Sunday, February 28, 2010

மரணத்திற்கு அப்பால் - 9







"ஆன்மா பிறப்பதில்லை, இறப்பதும் இல்லை. இது எதிலிருந்தும் உண்டானதில்லை. எதுவும் இதிலிருந்தும் உண்டாவதில்லை. இது பிறப்பற்றது, என்றென்றும் இருப்பது. நிலையானது, பழமையானது; உடம்பு அழிக்கப்பட்டாலும் அழியாதது."

"நசிகேதா! எல்லா வேதங்களும் எந்த லட்சியத்தை உபதேசிக்கின்றனவோ, எதற்காக எல்லா தவங்களும் செய்யப்படுகின்றனவோ, எதை விரும்பி பிரம்மச்சரிய விரதம் கடைபிடிக்கப் படுகிறதோ அந்த லட்சியத்தை அடைவதற்கான மந்திரத்தைச் சுருக்கமாக உனக்குச் சொல்கிறேன். அது "ஓம்".

"ஓம் என்ற இந்த மந்திரமே இறைவன் இந்த மந்திரம் மேலானது. இந்த மந்திரத்தை அறிந்து யார் எதை விரும்புகிறானோ அவனுக்கு அது கிடைக்கிறது." என்றான் எமதர்மன்.

ஆத்மாவை உணரும் சப்தம்....'ஓம்'. 'ஓம்' இது ப்ரபஞ்சத்தின் சப்தம்.

பொதுவாக நம்மில் மூச்சுப் பயிற்சி துவங்குபவர்கள் 'ஓம்' என்ற உச்சரிப்பை சில நிமிடங்கள் சொல்லிப் பயிற்சி எடுப்பார்கள்.


'ஓம்' என்ற ஒலி உடலின் நாடிகளை ஒருங்கே எழுப்பும் சக்தியாகும். அ, உ, ம் இந்த மூன்றும் .சேர்ந்ததே 'ஓம்' என்றார்கள் பெரியோர்கள். 'அ...' என்று சில வினாடிகள் சொல்லிப் பாருங்கள். அந்த நாதம் உங்கள் அடிவயிற்றிலிருந்து புறப்படுவதாக இருக்கும். அதாவது சப்தத்தின் அதிர்வு உங்கள் வயிற்றை மையமிட்டிருக்கும். 'உ...' என்று சில வினாடிகள் சொல்லிப் பாருங்கள். அந்த நாதம் உங்கள் மார்பிலிருந்து புறப்படுவதாக இருக்கும். சப்தத்தின் அதிர்வு உங்கள் மார்பை மையமிட்டிருக்கும். 'ம்...' என்று சில வினாடிகள் சொன்னால் அந்த சப்தத்தின் அதிர்வு உங்கள் முகத்தை மையப்படுத்தியிருக்கும். இந்த மூன்று மையங்களையும் ஒரே நேரத்தில் அதிர்வுக்குள்ளாக்கி உடலின் நாடிகளை ஒருசேர உயிர்ப்பிக்கும் மந்திரமே 'ஓம்'.

மேலும் 'ஓம்' என்ற மந்திரத்தை தொடர்ந்து உச்சரிக்கும் போது உடல் ரீதியான நன்மைகளும் உண்டாவதுண்டு. வயிற்றிலிருந்து வெளியேற முடியாமல் இருக்கும் அசுத்தக் காற்று 'ஓம்' என்ற மந்திரத்தைத் தொடர்ந்து உச்சரிக்கும் போது வெளியேறி விடுகிறது. இதனால் உடல் காற்று சுத்தமாகி உள் உறுப்புக்கள் முதல் வெளித்தோல் வரை ஒவ்வொரு செல்லுகும் சுத்தமான ஆக்ஸிஜனின் சுழற்சி உண்டாகிறது. இது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.

'ஓம்' ப்ரபஞ்சத்தின் ஒலி என்பதனை தத்துவார்த்தமாக புரியவைக்கவே, திருச்செந்தூரில் கடற்கரையில் இருக்கும் சுவற்றில் உள்ள ஒரு துவாரம் வழியாக காதை வைத்து கேட்கச் சொல்வார்கள். கடலின் காற்று துவாரத்தின் வழியாக வெளியேறும் போது 'ஓம்' என்ற நாதம் போலவே சப்தம் உண்டாகும்.

எமதர்மன் மேலும் தொடர்ந்தான்.."நசிகேதா! இந்தப் பாதை சிறந்தது. இந்தப் பாதை மேலானது. இந்தப் பாதையை அறிந்து அதன் வழிச் செல்பவன் பிரம்ம லோகத்தில் சிறப்பு பெறுகிறான்."

இப்போது எமதர்மன் ஆன்மாவின் தன்மை பற்றி நசிகேதனுக்கு விளக்கினான். "நசிகேதா! நீ அறிந்து கொள்ள விரும்பும் இந்த ஆன்மா பிறப்பதில்லை, இறப்பதும் இல்லை. இது எதிலிருந்தும் உண்டாவதில்லை. இதிலிருந்தும் எதுவும் உண்டாவதில்லை. இது பிறப்பற்றது. என்றென்றும் இருப்பது. நிலையானது, பழமையானது. உடம்பு அழிக்கப்பட்டாலும் அழியாதது" என்று ஆன்மாவின் தன்மை குறித்து நசிகேதனுக்கு விளக்கினான்.

பகவான் ஸ்ரீ க்ருஷ்ணர் கீதையிலும் இதையே குறிப்பிடுகிறார். போர்களத்தில் எதிரணியில் தனது குருமார்களும் சகோதரர்களுமே இருக்கிறார்கள். இவர்களைக் கொன்று நான் எதை வெல்லப் போகிறேன் என்று கலங்கி நிற்கும் அர்ஜுனனுக்கு போர்க்களம் என்று வந்து விட்டால் வீரன் நடந்து கொள்ள வேண்டிய முறைப் பற்றியும் ஆன்மாவைப் பற்றியும் எடுத்துரைக்கும் போது இவ்வாறு கூறுகிறார்.


"அர்ஜுனா! நானும், நீயும், இந்த அரசர்களும் ஒருபொழுதும் இல்லாமல் இருந்தது இல்லை. இனிமேலும் இந்த உடல்கள் அழிந்தாலும் நாம் எல்லோரும் இல்லாமல் போவதும் இல்லை."

"அர்ஜுனா! ஆன்மா நிலையானது. அழிவில்லாதது. இந்த ஆன்மாவைத் தாங்கும் உடல்கள் தான் அழியும் தன்மை கொண்டது என்று கூறப்படுகிறது. எனவே ஆத்மாவைப் பற்றியோ, தேகத்தைப் பற்றியோ நீ துக்கப்படுவதை விட்டு விட்டு போர் செய்யக் கடவாய்!" என்கிறார் பகவான் ஸ்ரீ க்ருஷ்ணர்.

"ஆன்மா ஒருபோதும் இறப்பதுமில்லை, பிறப்பதும் இல்லை. இதுவரை இல்லாமல் இருந்து மறுபடி புதிதாகத் தோன்றுவதும் இல்லை. ஆத்மா பிறப்பு, இறப்பு இல்லாதது, தேயாதது, வளராதது, நிரந்தரமானது. உடல் கொல்லப்பட்டாலும் ஆத்மா கொல்லப்படுவதில்லை" என்று ஆன்மாவின் நிலைத் தன்மை பற்றி கீதையில் கண்ணன் குறிப்பிடுகிறார்.

மேலும் ஆன்மா பற்றி க்ருஷ்ணர் இப்படி விளக்குகிறார். "எவ்வாறு ஒரு மனிதன் கிழிந்து போன பழைய ஆடைகளை நீக்கி விட்டு வேறு புதிய ஆடைகளை உடுத்திக் கொள்ளுகிறானோ, அது போல் ஆத்மா பழைய உடலை விட்டு நீங்கி வேறு புதிய உடலை அடைகிறது."

"அர்ஜுனா! ஆத்மாவை வெட்ட முடியாது. எரிக்க முடியாது. நனைக்க முடியாது. உலர்த்தவும் முடியாது. ஆத்மா நிரந்தரமானது. எங்கும் உள்ளது. நிலையானதாய், அசைவற்றதாய் எப்பொழுதும் உள்ளது." என்று ஸ்ரீ க்ருஷ்ணர் அர்ஜுனனுக்கு ஆன்மா நிலையானது என்பதைப் பற்றி விளக்குகிறார்.

இதுவே உபநிஷத்திலும் எமதர்மனால் போதிக்கப்படுகிறது. எமதர்மன் மேலும் தொடர்ந்தான்.


"நசிகேதா! தான் அடிப்பதாக நினைப்பவன், தான் அடிபட்டதாக நினைப்பவன் இருவருமே உண்மையை அறியாதவர்கள். ஆன்மா அடிப்பதும் இல்லை, அடிபடுவதும் இல்லை."

"நசிகேதா! அணுவைவிட அணுவானதும், பெரியதை விடப் பெரியதுமான இந்த ஆன்மா உயிரினங்களில் இதயக் குகையில் இருக்கிறது. ஆசையற்றவன் அதனைக் காண்கிறான். மனத்தெளிவினால் ஆன்மாவின் மகிமையை உணர்கின்ற அவன் கவலைகளைக் கடந்து செல்கிறான்."

மேலும் ஆன்மாவின் வெவ்வேறு நிலைகளையும் என்னவெல்லாம் செய்யவல்லது என்பதையும் நசிகேதனுக்கு விளக்குகிறான் எமதர்மன்.

(இன்னும் கேட்போம்...)

மரணத்திற்கு அப்பால் - 10

10 comments:

Tired of Secularism said...

Interesting that you mention Bhagvad Gita. I've read a brilliant dissection of Gita in one of Osho's books. Osho says that Krishna is the world's most brilliant psychiatrist.

In the battlefield, Arjuna says that 'I can't kill my relatives'. If you notice carefully, there is a subtext to this sentence. Arjuna is directed by his ego. Killing his relatives would hurt his ego. There is a lot of self righteous feeling in Arjuna's words. So, to cut him to size, Krishna asks him to completely surrender himself at the Lord's feet. The subtext here is that one has to completely, voluntarily surrender his ego at God's feet. Only then will he be able to attain the state of 'Moksha' or 'Nirvana'.

The Bhagvad Gita and the Mahabharata are full of such wonderful messages which are not delivered directly, but in the form of a subtext. I'd say without a doubt that Mahabharatham is simply the greatest literary work in history. It's a pity that people do not read it. What's even worse is that it has become fashionable to defame such wonderful works.

hayyram said...

//Interesting that you mention Bhagvad Gita.//

thanks mr. Tired of Secularism.

//Osho says that Krishna is the world's most brilliant psychiatrist//

yes i too belive it and even i can say the world first philosopher is mr.krishna. He told how to lead the
soul directly and openly to the people and lead them to moksha.

thanks

kargil Jay said...

good hayram.. kethopanishad is good one to write, and among upanishads, it is easier one.

Your blog layout is very very good.. has good things in RHS with clear messages.

hayyram said...

thanks jay.

Anonymous said...

munbu devanaathan ipoo Nithyanantha swamigal & Ranjitha Padichu irupeenga and pathu irupeenga nu ninaikiren. manasu thangala...ithu matri atkal irukura nalaa thaan nama mathai pathi tharumara pesuranga...
na first paper news thaan padichen, poi ya irukalam nu ninachaen, appuram thaan nanbar youtube link koduthar...
antha 2 link um ungal paarvaiku...
http://thatstamil.oneindia.in/news/2010/03/03/nithyanandda-swamigal-s-scandalous.html

http://www.youtube.com/watch?v=nhzCl3xUiv4


nandri - swami

hayyram said...

yes swami.. I too saw it in TV. இந்த சாமியார் பற்றி குமுதத்தில் கூட வரும். நான் படித்ததில்லை. இவ்வளவு சின்ன வயதில் எப்படி ஒருவர் ஞானியாக தன்னைக் காட்டிக்கொள்ள முடியும் என்ற சந்தேகமும் எனக்கு இருந்தது. அதனாலேயே நான் இந்த சாமியாரைப் பற்றி படிக்காமல் பக்கங்களைத் திருப்பியிருக்கிறேன். என் சந்தேகம் இன்று நிரூபணம் ஆனது. அது மட்டுமல்ல , எனது நெருங்கிய நண்பர் ஒருவர் அம்மா பகவானது (கல்கி) தீவிர பக்தை. என்னைக் கூட அடிக்கடி பூஜைகளுக்கு அழைப்பார் . இளைஞர்கள் தீட்சையில் பங்கெடுத்துக்கொண்டால் உன் பிரார்த்தனை நிறைவேறும் என்றும்..800/‍ பணம் கட்ட வேண்டும் என்றும் சொல்வார். அப்போதே நான் அவருக்கு கூட சொல்வேன். எப்போ காசு கொடு அருள் தரேன்னு சொல்றாரோ அப்போ அவரை நம்ப வேண்டாம் என்று. அது எப்போ வெடிக்கப் போகுதோ தெரியலை.

நம் மக்களுக்கு இந்து மதம் சாமியார்களை நம்பி இல்லை என்றும் சுய பரிசோதனையும் ஆத்ம விசாரமும் , தர்மம் வழுவாத வாழ்க்கையும் கொண்டது தான் இந்து மதம் என்பதையும் அழுத்தமாக கற்றுகொடுக்க ஆள் இல்லை. இந்த மக்கள் அப்பாவிகள். ஏமாற்றுபவர்கள் குற்றவாளிகள். ஆனால் எத்தைனை முறை ஏமாறுவார்கள்????

ஆண்டவா ....நாளை நீயே அவதாரமாக வந்தாலும் உன்னை கல்லால் அடிக்கப்போகும் நிலை உண்டாவதற்குள்ளாக இவர்களைக் காப்பாற்று...

hayyram said...

ஸ்வாமி, ஒரு விஷயம் கவனிக்க வேண்டும். இப்போதெல்லாம் இது போன்ற ஆட்களை மக்கள் தேடிச்செல்வதில்லை. பத்திரிகை மற்றும் ஊடகங்கள் தமது பக்கங்களையும், நிகழ்ச்சிகளையும் நிரப்பி வியாபாரம் பண்ண இது போன்ற ஆட்களை வளர்த்து விடுகிறார்கள். ஊடகங்களில் பேசப்படும் ஆள் என்றால் மதிக்கப்படுபவர் என்ற டீஃபால்டான ஒரு உணர்வில் மக்களும் சென்று விழுகிறார்கள். ஊடகங்களால் பெரியாளாக்கப்பட்டவர்கள் இப்போது அதே ஊடகங்களால் உமிழவும் படுகிறார்கள். உணர்ச்சிகளை வியாபாரம் செய்பவர்கள் ஊடகக்காரர்களாக இருந்தாலும் சரி, சாமியாராக இருந்தாலும் சரி, எச்சரிக்கையாக இருக்க வேண்டியது மக்கள் தான். (சரி...குட்டி சாமியார் நினைவிருக்கா!)

Anonymous said...

Hi Hayyaram

Ur blog is superb.

It would be useful if u give a list of books (english preferred) that tells about hinduism and its glory. Also can u suggest some books that can be used in schools to enrich the values of children? (Value education books- hinduism related). Just keep a section for list of books (hinduism) and also a list of books for school children. And update the list whenever u find newer books. It will be useful for many of us who want to learn abt hinduism and also to ask our children to learn abt this great way of life!- Thanks

hayyram said...

//Ur blog is superb.

It would be useful if u give a list of books (english preferred) that tells about hinduism and its glory//

Thanks i will try to do so.

by the way may i know who are you?

Anonymous said...

Nice fill someone in on and this mail helped me alot in my college assignement. Gratefulness you seeking your information.