Thursday, June 2, 2011

விலைவாசி உயர்ந்ததற்கு யார் காரணம்?




இந்த படக்காட்சியை பார்த்த போது தோன்றிய விஷயம், கடந்த ஐந்தாண்டுகளில் சகல பொருட்களின் மீதும் உண்டான மோசமான விலைவாசிக்கு யார் காரணம்?

வீட்டு வாடகை மற்றும் ரியல் எஸ்டேட் முதல் காய்கறி வரை சகல விலைவாசிகளும் உயர்ந்ததற்கு சாஃப்ட்வேர் நிறுவனங்களில் அதிக சம்பளம் வாங்குபவர்கள் தான் காரணம் என்று கூறி படமே வந்தது. ஆனால் கடந்த ஐந்தாண்டுகளில் ஏறிப்போன மோசமான விலைவாசி உயர்விற்கு பொறுப்பற்ற பிரமதமரையும், கொள்ளை கும்பல் முதல்வரையுமே கொண்ட அரசாங்கமும், அரசியல் வாதிகளின் கணக்கில்லா கருப்புப்பண புழக்கமே காரணம் என்று தோன்றுகிறது.

இனியாவது கட்டுக்குள் நிற்குமா? நடுத்தர வர்கத்தினர் வாழ வழிகிடைக்குமா? என்று தெரியவில்லை.

கேள்விகள் தான் மிச்சம்!

.

2 comments:

hayyram said...

டாலர் கரன்ஸியில் சம்பளம் வாங்குபவர்களுக்குத் தான் அதிக வருமானம் இருக்கிறது(ஐடி, பி பி ஓ). இந்திய நிறுவனங்களில் சம்பளம் வாங்குபவர்களுக்கு வருடத்திற்கு இரண்டு மூன்று லட்சத்திற்கு வேலை கிடைப்பது குதிரைக் கொம்பாக இருப்பதால் இந்திய சம்பளக்காரர்கள் பாடு திண்டாடமாகத்தான் இருக்கிறது. அதிலும் இந்திய கரன்ஸி சம்பளக்காரர்களுக்கு வருடத்திற்கு 500 -1000 தான் சம்பள உயர்வும் இருக்கும்.

//கலியுகத்தின் நடுஆண்டுகளில்// ரொம்ப தூரம் போய் விட்டீர்கள், அடுத்த பத்து வருடங்களில் சென்னை மாநகரில் 15 - 20 ஆயிரங்கள் சம்பளம் வாங்குபவர்களே வாழமுடியாத சூழல் இருக்கும் போலத் தெரிகிறது. இப்பொழுதே வீட்டு வாடகை சதுர அடிக்கணக்கில் ஒரு சதுர அடி 10 ரூபாயாக கேட்கிறார்கள். குறைந்த பட்சம் 6000 முதல் 10-15 ஆயிரங்கள் வரை வாடகை விலை எகிறி விட்டது. அதுவும் கடைசி மூன்று வருடங்களில் கட்டுக்கடங்காமல் சென்றிருக்கிறது. இது வெறும் விலைவாசி ஏற்றம் மட்டுமல்லாது சொந்த விட்டை வாடகைக்கு விடுபவர்களின் அதீத பேராசையால் விளைகிறது.

பக்கத்து விட்டுக்கு 10000 வாடகை வருகிறதென்றால் இவரது வீட்டில் குடியிருப்பவரை காலி செய்யச் சொல்லி துரத்தி விட்டு அடுத்து வருபவர்களிடம் அதிக வாடகை வாங்கி தங்கள் வளத்தைப் பெருக்கிக் கொள்ளத் துணிகிறார்கள். பெரும்பாலானவர்கள் லோன் போட்டு வீடு வாங்கி விட்டு அந்த மாத தவனையை வாடகைக்கு குடிவருபவர்கள் மூலம் கட்டி அடைக்கும் படி செய்கிறார்கள்.

இது போதாமல் ரியல் எஸ்டேட் ப்ரோக்கர்கள் அட்டூழியம் வேறு, அவர்கள் பங்கிற்கு ஏற்றி விடுவார்கள். எது எப்படியோ இந்தப் படக்காட்சியில் வரும் வசனம் போல 5 லட்சம் சம்பளம் வாங்குபவனுக்கு தகுந்த மாதிரி விலைவாசி மட்டும் ஏறி விட்டது. ஆனால் இன்னும் குறைந்த பட்ச சம்பளம் என்னவோ 2000 ரூபாய் தான்.

ஒரு விஷயம் கவனித்துப் பாருங்கள், நாளிதழ்களில் வரும் வரிவிளம்பரங்கள் சமூக ஏற்றத்தாழ்வையும் பரிதாபத்தியுமே உண்டாக்குகின்றன. காரணம் ஒரு புறம் வீடு வாடகைக்கு என்ற தலைப்பில் 8 - 10000 வரை வாடகைக்கு வீடு இருப்பதாக விளம்பரம் இருக்கும். அதே பக்கத்தில் மார்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ் வேலை, அக்கவுண்ட் எக்ஸிக்யூட்டிவ் வேலை, சம்பளம் 7000 என்று இருக்கும். நகரத்தில் வீட்டு வாடகையே பத்தாயிரம் இருக்கும் பட்சட்த்தில் அடிப்படை சம்பளம் மட்டும் ஆகக்குறைவானதாக இருக்கிறது. கேட்பார் இல்லை.

வாடகை உச்சவரம்பு சட்டமும் இல்லை, நில உச்சவரம்பு சட்டமும் இல்லை. மொத்தத்தில் கட்டுக்கட்டாக பணம் வைத்திருப்பவர்கள் மட்டுமே வாழ முடிகிறபடியாக நகரத்தின் நிலை சென்று கொண்டிருப்பது நடுத்தர வர்கத்தினரின் வாழ்வில் மிகப்பெரிய அபாயமான எதிர்காலத்தையே காட்டுகிறது.

Madhusudhanan D said...

There are many people working in call center and getting less than 10000 per month.

Are they providing government jobs common to everyone? 200000 candidates are writing group 1 exam for 131 vacancies, of which more than 50% are reserved for SC/ST, BC, and MBC. Of the remaining which is open for all castes, there are a lot of politics, recommendation, bribery, etc. Somehow after getting a job in government, the one who joined after us, becomes our senior in next 10 years because of the same reservation.

This does not happen in IT industry.

Do you think that all government employees do their job properly? Government doctors should be consulted in their clinic. The government is running by the work done by at most 30% of the employees. In IT companies, 100% of the employees do their work. The main drawback of government job is the job security. Whether or not they work, they get salary and increment.