Sunday, November 22, 2009

லக்ஷ்மணன் சூர்பனகையின் மூக்கை வெட்டியது ஏன்?


ஒரு கைக்குழந்தை அழுது கொண்டிருந்தது. யார் யாரோ தூக்கி சமாதானம் செய்கிறார்கள். குழந்தை அழுகையை நிறுத்த வில்லை. அதன் தாய் வந்தாள். குழந்தையைத் தூக்கினாள். மார்போடு அனைத்துக் கொண்டாள். குழந்தை அழுகையை நிறுத்தியது.

ஒரு கைக்குழந்தைக்கு தன் தாய் இவள் தான் என்பதை எதை வைத்து தீர்மானிக்கிறது. அனைத்துக் கொள்ளும் தாயின் வாசனையும் அவள் உடலின் கதகதப்புமே முழுமுதற்காரணம்.

வாசனையை முகர்தல் என்பது ஒவ்வொரு ஜீவராசிக்கும் உரிய சூட்சமமான குணம். அந்த சூட்சம குணம் தான் மனிதன் சமூகத்தில் வாழ பல ரூபங்களில் உதவுகிறது.

இந்த முகர்தல் என்ற சூட்ஷம குணத்தில் லக்ஷ்மனன் கைவைக்கப் போய்தான் ராமாயணப் போரும் ராவண வதமும் உண்டானது எனலாம். அந்த சூட்ஷமத்தை கொஞ்சம் ஆய்வோம்.

ஸ்ரீ ராமரும் சீதாதேவியும் வனவாசத்தை மேற்கொண்டு வந்தனர். லக்ஷ்மனன் சகோதரனுக்கு உதவும் பொருட்டு அவர்களுக்கு பாதுகாப்பாக உடனிருந்து உதவி வந்தான்.

அப்போது அசுர குலத்தை அழிக்கவே அவர்களுடன் பிறந்தது போன்ற பெண்ணான சூர்ப்பனகை ராமர் இருக்கும் வனத்திற்கு வந்தாள். அவள் ராமரின் கட்டுடலும் அழகையும் கண்டு இப்படியொரு ஆண்மகனைப் பார்த்ததில்லை. இவனோடு கூடி நான் இன்பத்தை துய்த்தே தீருவேன் என்று உறுதி கொண்டு மனதிற்குள் எல்லையில்லா ஆனந்தத்துடன் ராமரை நோக்கி நடந்தாள். தன் உருவை மிக அழகான யுவதியாக ஆக்கிக் கொண்டாள்.

ஸ்ரீ ராமரிடம் சென்று தான் திருமணம் ஆகாத கன்னிப் பெண் என்று பொய்யைக் கூறி , தான் ராவணனின் தங்கை என்றும் ராமனை மணக்கும் ஆசையில் வந்திருப்பதாகவும் கூறினாள்.

இதைக் கேட்ட ஸ்ரீ ராமரோ 'பெண்ணே! நீ விச்சிரவசு என்ற பிராமணரின் மகள். நான் தசரத ராஜகுமாரன். ஒரு பிராமணரின் மகளை சத்ரிய அரசன் மணந்து கொள்ளக் கூடாது. அன்றியும் ராவணன் முதலிய உன் தமையனார்களின் அனுமதி இன்றி உன்னை நான் மணந்து கொள்வது பிழை. மேலும் நான் ஏற்கனவே மணமானவன். ஏக பத்தினி விரதம் பூண்டவனாக இருக்கிறேன். எனவே உன்னை மணப்பதென்பது என்னால் ஆகாது. நீ உனது எண்ணத்தை மாற்றிக்கொள். மனதில் அமைதி கொள். இங்கிருந்து சென்று விடு. உன் வருகை எங்களுக்கு துன்பம் உண்டாக்காதிருக்க வேண்டுமென விரும்புகிறேன்.' என்றார்.

அந்த நேரம் அங்கே சீதை வந்து கொண்டிருந்தாள். சீதையைப் பார்த்த சூர்ப்பனகையோ இவ்வளவு அழகு நிறைந்த பெண் மனைவியாக இருப்பதால் தானே ராமன் எண்ணை புறக்கனிக்கிறான் என்று எண்ணி சீதையை கொன்றால் இனி ராமன் தனக்குத்தான் என்று வேகமாகச் சென்று சீதையை கொல்ல முயற்சிக்கிறாள்.

நடக்கும் விஷயங்களைப் பொறுமையாக பார்த்துக் கொண்டிருந்த லக்ஷ்மனன் தன் அன்னியாரான சீதாதேவியின் உயிருக்கு சூர்ப்பனகையால் ஆபத்து வந்துவிட்டது என்பதை உணர்ந்து கொண்ட அடுத்த கனமே சூர்ப்பனகையின் முன் சென்று அவளைத் தடுத்து அவள் மூக்கை வெட்டி விடுகிறான். 'இனி ஒரு அடி எடுத்து வைத்தால் உன் தலை மன்னில் உருளும். பெண் என்பதால் எச்சரிக்கிறேன். போய் விடு' என்று அங்கிருந்து சூர்ப்பனகையை விரட்டி சீதையின் உயிரைக் காத்தான். அதற்குப் பின் ராவணன் கோபம் கொண்டு சீதையை கடத்தியதும் அனுமன் வந்ததும் இலங்கையில் போர் நடந்ததும் நமக்குப் பரிச்சியமானகதை தான்.

ஆனால் இவற்றில் முக்கியமாக கவனிக்கத்தக்கது லக்ஷ்மனன் கோபம் வந்த போது ஏன் சூர்ப்பனகையின் மூக்கை அறுத்தான். ஒருவர் மீது கோபம் வந்தால் கையை வெட்டலாம், காலை வெட்டலாம் தலையை வெட்டலாம். ஆனாலும் அவ்வளவு கோபத்திலும் பதட்டத்திலும் கூட லக்ஷ்மனன் ஏன் சூர்ப்பனகையின் மூக்கை குறி பார்த்து வெட்ட வேண்டும். அதன் சூட்ஷமம் என்ன?

மேலும் பார்ப்போம். ஒரு புத்தகத்தில் வாசனையும் உணர்ச்சிகளும் என்ற தலைப்பில் இதைப் படித்தேன். நம் மூளையில் இருக்கும் Amygdala என்னும் ஒரு விசஷே பகுதி, நமக்குள் எழும் உணர்ச்சிகளை பதித்து வைத்து அவற்றை கட்டுப்படுத்துகிறது. நாம் சுவாசிக்கும்போது, நறுமன நுண்அணுக்கள் Amygdala வுக்கு நேரடியாக செல்வதால், நறுமணத்தால் ஏற்படும் உணர்ச்சிகள், மற்ற புலன்களை விட அதிக சக்தி வாய்ந்தாக கருதப்படுகிறது. Memory Triggers எனப்படும் இந்த நினைவு தூண்டல்களிலேயே, நறுமணத்தினால் ஏற்படும் உணர்வே அதிக தெளிவான, உணர்ச்சி பூர்வமான நினைவை உண்டு செய்பவை என ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.நறுமண நுண் அணுக்களின் சமிக்ஞையால் ஏற்படும் இது போல உணர்வுகள் 'Proustian Phenomenon' என்று அழைக்கப்படுகிறது. இப்படி இன்னும் நிறைய சொல்லப்பட்டிருந்தது.

கொஞ்சம் புரியும் படியாக சில விஷயங்களைப் பார்ப்போம்.

நம் மூக்கில் எண்ணிலடங்கா வாசனை உணரும் நரம்புகள் உள்ளன. அவைகளின் மூலமாக நாம் உணரும் வாசனைகளுக்கும் நமது உணர்ச்சியில் ஏற்படும் மாற்றங்களுக்கும் நேரடித் தொடர்புகள் உண்டாகின்றன.

காம உணர்ச்சியைத் தூண்டுவதற்கு வாசனை முக்கியப் பங்கு வகிக்கிறது.

ஒரு ஆணோ பெண்ணொ ஒருவரை ஒருவர் வாசனையாலேயே முதலில் ஈர்க்கப்படுகிறார்கள். அதனால் உண்டாகும் தூண்டுதலே ஒருவர் மீது ஒருவர் மோகம் கொள்ளக் காரணமாகிவிடுகிறது. வாசனையை முகர்தல் காதலிலும் காமத்திலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. உணர்ச்சித் தூண்டுதலுக்குக் காரணமாக இருக்கிறது.

இன்னும் சொல்லலாம். ஒருவர் எதிர்பாலினர் மீது காமுறும் பொழுது முதலில் சுறுசுறுப்படைவது
மூக்கின் நரம்புகளே. மூக்கின் நரம்புகள் விழிப்படைந்து முகர்தலுக்கு தயாராகிவிடுகிறது.
அந்த தயார் நிலையாலும் முகர்தலாலும் தூண்டப்பட்டு உயிர் உறுப்புகள் உறவுக்குத் தங்களைத்

ஒருவர் கோபம் கொள்ளும் போது மூக்கு விடைத்துக் கொள்ளும். சிவந்து போகும். கண்கள் விரிய குரல் உயர காது மடல்கள் சிவக்கச் சண்டை பொடுவார்கள். உணர்ச்சி வசப்பட்டு கோபப்படும் போதும் மூக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. அந்தக் கோபத்தால் சில நேரங்களில் அதுவே உடைந்து போய் ரத்தக்களரியாவது வேறுவிஷயம்.


உங்களுக்குத் தெரியுமா? சுவையின் எழுபத்தைந்து சதவீதத்தை வாசனை கொண்டே நாம் உணர்கிறோம். மூக்கை மூடிக்கொண்டு அதாவது சுவாசம் செய்யாமல் ஒரு பொருளை கடித்து முழுங்க்ப் பாருங்கள். அதன் சுவை என்னவென்று உங்களால் துல்லியாமாகச் சொல்ல முடியாது. வாசனையுடன் முகர்ந்து உண்ணும்பொழுதே உணவின் சுவையை முழுவதும் ருசிக்கிறோம். அனுபவிக்கிறோம். காரணம் மூக்கு.

ஞாபக சக்திக்கு பெரிதும் உதவுவது வாசனை உணரும் முகரும் சக்தியே ஆகும். உதாரணமாக ஒரு மலை சார்ந்த இடத்திற்குச் செல்கிறோம். அங்கே பூக்களும் , பச்சை பசேல் என்ற மரமும் செடி கொடிகளும் நிறைய இருக்கும். அதன் அழகை ரசிக்கிறோம். சில வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அதே இடத்திற்குச் செல்கிறோம். அங்கே ஓரிரு கட்டிடங்கள் வந்திருக்கும். நாம் ஏற்கனவே இங்கே வந்திருக்கிறோமா என்று நமக்குச் சந்தேகம் வந்துவிடும். காட்சிகள் நம்மை ஏமாற்றும். ஆனால் அந்த இடத்தில் நாம் உணரும் வாசனைதான் நமக்கு பழைய ஞாபங்களை மீட்டுக் கொண்டுவந்து நாம் ஏற்கனவே இங்கே வந்திருக்கிறோம் என்பதை உறுதிப்படுத்தும். காரணம் மூக்கு.

சாமி கும்பிடும் போது ஊதுபத்தி, சாம்பிராணி போன்றவை ஏற்று வைத்து சாமி கும்பிடுவதன் காரணம் அந்த வாசனையை நாம் முகரும் போதெல்லாம் தெய்வீக உணர்வு நம் மனதில் குடி கொண்டு விடும். காரணம் மூக்கு.

எனது பாட்டி இறந்த அன்று அவர் அருகில் ஒரு ஊதுபத்தி ஏற்றி வைத்தார்கள். இன்றைக்கும் எங்காவது யார், வீட்டிலாவது அப்படி ஒரு வாசனை வந்தால் எனக்கு அந்த நாள் ஞாபகத்திற்கு வந்து விடும். இப்படி நினைவாற்றலுக்கும் வாசனை முகர்வுக்கும் நிறைய சம்பந்தம் உண்டு. காரணம் மூக்கு.

ஒரு சில திரையரங்கில் ஏ சி மிஷினிலிருந்து குளிர்ந்த காற்றுடன் நல்ல வாசனை திரவியத்தை கலந்து அரங்கம் முழுவதும் நறுமணத்துடன் இருக்குமாறு பரவச்செய்வார்கள். அப்படி சில்லென்ற காற்றுடன் நல்ல வாசனையை நாம் நுகர்ந்தவுடன் மனம் அமைதியடைகிறது. ஒரு வித மகிழ்ச்சி கொள்கிறது. இன்பமாக படத்தை பார்க்கச் செய்கிறது. காரணம் மூக்கு. இந்த அனுபவம் யாருக்கேனும் இருக்கிறதா?

பெண்கள் தலையில் பூ வைத்துக் கொண்டு ஆண்களைக் கடந்து சென்றாலே அந்த வாசனை ஆண்களுக்கு ஒரு வித ஈர்ப்பை உண்டு பண்ணிவிடும். நமது கலாச்சாரத்தில் பெண்கள் தலையில் பூ வைத்துக் கொள்ளுதல் என்ற வழக்கம் முக்கியத்துவம் பெற்றதும் அப்படித்தான். தான் விரும்பும் ஆணை தன் மீது எப்போதும் மயக்கமுற்றிருக்கச் செய்து கொண்டே இருக்க வேண்டும் என்பதற்க்காகவே அவன் கையால் பூவாங்கி அவன் முகரும் வன்னம் தலையில் வைத்து அவன் முன்னேயே நடமாடுவர். ஒருவருக் கொருவர் காதல் பிணைப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் அன்பும் குதூகலமும் பெருகும். காரணம் மூக்கு.

இப்படி மூக்கு ஒரு வாசனையை நாம் எந்த நேரத்தில் எந்த இடத்தில் எந்த சூழ்நிலையில் முகர்ந்தோம் என்பதை ஆழ்மனதில் பதியச்செய்து விடுகிறது.

இவ்வாறு காமம், கோபம், இன்பம், மகிழ்ச்சி என உணர்ச்சிகளைத் தூண்டுவதற்கும் தூண்டப்பட்ட உணர்ச்சியால் வீரியமாக செயல் பட வைப்பதற்கும் மூக்கு பெரும் பங்கு வகிப்பதாலோ என்னவோ லக்ஷ்மனன் சூர்ப்பனகையின் மூக்கைப் பதம் பார்த்திருக்கிறார்.

ராமனின் மீது ஆசை கொள்வதற்கும், காமத்தின் உந்துதலினால் சீதையை கொல்ல முயன்றதற்கும் இவளது உணர்ச்சியைத் தூண்டும் மூக்கே காரணம் என்று மூக்கை வெட்டியிருக்கிறார் லக்ஷ்மனன். பாவம் மூக்கு.

ஆக லக்ஷ்மனன் உளவியல் மற்றும் உடலியல் பற்றி நல்ல அறிவு பெற்றவராக
இருந்திருக்கிறார் என்றே தோன்றுகிறது.

இந்த நேரத்தில் ஒரு விஷயத்தை யோசிக்க வேண்டும். ராமாயணம் போன்ற இதிகாசங்கள் யாரோ ஒருவரால் எழுதப்பட்ட கற்பனைக் கதை யென்றால் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் அதன் நடவடிக்கைகளின் சூட்ஷமத்தை யெல்லாம் இவ்வளவு டீட்டெயிலாக யோசித்து எழுதிக் கொண்டிருந்திருப்பாரேயானால் வாழ்க்கையே முடிந்துவிடும்.

எனவே ராமாயணம் நடந்த நிகழ்ச்சியாகவே இருக்க வேண்டும் என்பதற்கு உளவியல், உடலியல் மற்றும் புவியில் சார்ந்த பல காரணிகள் சாதகமாகவே இருப்பதை நாம் உணரலாம்.

ஆகவே இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் பகுத்தறிவும் ஆகும்.

9 comments:

Anonymous said...

nice article

Anonymous said...

தேவையோடு மூக்கை நுழைப்பதில் பெருமைப்பதுகிறேன்.

A very good article indeed, based on profound thinking ably supported by keen analytical & reasoning skills.

But, the nose has got it's own honour and respect.

மூக்கு மட்டும இல்லென்னா நமக்கு ஒரு " கொங்குதேர் வாழ்க்கை..." கிடைச்சிருக்காதில்லையா ? :-)

regards
mohan

Thiru Marai said...

சுந்தரி கண்ணால் ஒரு சேதி
சொல்லடி இன்னாள் ஒரு தேதி

என்னையே தந்தேன் உனக்காக
ஜென்மமே கொண்டேன் அதற்காக

நான் உனை நீங்க மாட்டேன்
நீங்கினால் தூங்கமாட்டேன்

சேர்ந்ததே நம் ஜீவனே

சுந்தரி கண்ணால் ஒரு சேதி
சொல்லடி இன்னாள் ஒரு தேதி

வாய் மொழிந்த வார்த்தை யாவும் காற்றில் போனால் நியாயமா
பாய் விரித்த பாவை பார்த்த காதல் இன்பம் மாயமா

அ ஆ.. வால் பிடித்து நின்றால் கூட நெஞ்சில் உந்தன் ஊர்வலம்
போர்களத்தில் சாய்ந்தால் கூட ஜீவன் உன்னைச் சேர்ந்திடும்

தேனிலவு நான் வாட- ஏன் இந்த சோதனை
வானிலவை நீ கேளு- கூறும் என் வேதனை

எனைத்தான் அன்பே மறந்தாயோ
மறப்பேன் என்றே நினைத்தாயோ

சுந்தரி கண்ணால் ஒரு சேதி
சொல்லடி இன்னாள் ஒரு தேதி

சோலையிலும் முட்கள் தோன்றும் நானும் நீயும் நீங்கினால்
பாலையிலும் பூக்கள் தோன்றும் நீ என் மார்பில் தூங்கினால்

வாரங்களும் மாதம் ஆகும் நானும் நீயும் நீங்கினால்
மாதங்களும் வாரம் ஆகும் பாதை மாறி ஓடினால்

கோடி சுகம் வாராதோ நீ எனைத் தேடினால்
காயங்களும் ஆறாதோ நீ எதிர் தோன்றினால்

உடனே வந்தால் உயிர் வாழும்
வருவேன் அந்நாள் வரக்கூடும்

சுந்தரி கண்ணால் ஒரு சேதி
சொல்லடி இன்னாள் ஒரு தேதி

viswam said...

vanakkam. thiru lakshmanan soorpanagai muukkaimattumvettavilai, maarpaiyum serthu vettinar enkiraarkal. thayavuseithu vilakkam kuurungal. nandri.

hayyram said...

////thiru lakshmanan soorpanagai muukkaimattumvettavilai, maarpaiyum serthu vettinar enkiraarkal. thayavuseithu vilakkam kuurungal.////

ராமாயணத்தில் சூர்ப்பனகையின் மார்பை வெட்டியதாக எங்கும் படித்ததில்லை. மிகைப்படுத்தப்பட்டதாக இருக்கலாம். ஒருவேளே அப்படிப் படித்தவர்களிடம் எதில் படித்தார்களோ அதை மேற்கோள் காட்டினால் நாமும் தெரிந்து கொள்ளலாம்.

விஸ்வம் அவர்களே! உங்களுக்கு ஒரு வேண்டுகோள்.. எனது கட்டுரையை உங்கள் தமிழ் டு ஃப்ரெண்ட்ஸில் பிரசுக்க வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். என்னால் தமிழ் ஹிந்து போன்ற பிற தளங்களில் அவற்றை பிரசுக்க முடியவில்லை. அவர்கள் ஏற்கனவே தமிழ் டு ஃப்ரண்ட்ஸ் தளத்தில் நீங்கள் கொடுத்து விட்டீர்கள் என்று நிராகரிக்கிறார்கள். என்னால் எனது கட்டுரையை நான் விரும்பும் தளங்களில் பிறருடன் பகிர்ந்து கொள்ள முடியாமல் போய் விடுகிறது. எனவே தயவு செய்து எனது கட்டுரையை நீங்கள் மீள்பதிவு செய்யாதீர்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். இந்த தளத்திலேயே நிறைய படியுங்கள். சந்தேகங்கள் கேளுங்கள் , நாம் நட்புடன் இதிலேயே விவாதிப்போம் என்றும் கேட்டுக் கொள்கிறேன். உதவுவீர்கள் என்று நம்புகிறேன்.

நட்புடன்
ராம்

hayyram said...

சூர்ப்ப்னகையார் காடுகளில் அங்கேயும் இங்கேயும் திரிந்து வந்த போதினிலே இராமனைக் கண்டு மனதைப் பறி கொடுத்தது தவறு அல்ல. இராமனிடம் காதல் விண்ணப்பமும் அளித்தார். அதுவும் தவறு அல்ல.
ஆனால் யாருடைய காதல் விண்ணப்பத்தையும் ஏற்றுக் கொள்ளும் நிலையிலே இராமன் இல்லை. அதையும் அவன் அப்போதே சூர்ப்பனகையாரிடம் தெளிவாக விளக்கி விட்டான். தான் கொள்கைகளை முக்கியமாக கருதி வாழ்பவன் என்றும், அதனாலேயே இராச்சியத்தை விட்டு காட்டிலே வசிக்கவும் செய்பவன் என்றும், அந்த அளவுக்கு கொள்கையிலே உறுதியாக இருக்கும் போது, ஒரே மனைவி, ஒரே ஒரு பெண்ணை (மனைவியை ) மட்டுமே காதலிப்பது என்கிற கொள்கையிலும் பிடிப்புடன் உறுதியாக இருப்பதாக கூறி விட்டான்.

ஆனால் இந்த கொள்கை விளக்கத்தை எல்லாம் புரிந்து கொள்ளும் நிலையிலே உடன் பிறவா சகோதரி சூர்ப்ப்னகையார் இல்லை விரும்பியது கிடைக்கவில்லை என்று தெரிந்ததும் விதியை நொந்து விட்டு இடத்தை விட்டு சென்று இருக்கலாம்.

ஆனால் அவர் இராமனையோ, இலக்குவனையோ , சீதையையோ புரிந்து கொள்ளும் மனநிலையில் இல்லை. சீதை அழகியாக இருப்பதால், இராமன் தன்னிடம் கவனம் செலுத்தவில்லை என்று நினைத்து விட்டார்.
தொடரும்

hayyram said...

சீதை உயிருடனே இருந்தால் தானே இராமன் சீதையை நினைப்பான், சீதையை விண்ணுக்கு அனுப்பி விட்டால், இராமனுடன் தான் கொண்ட காதல் நிறைவேறும் என்று தப்புக் கணக்கு போட்டு விட்டார். சீதையைக் கொல்லப் பாய்ந்து இருக்கிறார்.
நல்ல தனமாகக் கூறியும் கேட்கவில்லை. அதோடு சீதையைக் கொல்லவும் பாய்கிறார். எனவே அவரின் புயல் வேகப் பாய்ச்சலைக் கட்டுப் படுத்தவே, அவரின் மூக்கையும், காது மடல்களையும் அறுத்து, அவரின் வேகத்தை கட்டுப் படுத்த வேண்டிய நிலைக்கு இலக்குவன் தள்ளப் பட்டார்.
மனதிலே காம ஆசை உருவாக்கி, மன மயக்கம் ஏற்ப்பட்டு அறிவு தடுமாறிய நிலையிலே இருந்தார் சூர்ப்பனகையார். அப்படிப் பட்ட நிலையிலே இருக்கும் யார் உடலிலும் தீயால் சுட்டாலோ, அல்லது ஏதாவது வெட்டுக் காயம் ஏற்பட்டாலோ அவரது மனம் காம எண்ணங்களில் இருந்து விலகும்படி அந்த வெட்டுக் காய வலியிலே அவர் மனம் குவியும்.
சீதையை சூர்ப்பநகையிடம் இருந்து காக்கவே மூக்கையும், காது மடல்களையும் வெட்டியதாக சொல்லப்பட்டுள்ளது.
இதில் மார்புகளை வெட்டினார் என்பது எல்லாம் காழ்ப்புணர்ச்சியால் உருவாக்கப் பட்ட கருத்தேயன்றி உண்மையாக இருக்க வாய்ப்பு எதுவுமே இல்லை. எங்குமே அப்படி எழுதப் படவில்லை.
இவர்களாகவே அப்படி, மார்பை வெட்டினார், உதடை வெட்டினார் என்று தங்களின் கற்பனையை சேர்க்கின்றனர்

நன்றி:
திருச்சிக்காரன்

Sabari Dheepam said...

நல்ல கருத்துக்களை பரப்ப எண்ணிய உங்களின் நல்ல மனசை வாழ்த்துகிறேன்.. நன்றி..

Dr.Anburaj said...

மூக்கை வெட்டினான் என்பது கற்பனையின் ஊற்று. லெட்சுமணன் கண்டித்து சிறிய அளவில் தண்டித்துதான் அனுப்பியிருக்க வேண்டும். எதையும் சற்று பொிது படுத்தி எழுதுவது இலக்கிய மரபு. அதாவது பொய் சொல்வதும் இலக்கிய மரபும். எனவே இதுபோன்ற கருத்துக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கத் தேவையில்லை. லெட்சுமணம் சுா்ப்பநகையை கண்டித்தாா்.சிறிய அளவில் தண்டித்தாா் என்பதுதான் உண்மையாக இருக்கும். இலக்கியங்கள் படிக்கும்போது கற்பனைகளை கழித்து படிக்கப்பழக வேண்டும்.