Thursday, October 30, 2008

ஆதிசங்கரரின் பஜகோவிந்தம் உங்கள் பார்வைக்கு

இந்து தர்மம் என்பது வெறும் இறைவழிபாடு அல்ல. அது ஒரு வாழும் வகையை எடுத்துச்சொல்லும் தர்மம். எப்படி வாழ வேண்டும் என்பதற்காக உலக மக்களுக்கெல்லாம் இருக்கும் ஒரு வழிகாட்டி. வாழ்க்கைக்கு தேவையான தத்துவங்கள் தான் இந்து தர்மம். தத்துவங்கள் மூலமாக மனிதர்களை நல்வழிப்படுத்துவதே இதன் முக்கிய சாரமாக இருந்தது. பல ஆயிரம் வருடங்களுக்கு முன் ஆதி சங்கரர் எழுதிய இந்த பாடலை அர்த்தத்துடன் கேட்டாலே அவை உங்களுக்கு நன்றாக விளங்கும். உங்களுக்காக ஆங்கில வரிகளுடன் இந்த பாடல்!

ஆதி சங்கரர் :

பிறப்பு கி.பி: 788
சிவனடி சேர்தல்: 820

இதோ த‌மிழாக்க‌ம்!

கோவிந்த நாமம் பாடு! கோவிந்த நாமம் பாடு!

கோவிந்த நாமம் பாடு! அட மூடனே!

காலம் கடந்து மரணம் நெருங்கும் தருவாயில் இருக்கையில் அவனை நினைத்திரு! வாழ்க்கையின் சூத்திரங்கள் உன்னைக்காப்பாற்றாது.

கோவிந்த நாமம் பாடு! கோவிந்த நாமம் பாடு!

கோவிந்த நாமம் பாடு! அட மூடனே!

பெரும் செல்வ‌ம் சேர்க்கும் தாக‌த்தை விட்டு விடு. அர்த்த‌மற்ற‌ ஆசைக‌ளால் ப‌ய‌னேதும் கிடைக்க‌ப்போவ‌தில்லை.

புனிதமான நல்ல எண்ணங்களின் மீதே உனது சிந்தனையை நிறுத்தி வை! உனது நடவடிக்கைகளில் அதுவே பிரதிபலிக்கும். கடந்த கால கர்மங்களினால் வ‌ர‌ப்போகும் விளைவுக‌ளை ம‌கிழ்வுட‌ன் எதிர்கொள்!

கோவிந்த நாமம் பாடு! கோவிந்த நாமம் பாடு!
கோவிந்த நாமம் பாடு! அட மூடனே!

பொருள் ஈட்டி சேமிக்கும் திறன் எவ்வளவு காலம் இருக்குமோ அதுவரை உன்னைச் சார்ந்தவர்கள் உன்னோடு சேர்ந்திருப்பார்கள்.


உடல் நடுங்கி, ஆரோக்கியம் இல்லாத வயோதிகம் வந்த பின்னால் உன்னை பார்த்துக்கொள்ளவோ, உன்னோடு ஒரு வார்த்தை பேசவோ யாரும் அருகே இருக்கப்போவதில்லை.

கோவிந்த நாமம் பாடு! கோவிந்த நாமம் பாடு!

கோவிந்த நாமம் பாடு! அட மூடனே!

உனது இளமை, செல்வம் மற்றும் அதிகாரத்தின் கீழ் இருக்கும் மனிதர்களைப் பற்றி கர்வம் கொள்ளாதே! காலம் ஒரு நொடியில் அவற்றை இல்லாமல் செய்து விடும்.

கற்பனையான உலக மாயை‌யிலுருந்து விடுப‌ட்டு நிர‌ந்த்த‌ர‌மான‌ உண்மையை அடைய‌ முய‌ற்ச்சி செய்!

கோவிந்த நாமம் பாடு! கோவிந்த நாமம் பாடு!

கோவிந்த நாமம் பாடு! அட மூடனே!

கோவில்க‌ளை த‌ரிசித்து, ம‌ர‌த்த‌டியில் குடியிருந்து, ம‌ர‌வுரி த‌ரித்து, நில‌த்தில் உற‌ங்கிப்பாருங்க‌ள்! உல‌க‌ப்பொருட்க‌ள் மீதுள்ள‌ ப‌ற்றுத‌ல் விட்டுப்போகும்.

சுக‌ங்க‌ளின் மீதுள்ள‌ ப‌ற்றுத‌ல் நீங்கிய‌வ‌ர்க‌ளுக்கு நிர‌ந்த‌ர‌ ம‌கிழ்ச்சி கிடைக்காம‌லா போகும்??!

கோவிந்த நாமம் பாடு! கோவிந்த நாமம் பாடு!
கோவிந்த நாமம் பாடு! அட மூடனே!

கொஞ்ச‌மேனும் ப‌க‌வ‌த் கீதையைப் ப‌டியுங்க‌ள், ஒரு துளியேனும் க‌ங்கை நீரைப் ப‌ருகுங்க‌ள், ஒரு முறையேனும் முராரியை ப‌க்தியுட‌ன் நினையுங்க‌ள்.

அவ்வாறு செய்ப‌வ‌ர்க‌ளுக்கு ய‌ம‌த‌ர்ம‌ரிட‌ம் போராடும் நிலை வ‌ர‌வே வ‌ராது.

கோவிந்த நாமம் பாடு! கோவிந்த நாமம் பாடு!

கோவிந்த நாமம் பாடு! அட மூடனே!

மீண்டும் பிற‌ந்து, மீண்டும் இற‌ந்து, மீண்டும் பிற‌ப்போம் ஒரு தாயின் க‌ருவ‌றையில்.இந்த‌ ச‌ம்சார‌ சுழ‌ற்சியைக் க‌ட‌ந்து போவ‌து மிக‌வும் க‌டின‌ம்.


ஓ முராரி! உன‌து எல்லைய‌ற்ற‌ க‌ருனையினால் என்னைக் காப்பாற்று.

கோவிந்த நாமம் பாடு! கோவிந்த நாமம் பாடு!
கோவிந்த நாமம் பாடு! அட மூடனே!

தொட‌ர்ந்து கீதையை பாராய‌ன‌ம் செய்த‌லும், தொட‌ர்ந்து ப‌க‌வான் விஷ்னுவை ம‌ன‌தில் தியானித்து , அவ‌ன‌து ஆயிர‌மாயிர‌ம் அழ‌கை பாடுவ‌தே இன்ப‌ம் சேர்க்கும்.

வ‌றுமையில் வாடுப‌வ‌ர்க‌ளுக்கும், தேவையுள்ள‌வ‌ர்க‌ளுக்கும் செல்வ‌ங்க‌ளை ப‌கிர்ந்து கொடுப்ப‌தில் ம‌கிழ்ச்சி கொண்டு புண்ணிய‌ம் தேடுக்கொள்.

கோவிந்த நாமம் பாடு! கோவிந்த நாமம் பாடு!

கோவிந்த நாமம் பாடு! அட மூடனே!

சொத்துக்க‌ள் சுக‌ம் அல்ல‌, அத‌னால் ம‌ட்டுமே உண்மையான‌ ம‌கிழ்ச்சி கிட்டுவ‌தில்லை. இது எல்லா நேர‌ங்க‌ளிலும் ந‌ம‌க்கு பிர‌திப‌லிக்கும்

பெரும் ப‌ண‌க்கார‌ன் த‌ன‌து சொந்த‌ பிள்ளைக்கு ப‌ய‌ந்து வாழும் சூழ‌ல் உண்டாகும். இது தான் ப‌ண‌த்தின் நிலை உல‌கெங்கிலும்.

கோவிந்த நாமம் பாடு! கோவிந்த நாமம் பாடு!
கோவிந்த நாமம் பாடு! அட மூடனே!

ச‌ரியான‌ குருவின் வ‌ழி ந‌ட‌க்க‌ முய‌ற்சி செய்தால், ச‌ம்சார‌ வாழ்க்கையிலிருந்து விடுப‌ட‌லாம்.

குருவைச் ச‌ர‌ண‌டைந்து க‌ட்டுப்பாடுட‌ன் ம‌ன‌தை ந‌ல்ல‌வ‌ழியில் செலுத்தி வாழ்ந்தால், க‌ட‌வுள் உங்க‌ள் உள்ள‌த்தில் நிர‌ந்த‌ர‌மாக‌ குடியிருப்ப‌தை நீங்க‌ள் உண‌ர்வீர்க‌ள். ஆக‌வே...

கோவிந்த நாமம் பாடு! கோவிந்த நாமம் பாடு!

கோவிந்த நாமம் பாடு! அட மூடனே!

Wednesday, October 8, 2008

சரஸ்வதி பூஜை நல் வாழ்த்துக்கள்!


அனைத்து நண்பர்களுக்கும் அன்பு நெஞ்சங்களுக்கும் இனிய சரஸ்வதி பூஜை விஜயதசமி நல்வாழ்த்துக்கள். எல்லோர் வீடுகளிலும் மங்களம் பொங்கட்டும். எல்லோர் உள்ளங்களிலும் மகிழ்ச்சி பொங்கட்டும்.


அன்புடன்

ராம்குமார்Saturday, October 4, 2008

"கேயாஸ் தியரியும் இந்து தர்மமும்"


"கேயாஸ்" என்பது ஒரு கிரேக்க வார்த்தை.

'ஒழுங்கான ஒழுங்கற்ற தன்மை தான் கேயாஸ் என்பது. அதாவது ஒழுங்கற்றது போல் இருக்கும் ஒரு விஷயத்தில் ஒழுங்கைத் தேடும் இயல். உதாரணமாக வானிலை ஒருநாளைப் போல ஒரு நாள் இருப்பதில்லை. ஆனால் பருவ நிலை மாற்றங்கள் வருடம் முழுவதும் ஒரு சீராக குறிப்பிட்ட கால அளவுகளில் சொல்லி வைத்தாற்போல மாறி வருவதை நாம் காணமுடியும்.

இப்படியும் சொல்லலாம், ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாத நிகழ்வுகள் ஒரே சீராக நிகழ்வது கேயாஸ் தியரி என சொல்லலாம். உதாரணமாக கச்சா எண்ணெய் இருக்கும் நாடுகளில் ஏதாவது பிரச்சனை என்றால் நமது ஊரில் காய்கறி விலை ஏறுவது போலதான். இந்த நிகழ்வு எப்படி நிகழ்கிறது. கச்சா எண்ணெய் நாடுகளில் எண்ணெய் விலை உயர்த்தப்பட்டாலோ அல்லது உற்ப்பத்திக்கு பாதிப்பு வந்தாலோ நமது நாடுகளில் எண்ணெய் தட்டுப்பாடு வந்து விடும். அதனால் லாரிகளின் விலை அதிகரித்து அதனால் காய்கறி விலை அதிகரித்து அதையும் வாங்காமல் போனால் வீட்டு அம்மனியிடம் திட்டு வாங்க நேர்கிறது. எங்கோ நடக்கும் ஒரு செயல் நம்மை ஒரு சீரில்லாத ஆனால் ஒரு சீரான தொடர்புகளின் மூலம் வந்தடைகிறதே இதை கேயாஸ் தியரி என்று சொல்லலாம்.


இப்படி ஒழுங்கற்ற நிகழ்வுகள் ஒழுங்கான ஒரு நிகழ்வை ஏற்படுத்துவதை வைத்து கமல்ஹாசன் "தசாவதாரம்" என்ற படம் எடுத்து அதை நீங்க‌ள் கண்டுகளித்திருப்பீர்கள். சரி அதற்கும் நமது இந்து தர்மத்திற்கும் உள்ள தொடர்பு என்ன என்பதை இப்போது பார்கலாமா!இந்த‌ 'ஒழுங்கான ஒழுங்கற்ற ' என்ற‌ விதியை ந‌ம் இந்து த‌ர்ம‌த்திலே ப‌ல‌ ஆயிர‌ம் வ‌ருட‌ங்க‌ளாக‌வே மிக‌ச்ச‌றியாக‌ புரிந்து வைத்திருப்ப‌தை இங்கே பார்க்க‌லாம். உதார‌ண‌மாக‌ ப‌ருவ நிலை மாற்ற‌த்தைப்ப‌ற்றி மேலே பார்த்தோம் அல்ல‌வா. அப்ப‌டிப்ப‌ட்ட ப‌‌ருவ‌ மாற்றத்தின் அதாவ‌து 'ஒழுங்கான ஒழுங்கற்ற 'த‌ன்மையை ந‌ன்றாக‌ க‌னித்து அதை வ‌ரிசைப்ப‌டுத்தி ஒவ்வொரு மாத‌த்திற்கும் பெய‌ர் வைத்து ஒழுங்கற்ற மாற்ற‌ங்க‌ளின் ஒழுங்கு த‌ன்மையை க‌ண்கானித்திருக்கிறார்க‌ள். சித்திரை, வைகாசி என‌ தொட‌ங்கி ப‌ங்குனி வ‌ரை ப‌ருவ‌ கால‌ங்க‌ளுக்கு பெய‌ரிட்டு 'ஒழுங்கான ஒழுங்கற்ற ' தன்மையை உண‌ர்ந்த்து உப‌யோகப்ப‌டுத்தி இருக்கிறார்க‌ள்.மேலும், இவ்விசயம் மனிதர்களுக்குள்ளும் எப்படிப்பட்ட நிகழ்வுகளை ஏற்படுத்துகிறது என்பதையும் நன்கு உணர்ந்து ' நீ பிற‌ருக்கு ந‌ன்மை செய்தால் உன‌க்கு யாரேனும் ந‌ன்மை செய்வார்க‌ள்' , ஊரார் பிள்ளையை ஊட்டி வ‌ள‌ர்த்தால் த‌ன் பிள்ளை தானே வ‌ள‌ரும் என்ப‌து போன்ற‌ ப‌ழமொழிக‌ள் இந்த‌ 'ஒழுங்கான ஒழுங்கற்ற ' த‌ன்மையின் போக்கை ந‌ன்கு புரிந்து கொண்டு அதை ந‌ல்ல‌ வ‌ழியில் உப‌யோக‌ப்ப‌டுத்த‌ இந்து த‌ர்ம‌த்தில் ஏற்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌ ப‌ழ‌மொழிக‌ள் ஆகும்.

அதாவ‌து நாம் ஒருவ‌ருக்கு உத‌வினால் அந்த‌ உத‌வியின் விளைவு அதைப்பெற்றவரிடத்தில் ஒரு மகிழ்ச்சியான ந‌ல்ல‌ அலையைத் தோற்றுவித்து அந்த நபர் பிற‌ரிட‌மும் அதே அலையைத் தோற்றுவிப்பார். இது ஒரு தொட‌ர் நிக‌ழ்வாயின் அத‌ன் ப‌ல‌ன் வேறு யாரேனும் ஒருவ‌ர் மூல‌மாக‌ ந‌ம்மை வ‌ந்த‌டையும் என்ப‌து தான் 'கேயாஸ்'.

இது ம‌ட்டும் அல்லாம‌ல் ந‌ம‌து இந்து ச‌ம்பிர‌தாய‌த்தின் ப‌டி காக்காய்கு சோறு ப‌டைத்த‌ல், எறும்புக்காக‌ மாக்கோல‌ம் போடுத‌ல் போன்ற‌ ச‌ம்பிர‌தாய‌ங்க‌ளும் சார்புயிரிக‌ளின் வாழ்க்கைக்கும் ம‌னித‌ர்க‌ளின் வாழ்க்கைக்கும் உள்ள‌ ச‌ங்கிலித் தொட‌ர்பை ந‌ன்றாக‌ புரிந்து வைத்து உருவாக்கிய‌ ச‌ம்பிர‌தாய‌ங்க‌ளே.


"ப‌ல்லுயிர் வ‌ள‌ம் காப்போம்" என்று மேலை நாடுக‌ளும் ந‌ம‌து நாடும் அறிவிய‌ல் ரீதியான‌ பிர‌சார‌ங்க‌ளை அடுக்கி வைக்கின்ற‌ன‌. ஆனால் இந்து த‌ர்ம‌த்திலே இத‌ற்க்காக‌வே சொல்ல‌ப்ப‌டும் ச‌ம்பிர‌தாய‌ங்க‌ளை மூட‌ந‌ம்பிக்கை என்று தூற்றுகின்ற‌ன‌ர்.


மேலை நாட்டுக்கார‌ன் சுமார் முப்ப‌து வ‌ருட‌ம் முன்னாலே எடுத்துச் சொன்ன‌ "கேயாஸ் திய‌ரியை" க‌ட்டிக்கொண்டு அழுப‌வ‌ர்க‌ள் ந‌ம்நாட்டில் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னாலேயே சொல்லப்பட்டிருக்கும் ச‌ம்பிர‌தாய‌ங்க‌ளை புரிந்து கொள்வ‌தில் அக்கறை காட்டுவ‌தில்லை என்ப‌து ந‌கைப்புக்குறிய‌ வேத‌னை.


"கேயாஸ் திய‌ரி", "குவ‌ன்ட‌ம் திய‌ரி", "ரிலேட்டிவிட்டி திய‌ரி" இப்ப‌டி எதை எடுத்தாலும் அத‌ற்கு இந்து த‌ர்ம‌த்தில் உதார‌ண‌ம் காட்ட‌ முடுயும். அவைக‌ளைப் ப‌ற்றி அடுத்த‌ ப‌திப்பில் பார்ப்போம்.

Friday, October 3, 2008

தஜிகிஸ்தானில் கிறுத்துவ மத அமைப்புக்கு தடை

யோகோவாவின் சாட்சியம் என்ற கிறிஸ்தவ குழுவினரை தம் நாட்டில் இருந்து தடை செய்து தஜகிஸ்தான் நாட்டு இராணுவ நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.

அந்தக் குழு மதம்தொடர்பான சட்டங்களை மீறியதாகவும், சட்ட விரோதமாக மத புத்தகங்களை இறக்குமதி செய்ததாகவும் பாதுகாப்பு படைகளுக்காக பேசவல்ல அதிகாரி தெரிவித்தார். யோகோவாவின் சாட்சியத்தின் நடவடிக்கைகள் கடந்த ஜூன் மாத்தில் இருந்து தற்காலிகமாக இடை நிறுத்தி வைக்கப்பட்டன.

ஆனால் இப்போது அந்த அமைப்பு முழுமையாக தடை செய்யப்பட்டுவிட்டது.

இது போலவே இந்தியாவிலும் மத ரீதியான கட்டுப்பாடுகள் வைத்திருந்தால் கிருஸ்தவ அமைப்புகள் மதமாற்றம் செய்வதை கொஞ்சம் குறைத்துக்கொள்ளும் அல்லது பிற மதங்களை குறைந்த பட்சம் அவமதிக்காமலாவது இருக்கும். செய்வார்களா நமது அரசியல் ரவுடிகள் .

Thursday, October 2, 2008

திருமணத்தின் போது அக்னியை சுற்றி ஏழு அடிகள் நடப்பதற்கு என்ன பொருள்?

சம்ஸ்கிருதத்தில் இதை 'சப்தபதி' என்று கூறுவார்கள். அதாவது ஏழு அடிகள் மாப்பிள்ளையும் மணப்பெண்ணும் சேர்ந்து நடந்து வருவதாகும். அவ்வாறு ஏழு அடிகள் நடக்கும் போது மாப்பிள்ளை பெண்ணிடம் இறைவன் உனக்கு துணையிருப்பான் என்று கீழ்கண்டவாறு த‌னது பிரார்த்தனையைச் சொல்கிறான்!

"முதல் அடியில்: பஞ்சமில்லாமல் வாழ வேண்டும்"
"இரண்டாம் அடியில்: ஆரொக்கியமாக வாழ வேண்டும்"
"மூன்றாம் அடியில்: நற்காரியங்கள் எப்பொழுதும் நடக்க வேண்டும்"
"நான்காவது அடியில்: சுகத்தையும் , செல்வத்தையும் அளிக்க வேண்டும்"
"ஐந்தாவது அடியில் : லக்ஷ்மி கடாக்ஷம் நிறைந்து பெற வேண்டும்"
"ஆறாவது அடியில்: நாட்டில் நல்ல பருவங்கள் நிலையாக தொடர வேண்டும்"
"ஏழாவது அடியில்: தர்மங்கள் நிலைக்க வேண்டும்"
என்று பிராப்திப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த சம்பிரதாயத்தில் மனிதர்களிடம் இருக்கும் மிகவும் சூக்ஷமமான மனோவியல் விசயத்தை இந்து தர்மத்தில் உணர்த்தியுள்ளார்கள் நம் முன்னோர்கள். இரண்டு நபர்கள் ஒன்றாக ஏழு அடிகள் நடந்தால் அவர்களுக்குள் சினேகிதம் உண்டாகும் என்பது சாஸ்திரம். உதாரணமாக நாம் சாலையில் நடக்கும் போது அறிமுகமில்லாத ஒருவரை கடக்கும் போது சில விநாடிகள் ஒன்றாய் நடக்க நேர்ந்தால் நன்றாக கவனியுங்கள். ஏழு அடிகள் நடப்பதற்குள் நாம் அவர்களை வேகமாக தாண்டிவிடுவோம் அல்லது அவர்களை முன்னே போக விட்டுவிடுவோம். முழுமையாக ஏழு அடிகள் ஒன்றாக நடக்க மாட்டோம். இரண்டு மனிதர்கள் ஒன்றாக நடக்கும் போது அவர்களுக்குள் நடக்கும் மனோவியல் மாற்றங்கள் ஏழு அடிகளுக்குளாக நடந்துவிடும் என்பது ஒரு சூக்ஷமமான விஷயம். இதை மிகவும் நுணுக்கமாக ஆரய்ந்து நம் இந்து தர்மத்தில் அதை ஒரு சம்பிரதாயமாக வைத்திருப்பதை நாம் அனுபவித்து உணர வேண்டும். இந்து தர்மத்தில் எதுவும் மூடநம்பிக்கை இல்லை. பல நுணுக்கமான அறிவியல் மற்றும் மனோவியல் விஷயங்கள் நிறைந்தது இந்து தர்மம்.

இதை வாழ்ந்து தான் தெரிந்து கொள்ள வேண்டும். இன்னும் முயற்சிப்போம்....

விவாஹம் என்றால் என்ன?


மனிதகுலத்தின் நாகரீகம் மனிதன் ஆண் பெண் உறவை திருமணம் என்ற சடங்கின் மூலம் முறைப்படுத்துதலில் துவங்கியது என்று சொல்லலாம். காடுகளில் வாழும் மிருகங்கள் போலவே மனிதன் விரும்பிய ஆண் விரும்பிய பெண்ணுடன் கூடுவதாகவே நடந்து வந்தது. மனிதனுக்கு எதையும் தனது என்று சொந்தம் கொண்டாடும் இயற்கையான குணம் காரணமாக உறவுகளையும் உறுதிப்படுத்தி பாதுகாக்க நினைத்தான். அதன் பொருட்டு உருவான சடங்கு திருமணம்.

'விவாஹம்' என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு "சிறப்பாக வாழ்வது" என்று பொருள். தர்மங்களை தம்பதிகள் ஒன்றாக கடைபிடித்து வாழ்வது என்றும் பொருள்.

பகவான் ராம‌பிரானுக்கு சீதையை திருமணம் செய்து கொடுக்கிற போது ஜனகர் "என் மகளான சீதை இனி உன்னோடு சேர்ந்து தர்மத்தை கடைபிடிப்பாள்" என்று கூறுகிறார். அவ்வாறே விவாஹம் செய்யும் தம்பதிகள் சேர்ந்து வாழ வேண்டும் என்பது தான் விவாஹத்தின் தாத்பரியம்.