Monday, September 13, 2010

நாத்திகத் தீவிரவாதம்!


நாத்திக சைக்கோகளின் அடாவடி

**** கோவை: விநாயகர் சதுர்த்தி விசர்ஜன ஊர்வலம் நடக்கும் நிலையில் கோவையில், விநாயகரை அவமதிக்கும் வகையில் பிரசுரம் வெளியிட்ட தி.க.,வினர்! நேற்று முன்தினம் இரவு தி.க.,வைச் சேர்ந்த சிலர், கோவை ரேஸ்கோர்ஸ், சுங்கம் பகுதியில் "விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் பக்தர்களின் சிந்தனைக்கு' என்ற தலைப்பில் நான்கு பக்க துண்டு பிரசுரத்தை பொதுமக்களுக்கு வினியோகித்தனர். இப்பிரசுரத்தை படித்து பார்த்த பொதுமக்களும், இந்து அமைப்புகளும் மிகுந்த வேதனையும், கடும் அதிருப்தியும் அடைந்தனர். இது தொடர்பாக, வேதனை அடைந்த இந்து முன்னணி, பாரத் சேனா, விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்புகளைச் சேர்ந்த தொண்டர்கள், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, நேற்று காலை சுங்கம் பகுதியில் மறியலில் ஈடுபட முயன்றனர்.

நேற்று, இந்து முன்னணி மாநகர் மாவட்ட செயலர் சதீஷ் தலைமையில் இந்து முன்னணி, பாரத்சேனா, வி.எச்.பி., உள்ளிட்ட இந்து அமைப்புகள் ரேஸ்கோர்ஸ் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசனிடம் புகார் கொடுத்தனர். புகாரில்," முழுமுதற் கடவுள் விநாயகரை பல்வேறு வகையில் அவமதிக்கும் நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நோட்டீஸ் சென்னை, வேப்பேரியில் உள்ள திராவிடக் கழகம், தலைமை நிலையத்தில் இருந்து வெளியிட்டதாக அச்சிடப்பட்டிருந்தது. சம்பந்தப்பட்ட நோட்டீசை கைப்பற்றுவதோடு, இந்துக்கள் மனம் நோகும்படியாக, நோட்டீஸ் வினியோகித்தவர்களை கைது செய்து, கடுமையான தண்டனை விதிக்க வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது. புகார் மனுவை பெற்றுக் கொண்ட போலீசார், இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்! ****

தமிழகத்தைப் நாத்திக சைக்கோக்களின் இந்து அவமதிப்புச் செயல்கள் சகிக்க முடியாத அளவிற்குத் தொடர்வது வேதனை. இந்துக்களின் மனதைப் புண்படுத்தி அவர்களின் உணர்வுகளை அவமதிப்பதில் மிக குரூரமான குணத்துடன் நடந்து கொள்வதில் நாத்திக தீவிரவாதிகள் முன்னனியில் இருக்கிறார்கள்! ப.சிதம்பரத்தின் வழியில் இவர்கள் செய்வதை கருப்புத் தீவிரவாதம் எனலாமா?

'நல்ல தாய்க்குப்' பிறந்தவர்கள் நாத்திகத்தை எல்லா மதத்தினரிடமும் ஒரே மாதிரியாக பரப்புவார்கள் என்று பெரியோர்கள் கூறுவார்கள். ஆனால் தமிழகத்தின் நாத்திகத் தீவிரவாதிகள் தங்கள் கருப்புத் தீவிரவாதத்தை வேளாங்கன்னி மாதா கோவில் வைபவத்தின் போது செய்யவில்லை! கிறிஸ்தவர்களிடம் நாத்திகத்தை அவர்கள் இது போல் அச்சடித்த காகிதத்தால் பரப்பவில்லை! நடந்து முடிந்த ரம்ஜான் நிகழ்ச்சியின் போது மசூதிகளின் வாசலில் நின்று இது போல் அச்சடித்த காகிதத்தால் நாத்திகத்தை முஸ்லீம் மதத்தினரிடம் பரப்பவில்லை. பெரியோர்கள் வாக்குப்படி பார்த்தால் நாத்திகத்தை எல்லா மதத்தினரிடமும் ஒரே மாதிரியாக பரப்பாதவர்கள்.

இறை உரு மீது கல்வீச்சு

தூத்துக்குடி: திருச்செந்தூர் அருகே, நேற்று மாலை விநாயகர் ஊர்வலத்தின் மீது இரு இடங்களில் கற்கள் வீசப்பட்டதால், திடீர் பதட்டம் ஏற்பட்டது. திருச்செந்தூர் அருகே உடன்குடி பகுதியில், சதுர்த்தியையொட்டி 35க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள், முக்கிய இடங்களில் வைக்கப்பட்டிருந்தன. நேற்று மாலை ஐந்து மணியளவில் அந்த சிலைகள் அனைத்தும் உடன்குடி மெயின் பஜாருக்கு கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து ஊர்வலம் புறப்பட்டது. வழியில் பெரியதெரு, முகைதீன் புதுத்தெரு வழியாக ஊர்வலம் வந்தபோது மர்ம நபர்கள் கற்களை வீசினர். ****

மலேசியாவிலோ, அரபு நாட்டிலோ இந்து கடவுளை கொண்டு செல்லவில்லை! சொந்த நாட்டின் சொந்த மண்ணில் இறை வழிபாடை பாதுகாப்பாக செய்ய முடியவில்லை எனில் இந்நாட்டின் மதச்சார்பின்மையும் (என்ற போலித்தனம்) இறையான்மையும் கேள்விக்குரியதாகவே இருக்கிறது!

விநாயகரை வழிபட்டால் கைது?

****கோவை: செல்வபுரம் கல்லாமேடு பண்ணாரிமாரியம்மன் கோவில் பகுதியில், இந்து முன்னணி சார்பில், விநாயகர் சதுர்த்தி விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. மூன்றரை அடி உயர விநாயகர் சிலையை நேற்று முன் தினம் இரவு பிரதிஷ்டை செய்தனர். சதுர்த்தி விழாவையொட்டி, 20 ஆண்டுகளாக இங்கு இந்து முன்னணியினர் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்வது வழக்கம். கடந்த ஆண்டு இந்து முன்னணியைச் சேர்ந்த ஒருவர் இறந்ததால், சிலை பிரதிஷ்டை செய்யவில்லை. இந்த ஆண்டு வழக்கம் போல் சிலை பிரதிஷ்டை செய்ய போலீசாரிடம் இந்து முன்னணியினர் அனுமதி கோரினர். வேண்டு கோளை நிராகரித்த போலீசார், சிலையை வைக்கக்கூடாது என தடை விதித்தனர்.

இதை ஏற்றுக்கொள்ளாத இந்துமுன்னணியினர், பொறுப்பாளர் குணசேகரன் தலைமையில் மூன்றரை அடி விநாயகர் சிலையை நேற்று முன் தினம் இரவு பிரதிஷ்டை செய்தனர். தகவலறிந்த போலீஸ் துணை கமிஷனர் நாகராஜன், உதவிகமிஷனர்கள் குமாரசாமி, பாலாஜிசரவணன் ஆகியோர், "சிலை வைக்கக்கூடாது' என எதிர்ப்புத்தெரிவித்தனர். போலீசாரோ, முறையாக அனுமதி பெறாமல் விநாயகர் சிலையை வைக்கக்கூடாது எனக் கூறி, அப்புறப்படுத்த முயன்றனர். இதை கவனித்த பெண்கள் விநாயகரை சுற்றிவளைத்து அப்புறப்படுத்தவிடாமல் தடுத்தனர். இதையடுத்து, போலீசார் அங்கிருந்த இந்து முன்னணி தொண்டர்களை கைதுசெய்து வேனில் ஏற்றினர். விநாயகரை சுற்றி வளைத்து நின்ற பெண்களை தவிர்த்து விநாயகர் சிலையை போலீசாரால் கைப்பற்ற முடியவில்லை. அதனால் விநாயகர் சிலையையும் பெண்களையும் சேர்த்து கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றினர்.ஆண்கள், பெண்கள், சிறுமிகள், சிறுவர்கள் என்று மொத்தம் 146 பேரை போலீசார் கைது செய்தனர். கைதுசெய்தவர்களை பாதுகாப்பாக வைக்க கோவை நகரிலுள்ள பல திருமண மண்டபங்களை போலீசார் தேடி அலைந்தனர். விசேஷ நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்ததால் காலியாக எதுவும் இல்லை. கோவை அண்ணாமலை ஓட்டல் பகுதியில் வாகனத்தை நிறுத்தி கைது செய்தவர்களை இறங்க அறிவுறுத்தினர். ஒருவரும் இறங்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், ஸ்டேட் பாங்க் ரோட்டில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

நிலைமை மோசமாவதை உணர்ந்த போலீசார் கைது செய்தவர்களை போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்திற்கு கொண்டுசென்றனர். அங்கு கைது செய்யப்பட்டவர்களை இறக்கி விட்டனர் அங்கு விநாயகர் சிலையும் இறக்கி வைக்கப்பட்டது. இதையடுத்து கைதுசெய்யப்பட்டவர்களுக்கு மதிய உணவு போலீசாரால் வழங்கப்பட்டது. வாங்க மறுத்து அனைவரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று காலை நைட்டி அணிந்த நிலையில் கைது செய்யப்பட்ட பெண்கள் பலர் உணவருந்தாமல் போலீஸ் பயிற்சி மைதானத்திலேயே வைக்கப்பட்டனர். இதனிடையே இந்து முன்னணி நிர்வாகிகள் மற்றும் போலீசாருக்குமிடையே சிலை பிரதிஷ்டை செய்வது தொடர்பாக பேச்சு நடந்தது. இதில் எந்த முன்னேற்றமும் நேற்று மாலை வரை ஏற்படவில்லை. *****

போலீஸ்காரர்கள் இப்படி பாடுபட்டு போராடி, பெண்களையும் குழந்தைகளையும்
கைது செய்து கொடுமைப்படுத்தும் அளவிற்கு அவர்கள் என்ன செய்தார்கள். பண்டிகை தினத்தில் இந்துக்கள் இறைவழிபாடு செய்வது தவறா? புறம்போக்கு நிலத்தில் கட்டம் கட்டினாலே பட்டா போட்டுக் கொடுத்து ஓட்டு வாங்கத் துடிக்கும் அரசியல்வாதிகள், ஓரிரு தினங்கள் தற்காலிகமாக இறையுரு வைத்து வழிபாடு செய்வது குற்றம் எனக்கூறுவதும் அதற்கு எதிராக கடுமையாக அடக்குமுறைகளைக் கையாள்வதும் கண்டிக்கத்தக்கது.

ரங்கநாதன் தெருவில் அனுமதியின்றி கட்டப்பட்ட பல முறையற்ற கட்டிடங்கள் இன்னும் இடிக்கப்படாமல் இருக்கின்றன. அத்தகைய முறைகேடுகளை அனுமதிப்பது பரவாயில்லையாம். ஆனால் விநாயகர் சிலையை ஒரு நாள் தற்காலிகமாக வைத்து வழிபட்டால் அனுமதி இல்லை எனக்கூறி கைது செய்வார்களாம்! இது இந்துக்களுக்கு இழைக்கப்படும் கொடுமை என்பதைத் தவிர வேறில்லை! தமிழகத்தை ஆள்வது பாகிஸ்தானா?

தி மு க விற்கு இந்துக்கள் ஓட்டு போடும் வரை இந்த அவலத்தை தடுக்க முடியாது!


34 comments:

Unknown said...

Wish a happy engineers day

இன்று பாரத ரத்னா உயர் திரு மோக்ஷ குந்தம் விஸ்வேஸ்வரையா
(1860 -1962 ) இந்தியாவின் முதல் பொறியாளர் அவர்களின் பிறந்த நாள்.

http://www.karnataka.com/personalities/visvesvaraya

Unknown said...

சனாதன தர்ம பூமியில் தான் நாம் இருக்கிறோமா என்று சந்தேகம் வருகிறது.
இவர்களும் (க(ழ)லககாரர்கள்) திருந்தமாட்டார்கள். இலவசத்துக்கும்,இன்னபிற அற்ப சலுகைகளுக்கும் மயங்கும். சமுக நோக்கு இல்லாத பொது மக்களும் திருந்த மாட்டார்கள். ஏதாவது ஒரு புரட்சியாளன் அவதரித்து புரட்சி வெடித்தல் தான் உண்டு.நிச்சயம் நடக்கும்.
குறைந்த பட்சமாக 1500 ஆண்டுகளுக்கு மேலாக இந்த சனாதன தர்மம் பல அசுரர்களிடம் சிக்குண்டு நசுக்கப் படுகிறது.
அரக்கர்களை வதம் செய்ய அவதாரம் எந்நாளோ?

hayyram said...

//அரக்கர்களை வதம் செய்ய அவதாரம் எந்நாளோ?// சம்பவாமி யுகே யுகே. நம்மிலிருந்து ஒருவர் வந்தாலும் ஆச்சரியமில்லை. காத்திருப்போம்.

Balaji said...

வேசி மக்கள் என்ற தங்கள் கருத்து, தங்களின் தரம் தாழ்ந்து விட்டதாக கருகிறேன் .
விநாயகர் ஊர்வலங்கள் தங்களின் மத நம்பிக்கையை அல்லது பக்தியை காட்டுவதாக அமையவில்லை என்பதே என் எண்ணம்.
மாறாக அவை உங்களின் பலத்தை காண்பிப்பதகவே அமைகிறது .
சில இடங்களில் இது வெறும் ஆர்பாட்டமகவே தெரிகிறது

hayyram said...

சரி, ஆனால் விநாயகரை அவமதிக்கும் நாத்திகர்களின் நடவடிக்கைக்கு எதிராக உங்களால் யோசிக்க கூட முடியவில்லையே! மீண்டும் விநாயகர் ஊர்வலத்தை விமர்சிப்பதில் தான் உங்கள் நோக்கமும் இருக்கிறது. ஏன்? மீண்டும் சொல்கிறேன்.. 'நல்ல தாய்க்குப்' பிறந்தவர்கள் உண்மையான நடுநிலைமையாளர்களாக இருப்பார்கள்! நாத்திகர்களில் நிஜமான நடுநிலையாளர்கள் இருப்பார்களெனில் எமக்கும் மகிழ்ச்சியே!

Balaji said...

எவ்விதமான வன்முறையும் கண்டிக்கத்தக்கது. சொல், செயல் மற்றும் எண்ணங்கள் வடிவில் இருந்தாலும்.
அது நாத்திகம் அல்லது ஆத்திகம், எதுவானாலும். நான் திருவிழா அல்லது தேர் பவனி , போன்ற மக்கள் கூடும் விழாக்களை வரவேற்கிறேன். ஆனால், விநாயகர் ஊர்வலங்கள் என்ற பெயரில் நடக்கும் (சில அல்லது பல இடங்களில்) ஆதிக்க எண்ணம் கொண்ட விஷயங்களை (விஷமங்களை ) ஆதரிப்பது, தொலைநோக்கு பார்வையல் நல்லதல்ல என்னபதே என் எண்ணம்.
ஆதிக்க எண்ணம் என்பதை விட , வன்முறை எண்ணம், என்பதே சரி என்று தோன்றுகிறது. அதுவும் முழு முதற் கடவுள் விநாயகர் பெயரில் இதெல்லாம் நடக்கிறதே என்பதுதான் என் மனக்குறை.வடஇந்திய வன்முறை கலாச்சாரம் இங்கே பரவுகிறதோ என எண்ண தோன்றுகிறது..இந்து என்பது நம் வாழ்கை முறை. அது ஒரு நல்ல வாழ்கை முறை. அதை தவறாக திருப்ப முயலுகிறர்களோ என்பதே எமது மனக்குறை.
மீண்டும் சொல்கிறேன், தங்களது கருத்து('நல்ல தாய்க்குப்' பிறந்தவர்கள் உண்மையான நடுநிலைமையாளர்களாக இருப்பார்கள்) என்னை திகைக்க வைக்கிறது. தயவுசெய்து தடம் மாறார்திகள். இது நமக்கு நல்லதல்ல. குறைந்தபட்சம் நமது தமிழ் நாட்டுக்கு நல்லதல்ல.

Unknown said...

என்ன இருந்தாலும் அந்த ஒரு வார்த்தையை மட்டும் நீங்கள் சொல்லி இருக்க கூடாது.
ஏன் என்றல் நீங்கள் பெரும்பான்மை சமயத்தை சார்ந்தவர் பகுத்தறிவு வாதிகளுக்கு எதிராக செயல்படுகிறீர்கள் . எவ்வளவு அடித்தாலும் தாங்கனும் அல்லது வலிக்காத மாதிரியே நடிக்கணும், திருப்பி ஒரு சிறிய வார்த்தை கூட உங்களை மீறியும் வராமல் பார்த்து கொள்ள வேண்டும்.
இன்றைய திராவிட மனுதர்மம் தெரியாமல் இருக்கிறீர்கள். திராவிட மனுதர்மப்படி சிறுபான்மையினருக்கும், பகுத்து அறி(ரி)வா(ள்)ளருக்கும் ஒரு விதமாகவும் (வெண்ணையும்) சிருமைபடுத்தபட்டு கொண்டிருக்கும் இந்துக்களுக்கு மட்டும்
வேறு விதமாகவும் (சுண்ணாம்பு) தர்மம் வழங்க வேண்டியது உங்களுக்கு தெரியாமல் உள்ளது ஆச்சர்யமாக உள்ளது. இனியாவது தெரிந்து நடந்து கொள்ளுங்கள்.

Balaji said...

சதீஷ்--- உங்களுடைய நக்கலுக்கு நன்றி.
வன்முறை எண்ணம் பரவ வழி செய்யாதிர்கள் என்பதே என் வேண்டுகோள். நீங்களும் சில அல்லது பல (சீல் பிடித்த) தலைவர்கள் போல் பேசுவது அழகல்ல.
எப்போதுமே சிறுபான்மை மக்களுக்கு, ஒரு பயம் அல்லது பாதுகாப்பற்ற மன நிலை இருப்பது இயல்பே. எவரும் திருவிழா அல்லது தேர் பவனிகளை எதிர்ப்பதேயில்லை. எல்லா தரப்பினரும் மகிழ்ச்சியாக பங்கேற்கிறார்கள்.ஆனால் விநாயகர் ஊர்வலங்கள் அவ்வாறு இல்லை என்பதே உண்மை.
திருவிழாவில் சண்டைகள் வருவது கூட நம்முடைய சாதிகளால்தான்.

Unknown said...

அன்புள்ள பாலாஜி,
நானும் சண்டையை விரும்பவில்லை. இவ்வளவு பிரச்னை நடந்து அதனை பற்றி ஒருவர் எழுதி இருக்கிறார் அதில் நாம் அடைந்த பாதிப்புகளை பற்றி ஒன்றும் சொல்லாமல் நேரே ஒரு சிறு தவறை எடுத்துக்கொண்டு அதனை விமர்சிப்பது ஏன்?சரி தவறை சுட்டிகாட்டிநீர்கள்.நடுநிலையாக இருப்பதனை பாராட்டுகிறேன் ,நடுநிலை எனும் போது ஏன் மற்ற கலககாரர்களை பற்றி ஒரு வார்த்தை கூட வருத்தம் தெரிவிக்கவில்லை.
மீண்டும் உங்கள் கருத்து ஒப்புக்கு பொதுவாக வன்முறை எல்லாவற்றையும் கண்டிப்பதாகத்தான் உள்ளது,ஆனால் ராம் அவர்களை மட்டும் குறிப்பிட்டு கண்டித்து உள்ளீர்களே.
விநாயகர் ஊர்வலத்தினர் இங்கே விஷமமாக நடந்ததாக எதுவும் செய்தி இல்லையே? அப்படி இந்த சம்பவத்தில் நடந்து இருந்து உங்களுக்கு தெரிந்தால் அதனை குறிப்பிட்டு கண்டிக்கலாமே ?

பொதுவாக விநாயகர் ஊர்வலமே ஆதிக்க மனோபாவம், விசமத்தனம் என்று கூறினால் எப்படி அது ? நாளை தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பது கூட பிறருக்கு பிடிக்கா விட்டால் அதனையும் விசமத்தனம் என்று நிறுத்தி விடுவோமா?
இந்த குறிப்பிட்ட சம்பவத்தில் தவறு ஊர்வலத்தினர் மேல் இருந்தால் கண்டியுங்கள். நானும் அதனை விரும்பவில்லை நானும் கண்டிக்கிறேன்.
என்னை சீல் பிடித்தவன் என்று கூறும் அளவுக்கு நான் எழுதிவிட்டேனா?
மன்னிக்கவும் நான் யாரையும் தனிபட்ட முறையில் தாக்குவது இல்லை
உங்களை கிண்டலடித்தது கூட நண்பர்கள் நக்கல் போல தான் நீங்கள் அதனை இந்த அளவு எடுத்துக் கொண்டது உங்கள் பார்வை.

Unknown said...

இங்கே சாதி பிரச்னையை பற்றி பேச அவசியம் என்ன? இப்பிரச்னைக்கும் சாதிக்கும் சம்மந்தம் இருப்பதாக தெரியவில்லை.
வம்பு சண்டைக்கு போகவும் விருப்பம் இல்லை, வந்த சண்டைக்கு பயந்து உரிமையை இழக்கவும் விருப்பம் இல்லை. நம் எல்லைக்குள் நம் உரிமையை அடுத்தவரை பதிக்காமல் நிலைநாட்டுவதில் என்ன தவறு. இந்த சம்பவத்தில் எங்கே அடுத்தவரை தொந்தரவு செய்யப் பட்டிருக்கிறது? .

hayyram said...

திரு பாலாஜி, தீயோரைச் சாட நாம் தீயோனாக வேண்டியதில்லை என்கிறீர்கள் . ஏற்கிறேன். ஆனால் அதற்காக விநாயகர் ஊர்வலங்கள் எல்லாமே ஏதோ வன்முறை செய்யத்தான் நடக்கின்றன என்ற ரீதியில் எழுதுவது எந்த விதத்தில் ஞாயம். ஒரு விஷயத்தை நினைவில் கொள்ளுங்கள்.

மதச்சார்பற்ற நாடு என்று கூறுவதன் அர்த்தம் என்ன தெரியுமா? நான் இன்ன மதத்தை சார்ந்தவன் என்று எதையும் அடையாளப்படுத்திக் கொள்ளாமல் இருத்தல் அதாவது எல்லா மதத்தையும் சமமாக ஏற்றல். இந்த கருத்தில் உடன் பாடில்லாதவர்கள் இந்த நாட்டில் இருக்கத் தகுதி இல்லை. அந்த விதத்தில் பார்த்தால் விநாயகர் ஊர்வலம் சென்றால் முஸ்லீம்களும் விநாயகரைத் தொழலாமே! அல்லது தடுக்காமலாவது இருக்கலாம். ஆனால் ஆண்டுக்கனக்காக ஒரு பாதையில் சென்று கொண்டிருக்கும் விநாயகர் ஊர்வலத்தை அங்கே புதிதாக மசூதி கட்டிவிட்டு இனிமேல் இந்த வழியில் உங்கள் கடவுள் வரவே கூடாது என்று கூறும் போது அங்கே பிரச்சனை உண்டாகிறது. இப்படி சலசலப்பை அடிப்படைவாதிகள் எழுப்பும் போது அதை கண்டிக்க ஆள் இருக்காது. ஆனால் விநாயகரை வேறு பாதையில் கொண்டு செல்லுங்கள் என்று அரசே கட்டளை இடும். மீறி ஊர்வலம் சென்றால் விநாயகர் ஊர்வலமே வன்முறைக்கலாச்சாரம் என்கிறீர்கள்! தெருவுக்கு ஒரு மசூதி கட்டி வைத்தால் விநாயகரை நாம் வழிபடவே கூடாது என்பார்கள். (ஓரிரு இடங்களில் முஸ்லீகள் விநாயகர் ஊர்வலத்தை வரவேற்றார்கள் என்ற நற்செய்தியும் கிடைத்து வருகிறது) அப்போது நாம் மீறி வழிபட்டால் உங்களைப் போன்றவர்கள் விநாயகர் வழிபாடே பிரச்சனைக்குரியது என்பீர்கள்! நீங்கள் இந்தியாவில் இருந்தால் இது புரியலாம். அல்லது எம்மதமும் சம்மதம் என்ற லூசுத்தனமான பேச்சுக்களை நம்பி ஏமாந்த சோனகிரி இந்துவாக இருந்தால் புரியலாம். இவை புரியவில்லையெனில் நீங்கள் கிறிஸ்தவராக இருக்க வேண்டும் (டேனியல் பாலாஜி?) அல்லது (போலி )நாத்திகராக இருக்கவேண்டும். நண்பர் சதீஷ் கேட்பது போல நாடு முழுவதும் நடக்கும் விநாயகர் ஊர்வலத்தில் ஊர்வலக்காரர்களால் நடந்த பிரச்சனை என்னவென்று கூறுங்கள். இந்த நாட்டில் குண்டுவைக்கும் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளை விடவா சுமார் 80 வருடங்களாக நடைபெறும் விநாயகர் ஊர்வலங்களால் பாதிப்பு உண்டாக்கி இருக்கிறது? இறை வழிபாட்டில் விழாக்களும் உண்டு. அவற்றில் சச்சரவும் இருக்கும். உடனே விநாயகர் ஊர்வலங்களே வன்முறையைத் தூண்டுவது என்பதாக நீங்கள் குறிப்பிடுவதை வன்மையாக கண்டிக்கிறேன். மறுக்கிறேன். எல்லாம் சரி, கட்டுரையின் மையப் பிரச்சனைக்கு பதில் கொடுக்கவே இல்லையே ஏன்? கிறிஸ்தவர்களிடம் நாத்திகத்தை அவர்கள் இது போல் அச்சடித்த காகிதத்தால் பரப்பவில்லை! நடந்து முடிந்த ரம்ஜான் நிகழ்ச்சியின் போது மசூதிகளின் வாசலில் நின்று இது போல் அச்சடித்த காகிதத்தால் நாத்திகத்தை முஸ்லீம் மதத்தினரிடம்
பரப்பவில்லை. இதற்கு உங்கள் பதில் என்ன?

hayyram said...

//எப்போதுமே சிறுபான்மை மக்களுக்கு, ஒரு பயம் அல்லது பாதுகாப்பற்ற மன நிலை இருப்பது இயல்பே.// பாலாஜி, நீங்கள் உண்மையிலேயே தமிழகத்தில் தான் இருக்கிறீர்களா என்று சந்தேகம்!?? இந்தியா முழுவதும் இந்துக்களை ரெண்டாம் தர குடிமக்களாக நடத்தும் சுபாவம் தான் தலைவிரித்து ஆடுகிறது. அதுவும் தமிழகத்தைப் பொறுத்தவரை இந்துக்கள் தான் அதிகம் அவமதிக்கப்படுகிறார்கள். முஸ்லீம் கஞ்சியை நக்கிக் குடிக்கும் அரசியல் தலைவர்கள் மாரியம்மன் கோவிலில் கூழ்குடிக்க வருவதில்லை. கருணாநிதி போன்றவர்கள் தீபாவளிக்கு வாழ்த்து சொல்லமாட்டார்கள் ஆனால் மூஸ்லீம் பண்டிகைக்கு வாழ்த்துவார்கள். இந்துக்கோவில்களை பராமரிப்பின்றி தானே இடிந்து விழுமாறு செய்யவும், இந்துக் கோவில்களை ஏதாவது காரணம் கூறி இடிக்கவும் இவர்கள் தயங்குவதில்லை. மதம் மாற்றும் கிறிஸ்தவர்கள் வெளிப்படையாக இந்துக்கடவுளரை கேவலமாக மேடை போட்டு பேசுவதை அரசு தடுப்பதில்லை. இப்படி தொடர்ந்து இந்துக்கள் திட்டமிட்டு தாக்கப்படுவதால் இந்துக்களுக்குத்தான் இப்போது ஒரு பயம் அல்லது பாதுகாப்பற்ற மன நிலை இருக்கிறது. அதை நீங்கள் இன்னும் உணரவில்லை என்றால் நீங்கள் வேறு ஏதோ லோகத்தில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்!

hayyram said...

//வம்பு சண்டைக்கு போகவும் விருப்பம் இல்லை, வந்த சண்டைக்கு பயந்து உரிமையை இழக்கவும் விருப்பம் இல்லை// திரு சதீஷ், உண்மையான உணர்வை வெளிப்படுத்தி இருக்கிறீர்கள். நன்றி!

Balaji said...

இங்கே நான் அரசியல் ரீதியாக நான் எதையும் கூற முன்வரவில்லை. அதேநேரம் அரசியல் வியாதிகளான கருணாநிதி , ஜெயலலிதா பாணியில், போலி மதசார்பின்மை பேசுபவனும் இல்லை. நான் சண்டைகளை எதிர்பார்பவனும் இல்லை, எதிர் கொள்ள விருப்பமும் கொண்டவனில்லை.நான் இந்துவும் அல்ல, கிறிஸ்தவனும் அல்ல.

உங்களுடைய கிறிஸ்தவர்கள்/முசுலிம்கள் மிதான விமர்சங்களை நான் முழுமையாக ஆதரிக்கின்றேன். வன்மையாக கண்டிக்கிறேன்.அதற்காக இதை உங்கள் பதிலுக்கான என் எதிர் வினை என்று கூற வேண்டாம்.எப்போதுமே இதை நான் ஏற்பதில்லை.

நாம் அரசியல் ரீதியாக பேசினால், முடிவுகள் எட்டபடாது. நாமல்லாம் சாதாரண மனிதர்கள். ( குறைந்த பட்சம் நான்). மனிதனுக்கும், மனிதனுக்கும் இடையே உள்ள உறவு மிக எளிமையானது.

சீல் பிடித்தவன் என்ற என்னுடைய கருத்து, உங்களை குறிப்பிடது அல்ல. அரசியல்வாதிகளை. தங்களை அது காயப்படுத்தி இருந்தால், மிகவும் வருந்துகிறேன்.
வோட்டு வங்கி அரசியல்வாதிகளை பற்றி என்னுடைய கருத்து, அவர்கள் பிரம்மாவின் கால் தூசியை விட மிக மிக மோசமானவர்கள்.
பி. கு : நேரம் இன்மையால் பதில்களை மட்டும் அனுப்பிவுள்ளேன், சுருக்கமாக . விரிவாக எழுதுகிறான் பின்னால். தப்பி ஓடவில்லை.

hayyram said...

அன்புள்ள பாலாஜி, கருத்துப் பரிமாற்றம் தான் செய்கிறோம். எப்பொழுது நேரம் கிடைக்கிறதோ அப்போது எழுதுங்கள். உங்களை தவறாகவோ ஏளனமாகவோ நினைக்க வில்லை.
நன்பர்களுக்குள்ளான விவாதம் நன்மையே பயக்கும். நன்றி மீண்டும் வருக!

RMK said...

Thiru Balaji should understand the reality of the happenings in India.A young man of 60 I fully endorse the views of both Mr.Satish & Mr.Hayram.Bloody Politicians are always running after Vote Banks.They are preapared to sacrefice everying including their beloved mother for the sake of Position,Power,Wealth etc.When that be the case,no point in expecting them to be bothered about our ancient richy religion.The only way is to Pray the Almighty for a solution.
RMK

Unknown said...

நன்றி திரு RMK ஐயா அவர்களே.
திரு பாலாஜி அவர்களே,
உங்கள் மீது எந்த வருத்தமும் எனக்கு இல்லை.நீங்களும் உண்மை நிலையை உணர முற்படுங்கள். விஷமம் செய்யும் கூட்டம் இந்துவாக இருந்தாலும் நாம் அதனை எதிர்ப்போம். நட்புகளை விட,மனித நேயத்தை விட மதமோ வழிபாடோ முக்கியம் அல்ல என்று நினைப்பவன் நான். அதற்காக என் மதத்தையும் என் வழிபாட்டையும் யாரும் இடையூறு செய்வதை எதிர்க்க எனக்கு உரிமையும் கடமையும் உண்டு. கடவுளும் வழிபாடும் என் சொந்த விஷயங்கள். எம் முன்னோர்கள் வழியும் நான் விரும்பும் வழியிலும் அடுத்தவரை பாதிக்காமல் வழிபடுவதற்கு எல்லா வகையிலும் உரிமை எல்லோருக்கும் உண்டு
நான் சிறு வயதில் ஆதிபராசக்தி வழிபாட்டின் போது எல்லா வார வழிபாட்டு மன்றங்களிலும் வேளாங்கண்ணி மாதாவின் போட்டோவையும் வைத்து அதற்கும் வேப்பிலை கொத்து சாத்தி வழிபடுவதை பார்த்திருக்கிறேன். வழிபாட்டு பாடலில் மரியா மேரியே ஓம் சக்தி ஓம் என்றும் ஒரு வரியில் உண்டு.
இதுதான் நாம் பிற தெய்வங்களையும் மதிக்கும்,வணங்கும் பண்புக்கு ஒரு எடுத்துகாட்டு. சிறு வயதிலே நம்ம ஊரிலே ஒரு கிறித்தவர் கூட இல்லையே என்று கூட வருத்தபட்டிருக்கிறேன்.
வேளாங்கண்ணி சென்று மாதவி வழிபட்டிருக்கிறேன். அங்கு பாதயாத்திரை பெரும் பகுதி இந்துக்கள் தான்.
வேளாங்கண்ணி சென்றுவிட்டு பின்னர் அப்படியே நாகூர் சென்று பாத்தியா ஓதிவிட்டு மயில் தோகையால் தலையில் நாலு அடிவாங்கிவிட்டு அப்பாடா என்று தன் முக்கிய கடமையை முடித்தது போல பெருமுச்சு விடும் இந்துக்களை பலரை பார்த்திருக்கிறேன். ஒவோர் வாரமும் தவறாமல் வியாழன் இரவு நாகூர் தர்காவில் படுத்து
வரும் இந்துக்கள் நிறைய பேர் உள்ளனர்.
எப்படி அவர்களுக்கு பதுகாப்பு உணர்வு இல்லாமல் போகும்? அப்படி ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்குவது ஒன்று இதன் மூலம் லாபம் காண நினைக்கும் திராவிட கழக மற்றும் கட்சிகள் இரண்டாவது அந்த மதங்களில் உள்ள மக்களை உசுப்பி விட்டு அதன் மூலம ஆதாயம் தேட நினைக்கும் அந்த மதத்தின்,மத அமைப்புகளின், மதக் கட்சிகளின் தலைவர்கள்.

(சூரியனார் கோவிலும், திருநல்லாரும் வரும் முஸ்லிம்களும் ஒரு சிலர் உள்ளனர்.சிவராத்திரிக்கு கோவில் கோவிலாக இரவு முழுவதும் சுற்றும் கிறிஸ்தவ நண்பர்களும் எனக்கு உண்டு. இந்து மதத்தை பற்றியும இந்து விழாக்களை பற்றியும் எனக்கே விளக்கம் கொடுத்தார் அதில் ஒருவர்.அனால் இவர்கள் எல்லாம் மிக குறைந்த அளவே, நான் எல்லோரும் அப்படி இருக்க வேண்டும் என்று கூற வில்லை.அவர்கள் வழியில் அவர்கள் நம்மை எந்த தொந்தரவும் செய்யாமல் அவர்கள் உரிமைகளோடு அவர்கள் விழாக்களை கொண்டடி சிறப்புடன் அவர்கள் இருக்கட்டும்,நாமும் நம் உரிமைகளுடன் நம் விழாக்களை கொண்டாடிக்கொண்டு அவர்களுடன் நட்புடனே இருப்போம் ).
நம்மை உரிமைகளை மட்டம் தட்ட நினைக்கும் போது, நாம் பெரும் பான்மையாக இருக்கும் போதே நம்மை உரிமைகளை தடுக்க நினைக்கும் போது யாராக இருந்தாலும் வேறு வழியில்லை எதிர்த்து போராடித்தான் ஆக வேண்டிய கட்டாயமுள்ளது.

அவர்கள் நட்புடன் இருந்தாலும் நம்மை இளக்கரபடுத்தி அவர்களை சொரிந்து உசுப்பேத்தி விடுவது நமக்குள் சண்டையை மூட்டிவிடுவது, அதன் மூலம் அரசியல் லாபம் அடைவது இந்த திராவிட கழக மற்றும் கட்சிகளின் சூழ்ச்சியாக உள்ளது.அவர்கள் ஒழிந்தாலே பாதி சமய பிரச்னைகள் தமிழ் நாட்டில் குறையும் என்று நம்புகிறேன்.
இந்த சம்பவத்தில் பிரச்னையே தி க (இதன் அர்த்தம் புரியும் என்று நினைக்கிறேன்) இந்து கடவுளை அவமதித்து நோட்டீஸ் கொடுத்ததும், போலீஸ் காரர்கள் காரணமின்றி இந்து நண்பர்களை விநாயகரை வழிபட விடாமல் செய்தது,மற்றும் கைது செய்ததும் தான்.


உள்ளுக்குள் எப்படி இருந்தாலும் வெளியில் மாமா,மச்சான் என்று உறவு சொல்லி கூப்பிட்டு கொண்டு நண்பர்களாக சுற்றும் இந்து முஸ்லிம்கள் வாழும் பல கிராமங்கள் இன்னும் உள்ளன.
(இந்த ஊர்களில் எல்லாம் முஸ்லிம் மிக குறைவு,இந்துக்கள் மிக அதிகம்.மேலும் பெரும்பாலான முஸ்லிம்கள் வெளியில் தான் மாமா,மச்சான் என்பார்கள், அவர்களுக்குள் பேசும் போது இந்துக்களை அவர்கள் குறிப்பிடுவது தம்பல பயலுவோ (தமிழ் பயலுவோ) என்றுதான் )

எனக்கும் முஸ்லிம் நண்பர்கள் அதிகம் உண்டு.கிறித்தவ நண்பர்களும் உண்டு. ஒருவருக்கு ஒருவர் பரஸ்பரம் உதவி செய்துகொண்டுதான் உள்ளோம், எங்களுக்குள் ஒரு போதும் பிரிவினை பார்த்தது கிடையாது.
மேலும் பேசுவோம்
நட்புடன்
சதீஷ்

hayyram said...

//அவர்கள் நட்புடன் இருந்தாலும் நம்மை இளக்கரபடுத்தி அவர்களை சொரிந்து உசுப்பேத்தி விடுவது நமக்குள் சண்டையை மூட்டிவிடுவது, அதன் மூலம் அரசியல் லாபம் அடைவது இந்த திராவிட கழக மற்றும் கட்சிகளின் சூழ்ச்சியாக உள்ளது// உண்மை சதீஷ். இப்பொழுது கூட எனது வீட்டு வாசலில் கிறிஸ்தவ கும்பல் ஒன்று கூட்டமாக நின்று ஏசு கிறிஸ்து உங்களை அழைக்கிறார் என்று பிரசார நோட்டீஸ் கொடுத்துக் கொண்டு கத்திக் கொண்டு இருக்கிறார்கள். ஒரு இந்துக்கள் பெருமளவில் இருக்கும் வீடுகளுக்கு நடுவே நின்று மதம் மாற்றும் தைரியத்தை இவர்களுக்கு யார் கொடுத்தது. என் வீட்டு வாசலில் நிற்காதே தள்ளிப் போ என்றால் முறைக்கிறார்கள். உன்னால் முடிந்ததைப் பார் என்கிறார்கள்! காவல் துறையும் உதவுவதில்லை, அரசும் உதவுவதில்லை. இப்போது என்ன செய்யவது? இந்துக்கள் உணர்ச்சி வசப்படும் போது இந்து தீவிரவாதம் என்று நாகூசாமல் கூறும் ப சிதம்பரம் போன்றவர்கள் இந்த சூழலில் இந்துக்களுக்கு உதவுவாரா? உன்னால் ஆனதைப் பார் என்று மதமாற்றிகள் கூறும் போது, அரசோ போலீஸோ நம்மைக்காப்பாற்றாத போது 'நான் இந்துவும் இல்லை, கிறிஸ்தவனும் இல்லை, முஸ்லீமுமில்லை' என்று பேசி சப்பைகட்டு கட்டுபவர்கள் இந்த மதமாற்றிகளை சமாளிக்கும் வழி என்னவென்று கூறுவார்களா? எந்த இந்து இயக்கத்திலும் கூட சேராமல் பொறுமையாக இருக்கும் நம் போன்ற சாமானிய இந்துக்களுக்கு என்ன பாதுகாப்பு? யார் பதில் கூறுவார்கள் இந்த சூழலுக்கு! இதன் பெயர் தான் இறையான்மையா? குடியரசா? மதச்சுதந்திரமா?

smart said...

இதேப் போல ஒரு மத விஷயத்தில் பாதிக்கப்பட்டது ஒரு மாற்று மதமானால் நடப்பதே வேறு. இந்த கா.கா மன்னிக்க தி.க. செய்த வேலை மதசகிப்புத் தன்மைக்கு இழுக்கு.

hayyram said...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஸ்மார்ட்

Anonymous said...

HI Heyram,

Tolerance of the people have died.

As you had mentioned in a post Govt should not be partial to any religion, but people in general (irrespective of any religion) now a days do a rally or any gathering just to show their religion or caste or party's strength to the group they consider as enemies.

Without mutual love among groups(religion or caste or race), mankind would never have peace.

Thanks for your views.

வால்பையன் said...

//'நல்ல தாய்க்குப்' பிறந்தவர்கள் நாத்திகத்தை எல்லா மதத்தினரிடமும் ஒரே மாதிரியாக பரப்புவார்கள் என்று பெரியோர்கள் கூறுவார்கள்.//

யாருங்க அந்த பெரியோர்கள், ரொம்ப நல்லவங்களா இருக்காங்களே!

வால்பையன் said...

//நாத்திகர்களில் நிஜமான நடுநிலையாளர்கள் இருப்பார்களெனில் எமக்கும் மகிழ்ச்சியே//

ஒருத்தரை கூட நீங்க பார்க்கலையா அப்படி!?

hayyram said...

@வால்பையன், என்ன நண்பா, லீவுல போயிருந்தீங்களா?

sathesh said...

நல்ல தாய்க்கு என்ற வார்த்தை தவறு, ஆனால் நாத்திகன் நடு நிலையில் இருப்பாரானால் எல்லா மதத்தினரிடமும் ஒரே மாதிரியான நாத்திகத்தை பரப்ப வேண்டும் என்பது உண்மையே எள்ளளவும் மாற்றமில்லாத கருத்தே.
நீங்கள் கூறுவதை பார்த்தால் நீங்கள் அப்படி நாடு நிலையானவர் என்று தோன்றுகிறது.

ஒரு நேர்மையான நாத்திகன் (நேர்மையான) உண்மைய்லேயே ஏழையின் சிரிப்பில் இறைவனை காணும் நாத்திகன். ஒரு போலி பக்தனை விட பலமடங்கு சிறந்தவன். இவ்வுலகில் இரண்டுமே உண்டு. ஒரு நல்ல நேர்மையான பக்தன் பல படிகளுக்கு பின் கடவுள் என்று தனியாக ஒருவன் இல்லை என்பதைதான் உணர போகிறான். அதற்காகத்தான் இத்தனை வழிபாடு சிரமம் எல்லாம் அனுபவ பூர்வமாக உணர. ஆனால் ஒரு நல்ல நேர்மையான நாத்திகன் இப்பவே அதை தானே சொல்கிறான். ஆனால் சொல்வதற்கும் உணர்வதற்கும் நிறைய வேறுபாடு உண்டு.
அதனால் அவன் ஒரு பக்தனை கிண்டலடிப்பதும் வம்பிழுப்பதும் கடவுள் இல்லை என்பது உண்மை எனும் போது, எனக்கு தெரியும் உனக்கு தெரியாது என்று பள்ளி குழந்தைகள் மார்க் குறைவாக எடுத்தவர்களை கிண்டலடிப்பது போன்றது.
கடவுள் என்று ஒன்று (ஒருவன் அல்ல) இருப்பது உண்மை ஆனால் ஒரு பக்தனை வம்பிழுப்பது முட்டாள்தனம்.
அதிலும் இன்றைய நாத்திகர்கள் தாக்கும் ஒரே விஷயம் இந்து கடவுள்களை மட்டுமே, இதனால் தான் எல்லா நாத்திகரையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்க்கும் நிலை உள்ளது.

பள்ளன் என்றால் படைப்பவன்,காப்பவன்,பண்பாளன் மற்றும் வேந்தன் said...

1 . பெரும்பாலான 'தி.க' ஆட்களின் சான்றிதல்களில் (அவர்கள் விரும்பாவிட்டாலும்) 'இந்து' என்று போடப்பட்டிருக்கிறது. 2 . மேலும், 'ராம்' ஏதோ ஒரு பதிவில் 'உன் மதம் உனக்கு. என் மதம் எனக்கு' என்று சொல்லி உள்ளீர்கள். வேற்று மத ஆள் ஒருவர் 'இந்து' மதத்தில் உள்ள ஒரு குறைய சுட்டிக் காட்டும் போது 'அதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். நீங்கள் உங்கள் வேலையை பாருங்கள்' என்று சொன்ன 'ராம்', தான் 'இந்து' என்று முத்திரை குத்தப் பட்டதால், அதில் உள்ள தவறுகளை சுட்டிக் காட்டும் 'தி.க'வினரின் பிறப்பை சந்தேகப் படுவது என்ன நியாயம்? 'தி.க'வினர் எல்லா மதத்திலும் உள்ள குறையை சுட்டிக் காட்டவேண்டும் என்று எதிர் பார்க்கும் 'ராம்', அந்த முஸ்லிம் நண்பர் 'இந்து' அமைப்பில் உள்ள தவறை சுட்டிக் காட்டும் போது 'நீங்கள் உங்கள் மதத்தில் உள்ள குறைகளை களையுங்கள்' என்று தட்டிக் கழித்தது ஏன்? ஊருக்கு மட்டும் உபதேசமா?

hayyram said...

//பெரும்பாலான 'தி.க' ஆட்களின் சான்றிதல்களில் (அவர்கள் விரும்பாவிட்டாலும்) 'இந்து' என்று போடப்பட்டிருக்கிறது.// ஆமாம் அது தவறு, நீங்கள் நாத்திக மதத்தைச் சார்ந்தவர்கள். உங்களை இந்து என்று போட்டு இந்துக்களை அவமதிக்கிறார்கள்.

//மேலும், 'ராம்' ஏதோ ஒரு பதிவில் 'உன் மதம் உனக்கு. என் மதம் எனக்கு' என்று சொல்லி உள்ளீர்கள்.// நான் சொல்லவில்லை பொன்ராஜ். அரசியல் வாதிகளால் ஒரு மசூதி இடிக்கப்பட்டால் எல்லா இந்துக்களும் அதனை எதிர்த்து குரல் கொடுக்கும் போது அரசியல் வாதியால் இந்துக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் அது உங்கள் பிரச்சனை என்று கேவலமாக ஒதுங்கி நின்ற ஒரு இமாம் சொன்னது. அதை நண்பர் முபாரக்கிற்கு எடுத்துக்காட்டினேன் அவ்ளோதான். //'தி.க'வினரின் பிறப்பை சந்தேகப் படுவது என்ன நியாயம்?// பின்ன நீங்கல்லாம் உங்க அப்பா, அம்மா யார் என்பதற்கு டி என் ஏ சர்டிஃபிகேட் கையில வெச்சிக்கிட்டா அலையிறீங்க. எல்லாவற்றிற்கும் அறிவியல் ஆதாரம் கேட்கும் எந்த தி க காரனும் தன் பிறப்பிற்கு யார் காரணம் என்ற நிரூபனத்திற்கு டி என் ஏ சர்டிஃபிக்கேட் வைத்துக் கொள்வதில்லை. அப்பறம் இதுல ரோஷம் என்ன வேண்டி இருக்கு?

// 'தி.க'வினர் எல்லா மதத்திலும் உள்ள குறையை சுட்டிக் காட்டவேண்டும் என்று எதிர் பார்க்கும் 'ராம்'// இல்லை, உங்கள் புரிதல் தவறு. மற்ற மத்த்தினரை விமர்சியுங்கள் என்று கூறவில்லை. மற்ற மதத்தினரை எப்படி விமர்சிப்பதை தவிர்க்கிறீர்களோ அதே போல இந்து மதத்தையும் விமர்சிக்காமல் நிறுத்துங்கள் என்று கேட்கிறேன். மற்றவர்களை விமர்சிக்க பயப்படுவேன் என்றும் இந்துக்களை மட்டும் விமர்சிப்பேன் என்றும் கூறுவது மோசமான கோழைத்தனம் என்பதே எமது வாதம்.

//ஊருக்கு மட்டும் உபதேசமா?// இல்லை.இந்த தளத்தில் உள்ள யாவும் எனக்கு நானே உபதேசித்துக் கொண்டது. பிடித்தவர்கள் சேர்ந்து படிக்கிறார்கள். அவ்வளவுதான்!

பள்ளன் என்றால் படைப்பவன்,காப்பவன்,பண்பாளன் மற்றும் வேந்தன் said...

//பின்ன நீங்கல்லாம் உங்க அப்பா, அம்மா யார் என்பதற்கு டி என் ஏ சர்டிஃபிகேட் கையில வெச்சிக்கிட்டா அலையிறீங்க. எல்லாவற்றிற்கும் அறிவியல் ஆதாரம் கேட்கும் எந்த தி க காரனும் தன் பிறப்பிற்கு யார் காரணம் என்ற நிரூபனத்திற்கு டி என் ஏ சர்டிஃபிக்கேட் வைத்துக் கொள்வதில்லை// நீங்க ரொம்ப குழம்பி போயிருக்கிறீர்கள் போல ராம்...!! இன்னார், இன்னாருக்கு தான் பிறந்தார் எபதற்கு ஆதாரமாகத் தான் அவர்களே நடமாடுகிறார்களே....? நீங்கள் கேட்கும் எந்த நேரமும் 'டி.என்.ஏ' சர்டிபிகேட் தர அவர்கள் தயார். அதே போல, அவர்கள் கேட்கும் பல விஷயங்களைத் தர நீங்கள் தயாரா? எனக்குத் தெரிந்து எந்த ஆத்திகனும் 'டி.என்.ஏ' சர்டிபிகேட் வைத்துக் கொள்வதில்லை. அப்படிப் பார்த்தால், உங்கள் வாதப்படி உங்கள் பிறப்பு கூட கேள்விக்குறி யாகிறதே...!!

பள்ளன் என்றால் படைப்பவன்,காப்பவன்,பண்பாளன் மற்றும் வேந்தன் said...

//ஆமாம் அது தவறு, நீங்கள் நாத்திக மதத்தைச் சார்ந்தவர்கள். உங்களை இந்து என்று போட்டு இந்துக்களை அவமதிக்கிறார்கள்// ஒன்று தெரிந்துகொள்ளுங்கள் ராம்... 'இந்தியாவில்' குப்பை கொட்ட வேண்டும் என்றால், தன்னை அடையாள படுத்தும் சான்றிதல்களில் அவர் இன்ன மதத்தை சார்ந்தவர் என்று கண்டிப்பாக (அடிக்கோடு... கண்டிப்பாக) குறிப்பிட வேண்டும். 1 ) முதலில் இதை 'ஆப்ஷனலாக' மாற்ற உங்களால் இயன்றதை செய்வீர்களா? 2 ) 'இந்து' மடத்தில் உள்ள பிக்கள் பிடுங்கல்கள் தாங்காமல் அதை விட்டு வெளியேறும் நபர்களை தடுக்காமல் இருப்பீர்களா?... இவற்றை எல்லாம் செய்யாமல், "நீ இங்கயே இருந்து சாவு" என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம்?

பள்ளன் என்றால் படைப்பவன்,காப்பவன்,பண்பாளன் மற்றும் வேந்தன் said...

//மேலும், 'ராம்' ஏதோ ஒரு பதிவில் 'உன் மதம் உனக்கு. என் மதம் எனக்கு' என்று சொல்லி உள்ளீர்கள்// நீங்கள் சொல்லவில்லை ராம். ஆனால் இதில் உங்களுக்கு உடன்பாடு இருக்கிறதா இல்லையா? 1 ) உடன்பாடு 'இருக்கிறது' என்றால் 'தி.க'வினரை "அடுத்த மதம் பற்றி பேசாமல் இருப்பது போல (இதற்கு நீங்கள் என்ன ஆதாரம் வைத்திருக்கிறீர்கள் என்று தெரியவில்லை), 'இந்து' மதத்தையும் பற்றி பேசாமல் இருங்கள்" என்று 'விரல்' நீட்ட உங்களுக்கு உரிமை இல்லை. உங்கள் மதத்தில் குறை இருந்தால் அதை விவாதித்து, நிவர்த்தி செய்வது மட்டுமே உங்கள் வேலை. 2 ) உடன்பாடு 'இல்லை' என்றால், 'முபாரக்' கேட்ட 'அனைவருக்கும் அர்ச்சகள் ஆகலாம்' என்ற கேள்விக்கு நீங்கள் பதில் சொல்லாமல் "முதலில் உங்கள் மதத்தில் உள்ள ஓட்டைகளை அடையுங்கள்" என்று சொன்னது ஏன்?

பள்ளன் என்றால் படைப்பவன்,காப்பவன்,பண்பாளன் மற்றும் வேந்தன் said...

//உங்கள் புரிதல் தவறு. மற்ற மத்த்தினரை விமர்சியுங்கள் என்று கூறவில்லை. மற்ற மதத்தினரை எப்படி விமர்சிப்பதை தவிர்க்கிறீர்களோ அதே போல இந்து மதத்தையும் விமர்சிக்காமல் நிறுத்துங்கள் என்று கேட்கிறேன்// ஆக, 'தி.க'வினர் மற்ற மத ஆட்களின் அட்டூழியத்தை இதுவரை கேட்டதே இல்லை என்று சொல்கிறீர்களா? அல்லது 'இந்து' மதத்தை அட்டூழியங்களை தட்டிக் கேட்டதை விட, அவர்களை குறைவாகத் தட்டிக் கேட்டார்கள் என்று சொல்கிறீர்களா? அவர்கள் செய்யவில்லை என்பதற்கு என்ன ஆதாரம் உண்டு உங்களிடம்? எதற்கெடுத்தாலும் நாங்கள் பெரும்பான்மையினர் என்று சொல்லும் 'இந்துக்கள்', "உங்கள் சட்டையில் அழுக்கு" இருக்கிறது என்று யாரவது சொன்னால், அதை 'களைய' வழிதேடாமல் "அதோ, அந்த சிறுபான்மையினர் சட்டையிலும் அழுக்கு" இருக்கிறது என்று சொல்வது 'முட்டாள் தனம்' இல்லையா?

பள்ளன் என்றால் படைப்பவன்,காப்பவன்,பண்பாளன் மற்றும் வேந்தன் said...

அடுத்து 'கடவுள்' பிரச்னைக்கு வருவோம். 'தி.க' காரன் கடவுள் இல்லை என்று சொன்னால் "அது இல்லை" என்று ஆகிவிடுமா? "ஏதோ கிறுக்கன் உளறுகிறான், இவர்களை எல்லாம் வல்ல ஆண்டவன் பார்த்துக் கொள்வான்" என்று நீங்கள் பெருந்தன்மையாக விட்டிருக்கலாமே? 'எங்க கடவுளையா திட்டுற. உன்னை என்ன செய்யறேன் பார்" என்று கோதாவில் குத்திக்கும் நீங்கள் என்ன 'கடவுள் செகரட்டரியா'? இல்லை, "என்னை எதிர்த்துப் பேசினால் அவனை போட்டுத் தள்ளு" என்று உங்கள் கடவுள் சொன்னாரா? அப்படி சொல்லியிருந்தால் அவர் 'கடவுளா'...இல்லை 'கூலிப் படையா'?

பள்ளன் என்றால் படைப்பவன்,காப்பவன்,பண்பாளன் மற்றும் வேந்தன் said...

அடுத்து 'குலப்' பிரச்னைக்கு வருவோம். 'இந்து' மதத்தில் தொழில் ரீதியாக மட்டுமே மனிதர்கள் பல 'குலங்களாக' பிரிந்து வாழ்ந்தனர். எந்த தொழில் செய்தாலும் அனைவரும் சமமானவரே... என்று 'காஞ்சி' பெரியவர் உட்பட பலர் சொல்லி இருக்கிறார்கள். என்னுடைய கேள்விகள்: 1 ) உணமையில் இன்றும் செய்யும் தொழில் அடிப்படையில் மட்டும் தான் 'இந்து' மக்கள் வகைப் படுத்தப் படுகிறார்களா? 2 ) ஒரு குலத்தில் இருப்பவர்கள், அவர்கள் பரம்பரை பரம்பரையாக அந்த குலத் தொழிலை மட்டுமே செய்யவேண்டும். இதை மீற நினைத்தால் 'சமூகத்தில்' சமநிலை (பேலன்ஸ்) இல்லாமல் போய்விடும் என்று 'காஞ்சி' பெரியவர் சொல்லியிருக்கிறார். இன்று அந்த விதிகள் பல போராட்டகளுக்குப் பிறகு ஒரு சிறு துரும்பளவு மீறப் பட்டுள்ளது. 'சக்கிலியன்' மகன் 'செருப்பு தேய்க்காமல்', படித்து 'ஐ.ஏ.எஸ்' ஆகிறான். நிற்க. இப்படி நடப்பத்தல் 'இந்து' சமுதாயத்தில் அப்படி என்ன சமநிலை கேட்டுவிட்டது என்று நினைக்கிறீர்கள் 'ராம்'? 3 ) 'சமநிலை' கெடவில்லை என்றால் இத்தனை நாட்களாக நீங்கள் கட்டி காத்த 'இந்து' வருணாசிரமக் கொள்கைகள் அனைத்தும் அயோக்கியத் தனமானவை, மனித நேயத்திற்கு எதிரானவை என்றல்லவா பொருள் கொள்ள வேண்டும்?.... பதில் சொல்வீர்களா?

hayyram said...

@ பொன்ராஜ், //இன்னார், இன்னாருக்கு தான் பிறந்தார் எபதற்கு ஆதாரமாகத் தான் அவர்களே நடமாடுகிறார்களே....?// என்ன காமெடி பன்றீங்க தல! கவர்மென்ட் ஆபீஸ்ல ஒரு மாசம் போகாம லேட்டா பென்ஷன் வாங்க போன தாத்தாவ நீதான் "நீ", "நீ" உயிரோட தான் இருக்கன்னு சர்டிபிகேட் கொடுன்னு கேக்கறாங்க நண்பா. தாத்தா சொல்றாரு.. நான் தான் உங்க முன்னாடி நடமாடறேனே, இதோ உங்க முன்னாடி தானே நீக்கிறேன். அதுக்கு என்னாத்துக்கு சர்டிபிகேட்ன்னு. ஆனா கவர்மென்ட் ஆபீசர் கேக்கமாட்டேன்னுட்டாரு. வேற வழியில்லாம தாத்தா அவர் உயிரோட இருக்காருன்னு அவருக்கே ஒரு சர்டிபிகேட் வாங்கி கொடுத்து தான் பென்ஷன் வாங்கறாரு. நிலைமை அப்படி இருக்கும் போது நம்ம முன்னாடி நடமாடறாங்கங்கற ஒரே காரனத்துக்காக ஒருத்தர அப்பாவாவோ அம்மாவாவோ நினைக்கறது மூட நம்பிக்கை. அதனால பகுத்தறிவோட நடந்துக்கோங்க. அறிவியல் ரீதியா டி என் ஏ சர்டிபிகேட் வாங்காம அப்பா அம்மாவை நம்பாதீங்க. சரியா! இனிமேலாவது மூடநம்பிக்கை இல்லாம வாழுங்க! //எனக்குத் தெரிந்து எந்த ஆத்திகனும் 'டி.என்.ஏ' சர்டிபிகேட் வைத்துக் கொள்வதில்லை. // நண்பா, ஆத்திகனுக்கு அறிவியல் ரீதியாத்தான் நிரூபிக்கனும்னு அவசியம் இல்லை. அவன் தான் எதையும் நம்பறவனாச்சே! ஆனா எதுக்குமே ஆதாரம் காமிச்சாதான் நம்புவேன்னு சொல்றவங்க உங்களை மாதிரி பகுத்தறிவு வியாதிகள் தானே நண்பா!

// முதலில் இதை 'ஆப்ஷனலாக' மாற்ற உங்களால் இயன்றதை செய்வீர்களா? // நான் ஏன் செய்யனும்.. இப்போ உங்க ஆட்சி தானே நடக்குது.. அதாவது பார்ப்பன எதிர்ப்பு பகுத்தறிவு நாத்திக ஆட்சி. அது முடியறதுக்குள்ள அவங்க கிட்டையே சொல்லி அதைசாதிச்சுக்க வேண்டியது தானே சகோதரா! //வெளியேறும் நபர்களை தடுக்காமல் இருப்பீர்களா?...// ஆமா என்னமோ நாங்கல்லாம் மதம் மாறுகிறவங்களை எல்லாம் தடுத்து நிறுத்தி காப்பாத்திட்ட மாதிரி தான். எலும்புத் துண்டப் பாத்து ஓடுற பிராணிகளை யார்தான் தடுக்க முடியும்! காசுக்கு மதம் கிடையாது செல்லம்! //ஆக, 'தி.க'வினர் மற்ற மத ஆட்களின் அட்டூழியத்தை இதுவரை கேட்டதே இல்லை என்று சொல்கிறீர்களா?// கேட்பார்கள்.. மூடு வந்தா. வித்தியாசம் நிறைய இருக்கும். இந்து மதத்தை அவர்கள் விமர்சிக்கும் போது பயில்வான் ரெங்கனாதன் விடும் குத்து போன்றது. அதே பிற மதங்களை விமர்சிக்கும் போது ஷகிலா சேச்சி கண்ணத்தில் தட்டுவது போல இருக்கும். அவ்வளவு ஏன்.. நித்தியானந்தா பற்றி வாய்கிழிய பேசிய எழுதிய நாத்திகர்கள், நாளுக்கொரு பாதிரியார்களில் செக்ஸ் லீலைகள் வரும்போது அடுப்படியில் பெண்டாட்டியுடன் சமைத்துக் கொண்டிருப்பது ஏன்? பாதிரியார்கள் குண்டர்கள் வைத்து பத்திரிகையாளர்களை தாக்குகிற போது நாத்திகர்கள் வீட்டுக்கொள்ளை புறத்தில் பெண்டாட்டிமார்களின் புடவைகளைத் துடைத்துக்கொண்டிருப்பது ஏன்? அவற்றைப் பற்றி உங்கள் கருத்தென்ன? //என்னை எதிர்த்துப் பேசினால் அவனை போட்டுத் தள்ளு" என்று உங்கள் கடவுள் சொன்னாரா? // ஆத்தி, உங்களையேலாம் யார் இப்போ போட்டு தள்ளினா? இந்துக்களின் நிலைமை வடிவேலுவின் நிலைமை போல தான் தமிழகத்தில். எவ்வளோ அடிச்சாலும் தாங்கராண்டா, இவன் ரொம்ப நல்லவண்டான்னு சொல்ற நிலைமைல இருக்காங்க. அவங்களப் போய் அபாண்டமா சொல்றீங்களே. ஆனா நபிகள் பத்தி எழுத்திட்டான்னு கேரளால ஒரு வாத்தியாரு கைய வெட்டிநாங்களே.. அது பத்தி வெவரமா மூச்சு விடாம டபாய்க்கறீங்க பாத்தீங்களா!//ஒரு குலத்தில் இருப்பவர்கள், அவர்கள் பரம்பரை பரம்பரையாக அந்த குலத் தொழிலை மட்டுமே செய்யவேண்டும். // இப்படி காஞ்சிப் பெரியவர் எந்த இடத்தில் சொன்னார், ஏதாவது புத்தக ஆதாரம் இருக்கிறதா? அதைக் கூறுங்கள்.. படித்துப் பார்த்துவிட்டு பதில் கூறுகிறேன். ஏனெனில் உண்மையைத் திரித்து மக்களை முட்டாளாக்குவது தான் உங்களைப் போன்றோருக்கு தலையாய வேலை. அதனால இதுக்கு பதிலு நீங்க சொல்ற ஆதாரத்தை பாத்திட்டு அப்பாலிக்கா..! சரியா... கடைசியா ஒரு வேண்டுகோள் பொன்ராஜ். ஒரு நாள் ஒரு பின்னூட்டம் போடுங்க. நான் எங்கேயும் போயிட மாட்டேன். நிறைய பேசுவோம். நண்பா.. நீங்க பாட்டுக்கும் நிறைய டைப் பண்ணிட்டீங்க. பதிலுக்கு டைப் அடிச்சு அடிச்சு கை வலிக்குது. சரியா! வர்ட்டா....நண்பேண்டா!