Wednesday, April 22, 2009

கந்தர் சஷ்டி கவசம் படித்தால் கிடைக்கும் நன்மை என்ன?


சில வருடங்களுக்கு முன் ஒரு நிறுவனத்தில் நான் பணிபுரிந்து கொண்டிருந்த போது அங்கே தொழிலாளர்களை உற்சாகப்படுத்தும் சில வகுப்புகள் நடத்தப்படுவதுண்டு.

அது ஒரு பங்குச்சந்தை வியாபார நிறுவனமாக இருந்ததால் மார்க்கெட்டிங் வேலை மிக முக்கியமானதாக இருந்தது. பங்குச்சந்தை மார்க்கெட்டிங் என்றால் சாதாரனம் இல்லை. உங்களிடம் இருக்கும் பணத்தை நீங்கள் முழித்திருக்கும் போதே உங்கள் சட்டைப்பையிலிருந்து எடுத்து நிறுவனத்திற்கு கொடுத்துவிட வேண்டும்.

இது குளோப்ளைசேஷன் மூலமாக வந்த புதிய வியாபார உத்தி. அது ஒரு புறம் இருக்கட்டும்.

தொழிலாள‌ர்களுக்காக நடத்தப்படும் இந்த வகுப்பில் மனதை அமைதியாக வைத்துக் கொள்ளவும், உடலைப் பேணிப் பாதுகாக்கவும் சில விஷயங்களைச் சொல்லிக் கொடுப்பார்கள். அதில் ஒன்று அதி டென்ஷனாகவே வாழும் நாம் மனதை எப்படி அமைதிப்படுத்திக் கொள்வது என்பதற்க்கு ஒரு புதிய முறையைக் கற்றுக் கொடுத்தார்.

இதை அறிமுகப்படுத்தியவர் என்று சொல்லி ஒரு ஆங்கிலேயரின் பெயரைச் கூறினார். மனோவியல் ரீதியாக அவர் கொடுக்கும் இந்தப் பயிற்ச்சி நல்ல பலனைக் கொடுத்தது என்றும் கூறி அதை செய்யச் சொன்னார்.

அவர் சொன்னதாவது:

முதலில் கண்களை மெதுவாக மூடிக்கொள்ளுங்கள்.

உங்கள் வாயால் இப்பொழுது மெதுவாகச் சொல்லுங்கள்...ஆங்கிலத்தில் துவங்கினார்..

மை ஐஸ் ஆர் ரிலாக்ஸ்!

மை நோஸ் ஆர் ரிலாக்ஸ்!

மை மௌத் இஸ் ரெலாக்ஸ்!

மை ஹான்ட்ஸ் ஆர் ரிலாக்ஸ்!

என்று ஒவ்வொரு பாகத்தையும் வாயால் சொல்லி மனதால் ரிலாக்ஸ் படுத்தினார்.

இவற்றை சொல்லி முடித்து விட்டு இப்பொழுது கண்களை மெதுவாக திறங்கள். இப்பொழுது உங்கள் மனதும் உடலும் ரிலாக்ஸாக இருக்கிறதா? என்று எல்லோரிடமும் கேட்டு தெரிந்து கொண்டார்.

பிறகு நிகழ்ச்சி பற்றி எல்லோரிடைய கருதையும் கேட்டார்.

என் முறை வந்தது. நான் சொன்னேன்..."சார் இது என்ன பிரமாதம் இதை நான் குழந்தைப் பருவம் முதலே செய்து கொண்டிருக்கிறேனே!" என்றேன்.

ஆச்சரியத்துடன் பார்த்த அவர் "அது எப்படி? எனக்குத் தெரிந்த வரை இது புதிய மனோவியல் முறை! இதை எப்படி நீங்கள் குழந்தைப் பருவத்திலிருந்தே செய்ய முடியும்" என்று கேட்டார்.


குற்றால அருவியில குளிச்சது போல் இருக்குதா?



நான் சொன்னேன் "சார் நீங்க என்னவெல்லாம் சொன்னீர்களோ அது அனைத்தும் நான் சிறு வயது முதலே சொல்லும் கந்தர் சஷ்டி கவசத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. உடலின் ஒரு அவயவம் விடாமல் தியானிக்கும் பயிற்ச்சியை அது ஆன்மீக ரீதியாக மிக அருமையாக கொடுக்கிறது" என்றேன்.

மிகவும் ஆர்வமாக இதைக் கேட்ட அவர் கந்தர் சஷ்டி கவசத்தைச் சொல்லுவதால் ஏற்படும் பயனைப் பற்றி விளக்கமாக சொல்லச் சொன்னார்.

நானும் சொல்லத் துவங்கினேன்.

கந்தர் சஷ்டி கவசம் சொல்லும் போது நம் உடலில் உள்ள ஒவ்வொரு பாகங்களையும் ஒவ்வோரு வேல் காக்குமாறு பிரார்த்திக்கிறோம்.

உதாரணமாக ஒரு சில வரிகளைப் பார்ப்போம்.

கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க‌!

விதிச்செவி இரண்டும் வேலவர் காக்க‌!

நாசிகளிரண்டும் நல்வேல் காக்க‌!

பேசிய வாய் தனைப் பெருவேல் காக்க‌!

கன்னமிரண்டும் கருனைவேல் காக்க‌!

என் இளங்கழுத்தை இனியவேல் காக்க‌! .

என்று இப்படியே உடலில் ஒரு அங்கம் விடாமல் வேல் காக்க என்று கூறுகிறோம்.

இப்படி தினசரி நாம் வாயால் ஒவ்வொரு அவயவங்களைப் பற்றி சொல்லும் போது நமது மனது அந்த அங்கத்தில் நிலை கொள்கிறது. மனது தியானிக்கும் அங்கத்தினை நமது மூளை தானாகவே ஒருசில வினாடிகள் கூர்ந்து கவனிக்கிறது.

இப்படி மூளையின் தனி கவனத்திற்க்கு வரும் போது அந்த பாகத்திற்குரிய மூளையின் செயல்பாடுகள் சிறப்படைகிறது. இப்படி தினசரி மிகவும் அமைதியான மனநிலையில் நாள் இருமுறை நம் உடல் பாகத்தினை மூளையின் கவனத்திற்க்கு கொண்டு வந்தால் உடலின் சிறு சிறு குறைபாடுகளை மூளை தாமாகவே சரி செய்து கொள்ள தூண்டுதலாக அமையும்.

மனோவைத்திய ரீதியாக உடல் நோய்களைப் போக்க முடியும் என்று தற்காலங்களில் நாம் ஆராய்ச்சியாளர்கள் சொல்லி கேட்பதில்லையா. இன்றைக்கு ஆராய்ச்சி என்று சொல்லி வெள்ளைக்காரன் கண்டுபிடித்ததாகச் சொல்லுவதை நம் முன்னோர்கள் ஏற்கனவே கண்டறிந்தது மட்டுமல்லாமல் அவற்றைப் பயன்பாட்டில் செயல்படுத்தியும் வந்திருக்கிறார்கள்.

இந்த மனோவைத்திய முறை நம் வாழ்க்கை முறையாகவும் இருக்கிறது.

கந்தர் சஷ்டியை தினசரி சொல்லும் போது நம் உடல் முழுவதும் மூளை செயல்பாடு அதிகரிப்பதால் இது ஒரு பாதுகாப்பு கவசமாக இருப்பதாலேயே இதை கந்தர் சஷ்டி கவசம் என்று கூறினார்கள்.

இந்த கவசத்தில் வரும் வரிகளில் நவகோள் மகிழ்ந்து நன்மை அளித்திடும் என்று ஒரு வரி உண்டு. வார்த்தைகளால் சொல்லும் மந்திரத்தினால் நவகோள்கள் எப்படி நன்மை செய்யும் என்றும் தோன்றலாம். நவ கிரகங்களின் மாறுதல்களால் பூமியின் மீதே பாதிப்பு ஏற்படும் போது மனித உடலில் பாதிப்பு ஏற்படாதா என்ன?

கிரகங்களின் மற்றத்தால் நமது உடலில் ரத்த ஓட்டம் மற்றும் வாத பித்த பாதிப்புகள் ஏற்படுகிறது. உடலில் ஏற்படும் எந்த ஒரு வியாதிக்கும் இவற்றில் ஏற்படும் மாற்றமே அடிப்படை. ஆனால் கவசம் படிப்பதன் மூலமாக தினசரி மூளை நமது உடலை உற்று நோக்கி தானே தன்னைச் ச‌ரிசெய்யும் வேலையை செய்து கொண்டே இருப்பதால் நவ கோள்களால் ஏற்ப்படும் உடல் மாறுபாடு கூட பாதிப்பை ஏற்படுத்தாது என்பதே இதன் சாரம். அதையே நவகோள்கள் கூட மகிழ்ந்து நன்மை அளிப்பதாக கூறினார்கள்.


விபூதி பூசிக்கொள்வது ஏன்?

இப்படி கந்தர் சஷ்டி கவசம் தொடர்ந்து படிப்பதில் மனோவியல் ரீதியான‌ நன்மைகள் உள்ளன.

ஆனால் ஆராயாமலே தற்க்காலத்தில் எல்லாவற்றையுமே மூடநம்பிக்கை என்று சொல்லும் பகுத்தறிவு மடையர்களுக்கு இது புரிவது சாத்தியமில்லை. ஏனென்றால் அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு அடிப்படை அறிவே கூட இருப்பதில்லை என்பதே உண்மை.

ஆகையால் இந்து தர்மத்தில் சொல்லப்படும் பல அறிவியல் மற்றும் மனோரீதியான சூட்சுமங்களை புரிந்து கொள்ளும் நீங்கள் தான் உண்மையான பகுத்தறிவாளர்கள். ஆகையால் சொல்கிறேன் இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் ஆகும்". இவ்வாறு சொன்னவுடன் பயிற்சியாளர் மிகவும் மகிழ்ந்து என்னைப் பாராட்டினார்.

அவரும் கந்தர் சஷ்டி கவசம் படிப்பதில் உள்ள நன்மைகளை ஏற்றுக் கொண்டார். நீங்களும் இதை ஏற்றுக் கொண்டால் தாமதிக்காமல் இன்றே படிக்கத் துவங்கலாமே!


காக்க காக்க கனகவேல் காக்க!

நோக்க நோக்க நொடியில் நோக்க!

24 comments:

சிராப்பள்ளி பாலா said...

பிரமாதமான விளக்கம். அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.

ravichandran said...

migavum arumai.thodarnthu indu matha unmaigalai eluthavum.

SPECTRUM VIDEOS said...

Excellent.

Saranya said...

very nice information

Unknown said...

nice information nanba
keep it up

hayyram said...

நன்றி Shiva Satish

Unknown said...

dear Hayram

can I get ur gmail id please.

hayyram said...

Shiva Satish , நீங்கள் hayyram@gmail.com ல் தொடர்பு கொள்ளலாம். நன்றி நன்பா.

Anonymous said...

very good information thanks

SUMAN said...

நான் எனது நண்பர்களுடன் வாக்குவாதப்படும் விடயத்தை எழுத்தேற்றியுள்ளீர்கள் அத்துடன் ஆதாரத்துடன் சொல்வதும் அருமை வாழ்த்துக்கள்

நன்றி நண்பா

Siva Sottallu said...

Very informative and thought provoking... Thanks to you.

hayyram said...

thanks suman

thanks siva

malarvizhi said...

migavum arputhamaaga ullathu. arumaiyaana thagaval. nanri.

hayyram said...

நன்றி மலர்விழி, மீண்டும் வருக.

naray said...

naa
நான் எழுத வந்தது இன்னைக்கு நடக்கும் ஒரு அநியாயம்
முதல்வராயிருப்பவர் முக்கிய வேலைகள் டில்லியில் இருந்தும் ஏதோ இங்க தலை போகிற
வேலையாக நடிகர்கள் நடத்தும் (அவருக்குத்தான்) பாராட்டு விழாவுக்கு போகப்போறாராம். கேவலமாயில்லை?
இன்னும் கொடுமை என்னனா 60 லட்சம் மக்கள் வரிப்பணத்தை எடுத்து இவர்களுக்கு கொடுத்து இருக்காறாம் (ஏன்னா இவுங்க ரொம்ம்ப ஏழை..இல்ல?) இதுல நாளைக்கு மீட்டிங்க் வல்லேன்னா கடுமையான நடவடிக்கை வேறையாம் நடிகர் சங்கமே மிரட்டுகிறது என்ன கொடுமைடா சாமி இத ஒரு களவானி பத்திரிகைகாரனும் போடவே இல்ல தினமலர் உள்பட.

hayyram said...

thanks naray ...

இந்த கேடுகெட்ட கூத்தாடிப்பயலுங்க தான் நாட்டுக் கலாச்சாரத்தையே கெடுக்கராங்க. எந்த ராஜா நாட்டை ஆண்டாலும் அவன் காலை நக்கறது தானே இவங்க வேலை. இப்போ மட்டும் சும்மா இருப்பாங்களா. இந்த கெழவனுக்கும் வேற வெல்லை இல்லை. மக்கள் எக்கேடு கெட்ட இவங்களுக்கு என்ன. விலைவாசி ஏறுவதா முக்க்யம்? நாலு பேர் பாராட்டின ஜம்பமா உக்காந்து 'நான் தான்' ந்னு திமிரு காட்டிக்கிட்டு இருக்கலாம். அது போக காங்கிரஸ் இப்போ தி மு க வை மதிக்கலைன்னு ஒரு பேச்சு இருக்கு. ஏன்னா இவங்க தயவு காங்கிரஸ்க்கு இப்போ தேவை இல்லை வேற. அதனால முதல்வர் விலை வாசி உயர்வு பத்தி அங்க போய் பேசாம சினிமாக்காரன் குனியறதை வேடிக்கை பாக்க போறாரு. எல்லாம் சுயநலம் தான்? மக்கள் எப்படி போனால் யாருக்கு என்ன வந்துச்சு.?

naray said...

இது போல இன்னும் நிறைய அநியாயங்களையும் அப்பட்டமான அயோக்யத்தனங்களையும்,அத்துமீறல்களையும் அகம்பாவ ஆடம்பரங்களையும் பொய்ம்முகங்க்ளையும் அம்பலப்படுத்த என் வாழ்த்தும் முடிந்தவரை (அதாவது என் பார்வைக்கு எட்டியவரை)வழங்கலும் நிச்சயமாய் உண்டு

நாராயணன்

hayyram said...

//பொய்ம்முகங்க்ளையும் அம்பலப்படுத்த என் வாழ்த்தும் முடிந்தவரை (அதாவது என் பார்வைக்கு எட்டியவரை)வழங்கலும் நிச்சயமாய் உண்டு

நாராயணன்//

மிக்க நன்றி நாராயணன். நாம் நமது கடமையைச் செய்வோம். அந்த விதை ஓரிடத்திலாவது விருட்ஷமானால் சரிதான்.

naray said...

இதவிட் அயோக்யத்தனம் கிடையாதய்யா தும்பைப்பூ அது என்று பாராட்டிவிட்டு அதே கையோட கைப்பொம்மை காவல் துறையை விட்டு வழக்குப்பதிவு வேற அல்லற் பட்டு ஆற்றாது அழுகை எப்படா இதுகளைத் தேய்க்கும் வள்ளுவனே நீயே சொல்.......

naray said...

பகுத்தறிவின் புதிய பரிணாமம் இங்கு காண்பீர்;
அஞ்சுகம் அம்பாள்;
கருணா ஸாஸ்த்ரிகள்
எல்லாம் சேவிச்சுக்கோங்கோ
http://www.flickr.com/photos/raju_49/4836430953

hayyram said...

mr.naray, அவங்கதான் குலதெய்வம் கோவிக்கு போய் கும்பிட்டே வராங்களே! படத்துக்கு பூபோடுவது பெரிதா என்ன? வருகைக்கு நன்றி.

Unknown said...

its really true i had tried this reading 36 times a day but i failed

hayyram said...

//36 times a day// ??????

karthick said...

hay ram
i loved the way of explanation abt kanda sasti kavasam.I am one of the devotee of lord murugan.
HE SHOWED ME SO MUCH OF CHANGES IN MY LIFE.IF ANY THING GOING TO TAKE PLACE WRONG . HE COMES AND WARNS ME,THIS IS HAPPENING TILL DATE .I AM VERY MUCH PROUD TO SAY THAT IAM BLESSED BY LORD MURUGAN.I AM CRAZY ABOUT HIM.
I REALLY WANT TO KNOW THE EXACT MEANING OF THE WHOLE KANDA SASTI KAVASAM.IF U CAN PLEASE POST IT .

Y BECAUSE YOUR WAY OF EXPLANATIONS ARE REALLY AWSOME.SO PLS CAN U EXPLAIN THE SONG FROM TOP TO THE END...????
YOU CAN ALSO POST IT TO MY MAIL ID alagesh.mca@gmail.com