- ஞானதேசிகன்
பிராமணர்களும் சிறுதெய்வங்களும் 1
சாமியைப் பெருந்தெவங்கள் சிறுதெய்வங்கள் எனப் பிரித்தும் அவற்றை அவ்வாறு பிரித்து வைத்தவன் பிராமணன் என்றும் பொய்ப்பிரச்சாரம் செய்து தூற்றி வருகின்றனர். ஆனால் உண்மை என்ன?
பிராமணர்கள் சிவன், பெருமாள் சாமிகளை கோயில் உள்ளே வைத்துக்கொண்டு பிற தெய்வங்களை வெளியே வைத்து விட்டனர். பிராமணர்கள் காளி, மாரி, சாஸ்தா, அய்யனார் போன்ற தெய்வங்களை வழிபடமாட்டார்கள் போன்ற பேச்சுக்களை அடக்கடி கேட்கிறோம். ஆக, மொத்தம் பிராமணர்கள் சதி செய்து சிறு தெய்வ வழிபாட்டை அழித்து விட்டார்கள் போன்ற அரைகுறை ஆய்வுகளை சிலர் செய்கின்றனர். இவை உண்மையா?? இவை எவ்வளவு பொய்கள் என்று பார்ப்போம்.
இந்த கட்டுரையின் நோக்கம் இந்த பொய்களை அம்பலப்படுத்துவது. மேலும் இந்த ஆய்வுகளின் பின்ணனி என்ன ?? இந்த தொடர் கட்டுரை ஆய்வு செய்வதற்காக நான் பல இடங்களுக்கு நேரில் சென்று , மேலும் பலரிடம் பேசி உள்ளேன். இந்த கட்டுரைக்காக தகவல்கள் தேடி பல இடங்களுக்கு சென்ற போது பல அனுபவங்கள் கிடைத்தன. இந்த ஆய்வுக்கு நாம் தமிழகத்தை பல பகுதிகளாக பிரித்து ஆய்வு மேற்கொள்வோம். தொண்டை மண்டலம், கொங்கு மண்டலம், தஞ்சை, மதுரை, நெல்லை மற்றும் நாஞ்சில், பாலக்காடு பகுதிகள்.
இந்த தொடரில் முதல் கட்டுரையை பலரும் படித்து இருப்பிர்கள். எப்படி. பல்வேறு சாதிகளை சேர்ந்தவர்கள், ஒரே தெய்வத்தை வணங்குகிரார்கள் என்று. நம்முடைய திராவிட அரைகுறை ஆய்வாளர்கள், என்ன என்ன புளுகு மூட்டைகளை அவிழ்த்து விடுகிRறார்கள் என்று. இந்த தொடரின் நோக்கம் இத்தகைய சில புளுகுகளை வெளிப்படுத்துவது தான்.
முதல் கட்டுரையில் எப்படி பிராமணர்களும், மற்றைய சாதியினரும் சிறுவாச்சூர் மதுர காளியை வழிபடுகின்றனர் என்று பார்த்தோம். இந்த கட்டுரையில் மண்மேட்டை வழிபடும் பிராமணர்களை பார்ப்போம். இந்த தெய்வத்தின் பெயர் பெரியஆண்டவர். ஆமாம், பெரிய ஆண்டவரே தான்.. திராவிட பொய்களை உடைத்து எறியும் பெரிய ஆண்டவர்.
பெரிய ஆண்டவருக்கு கோயில் எல்லாம் கிடையாது. ஆச்சரியமாக உள்ளதா?? ஆமாம் நண்பர்களே… பெரியாண்டவர் என்று வழிபடப்படுவது ஒரு மண் மேடு.. அவ்வளவே…இந்த பெரியாண்டவர் வழிபாடு ,காவிரிக்கரையில் மிகவும் பிரசித்தம். குறிப்பாக, மன்னார்குடி பகுதியில், காவிரி கரையில் இந்த வழிபாடு செய்யப்படுகிறது.
குறிப்பாக, மன்னார்குடி பகுதியில், காவிரி கரையில் இந்த வழிபாடு நடைபெறுகிறது. ஒரு குடும்பம் மொத்தமும் சேர்ந்து இந்த வழிபாட்டை செய்கிறார்கள். ஆண்கள் மட்டுமே இந்த பூஜையை செய்ய வேண்டும். குடும்பத்தில் உள்ள அனைவரும், குளித்து விட்டு, காவிரி கரையில், ஏதேனும் ஒரு இடத்தை தேர்ந்து எடுத்து, அங்கு ஒரு சிறு மண் மேடு போன்ற ஒரு உருவத்தை செய்கின்றனர். அந்த உருவத்திற்கு வஸ்திரம், பூ போன்றவற்றை அணிவித்து வழிபடுகின்றனர். இந்த பெரியாண்டவர் வழிபாடு, சில பிராமண குடும்பங்களுக்கு, குல தெய்வம் ஆகும். ஆண்கள், பூஜையை கிட்டே நின்று செய்யலாம். பெண்கள் தள்ளி நின்று வழிபாடு செய்யலாம்.
இந்த பூஜை, கரூர், வேலூர் அருகேயும் செய்யப்படுகின்றன். ஆற்றங்கரையில் தான் இந்த பூஜை பிரபலம். புகைப்படம் எடுக்க முடியவில்லை. இந்த வழிபாட்டு முறையை பற்றி தேடும் போது மேலும் சில ஆச்சரிய தகவல்கள். பிராமண குடும்பங்களில் தங்கள் வீட்டில் நல்ல நிகழ்வுகள் நடக்கும் போது , குறிப்பாக திருமணத்தின் போது வீட்டில் இறந்த பெண்களுக்காக சுமங்கலி பிரார்த்தனை செய்வார்கள். அதே போல் இறந்து போன ஆண்களுக்காக சில குடும்பங்களில் பெரியாண்டவர் பூஜை செய்கிரார்கள்.
நான் சந்தித்த ஒரு குடும்பம் ஒர் வைணவக் குடும்பம்.இவர்கள் வீட்டில் பெரியாண்டவர் பூஜை உண்டு. ஒரு அறையில் பூஜை சாமான்கள், பிரசாதங்கள் , பழம் ஆகியவற்றை வைத்து கதவை சாற்றி விடுகின்றனர். சிறிது நேரம் கழித்து பிரசாதங்களை எடுத்து கொள்கின்றனர். இந்த பூஜை முறை இப்போது பிரபலம் இல்லை. குறிப்பாக ஆண் வாரிசு இல்லாதவர்கள் தங்கள் குல தெய்வ வழிபாட்டை செய்ய முடியாது. ஆண் வாரிசு இருந்தால் மட்டுமே தங்கள் குடும்ப வழிபாட்டை தொடர முடியும். பெண்கள் தங்கள் கணவரின் குடும்ப வழிபாட்டை தொடரலாம். சில குடும்பங்கள் சொந்த ஊரில் தொடர்பு இல்லாத காரணத்தால் குல தெய்வ வழிபாடு தடைபடுகிறது. ஆனாலும் இன்னும் சிறுதெய்வங்களை குலதெய்வங்களாகக் கொண்ட பிராமணர்கள் தொடர்ந்து தங்களது மூதாதையர்களின் வழிபாட்டு முறைகளை விடாமல் கடைபிடித்தே வருகின்றனர். அவற்றுள் ஒன்றே இவ்வகையான பெரியாண்டவர் வழிபாடு.
ஆக, இரண்டு கட்டுரைகளையும் படித்து இருப்பீர்கள். எப்படி சிறு தெய்வங்கள் பிராமணர்களுக்கு குல தெய்வமாக இருக்கிறது என்றும், எப்படி பொய்கள் பல ரூபங்களில் இணையத்தில் உலவுகிறது என்றும் புரிந்து கொண்டு இருப்பீர்கள். பொய்ப்பிரச்சாரங்களைக் களைவதே நம் வேலை….
அடுத்து வீரன் வழிபாடு..