ஒரு அரசாங்க உத்தியோக நேர்காணலில் நடக்கும் உரையாடல்:
அதிகாரி: தேவையான எல்லா தகுதியும் உங்களுக்கு இருக்கு. இந்த வேலைக்கான பரீட்சையிலயும் நல்ல மார்க் வாங்கியிருக்கீங்க..தம்பி எல்லம் சொன்னீங்க உங்க ஜாதி என்னன்னு சொல்லவே இல்லையே?
வேலை தேடுபவர்: நான் சில விஷயங்கள் சொல்றேன். அத வெச்சு நீங்களே சொல்லுங்களேன்! பாக்கலாம் .
அதிகாரி: அட எனக்கே புதிர் போடுறியா! அப்படி என்னய்யா ஜாதி. சொல்லு கேக்கறேன்.
வேலை தேடுபவர்: சார்! இந்த இனம் அடியோட அழிஞ்சிடனும்னு நினைக்கிற பெரிய கூட்டமே தமிழ் நாட்டுல இருக்கு சார்!
அதிகாரி: எல்லாரும் யாரையாவது அழிக்க நினைக்கிறான் தான்! மேல சொல்லு பாக்கலாம்.
வேலை தேடுபவர்:சார் எங்கள சேர்ந்தவங்களுக்கு பெரிய மரியாதை இல்லைன்னாலும் அவமானப்படுத்த நிறயபேர் வரிசையில நிப்பாங்க சார்!
அதிகாரி: அட என்னப்பா வினோதமா சொல்ற...அப்பறம்?!
வேலை தேடுபவர்: காந்தி தாத்தா சுதந்திரத்திற்காக போராடினப்போ..காந்தி தாத்தா கூடவே சரிசமமா போராட்டத்துல ஈடுபட்டு, நாட்டுக்காக அரும்பாடு பட்டவங்கள்ள எங்க முன்னோர்கள் ரொம்ப அதிகம் சார்!
அதிகாரி: அட்டே ! சுவாரஸ்யமா இருக்கே! மேல சொல்லு..
வேலை தேடுபவர்: சார்! அழிஞ்சு போற நிலைமையில இருந்த தமிழ் இலக்கியங்களை எல்லாம் தேடிக்கண்டு பிடிச்சு, புத்தகத்துல அச்சேத்தி தமிழ் நாட்டுக்கு எட்டுத்தொகை, பத்துப்பாட்டுன்னு இலக்கியங்கள காப்பத்தி தமிழ் வீரத்த உலகிற்க்கே எடுத்து சொல்ல பாடுபட்டவர்கள் எங்க தாத்தா மார்கள் சார்.
அதிகாரி: என்னப்பா விட்டா ரொம்ப புருடா விடுவ போல இருக்கே..??!!
வேலை தேடுபவர்: இல்ல சார்..உண்மைய தான் சொல்றேன்!
அதிகாரி: சரி சொல்லு!
வேலை தேடுபவர்: ஆன்மீகத்தில் சமூகத்தில உள்ள எல்லோருக்குமே உதாரணமா இருக்குறவங்க சார்.
அதிகாரி: இப்ப தான் எல்லாருக்குமே பக்தி முத்தி போச்சே!!..வேற என்ன சொல்லப்போற
வேலை தேடுபவர்: சார்..தமிழ் சினிமால கேலி பண்ணி, கோமாளி மாதிரி காமிச்சு, பயந்தாக்கொல்லியா காமிச்சு காமெடி பண்ண எங்க ஜாதிக்காரங்களை தான் சார் அதிகமா காமிப்பாங்க.
அதிகாரி: அடப்பரிதாபமே?? அப்பறம்!!
வேலை தேடுபவர்: சார் ..மத்தவங்க பயப்படுறமாதிரி சோடா பாட்டில் எரிஞ்சு , ரோட்டுல கத்தி, அருவாதூக்கி யாரையாவது வெட்டி, ஓடுற பஸ்ச உடச்சு அந்த மாதிரி எந்த காரியத்திலும் ஈடுபடாதவங்க சார்..
அதிகாரி: அட..நல்ல குடும்பத்துல பொறந்த யாருமே அந்த மாதிரி பண்ணமாட்டங்கப்பா...இதெல்லாம் எல்லாருக்கும் உள்ளது தான் தம்பி. நல்லா சொன்ன ஒடனே புரியற மாதிரி உங்க ஜாதியப்பத்தி ஏதாவது சொல்லு பாக்கலாம். அப்ப கண்டுபிடிக்க முடியுதான்னு பாக்கறேன்...என்ன?
வேலை தேடுபவர்: சார்! கடைசியா ஒன்னு சொல்றேன்.. இப்பவாவது கண்டுபிடிக்கிறீங்களான்னு பாக்கலாம்!...
எங்க ஜாதிப்பொண்ணுங்க யாருமே எங்க ஜாதிப்பையனைக் கல்யாணம் பண்ணிக்கறதே கிடையாது.. இப்ப சொல்லுங்க பாக்கலாம்.
அதிகாரி: அட்டே...!!!!!! நீ பிராமணப் பையனா...இதத்தான் இப்படி சுத்தி வளைச்சு சொன்னியா!! சாரி தம்பி இந்த சீட் ஒதுக்கீட்டின் பேர்ல வேற ஆளுக்கு குடுக்க வேண்டியது. உன்ன தப்பா கூப்பிட்டுட்டாங்க போல இருக்கு. நீ வேற ஏதாவது வேலை தேடிக்க தம்பி சரியா!? தவறுக்கு மன்னிக்கனும். பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம். பை.
இங்கே பிராமணன்!
Showing posts with label பிராமணன். Show all posts
Showing posts with label பிராமணன். Show all posts
Thursday, February 26, 2009
Tuesday, February 3, 2009
சிதம்பரத்தில் ஓர் அராஜகம்

சிதம்பரம் நடராஜர் கோவிலை இந்து அறநிலையத்துறை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளது. இந்து அறநிலையத் துறை என்ற பெயரில் இந்து கோவில்களில் மட்டும் அரசாங்கம் செய்யும் அட்டூழியத்திற்கு அளவே கிடையாது. இவர்களுக்கு இந்து கோவில்களில் வரும் வருமானத்தை பங்கு போட்டுக்கொள்ள வேண்டும். பிராமணர்களை அடியோடு இந்த சமூகத்திலிருந்து ஒழிக்க வேண்டும். இந்த இரண்டும் அடிப்படை தாரக மந்திரம். அதுவும் கருணாநிதியின் ஆத்மா சந்தியடைய இவையெல்லாம் முக்கிய வழிமுறைகள் என்று ஏதாவது ஜோசியர் சொன்னாரா என்பது தெரியவில்லை, ஆட்சிக்கு வந்த நாள் முதல் இந்துக்களை அவமானப்படுத்துவது, இந்து தெய்வங்களைப்பழித்து பேசுவது இவை மட்டுமே அரசின் முக்கியக் கடமையாக உள்ளது.
மிகத்தொன்மை வாய்ந்த கோவில்கள் மற்றும் பண்டைய கலாச்சாரத்தையும், மன்னாராட்சியையும் பிரதிபலிக்கும் நினைவுச்சின்னங்கள் போன்றவை தனி ஒரு மனிதர் அல்லது தனி ஒரு குழுவிற்கு மட்டும் சொந்தமானதாக இருக்க கூடாது என்பது ஏற்புடையதே. அவ்வாறான மிகப்பழங்கால கட்டிடங்கள் தனியாள் கையில் இருந்தால் அது நாளடைவில் தனிப்பட்டவர் விருப்பத்திற்கேற்ப மாற்றப்படும் அல்லது அழிக்கப்பட்டுவிடும். எனவே அவற்றைப்பாதுகாப்பது அரசின் கடமை. ஆனால் அந்த அதீத அக்கறை இந்து மத கோவில்களில் மட்டும் காட்டப்படுவது அநீதி.
இந்து அறநிலையத்துறை என்ற பெயர் மாற்றப்பட்டு அனைத்து சமய அறநிலையத்துறை என்று அமைக்க வேண்டும். வருமானம் வரும் மற்றும் போதிய வருமானம் இல்லாத அனைத்து மத கோவில்களும் அரசாங்க கட்டுப்பட்டிற்கு வரவேண்டும். மசூதிகளின் வருமானங்களும், தேவலயங்களின் வருமானங்களும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். அதைச் செய்வதற்கு இந்த அரசிற்கு எவ்வளவு தைரியம் உள்ளது என்பது என்பதை பார்க்க வேண்டும். குறிப்பாக தேவலயங்களுக்கு வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பணம் பெரும்பாலும் உள்நாட்டு மக்களை மதம்மாற்றம் செய்ய மட்ட்டுமே பயன்படுகிறது. இதை அரசாங்கம் தட்டிக்கேட்கவோ கட்டுப்படுத்தவோ, ஏன் அந்த வருமானம் எங்கிருந்து வந்தது என்று கணக்கு கேட்பது கூட கிடையாது. ஆனால் இந்து ஆலயங்களின் மீது மட்டும் கட்டவிழ்து விடப்பட்ட அரசாங்க அராஜகங்கள் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
பிராமணர்கள் உரிமைகள் அடியோடு பறிக்கப்படுவதும் அவர்களின் வாழ்க்கை மற்றும் கலாச்சார அடையாளங்களை அடியோடு அழித்து சமூகத்திலிருந்து இவர்களை முழுவதுமாக அப்புறப்படுத்த தமிழக அரசு எடுத்து வரும் இனதுவேஷ நடவடிக்கை மிகவும் அராஜகமானது. தமிழ்நாட்டில் பிராமண இனத்தை அடியோடு அழிக்க நினைப்பவர்களுக்கு இலங்கையில் தமிழினத்தை அழிக்கிறார்களே என்று கூச்சல் போட என்ன யோக்கியதை இருக்கிறது என்று இன்னும் விளங்கவில்லை.
Subscribe to:
Comments (Atom)