- ஞானதேசிகன்
இணையத்தில் முஸ்லீம் வீரர்கள் பெரும்பாலும் தங்கள் முகலாய ராஜாக்களின் புகழ் பாடுவதில் பெருமைகொள்கிறார்கள் என்பதை சமீபகாலமாக நிறைய பார்க்க நேரிடுகிறது. ஏதோ முகலாயராஜாக்கள் வந்து தான் இந்த நாட்டுக்கு பல பொக்கிஷங்களை அள்ளிக்கொடுத்தார்கள் என்று கூறி புலகாங்கிதம் அடைந்து கொள்வது வழக்கமாகிவிட்டது. அவர்களை அப்படியே நாத்திக பகுத்தறிவுவாதிகளும் உண்மை அறியாமல் வழிமொழிகிறார்கள். அந்த விதத்தில் சமீபத்தில் இணையத்தில் பார்த்த ஒரு முகலாய ராஜாக்கள் பற்றிய பொய்யான பெருமைகளில் ஒன்று 'மாம்பழம்'.
அதாவது முகலாய ராஜாக்களில் ஒருவர்தான் மாம்பழத்தையே இந்தியாவிற்கு அறிமுகப்படுத்தினார் என்றும் அதனால் தான் நாமெல்லாம் மாங்கனி சுவைக்கிறோம் என்றும் பெருமைபட்டுக்கொண்டிருந்ததை இணையத்தில் காண முடிந்தது. ஆனால் அது பொய் என்பதையும் எந்தளவிற்கு வரலாறு தெரியாமல் இவர்கள் உளறிக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் இனி பார்ப்போம்.
முகலாயர் காலம் என்பதை பொதுவாக பாபர் துவங்கி ஔரங்கசீப் வரை உள்ள காலத்தை இந்தியாவில் முகலாயர் காலம் என்று அறியப்படுகிறது. அத்தகைய முகலாயர்காலம் என்பது அதிகபட்சம் 500 வருஷங்கள் முன்பானதே. ஆனால் இந்தியாவில் ஏன் தமிழகத்தில் மாம்பழத்தின் காலம் அதற்கும் முந்தையது என்பதே உண்மை.
தஞ்சை தமிழ் பல்கலைகழகம் வெளியிட்ட சங்க இலக்கிய பொருட்களஞ்சியம் புத்தகத்தில் பார்ப்போம். புத்தகத்தில் உள்ளன மொத்தம் ஆறு தொகுதிகள். கட்டுரைக்காக தேடியது ஆறாவது தொகுதியில்.
மா வரிசை..
இங்கு கீழே உள்ள வரிகள் யாவும் ஆறாவது புத்தகத்தில் பக்கம் 9 -11 வரை உள்ளன.
நீழலுயர்ந்த கிளைகளோடு கூடிய மாவின் - புறநானூறு – 399:4
சோழநாடு இனமான மாவினைக் கொண்ட - பட்டிணப்பாலை - 18
நன்னன் சேய் பாடல் – மலைபடுகடாம் - எ 512
சங்க இலக்கிய தகவல்கள் போதும் என்று நினைக்கிறேன்.
அடுத்து தேவாரம்/திருவாசகம்,
காஞ்சி ஏகாம்பரநாதர் ஆலய தல மரம் – மாமரம். ஒற்றை மாவடியின் கீழே இறைவனும், இறைவியும் உள்ளனர்.
காரைக்கால் அம்மையார் கதையில் மாங்கனி வரும்.
பிள்ளையார் முருகன் புரானத்தில் – மாங்கனி – திருவிளையாடல் படம் உதாரணம்
தகவல்கள் போதுமா, இன்னும் வேண்டுமா ???????
இப்போது சொல்லுங்கள் நண்பர்களே!!! மாம்பழம் முக்கனிகளில் ஒன்று தானே…
ஆக தங்கள் அந்நிய மத அடையாளத்தினால் தமக்கு தாமே பாரதத்திலிருந்து அந்நியப்பட்டு நிற்கிறோம் என்கிற குற்ற ஊணர்ச்சியால் பாரதத்தின் அடையாளங்களை எல்லாம் தம் மதத்துக்குச் சொந்தம் என்று போலியாக எடுத்துப் போர்த்திக் கொள்கிறார்கள் சிலர் என்பது இதிலிருந்து புலனாகிறது.
1 comment:
Sir... Your service to the nation and fellow Hindus should not be stopped. Lease continue writing. I see that it has been an year that you wrote an article in this blog..
Post a Comment