Saturday, January 19, 2013

முஸ்லீம்கள் நம்புவது பவிஷ்ய புராணத்தையா?




சுவாமி சிந்தனாபுரி அவர்களின் அருமையான விளக்கம்!


அடியேனுக்கு புரிந்த வரையில் மொழிபெயர்க்கிறேன்... மேலும் விபரமறிந்தவர்கள் இன்னும் விபரமாகச் சொல்லுங்கள்...! 

பவிஷ்ய புராணத்தில் முஹம்மதின் பெயர் வந்திருப்பதால் பவிஷ்ய புராணத்திலேயே 'இவரை'ப் பற்றி சொல்லப்பட்டிருக்கிறது என்று கூற முற்படுகிறார் ஒருவர்சுவாமிஜி அதற்கு மறுப்பு தெரிவித்து கீழ்கண்டவாறு விளக்கங்கள் அளிக்கிறார்.

"முகலாயர் காலங்களில் பவிஷ்யபுராணம் திருத்தி எழுதப்பட்டது. சல்லிக்காசுக்கு ஆசைப்பட்டு சமஸ்கிருதத்தை திருத்தி எழுதிக் கொடுக்க எல்லா காலத்திலும் ஆட்கள் இருப்பார்கள். அது போல அப்போதும் இருந்திருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல், ஆங்கிலேயர் காலத்திலும் திருத்தி எழுதப்பட்டிருக்கிறது. விக்டோரியா மகாராணி பற்றி கூட பவிஷ்ய புராணத்தில் எழுதப்பட்டிருக்கிறது. இது எப்படி சாத்தியம் என்று நாம் யோசிக்க வேண்டாமா? வியாசர் எழுதிய பவிஷ்ய புராணத்தில் இவை எழுதப்பட்டிருக்கிறது என்று கூறினால் படிப்பவர்கள் அல்லவா யோசிக்க வேண்டும்?

ஒரு முஸ்லீம் மருத்துவர் அவரது பெட்டியில் இருந்து ஒரு தடி புத்தகத்தை எடுக்க முயற்சித்தார், நான் கேட்டேன், இது பவிஷ்ய புராணம் புத்தகம் தானே என்றேன்' அவர் ஆமாம் என்றார். நீங்கள் என்ன கேட்கப்போகிறீர்கள் என்று எனக்குப் புரிந்து விட்டது. நான் ஒரு விஷயம் கேட்கிறேன்... 5000 வருடங்கள் முன்னாலேயே முஹம்மது என்றொருவர் வருவார் என்று ஒருவர் எழுதி வைக்கிறான் என்றால் நீங்கள் கும்பிட வேண்டியது முன்பே தீர்க்கதரிசனம் செய்து சொல்லிவைத்த வரையா அல்லது முஹம்மதையா?' நீங்களே ஏன் உங்கள் நபிகள் பற்றிய மதிப்பை குறைத்துக் கொள்கிறீர்கள்..? அல்லது இன்னும்  அவரைப் பற்றிச் சொல்ல விஷயம் போதவில்லை என்றால் வெளிப்படையாக ஒத்துக்கொள்ளுங்கள்.. அம்மாம் என்று.. அதை விட்டு விட்டு ஏன் இந்த வேண்டாத வேலை' என்று அந்த மருத்துவரிடம் கூறினேன்..."" என்கிறார் சுவாமிஜி!

இப்போது நீங்கள் ஏன் அதைத் திருத்தி சரிப்படுத்தக்கூடாது என்று கேட்கிறார் கேள்வியாளர். 'பழையதைத் திருத்த நமக்கு என்ன அதிகாரம் இருக்கிறது. தவறைத் தவறால் திருத்தக்கூடாது. அதை அப்படியே விட்டுவிடுவது நல்லது. படிப்பவர்கள் சிந்தித்துப் புரிந்து கொள்ள வேண்டும்."
  
குரான் திருத்தப்படாத புத்தகம் என்று கேள்வி கேட்பவர் கூற முற்பட, "திருத்தப்படாத புத்தகம் என்று உலகில் எதுவும் இருக்க முடியாது. குரான் கூட'ஆயிஷாவின்' காலத்தில் திருத்தப்பட்டது தான். பழைய நூலகளெல்லாம் கொளுத்தப்பட்டு எஞ்சி இருந்தவற்றை திரட்டி புதிய புத்தகமாக வெளியிடப்பட்டதுதான். மனிதன் உபயோகிப்பது தானே இதெல்லாம், அவைகள் திருத்தப்படுவது நடக்காமல் இருக்காதே!" என்கிறார் சுவாமிஜி.
  
"மேலும் பவிஷ்ய புரானத்தில் இப்படிச் சொல்லியிருக்கிறது என்று நீங்கள் நம்பினீர்களென்றால், நீங்கள் சத்யத்தில் நம்புவது குரானையா அல்லது பவிஷ்ய புராணத்தையா என்கிற கேள்வி வரும்என்கிறார் சுவாமிஜி

***
குரானையும் நபிகளையும் நம்பவைக்க இவர்களுக்கு ஹிந்து தர்மத்தின் நூல்கள் தான் தேவைப்படுகிறாது பாருங்கள்.

ஈஸ்வரோ ரக்ஷது!

பேசும் படம்!


புகையிலை = கிறிஸ்தவம் = சமூகப்புற்று நோய்


Friday, January 18, 2013

யானைக் கூட்டம் காண வாரீர்!


குருவாயூரில் யானைக் கொட்டாரத்தில் கண்ட அழகான யானைகளின் அழகான படங்கள் இவை. ரசித்து ரசித்து படம் பிடித்ததை நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள இங்கேயும் பகிர்கிறேன்.

யானைக் கொட்டாரத்துக்குள்ளே செல்லும் போது நமக்கே ஏதோ யானைகள் வாழும் காட்டுக்குள் புகுந்து விட்டது போல ஒரு அச்சம் தொற்றிக்கொள்ளும். நமக்கு முன்னும் பின்னுமாக சுமார் நாற்பதுக்கும் மேற்பட்ட யானைகள் விதவிதமான சப்தங்களை எழுப்பிக் கொண்டும் ஆடிக்கொண்டும் பாகனின் சொல்லுக்கு சின்னக் குழந்தை போல பணிந்து அவர் சொல்வதைச் செய்து கொண்டிருந்தன. பார்க்கவே மிக அழகாகவும் பிரமிப்பாகவும் இருந்தது அந்த இடம்.

லட்சக்கணக்கான யானைகளை போர்ப்படைகளில் வீரர்களாக வைத்திருந்த நாடு இது! அவற்றின் எச்சங்களாக இன்று மிஞ்சி நிற்பது இந்தக் கோவில் யானைகளே


குளிரக்குளிர குளிப்பாட்டிக்கொண்டிருந்தார்கள். ஆடி அசைந்து அருமையாக குளித்த அழகு யானை!





சங்கிலிய மட்டும் கழட்டி விடுங்கடா சொல்றேன் என மிரட்டும் யானை!

'போட்டோவா எடுக்குற, இருடீ இன்ன மிதிக்கிறேன்' என்று என்னைப் பார்த்த உடன் சங்கிலை கழற்ற முயன்ற யானை! எதுக்கும் நீங்க மானிட்டரை விட்டு கொஞ்சம் தள்ளியே இருங்க...!

அழகுக் கூட்டம்

தொட்டியில் தண்ணீர் குடித்து விட்டு இளைப்பாரும் கொம்பன்


கீழே காணும் இந்த யானைக்கு ஏதோ உடல் நிலை சரியில்லாமல் இருந்தது போல, மிகவும் மெதுவாக அடிமேல் அடி வைத்து நடந்து வந்தது. அதன் கால்களை மஞ்சள் கலந்த தண்ணீருக்குள் வைத்து நிற்கும் படி செய்து 'டெர்மரிக் ட்ரீட்மெண்ட்' கொடுத்துக்கொண்டிருந்தார்கள்.


தரையில் கண்டதையெல்லாம் தலையில் போட்டுக் கொண்டிருந்தது இந்த யானை!




நீண்ட கொம்புகளைக் காட்டி மிரட்டும் கம்பீரமான யானை

 கொட்டாவி விடும் யானை

 அமைதியாக நிற்கும் கட்டழகு இளைஞன்!

காதுல தொரட்டிய சாச்சி வெச்சிட்டா போதுமாம். அசையக்கூடாது என்று கட்டளையாம். 

அடேங்கப்பா எத்தனை யானைகள் ! 



சாலையில் கண்ட அலங்கரிக்கப்பட்ட யானை, திருசூரில் உள்ள ஒரு சுப்ரமணியர் கோவிலுக்கு அழகு முருகனை சுமந்து வந்த அழகு யானைகள்!



Sunday, January 13, 2013

பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

அன்பர்கள் நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
 



Sunday, January 6, 2013

சுவாமி விவேகானந்தரை அவமதித்த 'தி ஹிந்து' பத்திரிக்கை!


பாரதப் பண்பாட்டிற்கு எதிராகவே தொடர்ந்து நடந்து கொள்ளும் ஹிந்து பத்திரிக்கையை கண்டிக்கிறோம்!


Thursday, January 3, 2013

வேத வாக்கு!



கெட்ட நடத்தை உடையவனுக்கும், மனதை அலைபாய விடுகிறவனுக்கும், கோபக்காரனுக்கும், பொய் பேசுபவனுக்கும், கபடு உள்ளவனுக்கும் பரமாத்மா புலப்படமாட்டான். எவர்களிடம் நல்ல தவமும், ஸத்யமும் நிலைத்து இருக்கிறதோ அவர்களுக்கே அவன் தெளிவாவான்.

யாவரும் ஒற்றுமையாக இருங்கள். ஒற்றுமையாகப் பேசுங்கள். உங்கள் யாவருடைய இதயத்திலும் ஒற்றுமையுணர்வு இருக்க வேண்டும்.

மனசாட்சிக்கு விரோதம் இல்லாத வழியே இன்பத்தைத் தருவது.

சூரியனால் ஆகாசம் ஒளி விட்டுப் பிரகாசிக்கிறது. ஸத்யத்தினால் பூமி பிரகாசிக்கிறது.

புத்திமான்களே! உங்கள் அறிவை வளர்த்துக் கொள்ள மக்களிடம் பழகுங்கள்.

யாவரையும் நட்புணர்வோடு பார்ப்போமாக.

உண்மையே பேசு, தர்மம் செய், தாயாரைத் தெய்வமாய் நினைப்பாயாக. குருவைத் தெய்வமாக நினைப்பாயாக.

நூறு கைகளால் பணத்தைச் சம்பாதிப்பாயாக. ஆயிரம் கைகளால் அதை மற்றவர்களுக்குப் பயன் உள்ள வகையில் செலவிடுவாயாக.

கொடுப்பதைச் சிரத்தையுடன் கொடு. அசிரத்தையாகக் கொடுக்காதே. முகமலர்ச்சியுடன் கொடு. அடக்கத்துடன் கொடு.

கடவுள் ஒருவரே; இரண்டாவதாக ஒரு கடவுள் இல்லை.

Tuesday, January 1, 2013

தூண்டி விளையாடும் பெண்கள் - உளவியல் வேசிகள்!


குறிப்பு: இங்கே நாம் பேசப்போகும் விஷயம் கற்பழிப்பு வன்கொடுமை செய்யும் கொடூரமான ஆண்களைப் பற்றி அல்ல! பெண்களிடம் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபடுபவர்களின் செயல்களை ஞாயப்படுத்தும் முயற்சியும் சிறிதும் இல்லை. பேசப்போவதெல்லாம் மிகச் சாதாரண குடும்பங்களில் வாழும் அப்பாவி ஆண்கள் மனதில் பாலுணர்ச்சித் தூண்டுதலை விதைத்து விளையாடும் பெண்களைப் பற்றியும், அத்தகைய பெண்களால் உளவியல் ரீதியாக பாதிக்கப்படும் ஆண்களைப் பற்றியும் தான்!
பாலியல் கொடுமை! ஒரு கொலை! கொடூரக் கொலை! 

அது ஏற்படுத்திய தாக்கம் கொஞ்சநஞ்சமல்ல.

பெண்களிடம் மிருகமாக நடந்து கொள்ளும் ஆண்களுக்கான தண்டனை என்னென்னவாக இருக்கலாம் என்பது பற்றி தீர்மானிக்க அனைத்து கட்சி ஆலோசனைக்கு அழைப்பு  விடுக்கப்படுகிறது. சிலர் அத்தகைய ஆண்களுக்கு 'மரணதண்டனை' வழங்கிக் கொன்று விட வேண்டுகிறார்கள். சிலர் அத்தகைய ஆண்களின் உறுப்புக்களை ஏதாவது செய்துவிடலாம் என்று விதவிதமான கற்பனைகலந்த, ஆத்திரத்துடன் கூடிய யோசனைகளைச் சொல்லி வருகிறார்கள்.

அவைகள் அத்தனையும் பெண்களை பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கும் ஆண்களை எப்படி தண்டிக்கலாம் என்கிற பேச்சு தான். பெண்களை மதிப்பாக நடத்தும் நல்ல, கண்ணியமான ஆண்களுக்கு அதனால் எந்தப் பிரச்சனையும் இல்லை. 

ஆனால் பாலியல் குற்றம் என்றால் பெண்களின் உடல் மீது மிருக உணர்வு கொண்ட ஆண்கள் செய்யும் அத்து மீறல்கள் மட்டுமே எனப்பார்க்கப்படுகிறது.

ஆண்களின் உணர்வுகளோடு பாலியல் ரீதியாக விளையாடும் பெண்களைப் பற்றி அவர்கள் இழைக்கும் குற்றம் பற்றி யோசிப்பது கிடையாது. உதாரணமாக ஒரு ஆண் ஒரு பெண்ணை தொடர்ந்து 'குருகுரு' எனப் பார்த்தாலே அது 'ஈவ் டீசிங்' ஆக கணக்கிட சட்டத்தில் வழி இருக்கிறது. 'என்னைப் பாலுணர்வுடன் வன்மமாகப் இவன் பார்த்தான்' என்றால் கூட 'ஈவ் டீசிங்' சட்டத்தில் ஒருவனை கைது செய்துவிட முகாந்திரம் இருக்கிறது.

ஆனால் ஆண்களின் பாலியல் உணர்வுகள் மீது கை படாமல் தொட்டு விளையாடுவதும் பாலியல் வன்முறைதான் என்று இவர்களுக்கு எப்படிப் புரியவைப்பது!


ஆணோ பெண்ணோ, பாலுணர்வு என்பது இயற்கையானது. அதனைத் தூண்டுவது என்பது தூண்டுபவர்க்கும் தூண்டப்படுபவர்க்கும் இருக்க வேண்டிய உரிமை அல்லது உறவால் மட்டுமே நடக்க வேண்டும். அல்லாதவர்கள் பிறரின் பாலுணர்ச்சியை தூண்டி விளையாட எவ்வித உரிமையும் அல்லாதவர்கள். அந்த விதத்தில் பார்க்கும் போது பொது இடங்களில் அல்லது தனிப்பட்ட முறையில் ஒரு ஆணின் பாலுணர்வை அவனுக்குச் சம்பந்தமில்லாதவர்கள் வெளிப்படையாக தூண்டும் வகையில் நடந்து கொண்டால் அதுவும் பாலியல் வன்முறையே!

பொது இடங்களில், ஒரு ஆணின் பாலுணர்ச்சியைத் தூண்டி விட்டு அதற்கு வடிகால் தர மறுப்பது பாலியல் குற்றமாகக் கருதப்பட வேண்டும். குறிப்பாக சினிமா நடிகைகள் அரை நிர்வாணக் கோலத்தில் ஆட்டம் பாட்டம் போட்டு, ஆண்களை வடிகால் தேடி அலையும் மிருகங்களாக மாற்றி விடும் இந்த தூண்டுதலை - 'ஆடம் டீஸிங்' என்றோ அல்லது ஆண்களுக்கெதிராக 'வடிகால் தராத பாலியல் தூண்டுதல்' என்கிற பெயரொலோ குற்றமிழைத்தவர்களாகச் சொல்லி தண்டிக்க வேண்டும். 



பொது இடத்தில் ஒரு ஆண் தன் லுங்கியைத் தூக்கி உள்ளாடையை சம்பந்தமில்லாத ஒரு பெண்ணுக்கு வலியக் காட்டினால் கண்டிப்பாக அது 'ஈவ் டீசிங்க்' தான். ஆனால் ஒரு பெண் தன் முந்தானையை விலக்கி உள்ளாடையை - மார்பகத்தை -  கவர்ச்சியக பொதுவில் காட்டினால் அது 'ஆடம் டீஸிங்க்' ஆகாதா? ஆவர் நடிகை என்றால் அது பாலியல் குற்றம் இல்லையா?

ஆண்களின் பாலுணர்ச்சியைத் தூண்டுவதில் குற்ற உணர்ச்சியே இல்லாதப் பெண்கள் தூண்டப்பட்ட ஆண்களின் எதிர் வினையை மட்டுமே குற்றமாகச் சொல்வது தான் நடைமுறையில் இருக்கிறது.

பொதுவாக தற்காலத்தில் பெண்கள் எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்ளலாம் ஆனால் ஆண்கள் மட்டும் மரக்கட்டைகளைப் போல உணர்ச்சிகளின்றி இருந்து பெண்களிடம் தவறாக நடந்து விடாமல் கண்ணியம் காக்க வேண்டும் என்ற கருத்து பரப்பப்பட்டு வருகிறது. இவ்வித போக்கு அப்பட்டமாக ஆண்களின் இயற்கையான பாலுணர்ச்சிகளின் மீது காட்டப்படும் கடும் அலட்சியம், அவமரியாதை என்பதே சரி.

உதாரணமாக ஒரு ஆணும் பெண்ணும் நண்பர்கள் என்று கூறிக்கொண்டு பழகுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம், அந்தப் பெண் ஆணின் தோளில் கைபோட்டு அமர்ந்து பேசுவாள், ஆணின் சட்டைப் பைக்குள் கைவிட்டு அவனது ஏதாவது பொருளை உரிமையுடன் எடுத்துக் கொள்வாள். ஆனால் அதே காரியத்தை ஒரு ஆண் செய்தால் அது உரிமையாகவோ நட்பாகவோ பார்க்கப்படாது. 

ஒரு ஆணின் உடல் மீது 'நட்பு' என்கிற பெயரில் ஒரு பெண் தானாகவே கைவைத்து உரசினாலும் ஆண் அதனால் தூண்டப்படாமல் அவளிடம் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வலியுறுத்தப்படுகிறது. ஆனால் இயற்கையான பாலுணர்வுப்படி அது ஞாயமாக இருக்க முடியாது. ஒரு பெண்ணின் மீது நண்பனாகவே இருந்தாலும் அவன் கை பட்டால் அது அவளது உணர்ச்சியைத் தடுமாற வைக்குமென்றால் ஆணுக்கும் அப்படித்தான் என்பதை பழகும் பெண்கள் மறந்து விடுவார்கள்.

கும்பலாக எங்கேனும் ஆண்கள் உட்கார்ந்திருக்கும் இடங்களில், வயசுப் பெண்கள் அடிக்கடி வளையவந்தால் வீட்டுப் பெரியோர்கள் கடிந்து கொள்வார்கள். "அத்தனை ஆண்கள் உட்கார்ந்திருக்கும் இடத்தில் ஏன் தேவையில்லாமல் வளையவருகிறாய்" என்பார்கள். இது பெண்ணுக்கெதிரான அடிமைத்தனம் அல்ல. ஆண்கள் இருக்கும் இடத்திற்கு பெண்கள் போகக்கூடாது என்கிற கட்டாயமும் அல்ல. ஆனால் 'ஆண்களின் மனதில் தேவையில்லாமல் உன்னைப் பற்றி நினைக்கும் தூண்டுதலை நீ செய்து விடாதே' என்பதற்கான எச்சரிக்கை தான் அது. 

நம் பாரம்பரியத்தில் ஆண்களின் பாலுணர்வுக்கு தேவையான அளவு மரியாதை கொடுக்கப்பட்டிருந்தது. அந்த உணர்ச்சியைச் சீண்டிப்பார்க்காமல் இருக்கும் பொறுப்பு பெண்களுடையது என்று வரையறுக்கப்பட்டிருந்தது. அதுவும் பெண்களாலேயே கண்காணிக்கப்பட்டும் வந்தது. காரணம் அதனால் முதலில் பெண்ணுக்கு பாதிப்பு, பிறகு குடும்பங்களுக்கு பாதிப்பு, அப்படியே அது பெருகினால் அது ஒரு சமூகத்தின் பாதிப்பு என விரிவடைந்து விடும் என்பதால் வீட்டிலிருந்தே உணர்ச்சிகள் புரிந்து கொள்ளப்பட்டன, கண்காணிக்கப்பட்டன. 

ஆனால் இந்த நாகரீக வாழ்க்கை முறையில் அது பெண்ணடிமைத் தனமாக விளம்பரம் செய்யப்பட்டது. 'அண்களின் பாலுணர்ச்சி பற்றி எங்களுக்கு எந்த அக்கரையும் இல்லை, நாங்கள் எப்படி வேண்டுமானாலும் உடையணிவோம், நாங்கள் எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்வோம், ஆனால் ஆண்கள் அத்துமீறாமல் இருப்பது அவர்கள் கடமை. எங்கள் பொறுப்பு அவற்றில் எள்ளளவும் இல்லை' என்ற மனப்பாங்கு பெண்களிடம் பரப்பப்பட்டது. இதனால் பெண்களுடன் பழகும் நிலையில் இருக்கும் சராசரி ஆண்களுக்கு உண்டாகும் உளவியல் ரீதியான பாதிப்பும் , பெண்களோடு பழகும் போது ஏற்படும் உணர்ச்சியின் உந்துதலும், அவை லேசாக கவனிக்கப்பட்டு விட்டால் கூட ஏற்படும் குற்ற உணர்ச்சியும் வெளியே தெரியாத அவஸ்தைகளே ஆகும்.

இறுக்கமாக உடையனிந்து தங்களது மார்பகங்களின் அளவுகளுக்கு விளம்பரம் தேடும் பெண்கள் இன்று சாதாரண குடும்பத்தில் கூட அதிகரித்து வருகிறார்கள். ஆனால் இது போன்ற பெண்கள் முன்னால் நின்று பேசும் எந்த கண்ணியமான ஆணும் தடுமாறாமல் இருக்க முடியாது. ஆனால் அது பற்றி இந்தப் பெண்களுக்கு எந்த குற்ற உணர்ச்சியும் இருப்பதில்லை. மாராப்பு போடுவதே அடிமைத்தனம் என்று சொல்லி உரையேற்றப்பட்ட இந்தப் பெண்கள், தன் முன் நின்று பேசும் ஆண் வினாடி நேரம் அவளது பெருத்த மார்பை சற்றே உற்று நோக்கி விட்டால் அவனை ஏதோ நாகரீகமற்றவனை, காட்டு வாசியைப் பார்ப்பது போல பார்த்து ஒரு குற்ற உணர்ச்சியை அந்த ஆணுக்கு உண்டாக்கிச் செல்வார்கள். 

இதனால் இந்த ஆண் உள்வெட்கம் அடைகிறான். நீண்ட நாட்கள் ஒரு வித அவமானத்தால் மனம் தவிக்கிறான். இயற்கையாக தனக்கு உண்டாகும் பாலுணர்வு கூட தவறானதோ என்கிற குழப்பத்திற்கு ஆளாகிறான். ஆனால், ஒரு ஆண்மகனை என் உடலுறுப்பை உற்றுப் பார்க்கத் தூண்டிய குற்றம் என்னுடையது என்று எந்தப் பெண்களுக்கும் தோன்றுவதில்லை. தூண்டப்பட்ட ஆண்மகன் அதன் காரணமாக ஒரு பெண்ணை பார்த்தால் தவறு. தூண்டப்பட்ட ஆண்மகன் அதே பெண்ணை காமத்தின் வயப்பட்டு அடைய நினைத்தாலும் தவறு. ஆனால் அதே ஆணின் பாலுணர்ச்சியைத் தூண்டி விட்டு வேடிக்கை பார்ப்பது மட்டும் தவறில்லை.


திறந்த மார்பகத்தோடு சுற்றித் திரிவது தான் பெண் சுதந்திரம் என்று கூறி, திறந்த மார்பகப் போராட்டங்கள் நடத்தும் மேலை நாட்டுப் பெண்ணியச் சிந்தனைகள் நம் நாட்டுக்கு எந்த விதத்திலும் உதவாது. பெண்களின் பாதுகாப்பு கட்டாயமாக வலியுறுத்தப்படும் அதே வேளையில், ஆண்களின் பாலுணர்ச்சிக்கான மரியாதையும் வலியுறுத்தப்பட வேண்டும். ஆண்களின் பாலுணர்ச்சி பொது இடங்களில் தூண்டப்படாமல் பாதுகாப்பதற்கும் தேவையான விழிப்புணர்ச்சி பெண்களுக்கு அளிக்கப்பட வேண்டும்.

அவ்வாறு செய்யாமல் வெறும் பெண்ணியப் பார்வையால் கண்ணைக் குருடாக்கிக் கொண்டு ஒரு சில பெண்கள் நடந்து கொள்ளும் விதம் சமூகபாதிப்பை உண்டாக்குமே அன்றி அது பெண்களின் சுதந்திரத்திற்கான அடையாளமாகாது.

ஆண்கள் மரக்கட்டைகள் அல்ல, ஆண்களின் பாலுணர்ச்சிகளுக்கான மரியாதை வலியுறுத்தப்பட வேண்டும்.

ஆண்களுடன் உறவாடாமல் ஆனால் அவர்களின் பாலுணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு அதை சத்தமில்லாமல் வேடிக்கை பார்க்கும் எந்தப் பெண்ணும் 'உளவியல் வேசிகள்' ஆவார்கள்! இதைப் பெண்கள் மனதில் கொள்வது அவசியம்!

பெண்கள் தங்களை எப்படி வெளிப்படுத்திக் கொள்ள விரும்புகிறார்கள் என்பது அவர்கள் சிந்தனையில் தான் இருக்கிறது.

மரியாதைக்குரிய பெண்களா? உளவியல் வேசிகளா?