Monday, January 4, 2010

இந்துக்களுக்கு சவால்!

தினமலர் செய்தி:

"அந்தமானைச் சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் 360 பேர், சபரிமலை செல்வதற்காக கடந்த 31ம் தேதி அந்தமானிலிருந்து எம்.வி.நங்கோரி கப்பல் மூலமாக, சென்னை புறப்பட்டனர். பக்தர்கள் என்பதால் தங்களுக்கு கப்பலில் சைவ உணவு வேண்டுமென கோரியிருந்தனர். இதை ஏற்றுக்கொண்ட துறைமுக நிர்வாகம், "கேட்டரிங் ' ஒப்பந்ததாரரிடமும் இதுகுறித்து வலியுறுத்தியிருந்தது. ஆனால், பக்தர்களுக்கு முதல் நாள் வழங்கிய உணவில், சாம்பாரில் "சிக்கன்' துண்டுகளும், ரசத்தில் "மீன்' துண்டுகளும் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், அய்யப்ப பக்தர்கள் கொதிப்படைந்தனர்.கப்பலில் இருந்த அதிகாரிகள், கேப்டனிடமும் எழுத்துப் பூர்வமாக புகார் செய்தனர். ஒப்புக்கு விசாரித்துவிட்டு கண்டும், காணாமல் இருந்துவிட்டதாக கூறப்படுகிறது.

அதே சமயம், வழக்கப்படி இம்மாதிரி அதிக அளவில் குறிப்பிட்ட கருத்துடன் வரும் பயணிகளுக்கு மாற்று ஏற்பாடு என்ன என்பது பற்றியும், அல்லது அவர்களுக்கு முன்கூட்டியே சைவ உணவு தரமுடியாது என்பதை ஏன் சுட்டிக்காட்டவில்லை என்பது குறித்தும், பதில் தரப்படவில்லை.அசைவம் கலந்த உணவு தந்ததால், பக்தர்கள் சாப்பிடாமல் அறவழி போராட்டம் நடத்தினர். கையில் கொண்டு வந்த பழங்களை சாப்பிட்டும், நான்கு நாட்கள் பட்டினியாகவும், நேற்று சென்னை வந்து சேர்ந்த பக்தர்கள் துறைமுகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அப்போது பிஜூபிள்ளை, செண்பகராஜா உள்ளிட்ட பக்தர்கள் நிருபர்களிடம் கூறியதாவது: சபரிமலை செல்வதற்காக 48 நாட்கள் விரதமிருந்து பய பக்தியோடு வந்தோம். கப்பலில் கொடுத்த உணவுப் பொருட்களால் நாங்கள் மன ரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளோம். "கேட்டரிங்' நிர்வாகம் வேண்டுமென்றே சைவ உணவுகளை அசைவத்தையும் சேர்ந்து எங்களுக்கு வழங்கி வேதனை படுத்தியுள்ளனர். இந்த நடைமுறை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எனவே, "பட்டினி' போராட்டம் நடத்தி, சென்னை வந்து சேர்ந்ததோம். அந்தமானிலிருந்து இன்னும் ஏராளமான பக்தர்கள் வர உள்ளனர். எங்களுக்கு ஏற்பட்ட வேதனை அவர்களுக்கும் வந்து விடக்கூடாது என்பதற்காகத்தான், சென்னைத் துறைமுகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். இவ்வாறு பகர்தகள் கூறினர். 48 நாள் விதரமிருந்து வரும் பக்தர்களை அசைவ உணவு கொடுத்தும், இளம்பெண்களுடன் உட்கார வைத்தும் கப்பல் நிர்வாகம் வேதனைப்படுத்தியுள்ளது".மேற்கண்ட தினமலர் செய்தியைப் படிக்கும் போது நடந்த நிகழ்ச்சி வெறும் ஐயப்ப பக்தர்களுக்கு நிகழ்ந்ததாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. இது இந்துவாக இருக்கும் ஒவ்வொருவருக்கும் விடப்பட்ட சவாலாகவே தெரிகிறது. உங்களுக்கும் நாளை இப்படித்தான் நடக்கும் என்று இந்துக்களுக்கு சவால் விடப்படுகிறது.நாம் இந்த சவாலை எப்படி எதிர் கொள்ளப் போகிறோம்? இவர்கள் பல கோட்சேகளையும் சாவர்க்கரையும் உருவாக்காமல் விடமாட்டார்கள் போலிருக்கிறதே!
____________________________________________________________

தினமலர் செய்தி போல சாமானியர்களின் தினசரி மத உரிமைகள் தொடர்ந்து அவமதிக்கப்பட்டு துன்புறுத்தப்படுமேயானால் நம்மைப் போன்ற சாமானியர்களும் வெளிப்படையான மதவாதியாவது தவிர்க்க முடியாததாகி விடும்.

சொந்த மத உரிமையை காத்துக்கொள்வதை மதவாதம் என்று நினைக்காமல் நாம் விழிப்புணர்வு அடைய வேண்டிய அவசியம் இருக்கிறது என்பதை கீழ்கண்ட வலைத்தளம் விளக்குகிறது.

நன்றி: www.hindujagruti.org

அம்பேத்கர் பிறந்தநாளை யாரும் கொண்ட்டாடுவதில்லை என்று, அம்பேத்கரை ஜாதி சங்க தலைவராக ஆக்கிவிட்டவர்கள் பகுத்தறிவு தாத்தாவிடம் புலம்பியதால் , ஜாதி ஓட்டு வங்கிக்காக ஒட்டு மொத்த இந்துக்களின் உணர்ச்சியையும் மதிக்காமல் தமிழ்ப்புத்தாண்டை சித்திரை ஒன்று அதாவது ஏப்ரல் பதினான்கிலிருந்து வேறு தேதியில் மாற்றிவிட்டார் பகுத்தறிவு தாத்தா.

ஓட்டு வியாபாரம் தான் பகுத்தறிவு என்பதும் இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதும் தான் பகுத்தறிவு என்பதும் வெளிச்சமாகத் தெரிகிறது.

ஆனால் இதற்கு இவர்கள் சொல்லும் காரணம் வள்ளுவர் ஆண்டு என்பது. அதாவது வள்ளுவர் பிறந்த ஆண்டு முதல் தமிழ் ஆண்டு கணக்கிடப்படுகிறதாம். வள்ளுவரின் பர்த் சர்டிபிகேட் பார்த்துதான் இந்த பகுத்தறிவு வாதிகள் வள்ளுவர் ஆண்டைக் கணித்தார்களோ என்னமோ!

ஆனால் உண்மையில் 'ஜாதீய அடிப்படைக் காரணங்களுக்காகவே' ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பண்டைய தமிழ் விவசாயிகளால் உருவாக்கப்பட்டு, அறிவியல் ரீதியாகவும் கால நிலைப் பற்றிய கணிப்பாகவும் பயன்படுத்தப்பட்டு பாரம்பரியமாக கோடிக்கணக்கான மக்களால் கொண்டாடப்பட்டு வந்த தமிழ்ப் புத்தாண்டு தினத்தை ஒரு குறுகிய அரசியல் வியாபாரத்திற்காக ஒரு தனிமனிதன் தன் சுய நலத்திற்காக‌ மாற்றுவது சுத்த அயோக்கியத்தனம்.

இத்தகைய அயோக்கியத் திருடர்களுக்கு இந்துக்கள் காலத்திற்கும் ஓட்டு போட்டு, நம் சொந்த கலாச்சாரத்திற்கு ஆட்காட்டி விரலால் ஆப்பு வைத்துக்கொள்ளாதீர்கள். அதில் உறுதியாக இருங்கள். சொந்த நாட்டில் மத உரிமைக்காகப் பேசுவது மதவாதமாகாது என்பதை ஒவ்வொரு இந்துக்களும் புரிந்துகொள்ளுங்கள். இல்லையேல் நாளைய நம் தலைமுறைக்கு பாதுகாப்பு நம்மிடம் இல்லை.

பாரத் மாதாகீ ஜெய்! ஹிந்து தர்ம கீ ஜெய்! வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

64 comments:

Mohen said...

Vegetarian food will definitely be provided in a ship. This seems to be a deliberate attack on Ayyappa devotees. Govt. should take stringent action against the authorities concerned.

எப்பூடி ... said...

நான் கடவுள் நம்பிக்கை உள்ளவன்தான், ஆனால் உங்கள் அளவிற்கு உள்ளிறங்கி அலசுபவன் அல்ல என்பதால் உங்கள் தளத்தின் பதிவுகளை வாசிப்பது புதுமையாக உள்ளது

hayyram said...

நன்றி எப்பூடி ..
தொடர்ந்து வாருங்கள். நிறைய பேசுவோம்.

thiruchchi said...

இந்து ம‌த‌த்திற்க்கு இதை விட‌ மிக‌ப் பெரிய ஆப‌த்து சாமியார் போல‌ வேட‌மிட்டு செக்ஸ் வக்கிர‌ங்க‌ளை செய்யும் போலி சாமியார்க‌ளால் தான்.

ஆதி ச‌ங்க‌ர‌ர் அசோக‌ருக்கு எதிராக‌ போராட்ட‌ம் ந‌ட‌த்தினாரா ? விவேகான‌ந்த‌ர் பிரிட்டிஷ் ஆட்சியாள‌ரிட‌ம் இந்து விரோத‌ அர‌சு என்று போராட்ட‌ம் ந‌ட‌த்தினாரா?

புத்த‌ர், ஆதி ச‌ங்க‌ர‌ர், விவேகான‌ந்த‌ர் போன்ற‌ அன்பும், அறிவும் நிறைந்த‌ துற‌விக‌ள் தான் முக்கிய‌ தேவை.

ஆனால் காசும், காம‌மும் உடைய‌வ‌ர்க‌ள் காவியை க‌ட்டிக் கொண்டு திரிகிறார்க‌ள்.ப‌த்திரிகையில் தின‌மும் ஒரு சாமியார் செய்தி, பெண்க‌ளைக் க‌ற்ப்ப‌ழித்து விட்ட‌தாக‌ போலீசில் புகார்,அந்த‌ "சாமியார்"போலீசிட‌ம் சிக்காம‌ல், டில்லி, மும்பை என்று ப‌துங்குவார்.

hayyram said...

//ஆதி ச‌ங்க‌ர‌ர் அசோக‌ருக்கு எதிராக‌ போராட்ட‌ம் ந‌ட‌த்தினாரா ? விவேகான‌ந்த‌ர் பிரிட்டிஷ் ஆட்சியாள‌ரிட‌ம் இந்து விரோத‌ அர‌சு என்று போராட்ட‌ம் ந‌ட‌த்தினாரா?///

அவர்களுக்காவது கொஞ்சநஞ்ச மரியாதை நம் மதம் மீது இருந்தது. ஆனால் இப்போதைய செக்யூலரிச அரசுகள், அரசியல் வாதிகள் அவர்களை விட கேவலமானவர்கள். இதனால் இவர்களை எதிர்ப்பது காலத்தின் கட்டாயமாகிறது.

thiruchchi said...

பிரிட்டிஷ் ஆட்சியாளர் இந்து மதத்தின் மீது மரியாதை வைத்து இருந்தார்களா? விவேகானந்தர் செய்தது என்ன? மேலை நாட்டினர் வியக்கும் வண்ணம் இந்து மத உண்மைகளை எடுத்து வைத்தார். அவர்களும் புரிந்து கொண்டனர். முக்கியம் இல்லாத விடயங்களில் சக்தியை விரயம் செய்து விட்டு உள்ளதும் போச்சுடா என்ற நிலைக்கு வந்து விடாதீர்கள். எல்லா இந்துக்களிடமும் சரியான இந்து மதத்தை எடுத்து செல்லுங்கள். அவர்களின் மனதில் புத்துணர்ச்சியும், நம்பிக்கையும் ஏற்படுத்தும் சக்தி இந்து மதக் கருத்துக்களுக்கு உண்டு. இந்து மதத்தின் வெற்றி அதைப் பின்பற்றுபவர்களின் ஆன்மீக முன்னேற்றம் மூலம், உண்மையை வெளிப் படுத்துவதின் மூலம் அடையப் பெற்றுள்ளது.காசு பணம், அரிவாள் கத்தியை இந்து மதம் ஒரு போதும் நம்பியதில்லை.

hayyram said...

///பிரிட்டிஷ் ஆட்சியாளர் இந்து மதத்தின் மீது மரியாதை வைத்து இருந்தார்களா? ///

வெள்ளைக்காரன் மரியாதை வைக்கவில்லை. ஆனால் ஒரு கருணாநிதி செய்யும் அளவிற்கு நேரடியான அவமதிப்புகளில் அதுவும் தொடர்ச்சியாக ஈடுபட்டதில்லை. ஏதோ சாமியை கும்பிட்டுப் போகட்டும், நம்மை எதிர்க்காமல் சுரண்ட விட்டால் சரி என்று சுரண்டும் வேலையில் தான் அவனதுமும்மரம் அதிகம் இருந்தது. அப்படியே அவன் அவமதித்தாலும் அவன் வெளியிலிருந்து வந்தவன். ஆனால் நம்முடனே பிறந்து நம் மண்ணின் சோற்றையே தின்று சொந்த சகோதரர்களின் வழிபாட்டு முறைகளை கூட இருந்தே அவமானப்படுத்துபவர்கள் வெள்ளையனை விட மோசமானவர்கள். துரோகிகள். இவர்களை அடையாளம் கண்டு எதிர்க்க வேண்டியது கடமை. காலத்தின் கட்டாயம். அதைப் புரிந்து கொள்ளுங்கள்.
//காசு பணம், அரிவாள் கத்தியை இந்து மதம் ஒரு போதும் நம்பியதில்லை//

பின்னர் ராமனும் கிருஷ்ணனும் எதுக்கு ஆயுதம் தூக்கினார்களாம்?

வால்பையன் said...

என் பின்னூட்டம் ஏன் வரவில்லை!?

ரொம்ப சரியா கேட்டுபுட்டேனோ!?

hayyram said...

வால்,

தவறுதலா உங்க ரெண்டு பின்னூட்டத்தையும் பப்ளிஷ்கு பதிலா ரெஜெக்ட் க்ளிக் பன்னிட்டேன். அதான் இதுல வரல. ஆனா மெயில்ல பத்தரமா இருக்கு.
//கொசுறு: புதுப்பேட்டை என்ற படத்தில் தனுஷ் முதன் முதலாக குற்றம் செய்யப்போவார். கூட வந்தவன் கேட்பான்
"என்ன பயமா இருக்கா?"
"ம்ம்ம்"
"பரவாயில்லை, பயம் தான் நம்மள காப்பாத்தும்"//
அதுவும் சரிதான், தப்பு பண்றவங்கல்லாம் பயபட்டு தான் ஆகனும்!//

அப்பறம்
//அய்யப்பனே புலிபால் குடிச்சவர் தானே! அதல்லாம் கண்டுக்க மாட்டார், போயிட்டு வரச்சொல்லுங்க! //
இந்த ரெண்டு தானே!

வால்பையன் said...

அதே!

நன்றி

Mohen said...

//அய்யப்பனே புலிபால் குடிச்சவர் தானே! அதல்லாம் கண்டுக்க மாட்டார், போயிட்டு வரச்சொல்லுங்க! //

பதுத்தறிவுத் தந்தையின் "சிஷ்ய கோடிகள்" எல்லாம், பிள்ளையார் சிலையை வெறும் மண் என்று சொல்லி உடைத்தார்கள். பெரியார் சிலையை உடைத்தால் மட்டும் அது பெரியாரையே அடித்ததாக எண்ணி வெகுண்டெழுவார்கள். கேட்டா, அது தான் பதுத்தறிவும்பாய்ங்க !!!


By the way, புலிப் பால் குடிச்சது ஐயப்பனில்லீங்கோ. அது அவர் தாய்க்காக கொண்டு வந்தது.

hayyram said...

//புலிப் பால் குடிச்சது ஐயப்பனில்லீங்கோ. அது அவர் தாய்க்காக கொண்டு வந்தது. ///

உன்மை. ஆனால் ஆன்மீகம், கலாச்சாரம் என்றால் என்னவென்றே தெரியாமல் அதை அவமதிப்பதே குலட்த்தொழிலாகவும், அதையே பாகுத்தறிவு என்று மூடநம்பிக்கையுடன் உலவும் நாத்திக மாதத்தைச் சேர்ந்தவர்களை நம் மக்கள் முதலில் விரட்ட வேண்டும். கூட இருந்தே குழி பறிக்கும் துரோகிகளை விரட்டினால்ல் தான் இந்துக்களுக்கு நிஜ எதிரியுடன் போராட அவகாசம் கிடைக்கும்.

hayyram said...

//நாத்திக "மாதத்தைச்" சேர்ந்தவர்களை// "மதத்தை" என்று படிக்கவும்

வால்பையன் said...

//
By the way, புலிப் பால் குடிச்சது ஐயப்பனில்லீங்கோ. அது அவர் தாய்க்காக கொண்டு வந்தது. //

யார் அவரோட தாய்!

நான் பெரியாரிஸ்ட் கிடையாது! பெரியாருக்கு மாலை போடுவதும் பகுத்தறிவற்ற செயல் என்பது தான் என் கருத்தும்

வால்பையன் said...

//துரோகிகளை விரட்டினால்ல் தான் இந்துக்களுக்கு நிஜ எதிரியுடன் போராட அவகாசம் கிடைக்கும். //

நிஜ எதிரி!?

பூனைகுட்டி வெளியே வருது!

hayyram said...

//பூனைகுட்டி வெளியே வருது!//

வாட் பூனைக்குட்டி?

thiruchchi said...

//காசு பணம், அரிவாள் கத்தியை இந்து மதம் ஒரு போதும் நம்பியதில்லை. பின்னர் ராமனும் கிருஷ்ணனும் எதுக்கு ஆயுதம் தூக்கினார்களாம்?//

இராம‌ரோ, கிருட்டிண‌ரோ,வேறு எந்த‌ இந்து ம‌த‌ முக்கிய‌ஸ்தர்க‌ளோ, ம‌த‌க் கார‌ண‌ங்க‌ளுக்காக‌ ஆயுத‌ம் ஏந்த‌வில்லை.

காம‌க் கொடூர‌ அயோக்கிய‌ர்க‌ளை, அப்பாவிக‌ளைக் கொடுமைப் ப‌டுத்தும் கய‌வ‌ர்க‌ளை, ச‌ர்வாதிகார‌ கொடுங்கோல‌ர்க‌ளை, வ‌லிமை மிக்க‌ கெட்ட‌வ‌ர்க‌ளை எதிர்க்க‌ ஆயுத‌ம் ஏந்தினார்க‌ள்.

யானையை ஏற்றி அப்ப‌ரைக் கொல்லும‌ப‌டி ஆணையிட்டான் ம‌கேந்திர‌ ப‌ல்ல‌வ‌ன். யானை அருகில் வ‌ரும் போது கூட‌ அப்ப‌ர் அஞ்ச‌வில்லை.

உங்களால் க‌ருணாநிதியை கூட‌ ச‌மாளிக்க‌ முடிய‌வில்லை. அவ‌ரைப் பார்த்து ப‌ல்லைக் க‌டிக்கிறீர்க‌ள். இத‌த‌னைக்கும் அவ‌ர் பெய‌ர‌ள‌வுக்கு நாத்தீக‌வாதியாக‌, ம‌ஞ்ச‌த் துண்டு ம‌கானாக‌ இருக்கிறார். அப்ப‌ரிடம் ச‌ரியான‌ ஆத்மீக‌ம் இருந்த‌து, அதை முத‌லில் க‌ற்றுக் கொள்ளுங்க‌ள், பயிற்சி செய்யுங்க‌ள், அப்போது எல்லா ம‌க்க‌ளுக்கும் செம்மை நினைக்கும் ம‌ன‌ நிலை உருவாகும். அப்போது நீங்க‌ள் மக்களிட‌ம் செல்லுங்க‌ள். மக்கள் நீங்க‌ள் சொல்வ‌தைக் கேட்பார்க‌ள்.அவ‌லை நினைத்துக் கொண்டு உர‌லை இடித்து உப‌யோக‌ம் என்ன‌?

hayyram said...

//இராம‌ரோ, கிருட்டிண‌ரோ,வேறு எந்த‌ இந்து ம‌த‌ முக்கிய‌ஸ்தர்க‌ளோ, ம‌த‌க் கார‌ண‌ங்க‌ளுக்காக‌ ஆயுத‌ம் ஏந்த‌வில்லை.//
நல்ல நகைச்சுவையாக பேசுகிறீர்கள். ராமரோ க்ருஷ்னரோ வாழ்ந்த காலத்தில் மதங்கள் ஏது?

//காம‌க் கொடூர‌ அயோக்கிய‌ர்க‌ளை, அப்பாவிக‌ளைக் கொடுமைப் ப‌டுத்தும் கய‌வ‌ர்க‌ளை, ச‌ர்வாதிகார‌ கொடுங்கோல‌ர்க‌ளை, வ‌லிமை மிக்க‌ கெட்ட‌வ‌ர்க‌ளை எதிர்க்க‌ ஆயுத‌ம் ஏந்தினார்க‌ள்.//

அது தவறில்லையா?

thiruchchi said...

//இராம‌ரோ, கிருட்டிண‌ரோ,வேறு எந்த‌ இந்து ம‌த‌ முக்கிய‌ஸ்தர்க‌ளோ, ம‌த‌க் கார‌ண‌ங்க‌ளுக்காக‌ ஆயுத‌ம் ஏந்த‌வில்லை.//
/நல்ல நகைச்சுவையாக பேசுகிறீர்கள். ராமரோ க்ருஷ்னரோ வாழ்ந்த காலத்தில் மதங்கள் ஏது?/


இராமரையும், கிருட்டிணரும் ஆயுதம் ஏந்தியதை மேற்கோள் காட்டியது பொருத்தம் இல்லாதது என்பதை நீங்கள் இப்போதாவது உணர்ந்தால் சரி.

இராமர் , கிருட்டினர் ஆயுதம் ஏந்தும் பணியில் இருந்தனர் - அவர்களது கடமை, போலீசு இராணுவத்தினரின் கடமையைப் போன்றது. போலீசும், இராணுவத்தினரும் சுடுவது தங்கள் கடமையை செய்ய. ஆசைப் பட்டோ முன் விரோதம் காரணமாகவோ, வெறுப்புக் கருத்துக்களினால் உந்தப் பட்டோ ஆயுதம் எடுப்பதுதான் தவறு. சாதாரணமான இந்து சிவிலியன் மதக் காரணங்களுக்கு ஆயுதம் எடுப்பது என்றால், அவனுக்கும் ஜிஹாதி இஸ்லாமியருக்கும் என்ன வித்தியாசம்? அப்புறம் உங்களுக்கு தனி மதம் எதற்கு? பேசாமல் ஜிஹாதி மார்க்கத்திலே இணைய வேண்டியது தானே? இராமர், கிருட்டினர் காலத்தில் வேறு மார்க்கங்கள் இல்லை, அவர்கள் மதக் காரணக்களுக்காக ஆயுதம் எடுக்கவும் இல்லை. ஆதி சங்கரர், விவேகான ந்தர் , தியாகராசர் காலத்தில் பிற மதங்கள் இந்தியாவிலே வேரூன்றி இருந்தன, ஆனாலும் அவர்கள் ஆயுத வழியை நினைத்தும் பார்க்கவில்லை. எனவே எப்போதுமே இந்து மதத்தில் மதத்தை நிலை நிறுத்த ஆயுதங்களை, போராட்டங்களை ஆர்ப்பாட்டங்களை நம்பியதோ, உபயோகித்ததோ இல்லை.

நான் எழுதுவது நகைச் சுவையா என்பதைக் காலம் தான் தீர்மானிக்கும். ஆனால் நீங்கள் இதே ரேஞ்சில் எழுதினால் அது உங்கள் எழுத்துக்களை வில்லன் ரேஞ்சுக்கு கொண்டு போய் விடும் அபாயம் உள்ளது.

hayyram said...

//இதே ரேஞ்சில் எழுதினால் அது உங்கள் எழுத்துக்களை வில்லன் ரேஞ்சுக்கு கொண்டு போய் விடும் அபாயம் உள்ளது//
என்னடா இது வம்பா போச்சு, நான் என்னமோ இப்பவே இல்லாரும் அருவாள் எடுங்கள், குத்துங்கள், வெட்டுங்கள், ஓடுங்கள், விரட்டுங்கள் என்று கொலை செய்யச் சொன்னது மாதிரி அவசர அவசரமாக என் மீது வில்லன் பட்டம் சுமத்த பார்க்கிறீர்களே!

இந்த பதிவு இந்துக்களாக இருப்பவர்கள் தம்மைச் சுற்றி நடக்கும் சூழ்ச்சிகளைப் புரிந்து கொள்ளுங்கள் என்று எச்சரிக்கை செய்யும் விதமாக தானே இருக்கிறது. அது கூடவா தவறு?

self defensing தவறு என்று இந்து மதத்தில் சொல்லப்படவில்லையே!
ஆதி சங்கரர் கூட self defensing ஆள் தானே! சங்கரர் போல இந்துக்கள் ஒவ்வொருவரும் விழிப்புடன் தங்களைத் தற்காத்துக் கொள்ள வேண்டும் என்பதே என் கருத்து.

ஆனால் நம் மக்கள் self defensing செய்யும் அளவிற்கு கூட விழிப்படைய வில்லை என்பதை அவர்களுக்கு எடுத்துச் சொல்லியே ஆக வேண்டும்.

தங்களைச் சுற்றி நடக்கும் சூழ்ச்சிகள் பற்றி தெரிந்து கொள்ளாமல் விட்டில் பூச்சிகளாக அதற்குள்ளேயே விழுந்து விடுகிறார்கள். அதைச் சொல்லித்தான் ஆகவேண்டியிருக்கிறது..

மீண்டும் சொல்கிறேன். சொந்த மத உரிமையை சொந்த மண்ணில் காப்பாற்றிக்கொள்ள நினைப்பது மதவாதம் ஆகாது.

நீங்கள் இதே ரேஞ்சுக்கு என்னை வில்லனாக சித்தரிக்க முயன்றால் நான் எங்கே பிராமணன் சோ தாத்தாவிடம் சொல்லிவிடுவேன். அவர் உங்களை கட்டிப்போட்டு கதா காலட்சேபம் செய்வார், அப்போது தான் நீங்கள் புரிந்து கொள்ளப் போகிறீர்கள்..

thiruchchi said...

சோ தாத்தா க‌ற்ப‌னையாக‌, "எங்கே பிராம‌ண‌ன்" தொட‌ரில் அசோக் என்னும் பிராம‌ண‌ன், சாஸ்திரிக‌ள் என்று மெகா சீரிய‌ல் எடுத்து பிலிம் காட்டி வ‌ருகிறார். நிஜ‌த்தில் "பிராம‌ண‌ன்" என்று சொல்லிக் கொள்பவ‌ர் கோவிலிலே த‌ப்பும் செய்து தானே அத‌னை மொபைலிலே ப‌ட‌ம் எடுக்கும் ரேஞ்சுக்கு சென்று விட்ட‌ன‌ர். க‌ண்ணில் காணும் "பிராம‌ண‌ர்க‌ள்" தேவ‌னாத‌ன், ர‌வி சுப்பிர‌ம‌ணிய‌ன், ஆடிட்ட‌ர் ராதாகிருட்டிண‌‌ன்.... இப்ப‌டி ப‌ல‌ரும் முறை த‌வ‌றிய‌தை ஆராய்வ‌தை விட்டு விட்டு, க‌ன‌வுல‌க‌ சிருஷ்டியான‌ அசோக்கை அல‌சி ஆராய்ந்து கொண்டு இருக்கின்ற‌ன‌ர்.

இதிலே என்னையும் ம‌ய‌க்க‌ வ‌ழியில் த‌ள்ள‌ப் பார்க்கிறீர்க‌ள்.

hayyram said...

//காம‌க் கொடூர‌ அயோக்கிய‌ர்க‌ளை, அப்பாவிக‌ளைக் கொடுமைப் ப‌டுத்தும் கய‌வ‌ர்க‌ளை, ச‌ர்வாதிகார‌ கொடுங்கோல‌ர்க‌ளை, வ‌லிமை மிக்க‌ கெட்ட‌வ‌ர்க‌ளை எதிர்க்க‌ ஆயுத‌ம் ஏந்தினார்க‌ள்.//
ராமரும் க்ருஷ்னரும் மேற்சொல்லப்பட்டவர்களை அழிக்க ஆயுதம் ஏந்தினார்கள். அதாவது அவர்கள் அன்று மக்களைக் காக்கும் பொறுப்பில் இருந்தார்கள் அதைச் செய்தார்கள். ஆனால் இன்றைக்கு ஆள்பவர்கள் எல்லாருமே //காம‌க் கொடூர‌ அயோக்கிய‌ர்க‌ளை, அப்பாவிக‌ளைக் கொடுமைப் ப‌டுத்தும் கய‌வ‌ர்க‌ளை, ச‌ர்வாதிகார‌ கொடுங்கோல‌ர்க‌ளை, வ‌லிமை மிக்க‌ கெட்ட‌வ‌ர்க‌ளை//
இப்போது நம் நிலை என்ன? நம்மைக் காக்கப் போகிறவர் யார்? இது போன்றவர்கள் கையில் சிக்கித்தவிப்பதைத் தவிற நம் போன்ற சாமானியனுக்கு வேறு வழியில்லை என்றால் இந்த கொடுங்கோலர்களிடமிருந்து வெளியே வருவதற்கு என்னவழி? ஒவ்வொரு கேள்விக்கும் தனித்தனி பதில் சொன்னால் நலம்.

hayyram said...

//க‌ண்ணில் காணும் "பிராம‌ண‌ர்க‌ள்" தேவ‌னாத‌ன், ர‌வி சுப்பிர‌ம‌ணிய‌ன், ஆடிட்ட‌ர் ராதாகிருட்டிண‌‌ன்.... இப்ப‌டி ப‌ல‌ரும் முறை த‌வ‌றிய‌தை ஆராய்வ‌தை விட்டு விட்டு, க‌ன‌வுல‌க‌ சிருஷ்டியான‌ அசோக்கை அல‌சி ஆராய்ந்து கொண்டு இருக்கின்ற‌ன‌ர்//

மேற்சொன்னவர்கள் பிராமணராக வாழவில்லை என்பதாலேயே அண்ணன் சோ, பிராமணன் என்றால் எப்படி வாழவேண்டும் என்பதை அசோக் மூலம் காட்டுகிறார். அதாவது இத்தோடர் பிராமணர்களுக்கு தங்களை நினைவு படுத்திக்கொள்ள உதவும் தொடர். பிராமணர்கள் விட்டு விட்டுப் போன வாழ்க்கையின் உயரிய அம்சங்களை திரும்பிப்பார்க்கச் செய்யும் தொடர்.

எனவே ஒவ்வொரு பிராமணரும் அசோக்கின் வாழ்க்கை நமக்கானது என்று புரிந்து கொண்டு அந்த அளவிற்கு வாழ வேண்டிய நாம் இப்போது எப்படி வாழ்கிறோமென்று ஒப்பிட்டுப் பார்த்து தம்மை உயர்த்திக் கொள்ள வேண்டும். அதற்குத்தான் இந்த தொடர். ஒவ்வொரு பிராமணரும் நிஜமாகவே உயர்ந்த கருத்துக்களோடு ஒட்டி வாழத்துவங்கினால் எதிர்காலத்தில் பிராமணனென்பது உயர் ஜாதி அடையாளம் அல்ல அது ஒரு வாழ்க்கை முறை என்பதை எல்லோரும் புரிந்து கொள்வார்கள். அப்படி சூழ்நிலை உருவாவது பிராமணர்களுக்கு நல்லது. அதை எத்தனை பிராமணர்கள் செய்து பார்க்கப் போகிறார்கள் என்பது வாழ்பவர்கள் கையில் தான் இருக்கிறது.

அதை புரிந்து கொள்ளாமல் தி க வினரைப் போல திட்டுவதே வேலை என்றிருக்கிறீர்களே.

thiruchchi said...

அர‌சிய‌லில் யார் உத்த‌ம‌ம்? க‌ருணானிதி ச‌ரியில்லை என்றால‌ ஜெயா ம‌ட்டும் ஒழுங்கா? அராஜ‌க‌ம், ல‌ஞ்ச‌ம், அதிகார‌ துஷ்பிர‌யோக‌ம் இப்ப‌டி எல்லாவ‌ற்றிலும் க‌ருணானிதியை விஞ்சி செய‌ல‌ப‌ட்டார் ஜெயா. ம‌க்க‌ள் க‌டுப்பாகி விட்ட‌ன‌ர்.


இந்தியாவீல் ந‌ல்ல‌ ஆன்மீக‌ வாதிக‌ளின் க‌ருத்துக்க‌ள் அர்சிய‌லை செம்மைப் ப‌டுத்தி வ‌ந்துள்ள‌ன‌.
ஆனால் இப்பொது அரசிய‌ல்‌ வாதி விய‌க்கும் அளவுக்கு காம‌க் கொடூர‌ங்க‌ளை செய்கிறார்க‌ள் ஆன்மீக‌வாதி என்ற‌ போர்வையில் இருப்போர். முத‌லில் உங்கள் மத‌த்தை செம்மைப் ப‌டுத்துங்க‌ள். அதை ச‌ரி செய்ய‌ முத‌லில் ச‌ரியான‌ ஆன‌மீக‌த்தை வெளிப்ப‌டுத்துங்க‌ள், எல்லாம் ச‌ரியாகும். ஆனால் நீங்க‌ளோ அர‌சிய‌ல்வாதி பாணியில் போராட்ட‌ம், பொங்கி எழு என்கிறீர்க‌ள்.

hayyram said...

//இப்போது நம் நிலை என்ன? நம்மைக் காக்கப் போகிறவர் யார்? இது போன்றவர்கள் கையில் சிக்கித்தவிப்பதைத் தவிற நம் போன்ற சாமானியனுக்கு வேறு வழியில்லை என்றால் இந்த கொடுங்கோலர்களிடமிருந்து வெளியே வருவதற்கு என்னவழி? ஒவ்வொரு கேள்விக்கும் தனித்தனி பதில் சொன்னால் நலம்.//
கேள்விகள் காத்திருக்கிறது. எனது இந்த கேள்விகளுக்கான விளக்கம் கொடுத்தால் மகிழ்வேன்.

hayyram said...

கேள்விகள் காத்திருக்கிறது. எனது இந்த கேள்விகளுக்கான விளக்கம் கொடுத்தால் மகிழ்வேன்.

மேலும் ஒரு வினா? உங்கள் கழுத்தில் கத்தியோ, தலையில் துப்பாக்கியோ வைத்து உங்களை மதம் மாறுங்கள் என்று கட்டாயப்படுத்தினால் என்ன செய்வீர்கள்? (மாறவீல்லை என்றால் கொல்வார்கள்) அப்போதும் ஆன்மீகத் தத்துவங்கள் பற்றி பேசி, பஜனை பாடிக்கொண்டு சும்மா இருப்பீர்களா?(ஒரீசாவில் பல இந்துக்கள் அப்படித்தான் மதம் மாற்றப்பட்டார்கள் என்பது வரலாறு)

thiruchchi said...

பிர‌ச்சினையைப் புரிந்து கொள்ளாம‌ல் எழுதுகீறீர்க‌ள். புரையோடிக் கிட‌க்கும் புண்ணை, அழுகி நாறும் புண்ணை சிகிச்சை செய்து ச‌ரி செய்ய‌ம‌ல் புண்ணுக்கு புனுகு பூசுகிறார் சோ. அதைப் புரிந்து கொள்ள‌ உங்க‌ளால் இய‌ல‌வில்லை.

hayyram said...

//அதைப் புரிந்து கொள்ள‌ உங்க‌ளால் இய‌ல‌வில்லை.//

பலருக்கும் சரியாகப் புரிவது உங்களுக்குத் தவறாகப் புரிந்தால் காலம் தான் பதில் சொல்ல வேண்டும். பொறுத்திருந்து பார்ப்போம்.

//அழுகி நாறும் புண்ணை சிகிச்சை செய்து ச‌ரி செய்ய‌ம‌ல் //

எப்படி பட்ட சிகிச்சை இருக்க வேண்டும் என்கிறீர்கள்? கொஞ்சம் விளக்கமாகச் சொல்வீர்களா?

thiruchchi said...

//உங்கள் கழுத்தில் கத்தியோ, தலையில் துப்பாக்கியோ வைத்து உங்களை மதம் மாறுங்கள் என்று கட்டாயப்படுத்தினால் என்ன செய்வீர்கள்? //

அந்த‌ மாதிரி நேர‌த்தில் எதிர்ப்புக் காட்ட‌லாம். ஆனால் நீங்க‌ள் உப்பு பெறாத‌ விட‌ய‌த்திற்க்கு எல்லாம் முக்கிய‌த்துவ‌ம் கொடுக்கிறீர்க‌ள்.

கழுத்தில் க‌த்தியை வைத்தால் கூட‌ ம‌த‌ம் மாற‌ மாட்டேன் என்று கூறும் அளவுக்கு ம‌ன‌ உறுதியை ஒவ்வொரு இந்துவுக்கும் உங்க‌ளால் உருவாக்க‌ முடியாதா?

ப‌ஜ‌னை பாட‌லும் , த‌த்துவ‌மும் அப்ப‌டிப் ப‌ட்ட‌ ம‌ன உறுதியை அளிக்கும் திற‌ன் உடைய‌வை. உங்க‌ளுக்கு இந்து ம‌த‌ம் ப‌ற்றி தெரிந்து கொள்ள‌ வேண்டிய‌து உள்ள‌து.

thiruchchi said...

Written lot in the morning. Let me take some respite!

hayyram said...

//அந்த‌ மாதிரி நேர‌த்தில் எதிர்ப்புக் காட்ட‌லாம்.//

எதிர்ப்பை எப்படிக் காட்டுவீர்கள்?

கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துவிட்டு இந்த கேள்விக்கும் சேர்த்து பதில் சொல்லுங்கள்?

எதிர்ப்பை எப்படிக் காட்டுவீர்கள்?

வால்பையன் said...

//அவர்கள் அன்று மக்களைக் காக்கும் பொறுப்பில் இருந்தார்கள் //

யாரிடமிருந்து!?

Mohen said...

//

யார் அவரோட தாய்! //

ennai kadha kaalatchebam panna vechiduveenga polirukkey !!
Panthala Raja's wife is Ayyappan's foster mother.

//
நான் பெரியாரிஸ்ட் கிடையாது! பெரியாருக்கு மாலை போடுவதும் பகுத்தறிவற்ற செயல் என்பது தான் என் கருத்தும் //

ippo ennadhan solla vareenga - ingeyum illama, angeyum illama ??

edhuthan unga karuthu ??

thiruchchi said...

Brother Vaal Paiyan,
//அவர்கள் அன்று மக்களைக் காக்கும் பொறுப்பில் இருந்தார்கள் //

யாரிடமிருந்து!?//காம‌க் கொடூர‌ அயோக்கிய‌ர்க‌ளிட‌மிருந்து, அப்பாவிக‌ளைக் கொடுமைப் ப‌டுத்தும் கய‌வ‌ர்க‌ளிட‌மிருந்து, ச‌ர்வாதிகார‌ கொடுங்கோல‌ர்க‌ளிட‌மிருந்து, வ‌லிமை மிக்க‌ கெட்ட‌வ‌ர்க‌ளிட‌மிருந்து மக்களைக் காக்கும் பொறுப்பில் இருந்தார்கள்

thiruchchi said...

//எதிர்ப்பை எப்படிக் காட்டுவீர்கள்?//நான் போதுமான‌ விள‌க்க‌ம் அளித்து இருக்கிறென். விவேகான‌ந்த‌ரை சொன்னால், ஆங்கிலேய‌ன் கொஞ்ச‌ம் ந‌ல்ல‌வ‌ன் என்கிறீர்க‌ள். அப்ப‌ரை ம‌த‌ம் மாற்ற‌ ம‌கேந்திர‌ ப‌ல்ல‌வ‌ன், அப்ப‌ரைக் க‌ல்லைக் க‌ட்டி க‌ட‌லில் இற‌க்கினான். யானையை விட்டு இட‌ற‌ சொன்னான். அப்ப‌ரிட‌ம் இருந்த self defense என்ன‌? அத‌ற்க்கு ப‌தில் சொல்ல‌ கூடுமா? யானை ரொம்‌ப‌ ந‌ல்ல‌ யானை என்று சொன்னாலும் ஆச்ச‌ரிய‌ம் இல்லை.

ச‌ரியான‌ ஆன்மீக‌த்தை ம‌க்க‌ளிட‌ம் கொண்டு சேருங்க‌ள். அப்போது அணு குண்டை த‌லையில் போட்டாலும், அவ‌ர்க‌ள் ம‌த‌ம் மாற‌ மாட்டார்க‌ள்.

உங்களுக்கு ஆன்மீக‌த்தின் வ‌லிமை என்ன‌ என்று தெரியாத‌வ‌ரை நான் என்ன‌ எழுதியும் ப‌ற்றாது.

thiruchchi said...

என்னுடைய‌ பின்னூட்ட‌ங்க‌ளுக்கு கீழே ம‌ட்டும் ஒரு கூடை அல்ல‌து ட‌ஸ்ட் பின் போல‌ ஒரு சிம்ப‌ல் போட்டு உள்ளீர்க‌ளே , அத‌ன் சூட்சும‌ம் என்னா?

வால்பையன் said...

//ippo ennadhan solla vareenga - ingeyum illama, angeyum illama ??//

ஒருவன் கடவுள் மறுப்பாளனாக இருந்தால் உடனே அவனை பெரியாரிஸ்டாக மாற்றாதீர்கள்!

என்னிடம் பெரியாரிடத்திலும் கருத்து வேறுபாடுகள் உண்டு!

வால்பையன் said...

//காம‌க் கொடூர‌ அயோக்கிய‌ர்க‌ளிட‌மிருந்து, அப்பாவிக‌ளைக் கொடுமைப் ப‌டுத்தும் கய‌வ‌ர்க‌ளிட‌மிருந்து, ச‌ர்வாதிகார‌ கொடுங்கோல‌ர்க‌ளிட‌மிருந்து, வ‌லிமை மிக்க‌ கெட்ட‌வ‌ர்க‌ளிட‌மிருந்து/

அந்த கபோதிகளை யார் படைச்சது!?

பூமி என்ன ப்ளே கிரவுண்டா கடவுளுக்கு, இவரே படைப்பராம், அப்புறம் இவரே அழிப்பாராம், நாங்க இடையில என்ன கேனபயலுகளா?

வால்பையன் said...

//உங்களுக்கு ஆன்மீக‌த்தின் வ‌லிமை என்ன‌ என்று தெரியாத‌வ‌ரை நான் என்ன‌ எழுதியும் ப‌ற்றாது. //

ஆமா தெரியாது!?

அது எத்தனை கிலோ!?

வால்பையன் said...

//என்னுடைய‌ பின்னூட்ட‌ங்க‌ளுக்கு கீழே ம‌ட்டும் ஒரு கூடை அல்ல‌து ட‌ஸ்ட் பின் போல‌ ஒரு சிம்ப‌ல் போட்டு உள்ளீர்க‌ளே , அத‌ன் சூட்சும‌ம் என்னா? //

உங்கள் பின்னூட்டத்தை நீங்களே அழிக்கமுடியும் என கூகுள் கொடுத்துள்ள அமைப்பு அது! எதாவது தவறாக அடித்து விட்டால் மாற்றி கொள்ளலாம், இது அனைவருக்கும் பொருந்தும், இந்த ப்ளாக் மாடுரேட்டர் மட்டும் எதை வேண்டுமாலும் அழிக்கலாம், கிட்டதட்ட சர்வாதிகாரி மாதிரி!

hayyram said...

/////அந்த‌ மாதிரி நேர‌த்தில் எதிர்ப்புக் காட்ட‌லாம்.//

எதிர்ப்பை எப்படிக் காட்டுவீர்கள்?

இன்றைக்கு ஆள்பவர்கள் எல்லாருமே //காம‌க் கொடூர‌ அயோக்கிய‌ர்க‌ளை, அப்பாவிக‌ளைக் கொடுமைப் ப‌டுத்தும் கய‌வ‌ர்க‌ளை, ச‌ர்வாதிகார‌ கொடுங்கோல‌ர்க‌ளை, வ‌லிமை மிக்க‌ கெட்ட‌வ‌ர்க‌ளை//
இப்போது நம் நிலை என்ன? நம்மைக் காக்கப் போகிறவர் யார்? இது போன்றவர்கள் கையில் சிக்கித்தவிப்பதைத் தவிற நம் போன்ற சாமானியனுக்கு வேறு வழியில்லை என்றால் இந்த கொடுங்கோலர்களிடமிருந்து வெளியே வருவதற்கு என்னவழி? ஒவ்வொரு கேள்விக்கும் தனித்தனி பதில் சொன்னால் நலம்/////

என் கேள்விகள் அப்படியே உள்ளன?

thiruchchi said...

வால் பையன்,

//உங்களுக்கு ஆன்மீக‌த்தின் வ‌லிமை என்ன‌ என்று தெரியாத‌வ‌ரை நான் என்ன‌ எழுதியும் ப‌ற்றாது. //

ஆமா தெரியாது!?

அது எத்தனை கிலோ!?//இது நான் ராமுக்காக எழுதிய வாசகம். ஆன்மீகத்தைப் பற்றி அறிந்து கொள்ள சொல்லி நான் உங்களை கட்டாயப் படுத்தவில்லை.

thiruchchi said...

/////அந்த‌ மாதிரி நேர‌த்தில் எதிர்ப்புக் காட்ட‌லாம்.//

எதிர்ப்பை எப்படிக் காட்டுவீர்கள்?


அப்ப‌ரை ம‌த‌ம் மாற்ற‌ ம‌கேந்திர‌ ப‌ல்ல‌வ‌ன், அப்ப‌ரைக் க‌ல்லைக் க‌ட்டி க‌ட‌லில் இற‌க்கினான். யானையை விட்டு இட‌ற‌ சொன்னான். அப்ப‌ரிட‌ம் இருந்த self defense என்ன‌? அப்பர் எதிர்ப்பை எப்படிக் காட்டினார்.

அத‌ற்க்கு ப‌தில் சொல்ல‌ கூடுமா?

thiruchchi said...

இன்றைக்கு ஆள்பவர்கள் எல்லாருமே //காம‌க் கொடூர‌ அயோக்கிய‌ர்க‌ளை, அப்பாவிக‌ளைக் கொடுமைப் ப‌டுத்தும் கய‌வ‌ர்க‌ளை, ச‌ர்வாதிகார‌ கொடுங்கோல‌ர்க‌ளை, வ‌லிமை மிக்க‌ கெட்ட‌வ‌ர்க‌ளை//
இப்போது நம் நிலை என்ன? நம்மைக் காக்கப் போகிறவர் யார்? இது போன்றவர்கள் கையில் சிக்கித்தவிப்பதைத் தவிற நம் போன்ற சாமானியனுக்கு வேறு வழியில்லை என்றால் இந்த கொடுங்கோலர்களிடமிருந்து வெளியே வருவதற்கு என்னவழி? ஒவ்வொரு கேள்விக்கும் தனித்தனி பதில் சொன்னால் நலம்/////

இந்தியாவீல் ந‌ல்ல‌ ஆன்மீக‌ வாதிக‌ளின் க‌ருத்துக்க‌ள் அர்சிய‌லை செம்மைப் ப‌டுத்தி வ‌ந்துள்ள‌ன‌.
ஆனால் இப்பொது அரசிய‌ல்‌ வாதி விய‌க்கும் அளவுக்கு காம‌க் கொடூர‌ங்க‌ளை செய்கிறார்க‌ள் ஆன்மீக‌வாதி என்ற‌ போர்வையில் இருப்போர். முத‌லில் உங்கள் மத‌த்தை செம்மைப் ப‌டுத்துங்க‌ள். அதை ச‌ரி செய்ய‌ முத‌லில் ச‌ரியான‌ ஆன‌மீக‌த்தை வெளிப்ப‌டுத்துங்க‌ள், எல்லாம் ச‌ரியாகும்.

thiruchchi said...

//காம‌க் கொடூர‌ அயோக்கிய‌ர்க‌ளிட‌மிருந்து, அப்பாவிக‌ளைக் கொடுமைப் ப‌டுத்தும் கய‌வ‌ர்க‌ளிட‌மிருந்து, ச‌ர்வாதிகார‌ கொடுங்கோல‌ர்க‌ளிட‌மிருந்து, வ‌லிமை மிக்க‌ கெட்ட‌வ‌ர்க‌ளிட‌மிருந்து/

அந்த கபோதிகளை யார் படைச்சது!?

பூமி என்ன ப்ளே கிரவுண்டா கடவுளுக்கு, இவரே படைப்பராம், அப்புறம் இவரே அழிப்பாராம், நாங்க இடையில என்ன கேனபயலுகளா?//

நானும் எந்தக் கடவுளையும் இது வரை பார்த்தது இல்லை. கடவுள் என்று ஒருவர் இருந்தால் அவரிடம் கேட்க வேன்ன்டிய நியாயம் என்னிடமும் பல உண்டு. இராமர் கடவுளா என்று எனக்கு தெரியாது. அவர் ஒரு அரசராக இருந்தார் எனவும், மக்களைக் காக்க பாடுபட்டார் எனவும் எழுதி உள்ளனர்.

hayyram said...

யப்பா முடியல..

// அப்பர் எதிர்ப்பை எப்படிக் காட்டினார். /// நான் அப்பர் இல்லை. அப்பர் இல்லாத ஒருவர் எப்படி எதிர்ப்பைக் காட்ட வேண்டும்?

thiruchchi said...

//யப்பா முடியல..

// அப்பர் எதிர்ப்பை எப்படிக் காட்டினார். /// நான் அப்பர் இல்லை. அப்பர் இல்லாத ஒருவர் எப்படி எதிர்ப்பைக் காட்ட வேண்டும்?
நல்ல கேள்வி, உங்களை நிலத்தை , வீட்டை குறைந்த விலைக்கு விற்க சொல்லி யாரவது உங்களைக் கட்டாயப் படுத்தினால் என்ன செய்வீர்கள்?

hayyram said...

/////தலையில் துப்பாக்கியோ வைத்து உங்களை மதம் மாறுங்கள் என்று கட்டாயப்படுத்தினால் என்ன செய்வீர்கள்? //
//அந்த‌ மாதிரி நேர‌த்தில் எதிர்ப்புக் காட்ட‌லாம்.//

எதிர்ப்பை எப்படிக் காட்டுவீர்கள்?

தயவு செய்து நேரடியாக நீங்கள் என்ன செய்வீர்கள் என்பதை ஒற்றை வரியில் சொல்லவும்.

Mohen said...

Very good exchange of thoughts & opinions - a heated one, indeed. Congrats Ram & Thiruchi.

I think your goals are the same but only the means & way is different.

What I have discerned is that , according to Ram, in a country like India, which is supposed to be the birth place of Hinduism, the attacks, criticisms, humiliations & mud-slingings against Hinduism is alarmingly large. On the other hand, to maintain its secular image, other religions are enjoying all the benefits in India. This type of “ digging your own grave “ cannot be found in an Islamic country, or other countries that follows religions like Christianity,Buddhism etc., There, people will stick on to their religion either willingly or by surrendering to threats. Even though they have second opinions they will not allow them to surface.

In order to condemn the atrocities against Hinduism and to save it, Ram suggests extreme measures like taking on to violence. Saama, bedha dhandathil - dhandathai edukka solraar – mudhal irandum work out aagadha patchathil.

Thiruchi feels that attacks against Hinduism will be curbed if the true spirit of Hinduism is effectively inculcated with reason & rationale, by right persons.

Dear brothers, I admire your concern for Hinduism, but also note that Hinduism can never be destroyed. Shankarar kalathil illadha edhirpa ?? Right person will emerge at the right moment. Edhu nadakkumo adhu nandragavey nadakkum.

Hinduism is not just a religious entity. It is a WAY OF LIVING. So, there's no need to fret.

hayyram said...

thanks mohen

Mohen said...

//
Saama, bedha dhandathil - dhandathai edukka solraar – mudhal irandum work out aagadha patchathil. //

Pls read, Saama, Dhaana, Bedha, Dhandam.

Mudhal moondrum work out aagadha patchathil.

thiruchchi said...

இப்போது யார் த‌லையில் துப்ப‌க்கியை வைக்கிறார்க‌ள். இல்லாத‌ விட‌ய‌த்‌தைப் ப‌ற்றிப் பேச்சு எத‌ற்க்கு? இப்போது இந்து ம‌த‌த்திற்க்கு உள்ள‌ ஆப‌த்து என்ன?

காசு குடுத்து ம‌த‌ம் மாற்றுகிறார்க‌ள் என்றால், அப்ப‌டி மாற்ற‌ப் ப‌டுப‌வ‌ர் இந்து ம‌த‌த்தின் சிற‌ப்புக‌ளை அறிந்து கொள்ள‌வில்லை. அத‌ற்க்கு தான் ச‌ரியான‌ இந்து ம‌த‌த்தை , ம‌க்க‌ளின் ம‌ன‌தை வ‌லுப்ப‌டுத்தும், ந‌ம்பைக்கையூட்டும் ஆன்மீக‌த்தை எல்லா இந்துக்க‌ளிட‌மும் கொண்டு செல்லுங்க‌ள். சாதி வேறுபாடுக‌ளைக் குறைத்து ச‌முதாய‌த்தை இணைக்கும் செய‌ல்க‌ளில் ஈடுப‌டுங்க‌ள்.

உல்லாச‌ சாமியார்க‌ளின் பிடியில் இருந்து இந்து ம‌தத்தை விடுவிக்க‌, ச‌ரியான‌ ஆன்மீக‌த்தை அதிக‌ ம‌க்க‌ள் பின்ப‌ற்ற‌ வேண்டும்.

இதை எல்லாம் விட்டு - துப்பாக்கி த‌லையில் வைத்தால் - என்று இல்லாத‌ பிர‌ச்சினைக்கு ம‌ண்டையை உடைத்துக் கொண்டு, உண்மையான‌ பிர‌ச்சினைக‌ளால் இந்து ம‌த‌ம் அழிவ‌தைக் க‌ண்டு கொள்ளாம‌ல் விடுகிறீர்க‌ள். இப்ப‌டி முக்கிய‌மான‌ பிர‌ச்சினைக‌ளை விட்டு, சும்மா தேவை இல்லாம‌ல் ஜிஹாதி செய்து இந்து ம‌த‌த்தின் பின்ன‌டைவுக்கு கார‌ண‌மாக‌ இருக்காதீர்க‌ள்.

thiruchchi said...

திரு.‌ மோக‌னை (Mohen) நான் பாராட்டுகிறேன். அவ‌ர் சிந்திக்கிறார். வ‌ன்முறைக்கு செல்ல‌ த‌ய‌ங்குகிறார். அதே நேர‌ம் தைரிய‌மாக‌வும் இருக்கிறார். இது ஒரு ச‌ரியான‌ இந்துவின் குணாதிச‌ய‌ங்க‌ள்.

hayyram said...

//இப்போது யார் த‌லையில் துப்ப‌க்கியை வைக்கிறார்க‌ள். இல்லாத‌ விட‌ய‌த்‌தைப் ப‌ற்றிப் பேச்சு எத‌ற்க்கு?//

யப்பா முடியல...கண்ணக்கட்டுதே! ஒரு கற்பனை தான் ஐயா! அதுக்கு கூட நேரடியா ஒரு பதில் குடுக்க முடியாதா? அப்படி ஆனா என்ன செய்வீங்கன்னு கற்பனை பண்ணி சொல்லுங்களேன். நான் ஒன்றும் ஜிகாதி செய்யவில்லை. ஒரு கற்பனைக்கு நீங்கள் ஜிகாதிக்காரர்களிடம் மாட்டிக் கொண்டால்...என்ன செய்வீர்கள்? நேரடியான பதில் சொல்லுங்கள் பார்ப்போம்!

//இல்லாத‌ விட‌ய‌த்‌தைப் ப‌ற்றிப் பேச்சு எத‌ற்க்கு?// எது இல்லாத விஷயம்..ஒளரங்கசீப் காலத்தில் அப்படி தானே நடந்தது..ஏன் ஒரிசாவில் நடந்த கலவரங்களுக்கு மூலாதார காரணம் மிரட்டியும் துப்பாக்கி முனையிலும் மத மாற்றம் நடந்திருக்கிறது. உச்சக்கட்டமாக சுவாமி லக்ஷ்மனாநந்தாவை போட்டுத் தள்ளியது மத மாற்று கும்பல். இதெல்லாம் சில கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் நம் சொந்தங்களுக்கு நடந்த சம்பவங்கள் தான்.

அதை வைத்து தான் உங்களிடம் கேட்கிறேன்..கொஞ்சம் நேரடியாக பதில் சொல்லுங்கள்..

//தலையில் துப்பாக்கியோ வைத்து உங்களை மதம் மாறுங்கள் என்று கட்டாயப்படுத்தினால் என்ன செய்வீர்கள்? //
//அந்த‌ மாதிரி நேர‌த்தில் எதிர்ப்புக் காட்ட‌லாம்.//

எதிர்ப்பை எப்படிக் காட்டுவீர்கள்?

what will be your reaction at that time?????

thiruchchi said...

ம‌க்க‌ளின் ந‌ன்மைக்காக‌ உண்மைக‌ளை சொல்ப‌வ‌ருக்கு என்றுமே ஆப‌த்து உண்டு. சாக்ர‌டீசுக்கு விஷ‌ம் கொடுக்க‌ சொல்லி, ம‌ர‌ண‌ த‌ண்ட‌னை விதிக்க‌ வில்லையா? ச‌ங்க‌ர‌ ராம‌னை போட்டுத் த‌ள்ளினார்க‌ளே!
என் த‌லையில் துப்பாக்கி வைத்து அழுத்தினால், அத‌ற்க்குப் பிற‌கு நான் என்ன‌ செய்ய‌ முடியும்? யார் என்ன‌ செய்ய‌ முடியும்? ப‌ல‌ த‌மிழ‌ர்க‌ள் ஆப்கானில், ஈராக்கில் தீவிரவ‌திக‌ளிட‌ம் சிக்கி உயிரை இழ‌ந்துள்ள‌ன‌ர். ந‌ம‌து நாட்டிலும் ப‌ல‌ குண்டு வெடிப்புக‌ளில் சிக்கி ப‌ல‌ இந்திய‌ர் உயிர் இழ‌ந்துள்ள‌ன‌ர். காட்டு மிராண்டி ம‌த‌ வெறிக்கு ம‌ருந்து, ம‌னித‌னின் ம‌ன‌த்தை செம்மைப் ப‌டுத்துவதுதான். ஆனால் உங்க‌ளுக்கு அறிவின் வ‌ழியில், அன்பின் வ‌ழியில், ஆன்மீக‌ வ‌ழியில் சென்று காட்டு மிராண்டி ம‌த‌ வெறியை ச‌ரியாக்குவ‌து பற்றி சிந்திக்க‌ முனைப்பில்லை. ஏதாவ‌து கார‌ண‌ம் சொல்லி உருட்டுக் க‌ட்டை அரிவாள் வ‌ழிதான் ச‌ரியான் வ‌ழி என்று சாதிக்க‌ப் பார்க்கிறீர்க‌ள். நீங்க‌ள் ச‌ரியான‌ இந்து ம‌த‌த்தைப் ப‌ற்றி அறிந்து கொள்ளுங்க‌ள், அப்போது உங்க‌ளுக்கு புரித‌ல் உண்டாகும்.

நீங்க‌ள் இந்து ம‌த‌த்தின் முக்கிய‌மான‌ பிர‌ச்சினைக‌ளில் இருந்து திசை திருப்பி, அந்த‌ ம‌தத்திற்க்கு உங்க‌ளை அறியாம‌லேயே ஆப‌த்து விளைவிக்கிறீர்க‌ள், அந்த‌ ம‌த‌ம் பின்ன‌டைவு அடைய‌ உங்க‌ளை அறியாம‌லேயே கார‌ணமாக‌ இருக்கிறீர்க‌ள். நீங்க‌ள் இந்து ம‌த‌த்தைக் காக்க‌ விரும்பினால்,ச‌ப‌ரி ம‌லைக்கு போகு முன் ந‌ட‌த்தும் அன்ன‌ தான‌த்திற்க்கு, த‌லித் பிரிவு ம‌க்க‌ளை அழைத்து, அவ‌ர்க‌ளுக்கு பாத‌ பூஜை செய்து (அவ‌ர்க‌ள் அதிதி, விருந்தின‌ர்) அவ‌ர்க‌ள் ஆன்ம‌ நிலை உய‌ரும்ப‌டி அவ‌ர்க‌ளுட‌ன் சேர்ந்து பூஜை செய்து,3 பாய‌ச‌த்துட‌ன் அன்ன‌மிடுங்க‌ள்.

அதை விடுத்து துப்பாக்கி தோட்டா என்று இல்லாத‌ பிர‌ச்சினைகளை பேசிப் ப‌ய‌ன் இல்லை. நான் நேற்று கூட‌ ஒரு கிருத்துவ‌ரிட‌ம் ம‌று பிற‌ப்பு த‌த்துவ‌ம் ப‌ற்றி விள‌க்கினேன். அவ‌ரும் அதில் உள்ள‌ லாஜிக்கை எதிர்க்க‌ முடியாத‌ நிலையில் இருந்தார். என் த‌லையில் யாரும் துப்பாக்கி வைக்க‌ப் போவ‌து இல்லை. நான் அவுர‌ங்க‌சீப் கால‌த்தில் வாழ‌வும் இல்லை. ஆயுத‌ம் ஏந்தி ஜிஹாதியாக‌ வாழ‌ப் போவ‌தும் இல்லை.

நான் ச‌ரியான‌ இந்துவாக‌ இருந்தால் பிற‌ ம‌த‌த்தின‌ர் இந்து ம‌த‌த்தை ம‌திப்பார்க‌ள். நான் காவி க‌ட்டிய‌ க‌ற்ப‌ழிப்பு சாமியாரை விட்டு விட்டு, துப்பாக்கி த‌லையில் வைத்து என்று பேசிக் கொண்டு இருந்தால், இந்து ம‌த‌ம் அழிவை ச‌ந்திக்கும்.

hayyram said...

உங்களை நேரடியாக ஒரு பதில் சொல்லுங்கள் என்றால் அதை இதுவரைச் செய்யவில்லை. ஒவ்வொரு முறையும் நான் இந்து மதத்தைப் புரிந்து கொள்ள வில்லை. நான் உருட்டுக்கட்டை எடுக்கச் சொல்கிறேன் என்று என்னைக் குற்றவாளி ஆக்குவதிலேயே குறியாக இருக்கிறீர்கள்.

//அரிவாள் கத்தியை இந்து மதம் ஒரு போதும் நம்பியதில்லை// என்று நீங்கள் குறிப்பிட்டதற்குத்தான் /தலையில் துப்பாக்கியோ வைத்து உங்களை மதம் மாறுங்கள் என்று கட்டாயப்படுத்தினால் என்ன செய்வீர்கள்? //
என்றேன்.

//அந்த‌ மாதிரி நேர‌த்தில் எதிர்ப்புக் காட்ட‌லாம்.// என்றீர்கள்.

//எதிர்ப்பை எப்படிக் காட்டுவீர்கள்?///

என்றேன். நீங்கள் சாவீர்களா, திருப்பி அடித்து தப்பிப்பீர்களா என்று தெரிந்து கொள்ள? அதற்கு நேரடியாக ஒரு வார்த்தை பதில் சொல்ல தயங்குகிறீர்கள்.

நான் என்னமோ எல்லாரையும் கொல்லச் சொன்ன மாதிரி என் மீது பாய்கிறீர்கள். நான் எங்கேயாவது அப்படி சொல்லியிருக்கிறேனா? எங்கே காண்பியுங்கள் பார்க்கலாம்?

எனக்கு சபரிமலைக்குப் போகும் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் சொல்லிக் கொடுத்து குருசாமியாகப் பார்க்கிறீர்கள். என்ன கொடும சரவணா!

முடியலப்பா சாமி...எனக்கு கண்ண கட்டுது.

thiruchchi said...

புழு கூட தன்னை மிதிப்பவனை எதிர்த்துதான் நிற்கும். என் தலையில் துப்பாக்கி வைத்து அழுத்துபவனை எப்படி எதிர்க்க முடியும்? யார் எதிர்க்க முடியும்? எதிர்த்தால் அவன் துப்பாக்கியால் சுட்டு விடுவான். எனவே சாவு நிச்சயம். எதிர்த்தாலும் சாவுதான், எதிர்க்காவிட்டாலும் சாவுதான். மண்டை ஓடு இரும்பால் ஆகி இருந்தால் தப்பலாம். நான் காட்டும் எதிர்ப்பு என்பது அவனது மத மாற்ற கட்டளைக்கு பணியாமல் சாகத் தயாராக இருப்பதுதான். அதற்க்கு மேல் செய்யக் கூடியது எதுவும் இல்லை. இது போதுமா?

உங்கள் தலையில் துப்பாக்கி வைத்து அழுத்தும் போது நீங்கள் எப்படி எதிர்த்து போராட்டம் நடத்துவீர்கள்? உங்கள் தலையில் எப்போதும் குண்டு துளைக்காத ஹெல்மெட் அணிந்து இருப்பீர்களா?ஒரு மனிதனுக்கு உண்மையான பாதுகாப்பு அவனை சுற்றி உள்ள மக்கள் கூட்டம் நாகரிகமான சமுதாயமாக இருப்பது தான்.


எல்லாருடனும் சேர்ந்து பழகி ஆன்மீகத்தை வளர்க்க சொல்வது நல்லதுதான்.

hayyram said...

///புழு கூட தன்னை மிதிப்பவனை எதிர்த்துதான் நிற்கும். என் தலையில் துப்பாக்கி வைத்து அழுத்துபவனை எப்படி எதிர்க்க முடியும்? யார் எதிர்க்க முடியும்? எதிர்த்தால் அவன் துப்பாக்கியால் சுட்டு விடுவான். எனவே சாவு நிச்சயம். எதிர்த்தாலும் சாவுதான், எதிர்க்காவிட்டாலும் சாவுதான். மண்டை ஓடு இரும்பால் ஆகி இருந்தால் தப்பலாம். நான் காட்டும் எதிர்ப்பு என்பது அவனது மத மாற்ற கட்டளைக்கு பணியாமல் சாகத் தயாராக இருப்பதுதான். அதற்க்கு மேல் செய்யக் கூடியது எதுவும் இல்லை. இது போதுமா?///

fantastic . super. இந்த நேரடியான பதிலைத்தானே நான் கேட்டேன். உண்மையிலேயே நேர்மையான பதில்.

//எல்லாருடனும் சேர்ந்து பழகி ஆன்மீகத்தை வளர்க்க சொல்வது நல்லதுதான்//

ஆமோதிக்கிறேன். நன்றி.

Mohen said...

//பூமி என்ன ப்ளே கிரவுண்டா கடவுளுக்கு, இவரே படைப்பராம், அப்புறம் இவரே அழிப்பாராம், நாங்க இடையில என்ன கேனபயலுகளா?//

சரியான கேள்வி வால்பையன். தயது செய்து கேலி செய்வதாக எண்ண வேண்டாம், உண்மையிலேயே இது நல்ல கேள்வி. இப்போது தான் நீங்கள் "இறை" அல்லது "கடவுலள்" எனும் விஷயத்தை நோக்கி உண்மையான முதல் அடியை எடுத்து வைத்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

இது பலரும் கேட்க நினைக்கும் கேள்வி, பல வருடங்களுக்கு முன் எனக்குள் நான் கேட்டுக் கொண்ட கேள்வி. ஆனால் இதை வாத விவாதங்களுக்கு உட்படுத்தாமல், மேதாவித்தனமான அல்லது கேலிக்குரிய ஒரு விஷயமாகக் கருதாமல், உங்களுக்குள் இந்தக் கேள்வியை கேட்டு, கேட்டு தெளிவடைய முயற்சி செய்யுங்கள். ஏனென்றால், இதற்குண்டான பதிலை பிறர் மூலம் கேட்டறிந்தோ, புத்தகமாக வெளியிட்டோ அறிய முடியாது. ஒவ்வொரு மனிதனின் தனிப்பட்ட அனுபவத்தின் மூலமே அதை உணர முடியும். ஏன்? எதற்கு? எப்படி? என்று கேட்டு கேட்டு உள்ளிறங்கிப் போய் தேடுங்கள்.

" இவரே படைப்பாராம். பின் இவரே அழிப்பாராம். நடுவில் நாமென்ன கேனப்பயகளா? " என்று கேட்டுள்ளீர்கள். நாமே ஏன் கடவுளாக இருக்கக் கூடாது? படைப்பவனும் படைக்கப்படுவதும் ஏன் ஒரே சக்தியாக இருக்கக் கூடாது? இது ஒரு வகையான சிந்தனை. இறக்கும் அந்த தருணத்தில் நாம் என்னவாகிறோம்? எப்படி நம் உயிர் பிரிகிறது? அது எங்கே போகிறது? அப்போது அதற்கு சிந்திக்கும்,பார்க்கும்,கேட்கும்,பேசும் சக்தி இருக்கிறதா? தேடுங்கள்.

ஒன்று நிச்சயம். நம்பிக்கையுடன், நேர்மையாக இந்தக் கேள்வியை ஆராய முற்பட்டால், உங்கள் வாழ்நாளில் ஏதோ ஓர் அனுபவத்தின் மூலம் இதற்குண்டான பதிலை கண்டுணர்வீர்கள். அந்த பேருண்மையை உணர்ந்த பின் உங்களுக்கு எதன் மீதும் விருப்பமும் இருக்காது, வெறுப்பும் தோன்றாது. இல்லையென்றால், பார்க்கும் எல்லாவற்றிலும் இறைவனை உணர்ந்து அனைத்து உயிர்களின் மீதும் அன்பே சுரக்கும். ஏதோ ஓர் மேன்மையான அனுபவம் ஏற்பட்டு உங்களை பக்குவப் படுத்தும்.

மற்றபடி, இந்தக் கேள்விகளுக்கெல்லாம் தீர்மானமான ஒரு பதில் வேண்டுமென்றால், வடிவேலு படத்தில் கூறுவது போல, செத்து செத்துத் தான் விளையாட வேண்டும்.

வால்பையன் said...

// நாமே ஏன் கடவுளாக இருக்கக் கூடாது? //

நானே கடவுள் என்றானபின் நான் ஏன் மற்றொரு கடவுளை கும்பிட வேண்டும்! சக மனிதருக்கு வணக்கம் சொன்னால் போதாதா? கோயிலுக்கு போய் பஜனை வேற பாடனுமா?

Mohen said...

//நானே கடவுள் என்றானபின் நான் ஏன் மற்றொரு கடவுளை கும்பிட வேண்டும்! சக மனிதருக்கு வணக்கம் சொன்னால் போதாதா? கோயிலுக்கு போய் பஜனை வேற பாடனுமா?
//

I've said that it's just a notion. It can be the same or it can be dirrerent. It's upto you to find out the truth.

Now, let's assume that the Creator & the created are different. In that case, going to temple, offering prayers, doing bhajans etc., serve as a means to find the truth by getting closer to GOD.

Do you mean to say that just saying thanks to your creator (it's our own wish, again)is a SIN ??

thiruchchi said...

கோவிலுக்கு செல்ல வேண்டும் என்பதோ, பஜனைப் பாடல்களை பாட வேண்டும் என்பதோ கட்டாயம் இல்லை.


"நீ என்னைக் கும்பிடாவிட்டால் உன்னைத் தண்டிப்பேன்" என்று ஒருவர் சொன்னால் - அப்படி சொல்பவர் கடவுளா, இல்லை கொடுங்கோல் ஆட்சி நடத்தும் சர்வாதிகாரியா, பேட்டை ரவுடியா?

கடவுளைக் கும்பிடுபவதை விட, மனதிலே வெறுப்புணர்ச்சி இல்லாத இதயம் உடையவராய், எல்லோருடனும் சினேக பாவத்துடனும், கருணையுடனும் நடந்து கொள்வதே நாகரீக சமுதாயத்துக்கு அவசியம்.


/அத்வேஷ்டா (வெறுப்பு இல்லாத‌வ‌னாய்),

ச‌ர்வ‌ பூதானாம் மைத்ர‌ (எல்லா உயிர்க‌ளிட‌மும் ந‌ட்புட‌னும், சினேக‌ பாவ‌த்துட‌னும்),

க‌ருண‌ ஏவ‌ ச‌ (க‌ருணை இத‌ய‌ம் உள்ள‌வ‌னாக‌),

நிர்ம‌மோ நிர‌ஹ‌ங்காரா (திமிரும், அக‌ந்தையும் இல்லாத‌வ‌னாக‌)/ -இந்த கொள்கைகளே முக்கிய கொள்கைகளாகும்.

அதே நேரம் பஜனை பாடல்களைப் பாடுவதோ, கோவிலுக்கு செல்வதோ ஒருவருக்கு மனக் குவிப்பை அளித்து, அவரை நல் வழியில் செல்ல, மேற்குறிப்பிட்ட நல்ல கொள்கைகளை பின்பற்ற உதவினால் அந்த வகையிலே அவற்றை குறை சொல்லவில்லை.

S.SETHU RAMAN said...

ungal blogspot mugavum arumai nanbare
visit my site
vaalpaiyyan.blogspot.com

S.SETHU RAMAN said...

article arumai
visit my site
vaalpaiyyan.blogspot.com