Sunday, April 28, 2013

முதலியார்களை வெறுத்த ராமசாமி நாயக்கர்!

சிலம்புச் செல்வர் ம பொ சிவஞானம்

ராமசாமி நாயக்கர் தனது விடுதலை பத்திரிக்கையில் "முதலியார் ஒழிப்பு இயக்கம்" என்ற தலைப்பில் ஓர் தலையங்கம் எழுதினார். ஏன்? அவர் ஒரு முதலியார் மீது கடும் கோபம் கொண்டார். எனவே முதலியார்களையெல்லாம் ஒழித்து விடவேண்டுமென புறப்பட்டு விட்டார். அது தான் ராமசாமி நாயக்கர்.

யார் அந்த முதலியார்? அவர் தான் தமிழகத்தின் முன்னால் முதல்வர் திரு. பக்தவத்சலம். அவர் ஒரு முதலியார்.

தமிழகத்தைப் பொறுத்த வரை ஒரு பெரிய வியாதி உண்டு. சைக்கோத்தனமான வியாதி, அது திராவிட சித்தாந்த வியாதி. இந்த வியாதியின் மூலப்பகுதி பிராமண எதிர்ப்பு வியாதி. ஆனால் இதை ஏதோ ஒரு அறிவுசார் சித்தாந்தம் போலவே நினைத்து ஒப்பாரி வைத்துக் கொண்டிருப்பவர்கள் அதிகம். இதன் ஆணிவேர் அடிவேர் தெரியாமல் மேடையில் வாந்தி எடுப்பவர்களின் திராவிட சித்தாந்த பார்ப்பன எதிர்ப்பை அப்படியே குடித்து விட்டு போகுமிடமெல்லாம் பதில் வாந்தி எடுப்பவர்களின் எண்ணிக்கை அளவில்லாதது.

ராமசாமி நாயக்கர் பேசியதெல்லாம் சித்தாந்தம் என நம்பிக்கொண்டிருக்கும் ஒரு பெருங்கூட்டம் அவரது ஜாதி எதிர்ப்பிற்கான உள்நோக்கங்களை முழுமையாக உணர்ந்திருக்க மாட்டார்கள் என்பதே உண்மை.

ராமசாமி நாயக்கரின் பிராமண எதிர்ப்பு என்பது ஒரு சித்தாந்தம் அன்று, மாறாக ராமசாமி நாயக்கர் எந்த தனிப்பட்ட நபர்கள் மீதெல்லாம் கோபம் கொள்கிறாரோ அந்த ஜாதிக்காரர்களை அப்படியே ஒழித்து விட வேண்டும் என்று கூறுகிறார். இப்படிப்பட்ட ஆத்திரம் மிகுந்த குணம் ஒரு வித மனப்பிறழ்வு நிலை என்றே தோன்றுகிறது.

இது குறித்த ஒரு செய்தியைப் பார்ப்போம். பொ சி அவர்களோடு நெருங்கிப் பழகிய திரு மு மாரியப்பன் அவர்கள் 'சிலம்புச் செல்வர் பொ சியுடன் ' என்கிற தனது புத்தகத்தில் பொ சி யுடனான தனது அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார். அதில் ராமசாமி நாயக்கர் பற்றிய குறிப்பைப் பார்ப்போம்.

"ராமசாமி நாயக்கர் தனது விடுதலை பத்திரிக்கையில் "முதலியார் ஒழிப்பு இயக்கம்" என்ற தலைப்பில் ஓர் தலையங்கம் எழுதினார். அதில் முதல்வர் பக்தவத்சலனார் சார்ந்திருக்கும் ஜாதிக்கு எதிராகத் தாம் ஒரு போராட்டம் துவங்கப் போவதாகவும் இதுவரை தான் நடத்தி வந்த பிராமணர் எதிர்ப்புப் போராட்டம் தகுந்த பலன் கிடைக்கவில்லை என்றும் எழுதியிருந்தார். மேலும் முதல்வர் பக்தவத்சலம் அவர்களைக் கடுமையாக வார்த்தைகளால் வசை பாடியிருந்தார்." 
சரி, முதலியார்களையெல்லாம் சப்ஜாடாக ஒழிக்க வேண்டும் என்று ராமசாமி நாயக்கர் ஏன் கூறினார்.

தமிழகத்தின் முதல்வராக பக்தவத்சலம் தேர்வான பின்னர், பல அரசு உயர் பதவிகளை முதலியார் ஜாதியினர் பெற்று வந்தனர். ராமசாமி நாயக்கரின் செல்வாக்கு பக்தவத்சலத்திடம் செல்லுபடியாகவில்லை.  அதன் பின் நடந்தவற்றையும் திரு. மு மாரியப்பன் கீழ்கண்டவாறு விவரிக்கிறார்.

"விவசாயத் துறையில் இயக்குனர் பதவியிலிருந்த பிராமணர் ஒருவர் ஓய்வு பெற்றதன் விளைவாக அந்தப் பதவி காலியாக இருந்தது. வெ ரா பிராமணர் அல்லாத ஒருவரை (தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவரா என குறிப்பில்லை)   அப்பதவிக்கு சிபாரிசு செய்தார். ஆனால் பக்தவத்சலமோ திரு க்ருஷ்ணமூர்த்தி என்பவரை நியமித்தார். "
 
மேற்கண்ட சம்பவம் வெ ரா வை கடுப்பேற்றியது, காரணம் நியமிக்கப் பட்ட க்ருஷ்ணமூர்த்தி என்பவரும் முதலியாரே. தனது செல்வாக்கு முதலியார்களிடம் பலிக்கவில்லை என்ற ஆத்திரம் ராமசாமி நாயக்கருக்கு தலைக்கு ஏறிவிட்டது. ஆக தனது சொந்த 'ஈகோ' பிரச்சனையை ஜாதிப்பிரச்சனையாக ஆக்குகிறார் வெ ரா. உடனே விடுதலையில் தலையங்கம் எழுதுகிறார்.

"முதலியார் ஒழிப்பு இயகம்" என்று!

ஆக ராமசாமி நாயக்கரை ஏதோ சித்தாந்த வாதி போல தூக்கிக் கொண்டாடிக் கொண்டிருக்கும் அவரது கால் நக்கிகளெல்லாம் கொஞ்சம் நின்று நிதானித்து புரிந்து கொள்ள வேண்டும். வெ ரா வின் எதிர்ப்புக்களெல்லாம் அவரது செல்வாக்கை நிலை நிறுத்தும் சுயநலப் போராட்டமாகத்தான் இருந்திருக்கிறதே ஒழிய சமூகப்போராட்டம் அல்ல என்பதை.

அப்படித்தான் யாரோ சில பிராமணர்கள் மீது தனக்கு இருந்த ஆத்திரத்தை ஒட்டு முத்தமாக பிராமண ஜாதியினர் மீது ராமசாமி நாயக்கர் திணித்திருக்கிறார் என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

இப்படி கொசுவிற்காக வீட்டைக் கொளுத்துவது என்பது சித்தாந்தமா அல்லது மனநோயா என்று வரலாற்றை உற்று நோக்குபவர்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும். தன் சுயநல ஆதிக்கமும் செல்வாக்கும் செல்லுபடியாகவில்லை என்றால் ஒரு சமூகத்தையே அழித்துவிடுவது என்கிற காட்டுமிராண்டித் தனத்தை தமிழகத்தில் ஒரு கூட்டமே சித்தாந்தமாகக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. அத்தகைய கூட்டத்தினரின் எண்ணிக்கையைப் பார்க்கும் போது அத்தகையோரின் அடிப்படை மனோநிலையின் மீதே சந்தேகம் உண்டாகிறது.


முதலியார்களே! ஜாக்கிரதை..! ராமசாமி நாயக்கரது பக்தர்களின் அடுத்த இனஒழிப்பு இலக்கு முதலியார் ஒழிப்பாகவும் இருக்கலாம்...!.

கொசுவிற்காக வீட்டைக் கொளுத்தும் மனப்பிறழ்வு நிலைக்கு இன்னொரு எடுத்துக் காட்டு:

1950களின் இறுதியில், தமிழக அதிகாரிகளில் பலர் மலையாளிகளாக இருப்பதைப் பட்டியல் போட்டார் ராமசாமி நாயக்கர்

உடனே முழக்கமிட்டார்

"இப்படியே நிலைமை தொடருமானால், ‘மலையாளிகள் எதிர்ப்பு மாநாட்டைநடத்த வேண்டியிருக்கும்"