Showing posts with label ஆட்டோ. Show all posts
Showing posts with label ஆட்டோ. Show all posts

Sunday, May 11, 2014

ஆட்டோக்காரர்களும் அடாவடி வசூலும்!



மக்கள் மத்தியில் தெனாவட்டாகத்திரியும் வழிபறி கொள்ளையர்களாக வலம் வருகிறார்கள் இந்த ஆட்டோக்காரர்கள். இந்த கொடூர கொள்ளையர்களிடம் நாமே போய் கொள்ளை கொடுக்க வேண்டி இருப்பது தமிழர்களின் தலை விதி. தமிழக மக்களுக்க்கு மட்டுமே இந்த தலைவிதி. இந்தியாவில் வேறெங்கும் இப்படிப்பட்ட மோசமான வழிபறி நடப்பதில்லை. அத்தியாவசிய மற்றும் அவசிய போக்குவரத்து சாதனமான ஆட்டோக்கள் பெரும்பாலும் போலீஸ்காரர்கள் கையிலும் லோக்கல் ரவுடிகள் கையிலும் தான் உள்ளது என பத்திரிக்கைகள் எழுதுகின்றன. இவர்கள் எப்படி அரசு மீட்டர் சட்டத்தை மதிப்பார்கள். 

ஆட்டோ ஓட்டுனர்கள் என்ற பெயரில் இயங்கும் இந்த அயோக்கிய கொள்ளைக்காரர்களுக்கு உழைத்துச் சோறு திண்ண வேண்டும் என்கிற எண்ணமே பெரும்பாலும் இருப்பதில்லை. ஆனால் பாடு பட்டு உழைத்துத் திண்பவர்கள் வயிற்றில் அடித்துப் பிடுங்கித்திண்பதற்கு காக்கிச் சாட்டை போட்டுக் கொண்டு ஆட்டோவில் வலம் வருகிறார்கள். ஆட்டோ ஸ்டான்ட்டில் உட்கார்ந்து கொன்டு வெட்டி அரட்டை அடித்து நேரம் போக்கினாலும் போக்குவார்கள் ஆனால் ஞாயமான ரேட்டுக்கு ஆட்டோ ஓட்ட வரமாட்டார்கள். அரசு மீட்டர் திருத்தி அதற்கான சட்டத்தையும் அமல் படுத்தினால் கூட அதனை எப்படியெல்லாம் மீறுவது என்பதிலேயே குறியாய் இருக்கிறார்கள் இந்த கேடுகெட்ட வழிபறி கொள்ளையர்கள். 

இந்த கொள்ளையர்கள் மீட்டர் ரேட்டிலிருந்து தப்பிப்பது பல ரகம். மீட்டர் போடு என்று சொன்னால் ஆட்டோ வராது என்று விருட்டெனச் சென்று விடுவார்கள். சிலர் 'எவ்வளவு தருவீங்க?" என தெனாவட்டாகக் கேட்பார்கள். நாம் மீட்டர் படி எவ்வளவு வருமோ அதைக் கேட்டால் ஒரு வேளை கோபித்துக் கொள்வானோ எனப்பயந்து இருமடங்காக நாமே ஒரு தொகையைச் சொன்னால் 'ம்ச்' என்று கூறிவிட்டு திரும்பிப் பார்க்காமல் போய்விடுவார்கள் சிலர். 

சில ஆட்டோக்காரர்கள் 'மீட்டர் போடுறேன், மேல 100 ரூபாய் தரணும்" என்று மிரட்டுவர். அந்த மிரட்டலுக்கு பயந்து ஆட்டோவில் ஏறினால் சரி, இல்லையென்றால் அடுத்தடுத்த ஆட்டோக்கள் வேண்டுமென்றே அதிகமாக கேட்டு ஏற்கனவே மிரட்டப்பட்டவனுக்கு மயக்கம் வர வைத்து விடுவார்கள். இதுவல்லவோ வழிபறிக்கொள்ளை. சில ஆட்டோக் கொள்ளையர்கள் வேறு மாதிரி 'சார் மீட்டர் போட்றேன், ஆனா அதுல வர்ர அமௌண்ட்ல மூணுல ஒரு பங்கு கூட குடுக்கணும்' என்பார்கள். புரியலியே என்றா' அதான்சார், 100 ரூபா மீட்டர்ல வந்தா 130 தரணும். இப்போ 300 ரூபா வந்தா 100 ரூபா சேத்து போட்டு 400 தரனும் என்பார்கள். அதாவது ஏற்கனவே இவர்கள் கொள்ளையடித்துக் கொண்டிருந்த கட்டணத்தோடு மீட்டர் கட்டணத்தை சமன் செய்கிறார்களாம். எப்படி பர்ஸன்டேஜ் எல்லாம் பேசுது பாரு இந்த திருட்டுக் கூட்டம் என மனதுக்குள் திட்டிக் கொண்டேவேற ஆளைப் பார்க்க வேண்டி இருக்கும்.

இத்தனைக்கும் மீட்டர் கட்டணத்துக்கும் இவர்களது வழிபறி கட்டணத்திற்கும் இமாலய வித்தியாசம் இருக்கிறது. உதாரனமாக சென்னை கோயம்பேடிலிருந்து எக்மோர் ரயில்வே ஸ்டேஷன் வரை அதிக பட்சம் 10 முதல் 12 கிலோமீட்டர் தான் இருக்கும். மீட்டர் போட்டால் 93 ரூபாய் வருகிறது. அதுவே ஆட்டோக்காரர்கள் வழிபறி செய்தால் 250 முதல் 300 வரை கேட்ட்டுப் பிடுங்கிக் கொள்வதுண்டு. 

ஞாயமான லாபத்திற்கு வண்டி ஓட்டுவதற்கு வலிக்கும் இவர்கள் வக்கனையாகவும் நக்கலாகவும் பலவாறு பயணிகளிடம் பேசுவதுன்டு. ஞாயமாக வசூலிக்க வேண்டிய தொகைக்கு 3 மடங்கு வாங்காமல் இவர்களுக்கு தூக்கம் வராது. அதாவது வழிபறி செய்யாமல் வாழமுடியாத கூட்டம் இந்த ஆட்டோ ஓட்டுனர் கூட்டம். அது தமிழகத்தில் மட்டும் தான்.

இப்போது இவர்கள் இன்னும் பழி வாங்கும் நோக்கத்தோடு கூட்டாக வேறு செயல்படுகிறார்கள். ஒரு ஆட்டோ காரர் நிராகரித்தால் அடுத்தடுத்த ஆடோக்காரர் வேண்டுமென்றே வலிய வந்து கூப்பிட்டு அதிக ரேட் சொல்லி கிரங்கடிக்கச் செய்து எரிச்சல் மூட்டி சண்டை வளர்த்து வேடிக்கை பார்க்கிறார்கள். பொது மக்களை மனோரீதியாக இவர்கள் கொடுமைக்கு உள்ளாக்குகிறார்கள் என்பதே நிஜம்.

இதனை எல்லாம் பார்த்துக் கொன்டு தமிழக அரசாங்கம் தூங்குகிறது. தமிழக முதல்வர் ஜெயலலிதா தைரியமாக திட்டங்களை அமல்படுத்தும் பெண்மணி, அவங்க ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு என்பதெல்லாம் பழங்கதை. ஆட்டோ ஓட்டுனர்களை மீட்டர் படி வாங்கி ஓட்டச்செய்யும் கண்டிப்பு கூட இல்லாத நிலையில் இருக்கிறார். மாறாக ஆட்டோ ஓட்டுனர்கள் இவர் அமல் படுத்திய சட்டத்தால் கடுப்படைந்து மக்களை இன்னும் அதிகமாக வதைக்கிறார்கள் என்பதே உண்மை. தமிழக முதல்வர் உண்மையில் இந்த ஆட்சியில் ஒரு புரட்சி செய்து மக்களிடம் பெயர் வாங்க முடியும் என்றால் இந்த ஆட்டோக்காரர்களை குறைந்த பட்சம் இவர் ஆளும் காலம் வரைக்குமாவது மீட்டர் கட்டணம் வாங்கிக்கொள்ளும் படி கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இந்த குறைந்த பட்ச நடவடிக்கையை கூட உறுதியாக எடுக்க முடியவில்லை என்றால் இவரை தைரியமான பெண்மணி நல்லாட்சி கொடுப்பார் என நம்பி ஓட்டுப் போட்டவர்களுக் கெல்லாம் இவர் செய்யும் துரோகமாகவே அது அமையும். இனி ஒருக்காலும் இந்த கையாலாகாத முதல்வரை தமிழக மக்கள் ஆதரிக்க மாட்டார்கள் என நம்புவோமாக.

கொஞ்சம் உழைத்துச் சாப்பிடுங்கள் ஆட்டோக்காரர்களே!

Friday, August 9, 2013

கருக் முருக் நொறுக்ஸ்!

தானே எரியும் குழந்தை!

தானே எரிந்த தடையங்கள்!


தமிழகத்தைப் பொறுத்த வரை ஆச்சரியமான செய்தி. ஆனால் உலகின் பல நாடுகளில் இது மாதிரி நிகழ்ந்திருக்கிறதாம். இதனை 'ஸ்பான்டேனியஸ் ஹியூமன் கம்பியூஷன்' என்று அழைப்பார்களாம்.

!! 'Spontaneous' Combustion: Can Bodies Burn From the Inside !!

When human beings are discovered burned to a crisp alone in their otherwise unscathed homes amidst no evidence of mayhem -- no telltale blowtorches, cigarettes or Butane -- rumors swirl: of mysteries and miracles in which bodies inexplicably burst into flames. It might be an urban legend, sheer magic or divine wrath (hey, it happens in Leviticus), but it is one of the most hotly debated (and  hot) causes of death.

இது பற்றி பல தகவல்களை தொகுத்து மதன் கீழ்கண்டவாறு தனது புத்தகத்தில் பதிவு செய்கிறார்:

மனிதனின் வயிற்றுக்குள் எரியக்கூடிய காற்றுப் பொருள்கள் (combustible gases) உண்டு! அரிதாகச் சிலருக்கு மட்டும் மிகவும் அதிக் அலவில் அவை உற்பத்தி ஆகின்றன. தவிர, நம் எல்லோருடைய உடலிலும் மின் சக்தியும் உன்டு. அப்படி ஒரு மின்சாரம் உடலுக்க்குள்ளேயே பளிச்சிட்டு கூடவே வயிற்றுக்குள் காக்டெய்ல் போன்ற காஸ் விஷயங்களும் அதிக் அளவில் பரவி இருந்தால் இப்படி ஒரு விபரீதம் ஏற்படுவது சாத்தியம் என விஞ்ஞானிகள் விளக்குகிறார்கள்.

1993 ல் ஜெர்மனியில் இரு விஞ்ஞானிகள் சில விலங்கினங்களின் வயிற்றுக்குள் பாஸ்பஃபேன் காஸ் இருப்பதை கண்டுபிடித்தார்கள்.! பாஸ்ஃபேன் வாயு - பாஸ்பரஸ் போல தானாகவே திடீரென்று எரிகிற பொருள். (வயற்புரங்களில் அந்தரத்தில் எரியும் தீப்பிழம்புகள் பாஸ்ஃபேன் காஸ்தான். அதைத்தான் நாம் கொள்ளிவாய் பிசாசு என்கிறோம்). விலங்குகளுக்கு இப்படி நிகழும் என்றால் மனிதனுக்கும் இது சாத்தியம் என்கிறார்கல் விஞ்ஞானிகள்.

- மனிதனும் மர்மங்களும், மதன்

தமிழகத்தில் அதிசயக்குழந்தையான தானே எரியும் குழந்தையுன் வயிற்றில் பாஸ்ப்ஃபேன் காஸ் எந்தளவு இருக்கிறது என்பதை சோதனை செய்து பார்த்து அந்த வாயு உடல் தோல்கள் வழியாக வெளியாறாமல் இருக்கும் வன்னம் ஆவன செய்யலாம். பொதுவாக நாம் என்ன சாப்பிடுகிறோமோ அந்தப் பொருள் சார்ந்த வாசனை நம் உடலிலிருந்து வெளிப்படும். நம் உடல் வாடையாக அல்லது வியர்வையின் வாடையாககூட வெளிப்படும். சிலர் அசைவம் அதிகம் சாப்பிட்டால் குறிப்பாக மாட்டுக்கறி சாப்பிட்டால் ஓரிரு நாட்களுக்கு அவர்களின் உடலிலிருந்து வழக்கத்திற்கு மாறான மணம் வெளிப்படும். காரணம் வயிற்றில் இருந்து ஜீரணத்தின் போது உருவாகும் வாயு நாம் மூச்சு விடும் பொழுது உடல் தோலில் மெல்லிய துவாரங்கள் வழியாக வெளியேறுவது வழக்கம்.

உடலில் பாஸ்ஃபேன் போன்ற வாயு அதிகம் இருக்கும் அரிதான நபராக ஓருவர் இருந்தால் அவர் உடல் தோலின் மெல்லிய துவாரங்கள் வழியாக வெளியேறும் போது சட்டென்று வெளிப்புறச் சூட்டின் காரணமாக பாஸ்பரஸ் எரிவது போன்று தோலின் மேல்பகுதியில் நின்று எரிந்து விட வாய்ப்பிருக்கிறது. அத்தகைய வாயு குழந்தையின் உடலில் அதிகளவில் இருந்தால் அதனை கட்டுப்படுத்த ஏதாவது நடவடிக்கை எடுக்கலாம். குழந்தையின் உடல் சூடாகாமல் பார்த்துக் கொள்ளலாம். அப்புறம் ஆன்டவன் கையில்!


செக்யூலரிச இட ஒதுக்கீடு. ஏழையாக பிறந்தாலும் ஹிந்துவாகப் பிறக்காதே எனச் சொல்ல வைப்பார்கள் போல!

ஹிந்து ஆதி திராவிடர்கள் ஒதுக்கீட்டின் பயனாய் வாழ்ந்ததெல்லாம் போதும். இனி கிறிஸ்தவ ஆதி திராவிடர்கள் வாழட்டும். ஏன் ஒட்டு மொத்த கிறிஸ்தவர்களை அப்படியே ஆதிதிராவிடர்கள் என ஓர் இரவில் அறிவித்து விட்டால் மொத்த கிறிஸ்தவ பிரிவுகளின் ஓட்டுகளையும் அள்ளிவிடலாமே. இவர்களுக்கு மட்டும் ஒதுக்கீடு என்றால் ஆர் சி கிறிஸ்தவர்கள் என்ன ஆதிதிராவிட கிறிஸ்தவர்களை விட தாழ்ந்தவர்களா. அவர்களுக்கு அரசாங்கம் ஒதுக்கீடு கொடுத்து கௌரவிக்காதா?

நாடார் கிறிஸ்தவர்கள் வன்னிய கிறிஸ்தவர்கள் எல்லாம் என்ன பாவம் செய்தார்கள்?

ஏற்கனவே ஏழை மாணவர்களுக்கு மதம் பார்த்து உதவித்தொகை தருவதை எதிர்த்து வருகிறார்கள். ஹிந்து ஏழை மாணவர்களுக்கும் உதவித்தொகை வேண்டும் என்ற போராட்டம் வலுத்து வருகிறது. இப்போது இதுவேரையா? ஓட்டுப் பிச்சை செக்யூலரிச அரசியல் வாதிகள் ஹிந்துக்களை இந்நாட்டு அகதிகளாக்கி விடுவார்கள் என்பது நிச்சயம்.

**

சேரனின் அழுகை!

'தவமாய்த் தவமிருந்து' என அப்பாக்கள் சார்பாக படம் எடுத்த சேரன் தன் மகளால் வருந்திக்கொண்டு இருக்கிறார். சினிமாக்கள் தான் சமூகத்தின் உணர்ச்சிகளோடு பெரிதும் விளையாடும் ஊடகம். ஆனால் அவற்றின் மூலம் சினிமாக்காரர்கள் மட்டும் பாதிக்கப்படக்கூடாது என சினிமாக்காரர்கள் நினைப்பது போல இருந்தது சேரனும் அவர்களது சகாக்களும் மீடியா முன்னால் நடத்திய கூத்துக்கள் எல்லாம்.

சமீபத்தில் தான் சேரன் பிழியப் பிழிய அழுதார். இனியாவது தமிழ் சினிமாவில் அம்மா அப்பா பாசத்தை அவர்கள் குழந்தைகளை ஆளாக்கப் பாடுபடும் கஷ்டங்களைச் சொல்லியும் , குடும்ப பாசம் சம்பந்தப்பட்ட படங்களும் நிறைய வரவேன்டும் தமிழ் சினிமாவில்.

'ஆதலால் காதல் செய்வீர்' என்று இளசுகளின் உணர்வுகளைத் தூண்டிவிட்டு பணம் சம்பாதிக்க படம் ஒன்று வரப்போகிறது, விளம்பரமாகப் போட்டுத் தள்ளுகிறார்கள். அழுகைப் புலி சேரனோ, அவரோடு தோளோடு தோள் கொடுத்த அமீர்  போன்றவர்களும் இந்தப்படத்தை எதிர்ப்பார்களாசரி எத்தனை அப்பாமார்கள் எதிர்ப்பார்கள்? மாட்டார்கள். அதே அரைச்ச மாவு தான்.

'சார் , நாங்க காதலுக்கு எதிரி இல்லீங்க!, நல்லவனாப் பாத்து காதலிங்கன்னு தான் சொல்றோம்' என்பார்கள்.

அதைத்தானே நான் செஞ்சேன் என்று அவர்களது பெண்கள் சொன்னால் - ஒத்துக்கொள்ள மாட்டார்கள். அழுவார்கள்.

அழுகுனி ஆட்டம்...!

**

ஆடோக்களில் பிரசவத்துக்கு இலவசம் என்கிற வாசகம் எல்லாம் காணாமல் போய்விட்டது. இருக்கும் விலைவாசியிலும் க்ளோபலைசேஷன் சமூகச் சூழலிலும் எங்கும் யாருக்கும் இலவசம் எதிலுமில்லை. மனிதாபிமானம் செத்துக்கொண்டு வருகிறது. டாக்டர்கள் பிரசவத்துக்கு இலவசம் என்று போட்டால் இக்காலத்தில் அது தான் மனிதாபிமானம். இது நாள் வரை ஆட்டோக்காரர்களிடத்தில் இருந்த மனிதாபிமானம் டாக்டர்களிடம் இடம்பெயருமா? பெயராது.

பெண்களின் திருமணவயதை தீர்மானித்து வந்த ஆட்டோக்காரர்கள் மத்தியில் நிஜமாகவே பெரிய விழிப்புணர்வு பிரச்சாரம் தேவைப்படுகிற ஒரு வாசகத்தை ஒரு ஆட்டோவின் பின்புறம் பார்த்தேன்.

' சாலையில் எச்சில் துப்பாதீர்கள்! ' துப்பிகள் கவனிப்பார்களாக.



'ஸ்பான்டேனியஸ் ஹியூமன் கம்பியூஷன்'



அக்பர் அவையில் தான்சேன் 'தீப' ராகம் பாடும் போது அவரது உடலில் தீப்பற்றிக் கொள்ளுமாம். பின்னர் மழைவரவைக்கும் ராகம் பாடி அனைப்பார்களாம். தான்சேன் பாடும் போது  அந்த ராகத்தால் உடலின்  'பாஸ்ஃபேன்' அதிகப்பட்டு உடல் எரியுமோ?