Monday, April 23, 2012

இயற்கைக்கும் ஆன்மாவிற்கும் ஆரம்பம் இல்லை!



பார்த்தா! இயற்கைக்கும், ஆன்மாவிற்கும் ஆரம்பம் இல்லை என்பதைத் தெரிந்து கொள். மாறுதல்கள்குணங்கள் அனைத்தும் இயற்கையிலிருந்து தான் தோன்றுகின்றன என்பதையும் அறிந்து கொள்.

உடலுக்கும், புலன்களுக்கும் காரணம் இயற்கை எனப்படுகிறது. இன்ப, துன்பங்களை
அனுபவிப்பதற்குக் காரணம் ஆன்மா எனப்படுகிறது.

ஆன்மா இயற்கையில் நின்று இயற்கையிலிருந்து தோன்றும் குணங்களை அனுபவிக்கிறது. இந்த குணத்தின் மீது கொண்ட பற்றே அதற்கு நன்மை அல்லது தீமையோடு கூடிய பிறவி எடுக்கக் காரணம் ஆகிறது.

இந்த உடலில் உள்ள பரம புருஷனானவன் - சாட்சி, அனுமதிப்பவன், ஆதாரம் ஆனவன், அனுபவிப்பவன்இறைவன், பரமாத்மன் என்றும் அழைக்கப்படுகிறான்.

இவ்வாறு ஆன்மா, உடல் ஆகிய இரண்டைப் பற்றியும், அவற்றின் இயல்புகளைப் பற்றியும்
நன்கு உணர்ந்த ஒருவன் வாழ்வில் எந்த நிலையில் இருந்தாலும், அவன் மீண்டும்
பிறப்பதில்லை.

- பகவான் ஸ்ரீ க்ருஷ்ணர்

No comments: