Tuesday, December 2, 2014

தமிழ் சினிமாவில் பிராமணர்கள் - 6


ஜீவா - பிராமண துவேஷ படம்!

நாட்டில் ஜாதிகள் ஆயிரம் உள்ளன. ஜாதீய ரீதியான ஆதிக்கங்களும் ஒவ்வொரு ஜாதியினரது எண்ணிக்கைக்கும் இருப்பிடங்களுக்கும் தகுந்தார் போல எல்லா துறைகளிலும் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் பிராமணர் என்று வரும் போது மட்டும் கோடி ரூபாய்களை செலவழித்தேனும் அவர்களை பழிக்க வேண்டும் என்கிற உள்நோக்கமும் வன்மும் சினிமாத்துறையினருக்கு பொங்கி வந்து விடுகிறது. பிராமணர்களின் மீதான வெறுப்பை முடிந்தளவுக்கு சினிமாக்காரர்கள் திட்டமிட்டு தூண்டிவிட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அதில் சமீபத்திய பிராமண துவேஷத் திரைப்படம் ஜீவா.

முதுகைத் தடவிப்பார்த்து பூனூல் இருந்தால் தான் கிரிக்கெட்டில் வாய்ப்பு கொடுப்பார்கள் என்கிற வன்மமான ஜாதீய துவேஷம் நிலவுவதாக எடுத்துக் காட்டி 'ஆமாம் இப்படித்தான் இவர்கள் செய்வார்கள்' என்று பொதுப்படையாக பிராமணர்கள் மீது வெறுப்பு பேச்சை தமிழகம் முழுவதும் பேசவைத்து அதன் மூலம் புதிய ஒரு பிராமண துவேஷ அலையை உண்டாக்கி இருக்கிறது இப்படம்இப்பொழுது பலரும் ' ஆமாம் ஆமாம் நான் கூட எங்கள் தெருவில் கிரிக்கெட் விளையாடிய போது ஒரு கோச் என் முதுகை தடவிப்பார்த்தான். அவன் பிராமணன் என்றும், அவன் அப்படி செய்யாமல் என்னை விளையாட விட்டிருந்தால் தான் இன்று கிரிக்கெட்டில் சச்சினையெல்லாம் ஓரங்கட்டி உலக சேம்பியனாகி இருப்பேனென்றும் பீற்றிக் கொள்கிறார்கள்ஆக ஏன்ட்டா இந்த சமூகம் பிராமணரை ஒன்னும் சொல்லாம சும்மா இருக்குன்னு இன்னும் சீண்டி பார்த்து வெறுப்பை வளர்க்கும் ஒரு சினிமா இந்த ஜீவா.

இந்தப்படம் முழுவதிலும் அப்படி என்ன தான் கதை என்று கவனித்தால், காதல் , நட்பு இரண்டு நண்பர்கள் கிரிக்கெட் விளையாடுவது. இது தான் கதை. அப்படி என்ன தான் இந்தக்கதையில் சொல்ல வருகிறார்கள் என்று பார்த்தால் கடைசி பத்து நிமிஷம் தான் கதையின் களமாக காட்டப்படுகிறது. அதாவது ரஞ்சி ட்ராபியில் விளையாட இடம் கிடைக்காத இரு இளைஞர்கள் பிராமணர்களை வசைபாடுவது.  'ஸ்ரீராம், சேஷகோபாலன் ன்னு உங்க கம்யூனிட்டி ஆட்களைதானே நீங்க செலக்ட் பன்றீங்க' நாங்கள்ளாம் என்ன...**' என்று பேசி விட்டு 'கருப்பான' ஒரு இளைஞன் இறந்து போய்டுவான். அவன் சாவுக்கப்புறம், ஒரு ஒப்பாரிக்கப்புறம் ஹீரோவுக்கு கிரிக்கெட் வாய்ப்பு ராஜஸ்தான் கேப்டன் 'இர்ஃபான்' என்பவன் மூலமாக வந்துவிடும். அவ்வளவு தான் படம். கவனிக்க: நாயகனின் வாய்ப்பை மறுப்பவன் பிராமணன் - வாய்ப்பளிப்பவன் ஒரு முஸ்லீம். எப்படி ஒரு ஜாதி - மத ட்விஸ்ட்.

இதில் என்ன காமெடி என்றால், வட இந்தியர்கள் தென்னிந்தியர்களை ஆட்டத்தில் சேர்க்க நடக்கும் பாலிட்டிக்ஸ் பிராமண பாலிட்டிக்ஸை விட பெரியது. அங்கேயே இவர்கள் தேர்வாகிவிடுவார்களாம் ஆனால் பிராமணர்கள் தான் விடுவதில்லையாம். என்ன மோசமான ஜாதி துவேஷம். ஆட்டக்காரரை தேர்வு செய்பவரின் நெற்றியில் பெரிய நாமம் ஒன்றை ஈர்குச்சியால் வரைந்து அவரது நெற்றியை தொடர்ந்து மிக பக்கத்திலேயே காட்டி எந்த ஜாதியை திட்டுகிறோம் என்பதை உரக்க சொல்லி ஜாதி துவேஷத்தை அப்பட்டமாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

இத்தனைக்கும் இவர்கள் சொல்லும் ரஞ்சி போட்டிகளில் தேர்வாகி விளையாடியவர்களில் சுமார் ஆறேழு பேர் பிராமண ஆட்டக்காரர்கள் கிடையாது. ராபின் சிங்க், ஆஷிஷ் கபூர், விவேக் ரஜ்தான், ஹேமங் பதானி, டி குமரன், எல் பாலாஜி ஆகியோர் நிச்சயமாக பிராமணர்கள் இல்லை. மேலும் பிராமணர் அல்லாத சிலரை அவர்களது பெயரை வைத்தே பிராமணராக இருக்கலாம் என்று முடிவுகட்டி மொத்த ஆட்டக்காரர்களும் பிராமணர்களே என்றும் அதனால் பிராமண ஆதிக்கம் என்றும் பொத்தாம் பொதுவாக ஒரு வெறுப்புணர்ச்சியை தூண்டி விடுகிறது இப்படம்.

(Robin Singh, Aashish Kapoor, Vivek Razdan, Hemang Badani, T. Kumaran and L.Balaji)



இப்படத்தின் இயக்குனர் மிகவும் சாதுர்யமானவர். காரணம் முழு திரைப்படத்திலும் பிராமண துவேஷத்தைக் காட்டவில்லை. படத்தின் முழுகதையையும் ஒரு களத்தில் நகர்த்தி அதன் முடிவை பிராமணர்களின் தலையில் வைத்து எல்லார் மனதிலும் அது பதியும் முறையில் படமாக்கி இருக்கிறார். அப்போக்காலிப்டோ என்று ஒரு படம் பார்த்திருப்பீர்கள். அப்படத்தில் இரு இனக்குழுக்களுகுள் நடக்கும் மிகப்பெரிய போராட்டத்தை காட்டி படம் முடியும் தருவாயில் காட்டுவாசியான கதாநாயகன் வசனம் பேசுவான் 'நாம் புதிய தொடக்கத்தை நோக்கிச் செல்வோம்' என்று. சரியாக அந்த நேரத்தில் சிலுவை சுமந்த கப்பல்களில் நாகரீக மனிதர்கள் அந்த காட்டுக்குள் வந்திறங்குவார்கள். இனி புதிய தொடக்கத்தை அவனுக்கு கிறிஸ்தவமும் சிலுவையும் வழிகாட்டும் என்று படத்தின் முடிவை சிலுவையில் கொண்டு நிறுத்தி அத்தனை நேரம் படம் பார்த்தவர்களின் மனதில் சிலுவையை பதித்து விடுவார்கள். அதே பாணியில் மிகவும் புத்திசாலித்தனமாக இந்த ஜீவா படம் பிராமணர்கள் மீது துவேஷத்தை விதைத்திருக்கிறது என்றால் மிகையில்லை.

சென்னை சட்டகல்லூரியில் கண்முன்னே நடந்த ஜாதீய ரீதியிலான கொலை பாதக தாக்குதல்களைப் பற்றி டாக்குமென்டரி எடுக்க கூட வக்கில்லாத சினிமா இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும், கோடிகளை செலவழித்து ப்ராமணர்களை மட்டும் தாக்கி படம் எடுக்கிறார்கள்.

எத்தனையோ உண்மை காதல் சம்பவங்களை படம் எடுப்பவர்கள், தர்மபுரியில் நிகழ்ந்த வன்னியர் பெண், தலித் பையன் காதல் கதையை அவர்களது ஜாதி பின்புலத்தை அப்பட்டமாக வெளிப்படுத்தி படம் ஆக்க எந்த சினிமாக்காரனுக்கும் ஆன்மையில்லை.

ஜாதி ஆதிக்கம் கொண்ட பல்வேறு துறைகள் உள்ளன. ஆனால் அவற்றை எல்லாம் இந்த சினிமாக்காரர்கள் எத்தனை கோடி செலவு செய்து எத்தனைமுறை காட்டி விட்டார்கள்? பதில் சொல்வார்களா? இன்னும் இவர்களது பிராமண துவேஷம் அடங்கவில்லை. தமிழகத்தில் பிராமணர்களை புல் பூண்டு தடம் கூட இல்லாமல் அழித்து விட வேண்டும் என்கிற சினிமாக்காரர்களின் வேட்கை புரிந்து கொள்ள முடிகிறது.

சினிமா துறையிலேயே எத்தனையோ பிராமணர்கள் இருக்கிறார்கள். ஆனால் யாரும் கேள்வி கேட்பதில்லை, அது தான் ஏன் என்று புரிவதில்லை. சினிமாவில் உள்ள பிராமணர்கள் ஒற்றுமையாக ஒரு குழு அமைத்து தங்களை ஆதரிப்பவர்களோடு சேர்ந்து அமைதியான முறையில் இப்படி துவேஷம் பரப்பாமல் படம் எடுக்க வேன்டும் என்று இயக்குனர் சங்கத்திலோ அல்லது நடிகர்கள் சங்கத்திலும் தயாரிப்பாளர் சங்கத்திலும் குறைந்தபட்சம் விண்ணப்பம் ஆவது செய்யலாம். அதைக்கூட செய்யும் அளவு தைரியமோ உணர்ச்சியோ இல்லாமல் தான் பிராமணர்கள் சினிமாவில் இருக்கிறார்களா?

புரியவில்லை!

கொசுறு: இந்த படத்தில் நாயகனாக வரும் விஷ்ணு தான் துரோகி என்கிற மற்றொரு பிராமண துவேஷ படத்திலும் நாயகனாக நடித்தவர்.