிவகுக்க வேண்டுமே அன்றி சமூக வாழ்க்கையின் பாரம்பரிய முறைகளை சீர்குலைக்கக் கூடாது. ஒருவரை ஒருவர் கீழாக நினைக்கும் போக்கு மாற வேண்டும் என்றெண்ண வேண்டுமே ஒழிய ஒருவரின் வாழ்க்கை முறையை ஒழித்து இன்னொன்றைப் புகுத்துவோம் என்று எண்ணுதல் கூடாது.

நாம் சீண்டாமல் இருந்தால் காலம் அதனைச் சத்தமில்லாமல் செய்யும்!

அடுக்குமுறைகளைக் காலம் மாற்றியமைத்திருப்பதைப் பாருங்கள்! 

சமூக அடுக்கில் மேலாக கருதப்படுபவர்கள் பொருளாதார அடுக்கிலும் மேலாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை! இன்றைய பணப்பொருளாதாரக் காலச்சூழலில் இது நிதர்சனம்!

கொசுறு:

"உண்மையான கடவுள் குறித்த அறிவை, புராதன இந்தியர்கள் கொண்டிருந்தனர். அதை உன்னதமான தெளிவான, ஆடம்பரமான மொழியில் அறிவித்தனர். அதிக ஒளியுடன் திகழும் இந்த தத்துவங்களின் முன் ஐரோப்பியர்களின் உயர்ந்த தத்துவங்களும், கிரேக்கர்களின் தர்க்கங்களும், மதிய நேரத்து சூரிய ஒளியின் முன் பிரகாசிக்கும் நட்சத்திரங்களாக உள்ளன."

- ஜெர்மன் எழுத்தாளர், பிரெடெரிக் வான் ஷ்லீகல் (1772-1829) ; - நன்றி: தினமலர்

Wednesday, December 5, 2012

புனிதப் புரட்டு!

ஏழுத்து: - பால.கௌதமன்
முதல் இந்தியர் புனிதர் ஆகிறார் !

மண்ணின் மைந்தர் புனிதராகிறார் !

கன்னியாகுமரி மாவட்டத்தில் அமர்க்களப் பிரச்சாரம்!

தேவசகாயம் பிள்ளை என்பவரை “புனிதர்க்குவதற்கான முதல் படியாக, அவரை “உயிர்த்தியாகிஎன்று போப்பாண்டவர் 2012-ம் வருடம் ஜூன் 28 அன்று அறிவித்தார். முன்னணிப் பத்திரிகைகள் இந்தச் செய்தியை தலைப்புச் செய்தியாக வெளியிட்டதுடன் ஏதோ இந்த அறிவிப்பால் இந்திய பூமியே புனிதப்பட்டு விட்டதாக எழுதத் தொடங்கிவிட்டன.

இந்தப் புனிதப் பட்டமளிப்பு விழாவின் நோக்கம் என்ன? இந்த வரலாறு உண்மைதானா?

யார் “உயிர்த்தியாகி ஆகிறார்?

பல ஆயிரம் கிலோமீட்டர்களுக்கு அப்பால் ஐரோப்பாவில் சாம்ராஜ்ஜியம் நடத்திக் கொண்டிருக்கும் போப்பாண்டருக்காக, மதமாற்றத்தில் ஈடுபட்டு நாட்டைப் பிடிக்கும் படையில் சேர்ந்து பின்னர் மரணமடைந்த ஓர் போர் வீரன் தான் இந்த உயிர்த்தியாகி என்கிறார் கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பாதிரி டெர்டுலியன்.   "உயிர்த்தியாகத்தை மனமுவந்து புரியும் தியாகிகளின் தியாகமே, மற்ற மதத்தவர் கிறிஸ்துவராக மதம் மாறத் தூண்டுதலாக அமைகிறது." என்று சொல்லும் அவர், “உயிர்த்தியாகம் புரிந்தவர்களின் ரத்தம்தான், சர்ச்சின் விதையாகும் என்கிறார்.

இந்தப் பட்டமளிப்பின் நோக்கம் மதமாற்றமே! இதை மீண்டும் உறுதிப் படுத்துகிறார் போப் இரண்டாம் ஜான் பால். உறுதிப் படுத்துவதுடன் நின்று விடவில்லை, இந்த உயிர்த்தியாகிகளே வாட்டிகனின் நாடு பிடிக்கும் போர் வீரர்கள் என்று பெருமைப் படுத்தவும் செய்கிறார்.

முதல் ஆயிரம் ஆண்டுகளின் சர்ச்சானது, உயிர்த்தியாகம் புரிந்த தியாகிகளின் உதிரத்தால் உருவானது  என்றும்உயிர்த்தியாகம் புரிந்தவர்களின் பாரம்பரியத்தை மறந்து விடக் கூடாது என்றும் சொல்லும் போப் ஜான் பால் II, இந்தப் பெயர் அறியாத, யாரெனத் தெரியாத படை வீரர்களுக்கான அங்கீகாரத்தை, இறைப் பணியாகவே ஏற்று நடத்த ஊக்குவிக்கிறார்.

இதில் கவனிக்க வேண்டிய வாசகம் என்னவென்றால் "முகம் தெரியாத படைவீரர்கள்" ("unknown soldiers" ) என்பதுதான்.

இந்த வீரர்கள் இருப்பது எந்தப் படை? இது யாருக்காகப் போரிடும் படை? எந்த நாட்டைப் பிடிக்கிறது? எந்தப் பண்பாட்டை இது அழிக்கிறது? இதன் நோக்கம்தான் என்ன? மிருக நிலையிலிருந்து மனித நிலைக்கும் மனித நிலையிலிருந்து தெய்வ நிலைக்கும் ஒருவனை உயர்த்துவது சமயம். இந்த ஆன்ம நெறித் தத்துவத்தை ஏற்றால் அது சமயம். ஆனால், சமயம் என்ற போர்வையில் நாடு பிடிக்கும் இந்தக் கூட்டத்தை சமயத்துடன் ஒப்பிடுவது எந்த வகையில் நியாயம்?

மேலும், முன்பின் அறியாத நாடுகளுக்குச் சென்று, அந்த மண்ணின் மைந்தர்களை ஏமாற்றி, மிரட்டி, கிறிஸ்தவ மதத்திற்கு மாற்ற முயலும்போது இந்தப் “படை வீரர்கள் தன்மானமுள்ள மண்ணின் மைந்தர்களால் கொல்லப்படுவதுண்டு. அவ்வாறு கொல்லப்பட்ட ஆக்கிரமிப்பாளர்களைத்தான் கிறிஸ்தவ நிறுவனங்கள் “உயிர்த்தியாகிகள் என்று முன் நிறுத்துகின்றன.  

இதே போப் ஜான் பால் II, முதலாம் ஆயிரம் ஆண்டில் ஐரோப்பாவை மாற்றிவிட்டோம். இரண்டாவது ஆயிரமாண்டில் அமெரிக்காவை மாற்றினோம். நடக்கும் ஆயிரமாண்டில் ஆசியாவை மதம் மாற்றுவோம் என்று கொக்கரித்தது நினைவுகூரத் தக்கது. இந்த ஆன்ம அறுவடைக்காக கத்தோலிக்க சர்ச்சுக்கு டெர்டுலியன் பாதிரியார் சொன்னதுபோல், உயிர்த்தியாகிகள் தேவைப்படுகின்றனர். அதற்காக, கேரளா, தமிழகம், வட இலங்கை போன்ற பகுதிகளில் உயிர்த்தியாகிகள் உள்ளனரா என்று தோண்டியெடுக்கும் பணியில் சர்ச் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. இதனை கோட்டார் மறைமாவட்டத்தினால் நிர்வகிக்கப்படும் வலைதளத்தில் கிறிஸ்துவர்களே ஒப்புக் கொண்டுள்ளனர்.

"இந்த உயிர்த்தியாகம் புரிந்தவர்களின் நினைவுகளை மறவாதிருக்க, அவர்களின் சாகஸத்துக்கான சான்றுகளையும், தியாகம் குறித்த தரவுகளையும் பதிவுகளாக்குவதே உகந்த வழி என்று அவர் (போப் ஜான் பால் II ) கருதுகிறார். ”

இந்தத் தோண்டுதலில் சிக்கியவர் தான் வேதசாட்சி தேவசகாயம் பிள்ளை. கிறிஸ்துவத் திருச்சபைகளுக்குச் சொந்தமான வலைதளத்தில் தேவசகாயம் பிள்ளையின் “வரலாறு பின்வருமாறு சொல்லப்படுகிறது:

தேவசகாயம் பிள்ளை 1712-ம் ஆண்டு உயர் ஜாதியான நாயர் சமுதாயத்தில் நீலகண்டப் பிள்ளை என்ற பெயரில் பிறந்தார். பின்னர் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் பத்மநாபபுரம் அரண்மனையில் பணியாற்றினார். அப்போது மார்த்தாண்டவர்ம ராஜாவின் தளபதியான டச்சுக்காரர் டிலனாயுடன் தொடர்பு ஏற்பட்டது. அதன் விளைவாக அவர் கிறிஸ்தவத்தின் பால் ஈர்க்கப்பட்டார். 1745ம் ஆண்டு வடக்கன்குளம் சர்ச்சில் பௌட்டாரி என்ற பாதிரியாரால் கிறிஸ்துவராக மதம் மாற்றப்பட்டார். கிறிஸ்துவராக மதம் மாறியதும் தேவசகாயம் பிள்ளை என்ற பெயரை ஏற்றுக் கொண்டார். பின்னர் அவர், ஜாதி வேறுபாடுகளைக் கடந்து, அனைத்து தாழ்த்தப்பட்ட ஜாதியினருடனும் நெருங்கிப் பழகி, அந்த மக்களை கிறிஸ்துவ மதத்துக்கு மாற்றினார். இதனைப் பொறுத்துக் கொள்ளாத பிராமணர், நாயர் போன்ற ஆதிக்க சாதியினர் மன்னரைத் தூண்டி விட்டு, தேவசகாயம் பிள்ளை மீது அடுக்கடுக்காகப் பல புகார்களைச் சுமத்தினர். இதன் விளைவாக தேவசகாயம் பிள்ளை 1749, பிப்ரவரி 23ம் தேதி கைது செய்யப்பட்டார். 1749 முதல் 1752 வரை மூன்றாண்டு காலம் தேவசகாயம் பிள்ளை பலவிதமான சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டார். பிறகு, நாகர்கோவில் திருநெல்வேலி சாலையில் உள்ள ஆரல்வாய்மொழிக்கு அருகே காத்தாடி மலையில் மார்த்தாண்டவர்ம ராஜாவின் காவலர்களால் 1752ம் வருடம் ஜனவரி 14ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். (http://www.martyrdevasahayam.org  & http://cbci.in/FullNews.aspx?ID=648 ) (Retrieved on 30.11.2012)

இந்த வரலற்றை வெளிக்கொணர்வதின் பயன் என்ன? கோட்டார் மறைமாவட்ட வலைதளம் அதை பின் வருமாறு தெளிவு படுத்துகிறது.

கடந்த 259 ஆண்டு காலத்தில், இந்த இறை சேவகர் (தேவசகாயம் பிள்ளை) தமிழ்நாடு, தெற்கு கேரளம், வடக்கு இலங்கை ஆகிய பகுதி மக்களின் நினைவுகளில், வழிபாட்டில், ஆன்மீகத்தில், பிரார்த்தனையில் நீக்கமற நிறைந்திருப்பதன் காரணமாக, அவரை அந்தப் பகுதிகளின்  ‘பெயரறியாத, முகம் தெரியாத படைவீரர்களோடு சேர்க்க முடியாது. ஆனால், சர்ச்சால் அங்கீகரிக்கப்படாத நிலையிலும், சர்ச்சின் அதிகாரப்பூர்வமான ஏற்பு நிலை இல்லாத சூழலிலும், இத்தகைய பொருள்பொதிந்த நிகழ்வை, சர்ச்சுக்கோ, சமுதாயத்துக்கோ பலனளிக்கும் வகையில் செயல்படுத்த முடியாது.”

"இத்தகைய பொருள்பொதிந்த நிகழ்வை சர்ச்சுக்கோ சமுதாயத்துக்கோ பயனளிக்க - அப்படி என்றால், தேவசகாயம் சர்ச்சுக்கான ஒரு வியாபாரப் பொருள். இதில் எந்த ஆன்மிக நோக்கமும் இல்லை என்பதை சர்ச்சே தெளிவு படுத்திவிட்டது.


எந்தப் பகுதிகளில் இவர் பயன்படுத்தப்படப் போகிறார்?


"தமிழ்நாடு,தெற்கு கேரளம்,வடக்கு இலங்கை ஆகிய பகுதி மக்களின் நினைவுகளில்,வழிபாட்டில்,ஆன்மீகத்தில்,பிரார்த்தனையில் நீக்கமற நிறைந்திருப்பதன் காரணமாக" என்கிறபகுதி விளங்கி விட்டது,ஆனால் எப்படி என்று தெரியுமா?இதன் மூலம் எந்த பண்பாட்டு அடையாளத்தை அழிக்கப்போகிறார்கள் என்று தெரியுமா? இதற்கான பதிலை நாகர்கோவிலில் டிசம்பர் 2 , 2012அன்று தேவசகாயம் பிளையை ஆசிர்வதிக்கப்பட்டவர் என்று அறிவித்த விழாவில் கிறிஸ்தவர்களே வெளிப்படுத்தியுள்ளனர்.

தேவசகாயம் பிள்ளை வேதசாட்சி நிலை அடைந்த ஜனவரி14ஆம் நாளை,தேவசகாயம் பிள்ளை திருவிழாவாகக் கோண்டாட,கார்டினல் அமடொ அனுமதி அளித்துள்ளார்.இதில் கவனிக்க வேண்டிய நாள்,ஜனவரி14.பெரும்பாலும் அன்றுதான்,தமிழகம்,வட இலங்கை மற்றும் தெற்கு கேரளத்தில் பொங்கல் பண்டிகை ஆண்டு தோரும் சிறப்பாகக் கொண்டாடப்படும்.சபரிமலை மகர ஜோதியும் அன்று தான் தோன்றுகிறது.

கத்தோலிக்க கிறிஸ்தவ பிஷப்புகளின் கூட்டமைப்பின் (CBCI) வலைதளம்,தேவசகாயம் பிள்ளை ஜனவரி14அல்லது15ல் கொல்லப்பட்டார் என்கிறது(http://cbci.in/FullNews.aspx?ID=648) (Retrieved on 30.11.2012).காரணம்,தை மாதப் பிறப்பு அவ்வப்போது ஜனவரி15ஆம் நாளும் வரும்.இதன் மூலம்,பொங்கல் பண்டிகைக்குள் ஊடுறுவி மதமாற்றம் செய்யும் திட்டம் தெளிவாகிறது.

பல கிறிஸ்தவப் பண்டிகைகள்,இவ்வாறு பல நாட்டு உள்ளூர் திருவிழாக்களை பின்பற்றி ஏற்பட்டவை. ஆனால் அந்தத் திருவிழாக்களின் காரணிகளும்,பண்பாட்டு அடையாளங்களும் இந்த கிறிஸ்தவர்களால் அழிக்கப்பட்டது என்பதற்கு வரலாறே ஒரு சாட்சி.இந்த வரலாற்று நிகழ்வுகளின் அடிப்படையில் பார்த்தால்,இந்த தேவசகாயம் பிள்ளை திருவிழா,பொங்கலின் பாரம்பரியத்தை அழிக்க வந்த சூழ்ச்சி என தெளிவாகிறது.

மதமாற்றம் மட்டுமல்லாமல் இதில் புதைந்திருக்கும் அரசியல் நோக்கத்தையும் ஒளிவு மரைவில்லாமல் வெளிப்படையாக்குகிறது கோட்டார் மறை மாவட்ட இணைதளம். அதில் பின்வருமாறு கூறப்பட்டிருக்கிறது:

லூர்தில் ஜான் பால் II நிகழ்த்திய உரையின் போது, அவர் உலகெங்கும் பரவி வரும் புதிய வகை சமய ரீதியான கொடுமை குறித்துப் பேசினார். இது இந்தியாவில் இன்று உண்மையாக இருக்கிறது. ஹிந்து அடிப்படைவாதிகளால் இன்று, கிறிஸ்தவர்களுக்கு எதிரான சூழல் நிலவுகிறது, இவர்களை சில அரசியல் அமைப்புகள் தங்கள் அரசியல் லாபங்களுக்காக முழுமையாக ஆதரிக்கிறார்கள். இந்திய சர்ச் ஏற்கெனவே “கொடுமையை எதிர்நோக்கும் காலத்தை சந்திப்பதைப் போல இருக்கிறது.”

அரசியலுடன் நின்றுவிடாமல், கிறிஸ்துவம் புகும் நாடுகளின் மண்ணின் வாசனைக்கேற்ப பல அவதாரங்களை எடுத்து, உள்நாட்டு மக்களை மதம் மாற்றி, அவர்கள் பண்பாட்டில் இருந்து அவர்களைப் பிரித்து, சர்ச்சின் ஆதிக்கத்தின் கீழ் அவர்களை கொண்டு வரும் சூழ்ச்சியானது இந்த தேவசகாயம் பிள்ளை உயிர்த்தியாக பட்டமளிப்பின் மூலம் நிறைவேற்றப்படும் என்று கோட்டார் மறை மாவட்ட வலைதளம் தன் இயல்பை பின்வருமாறு வெளிக்காட்டுகிறது:

இந்த உயிர்த்தியாகத்தை இன்று பொருள் உள்ளதாக ஆக்கும் வேறு ஒரு விஷயம் என்னவென்றால், Ad Gentes சர்ச்சின் நோக்கத்தில் பாமர மக்கள் ஆற்ற வேண்டிய பங்குதான்! பாமர மக்கள் சர்ச்சை சார்ந்தவர்கள் மட்டுமல்லர், உண்மையிலேயே, அவர்கள்தான் சர்ச்சும்கூட. எனவேதான் பாமர மக்களின் கலாசாரங்களை உள்வாங்கிக் கொள்வது பற்றிப் பேசுவது, இயல்பான ஒன்றாக இருக்கிறது. ஏனென்றால், உலகில், சர்ச்சின் இயல்பே மதத்தைப் பரப்புவது ! அதே போல சர்ச்சின் மத விரிவாக்கம் என்பது, சர்ச்சின் இயல்பான ஒன்றாகவே வெளிப்படுகிறது.

இப்படி மதமாற்ற நோக்கத்துக்காகவே ஏற்படுத்தப்பட்ட இந்தப் பட்டமளிப்புகள் எல்லாம் ஏதோ ஒரு உண்மையான வரலாற்றின் அடிப்படையில்தான் உருவானது என்று பெருவாரியான அறிஞர்கள் நினைக்கக் கூடும். அதிலும் மண்ணின் மைந்தர், பாமரன், பாட்டாளி என்ற சொற்களையும் சேர்த்துவிட்டால், அந்தந்த ஊர்காரர்கள் பரவசமடைந்து விடுவார்கள்; உண்மையை அறிய நாட்டம் கொள்ள மாட்டார்கள் என்பது சர்ச்சுக்கு நன்றாகவே தெரிந்த விஷயம். ஆனால், ஆராய்ந்து பார்க்கும்போது இந்த மண்ணின் மைந்தரின் கதை உண்மைக்குப் புறம்பானது என்பது நமக்குத் தெரியவருகிறது.

புகழ்பெற்ற கேரள வரலாற்று ஆசிரியரான திரு. .ஸ்ரீதர மேனன் 20.1.2004 அன்று பயனிர் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், "மரண தண்டனையை விட்டுவிடுங்கள், திருவிதாங்கூர் வரலாற்றில் மதமாற்றத்தின் பெயரால் ஒரு சிறு தண்டனை வழங்கப்பட்டதாகக்கூட பதிவு செய்யப்படவில்லை. இது இட்டுக்கட்டப்பட்ட ஒரு கற்பனைக் கதையே." என்று ஆதார பூர்வமாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய வரலாற்று ஆய்வுக் கழகத்தின் (ICHR) தலைவராக இருந்த திரு.எம்.ஜி.எஸ்.நாராயணன் அவர்கள், நீலகண்டம்பிள்ளை என்ற பெயரிலோ தேவசகாயம்பிள்ளை என்ற பெயரிலோ மார்த்தாண்டவர்ம மகாராஜா காலத்தில் ஒரு ராணுவத் தளபதி இருந்ததில்லை என்று வாதிடுகிறார்.

திருவிதாங்கூர் வரலாற்றை எழுதிய திரு.நாகம் ஐயா, இந்தக் கதை நம்பும்படியாக இல்லை என்றும், மதம் மாறியவர்கள் அவர்கள் முன்னோர்களை குருமார்களாக சித்திரிக்கும் பழக்கம் நம் நாட்டில் வழக்கம்; அதனடிப்படையில்தான் இந்தக் கதை புனையப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார். (Travancore Manual Vol II page 129-130, M.Nagam Aiya)

இந்தக் கதையில் கிறிஸ்துவர்கள் திருவிதாங்கூர் மன்னரால் கொடுமைப்படுத்தப் பட்டார்கள் என்பதை நிலை நிறுத்த கற்பனையாளர்கள் பெருமுயற்சி எடுத்துள்ளனர். ஆனால், வரலாற்றுப் பதிவுகள் என்ன சொல்கிறது?

மதம் மாறியதற்காக தேவசகாயம்பிள்ளை மார்த்தாண்ட வர்ம ராஜாவால் கொல்லப்பட்டார் என்று குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்படும் மார்த்தாண்டவர்ம ராஜா, வரப்புழா சர்ச்சுக்கு வரியில்லா நிலம் கொடுத்து உதவினார். (Travancore Manual, Vol-I page 16, T.K.Veluppillai)

டச்சுக்காரர் திலனாயால் கிறிஸ்துவத்தின்பால் தேவசகாயம்பிள்ளை ஈர்க்கப்பட்டார் என்று கிறிஸ்துவர்கள் கதை சொல்லுகின்றனர் . அந்த டச்சுக்காரர் திலனாய்க்காக கார்த்திகைத் திருநாள் மகராஜா உதயகிரிக் கோட்டை சர்ச்சைக் கட்டினார் என்றும் அந்த சர்ச் பாதிரிக்கு 100 பணம் மாதச் சம்பளமாகக் கொடுத்தார் என்றும் திரு. டி.கே.வேலுப்பிள்ளை திருவிதாங்கூர் வரலாற்றில் குறிப்பிடுகிறார். (Travancore Manual, Vol-I page 16, T.K.Veluppillai)

இந்த மன்னர்கள் மதத் துவேஷம் கொண்டவர்களாக இருந்திருந்தால் இந்து ஆலயங்களை நிர்வகிக்கும் தேவஸ்வம் போர்டை நிர்வகிக்கும் பொறுப்பை ஐரோப்பிய கிறிஸ்துவர்களான மன்றோ அவர்களுக்குக் கொடுத்திருப்பார்களா

நீலகண்டப் பிள்ளை மதமாறியதாகச் சொல்லப்பட்ட காலகட்டத்தில் கத்தோலிக்கர்களும்,பிரட்ஸ்டண்ட்களும் ஐரோப்பாவிலும்,பிற பகுதிகளிலும் எப்படி மோதிக்கொண்டனர் என்பது வரலாறு படித்தவர்களுக்குத் தெரியும்இந்த டச்சுக்காரர்கள் கொச்சி கோட்டையை கைப்பற்றியவுடன், வாஸ்கோடகாமாவை அடக்கம் செய்திருந்த “புனித அண்டோனியோ கத்தோலிக்க சர்ச்சை” “புனித ஃபிரான்ஸிஸ் பிராடஸ்டண்ட் சர்ச்” என்று மாற்றினர்.இன்றும் அந்த சர்ச் பிராட்ஸ்டண்ட் பிரிவான தென் இந்தியத் திருச்சபையின்(CSI)கீழ் உள்ளது.டச்சுக்காரரான டிலனாய் ஒரு பிராடஸ்டண்ட் கிறிஸ்தவர்.இவரது உதயகிரி சர்ச்,பிராடஸ்டண்ட் சர்ச்சாகத் தான் நிர்வகிக்கப்பட்டு வந்தது.மேலும்,டச்சுக்காரக்கள் அனைவரும் மதமாற்றத்தை அங்கீகரிக்கும் உரிமையையும் பெற்றிருந்தனர்.இப்படியிருக்க,நீலகண்டப் பிள்ளையை டிலனாய் ஏன் ஞானஸ்நானத்திற்காக கத்தோலிக்க சபைக்கு அனுப்ப வேண்டும்?அதுவும் அரசரின் தளபதி!தளபதியால் மதமாற்றப்பட்டால் லாபம் உண்டு.அதிகாரமில்லாத சர்ச்சால் மாற்றப்பட்டால் உயர் ஜாதி நீலகண்டப் பிள்ளைக்கு என்ன லாபம்?

எனவே இந்த “தேவசகாயம் பிள்ளை” கதையைக் கட்டியவர்களுக்குதிருவிதாங்கூர் அரசியல்-சமூக சூழலும் தெரியாது,ஐரோப்பிய சூழலும் தெரியாது என்பது தெளிவாகிறது.

திருவிதாங்கூர் படையில் மார்த்தாண்ட வர்ம ராஜா காலத்தில் ஈழவர்கள், கிறிஸ்துவர்கள், இஸ்லாமியர்கள் இருந்தனர் என்று கர்னல் வில்க்ஸ் தெரிவித்ததை திரு. வேலுப்பிள்ளை மேற்கோள் காட்டுகிறார்(Travancore Manual, Vol-IV page 122, T.K.Veluppillai)

இந்திய வரலாற்று ஆசிரியர்கள் இந்துக்களுக்குச் சாதகமாகத்தான் எழுதுவார்கள், அதனால் இதை ஏற்க முடியாது, என்று கிறிஸ்துவர்கள் சொல்கிறார்கள். ஆனால் கிறிஸ்துவ சர்ச் பாதிரிகள் சொல்வதை மட்டும் வரலாறாக நாம் ஏற்க வேண்டுமாம்! இதுதானே கிறிஸ்துவர்களின் நியாயம்.

சரி... அவர்கள் நியாயத்துக்கே வருவோம். ஜூலை 2 , 1774ல் போப் கிளமண்ட் XIV திருவிதாங்கூர் ராஜாவுக்கு எழுதிய கடிதத்தில், "திருவிதாங்கூரில் இருக்கும் கத்தோலிக்க திருச்சபையின் அங்கத்தினர் மீது மன்னர் செலுத்திவரும் பரிவுக்கு நன்றி தெரிவித்துள்ளார். (Travancore Manual vol-I page 387, M.Nagam Aiya),   

போப் கிளமண்ட் XIV பொய் சொல்கிறாரா?  போப் ஜான்பால் II பொய் சொல்கிறாரா? கோட்டார் மறைமாவட்டம் பொய் சொல்கிறதா? அல்லது தற்போதைய போப் பெனடிக்ட் பொய் சொல்கிறாரா?

தேவசகாயம் பிள்ளையை கிறிஸ்துவத்தின் பால் ஈர்த்த டிலனாய்க்காக, அஞ்சங்கோ தளபதியை எதிர்த்து மார்த்தாண்ட வர்மா மகாராஜா போர் தொடுத்தார்... என்ன காரணம் தெரியுமா? அஞ்சங்கோ தளபதியின் மகள் மீது டிலனாய் ஆசைப்பட்டு விட்டாராம். (Travancore Manual Vol II page 130, M.Nagam Aiya)

இப்படி உற்ற நண்பனாக இருந்த டிலனாயின் நண்பரை மதமாற்றக் குற்றத்துக்காக மார்த்தாண்ட வர்ம ராஜா கைது செய்து கொடுமைப் படுத்தி சுட்டுக் கொன்றாராம்.. இதை நாம் நம்ப வேண்டுமாம்!

இன்னும் சொல்லப்போனால் அந்த கிறிஸ்துவக் கதையில் டிலனாயுடன் தேவசகாயம் பிள்ளை நெருங்கிப் பழகுவதை மகாராஜாவின் அமைச்சரான ராமய்யன் தளவாய் விரும்பவில்லை என்றும், தேவசகாயம் பிள்ளை மீது ராமய்யன் தளவாயின் கோபத்துக்கு இது ஒரு காரணம் என்றும், அதனால் தான் ராமய்யன் தளவாயின் பழிவாங்கும் வெறி அதிகமானது என்றும் கிறிஸ்துவர்கள் தெருக்கூத்து நாடகத்தில் பாடி வருகிறார்கள்

திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் மரண தண்டனை பொதுவாக ராஜதுரோகக் குற்றம், கொலை, வழிப்பறி போன்ற குற்றங்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. (Travancore Manual, Vol-IV page 77, T.K.Veluppillai).

இந்த அடிப்படையில் திரு.நாகம் ஐயா அவர்களின் திருவிதாங்கூர் சரித்திரத்தை நாம் கவனிக்க வேண்டும்.

நீலகண்டப் பிள்ளையின் மீது அரசு ஆவணங்களை திருடிய குற்றச்சாட்டின் அடிப்படையில், தண்டனை வழங்கப்பட்டிருக்கலாம். இது, அவர் மதம் மாறிய சில ஆண்டுகளுக்குப் பின்னர்தான் நடந்திருக்க வேண்டும். இந்த தண்டனைக்கும் மதம் மாற்றத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.   (Travancore Manual Vol-II page 130, M.Nagam Aiya)

இந்தக் குற்றச்சாட்டு மதமாற்றத்துடன் நின்றுவிட்டால் இத்துடன் நாமும் நின்றுவிடலாம். “கீழ் ஜாதியினருடன் அவர் பழகியதன் காரணமாகத்தான் மேல் ஜாதியினர் அவர் மீது வெறுப்புற்றனர், அதனால் இவர் கொல்லப்பட்டார்”” என்று ஒரு ஜாதி அரசியலும் இந்தக் கதையில் இடம்பெற்றுள்ளது.

ஜாதி பேசி ஹிந்து சமுதாயத்தைப் பிரித்து மதம் மாற்றும் தொடர் சூழ்ச்சியை இந்தக் கதையிலும் சர்ச்சு லாகவமாகப் புகுத்தியுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுக்கு ஏற்றார்போல் ஒரு போலியான ஆதாரம்கூட சர்ச்சால் காட்டப்படவில்லை. தீண்டாமை ஒழிப்பில் கத்தோலிக்க சர்ச்சின் சேவையை புரிந்துகொள்ள வேண்டும் என்றால் போப் கிரிகோரிXV யின் புல்லா ரொமனே செடிஸ் அன்டிஸ்டிடிஸ் (Bulla Romanae Sedis Antistitis) என்ற ஜனவரி 31, 1623 தேதியிட்ட ஆணையில் இந்திய சர்ச்சுகளில் ஜாதீய சம்பிரதாயங்களுக்கு அனுமதி வழங்கினார் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
(ref: http://indiainteracts.wordpress.com/tag/christian-caste-system/ )                     

இது நீலகண்டப் பிள்ளை மதம் மாறுவதற்கு சுமார் 120 ஆண்டுகள் முன்புதான். இதுவரை இந்த ஆணை திரும்பப் பெறவோ மாற்றப்படவோ இல்லை. இதனால் இந்திய சர்சுகளில் இன்றும் தீண்டாமை தலைவிரித்து ஆடுகிறது. ஆட்டுக்காக ஓநாய் அழும் கதையைப் பார்த்தீர்களா? ஏன், இந்த தேவசகாயம் பிள்ளை மதம் மாறியதாக சொல்லப்பட்ட வடக்கன் குளத்திலேயே, வெள்ளாள கிறிஸ்துவர்களும் ஒடுக்கப்பட்ட கிறிஸ்துவர்களும் ஒரே சர்ச்சுக்குச் செல்லமாட்டோம் என்று சொல்லி தனித்தனியாக அமரவில்லையா? ஜாதீய வேறுபாடுகளை ஒழித்துவிட்டோம் என்று மார்தட்டும் கிறிஸ்தவம், தேவசகாயம் பிள்ளையின் சொந்த சர்ச்சிலேயே இந்த நிலைமையை எப்படி அனுமதித்தது?

தியாகங்கள் மதிக்கப்படவேண்டும்! ஆவணமாக்கப்பட வேண்டும் போற்றப்பட வேண்டும், முன்னுதாரணமாக வேண்டும்! எப்போது? அது தியாகமாக இருந்தால்! அது உண்மையாக இருந்தால்!

இங்கோ நடக்காத சம்பவம் ஒன்று, நடந்ததாகக் கதை கட்டப்பட்டு, அதற்கு சமுதாயச் சீர்திருத்தம் போன்ற சாயம் பூசப்பட்டு, அப்பாவிகளை நம்பவைத்து ஏமாற்ற ஒரு அக்மார்க் முத்திரையை வாடிகன் வழங்கியுள்ளது. (போப் வழங்கியுள்ளார்). ஒரு பொறுப்பான, பல மதங்கள் சுமூகமாக வாழுகின்ற நாட்டில் உள்நோக்கத்துடன் கட்டுக் கதைகளுக்கு வரலாற்று அங்கீகாரம் கொடுப்பது போப்புக்கு அழகா?

இந்தப் படைவீரர்களை “தியாகிகள் என்று கௌரவித்து ஒரு சமுதாயத்தின் பண்பாட்டையும் ஒரு நாட்டின் பாரம்பரியத்தையும் அழிப்பது சமயமா? சாகசமா

இந்தக் கேள்விகள் எல்லாம் போப்பிடம் கேட்பதில் எந்த அர்த்தமும் இல்லை. கிறிஸ்துவப் படை வீரர் போப்பின் ஆட்சியை நிலைநாட்ட இறந்து போனால்  அவர் உயிர்த்தியாகி. அதே படைவீரர் ஆக்கிரமிக்கும் நாடுகளில் உள்ளவர்களின் உயிரை எடுத்தால் அவர் புனிதர். இது தானே கிறிஸ்தவம்?

பாரதத்தில் உயிருடன் தீயிட்டுக் கொளுத்தி பலவிதமான சித்ரவதைகளை மதம் மாற மறுப்பவர்களுக்கு அளிக்கும் நிறுவனமான ஹவுஸ் ஆஃப் இன்க்விஸிஷன் (House of inquisition) நிறுவப்படவேண்டும் என்று கடிதம் எழுதியவர் புனித ஃபிரான்ஸிஸ் சேவியர், அதன் மூலம் பல்லாயிரக் கணக்கான  அப்பாவிகளின் உயிரை பலிவாங்கிய கோவா ஹவுஸ் ஆஃப் இன்க்விஸிஷனை (Goa house of Inquisition) நிறுவ மன்னர் ஜான்-III க்கு 1545ல் கடிதம் எழுதியவர் ஃபிரான்ஸிஸ் சேவியர். (http://en.wikipedia.org/wiki/Goa_Inquisition ) இன்று ஃபிரான்ஸிஸ் சேவியர் புனிதர்! இவர் பெயரில் கன்னியாகுமரி மாவட்டம் கோட்டாரில் ஒரு தேவாலயம்! தமிழகத்தின் பிற பகுதியிலும் வட இலங்கையிலும் பல தேவாலயங்கள் !

இன்று இந்த தேவசகாயத்தைப் புனிதராக அறிவிக்க வேண்டும் என்று துடிப்பதும் இந்தக் கோட்டார் மறை மாவட்டமே. ஆச்சரியப் படுவதற்கு ஒன்றுமில்லை! இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் கணிசமான அளவு இந்துக்கள், கிறிஸ்துவர்களாக மதம் மாறியுள்ளனர்.

இன்று தென் தமிழகத்தில், ஐரோப்பிய அமெரிக்க நாடுகளுக்கு ஆதரவாக வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் பல பிரசாரங்களும், நம் நாட்டிற்கு எதிராக சூழ்ச்சியும் நடைபெறுகின்றன. போப்புக்காக கொலை செய்தவர் கணிசமான இந்துக்களை தென் தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் மாற்றிவிட்டார். மீதமுள்ள இந்துக்களை மாற்ற போப்புக்காக கொலையுண்ட (?) கிறிஸ்துவ வீரரை தயாராக்குகிறது கிறிஸ்துவ சர்ச்.

இந்த கிறிஸ்துவ நோக்கத்துக்காக நம் நாட்டு மன்னர் மத வெறியனாக்கப்பட்டுள்ளார். நம் சமுதாயம் பிற்போக்குச் சமுதாயமாக ஜோடிக்கப்பட்டுள்ளது. இந்துக்கள் ஈவு இரக்கமற்ற இரத்தக் காட்டேறிகளாக சித்திரிக்கப்பட்டுள்ளனர். வரலாற்று மோசடி நடத்தப்பட்டுள்ளது. விளைவு- மண்ணின்மைந்தர் தியாகி, புனிதர் என்ற ஜால வார்த்தைகளால் மண்ணின் மைந்தன் ஏமாற்றப்படுகிறான்.

இந்த மாதிரியாகக் கட்டுக்கதைகளைப் புனைந்து வரலாற்று மோசடிகளில் ஈடுபடுவது சர்ச்சுக்கு கைவந்த கலை. தமிழ்நாட்டிலேயே இதற்கு சான்று உண்டு. மயிலைக் கடற்கரையில் வந்திறங்கிய புனித தாமஸ் கதைதான் அது. வரலாற்றில் இல்லாத “தாமஸ் என்கிற மனிதனை உருவாக்கி அவனை சென்னையில் தங்கவைத்து அவன் ஒரு பிராம்மணப் புரோகிதரால் கொல்லப்பட்டான் என்று கட்டுக்கதை புனைந்து, அவனுடைய எலும்புக்கூட்டின் ஒரு பகுதி இன்றைய சாந்தோம் தேவாலயத்தில் இருக்கிறது என்கிற புளுகுமூட்டைகளையும் அதில் சேர்த்து வைத்த கத்தோலிக்க சர்ச்சுக்கு தென் தமிழகத்தில் மற்றொரு கதை புனையவா தெரியாது?

புனித தாமஸ் போன்ற புனைவுதான் “தேவசகாயம் வரலாறும். உண்மையில் சொல்லப்போனால் ஏசு என்று ஒருவர் இருந்ததற்கே இவர்களிடம் ஆதாரம் கிடையாது. அதனால் தான் தற்போதய  போப் திரு பெனெடிக்ட், ஏசுநாதர், நாம் நினைத்ததை விட சுமார் 200 முதல் 500 ஆண்டுகளுக்கு முன் பிறந்திருக்கலாம் என்கிறார். அப்படியென்றால், ஏசு  பிறப்பை சுமார் 2050 ஆண்டு என்ற அடிப்படையில் சர்ச்சால் நிரூபிக்கப்பட்ட  சாகசங்கள் புளுகுமூட்டைகள்! ஆக, இவர்களுடைய மொத்த சரித்திரமே புனைவுதான்.  

மூவேந்தரும் கடையேழு வள்ளல்களும் போற்றிப் பின்பற்றி வந்த மரபை அழித்தொழிக்கும் வாடிகன் படைவீரர்களுக்கு, நாடுபிடிக்கும் நோக்கத்துடன் நடத்தப்படும் பாராட்டும் விருதும் நம் தமிழகத்தில் நடைபெறுவது முறைதானா? இனவுணர்வைப் பற்றி வாய்கிழியப் பேசும் அறிவுஜீவிகளும் அரசியல்வாதிகளும் இந்த இழி செயலுக்கு துணைபோவது சரிதானா?

தமிழ் மீதும் பண்பாடு மீதும் பற்றுள்ளவர்கள் இந்தப் புனிதப் புரட்டை முறியடிக்க அணிதிரள வேண்டும்!