Thursday, January 3, 2013

வேத வாக்கு!



கெட்ட நடத்தை உடையவனுக்கும், மனதை அலைபாய விடுகிறவனுக்கும், கோபக்காரனுக்கும், பொய் பேசுபவனுக்கும், கபடு உள்ளவனுக்கும் பரமாத்மா புலப்படமாட்டான். எவர்களிடம் நல்ல தவமும், ஸத்யமும் நிலைத்து இருக்கிறதோ அவர்களுக்கே அவன் தெளிவாவான்.

யாவரும் ஒற்றுமையாக இருங்கள். ஒற்றுமையாகப் பேசுங்கள். உங்கள் யாவருடைய இதயத்திலும் ஒற்றுமையுணர்வு இருக்க வேண்டும்.

மனசாட்சிக்கு விரோதம் இல்லாத வழியே இன்பத்தைத் தருவது.

சூரியனால் ஆகாசம் ஒளி விட்டுப் பிரகாசிக்கிறது. ஸத்யத்தினால் பூமி பிரகாசிக்கிறது.

புத்திமான்களே! உங்கள் அறிவை வளர்த்துக் கொள்ள மக்களிடம் பழகுங்கள்.

யாவரையும் நட்புணர்வோடு பார்ப்போமாக.

உண்மையே பேசு, தர்மம் செய், தாயாரைத் தெய்வமாய் நினைப்பாயாக. குருவைத் தெய்வமாக நினைப்பாயாக.

நூறு கைகளால் பணத்தைச் சம்பாதிப்பாயாக. ஆயிரம் கைகளால் அதை மற்றவர்களுக்குப் பயன் உள்ள வகையில் செலவிடுவாயாக.

கொடுப்பதைச் சிரத்தையுடன் கொடு. அசிரத்தையாகக் கொடுக்காதே. முகமலர்ச்சியுடன் கொடு. அடக்கத்துடன் கொடு.

கடவுள் ஒருவரே; இரண்டாவதாக ஒரு கடவுள் இல்லை.

No comments: